Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
1 10.000 - திருமூலர் விநாயகர் வணக்கம் | |
ஐந்து கரத்தனை யானை முகத்தனை இந்தி னிளம்பிறை போலும் எயிற்றனை நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப் புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே. | [ 1] |
2 10.100 - திருமூலர் பாயிரம் | |
கடவுள் வாழ்த்து ஒன்றவன் றானே இரண்டவன் இன்னருள் நின்றனன் மூன்றினுள் நான்குணர்ந் தான்ஐந்து வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழும்பர்ச் சென்றனன் தான்இருந் தான்உணர்ந் தெட்டே. | [ 1] |
3 10.100 - திருமூலர் பாயிரம் | |
நான்பெற்ற இன்பம் பெறுகஇவ் வையகம் வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின் ஊன்பற்றி நின்ற உணர்வுறும் மந்திரம் தான்பற்றப் பற்றத் தலைப்படுந் தானே. | [ 24] |
4 10.100 - திருமூலர் பாயிரம் | |
நந்தி அருளாலே மூலனை நாடிப்பின் நந்தி அருளாலே சதாசிவ னாயினேன் நந்தி அருளால்மெய்ஞ் ஞானத்துள் நண்ணினேன் நந்தி அருளாலே நான்இருந் தேனே. | [ 29] |
5 10.100 - திருமூலர் பாயிரம் | |
பாடவல் லார்நெறி பாடஅறிகி லேன் ஆடவல் லார்நெறி ஆடஅறிகி லேன் நாடவல் லார்நெறி நாடஅறிகி லேன் தேடவல் லார்நெறி தேடகில் லேனே. | [ 33] |
6 10.100 - திருமூலர் பாயிரம் | |
நந்தி அருளாலே நாதனாம் பேர்பெற்றேன் நந்தி அருளாலே மூலனை நாடினேன் நந்தி அருளாவ தென்செயும் நாட்டினில் நந்தி வழிகாட்ட நான்இருந் தேனே. | [ 7] |
7 10.101 - திருமூலர் முதல் தந்திரம் - 1. சிவபரத்துவம் | |
சிவனொடொக் குந்தெய்வந் தேடினும் இல்லை அவனொடொப் பார்இங்கும் யாவரும் இல்லை புவனங் கடந்தன்று பொன்னொளி மின்னுந் தவனச் சடைமுடித் தாமரை யானே. | [ 1] |
8 10.101 - திருமூலர் முதல் தந்திரம் - 1. சிவபரத்துவம் | |
அப்பனை நந்தியை ஆரா அமுதினை ஒப்பிலி வள்ளலை ஊழி முதல்வனை எப்பரி சாயினும் ஏத்துமின் ஏத்தினால் அப்பரி சீசன் அருள்பெற லாமே. | [ 32] |
9 10.101 - திருமூலர் முதல் தந்திரம் - 1. சிவபரத்துவம் | |
தீயினும் வெய்யன் புனலினுந் தண்ணியன் ஆயினும் ஈசன் அருளறி வார்இல்லை சேயனு மல்லன் அணியன்நல் அன்பர்க்குத் தாயினும் நல்லன் தாழ்சடை யோனே. | [ 4] |
10 10.102 - திருமூலர் முதல் தந்திரம் - 2. வேதச் சிறப்பு | |
திருநெறி யாவது சித்தசித் தன்றிப் பெருநெறி யாய பிரானை நினைந்து குருநெறி யாஞ்சிவ மாநெறி கூடும் ஒருநெறி ஒன்றாக வேதாந்தம் ஓதுமே. | [ 4] |
11 10.104 - திருமூலர் முதல் தந்திரம் - 4. உபதேசம் | |
தெளிவு குருவின் திருமேனி காண்டல் தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல் தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல் தெளிவு குருவுருச் சிந்தித்தல் தானே. | [ 27] |
12 10.104 - திருமூலர் முதல் தந்திரம் - 4. உபதேசம் | |
பதிபசு பாசம் எனப்பகர் மூன்றில் பதியினைப் போற்பசு பாசம் அனாதி பதியினைச் சென்றணு காபசு பாசம் பதியணு கிற்பசு பாசம்நில் லாவே. | [ 3] |
13 10.106 - திருமூலர் முதல் தந்திரம் - 6. செல்வம் நிலையாமை | |
மகிழ்கின்ற செல்வமும் மாடும் உடனே கவிழ்கின்ற நீர்மிசைச் செல்லுங் கலம்போல் அவிழ்கின்ற ஆக்கைக்கோர் வீடு பேறாகச் சிமிழொன்று வைத்தமை தேர்ந்தறி யாரே. | [ 6] |
14 10.107 - திருமூலர் முதல் தந்திரம் - 7. இளமை நிலையாமை | |
பாலன் இளையன் விருத்தன் எனநின்ற காலங் கழிவன கண்டும் அறிகிலார் ஞாலங் கடந்தண்டம் ஊடறுத் தானடி மேலுங் கிடந்து விரும்புவன் நானே. | [ 5] |
15 10.108 - திருமூலர் முதல் தந்திரம் - 8. உயிர் நிலையாமை | |
வேங்கட நாதனை வேதாந்தக் கூத்தனை வேங்கடத் துள்ளே விளையாடு நந்தியை வேங்கடம் என்றே விரகறி யாதவர் தாங்கவல் லாருயிர் தாமறி யாரே. | [ 4] |
16 10.119 - திருமூலர் முதல் தந்திரம் - 19. அறஞ்செய்வான் திறம் | |
யாவர்க்கு மாம்இறை வற்கொரு பச்சிலை யாவர்க்கு மாம்பசு வுக்கொரு வாயுறை யாவர்க்கு மாம்உண்ணும் போதொரு கைப்பிடி யாவர்க்கு மாம்பிறர்க் கின்னுரை தானே. | [ 2] |
17 10.121 - திருமூலர் முதல் தந்திரம் - 21. அன்புடைமை | |
அன்புசிவம் இரண் டென்பர் அறிவிலார் அன்பே சிவமாவ தாரும் அறிகிலார் அன்பே சிவமாவ தாரும் அறிந்தபின் அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே. | [ 1] |
18 10.301 - திருமூலர் மூன்றாம் தந்திரம் - 1. அட்டாங்க யோகம் | |
இயம நியமமே எண்ணிலா ஆதனம் நயமுறு பிராணாயா மம்பிரத்தி யாகாரம் சயமிகு தாரணை தியானஞ் சமாதி அயமுறும் அட்டாங்க மாவது மாமே. 2, | [ 4] |
19 10.304 - திருமூலர் மூன்றாம் தந்திரம் - 4. ஆதனம் | |
பத்திரங் கோமுகம் பங்கயம் கேசரி சொத்திரம் வீரம் சுகாதனம் ஓரேழும் உத்தம மாம்முது ஆசனம் எட்டெட்டுப் பத்தொடு நூறு பலஆ சனமே. 5, | [ 6] |
20 10.305 - திருமூலர் மூன்றாம் தந்திரம் - 5. பிராணாயாமம் | |
புள்ளினும் மிக்க புரவியை மேற்கொண்டாற்; கள்ளுண்ண வேண்டா; தானே களிதரும்; துள்ளி நடப்பிக்கும் சோம்பு தவிர்ப்பிக்கும் உள்ளது சொன்னோம் உணர்வுடை யோர்க்கே. | [ 3] |
21 10.306 - திருமூலர் மூன்றாம் தந்திரம் - 6. பிரத்தியாகாரம் | |
எருவிடும் வாசற் கிருவிரல் மேலே கருவிடும் வாசற் கிருவிரற் கீழே உருவிடுஞ் சோதியை உள்கவல் லார்க்குக் கருவிடுஞ் சோதி கலந்துநின் றானே. | [ 7] |
22 10.402 - திருமூலர் நான்காம் தந்திரம் - 2. திருவம்பலச் சக்கரம் | |
ஆயும் சிவாய நமமசி வாயந ஆயும் நமசி வயய நமசிவா ஆயுமே வாய நமசியெனும் மந்திரம் ஆயும் சிகாரம்தொட் டந்தத் தடைவிலே. | [ 10] |
23 10.402 - திருமூலர் நான்காம் தந்திரம் - 2. திருவம்பலச் சக்கரம் | |
அரகர என்ன அரியதொன் றில்லை அரகர என்ன அறிகிலர் மாந்தர் அரகர என்ன அமரரும் ஆவர் அரகர என்ன அறும்பிறப் பன்றே. | [ 3] |
24 10.405 - திருமூலர் நான்காம் தந்திரம் - 5. சத்திபேதம் | |
அறிவார் பராசத்தி ஆனந்தம் என்பர் அறிவார் அருவுரு வாம்அவள் என்பர் அறிவார் கருமம் அவள்இச்சை என்பர் அறிவார் பரனும் அவளிடத் தானே. | [ 10] |
25 10.405 - திருமூலர் நான்காம் தந்திரம் - 5. சத்திபேதம் | |
திரிபுரை சுந்தரி அந்தரி சிந் தூரப் பரிபுரை நாரணி ஆம்பல வன்னத்தி இருள்புரை ஈசி மனோன்மனி என்ன வருபல வாய்நிற்கும் மாமாது தானே. | [ 2] |
26 10.405 - திருமூலர் நான்காம் தந்திரம் - 5. சத்திபேதம் | |
ஓங்காரி என்பாள் அவள்ஒரு பெண்பிள்ளை நீங்காத பச்சை நிறத்தை உடையவள் ஆங்காரி யாகியே ஐவரைப் பெற்றிட்டு இரீங்காரத் துள்ளே இனிதிருந் தாளே. | [ 29] |
27 10.406 - திருமூலர் நான்காம் தந்திரம - 6.வயிரவி மந்திரம் | |
தையல்நல் லாளைத் தவத்தின் தலைவியை மையலை நூக்கும் மனோன்மனி மங்கையைப் பையநின் றேத்திப் பணிமின் பணிந்தபின் வெய்ய பவம்இனி மேவகி லாவே. | [ 29] |
28 10.413 - திருமூலர் நான்காம் தந்திரம் - 13. நவாக்கரி சக்கரம் | |
சௌம்முதல் அவ்வொடும் ஔவுடன் ஆம்கிரீம் கௌவுமும் ஐமும் கலந்திரீம் சிரீம்என் றொவ்வில் எழும்கிலீம் மந்திர பாதமாச் செவ்வுள் எழுந்து சிவாயநம என்னவே. | [ 2] |
29 10.505 - திருமூலர் ஐந்தாம் தந்திரம் - 5. சரியை | |
நாடும் நகரமும் நற்றிருக் கோயிலும் தேடித் திரிந்து சிவபெரு மான்என்று பாடுமின் பாடிப் பணிமின் பணிந்தபின் கூடிய நெஞ்சத்தைக் கோயிலாக் கொள்வனே. | [ 3] |
30 10.601 - திருமூலர் ஆறாம் தந்திரம் - 1. சிவகுரு தரிசனம் | |
குருவே சிவமெனக் கூறினன் நந்தி குருவே சிவம்என் பதுகுறித் தோரார் குருவே சிவனுமாய்க் கோனுமாய் நிற்கும் குருவே உரையுணர் வற்றதோர் கோவே. | [ 9] |
31 10.602 - திருமூலர் ஆறாம் தந்திரம் - 2. திருவடிப்பேறு | |
மந்திர மாவதும் மாமருந் தாவதும் தந்திர மாவதும் தானங்க ளாவதும் சுந்தர மாவதும் தூய்நெறி யாவதும் எந்தை பிரான்றன் இணையடி தானே. 3, | [ 15] |
32 10.610 - திருமூலர் ஆறாம் தந்திரம் - 10. திருநீறு | |
கங்காளன் பூசும் கவசத் திருநீற்றை மங்காமற் பூசி மகிழ்வரே யாமாகில் தங்கா வினைகளும் சாரும் சிவகதி சிங்கார மான திருவடி சேர்வரே. | [ 1] |
33 10.711 - திருமூலர் ஏழாம் தந்திரம் - 11. சிவ பூசை | |
உள்ளம் பெருங்கோயில் ஊனுடம் பாலயம் வள்ளற் பிரானார்க்கு வாய்கோ புரவாசல் தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம் கள்ளப் புலனைந்தும் காளா மணிவிளக்கே. | [ 1] |
34 10.711 - திருமூலர் ஏழாம் தந்திரம் - 11. சிவ பூசை | |
புண்ணியம் செய்வார்க்குப் பூவுண்டு நீருண்டு அண்ணல் அதுகண் டருள்புரி யாநிற்கும் எண்ணிலி பாவிகள் எம்மிறை ஈசனை நண்ணறி யாமல் நழுவுகின் றார்களே | [ 6] |
35 10.713 - திருமூலர் ஏழாம் தந்திரம் - 13. மாகேசுர பூசை | |
படமாடக் கோயிற் பகவற்கொன் றீயின் நடமாடக் கோயில் நம்பற்கங் காகா நடமாடக் கோயில் நம்பற்கொன் றீயின் படமாடக் கோயிற் பகவற்க தாமே. | [ 1] |
36 10.732 - திருமூலர் ஏழாம் தந்திரம் - 32. ஐந்திந்திரியம் அடக்கும் அருமை | |
புலம்ஐந்து புள்ஐந்து புள்சென்று மேயும் நிலம்ஐந்து நீர்ஐந்து நீர்மையும் ஐந்து குலம்ஒன்று கோல்கொண்டு மேய்ப்பான் ஒருவன் உலமந்து போம்வழி ஒன்பது தானே. | [ 3] |
37 10.738 - திருமூலர் ஏழாம் தந்திரம் 38. இதோபதேசம் | |
ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் நன்றே நினைமின் நமனில்லை நாணாமே சென்றே புகுங்கதி யில்லை நும் சித்தத்து நின்றே நிலைபெற நீர்நினைந் துய்மினே. | [ 3] |
38 10.816 - திருமூலர் எட்டாம் தந்திரம் - 16. பதி பசு பாசம் வேறின்மை | |
அறிவறி வென்ற அறிவும் அனாதி அறிவுக் கறிவாம் பதியும் அனாதி அறிவினைக் கட்டிய பாசம் அனாதி அறிவு பதியின் பிறப்பறுந் தானே. | [ 1] |
39 10.820 - திருமூலர் எட்டாம் தந்திரம் - 20. முப்பரம் | |
ஆறாறு தத்துவத் தப்புறத் தப்பரம் கூறா வுபதேசம் கூறில் சிவபரம் வேறாய் வெளிப்பட்ட வேதப் பகவனார் பேறாக ஆனந்தம் பேணும் பெருகவே. | [ 3] |
40 10.821 - திருமூலர் எட்டாம் தந்திரம் - 21. பர லக்கணம் | |
ஆதியும் அந்தமும் இல்லா அரும்பதி சோதி பரஞ்சுடர் தோன்றித் தோன்றாமையின் நீதிய தாய்நிற்கும் நீடிய அப்பர போதம் உணர்ந்தவர் புண்ணியத் தோரே. | [ 2] |
41 10.903 - திருமூலர் ஒன்பதாம் தந்திரம் - 3. பிரணவ சமாதி | |
ஓம்எனும் ஓங்காரத் துள்ளே ஒருமொழி ஓம்எனும் ஓங்காரத் துள்ளே உருஅரு ஓம்எனும் ஓங்காரத் துள்ளே பலபேதம் ஓம்எனும் ஓங்காரம் ஒண்முத்தி சித்தியே. | [ 2] |
42 10.905 - திருமூலர் ஒன்பதாம் தந்திரம் - 5. பஞ்சாக்கரம் - தூலம் | |
அகாரம் முதலாக ஐம்பத்தொன் றாகி உகாரம் முதலாக ஓங்கி உதித்து மகார இறுதியாய் மாய்ந்துமாய்ந் தேறி நகார முதலாகும் நந்திதன் நாமமே. | [ 2] |
43 10.907 - திருமூலர் ஒன்பதாம் தந்திரம் - 7. அதி சூக்கும பஞ்சாக்கரம் | |
நமஎன்னும் நாமத்தை நாவில் ஒடுக்கிச் சிவஎன்னும் நாமத்தைச் சிந்தையுள் ஏற்றப் பவமது தீரும் பரிசும்அ தற்றால் அவமதி தீரும அறும்பிறப் பன்றே. 8, | [ 3] |
44 10.908 - திருமூலர் ஒன்பதாம் தந்திரம் - 8. காரண பஞ்சாக்கரம் | |
சிவசிவ என்கிலர் தீவினை யாளர் சிவசிவ என்றிடத் தீவினை மாளும் சிவசிவ என்றிடத் தேவரு மாவர் சிவசிவ என்னச் சிவகதி தானே. | [ 2] |
45 10.909 - திருமூலர் ஒன்பதாம் தந்திரம் - 9. மகா காரண பஞ்சாக்கரம் | |
நாயோட்டு மந்திரம் நான்மறை நால்வேதம் நாயோட்டு மந்திரம் நாதன் இருப்பிடம் நாயோட்டு மந்திரம் நாதாந்த மாம்சோதி நாயோட்டு மந்திரம் நாமறி யோமே. | [ 2] |
46 10.924 - திருமூலர் ஒன்பதாம் தந்திரம் - 24. சூனிய சம்பாடணை | |
பார்ப்பான் அகத்திலே பாற்பசு ஐந்துண்டு மேய்ப்பாரு மின்றி வெறித்துத் திரிவன மேய்ப்பாரும் உண்டாய் வெறியும் அடங்கினால் பார்ப்பான் பசுஐந்தும் பாலாய்ப் பொழியுமே. | [ 18] |
47 10.928 - திருமூலர் ஒன்பதாம் தந்திரம் - 28. தோத்திரம் | |
நாமமொ ராயிரம் ஓதுமின் நாதனை ஏமமொ ராயிரத் துள்ளே யிசைவீர்கள் ஓமமொ ராயிரம் ஓதவல் லாரவர் காமமோ ராயிரங் கண்டொழிந் தாரே. | [ 6] |
48 10.929 - திருமூலர் ஒன்பதாம் தந்திரம் - 29. சருவ வியாபகம் | |
மூலன் உரைசெய்த மூவா யிரந்தமிழ் மூலன்உரைசெய்த முந்நூறு மந்திரம் மூலன் உரைசெய் முப்ப துபதேசம் மூலன் உரைசெய்த மூன்றும்ஒன் றாமே. | [ 20] |
49 10.929 - திருமூலர் ஒன்பதாம் தந்திரம் - 29. சருவ வியாபகம் | |
வாழ்கவே வாழ்கஎன் நந்தி திருவடி வாழ்கவே வாழ்க மலம்அறுத் தான்பதம் வாழ்கவே வாழ்கமெய்ஞ் ஞானத் தவன்தாள் வாழ்கவே வாழ்க மலம்இலான் பாதமே. | [ 21] |