Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
1 12.000 - சேக்கிழார் பாயிரம் | |
உலகெ லாம்உணர்ந் தோதற் கரியவன் நிலவு லாவிய நீர்மலி வேணியன் அலகில் சோதியன் அம்பலத் தாடுவான் மலர்சி லம்படி வாழ்த்தி வணங்குவாம். , | [ 1] |
2 12.000 - சேக்கிழார் பாயிரம் | |
தேடிய அயனு மாலுந் தெளிவுறா தைந்தெ ழுத்தும் பாடிய பொருளா யுள்ளான் பாடுவாய் நம்மை யென்ன நாடிய மனத்த ராகி நம்பியா ரூரர் மன்றுள் ஆடிய செய்ய தாளை யஞ்சலி கூப்பி நின்று. | [ 205] |
3 12.010 - சேக்கிழார் தில்லை வாழ் அந்தணர் | |
கற்பனை கடந்த சோதி கருணையே யுருவ மாகி அற்புதக் கோல நீடி யருமறைச் சிரத்தின் மேலாஞ் சிற்பர வியோம மாகுந் திருச்சிற்றம் பலத்துள் நின்று பொற்புடன் நடஞ்செய் கின்ற பூங்கழல் போற்றி போற்றி. | [ 2] |
4 12.020 - சேக்கிழார் திருநீலகண்ட நாயனார் புராணம் | |
ஆதியார் நீல கண்டத் தளவுதாங் கொண்ட ஆர்வம் பேதியா ஆணை கேட்ட பெரியவர் பெயர்ந்து நீங்கி ஏதிலார் போல நோக்கி எம்மைஎன் றதனால் மற்றை மாதரார் தமையும் என்றன் மனத்தினுந் தீண்டேன் என்றார். | [ 7] |
5 12.030 - சேக்கிழார் இயற்பகை நாயனார் புராணம் | |
சொல்லுவ தறியேன் வாழி தோற்றிய தோற்றம் போற்றி வல்லைவந் தருளி யென்னை வழித்தொண்டு கொண்டாய் போற்றி எல்லையில் இன்ப வெள்ளம் எனக்கருள் செய்தாய் போற்றி தில்லையம் பலத்து ளாடுஞ் சேவடி போற்றி யென்ன. | [ 32] |
6 12.060 - சேக்கிழார் விறன்மிண்ட நாயனார் புராணம் | |
ஒக்க நெடுநாள் இவ்வுலகில் உயர்ந்த சைவப் பெருந்தன்மை தொக்க நிலைமை நெறிபோற்றித் தொண்டு பெற்ற விறன்மிண்டர் தக்க வகையால் தம்பெருமான் அருளி னாலே தாள்நிழற்கீழ் மிக்க கணநா யகராகும் தன்மை பெற்று விளங்கினார். | [ 10] |
7 12.060 - சேக்கிழார் விறன்மிண்ட நாயனார் புராணம் | |
ஞால முய்ய நாமுய்ய நம்பி சைவ நன்னெறியின் சீல முய்யத் திருத்தொண்டத் தொகைமுன் பாடச் செழுமறைகள் ஓல மிடவும் உணர்வரியார் அடியா ருடனாம் உளதென்றால் ஆலம் அமுது செய்தபிரான் அடியார் பெருமை அறிந்தார்ஆர். | [ 9] |
8 12.210 - சேக்கிழார் திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம் | |
திருநாவுக் கரசுவளர் திருத்தொண்டின் நெறிவாழ வருஞானத் தவமுனிவர் வாகீசர் வாய்மைதிகழ் பெருநாமச் சீர்பரவல் உறுகின்றேன் பேருலகில் ஒருநாவுக் குரைசெய்ய ஒண்ணாமை உணராதேன். | [ 1] |
9 12.210 - சேக்கிழார் திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம் | |
பெருகிய அன்பினர் பிடித்த பெற்றியால் அருமல ரோன்முதல் அமரர் வாழ்த்துதற் கரியஅஞ் செழுத்தையும் அரசு போற்றிடக் கருநெடுங் கடலினுட் கல்மி தந்ததே. | [ 127] |