Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS   Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Urdu   Cyrillic/Russian  

மூன்றாவதாயிரம்   நம்மாழ்வார்  
திருவாசிரியம்  

Songs from 2578 to 2584   ( )

அருளாளப்பெருமாளெம்பெருமானார் அருளிச்செய்தது 
காசினியோர் தாம்வாழக் கலியுகத்தே வந்துதித்து,
ஆசிரியப்பா வதனால் அருமறைநூல் விரித்தானை,
தேசிகனைப் பராங்குசனைத் திகழ்வ குளத்தாரானை,
மாசடையா மனத்துவைத்து மறவாமல் வாழ்த்துதுமே.[2578.1]

செக்கர்மாமுகிலுடுத்துமிக்கசெஞ்சுடர்ப் 
பரிதிசூடி | அஞ்சுடர்மதியம்பூண்டு |
பலசுடர்புனைந்தபவளச்செவ்வாய் | 
திகழ்பசுஞ்சோதிமரகதக்குன்றம் | 
கடலோன்கைமிசைக்கண்வளர்வதுபோல் |
பீதகவாடைமுடிபூண்முதலா | 
மேதகுபல்கலனணிந்து | சோதி 
வாயவும்கண்ணவும்சிவப்ப | மீதிட்டுப் 
பச்சைமேனிமிகப்பகைப்ப | 
நச்சுவினைக்கவர்தலையரவினமளியேறி 
எறிகடல்நடுவுளறிதுயிலமர்ந்து | 
சிவனயனிந்திரனிவர்முதலனைத்தோர் | 
தெய்வக்குழாங்கள்கைதொழக்கிடந்த | 
தாமரையுந்தித்தனிப்பெருநாயக! |
மூவுலகளந்தசேவடியோயே! [2578.0]

உலகுபடைத் துண்டவெந்தை | அறைகழல் 
சுடர்ப்பூந்தாமரைசூடுதற்கு | அவாவுஆ 
ருயிருகியுக்க | நேரியகாத
லன்பிலின்பீன்தேறல் | அமுத 
வெள்ளத்தானாம் சிறப்புவிட்டு | ஒருபொருட்கு 
அசைவோரசைக | திருவொடுமருவிய 
இயற்கை | மாயாப்பெருவிறலுலகம் 
மூன்றினொடுநல்வீடுபெறினும் | 
கொள்வதெண்ணுமோ தெள்ளியோர்குறிப்பே? [2579.0]

குறிப்பில்கொண்டுநெறிப்பட | உலகம் 
மூன்று உடன் வணங்குதோன்று புகழ் | ஆணை 
மெய்பெறநடாய தெய்வம்மூவரில் 
முதல்வனாகி | சுடர்விளங்ககலத்து | 
வரைபுரைதிரை பொரபெருவரைவெருவர | 
உருமுரலொலிமலி நளிர்கடற்படவர 
வரசுடல் தடவரை சுழற்றிய | தனிமாத் 
தெய்வத்தடியவர்க்கு இனிநாமாளாகவே 
இசையுங்கொல்? | ஊழிதோறூழியோவாதே. [2580.0]
மேலே செல்

ஊழிதோறூழியோவாது | வாழியே
வென்று யாம்தொழ இசையுங்கொல்? |
யாவகையுலகமும் யாவருமில்லா |
மேல்வரும் பெரும்பாழ்க்காலத்து | இரும்பொருட்
கெல்லாம் அரும்பெறல் தனிவித்து | ஒருதா
னாகித்தெய்வநான்முகக்கொழுமுளை
யீன்று | முக்கணீசனொடுதேவுபலநுதலி |
மூவுலகம்விளைத்தஉந்தி |
மாயக்கடவுள்மாமுதலடியே.[2581.0]

மாமுதலடிப்போதொன்றுகவிழ்த்தலர்த்தி | 
மண்முழுதுமகப்படுத்து | ஒண்சுடரடிப்போது 
ஒன்றுவிண்செலீஇ | நான்முகப்புத்தேள் 
நாடுவியந்துவப்ப | வானவர்முறைமுறை 
வழிபடநெறீஇ | தாமரைக்காடு 
மலர்க்கண்ணோடுகனிவாயுடையது 
மாய் | இருநாயிறுஆயிரம்மலர்ந்தன்ன | 
கற்பகக்காவுபற்பலவன்ன | 
முடிதோளயிரம்தழைத்த | 
நெடியோய்க் கல்லது அடியதோவுலகே?[2582.0]

ஓஓ! உலகினதியல்வே! | ஈன்றோளிருக்க 
மணைநீராட்டி | படைத்திடந்துண்டுமிழ்ந் 
தளந்து | தேர்ந்துலகளிக்கும் முதற்பெருங் 
கடவுள்நிற்ப | புடைப்பலதானறி 
தெய்வம்பேணுதல் | தனாது 
புல்லறிவாண்மைபொருந்தக்காட்டி | 
கொல்வனமுதலா அல்லனமுயலும் | 
இனையசெய்கைஇன்புதுன்பளி | 
தொன்மாமாயப்பிறவியுள்நீங்கா | 
பன்மாமாயத்தழுந்துமாநளிர்ந்தே. [2583.0]
மேலே செல்

நளிர்மதிச்சடையனும்நான்முகக்கடவுளும் | 
தளிரொளியிமையவர்தலைவனும்முதலா | 
யாவகையுலகமும்யாவருமகப்பட | 
நிலநீர்தீகால்சுடரிருவிசும்பும் | 
மலர்சுடர்பிறவும்சிறிதுடன்மயங்க | 
ஒருபொருள்புறப்பாடின்றிமுழுவதும் 
அகப்படக்கரந்து | ஓராலிலைச்சேர்ந்தஎம் 
பெருமாமாயனையல்லது | 
ஒருமாதெய்வம்மற்றுடையமோயாமே?  [2584.0]


Other Prabandhams:
திருப்பல்லாண்டு     திருமொழி     திருப்பாவை     நாச்சியார் திருமொழி     பெருமாள் திருமொழி     திருச்சந்தவிருத்தம்     திருமாலை     திருப்பள்ளி எழுச்சி     அமலனாதிபிரான்     கண்ணிநுண்சிறுத்தாம்பு     பெரிய திருமொழி     திருக்குறுந்தாண்டகம்     திருநெடுந்தாண்டகம்     முதல் திருவந்தாதி     இரண்டாம் திருவந்தாதி     மூன்றாம் திருவந்தாதி     நான்முகன் திருவந்தாதி     திருவிருத்தம்     திருவாசிரியம்     பெரிய திருவந்தாதி     திருஎழுகூற்றிருக்கை     சிறிய திருமடல்     பெரிய திருமடல்     இராமானுச நூற்றந்தாதி     திருவாய்மொழி    
This page was last modified on Wed, 02 Jun 2021 19:18:06 -0500
 
   
    send corrections and suggestions to admin @ sivasiva.org