சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Search this site with
song/pathigam/paasuram numbers
or words in any language

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

5.034   திருநாவுக்கரசர்   தேவாரம்

திருநெய்த்தானம் - திருக்குறுந்தொகை அருள்தரு வாலாம்பிகையம்மை உடனுறை அருள்மிகு நெய்யாடியப்பர் திருவடிகள் போற்றி
Audio: https://www.youtube.com/watch?v=ENhJ98FOXU0  
கொல்லியான், குளிர் தூங்கு குற்றாலத்தான்,
புல்லியார் புரம்மூன்றும் எரிசெய்தவன்,
நெல்லியான், நிலை ஆன நெய்த்தானனைச்
சொல்லி மெய் தொழுவார் சுடர்வாணரே.


[ 1]


இரவனை, இடு வெண்தலை ஏந்தியை,
பரவனை, படையார் மதில் மூன்றையும்
நிரவனை, நிலைஆன நெய்த்தானனை,
குரவனை, தொழுவார் கொடிவாணரே.


[ 2]


ஆன் இடைஐந்தும் ஆடுவர்; ஆர் இருள்
கான் இடை நடம் ஆடுவர்; காண்மினோ!
தேன் இடை மலர் பாயும் நெய்த்தானனை
வான் இடைத் தொழுவார் வலிவாணரே.


[ 3]


விண்டவர் புரம்மூன்றும் வெண் நீறு எழக்
கண்டவன், கடிது ஆகிய நஞ்சினை
உண்டவன்(ன்), ஒளி ஆன நெய்த்தானனைத்
தொண்டராய்த் தொழுவார் சுடர்வாணரே.


[ 4]


முன்கை நோவக் கடைந்தவர் நிற்கவே
சங்கியாது சமுத்திர நஞ்சு உண்டான்,
நங்கையோடு நவின்ற நெய்த்தானனைத்
தம் கையால்-தொழுவார் தலைவாணரே.


[ 5]


Go to top
சுட்ட நீறு மெய் பூசி, சுடலையுள்
நட்டம் ஆடுவர், நள் இருள் பேயொடே;
சிட்டர், வானவர், தேரும் நெய்த்தானனை
இட்டம் ஆய்த் தொழுவார் இன்பவாணரே.


[ 6]


கொள்ளித் தீ-எரி வீசிக் கொடியது ஓர்
கள்ளிக் காட்டு இடை ஆடுவர்; காண்மினோ!
தெள்ளித் தேறித் தெளிந்து நெய்த்தானனை
உள்ளத்தால்-தொழுவார் உம்பர்வாணரே.


[ 7]


உச்சிமேல் விளங்கும்(ம்) இளவெண்பிறை
பற்றி ஆடு அரவோடும் சடைப் பெய்தான்,
நெற்றி ஆர் அழல் கண்ட நெய்த்தானனைச்
சுற்றி மெய் தொழுவார் சுடர்வாணரே.


[ 8]


மாலொடும், மறை ஓதிய நான்முகன்,
காலொடும் முடி காண்பு அரிது ஆயினான்;
சேலொடும் செருச் செய்யும் நெய்த்தானனை
மாலொடும் தொழுவார் வினை வாடுமே.


[ 9]


வலிந்த தோள் வலி வாள் அரக்கன்தனை
நெருங்க நீள் வரை ஊன்று நெய்த்தானனார்
புரிந்து கைந்நரம்போடு இசை பாடலும்
பரிந்தனை, பணிவார் வினை பாறுமே.


[ 10]


Go to top

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருநெய்த்தானம்
1.015   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   மை ஆடிய கண்டன், மலை
Tune - நட்டபாடை   (திருநெய்த்தானம் நெய்யாடியப்பர் வாலாம்பிகையம்மை)
4.037   திருநாவுக்கரசர்   தேவாரம்   காலனை வீழச் செற்ற கழல்
Tune - திருநேரிசை   (திருநெய்த்தானம் நெய்யாடியப்பர் வாலாம்பிகையம்மை)
4.089   திருநாவுக்கரசர்   தேவாரம்   பார் இடம் சாடிய பல்
Tune - திருவிருத்தம்   (திருநெய்த்தானம் நெய்யாடியப்பர் வாலாம்பிகையம்மை)
5.034   திருநாவுக்கரசர்   தேவாரம்   கொல்லியான், குளிர் தூங்கு குற்றாலத்தான்,
Tune - திருக்குறுந்தொகை   (திருநெய்த்தானம் நெய்யாடியப்பர் வாலாம்பிகையம்மை)
6.041   திருநாவுக்கரசர்   தேவாரம்   வகை எலாம் உடையாயும் நீயே
Tune - திருத்தாண்டகம்   (திருநெய்த்தானம் நெய்யாடியப்பர் வாலாம்பிகையம்மை)
6.042   திருநாவுக்கரசர்   தேவாரம்   மெய்த்தானத்து அகம்படியுள் ஐவர் நின்று
Tune - திருத்தாண்டகம்   (திருநெய்த்தானம் நெய்யாடியப்பர் வாலாம்பிகையம்மை)

This page was last modified on Sun, 31 Mar 2024 02:36:43 -0400
          send corrections and suggestions to admin @ sivaya.org

thirumurai song