sivasiva.org
Search this site with
song/pathigam/paasuram numbers
Or Tamil/English words

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  
3.044   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   3 th/nd Thirumurai (கௌசிகம்   Location: திருக்கழிப்பாலை God: பால்வண்ணநாதர் Goddess: வேதநாயகியம்மை) திருக்கழிப்பாலை ; அருள்தரு வேதநாயகியம்மை உடனுறை அருள்மிகு பால்வண்ணநாதர் திருவடிகள் போற்றி )
Audio: https://www.youtube.com/watch?v=JAw1peLxdJo  
வெந்த குங்கிலியப்புகை விம்மவே
கந்தம் நின்று உலவும் கழிப்பாலையார்
அந்தமும்(ம்) அளவும்(ம்) அறியாதது ஓர்
சந்தமால், அவர் மேவிய சந்தமே.


[ 1]


வான் இலங்க விளங்கும் இளம்பிறை-
தான் அலங்கல் உகந்த தலைவனார்
கான் இலங்க வரும் கழிப்பாலையார்
மான் நலம் மடநோக்கு உடையாளொடே.


[ 2]


கொடி கொள் ஏற்றினர்; கூற்றை உதைத்தனர்
பொடி கொள் மார்பினில் பூண்டது ஓர் ஆமையர்;
கடி கொள் பூம்பொழில் சூழ் கழிப்பாலையுள
அடிகள் செய்வன ஆர்க்கு அறிவு ஒண்ணுமே?


[ 3]


பண் நலம் பட வண்டு அறை கொன்றையின்
தண் அலங்கல் உகந்த தலைவனார்
கண் நலம் கவரும் கழிப்பாலையுள
அண்ணல்; எம் கடவுள்(ள்) அவன் அல்லனே?


[ 4]


ஏரின் ஆர் உலகத்து இமையோரொடும்
பாரினார் உடனே பரவப்படும்,
காரின் ஆர் பொழில் சூழ், கழிப்பாலை எம்
சீரினார் கழலே சிந்தை செய்(ம்)மினே!


[ 5]


Go to top
துள்ளும் மான்மறி அம் கையில் ஏந்தி, ஊர்
கொள்வனார், இடு வெண்தலையில் பலி;
கள்வனார்; உறையும் கழிப்பாலையை
உள்ளுவார் வினை ஆயின ஓயுமே.


[ 6]


மண்ணின் ஆர் மலி செல்வமும், வானமும்,
எண்ணி, நீர் இனிது ஏத்துமின்-பாகமும்
பெண்ணினார், பிறை நெற்றியொடு உற்ற முக்
கண்ணினார், உறையும் கழிப்பாலையே!


[ 7]


இலங்கை மன்னனை ஈர்-ஐந்து இரட்டிதோள
துலங்க ஊன்றிய தூ மழுவாளினார்
கலங்கள் வந்து உலவும், கழிப்பாலையை
வலம் கொள்வார் வினை ஆயின மாயுமே.


[ 8]


ஆட்சியால் அலரானொடு மாலும் ஆய்த்
தாட்சியால் அறியாது தளர்ந்தனர்;
காட்சியால் அறியான் கழிப்பாலையை
மாட்சியால்-தொழுவார் வினை மாயுமே.


[ 9]


செய்ய நுண் துவர் ஆடையினாரொடு
மெய்யின் மாசு பிறக்கிய வீறு இலாக்
கையர் கேண்மை எனோ? கழிப்பாலை எம்
ஐயன் சேவடியே அடைந்து உய்(ம்)மினே!


[ 10]


Go to top
அம் தண் காழி அருமறை ஞானசம்-
பந்தன், பாய் புனல் சூழ் கழிப்பாலையைச்
சிந்தையால் சொன்ன செந்தமிழ் வல்லவர்
முந்தி வான் உலகு ஆடல் முறைமையே.


[ 11]



Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருக்கழிப்பாலை
2.021   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   புனல் ஆடிய புன்சடையாய்! அரணம்அனல்
Tune - இந்தளம்   (திருக்கழிப்பாலை பால்வண்ணநாதர் வேதநாயகியம்மை)
3.044   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   வெந்த குங்கிலியப்புகை விம்மவேகந்தம் நின்று
Tune - கௌசிகம்   (திருக்கழிப்பாலை பால்வண்ணநாதர் வேதநாயகியம்மை)
4.006   திருநாவுக்கரசர்   தேவாரம்   வன பவளவாய் திறந்து, வானவர்க்கும்
Tune - காந்தாரம்   (திருக்கழிப்பாலை பால்வண்ணநாதர் வேதநாயகியம்மை)
4.030   திருநாவுக்கரசர்   தேவாரம்   நங்கையைப் பாகம் வைத்தார்; ஞானத்தை
Tune - திருநேரிசை   (திருக்கழிப்பாலை பால்வண்ணநாதர் வேதநாயகியம்மை)
4.106   திருநாவுக்கரசர்   தேவாரம்   நெய்தல் குருகு தன் பிள்ளை
Tune - திருவிருத்தம்   (திருக்கழிப்பாலை அக்கினீசுவரர் கருந்தார்க்குழலியம்மை)
5.040   திருநாவுக்கரசர்   தேவாரம்   வண்ணமும் வடிவும் சென்று கண்டிலள்;
Tune - திருக்குறுந்தொகை   (திருக்கழிப்பாலை பால்வண்ணநாதர் வேதநாயகியம்மை)
6.012   திருநாவுக்கரசர்   தேவாரம்   ஊன் உடுத்தி, ஒன்பது வாசல்
Tune - திருத்தாண்டகம்   (திருக்கழிப்பாலை பால்வண்ணநாதர் வேதநாயகியம்மை)
7.023   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   செடியேன் தீவினையில்-தடுமாறக் கண்டாலும்,
Tune - நட்டராகம்   (திருக்கழிப்பாலை பால்வண்ணநாதர் பொற்பதவேதநாயகியம்மை)

This page was last modified on Sat, 24 Feb 2024 17:27:32 +0000
          send corrections and suggestions to admin @ sivaya.org   https://www.sivaya.org/thirumurai_song.php?pathigam_no=3.044;