Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS   Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Urdu   Cyrillic/Russian  

முதலாயிரம்   ஆண்டாள்  
திருப்பாவை  

Songs from 474 to 503   ( திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் )
Pages:    1    2  Next

ஸ்ரீ ஆண்டாள் தனியன்கள்
பராசர பட்டர் அருளிச்செய்த்து
நீளா துங்க ஸ்தந கிரிதடீ ஸுப்தம் உத்போத்ய க்ருக்ஷ்ணம்
பாரார்த்யம் ஸ்வம் ஸ்ருதி ஸத ஸரஸ் ஸித்தமத்யா பயந்தீ
ஸ்வோச்சிஷ்டாயாம் ஸ்ரஜி நிகளிதம் யாபலாத் க்ருத்ய புங்க்தே
கோதா தஸ்யை நம இதம் இதம் பூய ஏவாஸ்துபூய:[474.1]
மேலே செல்

உய்யக்கொண்டார் அருளிச்செய்த்து
அன்னவயற்புதுவைஆண்டாள் | அரங்கற்குப்
பன்னு திருப்பாவைப் பல்பதியம் | - இன்னிசையால்
பாடிக்கொடுத்தாள் நற்பாமாலை | பூமாலை
சூடிக்கொடுத்தாளைச் சொல்லு
சூடிக்கொடுத்தசுடர்க்கொடியே! | தொல்பாவை
பாடிஅருளவல்லபல்வளையாய்! | நாடி நீ
வேங்கடவற்குகென்னைவிதியென்றவிம்மாற்றம் |
நாம்கடவாவண்ணமேநல்கு.[474.2]
மேலே செல்
Audio: https://www.youtube.com/watch?v=5VowCKkXlxk

மார்கழித்திங்கள் மதிநிறைந்தநன்னாளால் |
நீராடப்போதுவீர் போதுமினோநேரிழையீர்! | 
சீர்மல்குமாய்ப்பாடிச் செல்வச்சிறுமீர்காள்! | 
கூர்வேல்கொடுந்தொழிலன் நந்தகோபன்குமரன் |
ஏரார்ந்தகண்ணி யசோதையிளஞ்சிங்கம் |
கார்மேனிச்செங்கண் கதிர்மதியம்போல்முகத்தான் |
நாராயணனே நமக்கேபறைதருவான் |
பாரோர்புகழப் படிந்தேலோரெம்பாவாய்.[474.0]
மேலே செல்

வையத்துவாழ்வீர்காள்! நாமும்நம்பாவைக்கு |
செய்யும்கிரிசைகள் கேளீரோ | பாற்கடலுள் 
பையத்துயின்ற பரமனடிபாடி |
நெய்யுண்ணோம்பாலுண்ணோம் நாட்காலேநீராடி |
மையிட்டெழுதோம் மலரிட்டுநாம்முடியோம் |
செய்யாதனசெய்யோம் தீக்குறளைசென்றோதோம் |
ஐயமும்பிச்சையும் ஆந்தனையும்கைகாட்டி |
உய்யுமாறெண்ணி உகந்தேலோரெம்பாவாய்.[475.0]

ஓங்கியுலகளந்த உத்தமன்பேர்பாடி |
நாங்கள்நம்பாவைக்குச் சாற்றிநீராடினால் |
தீங்கின்றிநாடெல்லாம் திங்கள்மும்மாரிபெய்து |
ஓங்குபெருஞ்செந்நெலூடு கயலுகள |
பூங்குவளைப்போதில் பொறிவண்டுகண்படுப்ப | 
தேங்காதேபுக்கிருந்து சீர்த்தமுலைபற்றி 
வாங்க | குடம்நிறைக்கும் வள்ளல்பெரும்பசுக்கள் |
நீங்காதசெல்வம் நிறைந்தேலோரெம்பாவாய்.[476.0]

ஆழிமழைக்கண்ணா! ஒன்றுநீகைகரவேல் |
ஆழியுள்புக்கு முகந்துகொடார்த்தேறி |
ஊழிமுதல்வனுருவம்போல்மெய்கறுத்து |
பாழியந்தோளுடைப் பற்பநாபன்கையில் |
ஆழிபோல்மின்னி வலம்புரிபோல்நின்றதிர்ந்து |
தாழாதேசார்ங்கமுதைத்த சரமழைபோல் |
வாழவுலகினில்பெய்திடாய் | நாங்களும் 
மார்கழிநீராட மகிழ்ந்தேலோரெம்பாவாய்.[477.0]
மேலே செல்

மாயனை மன்னுவடமதுரைமைந்தனை | 
தூயபெருநீர் யமுனைத்துறைவனை |
ஆயர்குலத்தினில்தோன்றும் அணிவிளக்கை |
தாயைக்குடல்விளக்கம்செய்த தாமோதரனை |
தூயோமாய்வந்துநாம் தூமலர் தூவித்தொழுது |
வாயினால்பாடி மனத்தினால்சிந்திக்க |
போயபிழையும் புகுதருவான்நின்றனவும் |
தீயினில்தூசாகும் செப்பேலோரெம்பாவாய்.[478.0]

புள்ளும் சிலம்பினகாண் புள்ளரையன் கோயில் |
வெள்ளைவிளிசங்கின் பேரரவம்கேட்டிலையோ? |
பிள்ளாய்! எழுந்திராய் பேய்முலைநஞ்சுண்டு |
கள்ளச்சகடம் கலக்கழியக்காலோச்சி |
வெள்ளத்தரவில் துயிலமர்ந்தவித்தினை | 
உள்ளத்துக்கொண்டு முனிவர்களும்யோகிகளும் |
மெள்ளவெழுந்து அரியென்றபேரரவம் |
உள்ளம்புகுந்து குளிர்ந்தேலோரெம்பாவாய்.[479.0]

கீசுகீசென்றெங்கும் ஆனைச்சாத்தன் | கலந்து 
பேசினபேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்பெண்ணே! | 
காசும்பிறப்பும் கலகலப்பக்கைபேர்த்து |
வாசநறுங்குழலாய்ச்சியர் | மத்தினால் 
ஓசைபடுத்த தயிரரவம்கேட்டிலையோ? | 
நாயகப்பெண்பிள்ளாய்! நாராயணன்மூர்த்தி |
கேசவனைப்பாடவும் நீகேட்டேகிடத்தியோ? | 
தேசமுடையாய்! திறவேலோரெம்பாவாய்.[480.0]
மேலே செல்

கீழ்வானம்வெள்ளென்று எருமைசிறுவீடு |
மேய்வான்பரந்தனகாண் மிக்குள்ளபிள்ளைகளும் |
போவான்போகின்றாரைப் போகாமல்காத்து | உன்னைக் 
கூவுவான்வந்துநின்றோம் | கோதுகலமுடைய 
பாவாய்! எழுந்திராய் பாடிப்பறைகொண்டு |
மாவாய்பிளந்தானை மல்லரைமாட்டிய |
தேவாதிதேவனைச் சென்றுநாம்சேவித்தால் |
ஆவாவென்றாராய்ந் தருளேலோரெம்பாவாய்.[481.0]

தூமணிமாடத்துச் சுற்றும்விளக்கெரிய |
தூபம்கமழத் துயிலணைமேல்கண்வளரும் |
மாமான்மகளே! மணிக்கதவம்தாள்திறவாய் |
மாமீர்! அவளையெழுப்பீரோ? | உன்மகள்தான் 
ஊமையோ? அன்றிச்செவிடோ? அனந்தலோ? |
ஏமப்பெருந் துயில் மந்திரப்பட்டாளோ? | 
மாமாயன்மாதவன் வைகுந்தனென்றென்று | 
நாமம்பலவும் நவின்றேலோரெம்பாவாய்.[482.0]

நோற்றுச்சுவர்க்கம் புகுகின்றவம்மனாய்! | 
மாற்றமும்தாராரோ? வாசல்திறவாதார் | 
நாற்றத்துழாய்முடி நாராயணன்நம்மால் | 
போற்றப்பறைதரும் புண்ணியனால் | பண்டொருநாள் 
கூற்றத்தின்வாய்வீழ்ந்த கும்பகரணனும் |
தோற்றுமுனக்கே பெருந்துயில்தான்தந்தானோ? |
ஆற்றஅனந்தலுடையாய்! அருங்கலமே! |
தேற்றமாய்வந்து திறவேலோரெம்பாவாய்.[483.0]
மேலே செல்

கற்றுக்கறவைக் கணங்கள்பலகறந்து |
செற்றார்திறலழியச் சென்றுசெருச்செய்யும் |
குற்றமொன்றில்லாத கோவலர்தம்பொற்கொடியே! |
புற்றரவல்குல் புனமயிலே! போதராய் |
சுற்றத்துத்தோழிமாரெல்லாரும்வந்து | நின் 
முற்றம்புகுந்து முகில்வண்ணன்பேர்பாட | 
சிற்றாதேபேசாதே செல்வப்பெண்டாட்டி! | நீ 
எற்றுக்குறங்கும் பொருளேலோரெம்பாவாய்.[484.0]

கனைத்திளங்கற்றெருமை கன்றுக்கிரங்கி |
நினைத்துமுலைவழியே நின்றுபால்சோர |
நனைத்தில்லம்சேறாக்கும் நற்செல்வன்தங்காய்! | 
பனித்தலைவீழ நின்வாசற்கடைபற்றி |
சினத்தினால்தென்னிலங்கைக் கோமானைச்செற்ற |
மனத்துக்கினியானைப் பாடவும்நீவாய்திறவாய் |
இனித்தானெழுந்திராய் ஈதென்னபேருறக்கம்? | 
அனைத்தில்லத்தாரும் அறிந்தேலோரெம்பாவாய்.[485.0]

புள்ளின்வாய்கீண்டானைப் பொல்லாவரக்கனை |
கிள்ளிக்களைந்தானைக் கீர்த்திமைபாடிப்போய்ப் |
பிள்ளைகளெல்லாரும் பாவைக்களம்புக்கார் |
வெள்ளியெழுந்து வியாழ முறங்கிற்று |
புள்ளும்சிலம்பினகாண் போதரிக்கண்ணினாய்! | 
குள்ளக்குளிரக் குடைந்துநீராடாதே |
பள்ளிக்கிடத்தியோ? பாவாய்! நீநன்நாளால் |
கள்ளம்தவிர்ந்து கலந்தேலோரெம்பாவாய்.[486.0]
மேலே செல்

உங்கள்புழக்கடைத் தோட்டத்துவாவியுள் |
செங்கழுனீர்வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய்கூம்பின காண் |
செங்கற்பொடிக்கூரை வெண்பல்தவத்தவர் |
தங்கள்திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார் |
எங்களைமுன்ன மெழுப்புவான்வாய்பேசும் |
நங்காய்! எழுந்திராய் நாணாதாய்! நாவுடையாய்! |
சங்கொடுசக்கரம் ஏந்தும்தடக்கையன் |
பங்கயக்கண்ணானைப் பாடேலோரெம்பாவாய்.[487.0]

எல்லே! இளங்கிளியே! இன்னமுறங்குதியோ? |
சில்லென்றழையேன்மின்! நங்கைமீர்! போதர்கின்றேன் |
வல்லையுன்கட்டுரைகள் பண்டேயுன்வாயறிதும் |
வல்லீர்கள்நீங்களே நானேதானாயிடுக |
ஒல்லைநீபோதாய் உனக்கென்ன வேறுடையை |
எல்லாரும்போந்தாரோ? போந்தார்போந்தெண்ணிக்கொள் |
வல்லானைகொன்றானை மாற்றாரைமாற்றழிக்க 
வல்லானை | மாயனைப் பாடேலோரெம்பாவாய்.[488.0]

நாயகனாய்நின்ற நந்தகோபனுடைய 
கோயில்காப்பானே! | கொடித்தோன்றும் தோரண 
வாயில்காப்பானே! | மணிக்கதவம்தாள்திறவாய் |
ஆயர்சிறுமியரோமுக்கு | அறைபறை 
மாயன்மணிவண்ணன் நென்னலேவாய்நேர்ந்தான் |
தூயோமாய்வந்தோம் துயிலெழப்பாடுவான் |
வாயால்முன்னம்முன்னம் மாற்றாதேயம்மா! | நீ 
நேயநிலைக்கதவம் நீக்கேலோரெம்பாவாய். [489.0]
மேலே செல்

அம்பரமேதண்ணீரே சோறேயறஞ்செய்யும் |
எம்பெருமான்! நந்தகோபாலா! எழுந்திராய் |
கொம்பனார்க்கெல்லாம் கொழுந்தே! குலவிளக்கே! | 
எம்பெருமாட்டி! யசோதாய்! அறிவுறாய் |
அம்பரமூடறுத்தோங்கி உளகளந்த |
உம்பர்கோமானே! உறங்காதெழுந்திராய் |
செம்பொற்கழலடிச் செல்வா! பலதேவா! | 
உம்பியும்நீயும் உறங்கேலோரெம்பாவாய்.[490.0]

உந்துமதகளிற்றன் ஓடாததோள்வலியன் |
நந்தகோபாலன்மருமகளே! நப்பின்னாய்! | 
கந்தம்கமழுங்குழலி! கடைதிறவாய் |
வந்தெங்குங் கோழியழைத்தனகாண் | மாதவிப் 
பந்தல்மேல் பல்கால்குயிலினங்கள்கூவினகாண் |
பந்தார்விரலி! உன்மைத்துனன்பேர்பாட | 
செந்தாமரைக்கையால் சீரார்வளையொலிப்ப |
வந்துதிறவாய் மகிழ்ந்தேலோரெம்பாவாய். [491.0]


Other Prabandhams:
திருப்பல்லாண்டு     திருமொழி     திருப்பாவை     நாச்சியார் திருமொழி     பெருமாள் திருமொழி     திருச்சந்தவிருத்தம்     திருமாலை     திருப்பள்ளி எழுச்சி     அமலனாதிபிரான்     கண்ணிநுண்சிறுத்தாம்பு     பெரிய திருமொழி     திருக்குறுந்தாண்டகம்     திருநெடுந்தாண்டகம்     முதல் திருவந்தாதி     இரண்டாம் திருவந்தாதி     மூன்றாம் திருவந்தாதி     நான்முகன் திருவந்தாதி     திருவிருத்தம்     திருவாசிரியம்     பெரிய திருவந்தாதி     திருஎழுகூற்றிருக்கை     சிறிய திருமடல்     பெரிய திருமடல்     இராமானுச நூற்றந்தாதி     திருவாய்மொழி    
This page was last modified on Wed, 02 Jun 2021 19:18:06 -0500
 
   
    send corrections and suggestions to admin @ sivasiva.org