Search Tamil/English word or
song/pathigam/paasuram numbers.

Resulting language


Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS   Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

சைவசமயம் தீக்கை - நித்ய அனுட்டானவிதி

மூலமந்திரம் உபதேசிக்கும் மடம்
ஸ்ரீ ரவீந்திர சுவாமிகள் , கலாமடம் பாதரக்குடி ஆதீனம்.
நகரத்தார் உபதேசக் குருபீடம் (ஆண்கள்)
பாதரக்குடி - 630 807
Google Map Location:
செல்: +91 887096 85 74

நகரத்தார் உபதேசக் குருபீடம் (பெண்கள் ) - துழாவூர் , காரைக்குடி அருகே

அனுட்டானவிதி
மகாகணபதியே நம: என்று நெற்றியில் குட்டிக் கொண்டு குருவே நம : என்று தலைக்கு மேல் கைதூக்கிக் கும்பிட்டு, கவசாய நம : என்று மோதிர விரலால் தண்ணீரில் வட்டமிட்டு அஸ்திராய நம : என்று சிறிது நீரைத் தலையில் தெளித்துக் கொள்ளவும்.
ஆத்மதத்வாயநம : வித்யாதத்வாயநம : சிவதத்வாயநம : என்று மூன்று முறை தண்ணீர் உட்கொள்ளவும்.
கட்டைவிரல் மோதிரவிரல்களால் இடங்களில் தொட்டு முறையே உச்சரிக்கவும்
மார்பு -ஹ்ருதயாநம :
தலை- சிரஸேநம :
முடி- சிகாயைநம :
இருதோள்கள் - கவசாயநம :
இரு கண்கள் - நேத்ராயநம:
அஸ்த்ராயநம : என்று கூறித் தலையைச் சுற்றிச் சுண்டவும்

இடது உள்ளங்கையில் விபூதி வைத்து, வலதுகையால் மூடி, வலதுகாதில் வைத்து மூலமந்திரம் மூன்று முறை உருஜெபித்துத்
தண்ணீர் விட்டுக் குழைத்துக் கீழ்க்கண்டவாறு அணியவும்.
ஈசானாயநம: தலை.
தத்புருஷாயநம : நெற்றி.
அகோராயநம: மார்பு,
வாமதேவாயநம: தொப்புள்
சத்யோஜாதாயநம : முழங்கால்கள்.
கவசாயநம : |வலது தோள், இடது தோள், வலது முழுங்கை. இடது முழங்கை, வலது மணிக்கட்டு, இடது மணிக்கட்டு, கழுத்து, வலதுவிலா, இடது விலா இடுப்பு ஆகிய இடங்களில் அணியவும்.
கைகழுவி விபூதி நீரைத் தலையில் தெளித்துக் கொள்ளவும்.

மூல மந்திரம் சொல்லி மூன்று முறை தண்ணீர் விடவும். ஈசானாயநம : தத்புருஷாயநம : , அகோராயநம:, வாமதேவாயநம :, சத்யோஜாதாய நம :, கங்காபரமேச்வர்யைநம : , திரிபுரசுந்தர்யைநம :, வினாயகாயநம :, ஸ்கந்தாயநம: என்றும் அஸ்த்ராயநம: என்று . 21 முறையும் தண்ணீர் விடவும் .
கவசாயநம: என்று தண்ணீர் எடுத்து அஸ்தராயநம: என்று தரையில் தெளித்து
மகாகணபதேய நம: என்று குட்டிக்கொண்டு
குருவேநம: என்று கும்பிட்டு
வடக்கு நோக்கி அமர்ந்து மூலமந்திரம் 108 முறை ஜெபம் செய்யவும்.

பின் எழுந்து நின்று
கிழக்கு நோக்கி சிவசூர்யாயநம: என்றும்
தெற்கில் தக்க்ஷிணாமூர்த்தியேநம: என்றும்
மேற்கில் மகாகணபதயேநம: என்றும்
வடக்கில் கைலாசபதயே நம : என்று கும்பிடவும்.
தண்ணீரில் ஓம் என்று மோதிர விரலால் எழுதி
ஸ்ரீ பழம்பதி நாதர் துணை என்று நெற்றியில் பொட்டுவைத்துக் கொள்ளவும்.

சாப்பிடும் பொழுது கவசாயநம : என்று தண்ணீர்சுற்றி, அஸ்த்ராயநம: என்று சாப்பாட்டில்
தெளித்து, அன்னபூர்ணாயைநம: என்று கும்பிட்டுச் சாப்பிடவும்.


This page was last modified on Fri, 06 Jan 2023 06:54:04 +0000
          send corrections and suggestions to admin @ sivasiva.org