Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Gujarathi Oriya Singala Tibetian Thai Urdu Cyrillic/Russian
Aayiram | Aazhvaar | Thalam | Prabandham | Song # from | Song # to | Counts |
முதல் ஆயிரம் | பெரியாழ்வார் | திருவில்லிபுத்தூர் | திருப்பல்லாண்டு | 1.0 | 12.0 | 12 |
முதல் ஆயிரம் | பெரியாழ்வார் | திருவில்லிபுத்தூர் | பெரியாழ்வார் திருமொழி | 13.0 | 473.0 | 461 |
முதல் ஆயிரம் | ஆண்டாள் | திருவில்லிபுத்தூர் | திருப்பாவை | 474.0 | 503.0 | 30 |
முதல் ஆயிரம் | ஆண்டாள் | திருவில்லிபுத்தூர் | நாச்சியார் திருமொழி | 504.0 | 646.0 | 143 |
முதல் ஆயிரம் | குலசேகராழ்வார் | பெருமாள் திருமொழி | 647.0 | 751.0 | 105 | |
முதல் ஆயிரம் | திருமழிசை ஆழ்வார் | திருச்சந்த விருத்தம் | 752.0 | 871.0 | 120 | |
முதல் ஆயிரம் | தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் | திருமாலை | 872.0 | 916.0 | 45 | |
முதல் ஆயிரம் | தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் | திருப்பள்ளி எழுச்சி | 917.0 | 926.0 | 10 | |
முதல் ஆயிரம் | திருப்பாணாழ்வார் | உறையூர் | அமலன் ஆதிபிரான் | 927.0 | 936.0 | 10 |
முதல் ஆயிரம் | மதுரகவி ஆழ்வார் | கண்ணி நுண் சிறுத்தாம்பு | 937.0 | 947.0 | 11 | |
இரண்டாம் ஆயிரம் | திருமங்கை ஆழ்வார் | பெரிய திருமொழி | 948.0 | 2031.0 | 1084 | |
இரண்டாம் ஆயிரம் | திருமங்கை ஆழ்வார் | திருக்குறுந் தாண்டகம் | 2032.0 | 2051.0 | 20 | |
இரண்டாம் ஆயிரம் | திருமங்கை ஆழ்வார் | திரு நெடுந்தாண்டகம் | 2052.0 | 2081.0 | 30 | |
மூன்றாம் ஆயிரம் | பொய்கை ஆழ்வார் | காஞ்சிபுரம் | முதல் திருவந்தாதி | 2082.0 | 2181.0 | 100 |
மூன்றாம் ஆயிரம் | பூதத்தாழ்வார் | மாமல்லபுரம் | இரண்டாம் திருவந்தாதி | 2182.0 | 2281.0 | 100 |
மூன்றாம் ஆயிரம் | பேயாழ்வார் | மயிலாப்பூர் | மூன்றாம் திருவந்தாதி | 2282.0 | 2381.0 | 100 |
மூன்றாம் ஆயிரம் | திருமழிசை ஆழ்வார் | நான்முகன் திருவந்தாதி | 2382.0 | 2477.0 | 96 | |
மூன்றாம் ஆயிரம் | நம்மாழ்வார் | ஆழ்வார்திருநகரி | திருவிருத்தம் | 2478.0 | 2577.0 | 100 |
மூன்றாம் ஆயிரம் | நம்மாழ்வார் | ஆழ்வார்திருநகரி | திருவாசிரியம் | 2578.0 | 2584.0 | 7 |
மூன்றாம் ஆயிரம் | திருமழிசை ஆழ்வார் | காஞ்சிபுரம் | பெரிய திருவந்தாதி | 2585.0 | 2589.0 | 5 |
மூன்றாம் ஆயிரம் | இயற்பா | காஞ்சிபுரம் | நம்மாழ்வார் | 2590.0 | 2671.0 | 82 |
மூன்றாம் ஆயிரம் | திருமங்கை ஆழ்வார் | திரு எழு கூற்றிருக்கை | 2672.0 | 2672.0 | 1 | |
மூன்றாம் ஆயிரம் | திருமங்கை ஆழ்வார் | சிறிய திருமடல் | 2673.0 | 2712.0 | 40 | |
மூன்றாம் ஆயிரம் | திருமங்கை ஆழ்வார் | பெரிய திருமடல் | 2713.0 | 2790.0 | 78 | |
மூன்றாம் ஆயிரம் | திருவரங்கத்தமுதனார் | இராமானுச நூற்றந்தாதி | 2791.0 | 2898.0 | 108 | |
நான்காம் ஆயிரம் | நம்மாழ்வார் | திருவாய் மொழி | 2899.0 | 4000.0 | 1102 |
1.0
திருப்பல்லாண்டு -பாசுரம்
பாடல் # 1
பெரியாழ்வார்
திருப்பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடிநூறாயிரம் மல்லாண்டதிண்தோள்மணிவண்ணா. உன் செவ்வடிசெவ்விதிருக்காப்பு. |
13.0
பெரியாழ்வார் திருமொழி -பாசுரம்
பாடல் # 1
பெரியாழ்வார்
பெரியாழ்வார் திருமொழி கண்ணன்திருவவதாரம் வண்ண மாடங்கள் சூழ் திருக்கோட்டியூர்க் கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில் எண்ணெய் சுண்ணம் எதிரெதிர் தூவிடக் கண்ணன் முற்றம் கலந்து அளறு ஆயிற்றே |
474.0
திருப்பாவை -பாசுரம்
பாடல் # 1
ஆண்டாள்
திருப்பாவை மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால் நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர் சீர் மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள் கூர் வேற் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன் ஏர் ஆர்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம் கார் மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான் நாராயணனே நமக்கே பறை தருவான் பாரோர் புகழப் படிந்து-ஏலோர் எம்பாவாய் |
504.0
நாச்சியார் திருமொழி -பாசுரம்
பாடல் # 1
ஆண்டாள்
நாச்சியார் திருமொழி தைத்திங்களில் காமனை வழிபடல் தை ஒரு திங்களும் தரை விளக்கித் தண் மண்டலம் இட்டு மாசி முன்னாள் ஐய நுண் மணல் கொண்டு தெரு அணிந்து அழகினுக்கு அலங்கரித்து அனங்கதேவா உய்யவும் ஆம்கொலோ? என்று சொல்லி உன்னையும் உம்பியையும் தொழுதேன் வெய்யது ஓர் தழல் உமிழ் சக்கரக் கை வேங்கடவற்கு என்னை விதிக்கிற்றியே |
647.0
பெருமாள் திருமொழி -பாசுரம்
பாடல் # 1
குலசேகராழ்வார்
பெருமாள் திருமொழி அரங்கப்பெருமானை என்று கண்டு மகிழ்வேன் எனல் இருள் இரியச் சுடர்-மணிகள் இமைக்கும் நெற்றி இனத்துத்தி அணி பணம் ஆயிரங்கள் ஆர்ந்த அரவு-அரசப் பெருஞ் சோதி அனந்தன் என்னும் அணி விளங்கும் உயர் வெள்ளை-அணையை மேவித் திருவரங்கப் பெரு நகருள் தெண்ணீர்ப் பொன்னி திரைக் கையால் அடி வருடப் பள்ளிகொள்ளும் கருமணியைக் கோமளத்தைக் கண்டுகொண்டு என் கண்ணிணைகள் என்றுகொலோ களிக்கும் நாளே |
752.0
திருச்சந்த விருத்தம் -பாசுரம்
பாடல் # 1
திருமழிசை ஆழ்வார்
திருச்சந்த விருத்தம் பூ நிலாய ஐந்துமாய் புனற்கண் நின்ற நான்குமாய் தீ நிலாய மூன்றுமாய் சிறந்த கால் இரண்டுமாய் மீ நிலாயது ஒன்றும் ஆகி வேறு வேறு தன்மையாய் நீ நிலாய வண்ணம் நின்னை யார் நினைக்க வல்லரே? |
872.0
திருமாலை -பாசுரம்
பாடல் # 1
தொண்டர் அடிப்பொடி ஆழ்வார்
திருமாலை காவலிற் புலனை வைத்து கலிதன்னைக் கடக்கப் பாய்ந்து நாவலிட்டு உழிதர்கின்றோம் நமன்-தமர் தலைகள் மீதே மூவுலகு உண்டு உமிழ்ந்த முதல்வ நின் நாமம் கற்ற ஆவலிப்பு உடைமை கண்டாய் அரங்க மா நகருளானே |
917.0
திருப்பள்ளி எழுச்சி -பாசுரம்
பாடல் # 1
தொண்டர் அடிப்பொடி ஆழ்வார்
திருப்பள்ளி எழுச்சி கதிரவன் குணதிசைச் சிகரம் வந்து அணைந்தான் கனை இருள் அகன்றது காலை அம் பொழுதாய் மது விரிந்து ஒழுகின மா மலர் எல்லாம் வானவர் அரசர்கள் வந்து வந்து ஈண்டி எதிர்திசை நிறைந்தனர் இவரொடும் புகுந்த இருங் களிற்று ஈட்டமும் பிடியொடு முரசும் அதிர்தலில் அலை-கடல் போன்றுளது எங்கும் அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே |
927.0
அமலன் ஆதிபிரான் -பாசுரம்
பாடல் # 1
திருப்பாணாழ்வார்
அமலன் ஆதிபிரான் அமலன் ஆதிபிரான் அடியார்க்கு என்னை ஆட்படுத்த விமலன் விண்ணவர்கோன் விரையார் பொழில் வேங்கடவன் நிமலன் நின்மலன் நீதி வானவன் நீள் மதில் அரங்கத்து அம்மான் திருக் கமல பாதம் வந்து என் கண்ணின் உள்ளன ஒக்கின்றதே |
937.0
கண்ணி நுண் சிறுத்தாம்பு -பாசுரம்
பாடல் # 1
மதுரகவி ஆழ்வார்
கண்ணி நுண் சிறுத்தாம்பு கண்ணி நுண் சிறுத் தாம்பினால் கட்டு உண்ணப் பண்ணிய பெரு மாயன் என் அப்பனில் நண்ணித் தென் குருகூர் நம்பி என்றக்கால் அண்ணிக்கும் அமுது ஊறும் என் நாவுக்கே |
948.0
பெரிய திருமொழி -பாசுரம்
பாடல் # 1
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி பெரிய திருமந்திரத்தின் மகிமை வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால் பெருந் துயர் இடும்பையில் பிறந்து கூடினேன் கூடி இளையவர்-தம்மோடு அவர் தரும் கலவியே கருதி ஓடினேன் ஓடி உய்வது ஓர் பொருளால் உணர்வு எனும் பெரும் பதம் திரிந்து நாடினேன் நாடி நான் கண்டுகொண்டேன் - நாராயணா என்னும் நாமம் |
2032.0
திருக்குறுந் தாண்டகம் -பாசுரம்
பாடல் # 1
திருமங்கை ஆழ்வார்
திருக்குறுந் தாண்டகம் திருக்குறுந் தாண்டகம் நிதியினை பவளத் தூணை நெறிமையால் நினைய வல்லார் கதியினை கஞ்சன் மாளக் கண்டு முன் அண்டம் ஆளும் மதியினை மாலை வாழ்த்தி வணங்கி என் மனத்து வந்த விதியினைக் கண்டு கொண்ட தொண்டனேன்-விடுகிலேனே |
2052.0
திரு நெடுந்தாண்டகம் -பாசுரம்
பாடல் # 1
திருமங்கை ஆழ்வார்
திரு நெடுந்தாண்டகம் திரு நெடுந்தாண்டகம் மின் உரு ஆய் முன் உருவில் வேதம் நான்கு ஆய் விளக்கு ஒளி ஆய் முளைத்து எழுந்த திங்கள்-தான் ஆய் பின் உரு ஆய் முன் உருவில் பிணி மூப்பு இல்லாப் பிறப்பிலி ஆய் இறப்பதற்கே எண்ணாது எண்ணும் பொன் உரு ஆய் மணி உருவில் பூதம் ஐந்து ஆய் புனல் உரு ஆய் அனல் உருவில் திகழும் சோதி தன் உரு ஆய் என் உருவில் நின்ற எந்தை தளிர் புரையும் திருவடி என் தலைமேலவே |
2082.0
முதல் திருவந்தாதி -பாசுரம்
பாடல் # 1
பொய்கை ஆழ்வார்
முதல் திருவந்தாதி முதல் திருவந்தாதி வையம் தகளியா வார் கடலே நெய் ஆக வெய்ய கதிரோன் விளக்கு ஆக செய்ய சுடர்-ஆழியான் அடிக்கே சூட்டினென் சொல்-மாலை- இடர்-ஆழி நீங்குகவே என்று |
2182.0
இரண்டாம் திருவந்தாதி -பாசுரம்
பாடல் # 1
பூதத்தாழ்வார்
இரண்டாம் திருவந்தாதி இரண்டாம் திருவந்தாதி அன்பே தகளியா ஆர்வமே நெய் ஆக இன்பு உருகு சிந்தை இடு திரியா நன்பு உருகி ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு ஞானத் தமிழ் புரிந்த நான் |
2282.0
மூன்றாம் திருவந்தாதி -பாசுரம்
பாடல் # 1
பேயாழ்வார்
மூன்றாம் திருவந்தாதி மூன்றாம் திருவந்தாதி திருக் கண்டேன் பொன் மேனி கண்டேன் திகழும் அருக்கன் அணி நிறமும் கண்டேன் செருக் கிளரும் பொன் ஆழி கண்டேன் புரி சங்கம் கைக் கண்டேன் என் ஆழி வண்ணன்பால் இன்று |
2382.0
நான்முகன் திருவந்தாதி -பாசுரம்
பாடல் # 1
திருமழிசை ஆழ்வார்
நான்முகன் திருவந்தாதி இயற்பா நான்முகனை நாராயணன் படைத்தான் நான்முகனும் தான் முகமாய்ச் சங்கரனைத் தான் படைத்தான் யான் முகமாய் அந்தாதி மேலிட்டு அறிவித்தேன் ஆழ் பொருளை சிந்தாமல் கொள்மின் நீர் தேர்ந்து |
2478.0
திருவிருத்தம் -பாசுரம்
பாடல் # 1
நம்மாழ்வார்
திருவிருத்தம் திருவிருத்தம் பொய்ந் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும் இந் நின்ற நீர்மை இனி யாம் உறாமை உயிர் அளிப்பான் எந் நின்ற யோனியுமாய்ப் பிறந்தாய் இமையோர் தலைவா! மெய்ந் நின்று கேட்டருளாய் அடியேன் செய்யும் விண்ணப்பமே |
2578.0
திருவாசிரியம் -பாசுரம்
பாடல் # 1
நம்மாழ்வார்
திருவாசிரியம் திருவாசிரியம் செக்கர் மா முகில் உடுத்து மிக்க செஞ் சுடர்ப் பரிதி சூடி அம் சுடர் மதியம் பூண்டு பல சுடர் புனைந்த பவளச் செவ்வாய் திகழ் பசுஞ் சோதி மரகதக் குன்றம் கடலோன் கைம்மிசைக் கண்வளர்வது போல் பீதக ஆடை முடி பூண் முதலா மேதகு பல் கலன் அணிந்து சோதி வாயவும் கண்ணவும் சிவப்ப மீதிட்டுப் பச்சை மேனி மிகப் பகைப்ப நச்சு வினைக் கவர்தலை அரவின் அமளி ஏறி எறி கடல் நடுவுள் அறிதுயில் அமர்ந்து சிவன் அயன் இந்திரன் இவர் முதல் அனைத்தோர் தெய்வக் குழாங்கள் கைதொழ கிடந்த தாமரை உந்தித் தனிப் பெரு நாயக மூவுலகு அளந்த சேவடியோயே |
2585.0
பெரிய திருவந்தாதி -பாசுரம்
பாடல் # 1
திருமழிசை ஆழ்வார்
பெரிய திருவந்தாதி திருவாசிரியம் முயற்றி சுமந்து எழுந்து முந்துற்ற நெஞ்சே இயற்றுவாய் எம்மொடு நீ கூடி நயப்பு உடைய நா ஈன் தொடைக் கிளவியுள் பொதிவோம் நல் பூவைப் பூ ஈன்ற வண்ணன் புகழ் |
2590.0
நம்மாழ்வார் -பாசுரம்
பாடல் # 6
இயற்பா
நம்மாழ்வார் பெரியதிருவந்தாதி நெறி காட்டி நீக்குதியோ? நின்பால் கரு மா முறி மேனி காட்டுதியோ? மேல் நாள் அறியோமை என் செய்வான் எண்ணினாய்? கண்ணனே ஈது உரையாய் என் செய்தால் என் படோம் யாம்? |
2672.0
திரு எழு கூற்றிருக்கை -பாசுரம்
பாடல் # 1
திருமங்கை ஆழ்வார்
திரு எழு கூற்றிருக்கை இயற்பா ஒரு பேர் உந்தி இரு மலர்த் தவிசில் ஒருமுறை அயனை ஈன்றனை ஒரு முறை இரு சுடர் மீதினில் இயங்கா மும் மதிள் இலங்கை இரு கால் வளைய ஒரு சிலை ஒன்றிய ஈர் எயிற்று அழல் வாய் வாளியில் அட்டனை மூவடி நானிலம் வேண்டி முப்புரி நூலொடு மான் உரி இலங்கு மார்வினில் இரு பிறப்பு ஒரு மாண் ஆகி ஒரு முறை ஈர் அடி மூவுலகு அளந்தனை நால் திசை நடுங்க அம் சிறைப் பறவை ஏறி நால் வாய் மும் மதத்து இரு செவி ஒரு தனி வேழத்து அரந்தையை ஒருநாள் இரு நீர் மடுவுள் தீர்த்தனை முத் தீ நான்மறை ஐ வகை வேள்வி அறு தொழில் அந்தணர் வணங்கும் தன்மையை ஐம்புலன் அகத்தினுள் செறித்து நான்கு உடன் அடக்கி முக் குணத்து இரண்டு அவை அகற்றி ஒன்றினில் ஒன்றி நின்று ஆங்கு இரு பிறப்பு அறுப்போர் அறியும் தன்மையை முக் கண் நால் தோள் ஐ வாய் அரவோடு ஆறு பொதி சடையோன் அறிவு அரும் தன்மைப் பெருமையுள் நின்றனை ஏழ் உலகு எயிற்றினில் கொண்டனை கூறிய அறு சுவைப் பயனும் ஆயினை சுடர்விடும் ஐம் படை அங்கையுள் அமர்ந்தனை சுந்தர நால் தோள் முந்நீர் வண்ண நின் ஈர் அடி ஒன்றிய மனத்தால் ஒரு மதி முகத்து மங்கையர் இருவரும் மலர் அன அங்கையில் முப்பொழுதும் வருட அறிதுயில் அமர்ந்தனை நெறி முறை நால் வகை வருணமும் ஆயினை மேதகும் ஐம் பெரும் பூதமும் நீயே அறுபதம் முரலும் கூந்தல் காரணம் ஏழ் விடை அடங்கச் செற்றனை அறு வகைச் சமயமும் அறிவு அரு நிலையினை ஐம்பால் ஓதியை ஆகத்து இருத்தினை அறம் முதல் நான்கு அவை ஆய் மூர்த்தி மூன்று ஆய் இரு வகைப் பயன் ஆய் ஒன்று ஆய் விரிந்து நின்றனை குன்றா மது மலர்ச் சோலை வண் கொடிப் படப்பை வரு புனல் பொன்னி மா மணி அலைக்கும் செந்நெல் ஒண் கழனித் திகழ் வனம் உடுத்த கற்போர் புரிசைக் கனக மாளிகை நிமிர் கொடி விசும்பில் இளம் பிறை துவக்கும் செல்வம் மல்கு தென் திருக் குடந்தை அந்தணர் மந்திர மொழியுடன் வணங்க ஆடு அரவு அமளியில் அறிதுயில் அமர்ந்த பரம நின் அடி இணை பணிவன் வரும் இடர் அகல மாற்றோ வினையே |
2710.0
சிறிய திருமடல் -பாசுரம்
பாடல் # 0
திருமங்கை ஆழ்வார்
சிறிய திருமடல் இயற்பா பேர் ஆயிரமும் பிதற்றி பெருந் தெருவே |
2713.0
பெரிய திருமடல் -பாசுரம்
பாடல் # 6
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமடல் இயற்பா மன்னிய பல்பொறிசேர் ஆயிரவாய் வாளரவின், சென்னி மணிக்குடுமித் தெய்வச் சுடர்நடுவுள், மன்னிய நாகத் தணைமேலோர் மாமலைபோல், மின்னும் மணிமகர குண்டலங்கள் வில்வீச |
2791.0
இராமானுச நூற்றந்தாதி -பாசுரம்
பாடல் # 7
திருவரங்கத்தமுதனார்
இராமானுச நூற்றந்தாதி இயற்பா பூ மன்னு மாது பொருந்திய மார்பன் புகழ் மலிந்த பா மன்னு மாறன் அடி பணிந்து உய்ந்தவன் பல் கலையோர் தாம் மன்ன வந்த இராமாநுசன் சரணாரவிந்தம் நாம் மன்னி வாழ நெஞ்சே சொல்லுவோம் அவன் நாமங்களே |
3990.0
திருவாய் மொழி -பாசுரம்
பாடல் # 0
நம்மாழ்வார்
திருவாய் மொழி ஆழ்வார் பரம பக்தியால் கனிந்து திருமாலைத் தாம் அடைந முனியே நான்முகனே முக்கண் அப்பா என் பொல்லாக் கனிவாய்த் தாமரைக் கண் கரு மாணிக்கமே என் கள்வா தனியேன் ஆர் உயிரே என் தலைமிசையாய் வந்திட்டு இனி நான் போகல் ஒட்டேன் ஒன்றும் மாயம் செய்யேல் என்னையே |