Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS   Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Urdu   Cyrillic/Russian  

மூன்றாவதாயிரம்   திருமங்கை ஆழ்வார்  
திருஎழுகூற்றிருக்கை  

Songs from 2672 to 2672   ( )

ஒருபேருந்தியிருமலர்த்தவிசில் |
ஒருமுறையயனையீன்றனை | ஒருமுறை
இருசுடர்மீதினிலியங்கா | மும்மதி
ளிலங்கையிருகால்வளைய | ஒருசிலை
யொன்றியஈரெயிற்றழல்வாய்வாளியி |
னட்டனை | மூவடிநானிலம்வேண்டி |
முப்புரிநூலொடுமானுரியிலங்கு
மார்வினில் | இருபிறப்பொருமாணாகி |
ஒருமுறையீரடிமூவுலகளந்தனை |
நால்திசைநடுங்கஅஞ்சிறைப்பறவை
யேறி | நால்வாய்மும்மதத்திருசெவி
யொருதனிவேழத்தரந்தையை | ஒருநாள்
இருநீர்மடுவுள் தீர்த்தனை | முத்தீ
நான்மறைஐவகைவேள்வி | அறுதொழி
லந்தணர்வணங்குந்தன்மையை | ஐம்புலன்
அகத்தினுள்செறுத்து | நான்குடனடக்கி
முக்குணத்திரண்டவையகற்றி | ஒன்றினில்
ஒன்றிநின்று | ஆங்கிருபிறப்பறுப்போர்
அறிவருந்தன்மையை | முக்கண்நால்தோள்
ஐவாயரவோடு | ஆறுபொதிசடையோன்
அறிவருந்தன்மைப்பெருமையுள்நின்றனை |
ஏழுலகெயிற்றினில்கொண்டனை | கூறிய
அறுசுவைப்பயனுமாயினை | சுடர்விடும்
ஐம்படையங்கையுளமர்ந்தனை | சுந்தர
நால்தோள்முந்நீர்வண்ண! | நின்னீரடி
ஒன்றியமனத்தால் | ஒருமதிமுகத்து
மங்கையரிருவரும் மலரன | அங்கையில்
முப்பொழுதும்வருடஅறிதுயிலமர்ந்தனை |
நெறிமுறைநால்வகைவருணமுமாயினை |
மேதகும்ஐம்பெரும்பூதமும்நீயே |
அறுபதம்முரலுங்கூந்தல்காரணம் |
ஏழ்விடையடங்கச்செற்றனை | அறுவகைச்
சமயமும்அறிவருநிலையினை | ஐம்பா
லோதியையாகத்திருத்தினை | அறமுதல்
நான்கவையாய்மூர்த்திமூன்றாய் |
இருவகைப்பயனாய் ஒன்றாய்விரிந்து
நின்றனை | குன்றாமதுமலர்ச்சோலை
வண்கொடிப்படப்பை | வருபுனற்பொன்னி
மாமணியலைக்கும் | செந்நெலொண்கழனித்
திகழ்வனமுடுத்த | கற்போர்புரிசைக்
கனகமாளிகை | நிமிர்கொடிவிசும்பில்
இளம்பிறைதுவக்கும் | செல்வம்மல்குதென்
திருக்குடந்தை | அந்தணர்மந்திரமொழியுடன்
வணங்க | ஆடரவமளியிலறிதுயில்
அமர்ந்தபரம! | நின்னடியிணைபணிவன்
வருமிடரகலமாற்றோவினையே.



[2672.0]


Other Prabandhams:
திருப்பல்லாண்டு     திருமொழி     திருப்பாவை     நாச்சியார் திருமொழி     பெருமாள் திருமொழி     திருச்சந்தவிருத்தம்     திருமாலை     திருப்பள்ளி எழுச்சி     அமலனாதிபிரான்     கண்ணிநுண்சிறுத்தாம்பு     பெரிய திருமொழி     திருக்குறுந்தாண்டகம்     திருநெடுந்தாண்டகம்     முதல் திருவந்தாதி     இரண்டாம் திருவந்தாதி     மூன்றாம் திருவந்தாதி     நான்முகன் திருவந்தாதி     திருவிருத்தம்     திருவாசிரியம்     பெரிய திருவந்தாதி     திருஎழுகூற்றிருக்கை     சிறிய திருமடல்     பெரிய திருமடல்     இராமானுச நூற்றந்தாதி     திருவாய்மொழி    
This page was last modified on Wed, 02 Jun 2021 19:18:06 -0500
 
   
    send corrections and suggestions to admin @ sivasiva.org