Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS   Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Urdu   Cyrillic/Russian  

முதல் ஆயிரம்   பெரியாழ்வார்  
பெரியாழ்வார் திருமொழி  

Songs from 13.0 to 473.0   ( திருவில்லிபுத்தூர் )
கண்ணன்திருவவதாரம் (13.0)   கண்ணனது திருமேனியழகு (23.0)   தாலப் பருவம் (44.0)   அம்புலிப் பருவம் (54.0)   செங்கீரைப் பருவம் (64.0)   சப்பாணிப் பருவம் (75.0)   தளர்நடைப் பருவம் (86.0)   அச்சோப் பருவம் (97.0)   புறம் புல்கல் (108.0)   கண்ணன் அப்பூச்சி காட்டுதல் (118.0)   தாய்ப்பால் உண்ண அழைத்தல் (128.0)   காது குத்தல் (139.0)   நீராட்டம் (152.0)   குழல்வாரக் காக்கையை வா எனல் (162.0)   கோல் கொண்டுவா எனல் (172.0)   பூச் சூட்டல் (182.0)   காப்பிடல் (192.0)   பாலக் கிரீடை (202.0)   ஆயர்மங்கையர் முறையீடு (213.0)   அம்மம் தர மறுத்தல் (223.0)   கண்ணனைக் கன்றின்பின் போக்கிய அன்னை இரங்குதல் (234.0)   கண்ணன் மீண்டுவருங் கோலம் கண்டு அன்னை மகிழ்தல் (244.0)   கண்ணன் மீண்டுவருங் கோலம் கண்டு கன்னியர் காமுறல் (254.0)   கோவர்த்தனகிரியைக் குடைகொண்டமை (264.0)   கண்ணன் குழல் ஊதல் (275.0)   நற்றாய் இரங்கல் (286.0)   தலைவன்பின் சென்ற மகளைக்குறித்துத் தாய் பலபடி உன்னி (297.0)   உந்தி பறத்தல் (307.0)   அனுமன் சீதைக்குக் கூறிய அடையாளம் (318.0)   திருமாலைக் கண்ட சுவடு உரைத்தல் (328.0)   திருமாலிருஞ்சோலை-1 (338.0)   திருமாலிருஞ்சோலை-2 (349.0)   திருக்கோட்டியூர் (360.0)   பத்தராய் இறப்பார் பெறும் பேறு (371.0)   திருமாலின் நாமம் இடுதல் (381.0)   கண்டம் என்னும் திருப்பதி (391.0)   திருவரங்கம் (1) (402.0)   திருவரங்கம் (2) (412.0)   எமபயம் நீக்கென அரங்கத்தரவணையானை வேண்டுதல் (423.0)   தன் தகவின்மையை அறிவித்தல் (433.0)   பண்டன்று பட்டினம் காப்பே (443.0)   திருமாலிருஞ்சோலைப் பெருமானைப் போகவிடேன் எனல் (453.0)   அடிமைப்பட்டுத் தாம் பெற்ற நன்மைகளை நினைத்துக் களித (463.0)  
Pages:    1    2  3  4  5  6  7  8  9  10  Next  Next 10
வண்ண மாடங்கள் சூழ் திருக்கோட்டியூர்க்
கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில்
எண்ணெய் சுண்ணம் எதிரெதிர் தூவிடக்
கண்ணன் முற்றம் கலந்து அளறு ஆயிற்றே[13.0]
ஓடுவார் விழுவார் உகந்து ஆலிப்பார்
நாடுவார் நம்பிரான் எங்குத்தான் என்பார்
பாடுவார்களும் பல்பறை கொட்ட நின்று
ஆடுவார்களும் ஆயிற்று ஆய்ப்பாடியே[14.0]
பேணிச் சீர் உடைப் பிள்ளை பிறந்தினில்
காணத் தாம் புகுவார் புக்குப் போதுவார்
ஆண் ஒப்பார் இவன் நேர் இல்லை காண் திரு-
வோணத்தான் உலகு ஆளும் என்பார்களே[15.0]
மேலே செல்
உறியை முற்றத்து உருட்டி நின்று ஆடுவார்
நறுநெய் பால் தயிர் நன்றாகத் தூவுவார்
செறி மென் கூந்தல் அவிழத் திளைத்து எங்கும்
அறிவு அழிந்தனர் ஆய்ப்பாடி ஆயரே   [16.0]
கொண்ட தாள் உறி கோலக் கொடுமழுத்
தண்டினர் பறியோலைச் சயனத்தர்
விண்ட முல்லையரும்பு அன்ன பல்லினர்
அண்டர் மிண்டிப் புகுந்து நெய்யாடினார்   [17.0]
கையும் காலும் நிமிர்த்துக் கடார நீர்
பைய ஆட்டிப் பசுஞ் சிறு மஞ்சளால்
ஐய நா வழித்தாளுக்கு அங்காந்திட
வையம் ஏழும் கண்டாள் பிள்ளை வாயுளே[18.0]
வாயுள் வையகம் கண்ட மடநல்லார்
ஆயர் புத்திரன் அல்லன் அருந்தெய்வம்
பாய சீர் உடைப் பண்பு உடைப் பாலகன்
மாயன் என்று மகிழ்ந்தனர் மாதரே   [19.0]
பத்து நாளும் கடந்த இரண்டாம் நாள்
எத் திசையும் சயமரம் கோடித்து
மத்த மா மலை தாங்கிய மைந்தனை
உத்தானம் செய்து உகந்தனர் ஆயரே[20.0]
மேலே செல்
கிடக்கில் தொட்டில் கிழிய உதைத்திடும்
எடுத்துக் கொள்ளில் மருங்கை இறுத்திடும்
ஒடுக்கிப் புல்கில் உதரத்தே பாய்ந்திடும்
மிடுக்கு இலாமையால் நான் மெலிந்தேன் நங்காய[21.0]
செந்நெல் ஆர் வயல் சூழ் திருக்கோட்டியூர்
மன்னு நாரணன் நம்பி பிறந்தமை
மின்னு நூல் விட்டுசித்தன் விரித்த இப்
பன்னு பாடல் வல்லார்க்கு இல்லை பாவமே[22.0]
சீதக் கடலுள் அமுது அன்ன தேவகி
கோதைக் குழலாள் அசோதைக்குப் போத்தந்த
பேதைக் குழவி பிடித்துச் சுவைத்து உண்ணும்
பாதக் கமலங்கள் காணீரே
      பவள வாயீர் வந்து காணீரே[23.0]
முத்தும் மணியும் வயிரமும் நன்பொன்னும்
தத்திப் பதித்துத் தலைப்பெய்தாற் போல் எங்கும்
பத்து விரலும் மணிவண்ணன் பாதங்கள்
ஒத்திட்டு இருந்தவா காணீரே
      ஒண்ணுதலீர் வந்து காணீரே[24.0]
பணைத்தோள் இள ஆய்ச்சி பால் பாய்ந்த கொங்கை
அணைத்து ஆர உண்டு கிடந்த இப் பிள்ளை
இணைக்காலில் வெள்ளித் தளை நின்று இலங்கும்
கணைக்கால் இருந்தவா காணீரே
      காரிகையீர் வந்து காணீரே[25.0]
மேலே செல்
உழந்தாள் நறுநெய் ஒரோர் தடா உண்ண
இழந்தாள் எரிவினால் ஈர்த்து எழில் மத்தின்
பழந்தாம்பால் ஓச்ச பயத்தால் தவழ்ந்தான்
முழந்தாள் இருந்தவா காணீரே
      முகிழ்முலையீர் வந்து காணீரே[26.0]
பிறங்கிய பேய்ச்சி முலை சுவைத்து உண்டிட்டு
உறங்குவான் போலே கிடந்த இப்பிள்ளை
மறம் கொள் இரணியன் மார்வை முன் கீண்டான்
குறங்குகளை வந்து காணீரே
      குவிமுலையீர் வந்து காணீரே[27.0]
மத்தக் களிற்று வசுதேவர் தம்முடைச்
சித்தம் பிரியாத தேவகிதன் வயிற்றில்
அத்தத்தின் பத்தாம் நாள் தோன்றிய அச்சுதன்
முத்தம் இருந்தவா காணீரே
      முகிழ்நகையீர் வந்து காணீரே[28.0]
இருங்கை மதகளிறு ஈர்க்கின்றவனைப்
பருங்கிப் பறித்துக்கொண்டு ஓடும் பரமன்தன்
நெருங்கு பவளமும் நேர்நாணும் முத்தும்
மருங்கும் இருந்தவா காணீரே
      வாணுதலீர் வந்து காணீரே[29.0]
வந்த மதலைக் குழாத்தை வலிசெய்து
தந்தக் களிறு போல் தானே விளையாடும்
நந்தன் மதலைக்கு நன்றும் அழகிய
உந்தி இருந்தவா காணீரே
      ஒளியிழையீர் வந்து காணீரே[30.0]
மேலே செல்
அதிருங் கடல்நிற வண்ணனை ஆய்ச்சி
மதுரமுலை ஊட்டி வஞ்சித்து வைத்துப்
பதறப் படாமே பழந் தாம்பால் ஆர்த்த
உதரம் இருந்தவா காணீரே
      ஒளிவளையீர் வந்து காணீரே[31.0]
பெரு மா உரலிற் பிணிப்புண்டு இருந்து அங்கு
இரு மா மருதம் இறுத்த இப் பிள்ளை
குரு மா மணிப்பூண் குலாவித் திகழும்
திருமார்வு இருந்தவா காணீரே
      சேயிழையீர் வந்து காணீரே[32.0]


Other Prabandhams:
    திருப்பல்லாண்டு     திருப்பாவை     பெரியாழ்வார் திருமொழி     நாச்சியார் திருமொழி         திருவாய் மொழி     பெருமாள் திருமொழி     திருச்சந்த விருத்தம்     திருமாலை     திருப்பள்ளி எழுச்சி     அமலன் ஆதிபிரான்     கண்ணி நுண் சிறுத்தாம்பு     பெரிய திருமொழி     திருக்குறுந் தாண்டகம்     திரு நெடுந்தாண்டகம்     முதல் திருவந்தாதி     இரண்டாம் திருவந்தாதி     மூன்றாம் திருவந்தாதி     நான்முகன் திருவந்தாதி     திருவிருத்தம்     திருவாசிரியம்     பெரிய திருவந்தாதி     நம்மாழ்வார்     திரு எழு கூற்றிருக்கை     சிறிய திருமடல்     பெரிய திருமடல்     இராமானுச நூற்றந்தாதி     திருவாய்மொழி     கண்ணிநுண்சிறுத்தாம்பு     அமலனாதிபிரான்     திருச்சந்தவிருத்தம்    
This page was last modified on Tue, 28 Dec 2021 23:58:36 -0600
 
   
    send corrections and suggestions to admin @ sivasiva.org