sivasiva.org
Search this site with
song/pathigam/paasuram numbers
Or Tamil/English words

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     
Thirumurai
2.055   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   நலச் சங்க வெண்குழையும் தோடும்
காந்தாரம்   (திருத்தலைச்சங்காடு செங்கணாயகேசுவரர் சௌந்தரியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=WSnMe-lIbZ8
2.056   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   பொங்கு நூல் மார்பினீர்! பூதப்படையினீர்!
காந்தாரம்   (திருவிடைமருதூர் மருதீசர் நலமுலைநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=icx3ld09lwA
2.057   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   பெண் அமரும் திருமேனி உடையீர்!
காந்தாரம்   (திருநல்லூர் பெரியாண்டேசுவரர் திரிபுரசுந்தரியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=TrwOWvAU8jY
2.058   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   கலை வாழும் அம் கையீர்!
காந்தாரம்   (திருக்குடவாயில் கோணேசுவரர் பெரியநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=8bDtm9q9KLI
2.059   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   நலம் கொள் முத்தும் மணியும்
காந்தாரம்   (சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
Audio: https://www.youtube.com/watch?v=w_gmEjpVjsE
2.060   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   சிந்தை இடையார், தலையின் மிசையார்,
காந்தாரம்   (திருப்பாசூர் பாசூர்நாதர் பசுபதிநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=lK4XZljS70A
2.061   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   உண்டாய், நஞ்சை! உமை ஓர்பங்கா!
காந்தாரம்   (திருவெண்காடு சுவேதாரணியேசுவரர் பிரமவித்தியாநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=t9D2S0oRqYQ
2.062   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   காயச் செவ்விக் காமற் காய்ந்து,
காந்தாரம்   (திருமீயச்சூர் முயற்சிநாதேசுவரர் சுந்தரநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=nZvUZrPNWtM
2.063   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   மின்னும் சடைமேல் இளவெண் திங்கள்
காந்தாரம்   (திருஅரிசிற்கரைப்புத்தூர் படிக்காசளித்தவீசுவரர் அழகம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=fbpfJzfaoqs
2.064   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   தேவா! சிறியோம் பிழையைப் பொறுப்பாய்!
காந்தாரம்   (திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=2CHPRCGsc_4
Audio: https://www.sivasiva.org/audio/2.064 Devaa siriyom.mp3
2.065   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   கறை அணி வேல் இலர்போலும்;
காந்தாரம்   (திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
Audio: https://www.youtube.com/watch?v=jjuCWaSbHH0
2.066   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   மந்திரம் ஆவது நீறு; வானவர்
காந்தாரம்   (திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=n2Uf5Es4A10
Audio: https://www.sivasiva.org/audio/2.066 மந்திரம் ஆவது நீறு.mp3
2.067   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   மண்ணும் ஓர் பாகம் உடையார்;
காந்தாரம்   (திருப்பெரும்புலியூர் வியாக்கிரபுரீசுவரர் சவுந்தராம்பிகையம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=U_cokwRyphU
2.068   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   வான் அமர் திங்களும் நீரும்
காந்தாரம்   (திருக்கடம்பூர் அமுதகடேசுவரர் சோதிமின்னம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=Q-PqFOi6AJw
2.069   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   பெண் அமர் மேனியினாரும், பிறை
காந்தாரம்   (திருப்பாண்டிக்கொடுமுடி கொடுமுடிநாதேசுவரர் பண்மொழியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=-uyT0gUSnAc
2.070   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   பிரமன் ஊர், வேணுபுரம், புகலி,
காந்தாரம்   (திருஆலவாய் (மதுரை) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
Audio: https://www.youtube.com/watch?v=kLkjpCfoHzA
2.071   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   திருந்த மதி சூடி, தெண்
காந்தாரம்   (திருக்குறும்பலா (குற்றாலம்) குறும்பலாநாதர் குழன்மொழியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=2l7NoIGFUrw
2.072   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   பந்து ஆர் விரல் மடவாள்
காந்தாரம்   (திருநணா (பவானி) சங்கமுகநாதேசுவரர் வேதமங்கையம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=jv1Ayp2UmWQ
2.073   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   விளங்கிய சீர்ப் பிரமன் ஊர்,
காந்தாரம்   (திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
Audio: https://www.youtube.com/watch?v=BCCcqg_QzVw
2.074   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   பூமகன் ஊர், புத்தேளுக்கு இறைவன்
காந்தாரம்   (திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
Audio: https://www.youtube.com/watch?v=XfxM5V0mED0
2.075   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   விண் இயங்கும் மதிக்கண்ணியான், விரியும்
காந்தாரம்   (சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
Audio: https://www.youtube.com/watch?v=oY_UhOXhEA0
2.076   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   வாடிய வெண்தலை மாலை சூடி,
காந்தாரம்   (திருஅகத்தியான்பள்ளி அகத்தீசுவரர் மங்கைநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=eQLOfeO_N6k
2.077   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   பீடினால் பெரியோர்களும், பேதைமை கெடத்
காந்தாரம்   (திருஅறையணிநல்லூர் (அரகண்டநல்லூர்) அறையணிநாதேசுவரர் அருள்நாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=UyjsVNRYgUM
2.078   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   ஒளிர் இளம்பிறை சென்னிமேல் உடையர்,
காந்தாரம்   (திருவிளநகர் துறைகாட்டும்வள்ளநாதர் தோழியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=4e4CjJFptcY
2.079   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   பவனம் ஆய், சோடை ஆய்,
காந்தாரம்   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=oEL9vEST34M
Audio: https://www.sivasiva.org/audio/2.079 pavanaamaay sodaiyay.mp3
2.080   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   வரிய மறையார், பிறையார், மலை
காந்தாரம்   (திருக்கடவூர் மயானம் பிரமபுரீசுவரர் மலர்க்குழல்மின்னம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=5DoV13VV7ys
2.081   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   பூதத்தின் படையினீர்! பூங்கொன்றைத் தாரினீர்!ஓதத்தின்
காந்தாரம்   (திருவேணுபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
Audio: https://www.youtube.com/watch?v=jIemSuLWelU
2.082   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   பண் நிலாவிய மொழி உமை
காந்தாரம்   (திருத்தேவூர் தேவகுருநாதர் தேன்மொழியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=fYnixUyPNIE
2.083   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   நீல நல் மாமிடற்றன்; இறைவன்;
பியந்தைக்காந்தாரம்   (திருக்கொச்சைவயம் (சீர்காழி) )
Audio: https://www.youtube.com/watch?v=4-qqCFEZS0E
Audio: https://www.sivasiva.org/audio/2.083 NeelaMaaMidatran.mp3
2.084   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   காரைகள், கூகை, முல்லை, கள,
பியந்தைக்காந்தாரம்   (திருநனிப்பள்ளி நற்றுணையப்பர் பர்வதராசபுத்திரி)
Audio: https://www.youtube.com/watch?v=-hsh2WlPosg
2.085   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   வேய் உறு தோளி பங்கன்,
பியந்தைக்காந்தாரம்   (திருமறைக்காடு (வேதாரண்யம்) )
Audio: https://www.youtube.com/watch?v=oF4wlCt8je0
2.086   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   உரையினில் வந்த பாவம், உணர்
பியந்தைக்காந்தாரம்   (திருநாரையூர் சௌந்தரேசர் திரிபுரசுந்தரியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=axSzv-rL_iM
2.087   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   நேரியன் ஆகும்; அல்லன், ஒருபாலும்;
பியந்தைக்காந்தாரம்   (திருநறையூர்ச்சித்தீச்சுரம் (திருநறையூர்) சித்தநாதேசர் அழகாம்பிகையம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=RK-BhZK3vkU
2.088   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   துளி மண்டி உண்டு நிறம்
பியந்தைக்காந்தாரம்   (தென்திருமுல்லைவாயில் முல்லைவனநாதர் கோதையம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=qfep3aaid6U
2.089   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   அறையும் பூம்புனலோடும் ஆடு அரவச்
பியந்தைக்காந்தாரம்   (திருக்கொச்சைவயம் (சீர்காழி) )
Audio: https://www.youtube.com/watch?v=AezGyWRib9k
Audio: https://www.youtube.com/watch?v=DB8qB3kmj4U
2.090   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   எந்தை! ஈசன்! எம்பெருமான்! ஏறு
பியந்தைக்காந்தாரம்   (திருநெல்வாயில் அரத்துறை அரத்துறைநாதர் ஆனந்தநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=uu81f7lC1h8
Audio: https://www.sivasiva.org/audio/2.090 EnthaiIsan EmPerumaan.mp3
2.091   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   பொங்கு வெண்மணல் கானல் பொருகடல்
பியந்தைக்காந்தாரம்   (திருமறைக்காடு (வேதாரண்யம்) வேதாரணியேசுவரர் யாழைப்பழித்தமொழியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=Vo5mWNGHwtk
2.092   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   பட்டம், பால்நிற மதியம், படர்
பியந்தைக்காந்தாரம்   (திருப்புகலூர்வர்த்தமானீச்சரம் வர்த்தமானீசுவரர் கருந்தார்க்குழலியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=nu1wdo_PEPE
2.093   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   புரை செய் வல்வினை தீர்க்கும்
பியந்தைக்காந்தாரம்   (திருத்தெங்கூர் வெள்ளிமலையீசுவரர் பெரியாம்பிகையம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=C6ObhpNLQ3E
2.094   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   சாகை ஆயிரம் உடையார், சாமமும்
பியந்தைக்காந்தாரம்   (திருவாழ்கொளிபுத்தூர் மாணிக்கவண்ணநாதர் வண்டமர்பூங்குழலம்மை)
2.095   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   பாடல் வண்டு அறை கொன்றை,
பியந்தைக்காந்தாரம்   (திருஅரசிலி (ஒழுந்தியாப்பட்டு) அரைசிலிநாதர் பெரியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=5WKav8ehvVA
2.096   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   பொங்கு வெண்புரி வளரும் பொற்பு
பியந்தைக்காந்தாரம்   (சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
Audio: https://www.youtube.com/watch?v=A_oEniZiv-M
4.002   திருநாவுக்கரசர்   தேவாரம்   சுண்ணவெண் சந்தனச் சாந்தும், சுடர்த்
காந்தாரம்   (திருவதிகை வீரட்டானம் வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி)
4.003   திருநாவுக்கரசர்   தேவாரம்   மாதர்ப் பிறைக் கண்ணியானை மலையான்
காந்தாரம்   (திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=kGyJHnSZZ48
4.004   திருநாவுக்கரசர்   தேவாரம்   பாடு இளம் பூதத்தினானும், பவளச்செவ்வாய்
காந்தாரம்   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=IA_qRP6iwNw
4.005   திருநாவுக்கரசர்   தேவாரம்   மெய் எலாம் வெண் நீறு
காந்தாரம்   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=u12KnyQeeyI
4.006   திருநாவுக்கரசர்   தேவாரம்   வன பவளவாய் திறந்து, வானவர்க்கும்
காந்தாரம்   (திருக்கழிப்பாலை பால்வண்ணநாதர் வேதநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=3IFBeKSX1B0
4.007   திருநாவுக்கரசர்   தேவாரம்   கரவு ஆடும் வன்நெஞ்சர்க்கு அரியானை;
காந்தாரம்   (கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்) ஏகாம்பரநாதர் காமாட்சியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=PeHloxiXoQk
4.008   திருநாவுக்கரசர்   தேவாரம்   சிவன் எனும் ஓசை அல்லது,
பியந்தைக்காந்தாரம்   (பொது - சிவனெனுமோசை )
4.010   திருநாவுக்கரசர்   தேவாரம்   முளைக்கதிர் இளம் பிறை மூழ்க,
காந்தாரம்   (திருவதிகை வீரட்டானம் )
Audio: https://www.youtube.com/watch?v=pulAH9fYBx8
4.011   திருநாவுக்கரசர்   தேவாரம்   சொல்-துணை வேதியன், சோதி வானவன்,பொன்துணைத்
காந்தாரம்   (பொது - நமசிவாயத் திருப்பதிகம் )
Audio: https://www.youtube.com/watch?v=GcaDjvjf6fA
4.022   திருநாவுக்கரசர்   தேவாரம்   செஞ் சடைக்கற்றை முற்றத்து இளநிலா
காந்தாரம்   (கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=dqiWvpXgqmw
4.054   திருநாவுக்கரசர்   தேவாரம்   பகைத்திட்டர் புரங்கள் மூன்றும் பாறி,
திருநேரிசை:காந்தாரம்   (திருப்புகலூர் அக்கினீசுவரர் கருந்தார்க்குழலியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=AZ_kpWQFf_Q
4.056   திருநாவுக்கரசர்   தேவாரம்   மா-இரு ஞாலம் எல்லாம் மலர்
திருநேரிசை:காந்தாரம்   (திருவாவடுதுறை மாசிலாமணியீசுவரர் ஒப்பிலாமுலையம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=61iq2NzFuUI
4.058   திருநாவுக்கரசர்   தேவாரம்   கன்றினார் புரங்கள் மூன்றும் கனல்-எரி
திருநேரிசை:காந்தாரம்   (திருப்பருப்பதம் (ஸ்ரீசைலம்) பருப்பதேசுவரர் மனோன்மணியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=q21t0hnipwo
7.071   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   யாழைப் பழித் தன்ன மொழி
காந்தாரம்   (திருமறைக்காடு (வேதாரண்யம்) மறைக்காட்டீசுவரர் யாழைப்பழித்தநாயகி)
Audio: https://www.youtube.com/watch?v=TmGEx2Vj7cY
7.072   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   எனக்கு இனித் தினைத்தனைப் புகல்
காந்தாரம்   (திருவலம்புரம் வலம்புரநாதர் வடுவகிர்க்கண்ணம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=UPQ5PIB3Qzg
7.073   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   கரையும், கடலும், மலையும், காலையும்,
காந்தாரம்   (திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=hHEPdFC_nVU
7.074   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   மின்னும் மா மேகங்கள் பொழிந்து
காந்தாரம்   (திருத்துருத்தியும் - திருவேள்விக்குடியும் )
Audio: https://www.youtube.com/watch?v=hUJDa9QfMWQ
7.075   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   மறைகள் ஆயின நான்கும், மற்று
காந்தாரம்   (திருவானைக்கா சம்புகேசுவரர் அகிலாண்டநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=CRFY6t5JXpA
7.076   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   பொருவனார்; புரிநூலர்; புணர் முலை
பியந்தைக்காந்தாரம்   (திருவாஞ்சியம் சுகவாஞ்சிநாதர் வாழவந்தநாயகி)
Audio: https://www.youtube.com/watch?v=1UqbekXfyC4

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2.055   நலச் சங்க வெண்குழையும் தோடும்  
பண் - காந்தாரம்   (திருத்தலம் திருத்தலைச்சங்காடு ; (திருத்தலம் அருள்தரு சௌந்தரியம்மை உடனுறை அருள்மிகு செங்கணாயகேசுவரர் திருவடிகள் போற்றி )
நலச் சங்க வெண்குழையும் தோடும் பெய்து, ஓர்
நால்வேதம்
சொலச் சங்கை இல்லாதீர்! சுடுகாடு அல்லால் கருதாதீர்!
குலைச் செங்காய்ப் பைங் கமுகின் குளிர் கொள் சோலைக் குயில் ஆலும்
தலைச்சங்கைக் கோயிலே கோயில் ஆகத் தாழ்ந்தீரே.

[1]
துணி மல்கு கோவணமும் தோலும் காட்டித் தொண்டு ஆண்டீர்!
மணி மல்கு கண்டத்தீர்! அண்டர்க்கு எல்லாம் மாண்பு ஆனீர்!
பிணி மல்கு நூல் மார்பர் பெரியோர் வாழும்
தலைச்சங்கை,
அணி மல்கு கோயிலே கோயில் ஆக அமர்ந்தீரே.

[2]
சீர் கொண்ட பாடலீர்! செங்கண் வெள் ஏற்று ஊர்தியீர்!
நீர் கொண்டும் பூக் கொண்டும் நீங்காத் தொண்டர் நின்று ஏத்த,
தார் கொண்ட நூல் மார்பர் தக்கோர் வாழும்
தலைச்சங்கை,
ஏர் கொண்ட கோயிலே கோயில் ஆக இருந்தீரே.

[3]
வேடம் சூழ் கொள்கையீர்! வேண்டி நீண்ட வெண்திங்கள்
ஓடம் சூழ் கங்கையும் உச்சி வைத்தீர்! தலைச்சங்கை,
கூடம் சூழ் மண்டபமும் குலாய வாசல் கொடித் தோன்றும்
மாடம் சூழ் கோயிலே கோயில் ஆக மகிழ்ந்தீரே.

[4]
சூலம் சேர் கையினீர்! சுண்ண வெண் நீறு ஆடலீர்!
நீலம் சேர் கண்டத்தீர்! நீண்ட சடைமேல் நீர் ஏற்றீர்!
ஆலம் சேர் தண்கானல் அன்னம் மன்னும் தலைச்சங்கை
கோலம் சேர் கோயிலே கோயில் ஆகக் கொண்டீரே.

[5]
நிலம் நீரொடு ஆகாசம் அனல் கால் ஆகி நின்று, ஐந்து
புல நீர்மை புறம் கண்டார், பொக்கம் செய்யார், போற்று ஓவார்,
சல நீதர் அல்லாதார், தக்கோர், வாழும் தலைச்சங்கை
நல நீர கோயிலே கோயில் ஆக நயந்தீரே.

[6]
அடி புல்கு பைங்கழல்கள் ஆர்ப்பப் பேர்ந்து, ஓர் அனல் ஏந்தி,
கொடி புல்கு மென்சாயல் உமை ஓர்பாகம் கூடினீர்!
பொடி புல்கு நூல் மார்பர் புரி நூலாளர் தலைச்சங்கை,
கடி புல்கு கோயிலே கோயில் ஆகக் கலந்தீரே.

[7]
திரை ஆர்ந்த மா கடல் சூழ் தென் இலங்கைக்
கோமானை,
வரை ஆர்ந்த தோள் அடர, விரலால் ஊன்றும்
மாண்பினீர்!
அரை ஆர்ந்த மேகலையீர்! அந்தணாளர் தலைச்சங்கை,
நிரை ஆர்ந்த கோயிலே கோயில் ஆக நினைந்தீரே.

[8]
பாய் ஓங்கு பாம்பு அணை மேலானும், பைந்தாமரையானும்,
போய் ஓங்கிக் காண்கிலார்; புறம் நின்று ஓரார், போற்று ஓவார்;
தீ ஓங்கு மறையாளர் திகழும் செல்வத் தலைச்சங்கை,
சேய் ஓங்கு கோயிலே கோயில் ஆகச் சேர்ந்தீரே.

[9]
அலை ஆரும் புனல் துறந்த அமணர், குண்டர் சாக்கீயர்,
தொலையாது அங்கு அலர் தூற்ற, தோற்றம் காட்டி ஆட்கொண்டீர்!
தலை ஆன நால்வேதம் தரித்தார் வாழும் தலைச்சங்கை,
நிலை ஆர்ந்த கோயிலே கோயில் ஆக நின்றீரே.

[10]
நளிரும் புனல் காழி நல்ல ஞானசம்பந்தன்
குளிரும் தலைச்சங்கை ஓங்கு கோயில் மேயானை,
ஒளிரும் பிறையானை, உரைத்த பாடல் இவை வல்லார்
மிளிரும் திரை சூழ்ந்த வையத்தார்க்கு மேலாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2.056   பொங்கு நூல் மார்பினீர்! பூதப்படையினீர்!  
பண் - காந்தாரம்   (திருத்தலம் திருவிடைமருதூர் ; (திருத்தலம் அருள்தரு நலமுலைநாயகியம்மை உடனுறை அருள்மிகு மருதீசர் திருவடிகள் போற்றி )
பொங்கு நூல் மார்பினீர்! பூதப்படையினீர்! பூங் கங்கை
தங்கு செஞ்சடையினீர்! சாமவேதம் ஓதினீர்!
எங்கும் எழில் ஆர் மறையோர்கள் முறையால் ஏத்த,
இடைமருதில்,
மங்குல் தோய் கோயிலே கோயில் ஆக மகிழ்ந்தீரே.

[1]
நீர் ஆர்ந்த செஞ்சடையீர்! நெற்றித் திருக்கண் நிகழ்வித்தீர்!
போர் ஆர்ந்த வெண் மழு ஒன்று உடையீர்! பூதம் பாடலீர்!
ஏர் ஆர்ந்த மேகலையாள் பாகம் கொண்டீர்! இடைமருதில்,
சீர் ஆர்ந்த கோயிலே கோயில் ஆகச் சேர்ந்தீரே.

[2]
அழல் மல்கும் அங்கையில் ஏந்தி, பூதம் அவை பாட,
சுழல் மல்கும் ஆடலீர்! சுடுகாடு அல்லால் கருதாதீர்!
எழில் மல்கும் நால் மறையோர் முறையால் ஏத்த,
இடைமருதில்,
பொழில் மல்கு கோயிலே கோயில் ஆகப் பொலிந்தீரே.

[3]
பொல்லாப் படுதலை ஒன்று ஏந்திப் புறங்காட்டு ஆடலீர்!
வில்லால் புரம் மூன்றும் எரித்தீர்! விடை ஆர் கொடியினீர்!
எல்லாக்கணங்களும் முறையால் ஏத்த, இடைமருதில்,
செல்வாய கோயிலே கோயில் ஆகச் சேர்ந்தீரே.

[4]
வருந்திய மா தவத்தோர், வானோர், ஏனோர், வந்து ஈண்டி
பொருந்திய தைப்பூசம் ஆடி உலகம் பொலிவு எய்த,
திருந்திய நால்மறையோர் இனிதா ஏத்த, இடைமருதில்,
பொருந்திய கோயிலே கோயில் ஆகப் புக்கீரே.

[5]
சலம் மல்கு செஞ்சடையீர்! சாந்தம் நீறு பூசினீர்!
வலம் மல்கு வெண்மழு ஒன்று ஏந்தி, மயானத்து ஆடலீர்!
இலம் மல்கு நால்மறையோர் சீரால் ஏத்த, இடைமருதில்,
புலம் மல்கு கோயிலே கோயில் ஆகப் பொலிந்தீரே.

[6]
புனம் மல்கு கொன்றையீர்! புலியின் அதளீர்! பொலிவு
ஆர்ந்த
சினம் மல்கு மால்விடையீர்! செய்யீர்! கரிய கண்டத்தீர்!
இனம் மல்கு நால்மறையோர் ஏத்தும் சீர் கொள்
இடைமருதில்,
கனம் மல்கு கோயிலே கோயில் ஆகக் கலந்தீரே.

[7]
சிலை உய்த்த வெங்கணையால் புரம் மூன்று எரித்தீர்!
திறல் அரக்கன்
தலைபத்தும் திண்தோளும் நெரித்தீர்! தையல் பாகத்தீர்!
இலை மொய்த்த தண்பொழிலும் வயலும் சூழ்ந்த
இடைமருதில்,
நலம் மொய்த்த கோயிலே கோயில் ஆக நயந்தீரே.

[8]
மறை மல்கு நான்முகனும், மாலும் அறியா வண்ணத்தீர்!
கறை மல்கு கண்டத்தீர்! கபாலம் ஏந்தும் கையினீர்!
அறை மல்கு வண்டு இனங்கள் ஆலும் சோலை
இடைமருதில்,
நிறை மல்கு கோயிலே கோயில் ஆக நிகழ்ந்தீரே.

[9]
சின் போர்வைச் சாக்கியரும், மாசு சேரும் சமணரும்,
துன்பு ஆய கட்டுரைகள் சொல்லி அல்லல் தூற்றவே,
இன்பு ஆய அந்தணர்கள் ஏத்தும் ஏர் கொள்
இடைமருதில்,
அன்பு ஆய கோயிலே கோயில் ஆக அமர்ந்தீரே.

[10]
கல்லின் மணி மாடக் கழுமலத்தார் காவலவன்
[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2.057   பெண் அமரும் திருமேனி உடையீர்!  
பண் - காந்தாரம்   (திருத்தலம் திருநல்லூர் ; (திருத்தலம் அருள்தரு திரிபுரசுந்தரியம்மை உடனுறை அருள்மிகு பெரியாண்டேசுவரர் திருவடிகள் போற்றி )
பெண் அமரும் திருமேனி உடையீர்! பிறங்கு சடை தாழப்
பண் அமரும் நால்மறையே பாடி ஆடல் பயில்கின்றீர்!
திண் அமரும் பைம்பொழிலும் வயலும் சூழ்ந்த திரு
நல்லூர்,
மண் அமரும் கோயிலே கோயில் ஆக மகிழ்ந்தீரே.

[1]
அலை மல்கு தண்புனலும் பிறையும் சூடி, அங்கையில்
கொலை மல்கு வெண் மழுவும் அனலும் ஏந்தும்
கொள்கையீர்!
சிலை மல்கு வெங்கணையால் புரம் மூன்றும் எரித்தீர்! திரு
நல்லூர்,
மலை மல்கு கோயிலே கோயில் ஆக மகிழ்ந்தீரே.

2


[2]
குறை நிரம்பா வெண்மதியம் சூடிக் குளிர்புன்சடை தாழ,
பறை நவின்ற பாடலோடு ஆடல் பேணிப் பயில்கின்றீர்!
சிறை நவின்ற தண்புனலும் வயலும் சூழ்ந்த திரு நல்லூர்,
மறை நவின்ற கோயிலே கோயில் ஆக மகிழ்ந்தீரே.

[3]
கூன் அமரும் வெண்பிறையும் புனலும் சூடும் கொள்கையீர்!
மான் அமரும் மென்விழியாள் பாகம் ஆகும் மாண்பினீர்!
தேன் அமரும் பைம் பொழிலின் வண்டு பாடும் திரு
நல்லூர்,
வான் அமரும் கோயிலே கோயில் ஆக மகிழ்ந்தீரே.

[4]
நிணம் கவரும் மூவிலையும் அனலும் ஏந்தி, நெறிகுழலாள
அணங்கு அமரும் பாடலோடு ஆடல் மேவும் அழகினீர்!
திணம் கவரும் ஆடு அரவும் பிறையும் சூடி, திரு நல்லூர்,
மணம் கமழும் கோயிலே கோயில் ஆக மகிழ்ந்தீரே.

[5]
கார் மருவு பூங்கொன்றை சூடிக் கமழ் புன்சடை தாழ,
வார் மருவு மென்முலையாள் பாகம் ஆகும் மாண்பினீர்!
தேர் மருவு நெடுவீத்க் கொடிகள் ஆடும் திரு நல்லூர்,
ஏர் மருவு கோயிலே கோயில் ஆக இருந்தீரே.

6


[6]
ஊன் தோயும் வெண் மழுவும் அனலும் ஏந்தி, உமை காண,
மீன் தோயும் திசை நிறைய ஓங்கி ஆடும் வேடத்தீர்!
தேன் தோயும் பைம்பொழிலின் வண்டு பாடும் திரு நல்லூர்,
வான் தோயும் கோயிலே கோயில் ஆக மகிழ்ந்தீரே.

[7]
காது அமரும் வெண்குழையீர்! கறுத்த அரக்கன் மலை
எடுப்ப,
மாது அமரும் மென்மொழியாள் மறுகும் வண்ணம் கண்டு
உகந்தீர்!
தீது அமரா அந்தணர்கள் பரவி ஏத்தும் திரு நல்லூர்,
மாது அமரும் கோயிலே கோயில் ஆக மகிழ்ந்தீரே.

[8]
போதின் மேல் அயன், திருமால், போற்றி உம்மைக்
காணாது
நாதனே இவன் என்று நயந்து ஏத்த, மகிழ்ந்து அளித்தீர்!
தீது இலா அந்தணர்கள் தீ மூன்று ஓம்பும் திரு நல்லூர்,
மாதராள் அவளோடும் மன்னு கோயில் மகிழ்ந்தீரே.

[9]
பொல்லாத சமணரொடு புறம் கூறும் சாக்கியர் ஒன்று
அல்லாதார் அற உரை விட்டு, அடியார்கள் போற்று ஓவா
நல்லார்கள், அந்தணர்கள், நாளும் ஏத்தும் திரு நல்லூர்,
மல் ஆர்ந்த கோயிலே கோயில் ஆக மகிழ்ந்தீரே.

[10]
கொந்து அணவும் பொழில் புடை சூழ் கொச்சை மேவு
&குலவேந்தன்
செந்தமிழின் சம்பந்தன் சிறை வண் புனல் சூழ் திரு
நல்லூர்,
பந்து அணவும் மெல்விரலாள் பங்கன்தன்னைப் பயில் பாடல்
சிந்தனையால் உரை செய்வார், சிவலோகம் சேர்ந்து இருப்பாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2.058   கலை வாழும் அம் கையீர்!  
பண் - காந்தாரம்   (திருத்தலம் திருக்குடவாயில் ; (திருத்தலம் அருள்தரு பெரியநாயகியம்மை உடனுறை அருள்மிகு கோணேசுவரர் திருவடிகள் போற்றி )
கலை வாழும் அம் கையீர்! கொங்கை ஆரும் கருங்கூந்தல்
அலை வாழும் செஞ்சடையில், அரவும் பிறையும்
அமர்வித்தீர்!
குலைவாழை கமுகம் பொன்பவளம் பழுக்கும் குடவாயில்,
நிலை வாழும் கோயிலே கோயில் ஆக நின்றீரே.

[1]
அடி ஆர்ந்த பைங்கழலும் சிலம்பும் ஆர்ப்ப, அங்கையில்
செடி ஆர்ந்த வெண்தலை ஒன்று ஏந்தி, உலகம் பலி
தேர்வீர்!
குடி ஆர்ந்த மா மறையோர் குலாவி ஏத்தும் குடவாயில்,
படி ஆர்ந்த கோயிலே கோயில் ஆகப் பயின்றீரே.

[2]
கழல் ஆர் பூம்பாதத்தீர்! ஓதக்கடலில் விடம் உண்டு,
அன்று,
அழல் ஆரும் கண்டத்தீர்! அண்டர் போற்றும் அளவினீர்!
குழல் ஆர் வண்டு இனங்கள் கீதத்து ஒலிசெய் குடவாயில்,
நிழல் ஆர்ந்த கோயிலே கோயில் ஆக நிகழ்ந்தீரே.

[3]
மறி ஆரும் கைத்தலத்தீர்! மங்கை பாகம் ஆகச் சேர்ந்து
எறி ஆரும் மா மழுவும் எரியும் ஏந்தும் கொள்கையீர்!
குறி ஆர வண்டு இனங்கள் தேன் மிழற்றும் குடவாயில்,
நெறி ஆரும் கோயிலே கோயில் ஆக நிகழ்ந்தீரே.

[4]
இழை ஆர்ந்த கோவணமும் கீளும் எழில் ஆர் உடை
ஆக,
பிழையாத சூலம் பெய்து, ஆடல் பாடல் பேணினீர்!
குழை ஆரும் பைம்பொழிலும் வயலும் சூழ்ந்த குடவாயில்,
விழவு ஆர்ந்த கோயிலே கோயில் ஆக மிக்கீரே.

[5]
அரவு ஆர்ந்த திருமேனி ஆன வெண் நீறு ஆடினீர்!
இரவு ஆர்ந்த பெய் பலி கொண்டு இமையோர் ஏத்த நஞ்சு
உண்டீர்!
குரவு ஆர்ந்த பூஞ்சோலை வாசம் வீசும் குடவாயில்
திரு ஆர்ந்த கோயிலே கோயில் ஆகத் திகழ்ந்தீரே.

[6]
பாடல் ஆர் வாய்மொழியீர்! பைங்கண் வெள் ஏறு ஊர்தியீர்!
ஆடல் ஆர் மா நடத்தீர்! அரிவை போற்றும் ஆற்றலீர்!
கோடல் ஆர் தும்பி முரன்று இசை மிழற்றும் குடவாயில்,
நீடல் ஆர் கோயிலே கோயில் ஆகப் நிகழ்ந்தீரே.

[7]
கொங்கு ஆர்ந்த பைங்கமலத்து அயனும், குறள் ஆய்
நிமிர்ந்தானும்,
அங்காந்து தள்ளாட, அழல் ஆய் நிமிர்ந்தீர்! இலங்கைக்
கோன்
தம் காதல் மா முடியும் தாளும் அடர்த்தீர்! குடவாயில்,
பங்கு ஆர்ந்த கோயிலே கோயில் ஆகப் பரிந்தீரே.

[8]
தூசு ஆர்ந்த சாக்கியரும், தூய்மை இல்லாச் சமணரும்,
ஏசு ஆர்ந்த புன்மொழி நீத்து, எழில் கொள் மாடக்
குடவாயில்,
ஆசாரம் செய் மறையோர் அளவின் குன்றாது அடி
போற்ற,
தேசு ஆர்ந்த கோயிலே கோயில் ஆகச் சேர்ந்தீரே.

[10]
நளிர் பூந் திரை மல்கு காழி ஞானசம்பந்தன்,
குளிர் பூங் குடவாயில் கோயில் மேய கோமானை,
ஒளிர்பூந்தமிழ் மாலை உரைத்த பாடல் இவை வல்லார்,
தளர்வு ஆனதாம் ஒழிய, தகு சீர் வானத்து இருப்பாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2.059   நலம் கொள் முத்தும் மணியும்  
பண் - காந்தாரம்   (திருத்தலம் சீர்காழி ; (திருத்தலம் அருள்தரு திருநிலைநாயகி உடனுறை அருள்மிகு பிரமபுரீசர் திருவடிகள் போற்றி )
நலம் கொள் முத்தும் மணியும் அணியும் திரள் ஓதம்
கலங்கள் தன்னில் கொண்டு கரை சேர் கலிக் காழி,
வலம் கொள் மழு ஒன்று உடையாய்! விடையாய்! என
ஏத்தி,
அலங்கல் சூட்ட வல்லார்க்கு அடையா, அருநோயே.

[1]
ஊர் ஆர் உவரிச் சங்கம் வங்கம் கொடுவந்து
கார் ஆர் ஓதம் கரைமேல் உயர்த்தும் கலிக் காழி,
நீர் ஆர் சடையாய்! நெற்றிக்கண்ணா! என்று என்று
பேர் ஆயிரமும் பிதற்ற, தீரும், பிணிதானே.

[2]
வடி கொள் பொழிலில் மழலை வரிவண்டு இசைசெய்ய,
கடி கொள் போதில் தென்றல் அணையும் கலிக் காழி,
முடி கொள் சடையாய்! முதல்வா! என்று முயன்று ஏத்தி,
அடி கைதொழுவார்க்கு இல்லை, அல்லல் அவலமே.

[3]
மனைக்கே ஏற வளம் செய் பவளம் வளர் முத்தம்
கனைக்கும் கடலுள் ஓதம் ஏறும் கலிக் காழி,
பனைக்கைப் பகட்டு ஈர் உரியாய்! பெரியாய்! எனப்
பேணி,
நினைக்க வல்ல அடியார் நெஞ்சில் நல்லாரே.

[4]
பருதி இயங்கும் பாரில் சீர் ஆர் பணியாலே
கருதி விண்ணோர் மண்ணோர் விரும்பும் கலிக் காழி,
சுருதி மறை நான்கு ஆன செம்மை தருவானைக்
கருதி எழுமின், வழுவா வண்ணம்! துயர் போமே.

[5]
மந்தம் மருவும் பொழிலில் எழில் ஆர் மது உண்டு
கந்தம் மருவ, வரிவண்டு இசை செய் கலிக் காழி,
பந்தம் நீங்க அருளும் பரனே! என ஏத்திச்
சிந்தை செய்வார் செம்மை நீங்காது இருப்பாரே.

[6]
புயல் ஆர் பூமி நாமம் ஓதி, புகழ் மல்க,
கயல் ஆர் கண்ணார் பண் ஆர் ஒலிசெய் கலிக் காழிப்
பயில்வான் தன்னைப் பத்தி ஆரத் தொழுது ஏத்த
முயல்வார் தம்மேல், வெம்மைக் கூற்றம் முடுகாதே.

[7]
அரக்கன் முடிதோள் நெரிய அடர்த்தான், அடியார்க்குக்
கரக்ககில்லாது அருள்செய் பெருமான், கலிக் காழிப்
பரக்கும், புகழான் தன்னை ஏத்திப் பணிவார்மேல்,
பெருக்கும், இன்பம்; துன்பம் ஆன பிணி போமே.

[8]
மாண் ஆய் உலகம் கொண்ட மாலும் மலரோனும்
காணா வண்ணம் எரி ஆய் நிமிர்ந்தான், கலிக் காழிப்
பூண் ஆர் முலையாள் பங்கத்தானை, புகழ்ந்து ஏத்தி,
கோணா நெஞ்சம் உடையார்க்கு இல்லை, குற்றமே.

[9]
அஞ்சி அல்லல் மொழிந்து திரிவார் அமண் ஆதர்,
கஞ்சி காலை உண்பார்க்கு, அரியான்; கலிக் காழித்
தஞ்சம் ஆய தலைவன்; தன்னை நினைவார்கள்,
துஞ்சல் இல்லா நல்ல உலகம் பெறுவாரே.

[10]
ஊழி ஆய பாரில் ஓங்கும் உயர் செல்வக்
காழி ஈசன் கழலே பேணும் சம்பந்தன்,
தாழும் மனத்தால், உரைத்த தமிழ்கள் இவை வல்லார்,
வாழி நீங்கா வானோர் உலகில் மகிழ்வாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2.060   சிந்தை இடையார், தலையின் மிசையார்,  
பண் - காந்தாரம்   (திருத்தலம் திருப்பாசூர் ; (திருத்தலம் அருள்தரு பசுபதிநாயகியம்மை உடனுறை அருள்மிகு பாசூர்நாதர் திருவடிகள் போற்றி )
சிந்தை இடையார், தலையின் மிசையார், செஞ்சொல்லார்,
வந்து மாலை வைகும்போழ்து என் மனத்து உள்ளார்,
மைந்தர், மணாளர் என்ன, மகிழ்வார் ஊர்போலும்
பைந் தண் மாதவி சோலை சூழ்ந்த பாசூரே.

[1]
பேரும் பொழுதும் பெயரும் பொழுதும், பெம்மான் என்று
ஆரும் தனையும் அடியார் ஏத்த அருள் செய்வார்,
ஊரும் அரவம் உடையார், வாழும் ஊர்போலும்
பாரின் மிசையார் பாடல் ஓவாப் பாசூரே.

[2]
கையால் தொழுது தலை சாய்த்து உள்ளம் கசிவார்கண்
மெய் ஆர் குறையும் துயரும் தீர்க்கும் விமலனார்
நெய் ஆடுதல் அஞ்சு உடையார், நிலாவும் ஊர்போலும்
பைவாய் நாகம் கோடல் ஈனும் பாசூரே.

[3]
பொங்கு ஆடு அரவும் புனலும் சடைமேல் பொலிவு எய்த,
கொங்கு ஆர் கொன்றை சூடி, என் உள்ளம் குளிர்வித்தார்,
தம் காதலியும் தாமும் வாழும் ஊர்போலும்
பைங்கால் முல்லை பல் அரும்பு ஈனும் பாசூரே.

[4]
ஆடல் புரியும் ஐவாய் அரவு ஒன்று அரைச் சாத்தும்
சேடச் செல்வர், சிந்தையுள் என்றும் பிரியாதார்,
வாடல் தலையில் பலி தேர் கையார், ஊர்போலும்
பாடல் குயில்கள் பயில் பூஞ்சோலைப் பாசூரே.

[5]
கால் நின்று அதிர, கனல் வாய் நாகம் கச்சு ஆக,
தோல் ஒன்று உடையார்; விடையார்; தம்மைத்
தொழுவார்கள்
மால் கொண்டு ஓட மையல் தீர்ப்பார்; ஊர்போலும்
பால் வெண்மதி தோய் மாடம் சூழ்ந்த பாசூரே.

[6]
கண்ணின் அயலே கண் ஒன்று உடையார், கழல் உன்னி
எண்ணும் தனையும் அடியார் ஏத்த அருள் செய்வார்,
உள் நின்று உருக உவகை தருவார், ஊர்போலும்
பண்ணின் மொழியார் பாடல் ஓவாப் பாசூரே.

[7]
தேசு குன்றாத் தெண் நீர் இலங்கைக் கோமானைக்
கூச அடர்த்துக் கூர்வாள் கொடுப்பார், தம்மையே
பேசிப் பிதற்றப் பெருமை தருவார், ஊர்போலும்
பாசித் தடமும் வயலும் சூழ்ந்த பாசூரே.

[8]
நகு வாய் மலர்மேல் அயனும், நாகத்து அணையானும்,
புகு வாய் அறியார், புறம் நின்று ஓரார், போற்று ஓவார்;
செகு வாய் உகு பல் தலை சேர் கையார் ஊர்போலும்
பகுவாய் நாரை ஆரல் வாரும் பாசூரே.

[9]
தூய வெயில் நின்று உழல்வார், துவர் தோய் ஆடையார்,
நாவில் வெய்ய சொல்லித் திரிவார் நயம் இல்லார்;
காவல் வேவக் கணை ஒன்று எய்தார் ஊர்போலும்
பாவைக் குரவம் பயில் பூஞ்சோலைப் பாசூரே.

[10]
ஞானம் உணர்வான் காழி ஞானசம்பந்தன்
தேனும் வண்டும் இன் இசை பாடும் திருப் பாசூர்க்
கானம் உறைவார் கழல் சேர் பாடல் இவை வல்லார்,
ஊனம் இலராய், உம்பர் வானத்து உறைவாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2.061   உண்டாய், நஞ்சை! உமை ஓர்பங்கா!  
பண் - காந்தாரம்   (திருத்தலம் திருவெண்காடு ; (திருத்தலம் அருள்தரு பிரமவித்தியாநாயகியம்மை உடனுறை அருள்மிகு சுவேதாரணியேசுவரர் திருவடிகள் போற்றி )
உண்டாய், நஞ்சை! உமை ஓர்பங்கா! என்று உள்கித்
தொண்டு ஆய்த் திரியும் அடியார் தங்கள் துயரங்கள்
அண்டா வண்ணம் அறுப்பான், எந்தை, ஊர்போலும்
வெண் தாமரை மேல் கருவண்டு யாழ் செய் வெண்காடே.

[1]
நாதன்! நம்மை ஆள்வான்! என்று நவின்று ஏத்தி,
பாதம் பல் நாள் பணியும் அடியார் தங்கள் மேல்
ஏதம் தீர இருந்தான் வாழும் ஊர்போலும்
வேதத்து ஒலியால் கிளி சொல் பயிலும் வெண்காடே.

[2]
தண் முத்து அரும்பத் தடம் மூன்று உடையான் தனை
உன்னி,
கண் முத்து அரும்பக் கழல் சேவடி கைதொழுவார்கள்
உள் முத்து அரும்ப, உவகை தருவான் ஊர்போலும்
வெண் முத்து அருவிப் புனல் வந்து அலைக்கும்
வெண்காடே.

[3]
நரையார் வந்து நாளும் குறுகி நணுகாமுன்
உரையால் வேறா உள்குவார்கள் உள்ளத்தே,
கரையா வண்ணம் கண்டான் மேவும் ஊர்போலும்
விரை ஆர் கமலத்து அன்னம் மருவும் வெண்காடே.

[4]
பிள்ளைப்பிறையும் புனலும் சூடும் பெம்மான் என்று
உள்ளத்து உள்ளித் தொழுவார் தங்கள் உறு நோய்கள்
தள்ளிப் போக அருளும் தலைவன் ஊர்போலும்
வெள்ளைச்சுரி சங்கு உலவித் திரியும் வெண்காடே.

[5]
ஒளி கொள் மேனி உடையாய்! உம்பர் ஆளீ! என்று
அளியர் ஆகி அழுது ஊற்று ஊறும் அடியார் கட்கு
எளியான், அமரர்க்கு அரியான், வாழும் ஊர்போலும்
வெளிய உருவத்து ஆனை வணங்கும் வெண்காடே.

[6]
கோள் வித்து அனைய கூற்றம் தன்னைக் குறிப்பினால்
மாள்வித்து, அவனை மகிழ்ந்து அங்கு ஏத்து மாணிக்கு
ஆய்
ஆள்வித்து, அமரர் உலகம் அளிப்பான் ஊர்போலும்
வேள்விப் புகையால் வானம் இருள் கூர் வெண்காடே.

[7]
வளை ஆர் முன்கை மலையாள் வெருவ, வரை ஊன்றி,
முளை ஆர் மதியம் சூடி, என்றும் முப்போதும்
இளையாது ஏத்த இருந்தான்; எந்தை; ஊர்போலும்
விளை ஆர் கழனிப் பழனம் சூழ்ந்த வெண்காடே.

[8]
காரியானோடு, கமலமலரான், காணாமை
எரி ஆய் நிமிர்ந்த எங்கள் பெருமான்! என்பார்கட்கு
உரியான், அமரர்க்கு அரியான், வாழும் ஊர்போலும்
விரி ஆர் பொழிலின் வண்டு பாடும் வெண்காடே.

[9]
பாடும் அடியார் பலரும் கூடிப் பரிந்து ஏத்த,
ஆடும் அரவம் அசைத்த பெருமான்; அறிவு இன்றி
மூடம் உடைய சமண் சாக்கியர்கள் உணராத
வேடம் உடைய பெருமான்; பதி ஆம் வெண்காடே.

[10]
விடை ஆர் கொடியான் மேவி உறையும் வெண் காட்டை,
கடை ஆர் மாடம் கலந்து தோன்றும் காழியான்
நடை ஆர் இன்சொல் ஞானசம்பந்தன் தமிழ் வல்லார்க்கு
அடையா, வினைகள்; அமரலோகம் ஆள்வாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2.062   காயச் செவ்விக் காமற் காய்ந்து,  
பண் - காந்தாரம்   (திருத்தலம் திருமீயச்சூர் ; (திருத்தலம் அருள்தரு சுந்தரநாயகியம்மை உடனுறை அருள்மிகு முயற்சிநாதேசுவரர் திருவடிகள் போற்றி )
காயச் செவ்விக் காமற் காய்ந்து, கங்கையைப்
பாயப் படர் புன் சடையில் பதித்த பரமேட்டி
மாயச் சூர் அன்று அறுத்த மைந்தன் தாதை; தன்
மீயச் சூரைத் தொழுது, வினையை வீட்டுமே!

[1]
பூ ஆர் சடையின் முடிமேல் புனலர்; அனல் கொள்வர்;
நா ஆர் மறையர்; பிறையர்; நற வெண்தலை ஏந்தி,
ஏ ஆர் மலையே சிலையா, கழி அம்பு எரி வாங்கி,
மேவார் புரம் மூன்று எரித்தார் மீயச்சூராரே.

[2]
பொன் நேர் கொன்றைமாலை புரளும் அகலத்தான்,
மின் நேர் சடைகள் உடையான், மீயச்சூரானை,
தன் நேர் பிறர் இல்லானை, தலையால் வணங்குவார்
அந் நேர் இமையோர் உலகம் எய்தற்கு அரிது அன்றே.

[3]
வேக மத நல் யானை வெருவ உரி போர்த்து
பாகம் உமையோடு ஆக, படிதம் பல பாட,
நாகம் அரைமேல் அசைத்து, நடம் ஆடிய நம்பன்
மேகம் உரிஞ்சும் பொழில் சூழ் மீயச்சூரானே.

[4]
வேக மத நல் யானை வெருவ உரி போர்த்து
பாகம் உமையோடு ஆக, படிதம் பல பாட,
நாகம் அரைமேல் அசைத்து, நடம் ஆடிய நம்பன்
மேகம் உரிஞ்சும் பொழில் சூழ் மீயச்சூரானே.

[5]
குளிரும் சடை கொள் முடிமேல் கோலம் ஆர் கொன்றை
ஒளிரும் பிறை ஒன்று உடையான், ஒருவன், கை கோடி
நளிரும் மணி சூழ் மாலை நட்டம் நவில் நம்பன்,
மிளிரும்(ம்) அரவம் உடையான் மீயச்சூரானே.

[6]
நீலவடிவர் மிடறு, நெடியர், நிகர் இல்லார்,
கோல வடிவு தமது ஆம் கொள்கை அறிவு ஒண்ணார்,
காலர், கழலர், கரியின் உரியர், மழுவாளர்,
மேலர், மதியர், விதியர் மீயச்சூராரே.

[7]
புலியின் உரி தோல் ஆடை, பூசும் பொடி நீற்றர்,
ஒலி கொள் புனல் ஓர் சடைமேல் கரந்தார், உமை அஞ்ச
வலிய திரள் தோள் வன் கண் அரக்கர் கோன் தன்னை
மெலிய வரைக்கீழ் அடர்த்தார் மீயச்சூராரே.

[8]
காதில் மிளிரும் குழையர், கரிய கண்டத்தார்,
போதிலவனும் மாலும் தொழப் பொங்கு எரி ஆனார்
கோதி வரிவண்டு அறை பூம் பொய்கைப் புனல் மூழ்கி
மேதி படியும் வயல் சூழ் மீயச்சூராரே.

[9]
கண்டார் நாணும் படியார், கலிங்கம் முடை பட்டை
கொண்டார், சொல்லைக் குறுகார், உயர்ந்த
கொள்கையார்;
பெண்தான் பாகம் உடையார், பெரிய வரை வில்லா
விண்டார் புரம் மூன்று எரித்தார், மீயச்சூராரே.

[10]
வேடம் உடைய பெருமான் உறையும் மீயச்சூர்,
நாடும் புகழ் ஆர் புகலி ஞானசம்பந்தன்
பாடல் ஆய தமிழ் ஈர் ஐந்தும் மொழிந்து, உள்கி,
ஆடும் அடியார், அகல் வான் உலகம் அடைவாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2.063   மின்னும் சடைமேல் இளவெண் திங்கள்  
பண் - காந்தாரம்   (திருத்தலம் திருஅரிசிற்கரைப்புத்தூர் ; (திருத்தலம் அருள்தரு அழகம்மை உடனுறை அருள்மிகு படிக்காசளித்தவீசுவரர் திருவடிகள் போற்றி )
மின்னும் சடைமேல் இளவெண் திங்கள் விளங்கவே,
துன்னும் கடல் நஞ்சு இருள் தோய் கண்டர் தொல் மூதூர்
அன்னம் படியும் புனல் ஆர் அரிசில் அலை கொண்டு,
பொன்னும் மணியும் பொரு தென் கரைமேல் புத்தூரே.

[1]
மேவா அசுரர் மேவு எயில் வேவ, மலைவில்லால்,
ஏ ஆர் எரி வெங்கணையால், எய்தான் எய்தும் ஊர்
நாவால் நாதன் நாமம் ஓதி, நாள்தோறும்,
பூவால் நீரால் பூசுரர் போற்றும் புத்தூரே.

[2]
பல் ஆர் தலை சேர் மாலை சூடி, பாம்பும் பூண்டு
எல்லா இடமும் வெண் நீறு அணிந்து, ஓர் ஏறு ஏறி,
கல் ஆர் மங்கை பங்கரேனும், காணுங்கால்,
பொல்லார் அல்லர்; அழகியர் புத்தூர்ப் புனிதரே.
[3]
வரி ஏர் வளையாள் அரிவை அஞ்ச, வருகின்ற,
கரி ஏர் உரிவை போர்த்த கடவுள் கருதும் ஊர்
அரி ஏர் கழனிப் பழனம் சூழ்ந்து, அங்கு அழகு ஆய
பொரி ஏர் புன்கு சொரி பூஞ்சோலைப் புத்தூரே.

[4]
என்போடு, அரவம், ஏனத்து எயிறோடு, எழில் ஆமை,
மின் போல் புரி நூல், விரவிப் பூண்ட வரைமார்பர்;
அன்போடு உருகும் அடியார்க்கு அன்பர்; அமரும் ஊர்-
பொன்போது அலர் கோங்கு ஓங்கு சோலைப் புத்தூரே.

[5]
வள்ளி முலை தோய் குமரன் தாதை, வான் தோயும்
வெள்ளிமலை போல் விடை ஒன்று உடையான், மேவும் ஊர்
தெள்ளி வரு நீர் அரிசில் தென்பால், சிறைவண்டும்
புள்ளும் மலி பூம் பொய்கை சூழ்ந்த புத்தூரே.

[6]
நிலம் தண்ணீரோடு அனல் கால் விசும்பின் நீர்மையான்,
சிலந்தி செங்கண் சோழன் ஆகச் செய்தான், ஊர்
அலந்த அடியான் அற்றைக்கு அன்று ஓர் காசு எய்தி,
புலர்ந்த காலை மாலை போற்றும் புத்தூரே.

[7]
இத் தேர் ஏக, இம் மலை பேர்ப்பன் என்று ஏந்தும்
பத்து ஓர்வாயான் வரைக்கீழ் அலற, பாதம்தான்
வைத்து, ஆர் அருள் செய் வரதன் மருவும்(ம்) ஊர் ஆன
புத்தூர் காணப் புகுவார் வினைகள் போகுமே.

[8]
முள் ஆர் கமலத்து அயன், மால், முடியோடு அடி தேட,
ஒள் ஆர் எரி ஆய் உணர்தற்கு அரியான் ஊர்போலும்
கள் ஆர் நெய்தல், கழுநீர், ஆம்பல், கமலங்கள்,
புள் ஆர் பொய்கைப் பூப்பல தோன்றும் புத்தூரே.

[9]
கை ஆர் சோறு கவர் குண்டர்களும், துவருண்ட
மெய் ஆர் போர்வை மண்டையர், சொல்லு மெய் அல்ல;
பொய்யா மொழியால் அந்தணர் போற்றும் புத்தூரில்
ஐயா! என்பார்க்கு, ஐயுறவு இன்றி அழகு ஆமே.

[10]
நறவம் கமழ் பூங் காழி ஞானசம்பந்தன்,
பொறி கொள் அரவம் பூண்டான் ஆண்ட புத்தூர்மேல்,
செறி வண்தமிழ் செய் மாலை செப்ப வல்லார்கள்,
அறவன் கழல் சேர்ந்து, அன்பொடு இன்பம் அடைவாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2.064   தேவா! சிறியோம் பிழையைப் பொறுப்பாய்!  
பண் - காந்தாரம்   (திருத்தலம் திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) ; (திருத்தலம் அருள்தரு பெரியநாயகியம்மை உடனுறை அருள்மிகு பழமலைநாதர் திருவடிகள் போற்றி )
தேவா! சிறியோம் பிழையைப் பொறுப்பாய்! பெரியோனே!
ஆவா! என்று, அங்கு அடியார் தங்கட்கு அருள் செய்வாய்!
ஓவா உவரி கொள்ள உயர்ந்தாய்! என்று ஏத்தி,
மூவா முனிவர் வணங்கும் கோயில் முதுகுன்றே.

[1]
எந்தை இவன் என்று இரவி முதலா இறைஞ்சுவார்
சிந்தையுள்ளே கோயில் ஆகத் திகழ்வானை,
மந்தி ஏறி, இனம் ஆம் மலர்கள் பல கொண்டு,
முந்தித் தொழுது வணங்கும் கோயில் முதுகுன்றே.

[2]
நீடும் அலரும் புனலும் கொண்டு, நிரந்தரம்,
தேடும் அடியார் சிந்தையுள்ளே திகழ்வானை,
பாடும் குயிலின் அயலே கிள்ளை பயின்று ஏத்த,
மூடும் சோலை முகில் தோய் கோயில் முதுகுன்றே.

[3]
தெரிந்த அடியார், சிவனே! என்று திசைதோறும்,
குருந்தமலரும் குரவின் அலரும் கொண்டு ஏந்தி,
இருந்தும் நின்றும், இரவும் பகலும், ஏத்தும் சீர்,
முரிந்து மேகம் தவழும் சோலை முதுகுன்றே.

[4]
வைத்த நிதியே! மணியே! என்று வருந்தித் தம்
சித்தம் நைந்து, சிவனே! என்பார் சிந்தையார்;
கொத்து ஆர் சந்தும், குரவும், வாரிக் கொணர்ந்து உந்தும்
முத்தாறு உடைய முதல்வர்; கோயில் முதுகுன்றே.

[5]
வம்பு ஆர் கொன்றை, வன்னி, மத்தமலர், தூவி,
நம்பா! என்ன, நல்கும் பெருமான் உறை கோயில்
கொம்பு ஆர் குரவு, கொகுடி, முல்லை, குவிந்து எங்கும்
மொய்ம்பு ஆர் சோலை வண்டு பாடும் முதுகுன்றே.

[6]
வாசம் கமழும் பொழில் சூழ் இலங்கை வாழ் வேந்தை
நாசம் செய்த நங்கள் பெருமான் அமர் கோயில்
பூசை செய்த அடியார் நின்று புகழ்ந்து ஏத்த,
மூசி வண்டு பாடும் சோலை முதுகுன்றே.

[8]
அல்லி மலர்மேல் அயனும், அரவின் அணையானும்,
சொல்லிப் பரவித் தொடர ஒண்ணாச் சோதி ஊர்
கொல்லை வேடர் கூடி நின்று கும்பிட,
முல்லை அயலே முறுவல் செய்யும் முதுகுன்றே.

[9]
கருகும் உடலார், கஞ்சி உண்டு கடுவே நின்று
உருகு சிந்தை இல்லார்க்கு, அயலான் உறை கோயில்
திருகல் வேய்கள் சிறிதே வளைய, சிறு மந்தி
முருகின் பணைமேல் இருந்து நடம் செய் முதுகுன்றே.

[10]
அறை ஆர் கடல் சூழ் அம் தண் காழிச் சம்பந்தன்,
முறையால் முனிவர் வணங்கும் கோயில் முதுகுன்றைக்
குறையாப் பனுவல் கூடிப் பாட வல்லார்கள்,
பிறை ஆர் சடை எம்பெருமான் கழல்கள் பிரியாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2.065   கறை அணி வேல் இலர்போலும்;  
பண் - காந்தாரம்   (திருத்தலம் திருப்பிரமபுரம் (சீர்காழி) ; (திருத்தலம் அருள்தரு திருநிலைநாயகி உடனுறை அருள்மிகு பிரமபுரீசர் திருவடிகள் போற்றி )
கறை அணி வேல் இலர்போலும்; கபாலம் தரித்திலர்
போலும்;
மறையும் நவின்றிலர் போலும்; மாசுணம் ஆர்த்திலர் போலும்;
பறையும் கரத்து இலர்போலும்; பாசம் பிடித்திலர் போலும்;
பிறையும் சடைக்கு இலர்போலும் பிரமபுரம் அமர்ந்தாரே.

[1]
கூர் அம்பு அது இலர்போலும்; கொக்கின் இறகு இலர்
போலும்;
ஆரமும் பூண்டிலர் போலும்; ஆமை அணிந்திலர்
போலும்;
தாரும் சடைக்கு இலர்போலும்; சண்டிக்கு அருளிலர்போலும்;
பேரும் பல இலர்போலும் பிரமபுரம் அமர்ந்தாரே.

[2]
சித்த வடிவு இலர்போலும்; தேசம் திரிந்திலர்போலும்;
கத்தி வரும் கடுங்காளி கதங்கள் தவிர்த்திலர் போலும்;
மெய்த்த நயனம் இடந்தார்க்கு ஆழி அளித்திலர் போலும்;
பித்தவடிவு இலர்போலும் பிரமபுரம் அமர்ந்தாரே.

[3]
நச்சு அரவு ஆட்டிலர் போலும்; நஞ்சம் மிடற்று
இலர்போலும்;
கச்சுத் தரித்திலர்போலும்; கங்கை தரித்திலர்போலும்;
மொய்ச்ச வன்பேய் இலர்போலும்; முப்புரம் எய்திலர்போலும்;
பிச்சை இரந்திலர்போலும் பிரமபுரம் அமர்ந்தாரே.

[4]
தோடு செவிக்கு இலர்போலும்; சூலம் பிடித்திலர்போலும்;
ஆடு தடக்கை வலிய ஆனை உரித்திலர்போலும்;
ஓடு கரத்து இலர்போலும்; ஒள் அழல் கை இலர்போலும்
பீடு மிகுத்து எழு செல்வப் பிரமபுரம் அமர்ந்தாரே.

[5]
விண்ணவர் கண்டிலர்போலும்; வேள்வி அழித்திலர்போலும்;
அண்ணல் அயன்தலை வீழ, அன்றும் அறுத்திலர்போலும்;
வண்ண எலும்பினொடு அக்குவடங்கள் தரித்திலர்போலும்
பெண் இனம் மொய்த்து எழு செல்வப் பிரமபுரம்
அமர்ந்தாரே.

[6]
பன்றியின் கொம்பு இலர்போலும்; பார்த்தற்கு
அருளிலர்போலும்;
கன்றிய காலனை வீழக் கால்கொடு பாய்ந்திலர்போலும்;
துன்று பிணம் சுடுகாட்டில் ஆடித் துதைந்திலர் போலும்
பின்றியும் பீடும் பெருகும் பிரமபுரம் அமர்ந்தாரே.

[7]
பரசு தரித்திலர்போலும்; படுதலை பூண்டிலர் போலும்;
அரசன் இலங்கையர் கோனை அன்றும்
அடர்த்திலர்போலும்;
புரை செய் புனத்து இளமானும், புலியின் அதள்,
இலர்போலும்
பிரசமலர்ப்பொழில் சூழ்ந்த பிரமபுரம் அமர்ந்தாரே.

[8]
அடி முடி மால் அயன் தேட, அன்றும் அளப்பிலர்போலும்;
கடிமலர் ஐங்கணை வேளைக் கனல விழித்திலர்போலும்;
படி மலர்ப்பாலனுக்கு ஆகப் பாற்கடல் ஈந்திலர்போலும்
பிடிநடை மாதர் பெருகும் பிரமபுரம் அமர்ந்தாரே.

[9]
வெற்று அரைச் சீவரத்தார்க்கு வெளிப்பட
நின்றிலர்போலும்;
அற்றவர், ஆல்நிழல், நால்வர்க்கு அறங்கள்
உரைத்திலர்போலும்;
உற்றவர் ஒன்று இலர்போலும்; ஓடு முடிக்கு இலர்போலும்;
பெற்றமும் ஊர்ந்திலர்போலும் பிரமபுரம் அமர்ந்தாரே.

[10]
பெண் உரு ஆண் உரு அல்லாப் பிரமபுர நகர் மேய
அண்ணல் செய்யாதன எல்லாம் அறிந்து, வகைவகையாலே,
நண்ணிய ஞானசம்பந்தன் நவின்றனபத்தும் வல்லார்கள்,
விண்ணவரொடு இனிது ஆக வீற்றிருப்பார், அவர்தாமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2.066   மந்திரம் ஆவது நீறு; வானவர்  
பண் - காந்தாரம்   (திருத்தலம் திருஆலவாய் (மதுரை) ; (திருத்தலம் அருள்தரு மீனாட்சியம்மை உடனுறை அருள்மிகு சொக்கநாதசுவாமி திருவடிகள் போற்றி )
சமணர்கள் அச்சமுற்றார்கள். ஆயினும் அதனை மறைத்துக் கொண்டு சம்பந்தரை நோக்கி உங்கள் சமயக் கொள்கைகளைக் கூறுங்கள் எனக்கூறினர். அரசியார் கொடிய சமணர்கள் நடுவில் இப் பாலகரை நாம் அழைத்தது தவறோ என வருந்திச் சமணர்களை நோக்கி மன்னனின் நோயை முதலில் தணிக்க முயலுங்கள். நோய் தணிந்த பிறகு வாது செய்யலாம் என்றார். ஞானசம்பந்தர் அரசமா தேவியாரைப் பார்த்து அஞ்சற்க; என்னைப் பாலகன் எனக் கருத வேண்டா; ஆலவாயரன் துணைநிற்க வாதில் வெல்வோம் என்றார். சமணர்கள் மன்னன் உடலில் இடப்பாகம் பற்றிய நோயை நாங்கள் குணப்படுத்துகிறோம் என்று பீலி கொண்டு உடலைத் தடவிய அளவில் நோய் மேலும் கூடியது. ஞானசம்பந்தர் மந்திரமாவது நீறு என்ற திருப்பதிகம் பாடி, தம் திருக்கரத்தால் வலப்பாகத்தில் திரு நீற்றைத் தடவிய அளவில் நோய் தணிந்து இடப்பாகத்தே மூண்டெழக் கண்ட மன்னன் அப் பாகத்தையும் தாங்களே தீர்த்தருள வேண்டுமென வேண்டினான். ஞானசம்பந்தர் இடப்பாகத்திலும் திருநீறு பூசிய அளவில் நோய் தணிந்தது. மன்னன் எழுந்து ஞானசம்பந்தரைப் பணிந்து யான் உய்ந்தேன் என்று போற்றினான்.
வெப்பம் மிகுதியால் ஏற்படும் நோய்கள், உடல் சூடு நீங்க ஓதவேண்டிய பதிகம்
மந்திரம் ஆவது நீறு; வானவர் மேலது நீறு;
சுந்தரம் ஆவது நீறு; துதிக்கப்படுவது நீறு;
தந்திரம் ஆவது நீறு; சமயத்தில் உள்ளது நீறு;
செந்துவர்வாய் உமை பங்கன் திரு ஆலவாயான் திருநீறே.

[1]
வேதத்தில் உள்ளது நீறு; வெந்துயர் தீர்ப்பது நீறு;
போதம் தருவது நீறு; புன்மை தவிர்ப்பது நீறு;
ஓதத் தகுவது நீறு; உண்மையில் உள்ளது நீறு;
சீதப்புனல் வயல் சூழ்ந்த திரு ஆலவாயான் திருநீறே.

[2]
முத்தி தருவது நீறு; முனிவர் அணிவது நீறு;
சத்தியம் ஆவது நீறு; தக்கோர் புகழ்வது நீறு;
பத்தி தருவது நீறு; பரவ இனியது நீறு;
சித்தி தருவது நீறு; திரு ஆலவாயான் திருநீறே.

[3]
காண இனியது நீறு; கவினைத் தருவது நீறு;
பேணி அணிபவர்க்கு எல்லாம் பெருமை கொடுப்பது நீறு;
மாணம் தகைவது நீறு; மதியைத் தருவது நீறு;
சேணம் தருவது நீறு; திரு ஆலவாயான் திருநீறே.

[4]
பூச இனியது நீறு; புண்ணியம் ஆவது நீறு;
பேச இனியது நீறு; பெருந் தவத்தோர்களுக்கு எல்லாம்
ஆசை கெடுப்பது நீறு; அந்தம் அது ஆவது நீறு;
தேசம் புகழ்வது நீறு; திரு ஆலவாயான் திருநீறே.

[5]
அருத்தம் அது ஆவது நீறு; அவலம் அறுப்பது நீறு;
வருத்தம் தணிப்பது நீறு; வானம் அளிப்பது நீறு;
பொருத்தம் அது ஆவது நீறு; புண்ணியர் பூசும் வெண் நீறு;
திருத் தகு மாளிகை சூழ்ந்த திரு ஆலவாயான் திருநீறே.

[6]
எயில் அது அட்டது நீறு; இருமைக்கும் உள்ளது நீறு;
பயிலப்படுவது நீறு; பாக்கியம் ஆவது நீறு;
துயிலைத் தடுப்பது நீறு; சுத்தம் அது ஆவது நீறு;
அயிலைப் பொலிதரு சூலத்து ஆலவாயான் திருநீறே.

[7]
இராவணன் மேலது நீறு; எண்ணத் தகுவது நீறு;
பராவணம் ஆவது நீறு; பாவம் அறுப்பது நீறு;
தராவணம் ஆவது நீறு; தத்துவம் ஆவது நீறு;
அரா அணங்கும் திருமேனி ஆலவாயான் திருநீறே.

[8]
மாலொடு அயன் அறியாத வண்ணமும் உள்ளது நீறு;
மேல் உறை தேவர்கள் தங்கள் மெய்யது வெண்பொடி நீறு;
ஏல உடம்பு இடர் தீர்க்கும் இன்பம் தருவது நீறு;
ஆலம் அது உண்ட மிடற்று எம் ஆலவாயான் திருநீறே.

[9]
குண்டிகைக் கையர்களோடு சாக்கியர் கூட்டமும் கூட,
கண் திகைப்பிப்பது நீறு; கருத இனியது நீறு;
எண்திசைப்பட்ட பொருளார் ஏத்தும் தகையது நீறு;
அண்டத்தவர் பணிந்து ஏத்தும் ஆலவாயான் திருநீறே.

[10]
ஆற்றல் அடல் விடை ஏறும் ஆலவாயான் திருநீற்றைப்
போற்றி, புகலி நிலாவும் பூசுரன் ஞானசம்பந்தன்,
தேற்றி, தென்னன் உடல் உற்ற தீப்பிணி ஆயின தீரச்
சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2.067   மண்ணும் ஓர் பாகம் உடையார்;  
பண் - காந்தாரம்   (திருத்தலம் திருப்பெரும்புலியூர் ; (திருத்தலம் அருள்தரு சவுந்தராம்பிகையம்மை உடனுறை அருள்மிகு வியாக்கிரபுரீசுவரர் திருவடிகள் போற்றி )
மண்ணும் ஓர் பாகம் உடையார்; மாலும் ஓர்பாகம்
உடையார்;
விண்ணும் ஓர் பாகம் உடையார்; வேதம் உடைய விமலர்;
கண்ணும் ஓர் பாகம் உடையார்; கங்கை சடையில் கரந்தார்;
பெண்ணும் ஓர்பாகம் உடையார் பெரும்புலியூர் பிரியாரே.

[1]
துன்னு கடல் பவளம் சேர் தூயன நீண்ட திண்தோள்கள்
மின்னு சுடர்க்கொடி போலும் மேனியினார்; ஒரு கங்கைக்
கன்னிகளின் புனையோடு கலைமதிமாலை கலந்த
பின்னுசடைப் பெருமானார் பெரும்புலியூர் பிரியாரே.

[2]
கள்ளம் மதித்த கபாலம் கைதனிலே மிக ஏந்தி,
துள்ள மிதித்து நின்று ஆடும் தொழிலர்; எழில் மிகு
செல்வர்;
வெள்ளம், நகுதலைமாலை, விரிசடை மேல் மிளிர்கின்ற
பிள்ளை மதிப் பெருமானார் பெரும் புலியூர் பிரியாரே.

[3]
ஆடல் இலையம் உடையார்; அருமறை தாங்கி ஆறு
அங்கம்
பாடல் இலையம் உடையார்; பன்மை ஒருமை செய்து,
அஞ்சும்
ஊடு அலில் ஐயம் உடையார்; யோகு எனும் பேர் ஒளி
தாங்கி,
பீடு அல் இலையம் உடையார் பெரும்புலியூர் பிரியாரே.

[4]
தோடு உடையார், குழைக் காதில்; சூடுபொடியார்; அனல்
ஆடக்
காடு உடையார்; எரி வீசும் கை உடையார்; கடல் சூழ்ந்த
நாடு உடையார்; பொருள் இன்பம் நல்லவை நாளும் நயந்த
பீடு உடையார்; பெருமானார் பெரும்புலியூர் பிரியாரே.

[5]
கற்றது உறப் பணி செய்து காண்டும் என்பார் அவர்தம்
கண்;
முற்று இது அறிதும் என்பார்கள் முதலியர்; வேதபுராணர்;
மற்று இது அறிதும் என்பார்கள் மனத்து இடையார்; பணி
செய்ய,
பெற்றி பெரிதும் உகப்பார் பெரும்புலியூர் பிரியாரே.

[6]
மறை உடையார், ஒலிபாடல்; மா மலர்ச்சேவடி சேர்வார்,
குறை உடையார், குறை தீர்ப்பார்; குழகர், அழகர்; நம்
செல்வர்;
கறை உடையார், திகழ் கண்டம்; கங்கை சடையில்
கரந்தார்;
பிறை உடையார், சென்னிதன்மேல்; பெரும் புலியூர்
பிரியாரே.

[7]
உறவியும் இன்பு உறு சீரும் ஓங்குதல், வீடு எளிது ஆகி,
துறவியும் கூட்டமும் காட்டி, துன்பமும் இன்பமும் தோற்றி,
மறவி அம்சிந்தனை மாற்றி, வாழ வல்லார்தமக்கு என்றும்
பிறவி அறுக்கும் பிரானார் பெரும்புலியூர் பிரியாரே.

[8]
சீர் உடையார்; அடியார்கள் சேடர்; ஒப்பார்; சடை சேரும்
நீர் உடையார்; பொடிப் பூசும் நினைப்பு உடையார்;
விரிகொன்றைத்
தார் உடையார்; விடை ஊர்வார்; தலைவர்; ஐந் நூற்றுப்
பத்து ஆய
பேர் உடையார்; பெருமானார் பெரும்புலியூர் பிரியாரே.

[9]
உரிமை உடைய அடியார்கள் உள் உற உள்க வல்லார்கட்கு
அருமை உடையன காட்டி, அருள் செயும் ஆதிமுதல்வர்;
கருமை உடை நெடுமாலும், கடிமலர் அண்ணலும், காணாப்
பெருமை உடைப் பெருமானார் பெரும்புலியூர் பிரியாரே.

[10]
பிறை வளரும் முடிச் சென்னிப் பெரும்புலியூர்ப்
பெருமானை,
நறை வளரும் பொழில் காழி நல் தமிழ் ஞானசம்பந்தன்,
மறை வளரும் தமிழ்மாலை வல்லவர், தம் துயர் நீங்கி,
நிறை வளர் நெஞ்சினர் ஆகி, நீடு உலகத்து இருப்பாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2.068   வான் அமர் திங்களும் நீரும்  
பண் - காந்தாரம்   (திருத்தலம் திருக்கடம்பூர் ; (திருத்தலம் அருள்தரு சோதிமின்னம்மை உடனுறை அருள்மிகு அமுதகடேசுவரர் திருவடிகள் போற்றி )
வான் அமர் திங்களும் நீரும் மருவிய வார் சடையானை,
தேன் அமர் கொன்றையினானை, தேவர் தொழப்படுவானை,
கான் அமரும் பிணை புல்கிக் கலை பயிலும் கடம்பூரில்
தான் அமர் கொள்கையினானை, தாள் தொழ, வீடு எளிது
ஆமே.

[1]
அரவினொடு ஆமையும் பூண்டு, அம் துகில் வேங்கை
அதளும்,
விரவும் திரு முடி தன் மேல் வெண்திங்கள் சூடி,
விரும்பிப்
பரவும் தனிக் கடம்பூரில் பைங்கண் வெள் ஏற்று
அண்ணல் பாதம்
இரவும் பகலும் பணிய, இன்பம் நமக்கு அது ஆமே.

[2]
இளி படும் இன்சொலினார்கள் இருங்குழல்மேல் இசைந்து
ஏற,
தெளிபடு கொள்கை கலந்த தீத் தொழிலார் கடம்பூரில்
ஒளிதரு வெண்பிறை சூடி, ஒண்ணுதலோடு உடன் ஆகி,
புலி அதள் ஆடை புனைந்தான் பொன்கழல் போற்றுதும்,
நாமே.

[3]
பறையொடு சங்கம் இயம்ப, பல்கொடி சேர் நெடுமாடம்
கறை உடை வேல் வரிக்கண்ணார் கலை ஒலி சேர்
கடம்பூரில்
மறையொடு கூடிய பாடல் மருவி நின்று, ஆடல் மகிழும்
பிறை உடை வார்சடையானைப் பேண வல்லார்
பெரியோரே.

[4]
தீ விரிய, கழல் ஆர்ப்ப, சேய் எரி கொண்டு, இடுகாட்டில்,
நா விரி கூந்தல் நல் பேய்கள் நகைசெய்ய, நட்டம்
நவின்றோன்
கா விரி கொன்றை கலந்த கண்நுதலான் கடம்பூரில்,
பா விரி பாடல் பயில்வார் பழியொடு பாவம் இலாரே.

[5]
தண்புனல் நீள் வயல்தோறும் தாமரைமேல் அனம் வைக,
கண் புணர் காவில் வண்டு ஏற, கள் அவிழும் கடம்பூரில்,
பெண் புனை கூறு உடையானை, பின்னுசடைப்
பெருமானை,
பண் புனை பாடல் பயில்வார் பாவம் இலாதவர் தாமே.

[6]
பலி கெழு செம்மலர் சார, பாடலொடு ஆடல் அறாத,
கலி கெழு வீதி கலந்த, கார் வயல் சூழ் கடம்பூரில்,
ஒலி திகழ் கங்கை கரந்தான், ஒண் நுதலாள் உமை
கேள்வன்,
புலி அதள் ஆடையினான் தன் புனைகழல் போற்றல்
பொருள்

[7]
பூம் படுகில் கயல் பாய, புள் இரிய, புறங்காட்டில்
காம்பு அடு தோளியர் நாளும் கண் கவரும் கடம்பூரில்,
மேம்படு தேவி ஓர்பாகம் மேவி! எம்மான்! என வாழ்த்தி,
தேம் படு மா மலர் தூவி, திசை தொழ, தீய கெடுமே.

[8]
திரு மரு மார்பில் அவனும், திகழ்தரு மா மலரோனும்,
இருவரும் ஆய், அறிவு ஒண்ணா எரி உரு ஆகிய ஈசன்
கருவரை காலில் அடர்த்த கண் நுதலான் கடம்பூரில்
மருவிய பாடல் பயில்வார் வான் உலகம் பெறுவாரே.

[9]
ஆடை தவிர்த்து அறம் காட்டுமவர்களும், அம் துவர்
ஆடைச்
சோடைகள், நன்நெறி சொல்லார்; சொல்லினும், சொல்
அலகண்டீர்!
வேடம் பல பல காட்டும் விகிர்தன், நம் வேதமுதல்வன்,
காடு அதனில் நடம் ஆடும் கண் நுதலான், கடம்பூரே.

[10]
விடை நவிலும் கொடியானை, வெண்கொடி சேர்
நெடுமாடம்
கடை நவிலும் கடம்பூரில் காதலனை, கடல் காழி
நடை நவில் ஞானசம்பந்தன் நன்மையால் ஏத்திய பத்தும்,
படை நவில் பாடல், பயில்வார் பழியொடு பாவம் இலாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2.069   பெண் அமர் மேனியினாரும், பிறை  
பண் - காந்தாரம்   (திருத்தலம் திருப்பாண்டிக்கொடுமுடி ; (திருத்தலம் அருள்தரு பண்மொழியம்மை உடனுறை அருள்மிகு கொடுமுடிநாதேசுவரர் திருவடிகள் போற்றி )
பெண் அமர் மேனியினாரும், பிறை புல்கு
செஞ்சடையாரும்,
கண் அமர் நெற்றியினாரும், காது அமரும் குழையாரும்,
எண் அமரும் குணத்தாரும், இமையவர் ஏத்த நின்றாரும்,
பண் அமர் பாடலினாரும் பாண்டிக்கொடு முடியாரே.

[1]
தனைக் கன்னி மா மலர் கொண்டு தாள் தொழுவார் அவர்
தங்கள்
வினைப்பகை ஆயின தீர்க்கும் விண்ணவர்; விஞ்சையர்;
நெஞ்சில்
நினைத்து எழுவார் துயர் தீர்ப்பார்; நிரை வளை மங்கை
நடுங்கப்
பனைக்கைப் பகட்டு உரி போர்த்தார் பாண்டிக்கொடு
முடியாரே.

[2]
சடை அமர் கொன்றையினாரும், சாந்த வெண் நீறு
அணிந்தாரும்,
புடை அமர் பூதத்தினாரும், பொறி கிளர் பாம்பு
அசைத்தாரும்
விடை அமரும் கொடியாரும், வெண்மழு மூ இலைச்சூலப்
படை அமர் கொள்கையினாரும் பாண்டிக்கொடு முடியாரே.

[3]
நறை வளர் கொன்றையினாரும்; ஞாலம் எல்லாம் தொழுது
ஏத்த,
கறை வளர் மா மிடற்றாரும்; காடு அரங்கா, கனல் ஏந்தி,
மறை வளர் பாடலினோடு, மண்முழவம், குழல், மொந்தை
பறை, வளர் பாடலினாரும் பாண்டிக்கொடுமுடியாரே.

[4]
போகமும் இன்பமும் ஆகி, போற்றி! என்பார் அவர்
தங்கள்
ஆகம் உறைவு இடம் ஆக அமர்ந்தவர்
கொன்றையினோடும்
நாகமும் திங்களும் சூடி, நன்நுதல் மங்கைதன் மேனிப்
பாகம் உகந்தவர் தாமும் பாண்டிக்கொடுமுடியாரே.

[5]
கடி படு கூவிளம் மத்தம் கமழ் சடைமேல் உடையாரும்,
பொடிபட முப்புரம் செற்ற பொருசிலை ஒன்று உடையாரும்,
வடிவு உடை மங்கை தன்னோடு மணம் படு
கொள்கையினாரும்,
படி படு கோலத்தினாரும் பாண்டிக்கொடு முடியாரே.

[6]
ஊன் அமர் வெண்தலை ஏந்தி உண் பலிக்கு என்று
உழல்வாரும்,
தேன் அமரும் மொழிமாது சேர் திருமேனியினாரும்,
கான் அமர் மஞ்ஞைகள் ஆலும் காவிரிக் கோலக்
கரைமேல்
பால் நல நீறு அணிவாரும் பாண்டிக்கொடு முடியாரே.

[7]
புரந்தரன் தன்னொடு வானோர், போற்றி! என்று ஏத்த
நின்றாரும்,
பெருந்திறல் வாள் அரக்கன்(ன்)னைப் பேர் இடர் செய்து
உகந்தாரும்,
கருந்திரை மா மிடற்றாரும் கார் அகில் பல்மணி உந்திப்
பரந்து இழி காவிரிப் பாங்கர்ப் பாண்டிக்கொடு முடியாரே.

[8]
திருமகள் காதலினானும், திகழ்தரு மா மலர் மேலைப்
பெருமகனும்(ம்), அவர் காணாப் பேர் அழல் ஆகிய
பெம்மான்
மரு மலி மென்மலர்ச் சந்து வந்து இழி காவிரி மாடே
பரு மணி நீர்த்துறை ஆரும் பாண்டிக்கொடு முடியாரே.

[9]
புத்தரும், புந்தி இலாத சமணரும், பொய்ம்மொழி அல்லால்
மெய்த்தவம் பேசிடமாட்டார்; வேடம் பல பலவற்றால்
சித்தரும் தேவரும் கூடி, செழு மலர் நல்லன கொண்டு,
பத்தியினால் பணிந்து ஏத்தும் பாண்டிக்கொடு முடியாரே.

[10]
கலம் மல்கு தண் கடல் சூழ்ந்த காழியுள் ஞானசம்பந்தன்,
பலம் மல்கு வெண்தலை ஏந்தி பாண்டிக்கொடு
முடிதன்னைச்
சொல மல்கு பாடல்கள் பத்தும் சொல்ல வல்லார், துயர்
தீர்ந்து,
நலம் மல்கு சிந்தையர் ஆகி, நன்நெறி எய்துவர் தாமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2.070   பிரமன் ஊர், வேணுபுரம், புகலி,  
பண் - காந்தாரம்   (திருத்தலம் திருஆலவாய் (மதுரை) ; (திருத்தலம் அருள்தரு திருநிலைநாயகி உடனுறை அருள்மிகு பிரமபுரீசர் திருவடிகள் போற்றி )
ஞானசம்பந்தர் பாண்டியன் அரண்மனையை அடைந்து மன்னன் அருகில் இடப்பெற்ற பொற்றவிசில் எழுந்தருளினார். மன்னன் ஞானசம்பந்தரைத் தரிசித்த அளவில் நோய் சிறிது தணியப் பெற்றவனாய் அவரோடு உரையாடும் முறையில் நுமது ஊர் எது எனக் கேட்கப் பிரமனூர் என்ற திருப்பதிகத்தால் விடையளித்தார்.
பிரமன் ஊர், வேணுபுரம், புகலி, வெங்குரு, பெருநீர்த்
தோணி
புரம், மன்னு பூந்தராய், பொன் அம் சிரபுரம், புறவம்,
சண்பை,
அரன் மன்னு தண் காழி, கொச்சைவயம், உள்ளிட்டு அங்கு
ஆதி ஆய
பரமன் ஊர் பன்னிரண்டு ஆய் நின்ற திருக்கழுமலம் நாம்
பரவும் ஊரே.

[1]
வேணுபுரம், பிரமன் ஊர், புகலி, பெரு வெங்குரு,
வெள்ளத்து ஓங்கும்
தோணிபுரம், பூந்தராய், தூ நீர்ச் சிரபுரம், புறவம், காழி,
கோணிய கோட்டாற்றுக் கொச்சைவயம், சண்பை, கூரும்
செல்வம்
காணிய வையகத்தார் ஏத்தும் கழுமலம் நாம் கருதும்
ஊரே.

[2]
புகலி, சிரபுரம், வேணுபுரம், சண்பை, புறவம், காழி,
நிகர் இல் பிரமபுரம், கொச்சைவயம், நீர்மேல் நின்ற
மூதூர்,
அகலிய வெங்குருவோடு, அம் தண் தராய், அமரர்
பெருமாற்கு இன்பம்
பகரும் நகர் நல்ல கழுமலம் நாம் கைதொழுது பாடும்
ஊரே.

[3]
வெங்குரு, தண்புகலி, வேணுபுரம், ச்ண்பை, வெள்ளம்
கொள்ளத்
தொங்கிய தோணிபுரம், பூந்தாய், தொகு பிரமபுரம், தொல்
காழி,
தங்கு பொழில் புறவம், கொச்சைவயம், தலி பண்டு ஆண்ட
மூதூர்,
கங்கை சடைமுடிமேல் ஏற்றான் கழுமலம் - நாம் கருதும்
ஊரே.

[4]
தொல் நீரில் தோணிபுரம், புகலி, வெங்குரு, துயர் தீர்
காழி,
இன் நீர வேணுபுரம் பூந்தராய், பிரமன் ஊர், எழில் ஆர்
சண்பை,
நன்நீர பூம் புறவம், கொச்சைவயம், சிலம்பன்நகர், ஆம்
நல்ல
பொன் நீர புன்சடையான் பூந் தண் கழுமலம் நாம் புகழும்
ஊரே.

[5]
தண் அம் தராய், புகலி, தாமரையான் ஊர், சண்பை, தலை
முன் ஆண்ட
அண்ணல் நகர், கொச்சைவயம், தண் புறவம், சீர் அணி
ஆர் காழி,
விண் இயல் சீர் வெங்குரு, நல் வேணுபுரம், தோணிபுரம்,
மேலார் ஏத்து
கண் நுதலான் மேவிய நல் கழுமலம் நாம் கைதொழுது
கருதும் ஊரே.

[6]
சீர் ஆர் சிரபுரமும், கொச்சை வயம், சண்பையொடு,
புறவம், நல்ல
ஆராத் தராய், பிரமன் ஊர், புகலி, வெங்குருவொடு, அம்
தண் காழி,
ஏர் ஆர் கழுமலமும், வேணுபுரம், தோணிபுரம், என்று
என்று உள்கி,
பேரால் நெடியவனும் நான்முகனும் காண்பு அரிய
பெருமான் ஊரே.

[7]
புறவம், சிரபுரமும், தோணிபுரம், சண்பை, மிகு புகலி, காழி,
நறவம் மிகு சோலைக் கொச்சைவயம், தராய், நான்முகன்
தன் ஊர்,
விறல் ஆய வெங்குருவும், வேணுபுரம், விசயன் மேல்
அம்பு எய்து
திறலால் அரக்கனைச் செற்றான் தன் கழுமலம் நாம்
சேரும் ஊரே.

[8]
சண்பை, பிரமபுரம், தண் புகலி, வெங்குரு, நல் காழி,
சாயாப்
பண்பு ஆர் சிரபுரமும், கொச்சைவயம், தராய், புறவம்,
பார்மேல்
நண்பு ஆர் கழுமலம், சீர் வேணுபுரம், தோணிபுரம் நாண்
இலாத
வெண்பல் சமணரொடு சாக்கியரை வியப்பு அழித்த
விமலன் ஊரே.

[9]
செழு மலிய பூங் காழி, புறவம், சிரபுரம், சீர்ப் புகலி,
செய்ய
கொழுமலரான் நன்நகரம், தோணிபுரம், கொச்சைவயம்,
சண்பை, ஆய
விழுமிய சீர் வெங்குருவொடு, ஓங்கு தராய், வேணுபுரம்,
மிகு நல் மாடக்
கழுமலம், என்று இன்ன பெயர் பன்னிரண்டும் கண்
நுதலான் கருதும் ஊரே.

[10]
கொச்சைவயம், பிரமன் ஊர், புகலி, வெங்குரு, புறவம்,
காழி,
நிச்சல் விழவு ஓவா நீடு ஆர் சிரபுரம், நீள் சண்பை மூதூர்,
நச்சு இனிய பூந்தராய், வேணுபுரம், தோணிபுரம், ஆகி
நம்மேல்
அச்சங்கள் தீர்த்து அருளும் அம்மான் கழுமலம் நாம் அமரும் ஊரே.

[11]
காவி மலர் புரையும் கண்ணார் கழுமலத்தின் பெயரை
நாளும்
பாவிய சீர்ப் பன்னிரண்டும் நன்நூலாப் பத்திமையால்
பனுவல் மாலை
நாவின் நலம் புகழ் சீர் நால்மறையான் ஞானசம்பந்தன்
சொன்ன
மேவி இசை மொழிவார் விண்ணவரில் எண்ணுதலை
விருப்பு உளாரே.

[12]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2.071   திருந்த மதி சூடி, தெண்  
பண் - காந்தாரம்   (திருத்தலம் திருக்குறும்பலா (குற்றாலம்) ; (திருத்தலம் அருள்தரு குழன்மொழியம்மை உடனுறை அருள்மிகு குறும்பலாநாதர் திருவடிகள் போற்றி )
திருந்த மதி சூடி, தெண் நீர் சடைக் கரந்து, தேவி பாகம்
பொகுந்தி, பொருந்தாத வேடத்தால் காடு உறைதல் புரிந்த
செல்வர்
இருந்த இடம் வினவில் ஏலம் கமழ் சோலை இனவண்டு
யாழ்செய்,
குருந்த மணம் நாறும் குன்று இடம் சூழ் தணசாரல்,
குறும்பலாவே.

[1]
நாள்பலவும் சேர் மதியம் சூடிப் பொடி அணிந்த நம்பான்,
நம்மை
ஆள்பலவும் தான் உடைய அம்மான், இடம்போலும் அம்
தண்சாரல்,
கீள் பலவும் கீண்டு கிளைகிளையன் மந்தி பாய்ந்து உண்டு,
விண்ட
கோள் பலவின் தீம் கனியை மாக் கடுவன் உண்டு
உகளும் குறும்பலாவே.

[2]
வாடல் தலைமாலை சூடி, புலித்தோல் வலித்து வீக்கி,
ஆடல் அரவு அசைத்த அம்மான் இடம்போலும் அம் தண்
சாரல்,
பாடல் பெடைவண்டு போது அலர்த்த, தாது அவிழ்ந்து,
பசும்பொன் உந்திக்
கோடல் மணம் கமழும் குன்று இடம் சூழ் தண்சாரல்
குறும்பலாவே.

[3]
பால் வெண்மதி சூடி, பாகத்து ஓர் பெண் கலந்து, பாடி,
ஆடி,
காலன் உடல் கிழியக் காய்ந்தார் இடம்போலும் கல் சூழ்
வெற்பில்,
நீலமலர்க்குவளை கண் திறக்க, வண்டு அரற்றும் நெடுந்
தண்சாரல்,
கோல மடமஞ்ஞை பேடையொடு ஆட்டு அயரும்
குறும்பலாவே.

[4]
தலை வாள்மதியம் கதிர் விரிய, தண்புனலைத் தாங்கி,
தேவி
முலை பாகம் காதலித்த மூர்த்தி இடம்போலும் முது வேய்
சூழ்ந்த
மலைவாய் அசும்பு பசும்பொன் கொழித்து இழியும் மல்கு
சாரல்,
குலைவாழைத் தீம்கனியும் மாங்கனியும் தேன் பிலிற்றும்
குறும்பலாவே.

[5]
நீற்று ஏர் துதைந்து இலங்கு வெண் நூலர், தண்மதியர்,
நெற்றிக்கண்ணர்,
கூற்று ஏர் சிதையக் கடிந்தார், இடம்போலும் குளிர் சூழ்
வெற்பில்,
ஏற்று ஏனம் ஏனம் இவையோடு அவை விரவி இழி
பூஞ்சாரல்,
கோல் தேன் இசை முரல, கேளா, குயில் பயிலும்
குறும்பலாவே.

[6]
பொன் தொத்த கொன்றையும் பிள்ளைமதியும் புனலும் சூடி,
பின் தொத்த வார்சடை எம்பெம்மான் இடம்போலும்
பிலயம் தாங்கி,
மன்றத்து மண்முழவம் ஓங்கி, மணி கொழித்து, வயிரம்
உந்தி,
குன்றத்து அருவி அயலே புனல் ததும்பும் குறும்பலாவே.

[7]
ஏந்து திணி திண்தோள் இராவணனை மால்வரைக்கீழ்
அடர ஊன்றி,
சாந்தம் என நீறு அணிந்த சைவர் இடம்போலும்
சாரல்சாரல்,
பூந் தண் நறு வேங்கைக் கொத்து இறுத்து, மத்தகத்தில்
பொலிய ஏந்தி,
கூந்தல் பிடியும் களிறும் உடன் வணங்கும் குறும்பலாவே.

[8]
அரவின் அணையானும் நான்முகனும் காண்பு அரிய
அண்ணல், சென்னி
விரவி மதி அணிந்த விகிர்தர்க்கு இடம்போலும்
விரிபூஞ்சாரல்,
மரவம் இரு கரையும் மல்லிகையும் சண்பகமும் மலர்ந்து
மாந்த,
குரவம் முறுவல் செய்யும் குன்று இடம் சூழ் தண் சாரல்
குறும்பலாவே.

[9]
மூடிய சீவரத்தர், முன்கூறு உண்டு ஏறுதலும் பின்கூறு
உண்டு
காடி தொடு சமணைக் காய்ந்தார் இடம்போலும் கல் சூழ்
வெற்பில்
நீடு உயர் வேய் குனியப் பாய் கடுவன் நீள்கழைமேல்
நிருத்தம் செய்ய,
கூடிய வேதுவர்கள் கூய் விளியா, கை மறிக்கும்
குறும்பலாவே.

[10]
கொம்பு ஆர் பூஞ்சோலைக் குறும்பலா மேவிய கொல்
ஏற்று அண்ணல்,
நம்பான், அடி பரவும் நால்மறையான் ஞானசம்பந்தன்
சொன்ன
இன்பு ஆய பாடல் இவைபத்தும் வல்லார், விரும்பிக்
கேட்பார்
தம்பால தீவினைகள் போய் அகலும்; நல்வினைகள் தளரா
அன்றே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2.072   பந்து ஆர் விரல் மடவாள்  
பண் - காந்தாரம்   (திருத்தலம் திருநணா (பவானி) ; (திருத்தலம் அருள்தரு வேதமங்கையம்மை உடனுறை அருள்மிகு சங்கமுகநாதேசுவரர் திருவடிகள் போற்றி )

வினை நீக்கம்‌ - கேட்பவர்‌ வினை நீங்க ஓத வேண்டிய பதிகம்‌
பந்து ஆர் விரல் மடவாள் பாகமா, நாகம் பூண்டு, எருது ஏறி,
அம் தார் அரவு அணிந்த அம்மான் இடம் போலும் அம் தண்சாரல்
வந்து ஆர் மடமந்தி கூத்து ஆட, வார் பொழிலில் வண்டு பாட,
செந்தேன் தெளி ஒளிர, தேமாங்கனி உதிர்க்கும் திரு நணாவே.

[1]
நாட்டம் பொலிந்து இலங்கு நெற்றியினான், மற்றொரு கை வீணை ஏந்தி,
ஈட்டும் துயர் அறுக்கும் எம்மான், இடம்போலும் இலை சூழ் கானில்
ஓட்டம் தரும் அருவி வீழும் விசை காட்ட, முந்தூழ் ஓசைச்
சேட்டார் மணிகள் அணியும் திரை சேர்க்கும் திரு நணாவே.

[2]
நன்று ஆங்கு இசை மொழிந்து, நன்நுதலாள் பாகம் ஆய், ஞாலம் ஏத்த,
மின் தாங்கு செஞ்சடை எம் விகிர்தர்க்கு இடம்போலும் விரை சூழ் வெற்பில்,
குன்று ஓங்கி வன் திரைகள் மோத, மயில் ஆலும் சாரல்,செவ்வி
சென்று ஓங்கி வானவர்கள் ஏத்தி அடி பணியும் திரு நணாவே.

[3]
கையில் மழு ஏந்தி, காலில் சிலம்பு அணிந்து, கரித்தோல்கொண்டு
மெய்யில் முழுது அணிந்த விகிர்தர்க்கு இடம்போலும் மிடைந்து வானோர்,
ஐய! அரனே! பெருமான்! அருள் என்று என்று ஆதரிக்க,
செய்யகமலம் மொழி தேன் அளித்து இயலும் திரு நணாவே.

[4]
முத்து ஏர் நகையாள் இடம் ஆக, தம் மார்பில் வெண் நூல் பூண்டு
தொத்து ஏர் மலர் சடையில் வைத்தார் இடம் போலும் சோலை சூழ்ந்த
அத் தேன் அளி உண் களியால் இசை முரல; ஆலத் தும்பி,
தெத்தே என; முரலக் கேட்டார் வினை கெடுக்கும் திரு நணாவே.

[5]
வில் ஆர் வரை ஆக, மா நாகம் நாண் ஆக, வேடம் கொண்டு
புல்லார் புரம் மூன்று எரித்தார்க்கு இடம்போலும் புலியும் மானும்
அல்லாத சாதிகளும் அம் கழல்மேல் கைகூப்ப, அடியார் கூடி,
செல்லா அரு நெறிக்கே செல்ல அருள் புரியும் திரு நணாவே.

[6]
கான் ஆர் களிற்று உரிவை மேல் மூடி, ஆடு அரவு ஒன்று அரைமேல் சாத்தி,
ஊன் ஆர் தலை ஓட்டில் ஊண் உகந்தான் தான் உகந்த கோயில் எங்கும்
நானாவிதத்தால் விரதிகள் நன்நாமமே ஏத்தி வாழ்த்த,
தேன் ஆர் மலர் கொண்டு அடியார் அடி வணங்கும் திரு நணாவே.

[7]
மன் நீர் இலங்கையர் தம் கோமான் வலி தொலைய விரலால் ஊன்றி,
முந்நீர்க் கடல் நஞ்சை உண்டார்க்கு இடம்போலும் முழை சேர் சீயம்,
அல் நீர்மை குன்றி அழலால் விழி குறைய அழியும் முன்றில்,
செந்நீர் பரப்பச் சிறந்து கரி ஒளிக்கும் திரு நணாவே.

[8]
மை ஆர் மணிமிடறன், மங்கை ஓர்பங்கு உடையான், மனைகள் தோறும்
கை ஆர் பலி ஏற்ற கள்வன், இடம்போலும் கழல்கள் நேடிப்
பொய்யா மறையானும் பூமி அளந்தானும் போற்ற, மன்னிச்
செய் ஆர் எரி ஆம் உருவம் உற, வணங்கும் திரு நணாவே.

[9]
ஆடை ஒழித்து அங்கு அமணே திரிந்து உண்பார், அல்லல் பேசி
மூடு உருவம் உகந்தார், உரை அகற்றும் மூர்த்தி கோயில்
ஓடும் நதி சேரும் நித்திலமும் மொய்த்த அகிலும் கரையில் சார,
சேடர் சிறந்து ஏத்த, தோன்றி ஒளி பெருகும் திரு நணாவே.

[10]
கல் வித்தகத்தால் திரை சூழ் கடல் காழிக் கவுணி சீர் ஆர்
நல் வித்தகத்தால் இனிது உணரும் ஞானசம்பந்தன் எண்ணும்
சொல் வித்தகத்தால் இறைவன் திரு நணா ஏத்து பாடல்,
வல் வித்தகத்தால் மொழிவார் பழி இலர், இம் மண்ணின்மேலே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2.073   விளங்கிய சீர்ப் பிரமன் ஊர்,  
பண் - காந்தாரம்   (திருத்தலம் திருப்பிரமபுரம் (சீர்காழி) ; (திருத்தலம் அருள்தரு திருநிலைநாயகி உடனுறை அருள்மிகு பிரமபுரீசர் திருவடிகள் போற்றி )
விளங்கிய சீர்ப் பிரமன் ஊர், வேணுபுரம், புகலி, வெங்குரு,
மேல் சோலை
வளம் கவரும் தோணிபுரம், பூந்தராய், சிரபுரம், வண்
புறவம், மண்மேல்
களங்கம் இல் ஊர்சண்பை, கமழ் காழி, வயம் கொச்சை,
கழுமலம், என்று இன்ன
இளங்குமரன் தன்னைப் பெற்று, இமையவர் தம் பகை
எறிவித்த இறைவன் ஊரே.

[1]
திரு வளரும் கழுமலமே, கொச்சை, தேவேந்திரன் ஊர்,
அயன் ஊர், தெய்வத்
தரு வளரும் பொழில் புறவம், சிலம்பன் ஊர், காழி, தகு
சண்பை, ஒண் பா
உரு வளர் வெங்குரு, புகலி, ஓங்கு தராய், தோணிபுரம்
உயர்ந்த தேவர்
வெருவ, வளர் கடல்விடம் அது உண்டு அணி கொள்
கண்டத்தோன் விரும்பும் ஊரே.

[2]
வாய்ந்த புகழ் மறை வளரும் தோணிபுரம், பூந்தராய்,
சிலம்பன் வாழ் ஊர்,
ஏய்ந்த புறவம், திகழும் சண்பை, எழில் காழி இறை
கொச்சை, அம் பொன்
வேய்ந்த மதில் கழுமலம், விண்ணோர் பணிய
மிக்க(அ)யன் ஊர், அமரர்கோன் ஊர்,
ஆய்ந்த கலை ஆர் புகலி, வெங்குரு அது அரன் நாளும்
அமரும் ஊரே.

[3]
Back to Top

This page was last modified on Fri, 15 Dec 2023 21:06:13 +0000
          send corrections and suggestions to admin @ sivasiva.org   https://www.sivaya.org/thirumurai_list.php