சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Search this site with
song/pathigam/paasuram numbers
or words in any language

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS   Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

Ganesha Bhajans     

Shivan Bhajans     

Murugan Bhajans     

Durga Bhajans     

Krishna Bhajans     

Karuppar Bhajans     

முருகன்   - பச்சை மயில் வாகனனே  
பச்சை மயில் வாகனனே – சிவ
பால சுப்ரமணியனே வா
இங்கு இச்சையெல்லாம் உன் மேலே வைத்தேன்
எள்ளளவும் பயமில்லையே(பச்சை)

கொச்சை மொழியானாலும் – உன்னை
கொஞ்சி கொஞ்சி பாடிடுவேன்
சர்ச்சை எல்லாம் அழிந்ததப்பா – எங்கும்
சாந்தம் நிறைந்ததப்பா(பச்சை)

நெஞ்சமதில் கோயில் அமைத்து – அங்கு
நேர்மையெனும் தீபம் வைத்து
செஞ்சிலம்பு கொஞ்சிடவே – வா முருகா
சேவல் கொடி மயில் வீரா(பச்சை)

வெள்ளம் அது பள்ளந்தனிலே – பாயும்
தண்ணி போல் உள்ளந்தனிலே – ‍‍ நீ
மெல்ல மெல்ல புகுந்து விட்டாய் – எந்தன்
கள்ளமெல்லாம் கரைந்ததப்பா(பச்சை)

ஆறுபடை வீடுடையவா
எனக்கு ஆறுதலை தரும் தேவா
2)
நீ ஏறுமயில் ஏறி வருவாய் – அப்பா
எங்கும் நிறைந்தவனே
நீ ஏறுமயில் ஏறி வருவாய் – முருகா
எங்கும் நிறைந்தவனே —- பச்சை

அலைகடல் ஓரத்திலே – என்
அன்பான சண்முகனே – நீ
அலையா மனம் தந்தாய் – உனக்கு
அனந்த கோடி நமஸ்காரம்.
நீ அலையா மனம் தந்தாய்
உனக்கு அனந்த கோடி நமஸ்காரம்.

பச்சை மயில் வாகனனே – சிவ
பால சுப்ரமணியனே வா
இங்கு இச்சையெல்லாம் உன் மேலே வைத்தேன்
எள்ளளவும் பயமில்லையே முருகா
எள்ளளவும் பயமில்லையே(பச்சை)
Add (additional) Audio/Video Link
Other முருகன் songs

31 - அள்ளிக் கொடுப்பதில் வல்லமை பெற்றவன் அப்பன் பழனியப்பன் (முருகன் )

61 - அழகான பழனிமலை (முருகன் )

44 - அழகு அழகு அழகு நம் முருகன் அழகு (முருகன் )

2 - அவனாசிப் பத்து (முருகன் )

39 - ஆடிப்பாடி உன்னைத்தானே தேடிவாரோமே (முருகன் )

24 - ஆடு மயிலே கூத்தாடு மயிலே (முருகன் )

4 - ஆடுக ஊஞ்சல் ஆடுகவே (முருகன் )

1 - ஆறுமுக சுவாமி விருத்தம் (முருகன் )

32 - ஆலோலம் பாடுகுற வள்ளியம்மை (முருகன் )

42 - ஈசனோடு பேசியது போதுமே (முருகன் )

37 - எத்தனை அலங்காரம் முத்தமிழ் முருகனுக்கு (முருகன் )

23 - என்னப்பனே ... என் அய்யனே (முருகன் )

5 - என்னோடும் பேசு சாமிநாதா (முருகன் )

6 - ஒயிலாட்டம் (முருகன் )

33 - ஓரு தரம் சரவணபவா என்று சொல்பவர் (முருகன் )

58 - காவடிப்பாட்டு (முருகன் )

45 - கொடுமளுர் முருகன் பதிகம் - பூ மேவு சண்முக விலாசமும் (முருகன் )

30 - சந்தமிகு செந்தமிழில் மாலை தொடுத்தேன் (முருகன் )

59 - சின்ன சின்ன முருகா முருகா (முருகன் )

43 - சுட்டதிரு நீறெடுத்து (முருகன் )

21 - சொல்லுங்கோ.. வேல்முருகா வேல்முருகா வேல்! (முருகன் )

34 - தங்கரதம் ஒன்று இங்கு அசைந்து வரச் (முருகன் )

20 - நீங்கள் வாருமே...பெருத்த பாருளீர் (முருகன் )

27 - நீயல்லால் தெய்வமில்லை (முருகன் )

56 - நீரய்யா காவேரி (முருகன் )

16 - பச்சை மயில் வாகனனே (முருகன் )

38 - பழனிமலை படியேறு (முருகன் )

8 - பாசி படர்ந்த மலை முருகையா (முருகன் )

10 - மயிலே மயிலே நீ ஆடு (முருகன் )

60 - முத்தான முத்துக் குமரா (முருகன் )

63 - முத்துக்குமாரனடி அம்மா (முருகன் )

25 - முருகா முருகா முருகா முருகா அரகரோகரா (முருகன் )

41 - ரோஜாப்பூ மணக்குதென்று (முருகன் )

52 - வருவாண்டி தருவாண்டி மலையாண்டி (முருகன் )

40 - வாவா முருகா வடிவேலா (முருகன் )

22 - வேலவா வடி வேலவா (முருகன் )

62 - வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை (முருகன் )

3 - வேல் வேல் வடிவேல் வேதாந்த வடிவேல் (முருகன் )

7 - ஹர ஹர சுப்ரமண்யம் (முருகன் )

This page was last modified on Sun, 03 Mar 2024 19:53:03 -0500
          send corrections and suggestions to admin @ sivaya.org

bhajan song