Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS   Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Urdu   Cyrillic/Russian  

முதலாயிரம்   திருப்பாணாழ்வார்  
அமலனாதிபிரான்  

Songs from 927 to 936   ( உறையூர் )

பெரிய நம்பிகள் அருளியது 
ஆபாதசூடமநுபூயஹரிம்ஸயாநம் 
மத்யேகவேரதுஹிதுர்முதிதாந்தராத்மா  |
அத்ரஷ்ட்ருதாம்நயநயோர்விஷயாந்தராணாம் 
யோநிச்சிகாயமநவைமுநிவாஹநந்தம். |[927.1]
மேலே செல்

அமலனாதிபிரான் அடியார்க்கென்னையாட்படுத்த 
விமலன் | விண்ணவர்கோன் விரையார்பொழில் வேங்கடவன் | 
நிமலன் நின்மலன்நீதிவானவன் நீள்மதிளரங்கத்தம்மான் | திருக் 
கமலபாதம்வந்து என்கண்ணினுள்ளனவொக்கின்றதே. [927.0]
மேலே செல்

உவந்தவுள்ளத்தனாய் உலகமளந்தண்டமுற | 
நிவந்தநீள்முடியன் அன்றுநேர்ந்தநிசாசரரை | 
கவர்ந்தவெங்கணைக்காகுத்தன் கடியார்பொழிலரங்கத்தம்மான் | அரைச் 
சிவந்தஆடையின்மேல் சென்றதாமென்சிந்தனையே.[928.0]

மந்திபாய் வடவேங்கடமாமலை | வானவர்கள்
சந்திசெய்யநின்றான் அரங்கத்தரவினணையான் | 
அந்திபோல்நிறத்தாடையும் அதன்மேலயனைப் படைத்ததோரெழில் |
உந்திமேலதன்றோ அடியேனுள்ளத்தின்னுயிரே. [929.0]

சதுரமாமதிள்சூழ் இலங்கைக்கிறைவன்தலைபத்து
உதிரவோட்டி | ஓர்வெங்கணையுய்த்தவன் ஒதவண்ணன் |
மதுரமாவண்டுபாட மாமயிலாடரங்கத்தம்மான் | திருவயிற்று 
உதரபந்தம் என்னுள்ளத்துள்நின்றுலாகின்றதே.[930.0]
மேலே செல்

பாரமாய பழவினைபற்றறுத்து | என்னைத்தன் 
வாரமாக்கிவைத்தான் வைத்ததன்றியென்னுள் புகுந்தான் | 
கோரமாதவம்செய்தனன்கொலறியேன் அரங்கத்தம்மான் | திரு 
வாரமார்பதன்றோ அடியேனையாட்கோண்டதே.[931.0]

துண்டவெண்பிறையான் துயர்தீர்த்தவன் | அஞ்சிறைய 
வண்டுவாழ்பொழில்சூழ் அரங்கநகர்மேயஅப்பன் |
அண்டரண்டபகிரண்டத்து ஒருமாநிலமெழுமால்வரை | முற்றும் 
உண்டகண்டங்கண்டீர் அடியேனையுய்யக்கொண்டதே.[932.0]

கையினார் சுரிசங்கனலாழியர் | நீள்வரைபோல் 
மெய்யனார் துளபவிரையார் கமழ்நீள்முடியெம் 
ஐயனார் | அணியரங்கனார் அரவினணைமிசைமேயமாயனார் | 
செய்யவாய் ஐயோ! என்னைச்சிந்தைகவர்ந்ததுவே.[933.0]
மேலே செல்

பரியனாகிவந்த அவுணனுடல்கீண்ட | அமரர்க்கு
அரியஆதிப்பிரான் அரங்கத்தமலன்முகத்து | 
கரியவாகிப்புடைபரந்து மிளிர்ந்துசெவ்வரியோடி | நீண்டஅப் 
பெரியவாயகண்கள் என்னைப்பேதைமைசெய்தனவே.[934.0]

ஆலமாமரத்தினிலைமேல் ஒருபாலகனாய் | 
ஞாலமேழுமுண்டான் அரங்கத்தரவினணையான் | 
கோலமாமணியாரமும் முத்துத்தாமமும் முடிவில்லதோரெழில் | 
நீலமேனி ஐயோ! நிறைகொண்டதென்நெஞ்சினையே. [935.0]

கொண்டல்வண்ணனைக் கோவலனாய்வெண்ணெ
யுண்டவாயன் | என்னுள்ளம்கவர்ந்தானை | 
அண்டர்கோன்அணியரங்கன் என்னமுதினைக் 
கண்டகண்கள் |மற்றொன்றினைக் காணாவே. [936.0]
மேலே செல்


Other Prabandhams:
திருப்பல்லாண்டு     திருமொழி     திருப்பாவை     நாச்சியார் திருமொழி     பெருமாள் திருமொழி     திருச்சந்தவிருத்தம்     திருமாலை     திருப்பள்ளி எழுச்சி     அமலனாதிபிரான்     கண்ணிநுண்சிறுத்தாம்பு     பெரிய திருமொழி     திருக்குறுந்தாண்டகம்     திருநெடுந்தாண்டகம்     முதல் திருவந்தாதி     இரண்டாம் திருவந்தாதி     மூன்றாம் திருவந்தாதி     நான்முகன் திருவந்தாதி     திருவிருத்தம்     திருவாசிரியம்     பெரிய திருவந்தாதி     திருஎழுகூற்றிருக்கை     சிறிய திருமடல்     பெரிய திருமடல்     இராமானுச நூற்றந்தாதி     திருவாய்மொழி    
This page was last modified on Wed, 02 Jun 2021 19:18:06 -0500
 
   
    send corrections and suggestions to admin @ sivasiva.org