சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Search this site with
song/pathigam/paasuram numbers
or words in any language

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     
Thirumurai
3.025   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   மருந்து, வேண்டில்(ல்) இவை; மந்திரங்கள்(ள்)
பண் - கொல்லி   (திருந்துதேவன்குடி கர்க்கடகேசுவரர் அருமருந்துநாயகியம்மை)

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3.025   மருந்து, வேண்டில்(ல்) இவை; மந்திரங்கள்(ள்)  
பண் - கொல்லி   (திருத்தலம் திருந்துதேவன்குடி ; (திருத்தலம் அருள்தரு அருமருந்துநாயகியம்மை உடனுறை அருள்மிகு கர்க்கடகேசுவரர் திருவடிகள் போற்றி )
மருந்து, வேண்டில்(ல்) இவை; மந்திரங்கள்(ள்) இவை;
புரிந்து கேட்கப்படும் புண்ணியங்கள்(ள்) இவை
திருந்து தேவன் குடித் தேவர் தேவு, எய்திய
அருந்தவத்தோர் தொழும் அடிகள், வேடங்களே

[1]
வீதிபோக்கு ஆவன; வினையை வீட்டு(வ்)வன;
ஓதி ஓர்க்கப்படாப் பொருளை ஓர்விப்பன
தீது இல் தேவன்குடித் தேவர் தேவு, எய்திய
ஆதி அந்தம்(ம்) இலா அடிகள், வேடங்களே

[2]
மானம் ஆக்கு(வ்)வன, மாசு நீக்கு(வ்)வன;
வானை உள்கச் செலும் வழிகள் காட்டு(வ்)வன
தேனும் வண்டும்(ம்) இசை பாடும் தேவன்கு
ஆன் அஞ்சு ஆடும் முடி அடிகள் வேடங்களே

[3]
செவிகள் ஆர்விப்பன; சிந்தையுள் சேர்வன;
கவிகள் பாடு(வ்)வன; கண் குளிர்விப்பன
புவிகள் பொங்கப் புனல் பாயும் தேவன்கு
அவிகள் உய்க்கப்படும் அடிகள் வேடங்களே

[4]
விண் உலாவும் நெறி; வீடு காட்டும் நெறி;
மண் உலாவும் நெறி; மயக்கம் தீர்க்கும் நெறி
தெண் நிலா வெண்மதி தீண்டு தேவன்கு
அண்ணல், ஆன் ஏறு உடை அடிகள், வேடங்களே

[5]
பங்கம் என்னப் படர் பழிகள் என்னப்படா,
புங்கம் என்னப் படர் புகழ்கள் என்னப்படும்
திங்கள் தோயும் பொழில் தீண்டு தேவன்கு
அங்கம் ஆறும் சொன்ன அடிகள் வேடங்களே

[6]
கரைதல் ஒன்றும்(ம்) இலை, கருத வல்லார்தமக்கு
உரைவில் ஊனம்(ம்) இலை; உலகினில் மன்னுவர்
திரைகள் பொங்கப் புனல் பாயும் தேவன்கு
அரையில் வெண் கோவணத்து அடிகள் வேடங்களே

[7]
உலகம் உட்கும் திறல் உடை அரக்கன் வலி
விலகு பூதக்கணம் வெருட்டும் வேடத்தின
திலகம் ஆரும் பொழில் சூழ்ந்த தேவன்கு
அலர் தயங்கும் முடி அடிகள் வேடங்களே

[8]
துளக்கம் இல்லாதன; தூய தோற்றத்தன;
விளக்கம் ஆக்கு(வ்)வன வெறி வண்டு ஆரும் பொழில்
திளைக்கும் தேவன்குடி, திசைமுகனோடு மால்
அளக்க ஒண்ணா வண்ணத்து அடிகள் வேடங்களே

[9]
செரு மருதம் துவர்த் தேர், அமண் ஆதர்கள்
உரு மருவப்படாத் தொழும்பர்தம் உரை கொளேல்!
திரு மருவும் பொய்கை சூழ்ந்த தேவன்கு
அருமருந்து ஆவன, அடிகள் வேடங்களே!

[10]
சேடர் தேவன்குடித் தேவர் தேவன்தனை,
மாடம் ஓங்கும் பொழில் மல்கு தண் காழியான்-
நாட வல்ல தமிழ் ஞானசம்பந்தன
பாடல் பத்தும் வல்லார்க்கு இல்லை ஆம், பாவமே.

[11]
Back to Top

This page was last modified on Wed, 28 Feb 2024 01:04:02 -0500
          send corrections and suggestions to admin @ sivaya.org

thirumurai list