sivasiva.org
Search this site with
song/pathigam/paasuram numbers
Or Tamil/English words

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     
Thirumurai
5.002   திருநாவுக்கரசர்   தேவாரம்   பனைக்கை மும்மத வேழம் உரித்தவன்,
திருக்குறுந்தொகை   (கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=8AFLlyMIz3k
5.003   திருநாவுக்கரசர்   தேவாரம்   கடவுளை, கடலுள்(ள்) எழு நஞ்சு
திருக்குறுந்தொகை   (திருநெல்வாயில் அரத்துறை )
Audio: https://www.youtube.com/watch?v=zCMa42N_hJg
5.004   திருநாவுக்கரசர்   தேவாரம்   வட்டனை(ம்), மதிசூடியை, வானவர்- சிட்டனை,
திருக்குறுந்தொகை   (திருவண்ணாமலை அருணாசலேசுவரர் உண்ணாமுலையம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=9CAtSB8CnTU
5.005   திருநாவுக்கரசர்   தேவாரம்   பட்டி ஏறு உகந்து ஏறி,
திருக்குறுந்தொகை   (திருவண்ணாமலை அருணாசலேசுவரர் உண்ணாமுலையம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=-uVMU2Umgtc
Audio: https://www.youtube.com/watch?v=Ubkvgz7LOe8
5.006   திருநாவுக்கரசர்   தேவாரம்   எப்போதும்(ம்) இறையும் மறவாது, நீர்;
திருக்குறுந்தொகை   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=SoQOOWXMD0Y
5.007   திருநாவுக்கரசர்   தேவாரம்   கொக்கரை, குழல், வீணை, கொடுகொட்டி,
திருக்குறுந்தொகை   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=TNsBa7fjh4U
5.008   திருநாவுக்கரசர்   தேவாரம்   பாறு அலைத்த படுவெண் தலையினன்;
திருக்குறுந்தொகை   (திருஅன்னியூர் (பொன்னூர்) ஆபத்சகாயர் பெரியநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=qb5LycwPo54
5.009   திருநாவுக்கரசர்   தேவாரம்   ஓதம் மால் கடல் பரவி
திருக்குறுந்தொகை   (திருமறைக்காடு (வேதாரண்யம்) வேதாரணியேசுவரர் யாழைப்பழித்தமொழியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=w1Tnzcey5qU
5.010   திருநாவுக்கரசர்   தேவாரம்   பண்ணின் நேர் மொழியாள் உமைபங்கரோ!
திருக்குறுந்தொகை   (திருமறைக்காடு (வேதாரண்யம்) வேதாரணியேசுவரர் யாழைப்பழித்தமொழியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=2sD4CmYuQBw
5.011   திருநாவுக்கரசர்   தேவாரம்   தோற்றும் கோயிலும், தோன்றிய கோயிலும்,
திருக்குறுந்தொகை   (திருமீயச்சூர் முயற்சிநாதேசுவரர் சுந்தரநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=IjwwKbqNYI4
5.012   திருநாவுக்கரசர்   தேவாரம்   கரைந்து கை தொழுவாரையும் காதலன்;
திருக்குறுந்தொகை   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
Audio: https://www.youtube.com/watch?v=fhSWH2OG79Q
5.013   திருநாவுக்கரசர்   தேவாரம்   என் பொனே! இமையோர் தொழு
திருக்குறுந்தொகை   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
Audio: https://www.youtube.com/watch?v=vJuk3-cpnGs
5.014   திருநாவுக்கரசர்   தேவாரம்   பாசம் ஒன்று இலராய், பலபத்தர்கள்
திருக்குறுந்தொகை   (திருவிடைமருதூர் மருதீசர் நலமுலைநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=mriLYunU1fc
5.015   திருநாவுக்கரசர்   தேவாரம்   பறையின் ஓசையும் பாடலின் ஓசையும்
திருக்குறுந்தொகை   (திருவிடைமருதூர் மருதீசர் நலமுலைநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=uJFYBKLJhYo
5.016   திருநாவுக்கரசர்   தேவாரம்   மறையும் ஓதுவர்; மான்மறிக் கையினர்;
திருக்குறுந்தொகை   (திருப்பேரெயில் )
Audio: https://www.youtube.com/watch?v=wIi2_zDbzWc
5.017   திருநாவுக்கரசர்   தேவாரம்   முத்தினை, பவளத்தை, முளைத்த எம்
திருக்குறுந்தொகை   (திருவெண்ணியூர் வெண்ணிநாயகர் அழகியநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=Z2cFsRKbsJw
5.018   திருநாவுக்கரசர்   தேவாரம்   முற்றிலா முலையாள் இவள் ஆகிலும்,
திருக்குறுந்தொகை   (திருக்கடம்பந்துறை (குளித்தலை) )
Audio: https://www.youtube.com/watch?v=JV1NmqKXpHM
5.019   திருநாவுக்கரசர்   தேவாரம்   தளரும் கோள் அரவத்தொடு தண்மதி
திருக்குறுந்தொகை   (திருக்கடம்பூர் அமுதகடேசுவரர் சோதிமின்னம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=apt_My0HYZY
5.020   திருநாவுக்கரசர்   தேவாரம்   ஒருவராய் இரு மூவரும் ஆயவன்,
திருக்குறுந்தொகை   (திருக்கடம்பூர் அமுதகடேசுவரர் சோதிமின்னம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=1rmMXPsqTsg
5.021   திருநாவுக்கரசர்   தேவாரம்   என்னில் ஆரும் எனக்கு இனியார்
திருக்குறுந்தொகை   (திருஇன்னம்பர் எழுத்தறிந்தவீசுவரர் கொந்தார்பூங்குழலம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=qlYtrb5igBg
5.022   திருநாவுக்கரசர்   தேவாரம்   பூ வணத்தவன்; புண்ணியன்; நண்ணி
திருக்குறுந்தொகை   (திருகுடமூக்கு (கும்பகோணம்) கும்பேசுவரர் மங்களநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=RPv3ou9s8KE
5.023   திருநாவுக்கரசர்   தேவாரம்   கொடுங் கண் வெண்தலை கொண்டு,
திருக்குறுந்தொகை   (திருநின்றியூர் மகாலட்சுமியீசுவரர் உலகநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=0Tjzc5wDpvw
5.024   திருநாவுக்கரசர்   தேவாரம்   ஒற்றி ஊரும் ஒளி மதி,
திருக்குறுந்தொகை   (திருவொற்றியூர் மாணிக்கத்தியாகர் வடிவுடையம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=ILf86m1z6LE
5.025   திருநாவுக்கரசர்   தேவாரம்   முந்தி மூ எயில் எய்த
திருக்குறுந்தொகை   (திருப்பாசூர் பாசூர்நாதர் பசுபதிநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=kgw4ODPWiXA
5.026   திருநாவுக்கரசர்   தேவாரம்   காடு கொண்டு அரங்காக் கங்குல்வாய்க்
திருக்குறுந்தொகை   (திருவன்னியூர் )
Audio: https://www.youtube.com/watch?v=N30N2eDaGo4
5.027   திருநாவுக்கரசர்   தேவாரம்   சிந்தை வாய்தல் உளான், வந்து;
திருக்குறுந்தொகை   (திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=Q38qbY1GFEk
5.028   திருநாவுக்கரசர்   தேவாரம்   சிந்தை வண்ணத்தராய், திறம்பா வணம்
திருக்குறுந்தொகை   (திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=fykKEeVwUzI
5.029   திருநாவுக்கரசர்   தேவாரம்   நிறைக்க வாலியள் அல்லள், இந்
திருக்குறுந்தொகை   (திருவாவடுதுறை )
Audio: https://www.youtube.com/watch?v=9IAdluR7a9Y
5.030   திருநாவுக்கரசர்   தேவாரம்   கரப்பர், காலம் அடைந்தவர்தம் வினை;
திருக்குறுந்தொகை   (திருப்பராய்துறை திருப்பராய்த்துறைநாதர் பசும்பொன்மயிலம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=YohZYGl7318
5.031   திருநாவுக்கரசர்   தேவாரம்   கோனைக் காவிக் குளிர்ந்த மனத்தராய்த்
திருக்குறுந்தொகை   (திருவானைக்கா சம்புகேசுவரர் அகிலாண்டநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=lVYgztMvZH8
5.032   திருநாவுக்கரசர்   தேவாரம்   கொடி கொள் செல்வ விழாக்
திருக்குறுந்தொகை   (திருப்பூந்துருத்தி புஷ்பவனநாதர் அழகாலமர்ந்தநாயகி)
Audio: https://www.youtube.com/watch?v=MlvS1d5hqqg
5.034   திருநாவுக்கரசர்   தேவாரம்   கொல்லியான், குளிர் தூங்கு குற்றாலத்தான்,
திருக்குறுந்தொகை   (திருநெய்த்தானம் நெய்யாடியப்பர் வாலாம்பிகையம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=ENhJ98FOXU0
5.035   திருநாவுக்கரசர்   தேவாரம்   அருவனாய், அத்திஈர் உரி போர்த்து
திருக்குறுந்தொகை   (திருப்பழனம் ஆபத்சகாயர் பெரியநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=Im4-8Fy9JFc
5.036   திருநாவுக்கரசர்   தேவாரம்   கான் அறாத கடி பொழில்
திருக்குறுந்தொகை   (திருச்செம்பொன்பள்ளி வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி)
Audio: https://www.youtube.com/watch?v=I1IbDrUL2rE
5.037   திருநாவுக்கரசர்   தேவாரம்   மலைக் கொள் ஆனை மயக்கிய
திருக்குறுந்தொகை   (திருக்கடவூர் வீரட்டம் பிரமபுரீசுவரர் மலர்க்குழல்மின்னம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=b3bfnHioldc
5.038   திருநாவுக்கரசர்   தேவாரம்   குழை கொள் காதினர், கோவண
திருக்குறுந்தொகை   (திருக்கடவூர் மயானம் பிரமபுரீசுவரர் மலர்க்குழல்மின்னம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=Mr5xSIsFphI
5.039   திருநாவுக்கரசர்   தேவாரம்   கொள்ளும் காதன்மை பெய்து உறும்
திருக்குறுந்தொகை   (திருமயிலாடுதுறை மாயூரநாதர் அஞ்சநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=AZ8aI2Uy3XQ
5.040   திருநாவுக்கரசர்   தேவாரம்   வண்ணமும் வடிவும் சென்று கண்டிலள்;
திருக்குறுந்தொகை   (திருக்கழிப்பாலை பால்வண்ணநாதர் வேதநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=87fBc0v92JQ
5.041   திருநாவுக்கரசர்   தேவாரம்   உடையர் கோவணம், ஒன்றும் குறைவு
திருக்குறுந்தொகை   (திருப்பைஞ்ஞீலி நீலகண்டேசுவரர் விசாலாட்சியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=JaXkSXJzOX8
5.042   திருநாவுக்கரசர்   தேவாரம்   நன்று நாள்தொறும் நம் வினை
திருக்குறுந்தொகை   (திருவேட்களம் பாசுபதேசுவரர் நல்லநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=XxDlzhksrI0
5.043   திருநாவுக்கரசர்   தேவாரம்   கொல்லத்தான் நமனார் தமர் வந்தக்கால்,
திருக்குறுந்தொகை   (திருநல்லம் உமாமகேசுவரர் மங்களநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=X2PwqK7erCQ
5.044   திருநாவுக்கரசர்   தேவாரம்   மா மாத்து ஆகிய மால்
திருக்குறுந்தொகை   (திருவாமாத்தூர் அழகியநாதர் அழகியநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=WFDXm6GlCIw
5.045   திருநாவுக்கரசர்   தேவாரம்   மாது இயன்று மனைக்கு இரு!
திருக்குறுந்தொகை   (சீர்காழி தோணியப்பர் திருநிலைநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=B1I3DIEFzi4
5.046   திருநாவுக்கரசர்   தேவாரம்   துன்னக் கோவண, சுண்ணவெண் நீறு
திருக்குறுந்தொகை   (திருப்புகலூர் வர்த்தமானீசுவரர் கருந்தார்க்குழலியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=_vfLU6ETFzU
5.047   திருநாவுக்கரசர்   தேவாரம்   பண்டு செய்த பழவினையின் பயன்
திருக்குறுந்தொகை   (கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்) ஏகாம்பரநாதர் காமாட்சியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=0idJg6wLDtI
5.048   திருநாவுக்கரசர்   தேவாரம்   பூமேலானும் பூமகள் கேள்வனும் நாமே
திருக்குறுந்தொகை   (கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்) ஏகாம்பரநாதர் காமாட்சியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=jt6rjyXjRF8
5.049   திருநாவுக்கரசர்   தேவாரம்   பண் காட்டிப் படிஆய தன்
திருக்குறுந்தொகை   (திருவெண்காடு சுவேதாரணியேசுவரர் பிரமவித்தியாநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=O8oFU5IjueQ
5.050   திருநாவுக்கரசர்   தேவாரம்   எங்கே என்ன, இருந்த இடம்
திருக்குறுந்தொகை   (திருவாய்மூர் வாய்மூரீசுவரர் பாலினுநன்மொழியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=gP5OpbzqOs4
5.051   திருநாவுக்கரசர்   தேவாரம்   நீல மா மணிகண்டத்தர்; நீள்
திருக்குறுந்தொகை   (திருப்பாலைத்துறை பாலைவனநாதர் தவளவெண்ணகையம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=FhvymcfqvFA
5.052   திருநாவுக்கரசர்   தேவாரம்   நல்லர்; நல்லது ஓர் நாகம்
திருக்குறுந்தொகை   (திருநாகேச்சரம் செண்பகாரணியேசுவரர் குன்றமுலைநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=Yu4It1GWmPw
5.053   திருநாவுக்கரசர்   தேவாரம்   கோணல் மா மதி சூடி,
திருக்குறுந்தொகை   (திருவதிகை வீரட்டானம் வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி)
Audio: https://www.youtube.com/watch?v=orTB0gkFolM
5.054   திருநாவுக்கரசர்   தேவாரம்   எட்டு நாள்மலர் கொண்டு, அவன்
திருக்குறுந்தொகை   (திருவதிகை வீரட்டானம் வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி)
Audio: https://www.youtube.com/watch?v=Viq0DdV_HhQ
5.055   திருநாவுக்கரசர்   தேவாரம்   வீறு தான் உடை வெற்பன்
திருக்குறுந்தொகை   (திருநாரையூர் சௌந்தரேசர் திரிபுரசுந்தரியம்மை)
5.056   திருநாவுக்கரசர்   தேவாரம்   மைக் கொள் கண் உமை
திருக்குறுந்தொகை   (திருக்கோளிலி (திருக்குவளை) கோளிலியப்பர் வண்டமர்பூங்குழலம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=GTYoP7VldFQ
5.057   திருநாவுக்கரசர்   தேவாரம்   முன்னமே நினையா தொழிந்தேன், உனை;
திருக்குறுந்தொகை   (திருக்கோளிலி (திருக்குவளை) கோளிலியப்பர் வண்டமர்பூங்குழலம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=UkE2WK1Vh6M
5.058   திருநாவுக்கரசர்   தேவாரம்   தலை எலாம் பறிக்கும் சமண்கையர்
திருக்குறுந்தொகை   (திருப்பழையாறை வடதளி சோமேசுவரர் சோமகலாநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=7xesNMOZbZs
5.059   திருநாவுக்கரசர்   தேவாரம்   பொரும் ஆற்றின் படை வேண்டி,
திருக்குறுந்தொகை   (திருமாற்பேறு மால்வணங்குமீசர் கருணைநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=t4fuho-6aPw
5.060   திருநாவுக்கரசர்   தேவாரம்   ஏதும் ஒன்றும் அறிவு இலர்
திருக்குறுந்தொகை   (திருமாற்பேறு மால்வணங்குமீசர் கருணைநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=mvMHyNjAJWg
5.061   திருநாவுக்கரசர்   தேவாரம்   முத்து ஊரும் புனல் மொய்
திருக்குறுந்தொகை   (திருஅரிசிற்கரைப்புத்தூர் படிக்காசளித்தவீசுவரர் அழகம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=vZRglV02Emc
5.062   திருநாவுக்கரசர்   தேவாரம்   ஒருத்தனை, மூ உலகொடு தேவர்க்கும்
திருக்குறுந்தொகை   (திருக்கடுவாய்க்கரைப்புத்தூர் (ஆண்டான்கோவில்) சொர்ணபுரீசுவரர் சொர்ணபுரிநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=je0h4JOXJmk
5.063   திருநாவுக்கரசர்   தேவாரம்   இரங்கா வன் மனத்தார்கள் இயங்கும்
திருக்குறுந்தொகை   (திருத்தென்குரங்காடுதுறை குலைவணங்குநாதர் அழகுசடைமுடியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=HwPVfvSDzSI
5.064   திருநாவுக்கரசர்   தேவாரம்   வேழம்பத்து ஐவர் வேண்டிற்று வேண்டிப்
திருக்குறுந்தொகை   (திருக்கோழம்பம் கோகுலேசுவரர் சவுந்தரியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=-zwgm9vj5cU
5.065   திருநாவுக்கரசர்   தேவாரம்   பூவனூர்ப் புனிதன் திருநாமம்தான் நாவில்
திருக்குறுந்தொகை   (திருப்பூவனூர் புஷ்பவனநாதர் கற்பகவல்லியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=HCo_sta0KMM
5.066   திருநாவுக்கரசர்   தேவாரம்   ஓதம் ஆர் கடலின் விடம்
திருக்குறுந்தொகை   (திருவலஞ்சுழி காப்பகத்தீசுவரர் மங்களநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=FpoSOnE4LJw
5.067   திருநாவுக்கரசர்   தேவாரம்   படையும் பூதமும் பாம்பும் புல்வாய்
திருக்குறுந்தொகை   (திருவாஞ்சியம் வாஞ்சியநாதர் வாழவந்தநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=ovtRQxKv5ZE
5.068   திருநாவுக்கரசர்   தேவாரம்   உள் ஆறாதது ஓர் புண்டரிகத்திரள்,
திருக்குறுந்தொகை   (திருநள்ளாறு தெர்ப்பாரணியர் போகமார்த்தபூண்முலையம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=FlzPTAwnCQ4
5.069   திருநாவுக்கரசர்   தேவாரம்   மட்டு இட்ட(க்) குழலார் சுழலில்
திருக்குறுந்தொகை   (திருக்கருவிலிக்கொட்டிட்டை சற்குணநாதர் சர்வாங்கநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=0TIw1JgVkQw
5.070   திருநாவுக்கரசர்   தேவாரம்   கண்ட பேச்சினில் காளையர் தங்கள்
திருக்குறுந்தொகை   (திருக்கொண்டீச்சரம் பசுபதீசுவரர் சாந்தநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=Fs6i7rvUFuw
5.071   திருநாவுக்கரசர்   தேவாரம்   குசையும் அங்கையில் கோசமும் கொண்ட
திருக்குறுந்தொகை   (திருவிசயமங்கை விசயநாதேசுவரர் மங்கைநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=SotjI4uHrC4
5.072   திருநாவுக்கரசர்   தேவாரம்   வைத்த மாடும், மனைவியும், மக்கள்,
திருக்குறுந்தொகை   (திருநீலக்குடி நீலகண்டேசுவரர் நீலநிறவுமையம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=z5kYSXqsNYo
5.073   திருநாவுக்கரசர்   தேவாரம்   தங்கு அலப்பிய தக்கன் பெரு
திருக்குறுந்தொகை   (திருமங்கலக்குடி புராணவரதேசுவரர் மங்களநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=BJKSky-aB2U
5.074   திருநாவுக்கரசர்   தேவாரம்   விரும்பி ஊறு விடேல், மட
திருக்குறுந்தொகை   (திருவெறும்பூர் எறும்பீசுவரர் நறுங்குழல்நாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=7eauDoQUDPk
5.075   திருநாவுக்கரசர்   தேவாரம்   மரக் கொக்குஆம் என வாய்விட்டு
திருக்குறுந்தொகை   (திருக்குரக்குக்கா கொந்தளக்கருணைநாதர் கொந்தளநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=Ph5jvuLnL0Q
5.076   திருநாவுக்கரசர்   தேவாரம்   திருவின் நாதனும், செம்மலர் மேல்
திருக்குறுந்தொகை   (திருக்கானூர் செம்மேனிநாயகர் சிவயோகநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=ydwTP_2V-es
5.077   திருநாவுக்கரசர்   தேவாரம்   பூரியா வரும், புண்ணியம்; பொய்
திருக்குறுந்தொகை   (திருச்சேறை (உடையார்கோவில்) சென்னெறியப்பர் ஞானவல்லியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=lrthL1RMyoY
5.078   திருநாவுக்கரசர்   தேவாரம்   சங்கு உலாம் முன்கைத் தையல்
திருக்குறுந்தொகை   (திருக்கோடி (கோடிக்கரை) கோடீசுவரர் வடிவாம்பிகையம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=mJZCB9wqOjk
5.079   திருநாவுக்கரசர்   தேவாரம்   வெள் எருக்கு அரவம் விரவும்
திருக்குறுந்தொகை   (திருப்புள்ளிருக்குவேளூர் (வைத்தீச்சுரன்கோவில்) வைத்தியநாதர் தையல்நாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=G6TTQDrlJCU
5.080   திருநாவுக்கரசர்   தேவாரம்   வானம் சேர் மதி சூடிய
திருக்குறுந்தொகை   (திருஅன்பில் ஆலந்துறை சத்திவாகீசர் சவுந்தரநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=w9O2L8OtDVo
5.081   திருநாவுக்கரசர்   தேவாரம்   சிட்டனை, சிவனை, செழுஞ்சோதியை, அட்டமூர்த்தியை,
திருக்குறுந்தொகை   (திருப்பாண்டிக்கொடுமுடி கொடுமுடிநாதேசுவரர் பண்மொழியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=05urhAg14Dg
5.082   திருநாவுக்கரசர்   தேவாரம்   விண்ட மா மலர் கொண்டு
திருக்குறுந்தொகை   (திருவான்மியூர் மருந்தீசுவரர் சுந்தரமாது (அ) சொக்கநாயகி)
Audio: https://www.youtube.com/watch?v=HxzGOdDxr18
5.083   திருநாவுக்கரசர்   தேவாரம்   பாணத்தால் மதில் மூன்றும் எரித்தவன்;
திருக்குறுந்தொகை   (திருநாகைக்காரோணம் (நாகப்பட்டினம்) காயாரோகணேசுவரர் நீலாயதாட்சியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=bTyC-7PmnsI
5.084   திருநாவுக்கரசர்   தேவாரம்   மாட்டுப் பள்ளி மகிழ்ந்து உறைவீர்க்கு
திருக்குறுந்தொகை   (மேலைத்திருக்காட்டுப்பள்ளி ஆரணியசுந்தரர் அகிலாண்டநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=Nvcv2kY9x6c
5.085   திருநாவுக்கரசர்   தேவாரம்   மட்டு வார்குழலாளொடு மால்விடை இட்டமா
திருக்குறுந்தொகை   (திருச்சிராப்பள்ளி தாயுமானேசுவரர் மட்டுவார்குழலம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=n9abER-qR0M
5.086   திருநாவுக்கரசர்   தேவாரம்   காலபாசம் பிடித்து எழு தூதுவர்,
திருக்குறுந்தொகை   (திருவாட்போக்கி (ரத்னகிரி) இரத்தினகிரீசுவரர் சுரும்பார்குழலம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=-AD6BgYTFHM
5.087   திருநாவுக்கரசர்   தேவாரம்   பட்டம் நெற்றியர்; பாய் புலித்தோலினர்;
திருக்குறுந்தொகை   (எதிர்கொள்பாடி (மேலைத்திருமணஞ்சேரி) மணவாளநாயகர் யாழ்மொழியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=PAXv1MaV-14
5.088   திருநாவுக்கரசர்   தேவாரம்   பெருகல் ஆம், தவம்; பேதைமை
திருக்குறுந்தொகை   (திருமருகல் மாணிக்கவண்ணர் வண்டுவார்குழலி)
Audio: https://www.youtube.com/watch?v=ya_VWVJgL_Y
5.089   திருநாவுக்கரசர்   தேவாரம்   ஒன்று வெண்பிறைக்கண்ணி; ஓர் கோவணம்;
திருக்குறுந்தொகை   (பொது -தனித் திருக்குறுந்தொகை )
Audio: https://www.youtube.com/watch?v=n2pq1VKybbE
5.090   திருநாவுக்கரசர்   தேவாரம்   மாசு இல் வீணையும், மாலை
திருக்குறுந்தொகை   (பொது -தனித் திருக்குறுந்தொகை )
Audio: https://www.youtube.com/watch?v=J7MfBAIcQ04
5.091   திருநாவுக்கரசர்   தேவாரம்   ஏ இலானை, என் இச்சை
திருக்குறுந்தொகை   (பொது -தனித் திருக்குறுந்தொகை )
Audio: https://www.youtube.com/watch?v=XxaVOKR-ShI
5.092   திருநாவுக்கரசர்   தேவாரம்   கண்டு கொள்ள(அ) அரியானைக் கனிவித்துப்
திருக்குறுந்தொகை   (பொது -காலபாசத் திருக்குறுந்தொகை )
Audio: https://www.youtube.com/watch?v=B9FQAcbnw-g
5.093   திருநாவுக்கரசர்   தேவாரம்   காசனை, கனலை, கதிர் மா
திருக்குறுந்தொகை   (பொது -மறக்கிற்பனே திருக்குறுந்தொகை )
Audio: https://www.youtube.com/watch?v=c2WcT__hjhA
5.094   திருநாவுக்கரசர்   தேவாரம்   அண்டத்தானை, அமரர் தொழப்படும் பண்டத்தானை,
திருக்குறுந்தொகை   (தொழற்பாலதே திருக்குறுந்தொகை )
Audio: https://www.youtube.com/watch?v=nxL821I7nZA
5.095   திருநாவுக்கரசர்   தேவாரம்   புக்கு அணைந்து புரிந்து அலர்
திருக்குறுந்தொகை   (பொது -இலிங்கபுராணம் திருக்குறுந்தொகை )
Audio: https://www.youtube.com/watch?v=WI0HX_u-5aU
5.096   திருநாவுக்கரசர்   தேவாரம்   பொன் உள்ளத் திரள் புன்சடையின்
திருக்குறுந்தொகை   (பொது -மனத்தொகை திருக்குறுந்தொகை )
Audio: https://www.youtube.com/watch?v=SaeKB96LR80
5.097   திருநாவுக்கரசர்   தேவாரம்   சிந்திப்பார் மனத்தான், சிவன், செஞ்சுடர்
திருக்குறுந்தொகை   (பொது -சித்தத்தொகை திருக்குறுந்தொகை )
Audio: https://www.youtube.com/watch?v=HlK5Udb1OqY
5.098   திருநாவுக்கரசர்   தேவாரம்   நீறு அலைத்தது ஓர் மேனி,
திருக்குறுந்தொகை   (பொது -உள்ளத் திருக்குறுந்தொகை )
Audio: https://www.youtube.com/watch?v=mbZXQYi281U
5.099   திருநாவுக்கரசர்   தேவாரம்   பாவமும் பழி பற்று அற
திருக்குறுந்தொகை   (பொது -பாவநாசத் திருக்குறுந்தொகை )
Audio: https://www.youtube.com/watch?v=VY4akPi1XfY
5.100   திருநாவுக்கரசர்   தேவாரம்   வேத நாயகன்; வேதியர் நாயகன்;மாதின்
திருக்குறுந்தொகை   (பொது -ஆதிபுராணத் திருக்குறுந்தொகை )
Audio: https://www.youtube.com/watch?v=lk4SHPhE4ng

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5.002   பனைக்கை மும்மத வேழம் உரித்தவன்,  
பண் - திருக்குறுந்தொகை   (திருத்தலம் கோயில் (சிதம்பரம்) ; (திருத்தலம் அருள்தரு சிவகாமியம்மை உடனுறை அருள்மிகு திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் திருவடிகள் போற்றி )
அன்னம் பாலிக்கும் என்று தொடங்கும் பதிகத்தையும் பாடிய பின்னர், அருகில் இருக்கும் வேட்களம், கழிப்பாலை ஆகிய தலங்களில் உள்ள இறைவனை வழிபட்டு, பதிகங்கள் அருளிய பின்னர் மறுபடியும் தில்லைக் கூத்தனைக் காண ஆர்வம் கொண்டார். கழிப்பாலைத் தலத்திலிருந்து தில்லை வரும் வழியில், தில்லைப் பெருமானை மறந்து வாழ்வினில் உய்வினை அடைய முடியாது என்ற பொருள் படும் இந்த பதிகத்தைப் பாடியவாறே தில்லை வந்து சேர்கின்றார்.
பனைக்கை மும்மத வேழம் உரித்தவன்,
நினைப்பவர் மனம் கோயிலாக் கொண்டவன்,
அனைத்து வேடம் ஆம் அம்பலக் கூத்தனை,
தினைத்தனைப் பொழுதும் மறந்து உய்வனோ?

[1]
தீர்த்தனை, சிவனை, சிவலோகனை,
மூர்த்தியை, முதல் ஆய ஒருவனை,
பார்த்தனுக்கு அருள்செய்த சிற்றம்பலக்
கூத்தனை, கொடியேன் மறந்து உய்வனோ?

[2]
கட்டும் பாம்பும், கபாலம், கை மான்மறி,
இட்டம் ஆய் இடுகாட்டு எரி ஆடுவான்,
சிட்டர் வாழ் தில்லை அம்பலக் கூத்தனை,
எள்-தனைப் பொழுதும் மறந்து உய்வனோ?

[3]
மாணி பால் கறந்து ஆட்டி வழிபட
நீண் உலகுஎலாம் ஆளக் கொடுத்த என்
ஆணியை, செம்பொன் அம்பலத்துள்-நின்ற
தாணுவை, தமியேன் மறந்து உய்வனோ?

[4]
பித்தனை, பெருங்காடு அரங்கா உடை
முத்தனை, முளைவெண் மதி சூடியை,
சித்தனை, செம்பொன் அம்பலத்துள்-நின்ற
அத்தனை, அடியேன் மறந்து உய்வனோ?

[5]
நீதியை, நிறைவை, மறைநான்கு உடன்
ஓதியை, ஒருவர்க்கும் அறிவு ஒணாச்
சோதியை, சுடர்ச் செம்பொனின் அம்பலத்து
ஆதியை, அடியேன் மறந்து உய்வனோ?

[6]
மை கொள் கண்டன், எண் தோளன், முக்கண்ணினன்,
பை கொள் பாம்பு அரை ஆர்த்த பரமனார்,
செய்யமாது உறை சிற்றம்பலத்து எங்கள்
ஐயனை, அடியேன் மறந்து உய்வனோ?

[7]
முழுதும் வான் உலகத்து உள தேவர்கள்
தொழுதும் போற்றியும் தூய செம்பொன்னினால்
எழுதி மேய்ந்த சிற்றம்பலக் கூத்தனை,
இழுதையேன் மறந்து எங்ஙனம் உய்வனோ?

[8]
கார் உலாம் மலர்க்கொன்றை அம்தாரனை,
வார் உலாம் முலை மங்கை மணாளனை,
தேர் உலாவிய தில்லையுள் கூத்தனை,
ஆர்கிலா அமுதை, மறந்து உய்வனோ?

[9]
ஓங்கு மால்வரை ஏந்தல் உற்றான் சிரம்
வீங்கி விம்முற ஊன்றிய தாளினான்,
தேங்கு நீர் வயல் சூழ் தில்லைக் கூத்தனை,
பாங்கு இலாத் தொண்டனேன் மறந்து உய்வனோ?

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5.003   கடவுளை, கடலுள்(ள்) எழு நஞ்சு  
பண் - திருக்குறுந்தொகை   (திருத்தலம் திருநெல்வாயில் அரத்துறை ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
இந்நாளில் பெண்ணாகடம் என்று அழைக்கப்படும் தலம், பண்டைய நாளில் கடந்தை என்றும் அங்குள்ள கோயில் தூங்கானை மாடம் என்று அழைக்கப்பட்டது. இந்த தலத்தில் உறையும் சுடர்க்கொழுந்து நாதரைப் பணிந்த அப்பர் பிரான், தனது உடலில் இலச்சினைகள் பதித்து, சமணர்களுடன் தொடர்பு கொண்டிருந்த தனது உடலினைத் தூய்மையாக மாற்ற வேண்டும் என்று வேண்டினார். பெருமானும், அப்பர் பிரானின் வேண்டுகோளை நிறைவேற்றும் வண்ணம், மூவிலைச் சூலம் மற்றும் இடபத்தின் இலச்சினைகளை அப்பர் பிரானது தோள்களில் பொறிப்பதற்கு ஏற்பாடு செய்தார். பெருமானின் கட்டளைப் படி ஒரு பூதம், எவரும் அறியாத வண்ணம், மேற்கூறிய இரண்டு இலச்சினைகளையும், அப்பர் பிரானின் தோள்களில் பொறித்தது. இதனால் மிகவும் மனம் மகிழ்ந்த அப்பர் பிரான், சில நாட்கள் இந்த தலத்தில் திருத்தொண்டுகள் புரிந்த பின்னர், அருகிலிருக்கும் நெல்வாயில் அரத்துறை, மற்றும் முதுகுன்றம் ஆகிய தலங்களுக்கு சென்றார்.
கடந்த கால துயற சம்பவங்களில் இருந்து மீள
கடவுளை, கடலுள்(ள்) எழு நஞ்சு உண்ட
உடல் உளானை, ஒப்பாரி இலாத எம்
அடல் உளானை, அரத்துறை மேவிய
சுடர் உளானை,-கண்டீர்-நாம் தொழுவதே.

[1]
கரும்பு ஒப்பானை, கரும்பினில் கட்டியை,
விரும்பு ஒப்பானை, விண்ணோரும் அறிகிலா
அரும்பு ஒப்பானை, அரத்துறை மேவிய
சுரும்பு ஒப்பானை, - கண்டீர்-நாம் தொழுவதே.

[2]
ஏறு ஒப்பானை, எல்லா உயிர்க்கும்(ம்) இறை
வேறு ஒப்பானை, விண்ணோரும் அறிகிலா
ஆறு ஒப்பானை, அரத்துறை மேவிய
ஊறு ஒப்பானை,-கண்டீர்-நாம் தொழுவதே.

[3]
பரப்பு ஒப்பானை, பகல் இருள் நன்நிலா
இரப்பு ஒப்பானை, இளமதி சூடிய
அரப்பு ஒப்பானை, அரத்துறை மேவிய
சுரப்பு ஒப்பானை,-கண்டீர்-நாம் தொழுவதே.

[4]
நெய் ஒப்பானை, நெய்யில் சுடர் போல்வது ஓர்
மெய் ஒப்பானை,-விண்ணோரும் அறிகிலார்-
ஐ ஒப்பானை, அரத்துறை மேவிய
கை ஒப்பானை,-கண்டீர்-நாம் தொழுவதே.

[5]
நிதி ஒப்பானை, நிதியின் கிழவனை,
விதி ஒப்பானை,-விண்ணோரும் அறிகிலார்-
அதி ஒப்பானை, அரத்துறை மேவிய
கதி ஒப்பானை,-கண்டீர்-நாம் தொழுவதே.

[6]
புனல் ஒப்பானை, பொருந்தலர் தம்மையே
மினல் ஒப்பானை,-விண்ணோரும் அறிகிலார்-
அனல் ஒப்பானை,- அரத்துறை மேவிய
கனல் ஒப்பானை, - கண்டீர்-நாம் தொழுவதே.

[7]
பொன் ஒப்பானை, பொன்னில் சுடர் போல்வது ஓர்
மின் ஒப்பானை,-விண்ணோரும் அறிகிலார்-
அன் ஒப்பானை, அரத்துறை மேவிய
தன் ஒப்பானை, - கண்டீர்- நாம் தொழுவதே.

[8]
காழியானை, கன விடை ஊரும் மெய்
வாழியானை, வல்லோரும் என்ற இன்னவர்
ஆழியான் பிரமற்கும் அரத்துறை
ஊழியானை, கண்டீர்- நாம் தொழுவதே.

[9]
கலை ஒப்பானை, கற்றார்க்கு ஓர் அமுதினை,
மலை ஒப்பானை, மணி முடி ஊன்றிய
அலை ஒப்பானை, அரத்துறை மேவிய
நிலை ஒப்பானை,-கண்டீர்-நாம் தொழுவதே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5.004   வட்டனை(ம்), மதிசூடியை, வானவர்- சிட்டனை,  
பண் - திருக்குறுந்தொகை   (திருத்தலம் திருவண்ணாமலை ; (திருத்தலம் அருள்தரு உண்ணாமுலையம்மை உடனுறை அருள்மிகு அருணாசலேசுவரர் திருவடிகள் போற்றி )
இந்த பதிகத்தின் முதல் ஒன்பது பாடல்களிலும் திரிபுரங்கள் எரித்த செய்தி குறிப்பிடப் படுவது இந்த பதிகத்தின் தனிச் சிறப்பு. நினைத்தால் முக்தி தரும் தலம் என்று அண்ணாமலையை குறிப்பிடுவார்கள். அதனை உணர்த்தும் வண்ணம், இந்த பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும், அண்ணாமலை அண்ணலை அடியேன் மறந்து உய்வினை அடைவேனோ என்று அப்பர் பிரான் கூறுகின்றார். பெருமானை எப்போதும் நினைத்தே தனது வாழ்க்கையின் இறுதி பகுதியை கழித்தவர் அப்பர் பிரான். எனவே இந்த அறிவுரை அவருக்கு தேவையான அறிவுரை அல்ல. தன்னைச் சுட்டிக் காட்டி நமக்கு அறிவுரை கூறும் பதிகம் இந்த பதிகம். பெருமானை நினைக்க மறந்தால் நீங்கள் உய்வினை அடைய மாட்டீர்கள் என்று நமக்கு உணர்த்தி, பெருமானை நினைத்து அவனைப் பணிய வேண்டிய அவசியத்தை நமக்கு அப்பர் பிரான் இந்த பதிகத்தின் மூலம் உணர்த்துகின்றார்.
வட்டனை(ம்), மதிசூடியை, வானவர்-
சிட்டனை, திரு அண்ணாமலையனை,
இட்டனை, இகழ்ந்தார் புரம்மூன்றையும்
அட்டனை,-அடியேன் மறந்து உய்வனோ?

[1]
வானனை(ம்), மதி சூடிய மைந்தனை,
தேனனை, திரு அண்ணாமலையனை,
ஏனனை, இகழ்ந்தார் புரம்மூன்று எய்த
ஆனனை,-அடியேன் மறந்து உய்வனோ?

[2]
மத்தனை(ம்), மதயானை உரித்த எம்
சித்தனை, திரு அண்ணாமலையனை,
முத்தனை(ம்), முனிந்தார் புரம்மூன்று எய்த
அத்தனை,-அடியேன் மறந்து உய்வனோ?

[3]
காற்றனை, கலக்கும் வினை போய் அறத்
தேற்றனை, திரு அண்ணாமலையனை,
கூற்றனை, கொடியார் புரம்மூன்று எய்த
ஆற்றனை,-அடியேன் மறந்து உய்வனோ?

[4]
மின்னனை, வினை தீர்த்து எனை ஆட்கொண்ட
தென்னனை, திரு அண்ணாமலையனை,
என்னனை, இகழ்ந்தார் புரம்மூன்று எய்த
அன்னனை,-அடியேன் மறந்து உய்வனோ?

[5]
மன்றனை(ம்), மதியாதவன் வேள்விமேல்
சென்றனை, திரு அண்ணாமலையனை,
வென்றனை, வெகுண்டார் புரம்மூன்றையும்
கொன்றனை, கொடியேன் மறந்து உய்வனோ?

[6]
வீரனை, விடம் உண்டனை, விண்ணவர்-
தீரனை, திரு அண்ணாமலையனை,
ஊரனை, உணரார் புரம் மூன்று எய்த
ஆரனை,-அடியேன் மறந்து உய்வனோ?

[7]
கருவினை, கடல்வாய் விடம் உண்ட எம்
திருவினை, திரு அண்ணாமலையனை,
உருவினை, உணரார் புரம் மூன்று எய்த
அருவினை,-அடியேன் மறந்து உய்வனோ?

[8]
அருத்தனை, அரவு ஐந்தலை நாகத்தைத்
திருத்தனை, திரு அண்ணாமலையனை,
கருத்தனை, கடியார் புரம்மூன்று எய்த
வருத்தனை,-அடியேன் மறந்து உய்வனோ?

[9]
அரக்கனை அலற(வ்) விரல் ஊன்றிய
திருத்தனை, திரு அண்ணாமலையனை,
இரக்கம் ஆய் என் உடல் உறு நோய்களைத்
துரக்கனை,-தொண்டனேன் மறந்து உய்வனோ?

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5.005   பட்டி ஏறு உகந்து ஏறி,  
பண் - திருக்குறுந்தொகை   (திருத்தலம் திருவண்ணாமலை ; (திருத்தலம் அருள்தரு உண்ணாமுலையம்மை உடனுறை அருள்மிகு அருணாசலேசுவரர் திருவடிகள் போற்றி )
பட்டி ஏறு உகந்து ஏறி, பல இலம்
இட்டம் ஆக இரந்து உண்டு, உழிதரும்
அட்டமூர்த்தி அண்ணாமலை கைதொழக்
கெட்டுப் போம், வினை; கேடு இல்லை; காண்மினே!

[1]
பெற்றம் ஏறுவர், பெய் பலிக்கு ஏன்று அவர்;
சுற்றமா மிகு தொல் புகழாளொடும்
அற்றம் தீர்க்கும் அண்ணாமலை கைதொழ
நல்-தவத்தொடு ஞானத்து இருப்பரே.

[2]
பல் இல் ஓடு கை ஏந்திப் பல இலம்
ஒல்லை சென்று உணங்கல் கவர்வார் அவர்,
அல்லல் தீர்க்கும், அண்ணாமலை கைதொழ
நல்லஆயின நம்மை அடையுமே.

[3]
பாடிச் சென்று பலிக்கு என்று நின்றவர்
ஓடிப் போயினர்; செய்வது ஒன்று என்கொலோ?
ஆடிப் பாடி அண்ணாமலை கைதொழ
ஓடிப் போகும், நம் மேலை வினைகளே.

[4]
தேடிச் சென்று திருந்து அடி ஏத்துமின்!
நாடி வந்து அவர் நம்மையும் ஆட்கொள்வர்;
ஆடிப் பாடி அண்ணாமலை கைதொழ
ஓடிப் போம், நமது உள்ள வினைகளே.

[5]
கட்டி ஒக்கும், கரும்பின் இடை; துணி
வெட்டி வீணைகள் பாடும் விகிர்தனார்,
அட்டமூர்த்தி, அண்ணாமலை மேவிய
நட்டம் ஆடியை, நண்ண நன்கு ஆகுமே.

[6]
கோணிக் கொண்டையர் வேடம் முன் கொண்டவர்,
பாணி நட்டங்கள் ஆடும் பரமனார்,
ஆணிப் பொன்னின், அண்ணாமலை கைதொழப்
பேணி நின்ற பெருவினை போகுமே.

[7]
கண்டம்தான் கறுத்தான், காலன் ஆர் உயிர்
பண்டு கால்கொடு பாய்ந்த பரமனார்,
அண்டத்து ஓங்கும் அண்ணாமலை கைதொழ
விண்டு போகும், நம் மேலைவினைகளே.

[8]
முந்திச் சென்று முப்போதும் வணங்குமின்,
அந்திவாய் ஒளியான் தன் அண்ணாமலை!
சிந்தியா எழுவார் வினை தீர்த்திடும்,
கந்தமாமலர் சூடும் கருத்தனே.

[9]
மறையினானொடு மாலவன் காண்கிலா
நிறையும் நீர்மையுள் நின்று அருள்செய்தவன்
உறையும் மாண்பின் அண்ணாமலை கைதொழப்
பறையும், நாம் செய்த பாவங்கள் ஆனவே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5.006   எப்போதும்(ம்) இறையும் மறவாது, நீர்;  
பண் - திருக்குறுந்தொகை   (திருத்தலம் திருவாரூர் ; (திருத்தலம் அருள்தரு கரும்பனையாளம்மை உடனுறை அருள்மிகு முல்லைவனேசுவரர் திருவடிகள் போற்றி )
எப்போதும்(ம்) இறையும் மறவாது, நீர்;
முப்போதும் பிரமன் தொழ நின்றவன்,
செப்பு ஓதும் பொனின் மேனிச் சிவன் அவன்,
அப் போதைக்கு, அஞ்சல்! என்னும்-ஆரூரனே.

[1]
சடையின் மேலும் ஓர் தையலை வைத்தவர்,
அடைகிலா அரவை அரை ஆர்த்தவர்,
படையின் நேர் தடங்கண் உமை பாகமா
அடைவர்போல், இடுகாடர்-ஆரூரரே.

[2]
விண்ட வெண்தலையே கலன் ஆகவே
கொண்டு அகம் பலி தேரும் குழகனார்;
துண்டவெண்பிறை வைத்த இறையவர்
அண்டவாணர்க்கு அருளும் ஆரூரரே.

[3]
விடையும் ஏறுவர்; வெண் தலையில் பலி
கடைகள் தோறும் திரியும் எம் கண்ணுதல்;
உடையும் சீரை; உறைவது காட்டுஇடை;
அடைவர்போல், அரங்குஆக; ஆரூரரே.

[4]
துளைக்கைவேழத்து உரி உடல் போர்த்தவர்;
வளைக்கையாளை ஓர்பாகம் மகிழ்வு எய்தி
திளைக்கும் திங்கள் சடையின்திசைமுழுது
அளக்கும் சிந்தையர் போலும்-ஆரூரரே.

[5]
பண்ணின் இன்மொழியாளை ஓர்பாகமா,
விண்ணின் ஆர் விளங்கும் மதி சூடியே,
சுண்ண-நீறு மெய்ப் பூசி, சுடலையின்
அண்ணி ஆடுவர்போலும்-ஆரூரரே.

[6]
மட்டு வார் குழலாளொடு மால்விடை
இட்டமா உகந்து ஏறும் இறைவனார்-
கட்டுவாங்கம், கனல், மழு, மான் தனோடு,
அட்டம் ஆம் புயம் ஆகும் ஆரூரரே.

[7]
தேய்ந்த திங்கள் கமழ் சடையன்; கனல்
ஏந்தி எல்லியுள் ஆடும் இறைவனார்;
காய்ந்து காமனை நோக்கின கண்ணினார்
ஆய்ந்த நால்மறை ஓதும் ஆரூரரே.

[8]
உண்டு நஞ்சு கண்டத்துள் அடக்கி, அங்கு
இண்டை செஞ்சடை வைத்த இயல்பினான்;
கொண்ட கோவண ஆடையன்கூர் எரி
அண்டவாணர் அடையும் ஆரூரரே.

[9]
மாலும் நான்முகனும்(ம்) அறிகிற்கிலார்;
காலன் ஆய அவனைக் கடந்திட்டுச்
சூலம் மான்மறி ஏந்திய கையினார்
ஆலம் உண்டு அழகு ஆய ஆரூரரே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5.007   கொக்கரை, குழல், வீணை, கொடுகொட்டி,  
பண் - திருக்குறுந்தொகை   (திருத்தலம் திருவாரூர் ; (திருத்தலம் அருள்தரு கரும்பனையாளம்மை உடனுறை அருள்மிகு முல்லைவனேசுவரர் திருவடிகள் போற்றி )
கொக்கரை, குழல், வீணை, கொடுகொட்டி,
பக்கமே பகுவாயன பூதங்கள்
ஒக்க ஆடல் உகந்து உடன் கூத்தராய்,
அக்கினோடு அரவு ஆர்ப்பர் - ஆரூரரே.

[1]
எந்த மா தவம் செய்தனை, நெஞ்சமே!-
பந்தம் வீடு அவை ஆய பராபரன்
அந்தம் இல் புகழ் ஆரூர் அரநெறி
சிந்தையுள்ளும் சிரத்துள்ளும் தங்கவே?

[2]
வண்டு உலாம் மலர்கொண்டு வளர்சடைக்கு
இண்டைமாலை புனைந்தும், இராப்பகல்
தொண்டர் ஆகி, தொடர்ந்து விடாதவர்க்கு
அண்டம் ஆளவும் வைப்பர்-ஆரூரரே.

[3]
துன்பு எலாம் அற நீங்கிச் சுபத்தராய்,
என்பு எலாம் நெக்கு, இராப்பகல் ஏத்தி நின்று,
இன்பராய் நினைந்து, என்றும் இடை அறா
அன்பர் ஆமவர்க்கு அன்பர்-ஆரூரரே.

[4]
முருட்டு மெத்தையில் முன் கிடத்தாமுனம்,
அரட்டர் ஐவரை ஆசு அறுத்திட்டு, நீர்,
முரண்-தடித்த அத் தக்கன் தன் வேள்வியை
அரட்டு அடக்கிதன் ஆரூர் அடைமினே!

[5]
எம் ஐயார் இலை; யானும் உளேன் அலேன்;
எம்மை யாரும் இது செய வல்லரே?
அம்மை யார், எனக்கு? என்று என்று அரற்றினேற்கு
அம்மை ஆரத் தந்தார், ஆரூர் ஐயரே.

[6]
தண்ட ஆளியை, தக்கன் தன் வேள்வியை,-
செண்டு அது ஆடிய தேவரகண்டனை,
கண்டு கண்டு இவள் காதலித்து அன்பு அது ஆய்க்
கொண்டி ஆயின ஆறு, என் தன் கோதையே!

[7]
இவள் நமைப் பல பேசத் தொடங்கினாள்;
அவணம் அன்று எனில், ஆரூர் அரன் எனும்;
பவனி வீதி விடங்கனைக் கண்டு இவள்,
தவனி ஆயின ஆறு, என் தன் தையலே!

[8]
நீரைச் செஞ்சடை வைத்த நிமலனார்,
கார் ஒத்த(ம்) மிடற்றர், கனல் வாய் அரா-
ஆரத்தர், உறையும்(ம்) அணி ஆரூரைத்
தூரத்தே தொழுவார் வினை தூளியே.

[9]
உள்ளமே! ஒன்று உறுதி உரைப்பன், நான்:
வெள்ளம் தாங்கும் விரிசடை வேதியன்,
அள்ளல் நீர் வயல் ஆரூர் அமர்ந்த எம்
வள்ளல், சேவடி வாழ்த்தி வணங்கிடே!

[10]
விண்ட மா மலர்மேல் உறைவானொடும்
கொண்டல் வண்ணனும் கூடி அறிகிலா
அண்டவாணன்தன் ஆரூர் அடி தொழப்
பண்டை வல்வினை நில்லா, பறையுமே.

[11]
மை உலாவிய கண்டத்தன், அண்டத்தன்,
கை உலாவிய சூலத்தன், கண்ணுதல்,
ஐயன், ஆரூர் அடி தொழுவார்க்கு எலாம்
உய்யல் ஆம்; அல்லல் ஒன்று இலை; காண்மினே!

[12]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5.008   பாறு அலைத்த படுவெண் தலையினன்;  
பண் - திருக்குறுந்தொகை   (திருத்தலம் திருஅன்னியூர் (பொன்னூர்) ; (திருத்தலம் அருள்தரு பெரியநாயகியம்மை உடனுறை அருள்மிகு ஆபத்சகாயர் திருவடிகள் போற்றி )
அன்னியூர் என்று தேவாரப் பதிகங்களில் அழைக்கப்பட்ட இந்த தலம், இந்நாளில் அன்னூர் என்றும் பொன்னூர் என்றும் அழைக்கப்படுகின்றது. மயிலாடுதுறை மணல்மேடு பாதையில், மயிலாடுதுறைக்கு வடகிழக்கே எட்டு கி.மீ. தூரத்தில் உள்ள தலம். அப்பர் பிரான் அன்னியூர் சென்றதாக பெரிய புராண குறிப்பு ஏதும் இல்லை. அப்பர் பிரான் கயிலாயம் தவிர்த்த மற்ற அனைத்து தலங்களின் மீது அருளிய பதிகங்களை, அந்தந்த தலங்களுக்கு சென்று பாடினார் என்பதாலும், இந்த தலத்தின் மீது அப்பர் பிரான் அருளிய பாடல் கிடைத்திருப்பதால், அவர் அருகில் உள்ள பந்தணைநல்லூர் முதலிய தலங்களுக்கு சென்ற போது இங்கும் சென்றிருக்க வேண்டும்
பாறு அலைத்த படுவெண் தலையினன்;
நீறு அலைத்த செம்மேனியன் நேரிழை
கூறு அலைத்த மெய், கோள் அரவு ஆட்டிய,
ஆறு அலைத்த சடை, அன்னியூரனே.

[1]
பண்டு ஒத்த(ம்) மொழியாளை ஓர்பாகம் ஆய்,
இண்டைச் செஞ்சடையன்(ன்); இருள் சேர்ந்தது ஓர்
கண்டத்தன்; கரியின்(ன்) உரி போர்த்தவன்;
அண்டத்து அப் புறத்தான் அன்னியூரனே.

[2]
பரவி நாளும் பணிந்தவர்தம் வினை
துரவை ஆகத் துடைப்பவர்தம் இடம்,
குரவம் நாறும் குழல் உமை கூறராய்
அரவம் ஆட்டுவர்போல், அன்னியூரரே.

[3]
வேதகீதர்; விண்ணோர்க்கும் உயர்ந்தவர்;
சோதி வெண்பிறை துன்று சடைக்கு அணி
நாதர்; நீதியினால் அடியார் தமக்கு
ஆதி ஆகி நின்றார்-அன்னியூரரே.

[4]
எம்பிரான்; இமையோர்கள் தமக்கு எலாம்
இன்பர் ஆகி இருந்த எம் ஈசனார்;
துன்ப வல்வினை போகத் தொழுமவர்க்கு
அன்பர் ஆகி நின்றார்-அன்னியூரரே.

[5]
வெந்த நீறு மெய் பூசும் நல் மேனியர்;
கந்தமாமலர் சூடும் கருத்தினர்;
சிந்தை ஆர் சிவனார்; செய்யதீவண்ணர்;
அந்தணாளர் கண்டீர்-அன்னியூரரே.

[6]
ஊனை ஆர் தலையில் பலி கொண்டு உழல்-
வானை; வானவர்தாங்கள் வணங்கவே,
தேனை ஆர் குழலாளை ஓர்பாகமா,
ஆனைஈர் உரியார்-அன்னியூரரே.

[7]
காலை போய்ப் பலி தேர்வர்; கண்ணார், நெற்றி;
மேலைவானவர் வந்து விரும்பிய,
சோலை சூழ் புறங்காடு அரங்கு ஆகவே,
ஆலின்கீழ் அறத்தார்-அன்னியூரரே.

[8]
எரி கொள் மேனியர்; என்பு அணிந்து இன்பராய்த்
திரியும் மூ எயில் தீ எழச் செற்றவர்;
கரிய மாலொடு, நான்முகன், காண்பதற்கு
அரியர் ஆகி நின்றார்-அன்னியூரரே.

[9]
வஞ்ச(அ)அரக்கன் கரமும்-சிரத்தொடும்-
அஞ்சும் அஞ்சும் ஓர் ஆறும் நான்கும்(ம்) இற,
பஞ்சின் மெல்விரலால் அடர்த்து, ஆயிழை,
அஞ்சல் அஞ்சல்! என்றார்-அன்னியூரரே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5.009   ஓதம் மால் கடல் பரவி  
பண் - திருக்குறுந்தொகை   (திருத்தலம் திருமறைக்காடு (வேதாரண்யம்) ; (திருத்தலம் அருள்தரு யாழைப்பழித்தமொழியம்மை உடனுறை அருள்மிகு வேதாரணியேசுவரர் திருவடிகள் போற்றி )
ஓதம் மால் கடல் பரவி உலகுஎலாம்
மாதரார் வலம்கொள் மறைக்காடரைக்
காதல்செய்து, கருதப்படுமவர்
பாதம் ஏத்த, பறையும், நம் பாவமே.

[1]
பூக்கும் தாழை புறணி அருகு எலாம்
ஆக்கம் தான் உடை மா மறைக்காடரோ!
ஆர்க்கும் காண்பு அரியீர்!-அடியார் தம்மை
நோக்கிக் காண்பது, நும் பணி செய்யிலே.

[2]
புன்னை ஞாழல் புறணி அருகுஎலாம்,
மன்னினார் வலம் கொள் மறைக்காடரோ!
அன்ன மென் நடையாளை ஓர்பாகமாச்
சின்னவேடம் உகப்பது செல்வமே.

[3]
அட்டமாமலர் சூடி, அடும்பொடு,
வட்டப்புன்சடை மா மறைக்காடரோ!
நட்டம் ஆடியும், நால்மறை பாடியும்,!
இட்டம் ஆக இருக்கும் இடம் இதே.

[4]
நெய்தல் ஆம்பல் நிறை வயல் சூழ்தரும்,
மெய்யினார் வலம்கொள், மறைக்காடரோ!
தையல் பாகம் கொண்டீர்!-கவர் புன்சடைப்
பைதல் வெண்பிறை பாம்பு உடன் வைப்பதே?

[5]
துஞ்சும் போதும் துயில் இன்றி ஏத்துவார்
வஞ்சு இன்றி(வ்) வலம்கொள் மறைக்காடரோ!
பஞ்சின் மெல் அடிப் பாவை பலி கொணர்ந்து
அஞ்சி நிற்பதும் ஐந்தலை நாகமே.

[6]
திருவினார் செல்வம் மல்கு விழா அணி,
மருவினார் வலம்கொள், மறைக்காடரோ!
உருவினாள் உமைமங்கை ஓர்பாகம் ஆய்,
மருவினாய், கங்கையைச் சென்னி தன்னிலே.

[7]
சங்கு வந்து அலைக்கும் தடங்கானல்வாய்
வங்கம் ஆர் வலம்கொள் மறைக்காடரோ!
கங்கை செஞ்சடை வைப்பதும் அன்றியே
அங்கையில்(ல்) அனல் ஏந்தல் அழகிதே?

[8]
குறைக் காட்டான், விட்ட தேர் குத்த மாமலை
இறைக் காட்டீ எடுத்தான், தலை ஈர்-ஐந்தும்
மறைக்காட்டான் இறை ஊன்றலும் வாய்விட்டான்;
இறைக் காட்டாய்,-எம்பிரான்!-உனை ஏத்தவே!

[9]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5.010   பண்ணின் நேர் மொழியாள் உமைபங்கரோ!  
பண் - திருக்குறுந்தொகை   (திருத்தலம் திருமறைக்காடு (வேதாரண்யம்) ; (திருத்தலம் அருள்தரு யாழைப்பழித்தமொழியம்மை உடனுறை அருள்மிகு வேதாரணியேசுவரர் திருவடிகள் போற்றி )
திருப்புகலூரில் சந்தித்துக் கொண்ட அப்பர் பிரானும், ஞானசம்பந்தப் பெருமானும் திருவீழிமிழலை முதலான பல தலங்களுக்கு, இருவரும் சேர்ந்து சென்றனர். பல தலங்கள் சேர்ந்து தரிசித்த பின்னர் இருவரும் திருமறைக்காடு வந்தடைந்தனர். அப்பர் பிரானும் திருஞான சம்பந்தரும் தங்களது ஊருக்கு வரும் செய்தியினை அறிந்த, திருமறைக்காடு தலத்தில் இருந்த அடியவர்கள், மிகவும் மகிழ்ச்சி அடைந்து இருவரையும் வரவேற்றனர். கோயிலின் வெளி வாயில் வழியாக உட்புகுந்த இருவரும், திருக்கோயிலை வலம் வந்து உள்வாயில் வந்து சேர்ந்தனர். உள்வாயில் அடைத்து இருப்பதை கண்ணுற்ற இருவரும் வாயிலை வணங்கி நின்றனர். பண்டைய நாளில், வேதங்கள் சிவபிரானை வழிபட்ட பின்னர், கோயில் வாயிற்கதவுகளை திருக்காப்பிட்டு மூடிய நாள் முதலாக, அந்த கதவுகள் மூடியே இருப்பதாக அருகே இருந்த அடியார்கள் கூறினார்கள். மறைகள் ஓதும் பெருமையுடைய அன்பர்கள் பலர் முயன்றும், மூடிய கதவுகள் திறக்கப்படவில்லை என்று கூறிய அடியார்கள், தாங்கள் அனைவரும் திட்டிவாசல் எனப்படும் அருகிலிருந்த சிறிய வாயில் வழியாக திருக்கோயிலுக்குள் சென்று இறைவனை வழிபாட்டு வருவதாக கூறினார்கள். இதனைக் கேட்ட ஞானசம்பந்தப் பெருமான் அப்பர் பிரானிடம், தாங்கள் இருவரும் எந்த விதத்திலாவது சிவபிரானிடம் வேண்டி, அடைக்கப்பட்டுள்ள கோயில் கதவுகள் திறக்க வேண்டி இறைவனின் அருளினை நாடி செந்தமிழ்ப் பாடல்கள் பாடவேண்டும் என்று உரைத்தார். அப்பர் பிரான் உடனே ஆளுடையப் பிள்ளையாரை நோக்கி, கதவு திறப்பதற்காக நான் பாடவேண்டும் என்று நீர் விரும்பினால் நான் அவ்வாறே செய்வேன் என்று கூறினார்.
பண்ணின் நேர் மொழியாள் உமைபங்கரோ!
மண்ணினார் வலம்செய்ம் மறைக்காடரோ!
கண்ணினால் உமைக் காணக் கதவினைத்
திண்ணம் ஆகத் திறந்து அருள் செய்ம்மினே!

[1]
ஈண்டு செஞ்சடை ஆகத்துள் ஈசரோ!
மூண்ட கார்முகிலின் முறிக்கண்டரோ!
ஆண்டுகொண்ட நீரே அருள் செய்திடும்!
நீண்ட மாக் கதவின் வலி நீக்குமே!

[2]
அட்டமூர்த்தி அது ஆகிய அப்பரோ!
துட்டர் வான் புரம் சுட்ட சுவண்டரோ!
பட்டம் கட்டிய சென்னிப் பரமரோ!
சட்ட இக் கதவம் திறப்பிம்மினே!

[3]
அரிய நால்மறை ஓதிய நாவரோ!
பெரிய வான் புரம் சுட்ட சுவண்டரோ!
விரிகொள் கோவண ஆடை விருத்தரோ!
பெரிய வான் கதவம் பிரிவிக்கவே!

[4]
மலையில் நீடு இருக்கும் மறைக்காடரோ!
கலைகள் வந்து இறைஞ்சும் கழல் ஏத்தரோ!
விலை இல் மா மணிவண்ண உருவரோ!-
தொலைவு இலாக் கதவம் துணை நீக்குமே!

[5]
பூக்கும் தாழை புறணி அருகு எலாம்
ஆக்கும் தண்பொழில் சூழ் மறைக்காடரோ!
ஆர்க்கும் காண்பு அரியீர்! அடிகேள்!-உமை
நோக்கிக் காணக் கதவைத் திறவுமே!

[6]
வெந்தவெண்பொடிப் பூசும் விகிர்தரோ!
அந்தம் இ(ல்)லி, அணி மறைக்காடரோ!
எந்தை!-நீ அடியார் வந்து இறைஞ்சிட
இந்த மாக் கதவம் பிணை நீக்குமே!

[7]
ஆறு சூடும் அணி மறைக்காடரோ!
கூறு மாது உமைக்கு ஈந்த குழகரோ!
ஏறு அது ஏறிய எம்பெருமான்!-இந்த
மாறு இலாக் கதவம் வலி நீக்குமே!

[8]
சுண்ணவெண்பொடிப் பூசும் சுவண்டரோ!
பண்ணி ஏறு உகந்து ஏறும் பரமரோ!
அண்ணல், ஆதி, அணி மறைக்காடரோ!
திண்ணமாக் கதவம் திறப்பிம்மினே!

[9]
விண் உளார் விரும்பி(ய்) எதிர் கொள்ளவே
மண் உளார் வணங்கும் மறைக்காடரோ!
கண்ணினால் உமைக் காணக் கதவினைத்
திண்ணம் ஆகத் திறந்து அருள் செய்ம்மினே!

[10]
அரக்கனை விரலால் அடர்த்திட்ட நீர்
இரக்கம் ஒன்று இலீர்; எம்பெருமானிரே!
சுரக்கும் புன்னைகள் சூழ் மறைக்காடரோ!
சரக்க இக் கதவம் திறப்பிம்மினே!

[11]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5.011   தோற்றும் கோயிலும், தோன்றிய கோயிலும்,  
பண் - திருக்குறுந்தொகை   (திருத்தலம் திருமீயச்சூர் ; (திருத்தலம் அருள்தரு சுந்தரநாயகியம்மை உடனுறை அருள்மிகு முயற்சிநாதேசுவரர் திருவடிகள் போற்றி )
தோற்றும் கோயிலும், தோன்றிய கோயிலும்,
வேற்றுக் கோயில் பல உள; மீயச்சூர்,
கூற்றம் பாய்ந்த குளிர்புன்சடை அரற்கு
ஏற்றம் கோயில் கண்டீர், இளங்கோயிலே.

[1]
வந்தனை அடைக்கும்(ம்) அடித்தொண்டர்கள்
பந்தனை செய்து பாவிக்க நின்றவன்,
சிந்தனை திருத்தும் திரு மீயச்சூர்,
எம்தமை உடையார், இளங்கோயிலே.

[2]
பஞ்ச மந்திரம் ஓதும் பரமனார்,
அஞ்ச ஆனை உரித்து அனல் ஆடுவார்,-
நெஞ்சம்! வாழி நினைந்து இரு-மீயச்சூர்,
எம்தமை உடையார், இளங்கோயிலே!

[3]
நாறு மல்லிகை கூவிளம் செண்பகம்
வேறு வேறு விரித்த சடை இடை
ஆறு கொண்டு உகந்தான், திரு மீயச்சூர்,
ஏறுகொண்டு உகந்தார், இளங்கோயிலே.

[4]
வெவ்வ வண்ணத்து நாகம் வெருவவே
கவ்வ வண்ணக் கனல் விரித்து ஆடுவர்,
செவ்வவண்ணம் திகழ் திரு மீயச்சூர்,
எவ்வ வண்ணம், பிரான் இளங்கோயிலே?

[5]
பொன் அம் கொன்றையும், பூ அணி மாலையும்,
பின்னும் செஞ்சடைமேல் பிறை சூடிற்று;
மின்னும் மேகலையாளொடு, மீயச்சூர்,
இன்ன நாள் அகலார், இளங்கோயிலே.

[6]
படை கொள் பூதத்தன், பைங்கொன்றைத்தாரினன்,
சடை கொள் வெள்ளத்தன், சாந்தவெண் நீற்றினன்,
விடை கொள் ஊர்தியினான், திரு மீயச்சூர்,
இடை கொண்டு ஏத்த நின்றார், இளங்கோயிலே.

[7]
ஆறு கொண்ட சடையினர் தாமும் ஓர்
வேறுகொண்டது ஓர் வேடத்தர் ஆகிலும்,
கூறு கொண்டு உகந்தாளொடு, மீயச்சூர்,
ஏறு கொண்டு உகந்தார், இளங்கோயிலே.

[8]
வேதத்தான் என்பர், வேள்வி உளான் என்பர்,
பூதத்தான் என்பர், புண்ணியன் தன்னையே;
கீதத்தான் கிளரும் திரு மீயச்சூர்,
ஏதம் தீர்க்க நின்றார், இளங்கோயிலே.

[9]
கடுக்கண்டன் கயிலாய மலைதனை
எடுக்கல் உற்ற இராவணன் ஈடு அற,
விடுக்கண் இன்றி வெகுண்டவன், மீயச்சூர்,
இடுக்கண் தீர்க்க நின்றார், இளங்கோயிலே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5.012   கரைந்து கை தொழுவாரையும் காதலன்;  
பண் - திருக்குறுந்தொகை   (திருத்தலம் திருவீழிமிழலை ; (திருத்தலம் அருள்தரு சுந்தரகுசாம்பிகை உடனுறை அருள்மிகு வீழியழகர் திருவடிகள் போற்றி )
நாயன்மார்கள் இருவரும் இந்த தலத்தில் தங்கிய போது வறட்சி ஏற்பட்டது. இறைவனின் அருளால் தினமும் ஒரு பொற்காசு பெற்ற நாயன்மார்கள் தங்களைச் சார்ந்த அடியார்களுக்கும் ஊரில் உள்ள மக்களுக்கும் நாள்தோறும் அமுது படைத்தனர். மேலும் பஞ்சம் நீங்கிய பின்னரும் பல நாட்கள் இங்கே தங்கி பல பதிகங்கள் பாடினார். ஆனால் நமக்கு அப்பர் பிரான் பாடிய எட்டு பதிகங்களே கிடைத்துள்ளன.
கரைந்து கை தொழுவாரையும் காதலன்;
வரைந்து வைது எழுவாரையும் வாடலன்;
நிரந்த பாரிடத்தோடு அவர் நித்தலும்
விரைந்து போவது, வீழிமிழலைக்கே.

[1]
ஏற்று வெல் கொடி ஈசன், தன் ஆதிரை,
நாற்றம் சூடுவர்; நன்நறும் திங்களார்
நீற்றுச் சந்தன வெள்ளை விரவலார்,
வேற்றுக் கோலம் கொள் வீழிமிழலையே.

[2]
புனை பொன் சூலத்தன்; போர் விடை ஊர்தியான்;
வினை வெல் நாகத்தன்; வெண் மழுவாளினான்;
நினைய நின்றவன், ஈசனையே எனா;-
வினை இலார் தொழும் வீழிமிழலையே.

[3]
மாடத்து ஆடும் மனத்து உடன் வைத்தவர்,
கோடத்தார், குருக்கேத்திரத்தார் பலர்,
பாடத்தார், பழிப்பார் பழிப்பு இல்லது ஓர்
வேடத்தார், தொழும் வீழிமிழலையே.

[4]
எடுத்த வெல் கொடி ஏறு உடையான் தமர்
உடுப்பர், கோவணம்; உண்பது பிச்சையே
கெடுப்பது ஆவது, கீழ் நின்ற வல்வினை;
விடுத்துப் போவது, வீழிமிழலைக்கே.

[5]
குழலை யாழ் மொழியார் இசை வேட்கையால்
உழலை யாக்கையை ஊணும் உணர்வு இலீர்!
தழலை நீர் மடிக் கொள்ளன்மின்! சாற்றினோம்:
மிழலையான் அடி சார, விண் ஆள்வரே!

[6]
தீரன்; தீத்திரளன்; சடைத் தங்கிய
நீரன்; ஆடிய நீற்றன்; வண்டு ஆர் கொன்றைத்
தாரன்; மாலையன்; தண் நறுங்கண்ணியன்;
வீரன் வீழிமிழலை விகிர்தனே.

[7]
எரியினார்; இறையார்; இடுகாட்டு இடை
நரியினார்; பரியா மகிழ்கின்றது ஓர்
பெரியனார்; தம் பிறப்பொடு சாதலை
விரியினார் தொழும் வீழிமிழலையே!

[8]
நீண்ட சூழ் சடைமேல் ஓர் நிலா மதி;
காண்டு, சேவடிமேல் ஓர் கனைகழல்;
வேண்டுவார் அவர் வீதி புகுந்திலர்;
மீண்டும் போவது, வீழிமிழலைக்கே.

[9]
பாலையாழொடு செவ்வழி பண் கொள
மாலை வானவர் வந்து வழிபடும்,
ஆலை ஆர் அழல் அந்தணர் ஆகுதி
வேலையார் தொழும், வீழிமிழலையே!

[10]
மழலை ஏற்று மணாளன் திருமலை
சுழல ஆர்த்து எடுத்தான் முடிதோள் இறக்
கழல் கொள் காலில்-திருவிரல் ஊன்றலும்,
மிழலையான் அடி வாழ்க! என, விட்டதே.

[11]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5.013   என் பொனே! இமையோர் தொழு  
பண் - திருக்குறுந்தொகை   (திருத்தலம் திருவீழிமிழலை ; (திருத்தலம் அருள்தரு சுந்தரகுசாம்பிகை உடனுறை அருள்மிகு வீழியழகர் திருவடிகள் போற்றி )
என் பொனே! இமையோர் தொழு பைங்கழல்
நன்பொனே! நலம் தீங்கு அறிவு ஒன்று இலேன்;
செம்பொனே! திரு வீழிமிழலையுள்
அன்பனே!-அடியேனைக் குறிக்கொளே!

[1]
கண்ணினால் களி கூரக் கையால்-தொழுது
எண்ணும் ஆறு அறியாது இளைப்பேன் தனை,-
விண் உளார் தொழும் வீழிமிழலையுள்
அண்ணலே!-அடியேனைக் குறிக்கொளே!

[2]
ஞாலமே! விசும்பே! நலம் தீமையே!
காலமே! கருத்தே! கருத்தால்-தொழும்
சீலமே! திரு வீழிமிழலையுள்
கோலமே!-அடியேனைக் குறிக்கொளே!

[3]
முத்தனே! முதல்வா! முகிழும் முளை
ஒத்தனே! ஒருவா! உரு ஆகிய
சித்தனே! திரு வீழிமிழலையுள்
அத்தனே!-அடியேனைக் குறிக்கொளே!

[4]
கருவனே! கரு ஆய்த் தெளிவார்க்கு எலாம்
ஒருவனே! உயிர்ப்பு ஆய் உணர்வு ஆய் நின்ற
திருவனே! திரு வீழிமிழலையுள்
குருவனே!-அடியேனைக் குறிக்கொளே!

[5]
காத்தனே, பொழில் ஏழையும்! காதலால்
ஆத்தனே, அமரர்க்கு! அயன் தன் தலை
சேர்த்தனே! திரு வீழிமிழலையுள்
கூத்தனே! அடியேனைக் குறிக்கொளே!

[6]
நீதி வானவர் நித்தல் நியமம் செய்து
ஓதி வானவரும்(ம்) உணராதது ஓர்
வேதியா! விகிர்தா! திரு வீழியுள்
ஆதியே!-அடியேனைக் குறிக்கொளே!

[7]
பழகி நின் அடி சூடிய பாலனைக்
கழகின்மேல் வைத்த காலனைச் சாடிய
அழகனே! அணி வீழிமிழலையுள்
குழகனே!-அடியேனைக் குறிக்கொளே!

[8]
அண்ட வானவர் கூடிக் கடைந்த நஞ்சு
உண்ட வானவனே! உணர்வு ஒன்று இலேன்;
விண்ட வான் பொழில் வீழிமிழலையுள்
கொண்டனே!-அடியேனைக் குறிக்கொளே!

[9]
ஒருத்தன் ஓங்கலைத் தாங்கல் உற்றான் உரம்
வருத்தினாய்! வஞ்சனேன் மனம் மன்னிய
திருத்தனே! திரு வீழிமிழலையுள்
அருத்தனே!-அடியேனைக் குறிக்கொளே!

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5.014   பாசம் ஒன்று இலராய், பலபத்தர்கள்  
பண் - திருக்குறுந்தொகை   (திருத்தலம் திருவிடைமருதூர் ; (திருத்தலம் அருள்தரு நலமுலைநாயகியம்மை உடனுறை அருள்மிகு மருதீசர் திருவடிகள் போற்றி )
பாசம் ஒன்று இலராய், பலபத்தர்கள்
வாசம் நாள்மலர் கொண்டு அடி வைகலும்,
ஈசன் எம்பெருமான் இடைமருதினில்
பூசம், நாம் புகுதும், புனல் ஆடவே.

[1]
மறையின் நாள்மலர் கொண்டு அடி வானவர்-
முறையினால் முனிகள் வழிபாடு செய்
இறைவன், எம்பெருமான், இடைமருதினில்
உறையும் ஈசனை, உள்கும், என் உள்ளமே.

[2]
கொன்றைமாலையும் கூவிளம் மத்தமும்
சென்று சேரத் திகழ்சடை வைத்தவன்,
என்றும் எந்தைபிரான், இடைமருதினை
நன்று கைதொழுவார் வினை நாசமே.

[3]
இம்மை வானவர் செல்வம் விளைத்திடும்,
அம்மையே பிறவித்துயர் நீத்திடும்,
எம்மை ஆளும், இடைமருதன் கழல்
செம்மையே தொழுவார் வினை சிந்துமே.

[4]
வண்டு அணைந்தன வன்னியும் கொன்றையும்
கொண்டு அணிந்த சடைமுடிக் கூத்தனார்,
எண் திசைக்கும் இடைமருதா! என,
விண்டுபோய் அறும், மேலைவினைகளே.

[5]
ஏறு அது ஏறும் இடைமருது ஈசனார்,
கூறுவார் வினை தீர்க்கும் குழகனார்,
ஆறு செஞ்சடை வைத்த அழகனார்க்கு
ஊறி ஊறி உருகும், என் உள்ளமே.

[6]
விண் உளாரும் விரும்பப்படுபவர்;
மண் உளாரும் மதிக்கப்படுபவர்;
எண்ணினார், பொழில் சூழ் இடை மருதினை
நண்ணினாரை நண்ணா, வினை; நாசமே.

[7]
வெந்த வெண் பொடிப் பூசும் விகிர்தனார்,
கந்தமாலைகள் சூடும் கருத்தனார்,
எந்தை, என் இடை மருதினில் ஈசனைச்
சிந்தையால் நினைவார் வினை தேயுமே.

[8]
வேதம் ஓதும் விரிசடை அண்ணலார்,
பூதம் பாட நின்று ஆடும் புனிதனார்
ஏதம் தீர்க்கும் இடைமருதா! என்று-
பாதம் ஏத்தப் பறையும், நம் பாவமே.

[9]
கனியினும், கட்டி பட்ட கரும்பினும்,
பனிமலர்க்குழல் பாவை நல்லாரினும்,
தனி முடீ கவித்து ஆளும் அரசினும்,
இனியன் தன் அடைந்தார்க்கு, இடைமருதனே.

[10]
முற்றிலா மதி சூடும் முதல்வனார்;
ஒற்றினார், மலையால் அரக்கன் முடி;
எற்றின் ஆர் கொடியார்; இடைமருதினைப்
பற்றினாரைப் பற்றா, வினைப் பாவமே.

[11]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5.015   பறையின் ஓசையும் பாடலின் ஓசையும்  
பண் - திருக்குறுந்தொகை   (திருத்தலம் திருவிடைமருதூர் ; (திருத்தலம் அருள்தரு நலமுலைநாயகியம்மை உடனுறை அருள்மிகு மருதீசர் திருவடிகள் போற்றி )
பறையின் ஓசையும் பாடலின் ஓசையும்
மறையின் ஓசையும் வைகும், அயல் எலாம்,
இறைவன், எங்கள் பிரான் இடைமருதினில்
உறையும் ஈசனை உள்கும், என் உள்ளமே.

[1]
மனத்துள் மாயனை, மாசு அறு சோதியை,
புனிற்றுப் பிள்ளை வெள்ளை(ம்) மதி சூடியை,
எனக்குத் தாயை, எம்மான் இடைமருதனை,
நினைத்திட்டு ஊறி நிறைந்தது-என் உள்ளமே.

[2]
வண்டு அணைந்தன வன்னியும் மத்தமும்
கொண்டு அணிந்த சடைமுடிக் கூத்தனை
எண்திசைக்கும் இடைமருதா! என,
விண்டுபோய் அறும், மேலைவினைகளே.

[3]
துணை இலாமையில்-தூங்கு இருள் பேய்களோடு
அணையல் ஆவது எமக்கு அரிதே! எனா,
இணை இலா இடைமா மருதில்(ல்) எழு
பணையில் ஆகமம் சொல்லும், தன் பாங்கிக்கே.

[4]
மண்ணை உண்ட மால் காணான், மலர் அடி;
விண்ணை விண்டு அயன் காணான், வியன்முடி;
மொண்ணை மா மருதா! என்று என் மொய்குழல்
பண்ணை ஆயமும் தானும் பயிலுமே.

[5]
மங்கை காணக் கொடார், மணமாலையை;
கங்கை காணக் கொடார், முடிக் கண்ணியை;
நங்கைமீர்! இடைமருதர் இந் நங்கைக்கே
எங்கு வாங்கிக் கொடுத்தார், இதழியே?

[6]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5.016   மறையும் ஓதுவர்; மான்மறிக் கையினர்;  
பண் - திருக்குறுந்தொகை   (திருத்தலம் திருப்பேரெயில் ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
மறையும் ஓதுவர்; மான்மறிக் கையினர்;
கறை கொள் கண்டம் உடைய கபாலியார்;
துறையும் போகுவர்; தூய வெண் நீற்றினர்;
பிறையும் சூடுவர்-பேரெயிலாளரே.

[1]
கணக்கு இலாரையும், கற்று வல்லாரையும்,
வணக்கு இலா நெறி கண்டு கொண்டாரையும்,
தணக்குவார்; தணிப்பார்; எப்பொருளையும்
பிணக்குவார் அவர்-பேரெயிலாளரே.

[2]
சொரிவிப்பார், மழை; சூழ் கதிர்த் திங்களை
விரிவிப்பார்; வெயில் பட்ட விளங்கு ஒளி
எரிவிப்பார்; தணிப்பார்; எப்பொருளையும்
பிரிவிப்பார் அவர்-பேரெயிலாளரே.

[3]
செறுவிப்பார், சிலையால் மதில்; தீர்த்தங்கள்
உறுவிப்பார்; பலபத்தர்கள் ஊழ்வினை
அறுவிப்பார்; அது அன்றியும் நல்வினை
பெறுவிப்பார் அவர்-பேரெயிலாளரே.

[4]
மற்றையார் அறியார்; மழுவாளினார்;
பற்றி ஆட்டி ஓர் ஐந்தலைப்பாம்பு அரைச்
சுற்றியார் அவர்; தூ நெறியால் மிகு
பெற்றியார் அவர்-பேரெயிலாளரே.

[5]
திருக்கு வார்குழல் செல்வன சேவடி-
இருக்கு வாய்மொழியால்-தனை ஏத்துவார்
சுருக்குவார், துயர்; தோற்றங்கள் ஆற்றறப்
பெருக்குவார் அவர், பேரெயிலாளரே.

[6]
முன்னையார்; மயில் ஊர்தி முருகவேள்-
தன் ஐயார் எனில்-தான் ஓர் தலைமகன்;
என்னை ஆளும் இறையவன்; எம்பிரான்;
பின்னையார் அவர்-பேரெயிலாளரே.

[7]
உழைத்தும், துள்ளியும், உள்ளத்துளே உரு
இழைத்தும், எந்தைபிரான் என்று இராப்பகல்
அழைக்கும் அன்பினர் ஆய அடியவர்
பிழைப்பு நீக்குவர்-பேரெயிலாளரே.

[8]
நீர் உலாம் நிமிர்புன்சடையா! எனா
ஏர் உலாவு அநங்கன் திறல் வாட்டிய,
வார் உலாம் வனமென்முலையாளொடும்,
பேர் உளார் அவர்-பேரெயிலாளரே.

[9]
பாணி ஆர் படுதம் பெயர்ந்து ஆடுவர்;
தூணி ஆர் விசயற்கு அருள்செய்தவர்;
மாணியாய் மண் அளந்தவன், நான்முகன்,
பேணியார் அவர் பேரெயிலாளரே.

[10]
மதத்த வாள் அரக்கன் மணிப் புட்பகம்
சிதைக்கவே, திருமாமலைக்கீழ்ப் புக்கு,
பதைத்து அங்கு ஆர்த்து எடுத்தான் பத்து நீள் முடி
பிதக்க ஊன்றிய பேரெயிலாளரே.

[11]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5.017   முத்தினை, பவளத்தை, முளைத்த எம்  
பண் - திருக்குறுந்தொகை   (திருத்தலம் திருவெண்ணியூர் ; (திருத்தலம் அருள்தரு அழகியநாயகியம்மை உடனுறை அருள்மிகு வெண்ணிநாயகர் திருவடிகள் போற்றி )
முத்தினை, பவளத்தை, முளைத்த எம்
தொத்தினை, சுடரை, சுடர் போல் ஒளிப்
பித்தனை, கொலும் நஞ்சினை, வானவர்
நித்தனை,-நெருநல் கண்ட வெண்ணியே.

[1]
வெண்ணித் தொல்-நகர் மேய வெண்திங்கள் ஆர்
கண்ணித் தொத்த சடையர்; கபாலியார்;
எண்ணித் தம்மை நினைந்து இருந்தேனுக்கு(வ்)
அண்ணித்திட்டு அமுது ஊறும், என் நாவுக்கே.

[2]
காற்றினை; கனலை; கதிர் மா மணி
நீற்றினை; நினைப்பார் வினை நீக்கிடும்,
கூற்றினை உதைத்திட்ட குணம் உடை,
வீற்றினை;-நெருநல் கண்ட வெண்ணியே.

[3]
நல்லனை, திகழ் நால்மறைஓதியை,
சொல்லனை, சுடரை, சுடர் போல் ஒளிர்
கல்லனை, கடி மா மதில் மூன்று எய்த
வில்லனை,-நெருநல் கண்ட வெண்ணியே.

[4]
சுடரைப் போல் ஒளிர் சுண்ணவெண் நீற்றனை,
அடரும் சென்னியில் வைத்த அமுதனை,
படரும் செஞ்சடைப் பால்மதி சூடியை,
இடரை நீக்கியை, யான் கண்ட வெண்ணியே.

[5]
பூதநாதனை, பூம் புகலூரனை,
தாது எனத் தவழும் மதி சூடியை,
நாதனை, நல்ல நால்மறை ஓதியை,
வேதனை,-நெருநல் கண்ட வெண்ணியே.

[6]
ஒருத்தியை ஒருபாகத்து அடக்கியும்
பொருத்திய(ப்) புனிதன், புரிபுன்சடைக்
கருத்தனை, கறைக்கண்டனை, கண் நுதல்
நிருத்தனை,-நெருநல் கண்ட வெண்ணியே.

[7]
சடையனை; சரி கோவண ஆடை கொண்டு
உடையனை; உணர்வார் வினை தீர்த்திடும்
படையனை, மழுவாளொடு; பாய்தரும்
விடையனை;-நெருநல் கண்ட வெண்ணியே.

[8]
பொருப்பனை, புனலாளொடு புன்சடை
அருப்பனை, இளந்திங்கள் அம் கண்ணியான்
பருப்பதம் பரவித் தொழும் தொண்டர்கள்
விருப்பனை,-நெருநல் கண்ட வெண்ணியே.

[9]
சூல, வஞ்சனை, வல்ல எம் சுந்தரன்;
கோலமா அருள்செய்தது ஓர் கொள்கையான்;
காலன் அஞ்ச உதைத்து, இருள் கண்டம் ஆம்
வேலை நஞ்சனை; கண்டது வெண்ணியே.

[10]
இலையின் ஆர் கொன்றை சூடிய ஈசனார்,
மலையினால் அரக்கன் திறல் வாட்டினார்,
சிலையினால் மதில் எய்தவன், வெண்ணியைத்
தலையினால்-தொழுவார் வினை தாவுமே.

[11]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5.018   முற்றிலா முலையாள் இவள் ஆகிலும்,  
பண் - திருக்குறுந்தொகை   (திருத்தலம் திருக்கடம்பந்துறை (குளித்தலை) ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
முற்றிலா முலையாள் இவள் ஆகிலும்,
அற்றம் தீர்க்கும் அறிவு இலள் ஆகிலும்,
கற்றைச் செஞ்சடையன், கடம்பந்துறைப்
பெற்றம் ஊர்தி என்றாள்-எங்கள் பேதையே.

[1]
தனகு இருந்தது ஓர் தன்மையர் ஆகிலும்,
முனகு தீரத் தொழுது எழுமின்களோ!
கனகப்புன் சடையான் கடம்பந்துறை
நினைய வல்லார் நீள் விசும்பு ஆள்வரே.

[2]
ஆரியம் தமிழோடு இசை ஆனவன்,
கூரிய(க்) குணத்தார் குறி நின்றவன்,
காரிகை உடையான், கடம்பந்துறை,
சீர் இயல் பத்தர், சென்று அடைமின்களே!

[3]
பண்ணின் இன்மொழி கேட்கும் பரமனை-
வண்ண நல் மலரான், பல தேவரும்,
கண்ணனும்(ம்), அறியான் கடம்பந்துறை
நண்ண, நம் வினை ஆயின நாசமே.

[4]
மறை கொண்ட(ம்) மனத்தானை மனத்துளே
நிறை கொண்ட(ந்) நெஞ்சின் உள் உற வைம்மினோ!
கறைகண்டன்(ன்) உறையும் கடம்பந்துறை
சிறைகொண்ட(வ்) வினை தீரத் தொழுமினே!

[5]
நங்கை பாகம் வைத்த(ந்) நறுஞ்சோதியைப்
பங்கம் இன்றிப் பணிந்து எழுமின்களோ!
கங்கைச் செஞ்சடையான் கடம்பந்துறை,
அங்கம் ஓதி அரன் உறைகின்றதே.

[6]
அரிய நால்மறை ஆறு அங்கம் ஆய், ஐந்து
புரியன்; தேவர்கள் ஏத்த நஞ்சு உண்டவன்;
கரிய கண்டத்தினான்; கடம்பந்துறை
உரிய ஆறு நினை, மட நெஞ்சமே!

[7]
பூ மென்கோதை உமை ஒருபாகனை
ஓமம் செய்தும் உணர்மின்கள், உள்ளத்தால்!
காமற் காய்ந்த பிரான் கடம்பந்துறை
நாமம் ஏத்த, நம் தீவினை நாசமே.

[8]
பார் அணங்கி வணங்கிப் பணி செய
நாரணன் பிரமன்(ன்) அறியாதது ஓர்
காரணன் கடம்பந்துறை மேவிய
ஆர் அணங்கு ஒருபால் உடை மைந்தனே

[9]
நூலால் நன்றா நினைமின்கள், நோய் கெட!
பால் ஆன் ஐந்து உடன் ஆடும் பரமனார்;
காலால் ஊன்று உகந்தான்; கடம்பந்துறை
மேலால் நாம் செய்த வல்வினை வீடுமே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5.019   தளரும் கோள் அரவத்தொடு தண்மதி  
பண் - திருக்குறுந்தொகை   (திருத்தலம் திருக்கடம்பூர் ; (திருத்தலம் அருள்தரு சோதிமின்னம்மை உடனுறை அருள்மிகு அமுதகடேசுவரர் திருவடிகள் போற்றி )
தளரும் கோள் அரவத்தொடு தண்மதி
வளரும் கோல வளர்சடையார்க்கு இடம்-
கிளரும் பேர் இசைக் கின்னரம் பாட்டு அறாக்
களரும் கார்க் கடம்பூர்க் கரக்கோயிலே.

[1]
வெல வலான், புலன் ஐந்தொடு; வேதமும்
சொல வலான்; சுழலும் தடுமாற்றமும்
அல வலான்; மனை ஆர்ந்த மென்தோளியைக்
கல வலான்; கடம்பூர்க் கரக்கோயிலே.

[2]
பொய் தொழாது, புலி உரியோன் பணி
செய்து எழா எழுவார் பணி செய்து எழா,
வைது எழாது எழுவார் அவர் எள்க, நீர்
கைதொழா எழுமின், கரக்கோயிலே!

[3]
துண்ணெனா, மனத்தால்-தொழு, நெஞ்சமே!
பண்ணினால் முனம் பாடல் அது செய்தே;
எண் இலார் எயில் மூன்றும் எரித்த முக்-
கண்ணினான் கடம்பூர்க் கரக்கோயிலே!

[4]
சுனையுள் நீலமலர் அன கண்டத்தன்,
புனையும் பொன்நிறக் கொன்றை புரிசடைக்
கனையும் பைங்கழலான், கரக்கோயிலை
நினையும் உள்ளத்தவர் வினை நீங்குமே.

[5]
குணங்கள் சொல்லியும் குற்றங்கள் பேசியும்
வணங்கி வாழ்த்துவர், அன்பு உடையார் எலாம்-
வணங்கி வான் மலர் கொண்டு அடி வைகலும்
கணங்கள் போற்று இசைக்கும் கரக்கோயிலே.

[6]
பண்ணின் ஆர் மறை பல்பலபூசனை
மண்ணினார் செய்வது அன்றியும், வைகலும்
விண்ணினார்கள் வியக்கப்படுமவன்
கண்ணின் ஆர் கடம்பூர்க் கரக்கோயிலே.

[7]
அங்கை ஆர் அழல் ஏந்தி நின்று ஆடலன்,
மங்கை பாட மகிழ்ந்து உடன் வார்சடைக்
கங்கையான், உறையும் கரக்கோயிலைத்
தம் கையால்-தொழுவார் வினை சாயுமே.

[8]
நன் கடம்பனைப் பெற்றவள் பங்கினன்,
தென் கடம்பைத் திருக்கரக்கோயிலான்
தன் கடன்(ன்) அடியேனையும் தாங்குதல்;
என் கடன் பணி செய்து கிடப்பதே.

[9]
பணம் கொள் பாற்கடல் பாம்பு அணையானொடும்,
மணம் கமழ் மலர்த்தாமரையான் அவன்,
பிணங்கும் பேர் அழல் எம்பெருமாற்கு இடம்-
கணங்கள் போற்று இசைக்கும் கரக்கோயிலே.

[10]
வரைக்கண் நால்-அஞ்சுதோள் உடையான் தலை
அரைக்க ஊன்றி அருள் செய்த ஈசனார்,
திரைக்கும் தண் புனல் சூழ், கரக்கோயிலை
உரைக்கும் உள்ளத்தவர் வினை ஓயுமே.

[11]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5.020   ஒருவராய் இரு மூவரும் ஆயவன்,  
பண் - திருக்குறுந்தொகை   (திருத்தலம் திருக்கடம்பூர் ; (திருத்தலம் அருள்தரு சோதிமின்னம்மை உடனுறை அருள்மிகு அமுதகடேசுவரர் திருவடிகள் போற்றி )
ஒருவராய் இரு மூவரும் ஆயவன்,
குரு அது ஆய குழகன், உறைவு இடம்-
பரு வரால் குதிகொள்ளும் பழனம் சூழ்
கரு அது ஆம் கடம்பூர்க் கரக்கோயிலே.

[1]
வன்னி, மத்தம், வளர் இளந்திங்கள், ஓர்
கன்னியாளை, கதிர் முடி வைத்தவன்;
பொன்னின் மல்கு புணர்முலையாளொடும்
மன்னினான்; கடம்பூர்க் கரக்கோயிலே.

[2]
இல்லக் கோலமும், இந்த இளமையும்,
அல்லல் கோலம், அறுத்து உய வல்லிரே!
ஒல்லைச் சென்று அடையும், கடம்பூர் நகர்ச்
செல்வக் கோயில் திருக்கரக்கோயிலே!

[3]
வேறு சிந்தை இலாதவர் தீவினை
கூறு செய்த குழகன் உறைவு இடம்-
ஏறு செல்வத்து இமையவர்தாம் தொழும்
ஆறு சேர் கடம்பூர்க் கரக்கோயிலே.

[4]
திங்கள் தங்கிய செஞ்சடைமேலும் ஓர்
மங்கை தங்கும் மணாளன் இருப்பு இடம்-
பொங்கு சேர் மணல் புன்னையும், ஞாழலும்,
தெங்கு, சேர் கடம்பூர்க் கரக்கோயிலே.

[5]
மல்லை ஞாலத்து வாழும் உயிர்க்கு எலாம்
எல்லை ஆன பிரானார் இருப்பு இடம்-
கொல்லை முல்லை, கொழுந் தகை மல்லிகை,
நல்ல சேர் கடம்பூர்க் கரக்கோயிலே.

[6]
தளரும் வாள் அரவத்தொடு தண்மதி
வளரும் பொன்சடையார்க்கு இடம் ஆவது-
கிளரும் பேர் ஒலிக் கின்னரம் பாட்டு அறாக்
களரி ஆர் கடம்பூர்க் கரக்கோயிலே.

[7]
உற்றாராய் உறவு ஆகி உயிர்க்கு எலாம்
பெற்றார் ஆய பிரானார் உறைவு இடம்-
முற்றார் மும்மதில் எய்த முதல்வனார்,
கற்றார் சேர், கடம்பூர்க் கரக்கோயிலே.

[8]
வெள்ளை நீறு அணி மேனியவர்க்கு எலாம்
உள்ளம் ஆய பிரானார் உறைவு இடம்-
பிள்ளை வெண்பிறை சூடிய சென்னியான்,
கள்வன், சேர் கடம்பூர்க் கரக்கோயிலே.

[9]
பரப்புநீர் இலங்கைக்கு இறைவன்(ன்) அவன்
உரத்தினால் அடுக்கல்(ல்) எடுக்கல்(ல்) உற,
இரக்கம் இன்றி இறை விரலால்-தலை
அரக்கினான் கடம்பூர்க் கரக்கோயிலே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5.021   என்னில் ஆரும் எனக்கு இனியார்  
பண் - திருக்குறுந்தொகை   (திருத்தலம் திருஇன்னம்பர் ; (திருத்தலம் அருள்தரு கொந்தார்பூங்குழலம்மை உடனுறை அருள்மிகு எழுத்தறிந்தவீசுவரர் திருவடிகள் போற்றி )
என்னில் ஆரும் எனக்கு இனியார் இல்லை;
என்னிலும்(ம்) இனியான் ஒருவன்(ன்)உளன்;
என் உளே உயிர்ப்பு ஆய்ப் புறம் போந்து புக்கு
என் உளே நிற்கும், இன்னம்பர் ஈசனே.

[1]
மட்டு உண்பார்கள், மடந்தையர் வாள் கணால்
கட்டுண்பார்கள், கருதுவது என்கொலோ?
தட்டி முட்டித் தள்ளாடித் தழுக்குழி
எட்டுமூர்த்தியர், இன்னம்பர் ஈசனே,

[2]
கனலும் கண்ணியும், தண்மதியோடு, உடன்
புனலும், கொன்றையும், சூடும் புரிசடை;
அனலும், சூலமும், மான்மறி, கையினர்
எனலும், என் மனத்து, இன்னம்பர் ஈசனே.

[3]
மழைக்கண் மா மயில் ஆலும் மகிழ்ச்சியான்
அழைக்கும், தன் அடியார்கள் தம் அன்பினை;
குழைக்கும் தன்னைக் குறிக்கொள வேண்டியே
இழைக்கும், என் மனத்து-இன்னம்பர் ஈசனே.

[4]
தென்னவன்(ன்); எனை ஆளும் சிவன் அவன்;
மன்னவன்; மதி அம் மறை ஓதியான்;
முன்னம் அன்னவன் சேரலன், பூழியான்,
இன்னம் இன்பு உற்ற இன்னம்பர் ஈசனே.

[5]
விளக்கும், வேறுபடப் பிறர் உள்ளத்தில்;
அளக்கும், தன் அடியார் மனத்து அன்பினை;
குளக்கும் என்னைக் குறிக்கொள வேண்டியே
இளக்கும், என் மனத்து-இன்னம்பர் ஈசனே.

[6]
சடைக்கணாள், புனலாள்; அனல் கையது; ஓர்
கடைக்கணால் மங்கை நோக்க, இமவான்மகள்
படைக்கணால் பருகப்படுவான் நமக்கு
இடைக்கண் ஆய் நின்ற இன்னம்பர் ஈசனே.

[7]
Back to Top

This page was last modified on Fri, 15 Dec 2023 21:06:13 +0000
          send corrections and suggestions to admin @ sivasiva.org   https://www.sivaya.org/thirumurai_list.php