Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS   Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Urdu   Cyrillic/Russian  

முதலாயிரம்   திருமழிசையாழ்வார்  
திருச்சந்தவிருத்தம்  

Songs from 752 to 871   ( திருமழிசை )
Pages:    1    2  3  4  5  6  7  Next

திருக்கச்சி நம்பிகள் அருளிச்செய்தவை 
தருச்சந்தப்பொழில்தழுவு தாரணியின்துயர்தீர |
திருச்சந்தவிருத்தம்செய் திருமழிசைப்பரன்வருமூர் |
கருச்சந்தும்காரகிலும் கமழ்கோங்கும்மணநாறும் |
திருச்சந்தத்துடன்மருவு திருமழிசைவளம்பதியே.



[752.1]

உலகும்மழிசையும் உள்ளுணர்ந்து | தம்மில் 
புலவர்புகழ்க்கோலால்தூக்க | - உலகுதன்னை 
வைத்தெடுத்தபக்கத்தும் | மாநீர்மழிசையே 
வைத்தெடுத்தபக்கம்வலிது.



[752.2]

பூநிலாயவைந்துமாய்ப் புனற்கண்நின்றநான்குமாய் | 
தீநிலாயமூன்றுமாய்ச் சிறந்தகாலிரண்டுமாய் | 
மீநிலாயதொன்றுமாகி வேறுவேறுதன்மையாய் | 
நீநிலாயவண்ணநின்னை யார்நினைக்கவல்லரே? 



[752.0]

ஆறுமாறுமாறுமாயொ ரைந்துமைந்துமைந்துமாய் | 
ஏறுசீரிரண்டுமூன்றும் ஏழுமாறுமெட்டுமாய் | 
வேறுவேறுஞானமாகி மெய்யினொடுபொய்யுமாய் | 
ஊறொடோசையாயஐந்தும் ஆய ஆயமாயனே!



[753.0]
மேலே செல்

ஐந்துமைந்துமைந்துமாகி அல்லவற்றுளாயுமாய் | 
ஐந்துமூன்றுமொன்றுமாகி நின்றவாதிதேவனே! | 
ஐந்துமைந்துமைந்துமாகி அந்தரத்த ணைந்துநின்று | 
ஐந்துமைந்துமாயநின்னை யாவர்காணவல்லரே?



[754.0]

மூன்றுமுப்பதாறினோடு ஒரைந்துமைந்துமைந்துமாய் | 
மூன்றுமூர்த்தியாகிமூன்று மூன்றுமூன்றுமூன்றுமாய | 
தோன்றுசோதிமூன்றுமாய்த் துளக்கமில்விளக்கமாய் | 
ஏன்றெனாவியுள்புகுந்த தென்கொலோ? எம்மீசனே!



[755.0]

நின்றியங்குமொன்றலா உருக்கள் தோறும்ஆவியாய் | 
ஒன்றியுள்கலந்துநின்ற நின்னதன்மையின்னதென்று | 
என்றும்யார்க்குமெண்ணிறந்த ஆதியாய்! நின்னுந்திவாய் | 
அன்றுநான்முகற்பயந்த ஆதிதேவனல்லையே?



[756.0]
மேலே செல்

நாகமேந்துமேருவெற்பை நாகமேந்துமண்ணினை | 
நாகமேந்துமாகமாகம் மாகமேந்துவார்புனல் | 
மாகமேந்துமங்குல்தீ ஓர் வாயுவைந்தமைந்துகாத்து | 
ஏகமேந்திநின்றநீர்மை நின்கணேயியன்றதே.



[757.0]

ஒன்றிரண்டுமூர்த்தியாய் உறக்கமோடுணர்ச்சியாய் | 
ஒன்றிரண்டுகாலமாகி வேலைஞாலமாயினாய் | 
ஒன்றிரண்டுதீயுமாகி ஆயனாயமாயனே! | 
ஒன்றிரண்டுகண்ணினானும் உன்னையேத்தவல்லனே? 



[758.0]

ஆதியானவானவர்க்கும் அண்டமாயவப்புறத்து | 
ஆதியானவானவர்க்கும் ஆதியானவாதிநீ | 
ஆதியானவானவாணர் அந்தகாலம் நீயுரைத்தி | 
ஆதியானகாலநின்னை யாவர்காணவல்லரே? 



[759.0]
மேலே செல்

தாதுலாவுகொன்றைமாலை துன்னுசெஞ்சடைச்சிவன் | 
நீதியால்வணங்குபாத நின்மலா! நிலாயசீர் | 
வேதவாணர்கீதவேள்வி நீதியானகேள்வியார் | 
நீதியால்வணங்குகின்றநீர்மை நின்கண்நின்றதே.



[760.0]

தன்னுளேதிரைத்தெழும் தரங்கவெண்தடங்கடல் | 
தன்னுளேதிரைத்தெழுந்து அடங்குகின்றதன்மைபோல் | 
நின்னுளேபிறந்திறந்து நிற்பவும்திரிபவும் | 
நின்னுளேயடங்குகின்ற நீர்மைநின்கண்நின்றதே.



[761.0]

சொல்லினால்தொடர்ச்சிநீ சொலப்படும்பொருளும்நீ | 
சொல்லினால்சொலப்படாது தோன்றுகின்றசோதிநீ | 
சொல்லினால்படைக்க நீபடைக்கவந்துதோன்றினார் | 
சொல்லினால்சுருங்க நின்குணங்கள்சொல்லவல்லரே? 



[762.0]
மேலே செல்

உலகுதன்னைநீபடைத்தி உள்ளொடுக்கிவைத்தி | மீண்டு
உலகுதன்னுளேபிறத்தி ஒரிடத்தையல்லையால் |
உலகுநின்னொடொன்றிநிற்க வேறுநிற்றியாதலால் |
உலகில்நின்னையுள்ளசூழல் யாவர்உள்ளவல்லரே?



[763.0]

இன்னையென்றுசொல்லலாவது இல்லையாதும் இட்டிடைப் | 
பின்னைகேள்வனென்பர் உன்பிணக்குணர்ந்தபெற்றியோர் | 
பின்னையாயகோலமோடு பேருமூருமாதியும் | 
நின்னையார்நினைக்கவல்லர்? நீர்மையால்நினைக்கிலே.



[764.0]

தூய்மையோகமாயினாய்! துழாயலங்கல்மாலையாய்! | 
ஆமையாகியாழ்கடல்துயின்ற ஆதிதேவ! | நின் 
நாமதேயமின்னதென்ன வல்லமல்லவாகிலும் | 
சாமவேதகீதனாய சக்ரபாணியல்லையே? 



[765.0]
மேலே செல்

அங்கமாறும்வேதநான்கும் ஆகிநின்றவற்றுளே | 
தங்குகின்றதன்மையாய்! தடங்கடல்பணத்தலை | 
செங்கண்நாகணைக்கிடந்த செல்வமல்குசீரினாய் | 
சங்கவண்ணமன்னமேனி சார்ங்கபாணியல்லையே?



[766.0]

தலைக்கணத்துகள்குழம்புசாதி சோதிதோற்றமாய் | 
நிலைக்கணங்கள்காணவந்து நிற்றியேலும் நீடிரும் | 
கலைக்கணங்கள்சொற்பொருள் கருத்தினால்நினைக்கொணா | 
மலைக்கணங்கள்போலுணர்த்தும்மாட்சி நின்றன்மாட்சியே.



[767.0]

ஏகமூர்த்திமூன்றுமூர்த்திநாலுமூர்த்தி நன்மைசேர் | 
போகமூர்த்திபுண்ணியத்தின்மூர்த்தி எண்ணில்மூர்த்தியாய் | 
நாகமூர்த்திசயனமாய் நலங்கடல்கிடந்து | மேல் 
ஆகமூர்த்தியாயவண்ணம் என்கொல்? ஆதிதேவனே! 



[768.0]
மேலே செல்

விடத்தவாயொராயிரம் இராயிரம்கண்வெந்தழல் | 
விடத்துவீள்விலாதபோகம் மிக்கசோதிதொக்கசீர் | 
தொடுத்துமேல்விதானமாய பௌவநீரராவணை | 
படுத்தபாயல்பள்ளிகொள்வது என்கொல்? வேலைவண்ணானே.



[769.0]


Other Prabandhams:
திருப்பல்லாண்டு     திருமொழி     திருப்பாவை     நாச்சியார் திருமொழி     பெருமாள் திருமொழி     திருச்சந்தவிருத்தம்     திருமாலை     திருப்பள்ளி எழுச்சி     அமலனாதிபிரான்     கண்ணிநுண்சிறுத்தாம்பு     பெரிய திருமொழி     திருக்குறுந்தாண்டகம்     திருநெடுந்தாண்டகம்     முதல் திருவந்தாதி     இரண்டாம் திருவந்தாதி     மூன்றாம் திருவந்தாதி     நான்முகன் திருவந்தாதி     திருவிருத்தம்     திருவாசிரியம்     பெரிய திருவந்தாதி     திருஎழுகூற்றிருக்கை     சிறிய திருமடல்     பெரிய திருமடல்     இராமானுச நூற்றந்தாதி     திருவாய்மொழி    
This page was last modified on Wed, 02 Jun 2021 19:18:06 -0500
 
   
    send corrections and suggestions to admin @ sivasiva.org