Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS   Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Urdu   Cyrillic/Russian  

நான்காவதாயிரம்   நம்மாழ்வார்  
திருவாய்மொழி  

Songs from 2899 to 4000   ( )
Pages:    1    2  3  4  5  6  7  8  9  10  Next  Next 10

பரஞ்சோதிநீபரமாய் நின்னிகழ்ந்துபின் | மற்றோர் 
பரஞ்சோதியின்மையின் படியோவிநிகழ்கின்ற | 
பரஞ்சோதிநின்னுள்ளே படருலகம்படைத்த | எம் 
பரஞ்சோதி! கோவிந்தா! பண்புரைக்கமாட்டேனே.[2899.0]

மாட்டாதேயாகிலும் இம்மலர்தலைமாஞாலம் | நின் 
மாட்டாயமலர்புரையும் திருவுருவும்மனம்வைக்க | 
மாட்டாதபலசமய மதிகொடுத்தாய் | மலர்த்துழாய் 
மாட்டேநீமனம் வைத்தாய் மாஞாலம்வருந்தாதே.[2900.0]

வருந்தாதவருந்தவத்த மலர்க்கதிரின்சுடருடம்பாய் | 
வருந்தாதஞானமாய் வரம்பின்றிமுழுதியன்றாய்! | 
வருங்காலம்நிகழ்காலம் கழிகாலமாய் | உலகை 
ஒருங்காகஅளிப்பாய்! சீர் எங்குஉலக்கஓதுவனே?[2901.0]
மேலே செல்

ஓதுவாரோத்தெல்லாம் எவ்வுலகத்தெவ்வெவையும் | 
சாதுவாய்நின்புகழின் தகையல்லால்பிறிதில்லை | 
போதுவாழ்புனந்துழாய் முடியினாய்! | பூவின்மேல் 
மாதுவாழ்மார்ப்பினாய்! என்சொல்லியான்வாழ்த்துவனே?[2902.0]

வாழ்த்துவார்பலராக நின்னுள்ளேநான்முகனை | 
மூழ்த்தநீருலகெல்லாம் படையென்றுமுதல்படைத்தாய்! | 
கேழ்த்தசீரரன்முதலாக் கிளர்தெய்வமாய்க்கிளர்ந்து | 
சூழ்த்தமரர்துதித்தாலுன் தொல்புகழ்மாசூணாதே?[2903.0]

மாசூணாச்சுடருடம்பாய் மலராதுகுவியாது | 
மாசூணாஞானமாய் முழுதுமாய்முழுதியன்றாய்! | 
மாசூணாவான்கோலத்து அமரர்கோன்வழிபட்டால் | 
மாசூணாவுனபாதமலர்ச்சோதிமழுங்காதே.[2904.0]
மேலே செல்

மழுங்காதவைந்நுதிய சக்கரநல்வலத்தையாய் | 
தொழுங்காதற்களிறளிப்பான் புள்ளூர்ந்து தோன்றினையே | 
மழுங்காதஞானமே படையாக | மலருலகில் 
தொழும்பாயார்க்களித்தால் உன்சுடர்ச்சோதி மறையாதே?[2905.0]

மறையாயநால்வேதத்துள்நின்ற மலர்சுடரே! | 
முறையாலிவ்வுலகெல்லாம் படைத்திடந்துண்டு மிழ்ந்தளந்தாய்! | 
பிறையேறுசடையானும் நான்முகனுமிந்திரனும் |
இறையாதலறிந்தேத்த வீற்றிருத்தலிதுவியப்பே.[2906.0]

வியப்பாயவியப்பில்லா மெய்ஞ்ஞானவேதியனை | 
சயப்புகழார்பலர்வாழும் தடங்குருகூர்ச்சடகோபன் | 
துயக்கின்றித்தொழுதுரைத்த ஆயிரத்துள்இப்பத்தும் | 
உயக்கொண்டுபிறப்பறுக்கும் ஒலிமுந்நீர்ஞாலத்தே.[2907.0]
மேலே செல்

முந்நீர்ஞாலம்படைத்த எம்முகில்வண்ணனே! | 
அந்நாள்நீதந்த ஆக்கையின்வழியுழல்வேன் | 
வெந்நாள்நோய்வீய வினைகளைவேரறப்பாய்ந்து | 
எந்நாள்யானுன்னை இனிவந்துகூடுவனே?[2908.0]

வன்மாவையமளந்த எம்வாமனா! |நின் 
பன்மாமாயப் பல்பிறவியில்படிகின்றயான் | 
தொன்மாவல்வினைத் தொடர்களை முதலரிந்து | 
நின்மாதாள்சேர்ந்து நிற்பது எஞ்ஞான்றுகொலோ?[2909.0]

கொல்லாமாக்கோல் கொலைசெய்து, பாரதப்போர் | 
எல்லாச்சேனையும் இருநிலத்தவித்தவெந்தாய்! | 
பொல்லாவாக்கையின் புணர்வினையறுக்கலறா | 
சொல்லாய்யானுன்னைச் சார்வதோர்சூழ்ச்சியே.[2910.0]
மேலே செல்

சூழ்ச்சிஞானச் சுடரொளியாகி | என்றும் 
ஏழ்ச்சிக்கேடின்றி எங்கணும்நிறைந்தவெந்தாய்! | 
தாழ்ச்சிமற்றெங்கும்தவிர்ந்து நின்தாளிணக்கீழ் 
வாழ்ச்சி |யான்சேரும்வகை அருளாய்வந்தே.[2911.0]

வந்தாய்போலேவந்தும் என்மனத்தினைநீ | 
சிந்தாமற்செய்யாய் இதுவேஇதுவாகில் | 
கொந்தார்க்காயாவின் கொழுமலர்த்திருநிறத்த 
எந்தாய் | யான்உன்னை எங்குவந்தணுகிற்பனே?[2912.0]

கிற்பன்கில்லேனென்றிலன் முனநாளால் | 
அற்பசாரங்களவை சுவைத்தகன்றொழிந்தேன் | 
பற்பல்லாயிரம் உயிர்செய்தபரமா! |நின் 
நற்பொற்சோதித்தாள் நணுகுவதெஞ்ஞான்றே?[2913.0]
மேலே செல்

எஞ்ஞான்றுநாமிருந்திருந்து இரங்கிநெஞ்சே! | 
மெய்ஞ்ஞானமின்றி வினையியல்பிறப்பழுந்தி | 
எஞ்ஞான்றுமெங்கும் ஒழிவறநிறைந்துநின்ற | 
மெய்ஞ்ஞானச்சோதிக் கண்ணனைமேவுதுமே?[2914.0]

மேவுதுன்பவினைகளை விடுத்துமிலேன் | 
ஓவுதலின்றி உன்கழல்வணங்கிற்றிலேன் | 
பாவுதொல்சீர்க்கண்ணா! என்பரஞ்சுடரே! | 
கூவுகின்றேன்காண்பான் எங்கெய்தக்கூவுவனே?[2915.0]

கூவிக்கூவிக் கொடுவினைத்தூற்றுள்நின்று | 
பாவியேன்பலகாலம் வழிதிகைத்தலமருகின்றேன் | 
மேவியன்றாநிரைகாத்தவன் உலகமெல்லாம்
தாவியவம்மானை | எங்கினித்தலைப்பெய்வனே?[2916.0]
மேலே செல்

தலைப்பெய்காலம் நமன்தமர்பாசம்விட்டால் | 
அலைப்பூணுண்ணும் அவ்வல்லலெல்லாமகல | 
கலைப்பல்ஞானத்து என்கண்ணனைக்கண்டுகொண்டு | 
நிலைப்பெற்றென்னெஞ்சம்பெற்றது நீடுயிரே.[2917.0]

உயிர்களெல்லாவுலகமுமுடையவனை | 
குயில்கொள்சோலைத் தென்குருகூர்ச்சடகோபன் | 
செயிரில்சொல்லிசைமாலை ஆயிரத்துள்இப்பத்தும் | 
உயிரின்மேலாக்கை ஊனிடையொழிவிக்குமே.[2918.0]


Other Prabandhams:
திருப்பல்லாண்டு     திருமொழி     திருப்பாவை     நாச்சியார் திருமொழி     பெருமாள் திருமொழி     திருச்சந்தவிருத்தம்     திருமாலை     திருப்பள்ளி எழுச்சி     அமலனாதிபிரான்     கண்ணிநுண்சிறுத்தாம்பு     பெரிய திருமொழி     திருக்குறுந்தாண்டகம்     திருநெடுந்தாண்டகம்     முதல் திருவந்தாதி     இரண்டாம் திருவந்தாதி     மூன்றாம் திருவந்தாதி     நான்முகன் திருவந்தாதி     திருவிருத்தம்     திருவாசிரியம்     பெரிய திருவந்தாதி     திருஎழுகூற்றிருக்கை     சிறிய திருமடல்     பெரிய திருமடல்     இராமானுச நூற்றந்தாதி     திருவாய்மொழி    
This page was last modified on Wed, 02 Jun 2021 19:18:06 -0500
 
   
    send corrections and suggestions to admin @ sivasiva.org