Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS   Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Urdu   Cyrillic/Russian  

மூன்றாவதாயிரம்   நம்மாழ்வார்  
திருவிருத்தம்  

Songs from 2478 to 2577   ( ஆழ்வார்திருநகரி )
Pages:    1    2  3  4  5  6  Next

கிடாம்பியாச்சான் அருளிச்செய்தது 

கருவிருத் தக்குழி நீத்தபின் காமக் கடுங்குழிவீழ்ந்து,
ஒருவிருத் தம்புக் குழலுறு வீர்.உயி ரின்பொருள்கட்கு,
ஒருவிருத் தம்புகு தாமல் குருகையர் கோனுரைத்த,
திருவிருத் தத்தோ ரடிகற் றிரீர்திரு நாட்டகத்தே.


[2478.1]
மேலே செல்

பொய்ந்நின்றஞானமும் பொல்லாவொழுக்குமழுக் குடம்பும் | 
இந்நின்றநீர்மைஇனியாமுறாமை | உயிரளிப்பான் 
எந்நின்றயோனியுமாய்ப்பிறந்தாய்! இமையோர்தலைவா! 
மெய்நின்றுகேட்டருளாய் | அடியேன்செய்யும் விண்ணப்பமே. [2478.0]
மேலே செல்

செழுநீர்த்தடத்துக் கயல்மிளிர்ந்தாலொப்ப | சேயரிக்கண் 
அழுநீர்துளும்ப அலமருகின்றன | வாழியரோ 
முழுநீர்முகில்வண்ணன்கண்ணன் விண்ணாட்டவர்மூதுவராம் 
தொழுநீரிணையடிக்கே |அன்புசூட்டியசூழ்குழற்கே. [2479.0]

குழல்கோவலர் மடப்பாவையும் மண்மகளும் | திருவும் 
நிழற்போல்வனர்கண்டு நிற்குங்கொல்? மீளுங்கொல்? | தண்ணந்துழாய் 
அழல்போலடும்சக்கரத்தண்ணல் விண்ணோர்தொழக் கடவும் 
தழற்போல்சினத்த | அப்புள்ளின்பின்போனதனி நெஞ்ச்மே. [2480.0]

தனிநெஞ்சம் முன்னவர்புள்ளேகவர்ந்தது | தண்ணந் துழாய்க்கு 
இனிநெஞ்சம் இங்குக்கவர்வது யாமிலம் | நீநடுவே 
முனிவஞ்சப்பேய்ச்சி முலைசுவைத்தான்முடிசூடுதுழாய்ப் 
பனிநஞ்சமாருதமே! | எம்மதாவிபனிப்பியல்வே? [2481.0]
மேலே செல்

பனிப்பியல்வாக உடையதண்வாடை | இக்காலமிவ்வூர்ப் 
பனிப்பியல்வெல்லாம் தவிர்ந்தெரிவீசும் | அந்தண்ணந் துழாய்ப் 
பனிப்புயல்சோரும்தடங்கண்ணிமாமைத் திறத்துக்கொலாம்? 
பனிப்புயல்வண்ணண் | செங்கோலொருநான்று தடாவியதே.[2482.0]

தடாவியவம்பும் முரிந்தசிலைகளும்போகவிட்டு | 
கடாயினகொண்டொல்கும் வல்லியீதேனும் | அசுரர் மங்கக் 
கடாவியவேகப்பறவையின்பாகன்மதனசெங்கோல் 
நடாவியகூற்றங்கண்டீர் | உயிர்காமின்கள் ஞாலத்துள்ளே. [2483.0]

ஞாலம்பனிப்பச்செறித்து | நன்னீரிட்டுக்கால்சிதைந்து 
நீலவல்லேறுபொராநின்றவானமிது | திருமால் 
கோலஞ்சுமந்துபிரிந்தார்கொடுமைகுழறுதண்பூங் 
காலங்கொலோ? அறியேன் | வினையாட்டியேன் காண்கின்றவே.[2484.0]
மேலே செல்

காண்கின்றனகளும் கேட்கின்றனகளும்காணில் | இந்நாள் 
பாண்குன்றநாடர்பயில்கின்றன |இதெல்லாமறிந்தோம் 
மாண்குன்றமேந்திதண்மாமலைவேங்கடத்தும்பர்நம்பும் 
சேண்குன்றஞ்சென்று | பொருள்படைப்பான்கற்ற திண்ணனவே. [2485.0]

திண்பூஞ்சுடர்நுதி நேமியஞ்செல்வர் |விண்ணாடனைய 
வண்பூமணிவல்லி யாரேபிரிபவர்தாம்? | இவையோ 
கண்பூங்கமலம்கருஞ்சுடராடிவெண்முத்தரும்பி 
வண்பூங்குவளை | மடமான்விழிக்கின்றமாயிதழே. [2486.0]

மாயோன் வடதிருவேங்கடநாட | வல்லிக்கொடிகாள்! 
நோயோவுரைக்கிலும் கேட்கின்றிலீர்உரையீர் | நுமது 
வாயோ? அதுவன்றிவல்வினையேனும்கிளியுமெள்கும் 
ஆயோ? அடும்தொண்டையோ? | அறையோ! இதறிவரிதே. [2487.0]
மேலே செல்

அரியனயாமின்றுகாண்கின்றன | கண்ணன் விண்ணனையாய்! 
பெரியனகாதம் பொருட்கோ? பிரிவெனெ | ஞாலமெய்தற் 
குரியெனவொண்முத்தும்பைம்பொன்னுமேந்திஓரோ குடங்கைப் 
பெரியெனகெண்டைக்குலம் | இவையோவந்து பேர்கின்றவே. [2488.0]

பேர்கின்றது மணிமாமை | பிறங்கியள்ளற்பயலை 
ஊர்கின்றது கங்குலூழிகளே | இதெல்லாமினவே 
ஈர்கின்றசக்கரத்தெம்பெருமான் கண்ணன்தண்ணந்துழாய் 
சார்கின்றநன்னெஞ்சினார் | தந்துபோனதனிவளமே.[2489.0]

தனிவளர்செங்கோல்நடாவு | தழல்வாயரசவியப் 
பனிவளர்செங்கோலிருள்வீற்றிருந்தது | பார்முழுதும் 
துனிவளர்காதல்துழாயைத்துழாவுதண்வாடைதடிந்து 
இனிவளைகாப்பவரார்? | எனையூழிகளீர்வனவே. [2490.0]
மேலே செல்

ஈர்வனவேலுமஞ்சேலும் | உயிர்மேல்மிளிர்ந்திவையோ 
பேர்வனவோவல்ல தெய்வநல்வேள்கணை | பேரொளியே 
சோர்வனநீலச்சுடர்விடும்மேனியம்மான் விசும்பூர் 
தேர்வன | தெய்வமன்னீரகண்ணோ? இச்செழுங்கயலே. [2491.0]

கயலோ? நுமகண்கள்என்று களிறுவினவிநிற்றீர் | 
அயலோரறியிலும் ஈதென்னவார்த்தை? | கடல்கவர்ந்த 
புயலோடுலாம்கொண்டல்வண்ணன்புனவேங்கடத் தெம்மொடும் 
பயலோவிலீர் | கொல்லைக்காக்கின்றநாளும்பலபலவே. [2492.0]

பலபலவூழிகளாயிடும் | அன்றியோர்நாழிகையைப் 
பலபலகூறிட்டகூறாயிடும் | கண்ணன்விண்ணனையாய்! 
பலபலநாளன்பர்கூடிலும்நீங்கிலும்யாம்மெலிதும் 
பலபலசூழலுடைத்து | அம்ம! வாழிஇப்பாயிருளே.[2493.0]
மேலே செல்

இருள்விரிந்தாலன்ன | மாநீர்த்திரைகொண்டுவாழியரோ 
இருள்பிரிந்தாரன்பர் தேர்வழிதூரல் | அரவணைமேல் 
இருள்விரிநீலக்கருநாயிறுசுடர்கால்வதுபோல் 
இருள்விரிசோதிப் | பெருமானுறையுமெறிகடலே! [2494.0]

கடல்கொண்டெழுந்ததுவானம் | அவ்வானத்தையன்றிச் சென்று 
கடல்கொண்டெழுந்தவதனாலிது | கண்ணன்மண்ணும் விண்ணும் 
கடல்கொண்டெழுந்தவக்காலங்கொலோ? புயற்காலங்கொலோ? 
கடல்கொண்டகண்ணீர் | அருவிசெய்யாநிற்கும் காரிகையே.[2495.0]

காரிகையார் நிறைகாப்பவர்யாரென்று | கார்கொண்டின்னே 
மாரிகையேறி அறையிடும்காலத்தும் | வாழியரோ 
சாரிகைப்புள்ளர் அந்தண்ணந்துழாயிறைகூயருளார் 
சேரிகையேரும் | பழியாய்விளைந்தது என்சின்மொழிக்கே. [2496.0]
மேலே செல்


Other Prabandhams:
திருப்பல்லாண்டு     திருமொழி     திருப்பாவை     நாச்சியார் திருமொழி     பெருமாள் திருமொழி     திருச்சந்தவிருத்தம்     திருமாலை     திருப்பள்ளி எழுச்சி     அமலனாதிபிரான்     கண்ணிநுண்சிறுத்தாம்பு     பெரிய திருமொழி     திருக்குறுந்தாண்டகம்     திருநெடுந்தாண்டகம்     முதல் திருவந்தாதி     இரண்டாம் திருவந்தாதி     மூன்றாம் திருவந்தாதி     நான்முகன் திருவந்தாதி     திருவிருத்தம்     திருவாசிரியம்     பெரிய திருவந்தாதி     திருஎழுகூற்றிருக்கை     சிறிய திருமடல்     பெரிய திருமடல்     இராமானுச நூற்றந்தாதி     திருவாய்மொழி    
This page was last modified on Wed, 02 Jun 2021 19:18:06 -0500
 
   
    send corrections and suggestions to admin @ sivasiva.org