![]() | sivasiva.org |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Audio: https://www.youtube.com/watch?v=zCMa42N_hJg
5.003
திருநாவுக்கரசர்
தேவாரம்
5 th/nd Thirumurai (திருக்குறுந்தொகை Location: திருநெல்வாயில் அரத்துறை God: Goddess: ) திருநெல்வாயில் அரத்துறை ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
கடவுளை, கடலுள்(ள்) எழு நஞ்சு உண்ட
உடல் உளானை, ஒப்பாரி இலாத எம்
அடல் உளானை, அரத்துறை மேவிய
சுடர் உளானை,-கண்டீர்-நாம் தொழுவதே.
[ 1]
கரும்பு ஒப்பானை, கரும்பினில் கட்டியை,
விரும்பு ஒப்பானை, விண்ணோரும் அறிகிலா
அரும்பு ஒப்பானை, அரத்துறை மேவிய
சுரும்பு ஒப்பானை, - கண்டீர்-நாம் தொழுவதே.
[ 2]
ஏறு ஒப்பானை, எல்லா உயிர்க்கும்(ம்) இறை
வேறு ஒப்பானை, விண்ணோரும் அறிகிலா
ஆறு ஒப்பானை, அரத்துறை மேவிய
ஊறு ஒப்பானை,-கண்டீர்-நாம் தொழுவதே.
[ 3]
பரப்பு ஒப்பானை, பகல் இருள் நன்நிலா
இரப்பு ஒப்பானை, இளமதி சூடிய
அரப்பு ஒப்பானை, அரத்துறை மேவிய
சுரப்பு ஒப்பானை,-கண்டீர்-நாம் தொழுவதே.
[ 4]
நெய் ஒப்பானை, நெய்யில் சுடர் போல்வது ஓர்
மெய் ஒப்பானை,-விண்ணோரும் அறிகிலார்-
ஐ ஒப்பானை, அரத்துறை மேவிய
கை ஒப்பானை,-கண்டீர்-நாம் தொழுவதே.
[ 5]
Go to top
நிதி ஒப்பானை, நிதியின் கிழவனை,
விதி ஒப்பானை,-விண்ணோரும் அறிகிலார்-
அதி ஒப்பானை, அரத்துறை மேவிய
கதி ஒப்பானை,-கண்டீர்-நாம் தொழுவதே.
[ 6]
புனல் ஒப்பானை, பொருந்தலர் தம்மையே
மினல் ஒப்பானை,-விண்ணோரும் அறிகிலார்-
அனல் ஒப்பானை,- அரத்துறை மேவிய
கனல் ஒப்பானை, - கண்டீர்-நாம் தொழுவதே.
[ 7]
பொன் ஒப்பானை, பொன்னில் சுடர் போல்வது ஓர்
மின் ஒப்பானை,-விண்ணோரும் அறிகிலார்-
அன் ஒப்பானை, அரத்துறை மேவிய
தன் ஒப்பானை, - கண்டீர்- நாம் தொழுவதே.
[ 8]
காழியானை, கன விடை ஊரும் மெய்
வாழியானை, வல்லோரும் என்ற இன்னவர்
ஆழியான் பிரமற்கும் அரத்துறை
ஊழியானை, கண்டீர்- நாம் தொழுவதே.
[ 9]
கலை ஒப்பானை, கற்றார்க்கு ஓர் அமுதினை,
மலை ஒப்பானை, மணி முடி ஊன்றிய
அலை ஒப்பானை, அரத்துறை மேவிய
நிலை ஒப்பானை,-கண்டீர்-நாம் தொழுவதே.
[ 10]
Go to top
Thevaaram Link
- Shaivam Link
Other song(s) from this location: திருநெல்வாயில் அரத்துறை
2.090
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
எந்தை! ஈசன்! எம்பெருமான்! ஏறு
Tune - பியந்தைக்காந்தாரம்
(திருநெல்வாயில் அரத்துறை அரத்துறைநாதர் ஆனந்தநாயகியம்மை)
5.003
திருநாவுக்கரசர்
தேவாரம்
கடவுளை, கடலுள்(ள்) எழு நஞ்சு
Tune - திருக்குறுந்தொகை
(திருநெல்வாயில் அரத்துறை )
7.003
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
கல்வாய் அகிலும் கதிர் மா
Tune - இந்தளம்
(திருநெல்வாயில் அரத்துறை அரத்துறைநாதர் ஆனந்தநாயகியம்மை)
This page was last modified on Sat, 24 Feb 2024 17:27:32 +0000