Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS   Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Urdu   Cyrillic/Russian  

திருமுறை   திருஞானசம்பந்தர்   திருநாவுக்கரசர்   சுந்தரமூர்த்தி

1.001 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -தோடு உடைய செவியன், விடை  (திருப்பிரமபுரம் (சீர்காழி))   ஒரு நாள் காலையில் சிவபாத இருதயர் வேதவிதிப்படி நீராடுதற்குத் திருக்கோயி லுள்ளிருக்கும் பிரமதீர்த்தத்திற்குப் புறப்பட் டார். தந்தையார் வெளியில் செல்வதைக் கண்ட பிள்ளையார் தானும் உடன் வரவேண்டுமென்ற குறிப்போடு கால்களைக் கொட்டிக் கொண்டு அழுதார். தந்தையார் தன் மைந்தரைப் பார்த்து உன் செய்கை இதுவாயின் உடன் வருக எனக் கூறி அவரையும் உடனழைத்துக் கொண்டு சென்று பிரம தீர்த்தக் கரையில் பிள்ளையாரை இருத்திவிட்டு விரைந்து நீராடித் திரும்பும் எண்ணத்தோடு நீர்நிலையில் இறங்கினார். சில நிமிடங்கள் முழ்கியிருந்து செபித்தற்குரிய அகமர்ஷண மந்திரங் களைச் சொல்லிக் கொண்டு நீரில் மூழ்கினார். இந்நிலையில் கரையில் அமர்ந்திருந்த பிள்ளையார் தந்தை யாரைக் காணாமல் முற்பிறப்பின் நினைவு மேலிட்டவராய் திருத் தோணி மலைச் சிகரத்தைப் பார்த்துக் கண்மலர்கள் நீர் ததும்பக் கைமலர்களால் பிசைந்து வண்ணமலர்ச் செங்கனிவாய் மணியதரம் புடை துடிப்ப அம்மே அப்பா என அழைத்து அழுதருளினார். பிள்ளையின் அழுகுரல் கேட்ட நிலையில் தோணிபுரத்து இறைவர் இறைவியாருடன் விடைமீது அமர்ந்து குளக்கரைக்கு எழுந்தருளி னார். பெருமான் உமையம்மையை நோக்கி அழுகின்ற இப் பிள்ளைக்கு உன் முலைப்பாலைப் பொற்கிண்ணத்தில் கறந்து ஊட்டுக எனப்பணித்தார். அம்மையாரும் அவ்வாறே தன் திருமுலைப்பாலைப் பொற்கிண்ணத்தில் கறந்து சிவஞானமாகிய அமுதைக் குழைத்து அழுகின்ற குழந்தை கையில் கொடுத்து உண்ணச் செய்து அழுகை தீர்த்தருளினார். தேவர்க்கும் முனிவர்க்கும் கிடைக்காத பேரின்பம் பெற்ற நிலையில் பிள்ளையார் திருஞானசம்பந்தராய் அபரஞானம் பரஞானம் அனைத்தும் கைவரப் பெற்றார். அப்பொழுது நீரில் மூழ்கி நியமங்களை முடித்துக் கரை யேறிய சிவபாத இருதயர் சிவஞானத் திருவுருவாய்க் கரையில் நிற்கும் தம்மைந்தரைக் கண்டார். கடைவாய் வழியாகப் பால் வழிந் திருப்பதைக் கண்ட அவர், தன் மகனார்க்கு யாரோ பால் அளித்துச் சென்றுள்ளார்கள் என்று எண்ணியவராய் ஞான போனகரை நோக்கிப் பிள்ளாய் நீ யார் அளித்த பால் அடிசிலை உண்டாய்? எச்சில் கலக்குமாறு உனக்கு இதனை அளித்தவர் யார்? காட்டுக என்று வெகுண்டு தரையில் கிடந்த கோல் ஒன்றைக் கையில் எடுத்து ஓச்சியவ ராய் வினவினார். சிறிய பெருந்தகையார் தம் உள்ளத்துள் எழுந்த உயர் ஞானத் திருமொழியால் தமிழ் என்னும் மொழியின் முதல் எழுத்தாகிய தகர மெய்யில் பிரணவத்தை உயிராய் இணைத்துத் தனக்குப் பாலளித்த உமைஅம்மையின் தோடணிந்த திருச்செவியைச் சிறப்பிக்கும் முறையில் தோடுடைய செவியன் என்ற முதற்பெரும் பாடலால் தனக்குப் பாலளித்த கடவுளின் அடையாளங்களைச் சுட்டித் திருப் பதிகம் அருளிச்செய்தார்.
1.074 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -நறவம் நிறை வண்டு அறை  (திருப்புறவம்)  
2.040 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -எம்பிரான், எனக்கு அமுதம் ஆவானும்,  (திருப்பிரமபுரம் (சீர்காழி))  
1.023 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -மடையில் வாளை பாய, மாதரார்
குடையும்
 (திருக்கோலக்கா)  
உமையம்மையார் அளித்த ஞானவாரமுதம் உண்டு திரு நெறிய தமிழ் பாடிய திருஞானசம்பந்தர் தம் திருமாளிகையில் இறையருளையே எண்ணியிருந்து மறுநாட் காலையில் துயிலுணர்ந் தெழுந்து நீராடி திருக்கழுமலத்தீசனை வணங்கிப் போற்றி, சீகாழிக்கு அருகிலுள்ள திருக்கோலக்காவைத் தரிசிக்கும் வேட்கை உடையவ ராய் அத்தலத்தை அடைந்து ஆலயத்தை வலம் வந்து இறைவன் திருமுன் நின்று மடையில் வாளை எனத் தொடங்கும் இசைத்தமிழ்ப் பதிகத்தைத் தம் கைமலர்களால் தாளம் இட்டுப் பாடினார். கோலக்கா இறைவன் பிள்ளையார் கைகள் சிவப்பதைக்கண்டு மனம் பொறாது திருவைந்தெழுத்து எழுதப் பெற்ற பொற்றாளத்தைத் திருஞானசம் பந்தருக்கு அளித்தருளினார். ஞானசம்பந்தர் அத்தாளத்தைத் தலை மேல் கொண்டு போற்றி, தாளமிட்டு அத்திருப்பதிகத்தைப் பாடிப் போற்றினார். திருஞானசம்பந்தர் மேற்கொண்ட முதல் தலயாத்திரையாக இது அமைந்தது.
1.024 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பூஆர் கொன்றைப் புரிபுன் சடை  (சீர்காழி)   திருக்கோலக்காவில் பொற்றாளம் பெற்றுச் சீகாழி திரும்பிய ஞானசம்பந்தர் நேரே ஆலயம் சென்று பூவார் கொன்றை எனத் தொடங்கும் திருப்பதிகத்தைத் தாளமிட்டுப் பாடிப் போற்றித் தம் மாளிகையை அடைந்தார்.
2.084 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -காரைகள், கூகை, முல்லை, கள,  (திருநனிப்பள்ளி)   ஞானசம்பந்தரின் தாயார் பகவதி அம்மையார் பிறந்த நனிபள்ளியிலுள்ள அந்தணர்கள், அவர் மூவாண்டில் சிவஞானம் பெற்றதையும் சிவபிரானால் பொற்றாளம் அருளப் பெற்றதையும் கேள்வியுற்றுத் தங்கள் ஊருக்கு எழுந்தருள வேண்டுமென ஞானசம் பந்தரை வேண்டினர். அதற்கு இசைந்த ஞானசம்பந்தர் தோணிபுரத்து இறைவரை வணங்கி விடைபெற்றுத் தாமரை மலர் போன்ற தம் திருவடி நோக நனிபள்ளி நோக்கி நடந்தருளினார். ஆளுடைய பிள்ளையார் அடிமலர் வருந்தக் கண்ட சிவபாத இருதயர் ஞானசம்பந்தரைப் பிறர் தூக்கிச் செல்வதை விரும்பாது தாமே தன் திருத்தோளில் அமர்த்திக் கொண்டு செல்வாராயினார். நனிபள்ளியை அணுகிய நிலையில் ஞானசம்பந்தர் எதிரே தோன்றும் இப்பதியாது எனக் கேட்கத் தந்தையார் அது தான் நனிபள்ளி எனச் சொல்லக் கேட்டுக் காரைகள் கூகைமுல்லை எனத் தொடங்கித் திருப்பதிகம் பாடினார்.
2.055 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -நலச் சங்க வெண்குழையும் தோடும்  (திருத்தலைச்சங்காடு)  
3.103 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -கொடி உடை மும்மதில் ஊடு  (திருவலம்புரம்)  
3.112 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பரசு பாணியர், பாடல் வீணையர்,  (திருப்பல்லவனீச்சரம்)  
1.065 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -அடையார் தம் புரங்கள் மூன்றும்  (திருப்பல்லவனீச்சரம்)  
2.041 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -மண் புகார், வான்புகுவர்; மனம்  (திருச்சாய்க்காடு (சாயாவனம்))  
2.038 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -நித்தலும் நியமம் செய்து, நீர்மலர்  (திருச்சாய்க்காடு (சாயாவனம்))  
2.048 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -கண் காட்டும் நுதலானும், கனல்  (திருவெண்காடு)  
2.061 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -உண்டாய், நஞ்சை! உமை ஓர்பங்கா!  (திருவெண்காடு)  
3.015 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -மந்திர மறையவர், வானவரொடும்,
இந்திரன், வழிபட
 (திருவெண்காடு)  
2.088 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -துளி மண்டி உண்டு நிறம்  (தென்திருமுல்லைவாயில்)  
2.102 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -அன்ன மென் நடை அரிவையோடு  (திருச்சிரபுரம் (சீர்காழி))  
3.031 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -திரை தரு பவளமும், சீர்  (திருமயேந்திரப்பள்ளி)  
3.124 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -சுண்ண வெண்நீறு அணி மார்பில்-தோல்  (திருக்குருகாவூர் வெள்ளடை)  
3.105 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -மடல் வரை இல் மது  (திருக்கலிக்காமூர்)  
1.080 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -கற்றாங்கு எரி ஓம்பி, கலியை  (கோயில் (சிதம்பரம்))   திருஞானசம்பந்தர் மிக இளைய பருவத்திலேயே இறை வனால் ஆட்கொள்ளப் பெற்ற அற்புத நிகழ்ச்சியைக் கேள்வியுற்று அவரை வணங்குதற் பொருட்டு, திருநீலகண்ட யாழ்ப்பாணரும் அவர்தம் மனைவியார் மதங்கசூளாமணியாரும் சீகாழிப் பதியை அடைந்தனர். அவ்விருவரின் வரவறிந்த ஞானசம்பந்தர் அவர்களை எதிர்சென்று அழைத்து வந்து திருத்தோணிபுரத் திருக்கோயிலில் இருத்தி யாழிசையில் இறைவரைப் போற்றுமாறு செய்து அவர்கள் தங்குதற்குத் தனி இல்லம் அமைத்துக் கொடுத்தருளினார். திருநீல கண்டர் ஞானசம்பந்தர் பாடும் பாடல்களை யாழிசையில் வாசித்து இன்புறுத்தும் பணியை மேற்கொண்டார். திருஞானசம்பந்தர் அடியவர் புடைசூழ யாழ்ப்பாணருடன் கொள்ளிட நதியைக் கடந்து தில்லை சென்றார். தென் திசைவாயில் வழியே ஆலயத்தினுட்சென்றுபேரம்பலத்தை வணங்கிக் கற்றாங்கு எரியோம்பி ஆடினாய் நறுநெய் என்பனவாகிய திருப்பதிகத்தால் போற்றி வழிபட்டார்.
1.039 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -அந்தமும் ஆதியும் ஆகிய அண்ணல்  (திருவேட்களம்)  
3.044 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -வெந்த குங்கிலியப்புகை விம்மவே
கந்தம் நின்று
 (திருக்கழிப்பாலை)  
2.021 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -புனல் ஆடிய புன்சடையாய்! அரணம்
அனல்
 (திருக்கழிப்பாலை)  
2.026 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -புடையின் ஆர் புள்ளி கால்  (திருநெல்வாயில்)  
3.001 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -ஆடினாய், நறுநெய்யொடு, பால், தயிர்!  (கோயில் (சிதம்பரம்))  
1.089 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -படை ஆர்தரு பூதப் பகடு  (திருஎருக்கத்தம்புலியூர் (இராசேந்திரப்பட்டிணம்))  
1.012 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -மத்தா வரை நிறுவி, கடல்  (திருமுதுகுன்றம் (விருத்தாசலம்))  
1.093 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -நின்று மலர் தூவி, இன்று  (திருமுதுகுன்றம் (விருத்தாசலம்))  
3.099 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -முரசு அதிர்ந்து எழுதரு முது  (திருமுதுகுன்றம் (விருத்தாசலம்))  
1.053 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -தேவராயும், அசுரராயும், சித்தர், செழுமறை  (திருமுதுகுன்றம் (விருத்தாசலம்))  
1.131 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -மெய்த்து ஆறுசுவையும், ஏழ் இசையும்,  (திருமுதுகுன்றம் (விருத்தாசலம்))  
2.064 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -தேவா! சிறியோம் பிழையைப் பொறுப்பாய்!  (திருமுதுகுன்றம் (விருத்தாசலம்))  
3.034 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -வண்ண மா மலர் கொடு  (திருமுதுகுன்றம் (விருத்தாசலம்))  
1.059 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -ஒடுங்கும் பிணி, பிறவி, கேடு,  (திருத்தூங்கானைமாடம்)  
2.090 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -எந்தை! ஈசன்! எம்பெருமான்! ஏறு  (திருநெல்வாயில் அரத்துறை)  
3.096 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -நல் வெணெய் விழுது பெய்து  (திருநெல்வெண்ணெய்)  
2.034 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -முத்தன், மிகு மூஇலைநல்வேலன், விரி  (திருப்பழுவூர்)  
3.017 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -மரு அமர் குழல் உமை  (திருவிசயமங்கை)  
3.071 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -கோழை மிடறு ஆக, கவி  (திருவைகாவூர்)  
2.030 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -மறம் பயம் மலிந்தவர் மதில்  (திருப்புறம்பயம்)  
1.048 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -நூல் அடைந்த கொள்கையாலே நுன்  (திருச்சேஞலூர்)  
3.062 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -கண் பொலி நெற்றியினான், திகழ்  (திருப்பனந்தாள்)  
3.121 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -இடறினார், கூற்றை; பொடிசெய்தார், மதிலை;  (திருப்பந்தணைநல்லூர்)  
3.122 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பூங்கொடி மடவாள் உமை ஒருபாகம்  (திருஓமாம்புலியூர்)  
1.040 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பொடி உடை மார்பினர், போர்  (திருவாழ்கொளிபுத்தூர்)  
2.094 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -சாகை ஆயிரம் உடையார், சாமமும்  (திருவாழ்கொளிபுத்தூர்)  
2.068 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -வான் அமர் திங்களும் நீரும்  (திருக்கடம்பூர்)  
2.086 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -உரையினில் வந்த பாவம், உணர்  (திருநாரையூர்)  
3.102 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -காம்பினை வென்ற மென்தோளி பாகம்  (திருநாரையூர்)  
3.107 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -கடல் இடை வெங்கடு நஞ்சம்  (திருநாரையூர்)  
2.031 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -சுற்றமொடு பற்று அவை துயக்குஅற  (கருப்பறியலூர் (தலைஞாயிறு))  
3.022 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -துஞ்சலும் துஞ்சல் இலாத போழ்தினும்,
நெஞ்சு
 (சீர்காழி)  
திருஞானசம்பந்தருக்கு ஏழாவது வயது தொடங்கியது. வேதியர்கள் தங்கள் குலமரபை எடுத்துக்கூறி இருபிறப்பாளர் நிலையை விளக்கி அவருக்கு முப்புரிநூல் அணிவிக்கும் உபநயனச் சடங்கினைச் செய்து மறை நான்கும் தந்தோம் என்றனர். பிள்ளையார் இறையருளால் எல்லாக் கலையுணர்வுகளையும் ஓதாது உணந்தவர். ஆதலின் வேதங்களின் பல பகுதிகளையும் அவற்றின் பொருளோடு ஓதக் கேட்ட அந்தணர்கள் வேதங்களில் தங்கட்கிருந்த ஐயங்களை ஞானசம்பந்தரிடம் கேட்டுத் தெளிவு பெற்றனர். ஞானசம்பந்தர் அவர்களை நோக்கி வேதம் நான்கிலும் மெய்ப் பொருளாய் விளங்கும் திருவைந்தெழுத்தின் சிறப்பை, துஞ்சலும் துஞ்சல் என்று தொடங்கிப்பாடி அனைவர்க்கும் உணர்த்தி யருளினார்.
3.081 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -சங்கு அமரும் முன்கை மட  (சீர்காழி )  
2.001 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -செந்நெல் அம் கழனிப் பழனத்து  (திருப்பூந்தராய்)  
1.104 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -ஆடல் அரவு அசைத்தான், அருமாமறைதான்  (திருப்புகலி -(சீர்காழி ))  
3.002 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பந்து சேர் விரலாள், பவளத்துவர்  (திருப்பூந்தராய்)  
3.118 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -மடல் மலி கொன்றை, துன்று  (சீர்காழி)  
2.083 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -நீல நல் மாமிடற்றன்; இறைவன்;  (திருக்கொச்சைவயம் (சீர்காழி))  
2.089 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -அறையும் பூம்புனலோடும் ஆடு அரவச்  (திருக்கொச்சைவயம் (சீர்காழி))  
1.117 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -காடு அது, அணிகலம் கார்  (திருப்பிரமபுரம் (சீர்காழி))  
3.117 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -யாமாமா நீ யாமாமா யாழீகாமா  (திருப்பிரமபுரம் (சீர்காழி))  
3.067 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -சுரர் உலகு, நரர்கள் பயில்  (திருப்பிரமபுரம் (சீர்காழி))   நான்காவது தலயாத்திரையை முடித்துக் கொண்டு சீர்காழி திரும்பிய திருஞானசம்பந்தர் அந்த நகரத்தில் பல நாட்கள் தங்கி பல வகையான பதிகங்கள் பாடினார். இந்த பதிகம் பன்னிரண்டு பாடல்களைக் கொண்டது. ஒவ்வொரு பாடலிலும் சீர்காழி நகரின் ஒரு பெயர் வந்த வரலாற்றினை கூறுவதால், வழிமொழிப் பதிகம் என பெயர் வந்தது. பாடல்களிலும் முன்பகுதியில் இறைவனது சிறப்பும் பின்பகுதியில் அந்த பெயர் வந்ததற்கான விரிவான தலபுராண வரலாறும் கொடுக்கப்பட்டுள்ளன. தலத்தின் பன்னிரண்டு பெயர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து இயற்றப்பட்ட பாடல் எனினும், வழக்கமாக தான் குறிப்பிடும் இராவணின் கயிலை நிகழ்ச்சி, அண்ணாமலை சம்பவம், சமணர்களை பற்றிய குறிப்பு மற்றும் பதிகத்தை ஓதுவதால் கிடைக்கும் பலங்கள் ஆகியவையும் இந்த பதிகத்தில் குறிப்பிடப் படுகின்றன. வேகமான சந்தமுடைய பாடல்கள் என்பதால் முடுகு விராகம் என்று இந்த பதிகம் அழைக்கப் படுகின்றது. சீர்காழியின் இந்த பன்னிரண்டு பெயர்களும் மந்திரம் என்பதால் இந்த பெயர்களை இந்த பதிகத்தில் கொடுத்துள்ள வரிசைப் படியே சொல்ல வேண்டும்.
1.127 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பிரம புரத்துறை பெம்மா னெம்மான்
பிரம
 (திருப்பிரமபுரம் (சீர்காழி))  
3.110 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -வரம் அதே கொளா, உரம்  (திருப்பிரமபுரம் (சீர்காழி))  
1.090 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -அரனை உள்குவீர்! பிரமன் ஊருள்  (திருப்பிரமபுரம் (சீர்காழி))  
1.128 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -ஓர் உரு ஆயினை; மான்  (திருப்பிரமபுரம் (சீர்காழி))  
3.005 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -தக்கன் வேள்வி தகர்த்தவன், பூந்தராய
மிக்க
 (திருப்பூந்தராய்)  
3.003 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -இயல் இசை எனும் பொருளின்  (திருப்புகலி -(சீர்காழி ))  
2.029 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -முன்னிய கலைப்பொருளும், மூஉலகில் வாழ்வும்,
பன்னிய
 (திருப்புகலி -(சீர்காழி ))  
3.084 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பெண் இயல் உருவினர், பெருகிய  (திருப்புறவம்)  
3.075 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -எம் தமது சிந்தை பிரியாத  (திருச்சண்பைநகர் (சீர்காழி))  
1.019 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பிறை அணி படர் சடை  (சீர்காழி)  
2.073 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -விளங்கிய சீர்ப் பிரமன் ஊர்,  (திருப்பிரமபுரம் (சீர்காழி))  
3.094 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -விண்ணவர் தொழுது எழு வெங்குரு  (திருவெங்குரு (சீர்காழி))  
1.126 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பந்தத்தால் வந்து எப்பால் பயின்று  (சீர்காழி)  
2.074 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பூமகன் ஊர், புத்தேளுக்கு இறைவன்  (திருப்பிரமபுரம் (சீர்காழி))  
1.063 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -எரி ஆர் மழு ஒன்று  (திருப்பிரமபுரம் (சீர்காழி))  
1.101 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -தண் ஆர் திங்கள், பொங்கு  (திருக்கண்ணார்கோவில் (குறுமாணக்குடி) )  
1.111 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -அருத்தனை, அறவனை, அமுதனை, நீர்  (திருக்கடைமுடி (கீழையூர்))  
1.005 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -செய் அருகே புனல் பாய,  (கீழைத்திருக்காட்டுப்பள்ளி)  
2.043 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -கள் ஆர்ந்த பூங்கொன்றை, மதமத்தம்,  (திருப்புள்ளிருக்குவேளூர் (வைத்தீச்சுரன்கோவில்))  
1.018 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -சூலம் படை; சுண்ணப்பொடி சாந்தம்,  (திருநின்றியூர்)  
1.027 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -முந்தி நின்ற வினைகள் அவை  (திருப்புன்கூர்)  
1.097 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -எய்யா வென்றித் தானவர் ஊர்மூன்று  (திருப்புறவம்)  
2.016 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -அயில் ஆரும் அம்புஅதனால் புரம்மூன்று  (எதிர்கொள்பாடி (மேலைத்திருமணஞ்சேரி))  
3.090 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -ஓங்கி மேல் உழிதரும் ஒலி  (திருத்துருத்தியும் - திருவேள்விக்குடியும்)  
2.099 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -இன்று நன்று, நாளை நன்று  (திருக்கோடி (கோடிக்கரை))  
2.010 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -சீரின் ஆர் மணியும்(ம்) அகில்  (திருமங்கலக்குடி)  
1.013 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -குரவம் கமழ் நறு மென்  (திருவியலூர்)  
3.025 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -மருந்து, வேண்டில்(ல்) இவை; மந்திரங்கள்(ள்)  (திருந்துதேவன்குடி)  
3.095 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -எண் திசைக்கும் புகழ் இன்னம்பர்  (திருஇன்னம்பர்)  
3.091 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -கோங்கமே, குரவமே, கொழு மலர்ப்  (திருவடகுரங்காடுதுறை)  
1.067 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -கண் மேல் கண்ணும், சடைமேல்  (திருப்பழனம்)  
1.130 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -புலன் ஐந்தும் பொறி கலங்கி,  (திருவையாறு)  
2.006 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -கோடல், கோங்கம், குளிர் கூவிளமாலை,  (திருவையாறு)  
2.067 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -மண்ணும் ஓர் பாகம் உடையார்;  (திருப்பெரும்புலியூர்)  
1.015 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -மை ஆடிய கண்டன், மலை  (திருநெய்த்தானம்)  
3.048 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -அங்கை ஆர் அழலன்(ன்), அழகு  (திருமழபாடி)  
2.009 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -களையும், வல்வினை; அஞ்சல், நெஞ்சே!  (திருமழபாடி)  
3.028 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -காலை ஆர் வண்டு இனம்  (திருமழபாடி)  
1.073 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -வான் ஆர் சோதி மன்னு  (திருக்கானூர்)  
1.033 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -கணை நீடு எரி, மால்,  (திருஅன்பில் ஆலந்துறை)  
2.110 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -செம்பொன் ஆர்தரு வேங்கையும், ஞாழலும்,  (திருமாந்துறை)  
1.044 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -துணி வளர் திங்கள் துளங்கி  (திருப்பாச்சிலாச்சிராமம் (திருவாசி))   திருஞானசம்பந்தர் திருத்தோணிபுரப் பெருமானை வணங்கி விடைபெற்றுப் பயணம் மேற்கொண்டார். திருக்கண்ணார்கோயில் புள்ளிருக்கு வேளூர் முதலிய தலங்களை வணங்கிக் கொண்டு காவிரி வடகரை வழியே மழவர் நாட்டுத் திருப்பாச்சிலாச்சிராமம் சென்றடைந் தார். அந்நகரில் வாழும் குறுநில மன்னனாகிய கொல்லி மழவன் என்பான் முயலகன் என்ற நோயினால் வருந்தி வந்த தன் மகளைப் பல்வகை மருத்துவம் செய்தும் குணப்படுத்த இயலாத நிலையில் பாச்சிலாச் சிராமத்து ஆலயத்தில் இறைவர் திருமுன் கிடத்தியிருந் தான். திருஞானசம்பந்தர் வருகையை அறிந்த அம்மன்னன் நகரை அலங்கரித்து நன்முறையில் அவரை வரவேற்று ஆலயத்துக்கு அழைத்துச் சென்றான். ஆலயத்தில் இளம்பெண் ஒருத்தி உணர்வற்ற நிலையில் நிலத்திற் கிடத்தலைக் கண்டு அம்மழவனை வினவியறிந்து அப்பெண்ணுக்கு ஏற்பட்ட முயலகன் என்னும் நோயைப் போக்கி யருளுமாறு இறைவனை வேண்டி, துணிவளர்திங்கள் என்று தொடங்கித் திருப்பதிகம் பாடியருளினார். அந்நிலையில் அப்பெண், நோய் நீங்கி நல் உணர்வு பெற்று எழுந்து ஞானசம்பந்தரை வணங்கிப் போற்றினாள். மழவன் மகிழ்ந்து அவர் திருவடிகளை வணங்கித் தன் நன்றியறிதலைப் புலப்படுத்திக் கொண்டான்.
3.014 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -ஆரிடம் பாடலர், அடிகள், காடு  (திருப்பைஞ்ஞீலி)  
1.070 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -வானத்து உயர் தண்மதி தோய்  (திருஈங்கோய்மலை)  
1.107 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -வெந்த வெண் நீறு அணிந்து,  (திருக்கொடிமாடச்செங்குன்றூர் (திருச்செங்கோடு))  
2.072 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பந்து ஆர் விரல் மடவாள்  (திருநணா (பவானி))  
1.116 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -அவ் வினைக்கு இவ் வினை  (பொது -திருநீலகண்டப்பதிகம்)   பாச்சிலாச் சிராமத்துப் பரமனைப் பணிந்து போற்றிய ஞான சம்பந்தர் அவ்வூரினின்றும் புறப்பட்டுப் பைஞ்ஞீலி, ஈங்கோய்மலை முதலான தலங்களை வணங்கிக் கொண்டு கொங்கு நாட்டிலுள்ள கொடிமாடச் செங்குன்றூரைச் சென்றடைந்தார். அங்கு விளங்கும் மாதொரு பாகரைப் போற்றி அருகிலுள்ள திருநணாவை வழிபட்டு, திருச்செங்குன்றூர் வந்து திருமடம் ஒன்றில் தங்கியிருந்தார். அக்காலம் பனிக்காலம் ஆனதால் அந்நிலத்தின் இயல்புப்படி பனி நோய் என்னும் குளிர் காய்ச்சல் அவருடன் வந்த அடியார்களைப் பற்றி வருத்தியது. அதனை அறிந்த ஞானசம்பந்தர் அடியவர்களைப் பற்றியிருந்த அந்நோய் தீருமாறு நஞ்சுண்டு அமரர்களைக் காத்த திருநீல கண்டப் பெருமானைப் போற்றி அவ்வினைக்கு இவ்வினை என்னும் திருப்பதிகம் அருளிச் செய்தார். அக்கணமே அடியவர்கட்கே யன்றி கொங்கு நாடெங்கிலும் அந்நோய் வாராது நீங்கியது.
2.069 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பெண் அமர் மேனியினாரும், பிறை  (திருப்பாண்டிக்கொடுமுடி)  
2.028 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -தொண்டுஎலாம் மலர் தூவி ஏத்த,  (திருக்கருவூரானிலை (கரூர்))  
1.135 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -நீறு சேர்வது ஒர் மேனியர்,  (திருப்பராய்துறை)  
1.043 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -வடம் திகழ் மென் முலையாளைப்  (திருகற்குடி (உய்யக்கொண்டான்மலை))  
2.120 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -சாந்தம் வெண்நீறு எனப் பூசி,  (திருமூக்கீச்சுரம் (உறையூர்))  
2.023 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -மழை ஆர் மிடறா! மழுவாள்  (திருவானைக்கா)  
3.109 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -மண் அது உண்ட(அ)ரி மலரோன்  (திருவானைக்கா)  
3.053 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -வானைக் காவல் வெண்மதி மல்கு  (திருவானைக்கா)  
1.056 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -கார் ஆர் கொன்றை கலந்த  (திருப்பாற்றுறை)  
1.052 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -மறை உடையாய்! தோல் உடையாய்!  (திருநெடுங்களம்)  
3.029 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -வாரு மன்னும் முலை மங்கை  (மேலைத்திருக்காட்டுப்பள்ளி)  
3.038 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -வினவினேன், அறியாமையில்(ல்); உரைசெய்ம்மின், நீர்!  (திருக்கண்டியூர்)  
1.028 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -செப்பம் நெஞ்சே, நெறி கொள்!  (திருச்சோற்றுத்துறை)  
3.078 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -நீறு, வரி ஆடு அரவொடு,  (திருவேதிகுடி)  
2.014 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -சடையானை, சந்திரனோடு செங்கண் அரா
உடையானை,
 (திருவெண்ணியூர்)  
3.027 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -படையினார், வெண்மழு; பாய் புலித்தோல்  (திருச்சக்கரப்பள்ளி (ஐயம்பேட்டை))  
1.016 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பால் உந்து உறு திரள்  (திருப்புள்ளமங்கை)  
2.057 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பெண் அமரும் திருமேனி உடையீர்!  (திருநல்லூர்)  
1.086 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -கொட்டும் பறை சீரால் குழும,  (திருநல்லூர்)  
3.083 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -வண்டு இரிய விண்ட மலர்  (திருநல்லூர்)  
3.046 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -முத்து இலங்கு முறுவல்(ல்) உமை  (திருக்கருகாவூர்)  
3.035 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -முன்னை நால் மறை அவை  (திருத்தென்குடித்திட்டை)  
3.082 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -கொம்பு இரிய வண்டு உலவு  (திருஅவளிவணல்லூர்)  
3.104 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -விண் கொண்ட தூ மதி  (பரிதிநியமம் (பருத்தியப்பர்கோவில்))  
1.008 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -புண்ணியர், பூதியர், பூத நாதர்,  (திருஆவூர்ப்பசுபதீச்சுரம் (ஆவூர்))  
2.002 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -விண்டு எலாம் மலர விரை  (திருவலஞ்சுழி)  
2.106 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே!  (திருவலஞ்சுழி)  
3.106 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பள்ளம் அது ஆய படர்  (திருவலஞ்சுழி)  
3.073 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பாடல் மறை, சூடல் மதி,  (திருப்பட்டீச்சரம்)   திருஞானசம்பந்தர், திருச்செங்குன்றூரிலிருந்து புறப்பட்டுப் பாண்டிக் கொடுமுடி, வெஞ்சமாக் கூடல், கருவூர் ஆனிலை முதலிய தலங்களைப் பணிந்து சோழ நாடு மீண்டு திருச்சிராப்பள்ளி முதலிய காவிரித் தென்கரைத் தலங்களை வணங்கிக் கொண்டு திருவலஞ்சுழி வந்தடைந்தார். அப்போது இளவேனிற் பருவம் தொடங்கியது. திருவலஞ்சுழி இறைவனை வணங்கிப் பழையாறை மேற்றளியையும் திருச்சத்தி முற்றத்தையும் பணிந்து நண்பகற்போதில் பட்டீச்சுரம் வந்தடைந்தார். சிவபூதங்கள் வானத்தில் மறைந்து நின்று பட்டீசுரர் அளித்த முத்துப் பந்தரை ஏந்தியவாறு இது சிவபெருமான் அளித்தது எனக் கூறி ஞானசம்பந்தரின் சிவிகையின் மேல் ஏந்தி நிழல் செய்தன. அடியவர் வானினின்று இழியும் அப்பந்தரை ஏந்தியவர்களாய்த் தண்ணிழலில் ஞானசம்பந்தரை ஆலயத்துக்கு அழைத்துச் சென்றனர். ஞானசம்பந்தர் இறைவனது தடங் கருணையை வியந்தவாறு பாடல் மறை பதிகம் பாடிப் பட்டீச்சுரரை வழிபட்டு மகிழ்ந்தார்.
2.036 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -சீர் ஆர் கழலே தொழுவீர்!  (திருஇரும்பூளை (ஆலங்குடி))  
3.030 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பைத்த பாம்போடு, அரைக் கோவணம்,  (திருஅரதைப்பெரும்பாழி (அரித்துவாரமங்கலம்))  
3.086 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -முறி உறு நிறம் மல்கு  (திருச்சேறை (உடையார்கோவில்))  
2.046 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பால் ஊரும் மலைப்பாம்பும் பனிமதியும்  (திருநாலூர்மயானம்)  
2.022 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -திகழும் திருமாலொடு நான்முகனும்
புகழும் பெருமான்;
 (திருக்குடவாயில்)  
2.058 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -கலை வாழும் அம் கையீர்!  (திருக்குடவாயில்)  
1.029 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -ஊர் உலாவு பலி கொண்டு,  (திருநறையூர்ச்சித்தீச்சுரம் (திருநறையூர்))  
1.071 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பிறை கொள் சடையர்; புலியின்  (திருநறையூர்ச்சித்தீச்சுரம் (திருநறையூர்))  
2.087 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -நேரியன் ஆகும்; அல்லன், ஒருபாலும்;  (திருநறையூர்ச்சித்தீச்சுரம் (திருநறையூர்))  
2.063 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -மின்னும் சடைமேல் இளவெண் திங்கள்  (திருஅரிசிற்கரைப்புத்தூர்)  
1.021 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -புவம், வளி, கனல், புனல்,  (திருச்சிவபுரம்)  
1.112 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -இன்குரல் இசை கெழும் யாழ்  (திருச்சிவபுரம்)  
1.125 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -கலை மலி அகல் அல்குல்  (திருச்சிவபுரம்)  
3.059 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -அர விரி கோடல் நீடல்  (திருகுடமூக்கு (கும்பகோணம்))  
1.072 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -வார் ஆர் கொங்கை மாது  (திருக்குடந்தைக்காரோணம் (விஸ்வநாதர்கோவில்))  
3.021 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -நனவிலும் கனவிலும், நாளும், தன்  (திருக்கருக்குடி (மருதாந்தநல்லூர்))  
2.119 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -தழை கொள் சந்தும்(ம்), அகிலும்,  (திருநாகேச்சுரம்)  
2.024 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பொன் ஏர்தரு மேனியனே! புரியும்
மின்
 (திருநாகேச்சுரம்)  
1.032 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -ஓடே கலன்; உண்பதும் ஊர்  (திருவிடைமருதூர்)  
2.056 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பொங்கு நூல் மார்பினீர்! பூதப்படையினீர்!  (திருவிடைமருதூர்)  
1.096 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -மன்னி ஊர் இறை; சென்னியார்,  (திருஅன்னியூர் (பொன்னூர்))  
1.110 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -மருந்து அவன், வானவர் தானவர்க்கும்
பெருந்தகை,
 (திருவிடைமருதூர்)  
1.121 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -நடை மரு திரிபுரம் எரியுண  (திருவிடைமருதூர்)  
1.122 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -விரிதரு புலிஉரி விரவிய அரையினர்,
திரிதரும்
 (திருவிடைமருதூர்)  
2.035 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பரவக் கெடும், வல்வினை பாரிடம்  (திருத்தென்குரங்காடுதுறை)  
3.004 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -இடரினும், தளரினும், எனது உறு  (திருவாவடுதுறை)   ஞானசம்பந்தர் பட்டீச்சுரத்திலிருந்து புறப்பட்டுப் பல தலங்களையும் வணங்கியவராய்த் திருவாவடுதுறை வந்தடைந்தார். அதுபோது சிவபாத இருதயர், தான் வேள்வி செய்தற்கு ஏற்ற காலம் இதுவாகும். அதற்குப் பொருள் வேண்டுமென ஞானசம்பந்தரிடம் தெரிவித்தார். ஞானசம்பந்தர் தந்தையாருக்கு அளிக்கப் பொருள் இல்லையே என வருந்தியவராய் இடரினும் தளரினும் என்ற திருப்பதிகத்தால் இறைவனிடம் விண்ணப்பித்தார். சிவபூதம் ஒன்று ஆயிரம் பொன்னடங்கிய பொற்கிழி ஒன்றை ஆலயத்தில் மாசிலாமணியீசர் சந்நிதியில் உள்ள பீடத்தில் வைத்து இப்பொற்கிழி எடுக்க எடுக்கக் குறையாத உலவாக் கிழி, இறைவர் இக்கிழியை உமக்கு வழங்குமாறு அளித்துள்ளார் எனக் கூறி மறைந்தது. ஆளுடைய பிள்ளையார் உலவாக் கிழியைத் தலைமேற் கொண்டு போற்றி அதனைத் தந்தையார் கையில் கொடுத்து, இக்கிழியின் பொன்னைக் கொண்டு தந்தையாரையும் கழுமலத்திலுள்ள ஏனைய அந்தணர்களையும் நல் வேள்விகள் பலவும், செய்யுமாறு கூறி வழி யனுப்பி வைத்தார்.
2.013 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -நீற்றானை, நீள்சடைமேல் நிறைவு உள்ளது  (திருக்கோழம்பம்)  
3.018 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -துள மதி உடை மறி  (திருவைகல்மாடக்கோயில்)  
1.085 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -கல்லால் நிழல் மேய கறை  (திருநல்லம்)  
3.097 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -திடம் மலி மதில் அணி  (திருச்சிறுகுடி)  
2.020 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -தொழும் ஆறு வல்லார், துயர்  (திருஅழுந்தூர்)  
2.098 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -வரைத்தலைப் பசும் பொனோடு அருங்  (திருத்துருத்தி)  
3.070 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -ஏன எயிறு, ஆடு அரவொடு,  (திருமயிலாடுதுறை)  
1.038 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -கரவு இன்றி நல்மாமலர் கொண்டே
இரவும்
 (திருமயிலாடுதுறை)  
1.025 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -மரு ஆர் குழலிமாது ஓர்  (திருச்செம்பொன்பள்ளி)  
2.078 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -ஒளிர் இளம்பிறை சென்னிமேல் உடையர்,  (திருவிளநகர்)  
1.134 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -கருத்தன், கடவுள், கனல் ஏந்தி  (திருப்பறியலூர் (பரசலூர்))  
3.066 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -வண்டு இரைக்கும் மலர்க்கொன்றை விரி  (திருவேட்டக்குடி)  
1.136 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -மாதர் மடப்பிடியும் மட அன்னமும்  (தருமபுரம்)   ஞானசம்பந்தர் திருக்கோழம்பம் வைகல் முதலான தலங்களை வணங்கிக் கொண்டு திருத்தருமபுரம் சென்றடைந்தார். தருமபுரம் திருநீலகண்ட யாழ்ப்பாணரின் தாயார் பிறந்த ஊர், ஆதலின் அங்கு வாழும் அவரது சுற்றத்தார் ஞானசம்பந்தரையும், யாழ்ப்பாண ரையும் அன்புடன் வரவேற்றுப் போற்றினர். பாணர், தம் உறவினர் களோடு உரையாடுகையில், அவர்கள் ஞானசம்பந்தரின் திருப்பதிக இசையைப் பாணர் உடனிருந்து யாழில் வாசித்து வருதலினாலேயே திருப்பதிக இசை சிறப்படைகிறது என முகமன் உரை கூறினர். அதைக் கேட்டு மனம் பொறாது ஞானசம்பந்தரை வணங்கித் திருப்பதிக இசை யாழில் அடங்காதது என்பதனை உறவினர்கள் உணருமாறு செய்தருள வேண்டுமெனப் பணிந்தார். ஞானசம்பந்தர் கண்டத்திலும் கருவி யிலும் அடங்காத இசைக் கூறுடைய மாதர் மடப்பிடி என்ற திருப் பதிகத்தை அருளிச் செய்தார்.
1.049 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -போகம் ஆர்த்த பூண் முலையாள்  (திருநள்ளாறு)   யாழ்ப்பாணர் அப்பதிகஇசை தம் கருவியில் அடங்காததை உணர்ந்து இக்கருவியினாலன்றோ உறவினர் ஞானசம்பந்தரையும் தன்னையும் ஏற்றத் தாழ்வு கற்பிக்க முற்பட்டனர் என, அதனை உடைத்தற்கு ஓங்கினார். ஞானசம்பந்தர் அதனைத் தடுத்து, இறைவன் பெருமை இக்கருவியில் அடங்குமெனக் கருதல் கூடாது. ஆயினும் இயன்றவாறு வாசிப்பீர் எனத் திரும்பக் கொடுத்து, இசைத் தொண்டு செய்யப் பணித்து, சிலநாள் அப்பதியில் தங்கி, திருநள்ளாறு அடைந்து போகமார்த்த பூண் முலையாள் எனத் தொடங்கித் திருப்பதிகம் பாடி நள்ளாற்றிறைவரை வணங்கித் திருச்சாத்த மங்கைக்கு எழுந்தருளினார்.
2.052 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -கருந்தடங்கணின் மாதரார் இசை செய்ய,  (திருக்கோட்டாறு)  
3.012 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -வேதியன், விண்ணவர் ஏத்த நின்றான்,  (திருக்கோட்டாறு)  
3.058 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -திரு மலர்க்கொன்றை மாலை திளைக்கும்  (திருச்சாத்தமங்கை)  
1.084 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -புனையும் விரிகொன்றைக் கடவுள், புனல்  (திருநாகைக்காரோணம் (நாகப்பட்டினம்))  
2.116 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -கூனல் திங்கள் குறுங்கண்ணி கான்ற(ந்)  (திருநாகைக்காரோணம் (நாகப்பட்டினம்))  
2.008 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -வான் உலாவும் மதி வந்து  (திருச்சிக்கல்)  
2.105 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -மின் உலாவிய சடையினர், விடையினர்,  (திருக்கீழ்வேளூர்)  
3.063 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பைங்கோட்டு மலர்ப் புன்னைப் பறவைகாள்!  (திருச்செங்காட்டங்குடி)  
1.061 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -நறை கொண்ட மலர் தூவி,  (திருச்செங்காட்டங்குடி)  
2.018 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -சடையாய்! எனுமால்; சரண் நீ!  (திருமருகல்)   வைப்பூரிலுள்ள தாமன் என்போன் என் தந்தை. அவனுக்கு மகளிர் எழுவர். அரவு தீண்டப்பட்டவன் என் தாய்மாமன். என் தந்தை தன் மகளிருள் மூத்தவளை மாமனுக்குத் தருவதாகக் கூறிப் பொரு ளாசையால் பிறன் ஒருவனுக்கு மணம் செய்வித்தார், அடுத்த பெண்ணை உனக்குத் தருகிறேன் என்று ஆறுதல் கூறிக்கொண்டே ஆறு பெண்களையும் இவ்வாறே பிறருக்கு மணம் முடித்து வந்தார். ஏழாவது பெண்ணாகிய நான் என்னையும் இவ்வாறே வேறு ஒருவருக்கு மணம் செய்வித்துத் தன் மருகனைத் தந்தை தளர்வுறச் செய்வார் என்ற எண்ணத்தால் உறவினர்க்கும் தெரியாமல் இவரோடு போந்து மணம் முடித்து வாழ எண்ணினேன். வழியிடையே இவ்வூரில் அரவு தீண்டி இவரும் இறந்தார். கடல் நடுவே கலம் கவிழ்ந்த நாய்கன் போலத் துன்பத்துக்கு ஆளானேன். இந்நிலையில் என் சுற்றத்தார் போல என்பால் பரிவு காட்டி அருள் செய்கின்றீர்கள்! என்று கூறிய பெண்ணின் ஆற்றாமையைக் கேட்டுத் திருவுளம் இரங்கிய ஞான சம்பந்தர் மருகற் பெருமான் ஆலயம் சென்று பணிந்து உன் பெயர் கூறி ஒள்ளிழையாள் உளம் மெலிந்து வருந்துதல் அருட் கடலாகிய உனக்கு அழகோ என முறையிடும் நிலையில் சடையாயெனுமால் எனத் தொடங்கித் திருப்பதிகம் பாடிப் போற்றினார். அந்நிலையில் வணிகனும் உயிர்பெற்று எழுந்தான். இருவரும் தங்கட்கு வாழ்வளித்த ஞான சம்பந்தர் திருவடிகளைப் பணிந்தனர். ஞானசம்பந்தர் அவ்விருவருக்கும் இறைவன் திருமுன்னிலையில் மணம் புணரும் பெருவாழ்வு வழங்கி வாழ்த்தினார்.
1.006 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -அங்கமும் வேதமும் ஓதும் நாவர்  (திருமருகலும் திருச்செங்காட்டங்குடியும்)   திருஞானசம்பந்தர் திருமருகலில் தங்கியிருந்தபோது, சிறுத் தொண்ட நாயனார் அவரை வணங்கி மீண்டும் திருச்செங்காட்டங் குடிக்கு எழுந்தருளுமாறு வேண்டினார். மருகற் பெருமானை வணங்கி விடைபெறச் சென்ற ஞானசம்பந்தருக்கு இறைவன் செங்காட்டங்குடிக் காட்சியைக் காட்ட இரு தலங்களையும் இணைத்து அங்கமும் வேதமும் என்ற திருப்பதிகம் பாடிப் போற்றிச் சிறுத் தொண்டருடன் செங்காட்டங்குடி சென்று கணபதீச் சுரத்தை வழிபட்டுக் கொண்டு சிலநாள் அங்குத் தங்கியிருந்தார்.
1.115 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -சங்கு ஒளிர் முன் கையர்  (திருஇராமனதீச்சரம்)  
2.115 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -வெங் கள் விம்மு குழல்  (திருப்புகலூர்)  
2.092 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பட்டம், பால்நிற மதியம், படர்  (திருப்புகலூர்வர்த்தமானீச்சரம்)  
2.108 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -வடி கொள் மேனியர், வான  (திருவிற்குடிவீரட்டம்)  
1.105 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பாடலன் நால்மறையன்; படி பட்ட  (திருவாரூர்)  
2.101 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பருக் கை யானை மத்தகத்து  (திருவாரூர்)  
1.091 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -சித்தம் தெளிவீர்காள்! அத்தன் ஆரூரைப்
பத்தி
 (திருவாரூர்)  
3.045 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -அந்தம் ஆய், உலகு ஆதியும்  (திருவாரூர்)  
1.050 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -மெய்யர் ஆகிப் பொய்யை நீக்கி,  (திருவலிவலம்)  
1.123 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பூ இயல் புரிகுழல்; வரிசிலை  (திருவலிவலம்)  
1.062 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -நாள் ஆய போகாமே, நஞ்சு  (திருக்கோளிலி (திருக்குவளை))  
3.050 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -விரும்பும் திங்களும் கங்கையும் விம்மவே,
சுரும்பும்
 (திருத்தண்டலைநீணெறி)  
2.079 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பவனம் ஆய், சோடை ஆய்,  (திருவாரூர்)  
1.037 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -அரவச் சடை மேல் மதி,  (திருப்பனையூர்)  
1.002 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -குறி கலந்த இசை பாடலினான்,  (திருப்புகலூர்)  
2.103 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -புல்கு பொன் நிறம் புரி  (திருஅம்பர்மாகாளம்)  
1.083 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -அடையார் புரம் மூன்றும் அனல்வாய்  (திருஅம்பர்மாகாளம்)  
3.093 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -படியுள் ஆர் விடையினர், பாய்  (திருஅம்பர்மாகாளம்)  
3.019 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -எரிதர அனல் கையில் ஏந்தி,  (திருஅம்பர்ப்பெருந்திருக்கோயில் (அம்பர்))  
3.008 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -சடை உடையானும், நெய் ஆடலானும்,  (திருக்கடவூர் வீரட்டம்)  
2.080 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -வரிய மறையார், பிறையார், மலை  (திருக்கடவூர் மயானம்)  
2.042 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -அக்கு இருந்த ஆரமும், ஆடு  (திருஆக்கூர்)  
2.062 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -காயச் செவ்விக் காமற் காய்ந்து,  (திருமீயச்சூர்)  
1.041 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -சீர் அணி திகழ் திருமார்பில்  (திருப்பாம்புரம்)  
1.035 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -அரை ஆர் விரி கோவண  (திருவீழிமிழலை)  
1.011 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -சடை ஆர் புனல் உடையான்,  (திருவீழிமிழலை)  
1.042 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பைம் மா நாகம், பல்மலர்க்  (திருப்பேணுபெருந்துறை)  
2.118 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பொடிகள் பூசிப் பலதொண்டர் கூடி,  (திருதிலதைப்பதி (மதிமுத்தம்))  
1.004 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -மைம் மரு பூங்குழல் கற்றை  (திருவீழிமிழலை)   கோயிலின் வடபால் உள்ள திருமடத்தில் ஞானசம்பந்தர் எழுந்தருளியிருந்தார். அங்கிருக்கும் நாள்களில் திலதைப்பதி, பேணு பெருந்துறை என்ற தலங்களை ஞானசம்பந்தர் வழிபட்டுப் போற்றி னார். ஞானசம்பந்தர் வீழியில் இருந்தபோது காழிமக்கள் அவர் பிரிவாற்றாது எங்களோடு சீகாழிக்கு வந்தருள வேண்டுமென வேண்டினர். ஞானசம்பந்தர் வீழிநாதனின் அருள் பெற்று இன்று கழித்து நாளை செல்வோம் எனக் கூறி அன்றிரவு துயில் கொண்டார். பெருமான் அவர் தம் கனவில் தோன்றி யாம் தோணியிலமர்ந்த வண்ணத்தை நாளை நீ வீழிமிழலையிலேயே காணலாம் எனக் கூறக் கேட்டு விழித்தெழுந்து நீராடி ஆலயம் சென்றபோது இறைவன் காழிக் காட்சியை அவ்வாலயத்திலேயே காட்டக் கண்டு மைம் மருபூங் குழல் எனத் திருப்பதிகம் பாடிப் பரவினார், காழிமக்கட்கு விடை கொடுத்து அனுப்பிவிட்டு வீழிமிழலையிலேயே தங்கியிருந்தார்.
1.020 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -தட நிலவிய மலை நிறுவி,  (திருவீழிமிழலை)  
1.082 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -இரும் பொன்மலை வில்லா, எரி  (திருவீழிமிழலை)  
1.124 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -அலர்மகள் மலிதர, அவனியில் நிகழ்பவர்
மலர்
 (திருவீழிமிழலை)  
1.132 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -ஏர் இசையும் வட-ஆலின்கீழ் இருந்து,  (திருவீழிமிழலை)  
3.009 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -கேள்வியர், நாள்தொறும் ஓது நல்வேதத்தர்  (திருவீழிமிழலை)  
3.080 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -சீர் மருவு தேசினொடு தேசம்  (திருவீழிமிழலை)  
3.085 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -மட்டு ஒளி விரிதரு மலர்  (திருவீழிமிழலை)  
3.098 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -வெண்மதி தவழ் மதில் மிழலை  (திருவீழிமிழலை)  
3.111 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -வேலின் நேர்தரு கண்ணினாள் உமை  (திருவீழிமிழலை)  
3.116 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -துன்று கொன்றை நம் சடையதே;  (திருவீழிமிழலை)  
3.119 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -புள்ளித்தோல் ஆடை; பூண்பது நாகம்;  (திருவீழிமிழலை)  
1.092 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -வாசி தீரவே, காசு நல்குவீர்!
மாசு
 (திருவீழிமிழலை)  
ஞானசம்பந்தரும் அப்பரும் திருவீழிமிழலையில்தங்கி யிருந்த காலத்து மழையின்மையால் நாட்டில் பஞ்சம் ஏற்பட்டது. உயிர்களெல்லாம் பசியால் வருத்தமுற்றன. அடியார்களும் துயருற் றனர். அதனை அறிந்த பிள்ளையார் கண்ணுதலான் திருநீற்றுச் சார்வினோர்க்கும் கவலை வருமோ? என்று கருதியவராய் இரவில் துயிலலுற்றார். பெருமான் அவர் கனவில் தோன்றிப் பஞ்சம் நீங்கும் கால எல்லைவரை ஆலயத்தின் கிழக்குப் பலிபீடத்திலும் மேற்குப் பலிபீடத்திலும் இருவருக்கும்பொற்காசு அளிக்கின்றோம்! எனக்கூறி மறைந்தார். விழித்தெழுந்த ஞானசம்பந்தர் அப்ப மூர்த்திகளுடன் ஆலயம் சென்றார். கிழக்குப் பலிபீடத்தில் ஞானசம்பந்தர் காசு பெற்றார். மேற்குப் பலிபீடத்தில் அப்பர் காசு பெற்றார். இருவரும் அக்காசுகளைப் பெற்றுத் தத்தம் திருமடங்களில் அடியவர்களுக்கு அமுதளிக்கச் செய்தருளினர். இங்ஙனம் நிகழும் நாள்களில் நாவுக்கரசர் திருமடத்தில் உரிய காலத்திலும், ஞானசம்பந்தர் திருமடத்தில் சிறிது காலம் தாழ்த்தும் அமுதளிக்கப் பெறுவதை அறிந்த ஞானசம்பந்தர், உரியவர்களை அழைத்துத் தாமதத்திற்குரிய காரணம் வினவினார். இறைவன் தனக்கு அளிக்கும் காசுகள் வாசியுள்ளதாக இருத்தலையும் அதனால் அக்காசினை மாற்றிப் பொருள்கள் பெற்று வருதலினால் காலத்தாழ்ச்சி ஏற்படுதலையும் அறிந்த ஞானசம்பந்தர், அப்பர் கைத்தொண்டும் செய்தலால் அவருக்கு வாசியில்லாத காசு வழங்குதலை அறிந்து மறுநாள் ஆலயம் சென்று வாசிதீரவே காசு நல்குவீர் எனத் திருப்பதிகம் பாடி நல்ல காசினைப் பெற்று உரிய காலத்தில் தமது திருமடத்திலும் அடியவர்களுக்கு அமுதளிக்கச் செய்து மகிழ்ந்திருந்தார். சில திங்களில் மழைபெய்து நாடு செழித்தது. பஞ்சம் நீங்கி மக்கள் இனிது வாழத் தொடங்கினர்.
2.007 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -வன்னி கொன்றை மதமத்தம் எருக்கொடு  (திருவாஞ்சியம்)  
3.064 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -அண்ணாவும் கழுக்குன்றும் ஆய மலை  (திருப்பெருவேளூர் (காட்டூரையன்பேட்டை))  
1.058 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -அரியும், நம் வினை உள்ளன  (திருக்கரவீரம்)  
3.088 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -மத்தகம் அணி பெற மலர்வது  (திருவிளமர்)  
2.015 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -நீரானே! நீள்சடைமேல் ஒர் நிரை  (திருக்காறாயில் (திருக்காறைவாசல்))  
2.082 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பண் நிலாவிய மொழி உமை  (திருத்தேவூர்)  
3.074 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -காடு பயில் வீடு, முடை  (திருத்தேவூர்)  
2.019 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -அறத்தால் உயிர் காவல் அமர்ந்து  (திருநெல்லிக்கா)  
2.045 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -தையல் ஓர் கூறு உடையான்,  (கைச்சின்னம் (கச்சன்னம்))  
2.093 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -புரை செய் வல்வினை தீர்க்கும்  (திருத்தெங்கூர்)  
3.016 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -நிணம் படு சுடலையில், நீறு  (திருக்கொள்ளிக்காடு)  
2.109 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -நீலம் ஆர்தரு கண்டனே! நெற்றி  (திருக்கோட்டூர்)  
3.061 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -ஆதியன், ஆதிரையன், அனல் ஆடிய  (திருவெண்டுறை)  
3.042 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -நிறை வெண் திங்கள் வாள்முக  (திருச்சிற்றேமம்)  
2.051 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -நீருள் ஆர் கயல் வாவி  (திருக்களர்)  
1.022 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -சிலை தனை நடு இடை  (திருமறைக்காடு (வேதாரண்யம்))  
2.091 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பொங்கு வெண்மணல் கானல் பொருகடல்  (திருமறைக்காடு (வேதாரண்யம்))  
3.076 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -கல் பொலி சுரத்தின் எரி  (திருமறைக்காடு (வேதாரண்யம்))  
2.037 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -சதுர மறைதான் துதிசெய்து வணங்கும்
மதுரம்
 (திருமறைக்காடு (வேதாரண்யம்))  
ஞானசம்பந்தரும் அப்பரும் அடியவர்களுடன் திருவீழி மிழலையிலிருந்து புறப்பட்டுத் திருவாஞ்சியம் முதலிய தலங்களை வணங்கிக்கொண்டு அடியவர் எதிர்கொண்டு போற்றத் திருமறைக் காடு அடைந்தனர். ஆலயத்தை வலம் வந்து வாயிலை அணுகினார் கள். வேதங்களால் பூசிக்கப்பெற்றுத் திருக்காப்பிடப்பெற்ற அத்திருக் கதவுகள் திறக்கப்படாதிருத்தலையும் மக்கள் வேறோர் பக்கத்தில் வாயில் அமைத்துச் சென்று வழிபட்டு வருதலையும் கண்ட ஞான சம்பந்தர் வேதவனப் பெருமானை உரிய வாயில் வழியே சென்று வழிபட வேண்டுமெனத் திருவுளத்தெண்ணி அப்பரைப் பார்த்து இக்கதவுகள் திறக்கத் தாங்கள் திருப்பதிகம் பாடியருளுக என வேண்டினார். அப்பர் பண்ணினேர் மொழியாள் எனத் தொடங்கித் திருப்பதிகம் பாட அப்பதிகப் பொருட் சுவையில் ஈடுபட்ட இறைவன் பதிகத்தின் நிறைவில் திருக்கதவுகள் திறக்குமாறு செய்தருளினார். இருவரும் ஆலயம் சென்று மறைக்காட்டுறையும் மணாளனைப் போற்றிப் பரவித் திரும்பினர். அப்பர் இக்கதவுகள் இனி திறக்கவும் அடைக்கவும் உரியனவாக இருத்தல் வேண்டுமென எண்ணி ஞான சம்பந்தரை நோக்கி இப்போது தாங்கள் திருக்கதவுகள் அடைக்கப் பாட வேண்டுமென வேண்டினார். ஞானசம்பந்தர் சதுரம் மறை எனத் தொடங்கித் திருப்பதிகம் பாடினார். முதற்பாடலிலேயே கதவு அடைத்துக் கொண்டது. ஏனைய பாடல்களையும் பாடிப் போற்றினார் ஞானசம்பந்தர். பின்னர் இருவரும் சென்று தத்தம் திருமடங்களில் இனிதுறைந்தனர்.
2.111 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -தளிர் இள வளர் என  (திருவாய்மூர்)   அப்பர் அரிய வேதங்களால் திருக்காப்பிடப்பெற்றகதவுகள் தாம் பாடிய திருப்பதிகத்தால் அரிதில் திறக்கப்பெற்றதையும் ஞானசம்பந்தரின் பாடலுக்கு எளிதில் அடைத்துக் கொண்டதையும் எண்ணியவராய்த் துயில் கொண்டார். அவர் தம் மனக்கருத்தை அறிந்த இறைவன் அவர் எதிரே சைவ வேடத்துடன் காட்சி நல்கி நாம் வாய்மூரில் இருக்கின்றோம். நம்மைத் தொடர்ந்து வருக என அழைத்து முன்னே செல்ல அவரைப் பின் தொடர்ந்து சென்றார் அப்பர் நெடுந்தூரம் சென்ற நிலையில் பெருமான் மறைந்தார். அப்பர் வாய்மூரை அடைந்து வழிபட்டுத் திருப்பதிகம் பாடினார். இந்நிலை யில் அப்பரை அவர்தம் திருமடத்தில் காணாத ஞானசம்பந்தர் அவர் சென்ற வழி கேட்டறிந்து அவரைத் தேடித் திருவாய்மூர் வந்தடைந் தார். ஞானசம்பந்தரின் வருகையை அறிந்த அப்பர் அவரைக் கண்டு மகிழ்ந்து தாம் அருளிய திருப்பதிகத்தில் திறக்கப்பாடிய என்னினும் சிறப்புடைய செந்தமிழ்பாடித் திருக்கதவம்அடைப்பித்த ஞானசம்பந்தர் வந்துள்ளார் திருக்காட்சி நல்குக,என வேண்டினார். வாய்மூர் உறையும் இறைவர் ஞானசம்பந்தருக்கு மட்டும் தமது ஆடல்காட்சியைக் காட்ட பிள்ளையார் தளிரிள வளரென எனத் திருப்பதிகம் பாடிப் போற்றி அக்காட்சியை அப்பருக்கும் காட்டியருளி னார். பின்னர் அப்பரும் அவ்வருட் காட்சியைக் கண்டு பதிகம் பாடிப் போற்றினார். இருவரும் வாய்மூரில் சில நாள் தங்கி மகிழ்ந்து மீண்டும் திருமறைக்காடு சென்று தத்தம் திருமடங்களில் இனிதுறைவாராயினர்.
2.085 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -வேய் உறு தோளி பங்கன்,  (திருமறைக்காடு (வேதாரண்யம்))   அக்காலத்தில் பாண்டிநாடு சமண் சமய இருளில் மூழ்கியிருந் தது. சமண சமயிகள் தங்கள் சமயத்தைப் பரப்புவதுடன் சைவ சமயத்தை இகழ்ந்தும் பழித்தும் வந்தனர். அக்காலத்தில் அரசு புரிந்த கூன்பாண்டியன் சமண சமயத்தைச் சார்ந்து மக்களும் அச்சமயம் சார்ந்து ஒழுகத்தலைப்பட்டனர். சிவாலயங்கள் சமண் பாழிகளாகவும் பள்ளிகளாகவும் மாற்றப்பட்டும் வழிபாடு இன்றியும் இருந்தன. மன்னனின் மாதேவியார் மங்கையர்க் கரசியாரும்அமைச்சர் குலச்சிறையாரும் உறுதியாய்ச் சிவநெறி கடைப்பிடித்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் இறையருள் பெற்ற ஞானசம்பந்தரின் பெருமைகளைக் கேள்வியுற்ற அரசியாரும் அமைச்சரும் அவர் திருமறைக்காட்டுக்கு எழுந்தருளியிருப்பதை அறிந்து தம் பரிசனங்களை அனுப்பி வணங்கி தம் நாட்டு நிலையைத் தெரிவித்து வருமாறு செய்தனர். பாண்டி நாட்டிலிருந்து திருமறைக்காடு வந்த பரிசனங்கள் ஞானசம்பந்தரை வணங்கித் தங்கள் நாட்டின் நிலையை எடுத்துரைத் தனர். உடன் இருந்த அடியவர்கள் ஞானசம்பந்தரிடம் பாண்டி நாட்டுக்கு எழுந்தருள வேண்டுமெனத் தெரிவித்துக் கொண்டார்கள். ஞானசம்பந்தர் மதுரைக்குச் செல்லும் தம் வேட்கையை அப்பரிடம் தெரிவித்தார். அதனை அறிந்த அப்பர் ஞானசம்பந்தரை நோக்கிப் பிள்ளாய் அமணர் செய்யும் வஞ்சனைக் கோர் அளவில்லை என்பதை நான் உணர்ந்தவன். மேலும் இன்று நாளும் கோளும் நன்றாக இல்லை. இதுபோது பாண்டிநாடு செல்வது கூடாது? எனத்தடுத்தார். ஞானசம்பந்தர் அப்பரை நோக்கி நாம் போற்றுவது நம் பெருமானுடைய திருவடிகளை. ஆதலால் நம்பால் எத்தகைய தீங்கும் வாராது எனக் கூறியதோடு, நாள் கோள்களின் குற்றங்கள் நீங்க வேயுறு தோளிபங்கன் என்னும் திருப்பதிகம் பாடி, மதுரைப் பயணத்தை மேற்கொண்டார்.
2.076 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -வாடிய வெண்தலை மாலை சூடி,  (திருஅகத்தியான்பள்ளி)  
2.104 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பொடி கொள் மேனி வெண்  (திருக்கடிக்குளம்)  
1.017 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -மனம் ஆர்தரு மடவாரொடு மகிழ்  (திருஇடும்பாவனம்)  
3.033 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -நீர் இடைத் துயின்றவன், தம்பி,  (திருவுசாத்தானம் (கோவிலூர்))  
1.014 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -வானில் பொலிவு எய்தும் மழை  (திருக்கொடுங்குன்றம் (பிரான்மலை))  
1.094 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -நீலமாமிடற்று ஆலவாயிலான்
பால் அது ஆயினார்
 (திருஆலவாய் (மதுரை))  
திருஞானசம்பந்தர் திருமறைக் காட்டிலிருந்து அடியவர் புடைசூழச் சிவிகையில் ஏறிப் புறப்பட்டு அகத்தியான்பள்ளி, கோடிக் குழகர் முதலிய தலங்களை வணங்கிக் கொண்டு தென் மேற்றிசை நோக்கிச் சென்று திருக் கொடுங்குன்றம் பணிந்து மதுரையின் எல்லையை அடைந்தார், மங்கையர்க்கரசியார் ஞானசம்பந்தர் வருகையை அறிந்து ஊர் எல்லையில் வரவேற்குமாறு குலச்சிறை யாரை அனுப்பியிருந்தார். மதுரை எல்லையை அடைந்த ஞானசம்பந் தரைக் குலச்சிறையார் வணங்கி வரவேற்றார். பிள்ளையார் சிவிகை யிலிருந்து இறங்கி அரசியார்க்கும் அமைச்சர்க்கும் திருவருளால் நன்மைகள் விளைக என வாழ்த்தினார். குலச்சிறையார் இன்று தாங்கள் எழுந்தருளப் பெற்ற பேற்றினால் என்றைக்கும் திருவருள் உடையோம். இனி எங்கள் நாட்டில் திருநீற்றொளி விளங்குவது உறுதி என முகமனுரை கூறி, மங்கையர்க்கரசியார் ஞானசம்பந்தரை வரவேற்கத் தன்னை அனுப்பியுள்ளதைத் தெரிவித்தார். மேலும் மதுரை மிக அண்மையிலுள்ளது என்றும் கூறினார். ஞானசம்பந்தர் மதுரையை நெருங்கிய நிலையில் மதுரை இன்னும் எவ்வளவு தூரம் உள்ளது எனக் கேட்க அடியவர்கள் கோபுரத்துடன் திருக்கோயிலைச் சுட்டிக்காட்டி அதுவே திருவால வாய் எனக் கூறக்கேட்டு மங்கையர்க்கரசியார் குலச்சிறையார் ஆகியோரின் பக்தி நலத்தைப் புகழ்ந்து திருப்பதிகம் அருளிச் செய்து கொண்டே ஆலவாய்த் திருக்கோயிலை அடைந்து குலச்சிறை யாருடன் வலங்கொண்டு பணிந்து நீலமாமிடற்று எனத் தொடங்கும் திருப்பதிகம் பாடிப் போற்றினார்.
3.120 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -மங்கையர்க்கு அரசி வளவர்கோன் பாவை,  (திருஆலவாய் (மதுரை))  
1.095 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -தோடு ஓர் காதினன்; பாடு  (திருவிடைமருதூர்)  
3.051 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -செய்யனே! திரு ஆலவாய் மேவிய
ஐயனே!
 (திருஆலவாய் (மதுரை))  
ஞானசம்பந்தரோடு உடன் வந்த அடியவர் அந்தணர் முதலானோர் வருகையை அறிந்த சமணர் கண்டு முட்டு ஆயினர். மன்னனிடம் சென்று முறையிட்டனர். தாங்கள் அறிந்த மந்திரத்தால் ஞானசம்பந்தர் தூங்குகின்ற மடத்திற்குத் தீவைக்க அநுமதி பெற்றனர். சமணர் அனலை ஏவிய மந்திரம் ஞானசம்பந்தரின் அடியவர் ஓதும் ஐந்தெழுத்துக்கு முன்னால் பலிதம் ஆகவில்லை. அதை அறிந்த சமணர்கள் ஞானசம்பந்தர் திருமடத்திற்குத் தீ வைத்தனர். ஒருபகுதி தீப்பற்றி எரிந்தது. அடியவர்கள் சமணர்களின் வஞ்சனையை அறிந்து ஞானசம்பந்தரிடம் தெரிவித்தனர். இத்தீ அரசன் முறை செய்யாமை யால் நேர்ந்ததாகும், ஆதலால் இத்தீ அவனைச் சென்று பற்றுதலே முறையாயினும் மங்கையர்க்கரசியாரின் மங்கல நாணுக்கு ஊறு நேராதவாறு பையச் சென்று பாண்டியனைப் பற்றுவதாகுக என்று கூறி செய்யனே திரு என்று பதிகம் ஓதி தீயை ஏவினார்.
3.047 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -காட்டு மா அது உரித்து,  (திருஆலவாய் (மதுரை))   குலச்சிறையார் அரசனை அணுகி ஞானசம்பந்தர் திருமடத்துக்குச் சமணர்கள் இட்ட தீயே நோயாகி வந்துள்ளது. அவர் வந்தால் நோய் தீரலாம் என்றார். மன்னன் ஞானசம்பந்தர் என்ற நாம மந்திரத்தைக் கேட்ட அளவில் அயர்வு நீங்கியதை உணர்ந்து அவரை அழைப்பீராக என்று கூறினான். சமணர்கள் அரசனிடம் இந்நோய் ஞானசம்பந்தரால் தீர்க்கப் பெற்றாலும் தங்களாலேயே தணிந்தது எனப் பொய்யுரைக்க வேண்டினர். மன்னன் நடுநிலை பிறழேன் என மறுத்தான். குலச்சிறை யாரும் அரசியாரும் ஞானசம்பந்தரைச் சென்று தரிசித்துத் திருமடத் திற்குத் தீயிட்ட செயலுக்கு மிக வருந்தியவர்களாய் மன்னன் வெப்பு நோயால் வாடுவதை விண்ணப்பித்துத் தாங்கள் எழுந்தருளி நோயைக் குணப்படுத்தினால் உய்வோம் எனக் கூறி நின்றனர். ஞான சம்பந்தர் சமணர்களோடு செய்யும் வாதில் வென்று தென்னர் கோனுக்குத் திருநீறு அணிவிப்போம் எனக் கூறிப் புறப்பட்டுத் திருக் கோயிலை அடைந்து காட்டு மாவது உரித்து என்ற திருப்பதிகத்தால் போற்றி இறைவன் திருவுளக் குறிப்பை அறிந்தார்.
3.108 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -வேத வேள்வியை நிந்தனை செய்து  (திருஆலவாய் (மதுரை))   சமணர் மேற்கொள்ளும் வாதங்களிலும் வெற்றி நல்க வேத வேள்வியை என்ற திருப்பதிகம் பாடி இறைவனிடம் விடை பெற்று வெளிவந்து சிவிகையில் ஏறி மன்னனின் மாளிகையை அடைந்தார்.
2.070 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பிரமன் ஊர், வேணுபுரம், புகலி,  (திருஆலவாய் (மதுரை))   ஞானசம்பந்தர் பாண்டியன் அரண்மனையை அடைந்து மன்னன் அருகில் இடப்பெற்ற பொற்றவிசில் எழுந்தருளினார். மன்னன் ஞானசம்பந்தரைத் தரிசித்த அளவில் நோய் சிறிது தணியப் பெற்றவனாய் அவரோடு உரையாடும் முறையில் நுமது ஊர் எது எனக் கேட்கப் பிரமனூர் என்ற திருப்பதிகத்தால் விடையளித்தார்.
3.039 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -மானின் நேர் விழி மாதராய்!  (திருஆலவாய் (மதுரை))  
2.066 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -மந்திரம் ஆவது நீறு; வானவர்  (திருஆலவாய் (மதுரை))   சமணர்கள் அச்சமுற்றார்கள். ஆயினும் அதனை மறைத்துக் கொண்டு சம்பந்தரை நோக்கி உங்கள் சமயக் கொள்கைகளைக் கூறுங்கள் எனக்கூறினர். அரசியார் கொடிய சமணர்கள் நடுவில் இப் பாலகரை நாம் அழைத்தது தவறோ என வருந்திச் சமணர்களை நோக்கி மன்னனின் நோயை முதலில் தணிக்க முயலுங்கள். நோய் தணிந்த பிறகு வாது செய்யலாம் என்றார். ஞானசம்பந்தர் அரசமா தேவியாரைப் பார்த்து அஞ்சற்க; என்னைப் பாலகன் எனக் கருத வேண்டா; ஆலவாயரன் துணைநிற்க வாதில் வெல்வோம் என்றார். சமணர்கள் மன்னன் உடலில் இடப்பாகம் பற்றிய நோயை நாங்கள் குணப்படுத்துகிறோம் என்று பீலி கொண்டு உடலைத் தடவிய அளவில் நோய் மேலும் கூடியது. ஞானசம்பந்தர் மந்திரமாவது நீறு என்ற திருப்பதிகம் பாடி, தம் திருக்கரத்தால் வலப்பாகத்தில் திரு நீற்றைத் தடவிய அளவில் நோய் தணிந்து இடப்பாகத்தே மூண்டெழக் கண்ட மன்னன் அப் பாகத்தையும் தாங்களே தீர்த்தருள வேண்டுமென வேண்டினான். ஞானசம்பந்தர் இடப்பாகத்திலும் திருநீறு பூசிய அளவில் நோய் தணிந்தது. மன்னன் எழுந்து ஞானசம்பந்தரைப் பணிந்து யான் உய்ந்தேன் என்று போற்றினான்.
3.087 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -தளிர் இள வளர் ஒளி  (திருஆலவாய் (மதுரை))   பாண்டியனது வெப்பு நோயைப் போக்க இயலாத சமணர்கள் தருக்க வாதம் புரிவதை விடுத்துத் தீயிலும் நீரிலும் அவரை வெல்ல லாம் என்று எண்ணினார்கள். திருஞானசம்பந்தர் இனி உங்கள் வாய்மையைக் கூறுங்கள் என்றார். சமணர்கள் இருதிறத்தாரும் தாங்கள் கண்ட பேருண்மையை ஏட்டில் எழுதி நெருப்பில் இட்டால் வேகாத ஏடு எவருடையதோ அவர்கள் சமயமே மெய்ச்சமயம் எனக் கொள்வோம் என்றனர். ஞானசம்பந்தரும் அதற்கிசைந்தார். பாண்டியன் தீக்குண்டம் அமைக்கக் கட்டளையிட்டான். ஞானசம்பந்தர் தாம் அருளிய திருப்பதிகச் சுவடியைக் கொணரச் செய்து வழிபட்டு அதனை விரித்தருளினார். போகமார்த்த பூண்முலையாள் என்ற திருநள்ளாற்றுத் திருப்பதிகம் உதயமாயிற்று. ஞானசம்பந்தர் நள்ளாற்றிறைவனைப் போற்றி அவ் ஏட்டினை எடுத்து அத்திருப்பதிகம் அனலிடை வேகாதிருக்க வேண்டி தளிரிள வள ரொளி என்றதொரு திருப்பதிகம் அருளி எடுத்த ஏட்டினைத் தீயில் இட்டார். அவ்வேடு தீயில் எரியாது பச்சென்றிருந்தது.சமணர்கள் தங்கள் நூற் பொருள் எழுதப் பெற்றதொரு ஏட்டினைத் தீயில் இட்டனர். அது எரிந்து கரிந்து சாம்பலாயிற்று. ஞானசம்பந்தர் குறித்த நேரம் வரை காத்திருந்து தான் இட்ட ஏட்டை யாவரும் காண எடுத்தருளினார். அது முன்னையினும் பச்சென்றிருந்த காரணத்தால் பச்சைத் திருப்பதிகம் எனப் போற்றப்பெறுவதாயிற்று.
3.054 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -வாழ்க அந்தணர், வானவர், ஆன்  (திருஆலவாய் (மதுரை))   சமணர்கள் தங்கள் ஏடு எரிந்து சாம்பலானதைக் கண்டு மன்னனை நோக்கி ஓர் வாதினை மும்முறை செய்து உண்மை காணுதலே முறையாகும். ஆதலால் இருதிறத்தாரும் தத்தம் சமய உண்மைகள் எழுதிய ஏட்டினை ஆற்றில் இடும்போது எவருடைய ஏடு எதிரேறிச் செல்கின்றதோ அவர்கள் சமயமே மெய்ச்சமயம் எனக் கொள்ளலாம் என்றனர். அப்பொழுது அமைச்சர் குலச்சிறையார் இதிலும் தோற்றவர்களுக்கு ஏற்படும் இழப்பு யாது எனக் கேட்டார். சமணர்கள் இவ்வாதில் தோல்வியுற்றோமானால் எங்களை இவ் வேந்தன் கழுவேற்றி முறை செய்யலாம் என்றனர். மன்னனும் உடன் பட்டான். ஞானசம்பந்தரும் சமண முனிவர்களும் வைகையாற்றின் கரையை அடைந்தனர் முதலில் சமணர்கள் தங்கள் சமய உண்மை யாகக் கூறும் அஸ்தி நாஸ்தி என்ற வசனத்தை எழுதி ஆற்றிலிட்டனர். அம்மொழி ஆற்று நீரோட்டத்தை எதிர்க்கும் ஆற்றலின்றி நீர் ஓடும் நெறியிலேயே விரைந்தோடிற்று. அதனைக் கண்ட சமணர்கள் நீவிரும் உமது சமய உண்மையை எழுதி நீரில் இடுக எனக்கூறினர். ஞான சம்பந்தர், திருப்பாசுரம் எனப்படும் வாழ்க அந்தணர் என்னும் திருப்பதிகத்தை அருளிச் செய்து, அதனை ஏட்டில் எழுதச் செய்து அவ் ஏட்டை ஆற்றில் இட்டருளினார். ஏடு வைகை ஆற்று வெள்ளத்தைக் கிழித்து எதிர் ஏறிச் சென்றது.
3.032 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -வன்னியும் மத்தமும் மதி பொதி  (திருஆலவாய் (மதுரை))  
3.052 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -வீடு அலால் அவாய் இலாஅய்,  (திருஆலவாய் (மதுரை))   திருப்பதிகப் பாடலில் வேந்தனும் ஓங்குக என ஞான சம்பந்தர் அருளிச் செய்ததால் பாண்டியன் கூன் நிமிர்ந்து நின்றசீர் நெடு மாறன் ஆயினான். குலச்சிறையார் குதிரையின் மீது ஏறி ஏட்டினைத் தொடர்ந்து சென்றார். ஏடு எதிரேறிச் செல்வதைக் கண்ட பிள்ளையார் வன்னியும் மத்தமும் என்ற திருப்பதிகத்தை அருளிச் செய்தார். அவ் வேடு வைகையின் வடகரையிலமைந்த ஒரு கோயிலுக்கு அருகே சென்று நின்றது. ஏடு நின்ற கோயில் ஏடகம் எனப் பெற்றது. குலச் சிறையார் அதனை எடுத்து வந்து ஞானசம்பந்தரிடம் சேர்ப்பித்தார். சமணர்கள் தாங்கள் செய்த சபதத்தின்படிக் கழுவேறினர். ஞானசம்பந்தர் பாண்டியமன்னனுடன் ஆலவாய் இறைவர் திருக் கோயில் சென்று வீடலால வாயிலாய் என்ற திருப்பதிகம் பாடி வழிபட்டுத் தம் திருமடத்துக்கு எழுந்தருளினார்.
3.115 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -ஆல நீழல் உகந்தது இருக்கையே;  (திருஆலவாய் (மதுரை))  
3.024 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -மண்ணின் நல்ல வண்ணம் வாழல்  (திருக்கழுமலம் (சீர்காழி))   ஞானசம்பந்தர் மதுரையில் தங்கியிருக்கும் நாளில் அவரைக் காண விரும்பிய சிவபாத இருதயர் மதுரை வந்தார். அப்பொழுது ஞானசம்பந்தர் அவரைப் பார்த்து அருந்தவத்தீர் குழந்தைப் பருவத்தில் எனக்குப் பொற்கிண்ணத்தில் பாலளித்து அருள் புரிந்த தோணிபுரப்பெருந்தகை எம்பெருமாட்டியோடு இனிதாக இருந்ததே? என நலம் உசாவும் முறையில் மண்ணில் நல்ல வண்ணம் என்ற திருப்பதிகத்தை அருளிச் செய்தார்.
1.100 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -நீடு அலர் சோதி வெண்பிறையோடு  (திருப்பரங்குன்றம்)  
1.088 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -முற்றும் சடை முடி மேல்  (திருஆப்பனூர்)  
1.026 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -வெங் கள் விம்மு வெறி  (திருப்புத்தூர்)  
1.064 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -அறை ஆர் புனலும் மா  (திருப்பூவணம்)  
3.020 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -மாது அமர் மேனியன் ஆகி,  (திருப்பூவணம்)  
3.026 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பிடி எலாம் பின் செல,  (திருக்கானப்பேர் (திருக்காளையார்கோயில்))  
1.099 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -வம்பு ஆர் குன்றம், நீடு  (திருக்குற்றாலம்)  
2.071 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -திருந்த மதி சூடி, தெண்  (திருக்குறும்பலா (குற்றாலம்))  
3.092 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -மருந்து அவை; மந்திரம், மறுமை  (திருநெல்வேலி)  
3.010 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -அலை, வளர் தண்மதியோடு அயலே  (திருஇராமேச்சுரம்)  
3.101 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -திரிதரு மா மணி நாகம்  (திருஇராமேச்சுரம்)  
3.123 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -நிரை கழல் அரவம் சிலம்பு  (திருக்கோணமலை)  
2.107 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -விருது குன்ற, மாமேரு வில்,  (திருக்கேதீச்சரம்)  
2.112 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -மாது ஓர் கூறு உகந்து,  (திருவாடானை)  
3.011 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -மின் இயல் செஞ்சடை வெண்பிறையன்,  (திருப்புனவாயில்)  
1.108 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -மின் இயல் செஞ்சடைமேல் விளங்கும்  (திருப்பாதாளீச்சரம்)  
3.006 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -கொட்டமே கமழும் கொள்ளம்பூதூர்
நட்டம் ஆடிய
 (திருக்கொள்ளம்பூதூர்)  
கொள்ளம்பூதூர் எல்லையில் முள்ளியாறு வெள்ளத்தால் நிறைந்து காணப்பட்டது. மறுகரைக்கு ஏற்றிச் செல்லும் ஓடம் செலுத்துவோர் வெள்ளமிகுதி கண்டு ஓடத்தைக் கரையில் கட்டி விட்டுப் போயிருந்தனர். ஞானசம்பந்தர் ஓர் ஓடத்தை அவிழ்க்கச் செய்து அடியவர்களுடன் தானும் ஏறிக் கொள்ளம்பூதூர் இறைவனைப் போற்றிக் கொட்டமே கமழும் என்ற திருப்பதிகத்தை அருளிச் செய்தார். ஓடம் தானே மறுகரைக்கு ஞானசம்பந்தரை அழைத்துச் சென்றது.
1.007 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பாடக மெல் அடிப் பாவையோடும்,  (திருநள்ளாறும் திருஆலவாயும்)   ஞானசம்பந்தர் கொள்ளம்பூதூர் ஆலயத்தை அடைந்து எடுத்த திருப்பதிகத்தின் எஞ்சிய பாடல்களால் இறைவனைப் பரவினார். திருநள்ளாறு அடைந்து மதுரை மாநகருக்கு வந்து அனல் வாதத்தில் வெற்றியருளிய நள்ளாற்றிறைவன் மீது பாடகமெல்லடி என்ற பதிகத்தால் போற்றித் தன் பயணத்தைத் தொடர்ந்தார்.
2.033 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -ஏடு மலி கொன்றை, அரவு,  (திருநள்ளாறு)  
2.003 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பூ அலர்ந்தன கொண்டு முப்போதும்  (திருத்தெளிச்சேரி)  
1.036 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -கலை ஆர் மதியோடு உர  (திருவையாறு)  
1.120 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பணிந்தவர் அருவினை பற்று அறுத்து  (திருவையாறு)  
2.032 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -திருத் திகழ் மலைச்சிறுமியோடு மிகு  (திருவையாறு)  
3.113 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -உற்று உமை சேர்வது மெய்யினையே;  (திருப்பிரமபுரம் (சீர்காழி))  
3.077 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பொன் இயல் பொருப்பு அரையன்  (திருமாணிகுழி)  
2.121 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -முன்னம் நின்ற முடக்கால் முயற்கு  (திருப்பாதிரிப்புலியூர் (கடலூர்))  
1.087 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -சுடு கூர் எரிமாலை அணிவர்;  (திருவடுகூர் (ஆண்டார்கோவில்))  
3.060 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -கறை அணி மா மிடற்றான்,  (திருவக்கரை)  
2.117 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -மண்டு கங்கை சடையில் கரந்தும்,  (திருஇரும்பைமாகாளம்)  
1.046 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -குண்டைக் குறள் பூதம் குழும,  (திருவதிகை வீரட்டானம்)  
2.050 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -குன்ற வார்சிலை, நாண் அரா,  (திருஆமாத்தூர்)  
2.044 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -துன்னம் பெய் கோவணமும் தோலும்  (திருஆமாத்தூர்)  
2.100 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -படை கொள் கூற்றம் வந்து,  (திருக்கோவலூர் வீரட்டம்)  
2.077 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பீடினால் பெரியோர்களும், பேதைமை கெடத்  (திருஅறையணிநல்லூர் (அரகண்டநல்லூர்))  
1.010 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -உண்ணாமுலை உமையாளொடும் உடன் ஆகிய  (திருவண்ணாமலை)  
1.069 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பூ ஆர் மலர் கொண்டு  (திருவண்ணாமலை)  
1.054 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பூத் தேர்ந்து ஆயன கொண்டு,  (திருஓத்தூர் (செய்யாறு))   ஞானசம்பந்தர் கச்சித்திருஏகம்பப் பெருமானை வழிபடும் கருத்தினராய்ச் சீகாழியிலிருந்து புறப்பட்டுத் தில்லை சென்று ஆனந்தக் கூத்தனைப் பணிந்து மாணிகுழி, பாதிரிப் புலியூர், வடுகூர், வக்கரை இரும்பை மாகாளம் முதலிய தலங்களை வணங்கித் திருவதிகை வீரட்டம் தொழுது போற்றிக் கோவலூர் அறையணி நல்லூர் ஆகிய தலங்களை வணங்கி அண்ணாமலை சென்றடைந்தார். உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய ஒருவனை வணங்கிப் பதிகங்கள் பாடி திருஓத்தூர் அடைந்து இறைவனைப் போற்றினார். சிவனடியார் ஒருவர் அடியவர்க்கெனத் தான் வளர்த்த பனைகள் அனைத்தும் ஆண்பனைகளாக இருத்தலையும் சமணர்கள் சிலர் சிவனருளால் காய்க்க வைக்க முடியுமா? என ஏளனமாகக் கேட்டதையும் ஞான சம்பந்தரிடம் கூற அவர் ஆலயம் சென்று வணங்கி, பூத்தேர்ந்தாயன என்னும் பதிகம் பாடிய அளவில் ஆண்பனைகளனைத்தும் பெண் பனைகளாய்க் குலையீன்றன. அடியவர் அதிசயித்தனர். சமணர்கள் பிழைபொறுக்க வேண்டியதோடு சைவ சமயத்தின் சிறப்பினை அறிந்து சைவ சமயத்திற்கு மதம் மாறி ஞானசம்பந்தரைப் போற்றினர்.
3.072 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -விங்கு விளை கழனி, மிகு  (திருமாகறல்)  
1.031 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -விழுநீர், மழுவாள் படை, அண்ணல்  (திருக்குரங்குஅணில்முட்டம்)  
2.012 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -மறையானை, மாசு இலாப் புன்சடை  (கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்))  
3.114 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பாயும் மால்விடைமேல் ஒரு பாகனே;  (கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்))  
3.041 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -கரு ஆர் கச்சித் திரு  (கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்))  
1.133 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -வெந்த வெண்பொடிப் பூசும் மார்பின்  (கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்))  
3.065 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -வார் அணவு முலை மங்கை  (திருக்கச்சிநெறிக்காரைக்காடு)  
1.055 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -ஊறி ஆர்தரு நஞ்சினை உண்டு,  (திருமாற்பேறு)  
1.114 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -குருந்து அவன், குருகு அவன்,  (திருமாற்பேறு)  
1.113 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -எரித்தவன், முப்புரம் எரியில் மூழ்க;
தரித்தவன்,
 (திருவல்லம்)  
1.076 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -மலையினார் பருப்பதம், துருத்தி, மாற்பேறு,  (திருஇலம்பையங்கோட்டூர்)  
3.023 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -உருவின் ஆர் உமையொடும் ஒன்றி  (திருவிற்கோலம் (கூவம்))  
1.106 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -மாறு இல் அவுணர் அரணம்  (திருஊறல் (தக்கோலம்))  
1.119 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -முள்ளின் மேல் முது கூகை  (திருக்கள்ளில்)  
1.045 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -துஞ்ச வருவாரும், தொழுவிப்பாரும், வழுவிப்  (திருவாலங்காடு (பழையனூர்))   திருவோத்தூரிலிருந்து புறப்பட்டு ஞானசம்பந்தர் திருமாகறல் குரங்கணில் முட்டம் ஆகிய தலங்களை வணங்கிக் காஞ்சிபுரம் சென்றடைந்தார். கச்சி ஏகம்பம் , காம கோட்டம் ஆகிய ஆலயங்களை வணங்கிக் கொண்டு அத்தலத்தின் அருகில் விளங்கும், ஆலயங் களைப் போற்றிக் காரைக்காலம்மையார் முத்திப் பேறு பெற்றருளிய திருவாலங்காட்டை வணங்கிப் போற்ற எண்ணினார். அம்மையார் தலையால் நடந்து வந்த அத்தலத்தை மிதித்தற்கு அஞ்சி அத்தலத்தின் அருகில் உள்ளதொரு ஊரில் அன்றிரவு துயில் கொண்டார். ஆலங் காட்டு இறைவர் அவர் கனவில் தோன்றி நம்மைப் பாடுதற்கு மறந்தனையோ என்ன உடனெழுந்து துஞ்சவருவாரும் எனத் தொடங்கித் திருப்பதிகம் பாடிப் போற்றினார்.
2.060 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -சிந்தை இடையார், தலையின் மிசையார்,  (திருப்பாசூர்)  
3.069 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -வானவர்கள் தானவர்கள் வாதைபட வந்தது  (திருக்காளத்தி)  
1.068 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பொடி கொள் உருவர், புலியின்  (திருக்கயிலாயம்)  
3.068 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -வாள வரி கோள புலி  (திருக்கயிலாயம்)  
2.114 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -தொண்டர் அஞ்சுகளிறும்(ம்) அடக்கி, சுரும்பு  (திருக்கேதாரம்)  
3.079 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -என்றும் அரியான், அயலவர்க்கு; இயல்  (திருகோகர்ணம் (கோகர்ணா))  
1.118 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -சுடுமணி உமிழ் நாகம் சூழ்தர  (திருப்பருப்பதம் (ஸ்ரீசைலம்))  
2.027 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -குலவு பாரிடம் போற்ற வீற்றிருந்து
இலகு
 (இந்திரநீலப்பருப்பதம் (நீலகண்டசிகரம்))  
2.005 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -நீடல் மேவு நிமிர்புன்சடைமேல் ஒர்  (திருஅனேகதங்காவதம் (கௌரிகுண்டம்))  
3.036 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -சந்தம், ஆர், அகிலொடு, சாதி,  (திருக்காளத்தி)  
1.057 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -ஒள்ளிது உள்ள, கதிக்கு ஆம்;  (திருவேற்காடு)  
1.003 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பத்தரோடு பலரும் பொலிய மலர்  (திருவலிதாயம் (பாடி))  
3.057 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -விடையவன், விண்ணும் மண்ணும் தொழ  (திருவொற்றியூர்)  
2.047 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -மட்டு இட்ட புன்னை அம்கானல்  (திருமயிலை (மயிலாப்பூர்))   மயிலாப்பூரில் வணிகர் குலத்தில் எல்லையில் செல்வம் உடையவராய் செம்மையே புரிமனத்தினராய் வணிகர் குலத்தில் சிவநேசன் என்னும் அடியார் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் சைவ சமயமே மெய்மைச் சமயம் என்பதையும், அறிந்த பெரியவர். அவர் ஞானசம்பந்தரது பெருமைகளைக் கேள்வியுற்று அவர்பால் எல்லை யில்லாத பேரன்புடையராயினார். அவருக்கு ஒரு பெண் மகவு இருந் தாள். அழகிற் சிறந்த அப்பெண்ணுக்குப் பூம்பாவை எனப் பெய ரிட்டார். அப்பெண்ணும் மணப்பருவம் எய்திய நிலையில் இருந்தாள். ஞானசம்பந்தர் மதுரை சென்று பரசமயம் நிராகரித்துப் பாண்டி நாட்டில் சைவ சமயத்தை நிலைநிறுத்தி வந்த செய்தி கேட்டு என்னையும், என்மகளையும் என் செல்வத்தையும் அவருக்கே உடமையாக்கினேன்? என மொழிந்தார். இந்நிலையில் ஞானசம்பந் தருக்கு உரியள் என, சிவநேசர் மொழிந்திருந்த பூம்பாவை பூஞ்சோலை யில் மலர் பறிக்கச் சென்றபோது அரவு தீண்டி இறந்தாள். சிவநேசர் மிகவும் வருந்தியவராய் அப்பெண்ணை உயிருடன் ஒப்புவிக்கும் புண்ணியம் அமையவில்லை. ஆயினும் அவள் உடலைத் தகனம் செய்து, எலும்பையும் சாம்பலையும் ஒரு மட்குடத்திலிட்டு, அதை யேனும் ஒப்புவிப்போம் என்று பேணிவந்தார். ஞானசம்பந்தர் திருவொற்றியூர் வழிபாடு முடித்து மயிலாப் பூருக்கு எழுந்தருளும் செய்தி கேட்டு வரவேற்க எதிரே வந்தார். ஞானசம்பந்தரைக் கண்டு வணங்கிய அளவில் உடன் வந்த அடியார் கள் அவரை அறிமுகம் செய்ததோடு அவள் மகள் இறந்த செய்தியை யும் அவரிடம் கூறினர். ஞானசம்பந்தர் மயிலாப்பூருக்கு எழுந்தருளி வழிபாடாற்றிப் புறத்தே போந்தவர் சிவநேசரை அழைத்து அவர் மகளின் என்பு நிறைந்த குடத்தினை எடுத்து வரச் செய்து அக்குடத்தை இறைவன் திருமுன்னே வைக்கச் செய்து மண்ணினிற் பிறந்தார் பெறும் பயன் மதிசூடும் அண்ணலார் அடியார்தமை அமுது செய்வித்தல் என்பது உண்மையாயின் உலகவர் முன் இப்பூம்பாவை உயிர் பெற்று எழுந்து வருவாளாக எனக்கூறி இறைவனை வேண்டிப் பூம்பாவைத் திருப் பதிகமாகிய மட்டிட்ட புன்னை எனத் திருப்பதிகம் தொடங்கிப் பத்தாவது பாடல் பாடிய அளவில் செந்தாமரையில் வீற்றிருக்கும் திருமகள் போல அப்பெண் உலகவர் வியக்க உயிர் பெற்றுக் குடம் உடைய வெளிப்பட்டு ஞானசம்பந்தரின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினாள். ஞானசம்பந்தர் திருப்பதிகத்தின் பதினொன்றாவது பாடலைப் பாடி நிறைவு செய்தார். சிவநேசர் ஞானசம்பந்தரை வணங்கித் திருவருளைப் போற்றினார். தன் திருமகளைத் திருமணம் புரிந்து ஏற்றருள வேண்டுமென வேண்டினார்.
2.004 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -கரை உலாம் கடலில் பொலி  (திருவான்மியூர்)  
3.055 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -விரை ஆர் கொன்றையினாய்! விடம்  (திருவான்மியூர்)  
1.078 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -வரி வளர் அவிர் ஒளி  (திருஇடைச்சுரம்)  
1.103 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -தோடு உடையான் ஒரு காதில்-தூய  (திருக்கழுக்குன்றம்)  
1.077 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பொன் திரண்டன்ன புரிசடை புரள,  (திருஅச்சிறுபாக்கம்)  
2.095 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பாடல் வண்டு அறை கொன்றை,  (திருஅரசிலி (ஒழுந்தியாப்பட்டு))  
2.053 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -விண் அமர்ந்தன மும்மதில்களை வீழ  (திருப்புறவார்பனங்காட்டூர்)  
1.051 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -வெங் கண் ஆனை ஈர்  (திருச்சோபுரம் (தியாகவல்லி))  
1.009 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -வண்டு ஆர் குழல் அரிவையொடு  (திருவேணுபுரம் (சீர்காழி))  
2.097 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -நம் பொருள், நம் மக்கள்  (சீர்காழி)  
2.065 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -கறை அணி வேல் இலர்போலும்;  (திருப்பிரமபுரம் (சீர்காழி))  
3.037 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -கரம் முனம் மலரால், புனல்  (திருப்பிரமபுரம் (சீர்காழி))  
3.056 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -இறையவன், ஈசன், எந்தை, இமையோர்  (திருப்பிரமபுரம் (சீர்காழி))   அரத்துறை இறைவன் ஞானசம்பந்தரின் வழி நடைவருத் தத்தை அறிந்து அரத்துறை அந்தணர்கள் கனவில் தோன்றி ஞானசம் பந்தன் நம்மைக் காண வருகின்றான். அவனுக்கென ஆலயத்துள் முத்துச் சிவிகை, முத்துக்குடை, முத்துச் சின்னம் ஆகியன வைத்துள் ளோம் எடுத்துச்சென்று கொடுத்து அழைத்து வருக எனப் பணித் தருளினான். அவ்வாறே இறைவன் ஞானசம்பந்தர் கனவிலும் தோன்றி யாம் அளிக்கும் பொருள்களை ஏற்று வருக எனக் கூறியருளினான். அரத்துறை அந்தணர்கள் வியந்து எழுந்து இறைவனளித்த அப் பொருள்களைக் கொண்டு சென்று ஞானசம்பந்தரிடம் நடந்ததைக் கூறிச் சிவிகையில் ஆரோகணித்து அரத்துறை வரவேண்டுமென வேண்டினர். ஞானசம்பந்தர் இறைவன் திருவருளை எண்ணி வியந்து அச்சிவிகையை மும்முறை வலம் வந்து பணிந்து ஐந்தெழுத்தோதி அச்சிவிகையில் அமர்ந்து எந்தை ஈசன் எம்பெருமான் என்ற திருப்பதிகத்தால்,இறையருளை வியந்து புறப்பட்டுச் சென்று அரத்துறை ஈசனை வணங்கிப் போற்றினார்.
2.017 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -நிலவும், புனலும், நிறை வாள்  (திருவேணுபுரம் (சீர்காழி))  
2.081 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பூதத்தின் படையினீர்! பூங்கொன்றைத் தாரினீர்!
ஓதத்தின்
 (திருவேணுபுரம் (சீர்காழி))  
1.030 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -விதி ஆய், விளைவு ஆய்,  (திருப்புகலி -(சீர்காழி ))  
2.025 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -உகலி ஆழ்கடல் ஓங்கு பார்  (திருப்புகலி -(சீர்காழி ))  
2.054 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -உரு ஆர்ந்த மெல்லியல் ஓர்பாகம்  (திருப்புகலி -(சீர்காழி ))  
2.122 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -விடை அது ஏறி, வெறி  (திருப்புகலி -(சீர்காழி ))  
3.007 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -கண் நுதலானும், வெண் நீற்றினானும்,  (திருப்புகலி -(சீர்காழி ))  
1.075 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -காலை நல்மாமலர் கொண்டு அடி  (திருவெங்குரு (சீர்காழி))  
1.060 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -வண் தரங்கப் புனல் கமல  (சீர்காழி )  
3.100 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -கரும்பு அமர் வில்லியைக் காய்ந்து,  (சீர்காழி )  
3.013 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -மின் அன எயிறு உடை  (திருப்பூந்தராய்)  
1.047 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பல் அடைந்த வெண் தலையில்  (திருச்சிரபுரம் (சீர்காழி))  
1.109 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -வார் உறு வனமுலை மங்கை  (திருச்சிரபுரம் (சீர்காழி))  
1.098 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -நன்று உடையானை, தீயது இலானை,  (திருச்சிராப்பள்ளி)  
1.066 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பங்கம் ஏறு மதி சேர்  (திருச்சண்பைநகர் (சீர்காழி))  
1.034 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -அடல் ஏறு அமரும் கொடி  (சீர்காழி)  
1.081 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -நல்லார், தீ மேவும் தொழிலார்,  (சீர்காழி)  
1.102 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -உரவு ஆர் கலையின் கவிதைப்  (சீர்காழி)  
2.011 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -நல்லானை, நால்மறையோடு இயல் ஆறுஅங்கம்
வல்லானை,
 (சீர்காழி)  
2.049 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பண்ணின் நேர் மொழி மங்கைமார்  (சீர்காழி)  
2.059 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -நலம் கொள் முத்தும் மணியும்  (சீர்காழி)  
2.075 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -விண் இயங்கும் மதிக்கண்ணியான், விரியும்  (சீர்காழி)  
2.096 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பொங்கு வெண்புரி வளரும் பொற்பு  (சீர்காழி)  
2.113 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -பொடி இலங்கும் திருமேனியாளர், புலி  (சீர்காழி)  
3.043 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -சந்தம் ஆர் முலையாள் தன  (சீர்காழி)  
3.089 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -திருந்து மா களிற்று இள  (திருக்கொச்சைவயம் (சீர்காழி))  
1.079 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -அயில் உறு படையினர்; விடையினர்;  (சீர்காழி)  
1.129 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -சே உயரும் திண் கொடியான்  (சீர்காழி)  
2.039 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -ஆரூர், தில்லை அம்பலம், வல்லம்,  (சீர்காழி)  
3.040 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -கல்லால் நீழல் அல்லாத் தேவை
நல்லார்
 (சீர்காழி)  
3.125 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -கல் ஊர்ப் பெரு மணம்  (திருநல்லூர்ப்பெருமணம் (ஆச்சாள்புரம்))   சிவபாத இருதயர் திருநல்லூரில் வாழும் நம்பாண்டார் என்பாரின் மகளை மணம் பேசி நிச்சயித்தார். நல்லூர் மணவிழா வினால் பொலிவு பெற்றது. ஞானசம்பந்தர் உரிய நாளில் தோணிபுரத் தில் பெரிய நாயகியாருடன் வீற்றிருந்தருளும் பெருமானை வணங்கிச் சிவிகைமீது அமர்ந்து அடியவர்கள் உறவினர்கள் உடன் வரத் திருநல்லூரை அடைந்தார். அங்கு விளங்கும் பெருமணம் என்னும் கோயிலை அடைந்து சிவபிரானைப் பணிந்து போற்றினார். உறவினர் கள் வேண்டக் கோயிலின் பக்கத்தே அமைந்த திருமடத்தில் திரு மஞ்சனமாடித் திருமணக் கோலம் பூண்டு திருமணச் சாலைக்கு எழுந்தருளினார். நம்பாண்டார் நம்பியும் அவரது துணைவியாரும் அவரைப் பொற்பீடத்தில் இருத்தித் திருவடிகளைத் தூய நீரால் விளக்கி அந்நன்னீரை உட்கொண்டு அனைவர் மேலும் தெளித்து, ஞான சம்பந்தரை நோக்கி யான் பெற்ற அருநிதிப் பாவையை ஆளுடைய பிள்ளையார்க்கு அளித்தேன் என உரைத்தார். மங்கல மகளிர் மணப் பெண்ணை அழைத்து வந்து ஞானசம்பந்தரின் வலப்பால் அமரச் செய்தனர். திருநீலநக்க நாயனார் வேத விதிப்படி திருமணச் சடங்குகளை நிகழ்த்தினார். ஞானசம்பந்தர் காதலியாரைக் கைப்பற்றித் தீவலம் வரும்போது விருப்புறும் அங்கியாவார் விடை உயர்த்தவரே என்னும் நினைவினராய் இருவினைக்கு வித்தாகிய இந்த இல்லறம் நம்மைச் சூழ்ந்து கொண்டதே இனி இவளோடும் அந்தமில் சிவன்தாளை அடைவோம் என உறுதி கொண்டு திருப்பெருமணக் கோயிலை அடைந்தார். இறைவன் திருமுன் நின்று கல்லூர்ப் பெருமணம் வேண்டா எனத் தொடங்கித் திருப்பதிகம் அருளிச் செய்தார்.
3.049 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -காதல் ஆகி, கசிந்து, கண்ணீர்  (நல்லூர்ப்பெருமணம் -நமசிவாயத் திருப்பதிகம்)   திருஞானசம்பந்தர் தன் பெற்றோரின் விருப்பப்படி திருமணம் புரிந்து கொண்டு தம் மனைவியுடன் சுற்றம் சூழ திருநல்லூர் பெருமணம் ஆலயம் வந்து இறைவனைத் துதித்தார். கோவிலில் பெருஞ்சோதி தோன்றி ஒரு வாயிலையும் வகுத்துக் காட்டியது. சம்பந்தர் தன்னுடன் வந்த சுற்றத்தாரையும் அடியார்களையும் சிவசோதியில் கலந்து முக்தி அடையும் படி கூறினார். சிலர் நெருப்புச் சோதியைக் கண்டு தயக்கமும் அச்சமும் கொள்ள, சம்பந்தர் அவர்களுக்கு நமச்சிவாய மந்திரத்தின் மேன்மையைக் கூறி நமச்சிவாய திருப்பதிகம் பாடி தம்முடன் வந்தோரை எல்லாம் அச்சோதியில் புகுமாறு சொல்லி, தாமும் தன் மனைவியுடன் சோதியுட் புகுந்து இறைவன் திருவடியைச் சேர்ந்தார். சம்பந்தருடன் சேர்த்து திருநீலகண்ட யாழ்ப்பாணர், முருக நாயனார், திருநீலக்க நாயனார் ஆகிய நான்கு நாயன்மார்கள் ஒரே நாளில் ( வைகாசி மூலம் ) ஒரே இடத்தில் முக்தி அடைந்தனர்
3.901 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -மறியார் கரத்தெந்தையம் மாதுமை யோடும்
பிறியாத
 (திருவிடைவாய்)  
3.902 திருஞானசம்பந்த சுவாமிகள் - திருக்கடைக்காப்பு -தார்சி றக்கும் சடைக்கணி வள்ளலின்
சீர்சி
 (திருக்கிளியன்னவூர்)  

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.001  
தோடு உடைய செவியன், விடை   பண் - நட்டபாடை   (திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி )

தோடு உடைய செவியன், விடை ஏறி, ஓர் தூ வெண்மதி சூடி,
காடு உடைய சுடலைப் பொடி பூசி, என் உள்ளம் கவர் கள்வன்-
ஏடு உடைய மலரான் முனைநாள் பணிந்து ஏத்த, அருள்செய்த,
பீடு உடைய பிரமாபுரம் மேவிய, பெம்மான்-இவன் அன்றே!

[1]
அருநெறிய மறை வல்ல முனி அகன் பொய்கை அலர் மேய,
பெரு நெறிய, பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் தன்னை,
ஒரு நெறிய மனம் வைத்து உணர் ஞானசம்பந்தன் உரை செய்த
திரு நெறிய தமிழ் வல்லவர் தொல்வினை தீர்தல் எளிதுஆமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.074  
நறவம் நிறை வண்டு அறை   பண் - தக்கேசி   (திருப்புறவம் பிரமபுரீசர் திருநிலைநாயகி)

நறவம் நிறை வண்டு அறை தார்க்கொன்றை நயந்து, நயனத்தால்
சுறவம் செறி வண் கொடியோன் உடலம் பொடியா விழிசெய்தான்,
புறவம் உறை வண்பதியா, மதியார் புரம் மூன்று எரி செய்த
இறைவன், அறவன், இமையோர் ஏத்த, உமையோடு இருந்தானே.

[1]
பொன் ஆர் மாடம் நீடும் செல்வப் புறவம் பதி ஆக
மின் ஆர் இடையாள் உமையாளோடும் இருந்த விமலனை,
தன் ஆர்வம் செய் தமிழின் விரகன் உரைத்த தமிழ்மாலை
பல்-நாள் பாடி ஆட, பிரியார், பரலோகம்தானே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.040  
எம்பிரான், எனக்கு அமுதம் ஆவானும்,   பண் - சீகாமரம்   (திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)

எம்பிரான், எனக்கு அமுதம் ஆவானும், தன் அடைந்தார்
தம்பிரான் ஆவானும், தழல் ஏந்து கையானும்,
கம்ப மா கரி உரித்த காபாலி, கறைக்கண்டன்
வம்பு உலாம் பொழில் பிரமபுரத்து உறையும் வானவனே.

[1]
தன் அடைந்தார்க்கு இன்பங்கள் தருவானை, தத்துவனை,
கன் அடைந்த மதில் பிரமபுரத்து உறையும் காவலனை,
முன் அடைந்தான் சம்பந்தன் மொழி பத்தும் இவை
வல்லார்
பொன் அடைந்தார்; போகங்கள் பல அடைந்தார்; புண்ணியரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.023  
மடையில் வாளை பாய, மாதரார்
குடையும்
  பண் - தக்கராகம்   (திருக்கோலக்கா சத்தபுரீசர் ஓசைகொடுத்தநாயகியம்மை)

மடையில் வாளை பாய, மாதரார்
குடையும் பொய்கைக் கோலக்கா உளான்
சடையும், பிறையும், சாம்பல் பூச்சும், கீழ்
உடையும், கொண்ட உருவம் என்கொலோ?

[1]
நலம் கொள் காழி ஞானசம்பந்தன்,
குலம் கொள் கோலக்கா உளானையே
வலம் கொள் பாடல் வல்ல வாய்மையார்,
உலம் கொள் வினை போய், ஓங்கி வாழ்வரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.024  
பூஆர் கொன்றைப் புரிபுன் சடை   பண் - தக்கராகம்   (சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)

பூஆர் கொன்றைப் புரிபுன் சடை ஈசா!
காவாய்! என நின்று ஏத்தும் காழியார்,
மேவார் புரம் மூன்று அட்டார் அவர்போல் ஆம்
பா ஆர் இன்சொல் பயிலும் பரமரே.

[1]
கார் ஆர் வயல் சூழ் காழிக் கோன்தனைச்
சீர் ஆர் ஞானசம்பந்தன் சொன்ன
பாரார் புகழப் பரவ வல்லவர்
ஏர் ஆர் வானத்து இனிதா இருப்பரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.084  
காரைகள், கூகை, முல்லை, கள,   பண் - பியந்தைக்காந்தாரம்   (திருநனிப்பள்ளி நற்றுணையப்பர் பர்வதராசபுத்திரி)

காரைகள், கூகை, முல்லை, கள, வாகை, ஈகை, படர்
தொடரி, கள்ளி, கவினி;
சூரைகள் பம்மி; விம்மு சுடுகாடு அமர்ந்த சிவன் மேய
சோலை நகர்தான்
தேரைகள் ஆரை சாய மிதிகொள்ள, வாளை குதிகொள்ள,
வள்ளை துவள,
நாரைகள் ஆரல் வார, வயல் மேதி வைகும் நனிபள்ளி
போலும்; நமர்கா

[1]
கடல் வரை ஓதம் மல்கு கழி கானல் பானல் கமழ் காழி
என்று கருத,
படு பொருள் ஆறும் நாலும் உளது ஆக வைத்த பதி
ஆன ஞானமுனிவன்,
இடு பறை ஒன்ற அத்தர் பியல் மேல் இருந்து இன்
இசையால் உரைத்த பனுவல்,
நடு இருள் ஆடும் எந்தை நனிபள்ளி உள்க, வினை
கெடுதல் ஆணை நமதே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.055  
நலச் சங்க வெண்குழையும் தோடும்   பண் - காந்தாரம்   (திருத்தலைச்சங்காடு செங்கணாயகேசுவரர் சௌந்தரியம்மை)

நலச் சங்க வெண்குழையும் தோடும் பெய்து, ஓர்
நால்வேதம்
சொலச் சங்கை இல்லாதீர்! சுடுகாடு அல்லால் கருதாதீர்!
குலைச் செங்காய்ப் பைங் கமுகின் குளிர் கொள் சோலைக் குயில் ஆலும்
தலைச்சங்கைக் கோயிலே கோயில் ஆகத் தாழ்ந்தீரே.

[1]
நளிரும் புனல் காழி நல்ல ஞானசம்பந்தன்
குளிரும் தலைச்சங்கை ஓங்கு கோயில் மேயானை,
ஒளிரும் பிறையானை, உரைத்த பாடல் இவை வல்லார்
மிளிரும் திரை சூழ்ந்த வையத்தார்க்கு மேலாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.103  
கொடி உடை மும்மதில் ஊடு   பண் - பழம்பஞ்சுரம்   (திருவலம்புரம் வலம்புரநாதர் வடுவகிர்க்கணம்மை)

கொடி உடை மும்மதில் ஊடு உருவக் குனி வெஞ்சிலை தாங்கி
இடிபட எய்த அமரர்பிரான், அடியார் இசைந்து ஏத்தத்
துடி இடையாளை ஒர்பாகம் ஆகத் துதைந்தார், இடம்போலும்
வடிவு உடை மேதி வயல் படியும் வலம்புர நன்நகரே.

[1]
நல் இயல் நால்மறையோர் புகலித் தமிழ் ஞானசம்பந்தன்,
வல்லியந் தோல் உடை ஆடையினான் வலம்புர நன்நகரைச்
சொல்லிய பாடல்கள் பத்தும் சொல்ல வல்லவர், தொல்வினை போய்,
செல்வன சேவடி சென்று அணுகி, சிவலோகம் சேர்வாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.112  
பரசு பாணியர், பாடல் வீணையர்,   பண் - பழம்பஞ்சுரம்   (திருப்பல்லவனீச்சரம் )

பரசு பாணியர், பாடல் வீணையர், பட்டினத்து உறை பல்லவனீச்சுரத்து
அரசு பேணி நின்றார், இவர் தன்மை அறிவார் ஆர்?

[1]
வானம் ஆள்வதற்கு ஊனம் ஒன்று இலை மாதர்
பல்லவனீச்சுரத்தானை
ஞானசம்பந்தன் நல்-தமிழ் சொல்ல வல்லவர் நல்லவரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.065  
அடையார் தம் புரங்கள் மூன்றும்   பண் - தக்கேசி   (திருப்பல்லவனீச்சரம் பல்லவனேசர் சவுந்தராம்பிகையம்மை)

அடையார் தம் புரங்கள் மூன்றும் ஆர் அழலில் அழுந்த,
விடை ஆர் மேனியராய்ச் சீறும் வித்தகர் மேய இடம்
கடை ஆர் மாடம் நீடி எங்கும் கங்குல் புறம் தடவ,
படை ஆர் புரிசைப் பட்டினம் சேர் பல்லவனீச்சுரமே.

[1]
பத்தர் ஏத்தும் பட்டினத்துப் பல்லவனீச்சுரத்து எம்
அத்தன்தன்னை, அணி கொள் காழி ஞானசம்பந்தன் சொல்
சித்தம் சேரச் செப்பும் மாந்தர் தீவினை நோய் இலராய்,
ஒத்து அமைந்த உம்பர்வானில் உயர்வினொடு ஓங்குவரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.041  
மண் புகார், வான்புகுவர்; மனம்   பண் - சீகாமரம்   (திருச்சாய்க்காடு (சாயாவனம்) சாயாவனேசுவரர் குயிலுநன்மொழியம்மை)

மண் புகார், வான்புகுவர்; மனம் இளையார்; பசியாலும்
கண் புகார்; பிணி அறியார்; கற்றாரும் கேட்டாரும்
விண் புகார் என வேண்டா வெண் மாட நெடுவீதித்
தண் புகார்ச் சாய்க்காட்டு எம் தலைவன் தாள் சார்ந்தாரே.

[1]
நொய்ம் பந்து புடைத்து ஒல்கு நூபுரம் சேர் மெல் அடியார்
அம் பந்தும் வரிக் கழலும் அரவம் செய் பூங் காழிச்
சம்பந்தன் தமிழ் பகர்ந்த சாய்க்காட்டுப் பத்தினையும்
எம் பந்தம் எனக் கருதி, ஏத்துவார்க்கு இடர் கெடுமே.
[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.038  
நித்தலும் நியமம் செய்து, நீர்மலர்   பண் - இந்தளம்   (திருச்சாய்க்காடு (சாயாவனம்) சாயாவனேசுவரர் குயிலுநன்மொழியம்மை)

நித்தலும் நியமம் செய்து, நீர்மலர் தூவி,
சித்தம் ஒன்ற வல்லார்க்கு அருளும் சிவன் கோயில்
மத்தயானையின் கோடும் வண் பீலியும் வாரி,
தத்து நீர்ப் பொன்னி, சாகரம் மேவு சாய்க்காடே.

[1]
ஏனையோர் புகழ்ந்து ஏத்திய எந்தை சாய்க்காட்டை,
ஞானசம்பந்தன் காழியர்கோன் நவில் பத்தும்
ஊனம் இன்றி உரைசெய வல்லவர்தாம், போய்,
வானநாடு இனிது ஆள்வர், இம் மாநிலத்தோரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.048  
கண் காட்டும் நுதலானும், கனல்   பண் - சீகாமரம்   (திருவெண்காடு சுவேதாரணியேசுவரர் பிரமவித்தியாநாயகியம்மை)

கண் காட்டும் நுதலானும், கனல் காட்டும் கையானும்,
பெண் காட்டும் உருவானும், பிறை காட்டும் சடையானும்,
பண் காட்டும் இசையானும், பயிர் காட்டும் புயலானும்,
வெண் காட்டில் உறைவானும் விடை காட்டும் கொடியானே.

[1]
தண்பொழில் சூழ் சண்பையர்கோன் தமிழ் ஞானசம்பந்தன்
விண் பொலி வெண்பிறைச் சென்னி விகிர்தன் உறை வெண்காட்டைப்
பண் பொலி செந்தமிழ் மாலை பாடிய பத்து இவை வல்லார்,
மண் பொலிய வாழ்ந்தவர், போய் வான் பொலியப் புகுவாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.061  
உண்டாய், நஞ்சை! உமை ஓர்பங்கா!   பண் - காந்தாரம்   (திருவெண்காடு சுவேதாரணியேசுவரர் பிரமவித்தியாநாயகியம்மை)

உண்டாய், நஞ்சை! உமை ஓர்பங்கா! என்று உள்கித்
தொண்டு ஆய்த் திரியும் அடியார் தங்கள் துயரங்கள்
அண்டா வண்ணம் அறுப்பான், எந்தை, ஊர்போலும்
வெண் தாமரை மேல் கருவண்டு யாழ் செய் வெண்காடே.

[1]
விடை ஆர் கொடியான் மேவி உறையும் வெண் காட்டை,
கடை ஆர் மாடம் கலந்து தோன்றும் காழியான்
நடை ஆர் இன்சொல் ஞானசம்பந்தன் தமிழ் வல்லார்க்கு
அடையா, வினைகள்; அமரலோகம் ஆள்வாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.015  
மந்திர மறையவர், வானவரொடும்,
இந்திரன், வழிபட
  பண் - காந்தாரபஞ்சமம்   (திருவெண்காடு சுவேதாரணியேசுவரர் பிரமவித்தியாநாயகியம்மை)

மந்திர மறையவர், வானவரொடும்,
இந்திரன், வழிபட நின்ற எம் இறை;
வெந்த வெண் நீற்றர் வெண்காடு மேவிய,
அந்தமும் முதல் உடை, அடிகள் அல்லரே!

[1]
நல்லவர் புகலியுள் ஞானசம்பந்தன்,
செல்வன் எம் சிவன் உறை திரு வெண்காட்டின் மேல்,
சொல்லிய அருந்தமிழ் பத்தும் வல்லவர்
அல்லலோடு அருவினை அறுதல் ஆணையே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.088  
துளி மண்டி உண்டு நிறம்   பண் - பியந்தைக்காந்தாரம்   (தென்திருமுல்லைவாயில் முல்லைவனநாதர் கோதையம்மை)

துளி மண்டி உண்டு நிறம் வந்த கண்டன், நடம் மன்னு
துன்னு சுடரோன்,
ஒளி மண்டி உம்பர் உலகம் கடந்த உமைபங்கன், எங்கள்
அரன், ஊர்
களி மண்டு சோலை, கழனிக் கலந்த கமலங்கள் தங்கும்
மதுவின்
தெளி மண்டி உண்டு, சிறைவண்டு பாடு திரு முல்லை
வாயில் இதுவே.

[1]
அணி கொண்ட கோதை அவள் நன்றும் ஏத்த அருள்
செய்த எந்தை, மருவார்
திணி கொண்ட மூன்றுபுரம் எய்த வில்லி, திரு
முல்லைவாயில் இதன்மேல்,
தணி கொண்ட சிந்தையவர் காழி ஞானம் மிகு பந்தன்
ஒண் தமிழ்களின்
அணி கொண்ட பத்தும் இசை பாடு பத்தர், அகல்வானம்
ஆள்வர், மிகவே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.102  
அன்ன மென் நடை அரிவையோடு   பண் - நட்டராகம்   (திருச்சிரபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)

அன்ன மென் நடை அரிவையோடு இனிது உறை அமரர்தம்
பெருமானார்,
மின்னு செஞ்சடை வெள் எருக்கம்மலர் வைத்தவர், வேதம்
தாம்
பன்னும் நன்பொருள் பயந்தவர் பரு மதில் சிரபுரத்தார்; சீர்
ஆர்
பொன்னின் மா மலர் அடி தொழும் அடியவர்
வினையொடும் பொருந்தாரே.

[1]
பரசு பாணியை, பத்தர்கள் அத்தனை, பை அரவோடு அக்கு
நிரை செய் பூண் திரு மார்பு உடை நிமலனை, நித்திலப்
பெருந்தொத்தை,
விரை செய் பூம்பொழில் சிரபுரத்து அண்ணலை, விண்ணவர்
பெருமானை,
பரவு சம்பந்தன் செந்தமிழ் வல்லவர் பரமனைப் பணிவாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.031  
திரை தரு பவளமும், சீர்   பண் - கொல்லி   (திருமயேந்திரப்பள்ளி திருமேனியழகர் வடிவாம்பிகையம்மை)

திரை தரு பவளமும், சீர் திகழ் வயிரமும்,
கரை தரும் அகிலொடு கன வளை புகுதரும்,
வரைவிலால் எயில் எய்த, மயேந்திரப்பள்
அரவு அரை, அழகனை அடி இணை பணிமினே!

[1]
வம்பு உலாம் பொழில் அணி மயேந்திரப்பள்
நம்பனார் கழல் அடி ஞானசம்பந்தன் சொல்,
நம் பரம் இது என, நாவினால் நவில்பவர்
உம்பரார் எதிர்கொள, உயர் பதி அணைவரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.124  
சுண்ண வெண்நீறு அணி மார்பில்-தோல்   பண் - அந்தாளிக்குறிஞ்சி   (திருக்குருகாவூர் வெள்ளடை வெள்ளிடையப்பர் காவியங்கண்ணியம்மை)

சுண்ண வெண்நீறு அணி மார்பில்-தோல் புனைந்து
எண்ண(அ)ரும் பல்கணம் ஏத்த, நின்று ஆடுவர்
விண் அமர் பைம்பொழில் வெள்ளடை மேவிய
பெண் அமர் மேனி எம் பிஞ்ஞகனாரே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.105  
மடல் வரை இல் மது   பண் - பழம்பஞ்சுரம்   (திருக்கலிக்காமூர் சுந்தரேசுவரர் அழகுவனமுலையம்மை)

மடல் வரை இல் மது விம்மு சோலை வயல் சூழ்ந்து, அழகு ஆரும்,
கடல் வரை ஓதம் கலந்து முத்தம் சொரியும் கலிக்காமூர்,
உடல் வரையின் உயிர் வாழ்க்கை ஆய ஒருவன் கழல் ஏத்த,
இடர் தொடரா; வினை ஆன சிந்தும்; இறைவன்(ன்) அருள் ஆமே.

[1]
ஆழியுள் நஞ்சு அமுது ஆர உண்டு, அன்று அமரர்க்கு அமுது உண்ண
ஊழிதொறும்(ம்) உளரா அளித்தான், உலகத்து உயர்கின்ற
காழியுள் ஞானசம்பந்தன் சொன்ன தமிழால், கலிக்காமூர்
வாழி எம்மானை வணங்கி ஏத்த, மருவா, பிணிதானே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.080  
கற்றாங்கு எரி ஓம்பி, கலியை   பண் - குறிஞ்சி   (கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)

கற்றாங்கு எரி ஓம்பி, கலியை வாராமே
செற்றார் வாழ் தில்லைச் சிற்றம்பலம் மேய
முற்றா வெண் திங்கள் முதல்வன் பாதமே
பற்றா நின்றாரைப் பற்றா, பாவமே.

[1]
ஞாலத்து உயர் காழி ஞானசம்பந்தன்
சீலத்தார் கொள்கைச் சிற்றம்பலம் மேய
சூலப்படையானைச் சொன்ன தமிழ்மாலை
கோலத்தால் பாட வல்லார் நல்லாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.039  
அந்தமும் ஆதியும் ஆகிய அண்ணல்   பண் - தக்கராகம்   (திருவேட்களம் பாசுபதேசுவரர் நல்லநாயகியம்மை)

அந்தமும் ஆதியும் ஆகிய அண்ணல் ஆர் அழல் அங்கை அமர்ந்து இலங்க;
மந்த முழவம் இயம்ப; மலைமகள் காண, நின்று ஆடி;
சந்தம் இலங்கு நகுதலை, கங்கை, தண்மதியம், அயலே ததும்ப;
வெந்த வெண் நீறு மெய் பூசும் வேட்கள நன் நகராரே.

[1]
விண் இயல் மாடம் விளங்கு ஒளி வீதி வெண்கொடி எங்கும் விரிந்து இலங்க,
நண்ணிய சீர் வளர் காழி நல் தமிழ் ஞானசம்பந்தன்
பெண்ணின் நல்லாள் ஒருபாகம் அமர்ந்து பேணிய வேட்களம் மேல் மொழிந்த
பண் இயல் பாடல் வல்லார்கள் பழியொடு பாவம் இலாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.044  
வெந்த குங்கிலியப்புகை விம்மவே
கந்தம் நின்று
  பண் - கௌசிகம்   (திருக்கழிப்பாலை பால்வண்ணநாதர் வேதநாயகியம்மை)

வெந்த குங்கிலியப்புகை விம்மவே
கந்தம் நின்று உலவும் கழிப்பாலையார்
அந்தமும்(ம்) அளவும்(ம்) அறியாதது ஓர்
சந்தமால், அவர் மேவிய சந்தமே.

[1]
அம் தண் காழி அருமறை ஞானசம்-
பந்தன், பாய் புனல் சூழ் கழிப்பாலையைச்
சிந்தையால் சொன்ன செந்தமிழ் வல்லவர்
முந்தி வான் உலகு ஆடல் முறைமையே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.021  
புனல் ஆடிய புன்சடையாய்! அரணம்
அனல்
  பண் - இந்தளம்   (திருக்கழிப்பாலை பால்வண்ணநாதர் வேதநாயகியம்மை)

புனல் ஆடிய புன்சடையாய்! அரணம்
அனல் ஆக விழித்தவனே! அழகு ஆர்
கனல் ஆடலினாய்! கழிப்பாலை உளாய்!
உன வார் கழல் கைதொழுது உள்குதுமே.

[1]
கழி ஆர் பதி காவலனைப் புகலிப்
பழியா மறை ஞானசம்பந்தன சொல்
வழிபாடு இவை கொண்டு, அடி வாழ்த்த வல்லார்,
கெழியார், இமையோரொடு; கேடு இலரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.026  
புடையின் ஆர் புள்ளி கால்   பண் - இந்தளம்   (திருநெல்வாயில் அரத்துறைநாதர் ஆனந்தநாயகியம்மை)

புடையின் ஆர் புள்ளி கால் பொருந்திய
மடையின் ஆர் மணிநீர் நெல்வாயிலார்,
நடையின் நால்விரல்கோவணம் நயந்த
உடையினார், எமது உச்சியாரே.

[1]
நெண்பு அயங்கு நெல்வாயில் ஈசனைச்
சண்பை ஞானசம்பந்தன் சொல் இவை,
பண் பயன்கொளப் பாட வல்லவர்,
விண் பயன்கொளும் வேட்கையாளரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.001  
ஆடினாய், நறுநெய்யொடு, பால், தயிர்!   பண் - காந்தாரபஞ்சமம்   (கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)

ஆடினாய், நறுநெய்யொடு, பால், தயிர்! அந்தணர் பிரியாத சிற்றம்பலம்
நாடினாய், இடமா! நறுங்கொன்றை நயந்தவனே!
பாடினாய், மறையோடு பல்கீதமும்! பல்சடைப் பனி கால் கதிர் வெண்திங்கள்
சூடினாய்! அருளாய், சுருங்க எம தொல்வினையே!

[1]
நாறு பூம்பொழில் நண்ணிய காழியுள் நான்ம றைவல்ல ஞானசம் பந்தன்
ஊறும் இன்தமி ழால்உயர்ந் தார்உறை தில்லைதன்னுள்
ஏறு தொல்புகழ் ஏந்துசிற் றம்பலத் தீச னைஇசை யாற்சொன்ன பத்திவை
கூறு மாறுவல் லார்உயர்ந் தாரொடும் கூடுவரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.089  
படை ஆர்தரு பூதப் பகடு   பண் - குறிஞ்சி   (திருஎருக்கத்தம்புலியூர் (இராசேந்திரப்பட்டிணம்) நீலகண்டேசுரர் நீலமலர்க்கண்ணம்மை)

படை ஆர்தரு பூதப் பகடு ஆர் உரி போர்வை
உடையான், உமையோடும் உடன் ஆய் இடு கங்கைச்
சடையான்-எருக்கத்தம்புலியூர்த் தகு கோயில்
விடையான்; அடி ஏத்த, மேவா, வினைதானே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.012  
மத்தா வரை நிறுவி, கடல்   பண் - நட்டபாடை   (திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை)

மத்தா வரை நிறுவி, கடல் கடைந்து, அவ் விடம் உண்ட
தொத்து ஆர்தரு மணி நீள் முடிச் சுடர் வண்ணனது இடம் ஆம்
கொத்து ஆர் மலர், குளிர் சந்து, அகில், ஒளிர் குங்குமம், கொண்டு
முத்தாறு வந்து அடி வீழ்தரு முதுகுன்று அடைவோமே.

[1]
முகில் சேர்தரு முதுகுன்று உடையானை, மிகு தொல் சீர்
புகலிநகர் மறை ஞானசம்பந்தன், உரைசெய்த
நிகர் இல்லன தமிழ் மாலைகள் இசையோடு இவை பத்தும்
பகரும் அடியவர்கட்கு இடர், பாவம், அடையாவே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.093  
நின்று மலர் தூவி, இன்று   பண் - குறிஞ்சி   (திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை)

நின்று மலர் தூவி, இன்று முதுகுன்றை
நன்றும் ஏத்துவீர்க்கு என்றும் இன்பமே.

[1]
நின்று முதுகுன்றை நன்று சம்பந்தன்
ஒன்றும் உரை வல்லார் என்றும் உயர்வோரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.099  
முரசு அதிர்ந்து எழுதரு முது   பண் - சாதாரி   (திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை)

முரசு அதிர்ந்து எழுதரு முது குன்றம் மேவிய
பரசு அமர் படை உடையீரே;
பரசு அமர் படை உடையீர்! உமைப் பரவுவார்
அரசர்கள் உலகில் ஆவாரே.

[1]
மூடிய சோலை சூழ் முதுகுன்றத்து ஈசனை
நாடிய ஞானசம்பந்தன்
நாடிய ஞானசம்பந்தன செந்தமிழ்
பாடிய அவர் பழி இலரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.053  
தேவராயும், அசுரராயும், சித்தர், செழுமறை   பண் - பழந்தக்கராகம்   (திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை)

தேவராயும், அசுரராயும், சித்தர், செழுமறை சேர்
நாவராயும், நண்ணு பாரும் விண் எரி கால் நீரும்
மேவர் ஆய, விரை மலரோன் செங்கண்மால் ஈசன் என்னும்
மூவர் ஆய, முதல் ஒருவன் மேயது முதுகுன்றே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.131  
மெய்த்து ஆறுசுவையும், ஏழ் இசையும்,   பண் - மேகராகக்குறிஞ்சி   (திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை)

மெய்த்து ஆறுசுவையும், ஏழ் இசையும், எண்குணங்களும், விரும்பும் நால்வே-
தத்தாலும் அறிவு ஒண்ணா நடை தெளியப் பளிங்கே போல் அரிவை பாகம்
ஒத்து, ஆறுசமயங்கட்கு ஒரு தலைவன் கருதும் ஊர் உலவு தெண்நீர்
முத்தாறு வெதிர் உதிர நித்திலம் வாரிக் கொழிக்கும் முது குன்றமே.

[1]
முழங்கு ஒலி நீர் முத்தாறு வலம்செய்யும் முதுகுன்றத்து இறையை, மூவாப்
பழங்கிழமைப் பன்னிருபேர் படைத்து உடைய கழுமலமே பதியாக் கொண்டு,
தழங்கு எரிமூன்று ஓம்பு தொழில்-தமிழ் ஞானசம்பந்தன் சமைத்த பாடல்
வழங்கும் இசை கூடும் வகை பாடுமவர் நீடு உலகம் ஆள்வர்தாமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.064  
தேவா! சிறியோம் பிழையைப் பொறுப்பாய்!   பண் - காந்தாரம்   (திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை)

தேவா! சிறியோம் பிழையைப் பொறுப்பாய்! பெரியோனே!
ஆவா! என்று, அங்கு அடியார் தங்கட்கு அருள் செய்வாய்!
ஓவா உவரி கொள்ள உயர்ந்தாய்! என்று ஏத்தி,
மூவா முனிவர் வணங்கும் கோயில் முதுகுன்றே.

[1]
அறை ஆர் கடல் சூழ் அம் தண் காழிச் சம்பந்தன்,
முறையால் முனிவர் வணங்கும் கோயில் முதுகுன்றைக்
குறையாப் பனுவல் கூடிப் பாட வல்லார்கள்,
பிறை ஆர் சடை எம்பெருமான் கழல்கள் பிரியாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.034  
வண்ண மா மலர் கொடு   பண் - கொல்லி   (திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை)

வண்ண மா மலர் கொடு வானவர் வழிபட,
அண்ணலார் ஆயிழையாளொடும் அமர்வு இடம்
விண்ணின் மா மழை பொழிந்து இழிய, வெள் அருவி சேர்
திண்ணில் ஆர் புறவு அணி திரு முதுகுன்றமே.

[1]
திண்ணின் ஆர் புறவு அணி திரு முதுகுன்றரை
நண்ணினான், காழியுள் ஞானசம்பந்தன், சொல்
எண்ணினார், ஈர் ஐந்து மாலையும் இயலுமாப்
பண்ணினால் பாடுவார்க்கு இல்லை ஆம், பாவமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.059  
ஒடுங்கும் பிணி, பிறவி, கேடு,   பண் - பழந்தக்கராகம்   (திருத்தூங்கானைமாடம் சுடர்க்கொழுந்தீசர் கடந்தைநாயகியம்மை)

ஒடுங்கும் பிணி, பிறவி, கேடு, என்று இவை உடைத்து ஆய வாழ்க்கை ஒழியத் தவம்
அடங்கும் இடம் கருதி நின்றீர் எல்லாம், அடிகள் அடி நிழல் கீழ் ஆள் ஆம் வண்ணம்,
கிடங்கும் மதிலும் சுலாவி எங்கும் கெழு மனைகள் தோறும் மறையின் ஒலி
தொடங்கும் கடந்தைத் தடங்கோயில் சேர் தூங்கானைமாடம் தொழுமின்களே!

[1]
மண் ஆர் முழவு அதிரும் மாட வீதி வயல் காழி ஞானசம்பந்தன், நல்ல
பெண்ணாகடத்துப் பெருங்கோயில் சேர் பிறை உரிஞ்சும் தூங்கானை மாடம் மேயான்
கண் ஆர் கழல் பரவு பாடல் பத்தும் கருத்து உணரக் கற்றாரும் கேட்டாரும் போய்,
விண்ணோர் உலகத்து மேவி வாழும் விதி அதுவே ஆகும்; வினை மாயுமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.090  
எந்தை! ஈசன்! எம்பெருமான்! ஏறு   பண் - பியந்தைக்காந்தாரம்   (திருநெல்வாயில் அரத்துறை அரத்துறைநாதர் ஆனந்தநாயகியம்மை)

எந்தை! ஈசன்! எம்பெருமான்! ஏறு அமர் கடவுள்! என்று
ஏத்திச்
சிந்தை செய்பவர்க்கு அல்லால், சென்று கைகூடுவது
அன்றால்
கந்த மா மலர் உந்தி, கடும் புனல் நிவா மல்கு கரைமேல்,
அம் தண்சோலை நெல்வாயில் அரத்துறை அடிகள் தம்(ம்)
அருளே

[1]
கரையின் ஆர் பொழில் சூழ்ந்த காழியுள் ஞானசம்பந்தன்,
அறையும் பூம் புனல் பரந்த அரத்துறை அடிகள் தம்(ம்)
அருளை
முறைமையால் சொன்ன பாடல், மொழியும் மாந்தர் தம்
வினை போய்ப்
பறையும், ஐயுறவு இல்லை, பாட்டு இவை பத்தும்
வல்லார்க்கே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.096  
நல் வெணெய் விழுது பெய்து   பண் - சாதாரி   (திருநெல்வெண்ணெய் வெண்ணையப்பர் நீலமலர்க்கண்ணம்மை)

நல் வெணெய் விழுது பெய்து ஆடுதிர், நாள்தொறும்,
நெல்வெணெய் மேவிய நீரே;
நெல்வெணெய் மேவிய நீர்! உமை நாள்தொறும்
சொல் வணம் இடுவது சொல்லே.

[1]
நிலம் மல்கு தொல்புகழ் நெல்வெணெய் ஈசனை,
நலம் மல்கு ஞானசம்பந்தன்
நலம் மல்கு ஞானசம்பந்தன செந்தமிழ்,
சொல மல்குவார் துயர் இலரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.034  
முத்தன், மிகு மூஇலைநல்வேலன், விரி   பண் - இந்தளம்   (திருப்பழுவூர் வடவனநாதர் அருந்தவநாயகியம்மை)

முத்தன், மிகு மூஇலைநல்வேலன், விரி நூலன்,
அத்தன், எமை ஆள் உடைய அண்ணல், இடம் என்பர்
மைத் தழை பெரும் பொழிலின் வாசம் அது வீச,
பத்தரொடு சித்தர் பயில்கின்ற பழுவூரே.

[1]
அந்தணர்கள் ஆன மலையாளர் அவர் ஏத்தும்
பந்தம் மலிகின்ற பழுவூர் அரனை, ஆரச்
சந்தம் மிகு ஞானம் உணர் பந்தன் உரை பேணி,
வந்த வணம் ஏத்துமவர் வானம் உடையாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.017  
மரு அமர் குழல் உமை   பண் - காந்தாரபஞ்சமம்   (திருவிசயமங்கை விசயநாதேசுவரர் மங்கைநாயகியம்மை)

மரு அமர் குழல் உமை பங்கர், வார்சடை
அரவு அமர் கொள்கை எம் அடிகள், கோயில் ஆம்
குரவு, அமர் சுரபுனை, கோங்கு, வேங்கைகள்
விரவிய பொழில் அணி விசயமங்கையே.

[1]
விண்ணவர் தொழுது எழு விசயமங்கையை,
நண்ணிய புகலியுள் ஞானசம்பந்தன்,
பண்ணிய செந்தமிழ் பத்தும் வல்லவர்
புண்ணியர்; சிவகதி புகுதல் திண்ணமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.071  
கோழை மிடறு ஆக, கவி   பண் - சாதாரி   (திருவைகாவூர் வில்லவனேசர் வளைக்கைவல்லியம்மை)

கோழை மிடறு ஆக, கவி கோளும் இல ஆக, இசை கூடும் வகையால்,
ஏழை அடியார் அவர்கள் யாவை சொன சொல் மகிழும் ஈசன் இடம் ஆம்
தாழை இளநீர் முதிய காய் கமுகின் வீழ, நிரை தாறு சிதறி,
வாழை உதிர் வீழ் கனிகள் ஊறி, வயல் சேறு செயும்
வைகாவிலே.

[1]
முற்றும் நமை ஆள் உடைய முக்கண் முதல்வன் திரு
வைகாவில் அதனை,
செற்ற மலின் ஆர் சிரபுரத் தலைவன்-ஞானசம்பந்தன் - உரைசெய்
உற்ற தமிழ் மாலை ஈர்-ஐந்தும் இவை வல்லவர் உருத்திரர் எனப்-
பெற்று, அமரலோகம் மிக வாழ்வர்; பிரியார், அவர் பெரும் புகழொடே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.030  
மறம் பயம் மலிந்தவர் மதில்   பண் - இந்தளம்   (திருப்புறம்பயம் சாட்சிவரதநாதர் கரும்பன்னசொல்லம்மை)

மறம் பயம் மலிந்தவர் மதில் பரிசு அறுத்தனை;
நிறம் பசுமை செம்மையொடு இசைந்து, உனது நீர்மை
திறம் பயன் உறும் பொருள் தெரிந்து உணரும் நால்வர்க்கு
அறம்பயன் உரைத்தனை புறம்பயம் அமர்ந்தோய்!

[1]
கருங்கழி பொரும் திரை கரைக் குலவு முத்தம்
தரும் கழுமலத்து இறை தமிழ்க் கிழமை ஞானன்
சுரும்பு அவிழ் புறம்பயம் அமர்ந்த தமிழ் வல்லார்,
பெரும் பிணி மருங்கு அற, ஒருங்குவர், பிறப்பே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.048  
நூல் அடைந்த கொள்கையாலே நுன்   பண் - பழந்தக்கராகம்   (திருச்சேஞலூர் சத்தகிரீசுவரர் சகிதேவிநாயகியம்மை)

நூல் அடைந்த கொள்கையாலே நுன் அடி கூடுதற்கு
மால் அடைந்த நால்வர் கேட்க, நல்கிய நல் அறத்தை,
ஆல் அடைந்த நீழல் மேவி, அருமறை சொன்னது என்னே
சேல் அடைந்த தண் கழனிச் சேய்ஞலூர் மேயவனே?

[1]
சேய் அடைந்த சேய்ஞலூரில் செல்வன சீர் பரவி,
தோய் அடைந்த தண்வயல் சூழ் தோணி புரத் தலைவன்-
சாய் அடைந்த ஞானம் மல்கு சம்பந்தன்-இன் உரைகள்
வாய் அடைந்து பாட வல்லார் வான் உலகு ஆள்பவரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.062  
கண் பொலி நெற்றியினான், திகழ்   பண் - பஞ்சமம்   (திருப்பனந்தாள் சடையப்பஈசுவரர் பெரியநாயகியம்மை)

கண் பொலி நெற்றியினான், திகழ் கையில் ஓர் வெண்மழுவான்,
பெண் புணர் கூறு உடையான், மிகு பீடு உடை மால்விடையான்,
விண் பொலி மா மதி சேர்தரு செஞ்சடை வேதியன், ஊர்
தண் பொழில் சூழ் பனந்தாள் திருத் தாடகையீச்சுரமே.

[1]
தண்வயல் சூழ் பனந்தாள்-திருத் தாடகையீச்சுரத்துக்
கண் அயலே பிறையான் அவன் தன்னை, முன் காழியர் கோன்-
நண்ணிய செந்தமிழால் மிகு ஞானசம்பந்தன்-நல்ல
பண் இயல் பாடல் வல்லார் அவர்தம் வினை பற்று அறுமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.121  
இடறினார், கூற்றை; பொடிசெய்தார், மதிலை;   பண் - புறநீர்மை   (திருப்பந்தணைநல்லூர் )

இடறினார், கூற்றை; பொடிசெய்தார், மதிலை; இவை சொல்லி லகு எழுந்து ஏத்த,
கடறினார் ஆவர்; காற்று உளார் ஆவர்; காதலித்து உறைதரு கோயில்
கொடிறனார்; யாதும் குறைவு இலார்; தாம் போய்க் கோவணம்
கொண்டு கூத்து ஆடும்
படிறனார் போலும்! பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே.

[1]
கல் இசை பூணக் கலை ஒலி ஓவாக் கழுமல முதுபதி தன்னில்
நல் இசையாளன், புல் இசை கேளா நல்-தமிழ் ஞானசம்பந்தன்,
பல் இசை பகுவாய்ப் படுதலை ஏந்தி மேவிய பந்தணைநல்லூர்
சொல் இசைப்பாடல் பத்தும் வல்லவர் மேல், தொல்வினை சூழகிலாவே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.122  
பூங்கொடி மடவாள் உமை ஒருபாகம்   பண் - புறநீர்மை   (திருஓமாம்புலியூர் )

பூங்கொடி மடவாள் உமை ஒருபாகம் புரிதரு சடைமுடி
அடிகள்
வீங்கு இருள் நட்டம் ஆடும் எம் விகிர்தர், விருப்பொடும்
உறைவு இடம் வினவில்
தேம் கமழ் பொழிலில் செழு மலர் கோதிச் செறிதரு வண்டு இசை பாடும்
ஓங்கிய புகழ் ஆர் ஓமமாம்புலியூர் உடையவர், வடதளி அதுவே.

[1]
விளைதரு வயலுள் வெயில் செறி பவளம் மேதிகள்
மேய்புலத்து இடறி
ஒளிதர மல்கும் ஓமமாம்புலியூர் உடையவர் வடதளி அரனை,
களி தரு நிவப்பின் காண்தகு செல்வக் காழியுள் ஞானசம்பந்தன்,
அளிதரு பாடல்பத்தும் வல்லார்கள், அமரலோகத்து இருப்பாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.040  
பொடி உடை மார்பினர், போர்   பண் - தக்கராகம்   (திருவாழ்கொளிபுத்தூர் மாணிக்கவண்ணவீசுரர் வண்டார்பூங்குழலம்மை)

பொடி உடை மார்பினர், போர் விடை ஏறி, பூதகணம் புடை சூழ,
கொடி உடை ஊர் திரிந்து ஐயம் கொண்டு, பலபல கூறி,
வடிவு உடை வாள் நெடுங்கண் உமை பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர்,
கடி கமழ் மா மலர் இட்டு, கறைமிடற்றான் அடி காண்போம்.

[1]
கல் உயர் மாக்கடல் நின்று முழங்கும் கரை பொரு காழி அ மூர்
நல் உயர் நால்மறை நாவின் நல் தமிழ் ஞானசம்பந்தன்
வல் உயர் சூலமும் வெண்மழுவாளும் வல்லவன் வாழ்கொளிபுத்தூர்,
சொல்லிய பாடல்கள் வல்லார் துயர் கெடுதல் எளிது ஆமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.094  
சாகை ஆயிரம் உடையார், சாமமும்   பண் - பியந்தைக்காந்தாரம்   (திருவாழ்கொளிபுத்தூர் மாணிக்கவண்ணநாதர் வண்டமர்பூங்குழலம்மை)

சாகை ஆயிரம் உடையார், சாமமும் ஓதுவது உடையார்,
ஈகையார் கடை நோக்கி இரப்பதும் பலபல உடையார்;
தோகை மா மயில் அனைய துடியிடை பாகமும் உடையார்
வாகை நுண் துளி வீசும் வாழ்கொளிபுத்தூர் உளாரே.

[1]
நலம் கொள் பூம்பொழில் காழி நல் தமிழ் ஞானசம்பந்தன்,
வலம் கொள் வெண் மழுவாளன் வாழ்கொளிபுத்தூர்
உளானை
இலங்கு வெண்பிறையானை ஏத்திய தமிழ் இவை வல்லார்,
நலம் கொள் சிந்தையர் ஆகி, நன்நெறி எய்துவர் தாமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.068  
வான் அமர் திங்களும் நீரும்   பண் - காந்தாரம்   (திருக்கடம்பூர் அமுதகடேசுவரர் சோதிமின்னம்மை)

வான் அமர் திங்களும் நீரும் மருவிய வார் சடையானை,
தேன் அமர் கொன்றையினானை, தேவர் தொழப்படுவானை,
கான் அமரும் பிணை புல்கிக் கலை பயிலும் கடம்பூரில்
தான் அமர் கொள்கையினானை, தாள் தொழ, வீடு எளிது
ஆமே.

[1]
விடை நவிலும் கொடியானை, வெண்கொடி சேர்
நெடுமாடம்
கடை நவிலும் கடம்பூரில் காதலனை, கடல் காழி
நடை நவில் ஞானசம்பந்தன் நன்மையால் ஏத்திய பத்தும்,
படை நவில் பாடல், பயில்வார் பழியொடு பாவம் இலாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.086  
உரையினில் வந்த பாவம், உணர்   பண் - பியந்தைக்காந்தாரம்   (திருநாரையூர் சௌந்தரேசர் திரிபுரசுந்தரியம்மை)

உரையினில் வந்த பாவம், உணர் நோய்கள், உ(ம்)ம செயல்
தீங்கு குற்றம், உலகில்
வரையின் நிலாமை செய்த அவை தீரும் வண்ணம் மிக
ஏத்தி, நித்தம் நினைமின்
வரை சிலை ஆக, அன்று, மதில் மூன்று எரித்து, வளர்
கங்குல், நங்கை வெருவ,
திரை ஒலி நஞ்சம் உண்ட சிவன் மேய செல்வத் திரு
நாரையூர் கைதொழவே!

[1]
எரி ஒரு வண்ணம் ஆய உருவானை எந்தை பெருமானை
உள்கி நினையார்,
திரிபுரம் அன்று செற்ற சிவன் மேய செல்வத் திரு
நாரையூர் கைதொழுவான்,
பொரு புனல் சூழ்ந்த காழி மறை ஞானசம்பந்தன் உரை
மாலைபத்தும் மொழிவார்,
திரு வளர் செம்மை ஆகி அருள் பேறு மிக்கது உளது
என்பர், செம்மையினரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.102  
காம்பினை வென்ற மென்தோளி பாகம்   பண் - பழம்பஞ்சுரம்   (திருநாரையூர் சௌந்தரேசர் திரிபுரசுந்தரியம்மை)

காம்பினை வென்ற மென்தோளி பாகம் கலந்தான்-நலம் தாங்கு
தேம் புனல் சூழ் திகழ் மா மடுவின் திரு நாரையூர் மேய,
பூம் புனல் சேர், புரி புன்சடையான்; புலியின்(ன்)
உரி-தோல்மேல்
பாம்பினை வீக்கிய பண்டரங்கன் பாதம் பணிவோமே.

[1]
தண்மதி தாழ் பொழில் சூழ் புகலித் தமிழ் ஞானசம்பந்தன்,
ஒண்மதி சேர் சடையான் உறையும் திரு நாரையூர் தன்மேல்,
பண் மதியால் சொன்ன பாடல் பத்தும் பயின்றார், வினை போகி,
மண் மதியாது போய், வான் புகுவர், வானோர்
எதிர்கொளவே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.107  
கடல் இடை வெங்கடு நஞ்சம்   பண் - பழம்பஞ்சுரம்   (திருநாரையூர் சௌந்தரேசர் திரிபுரசுந்தரியம்மை)

கடல் இடை வெங்கடு நஞ்சம் உண்ட கடவுள், விடை ஏறி,
உடல் இடையின் பொடிப் பூச வல்லான், உமையோடு ஒருபாகன்,
அடல் இடையில் சிலை தாங்கி எய்த அம்மான், அடியார் மேல்
நடலை வினைத் தொகை தீர்த்து உகந்தான், இடம் நாரையூர் தானே.

[1]
பாடு இயலும் திரை சூழ் புகலித் திருஞானசம்பந்தன்,
சேடு இயலும் புகழ் ஓங்கு செம்மைத் திரு நாரையூரான் மேல்,
பாடிய தண் தமிழ்மாலை பத்தும் பரவித் திரிந்து, ஆக
ஆடிய சிந்தையினார்க்கு நீங்கும், அவலக்கடல் தானே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.031  
சுற்றமொடு பற்று அவை துயக்குஅற   பண் - இந்தளம்   (கருப்பறியலூர் (தலைஞாயிறு) குற்றம்பொறுத்தநாதர் கோல்வளையம்மை)

சுற்றமொடு பற்று அவை துயக்குஅற அறுத்துக்
குற்றமில் குணங்களொடு கூடும்அடி யார்கள்
மற்றுஅவரை வானவர்தம் வானுலகம் ஏற்றக்
கற்றவன் இருப்பது கருப்பறியலூரே.

[1]
நலம் தரு புனல் புகலி ஞானசமபந்தன்,
கலந்தவர் கருப்பறியல் மேய கடவுளைப்
பலம் தரு தமிழ்க்கிளவி பத்தும் இவை கற்று,
வலம்தருமவர்க்கு வினை வாடல் எளிதுஆமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.022  
துஞ்சலும் துஞ்சல் இலாத போழ்தினும்,
நெஞ்சு
  பண் - காந்தாரபஞ்சமம்   (சீர்காழி )

துஞ்சலும் துஞ்சல் இலாத போழ்தினும்,
நெஞ்சு அகம் நைந்து, நினைமின், நாள்தொறும்,
வஞ்சகம் அற்று! அடி வாழ்த்த, வந்த கூற்று
அஞ்ச உதைத்தன, அஞ்சு எழுத்துமே.

[1]
நல்-தமிழ் ஞானசம்பந்தன்-நால்மறை
கற்றவன், காழியர் மன்னன்-உன்னிய
அற்றம் இல் மாலைஈர் ஐந்தும், அஞ்சு எழுத்து
உற்றன, வல்லவர் உம்பர் ஆவரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.081  
சங்கு அமரும் முன்கை மட   பண் - சாதாரி   (சீர்காழி தோணியப்பர் திருநிலைநாயகியம்மை)

சங்கு அமரும் முன்கை மட மாதை ஒருபால் உடன் விரும்பி,
அங்கம் உடல்மேல் உற அணிந்து, பிணி தீர அருள் செய்யும்
எங்கள் பெருமான் இடம் எனத் தகும் முனைக் கடலின் முத்தம்,
துங்க மணி, இப்பிகள், கரைக்கு வரு தோணிபுரம் ஆமே.

[1]
துஞ்சு இருளில் நின்று நடம் ஆடி மிகு தோணிபுரம் மேய
மஞ்சனை வணங்கு திரு ஞானசம்பந்தன சொல்மாலை,
தஞ்சம் என நின்று இசை மொழிந்த அடியார்கள், தடுமாற்றம்
வஞ்சம் இலர்; நெஞ்சு இருளும் நீங்கி, அருள் பெற்று வளர்வாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.001  
செந்நெல் அம் கழனிப் பழனத்து   பண் - இந்தளம்   (திருப்பூந்தராய் )

செந்நெல் அம் கழனிப் பழனத்து அயலே செழும்
புன்னை வெண் கிழியில் பவளம் புரை பூந்தராய்
துன்னி, நல் இமையோர் முடி தோய் கழலீர்! சொலீர்
பின்னுசெஞ்சடையில் பிறை பாம்புஉடன் வைத்ததே?

[1]
மகர வார்கடல் வந்து அணவும் மணல் கானல்வாய்ப்
புகலி ஞானசம்பந்தன், எழில் மிகு பூந்தராய்ப்
பகவனாரைப் பரவு சொல்மாலைபத்தும் வல்லார்
அகல்வர், தீவினை, நல்வினையோடு உடன் ஆவரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.104  
ஆடல் அரவு அசைத்தான், அருமாமறைதான்   பண் - வியாழக்குறிஞ்சி   (திருப்புகலி -(சீர்காழி ) பிரமபுரீசர் திருநிலைநாயகி)

ஆடல் அரவு அசைத்தான், அருமாமறைதான் விரித்தான், கொன்றை
சூடிய செஞ்சடையான், சுடுகாடு அமர்ந்த பிரான்,
ஏடு அவிழ் மாமலையாள் ஒரு பாகம் அமர்ந்து அடியார் ஏத்த
ஆடிய எம் இறை, ஊர் புகலிப்பதி ஆமே.

[1]
வேதம் ஓர் கீதம் உணர்வாணர் தொழுது ஏத்த, மிகு வாசப்-
போதனைப் போல் மறையோர் பயிலும் புகலிதன்னுள்
நாதனை, ஞானம் மிகு சம்பந்தன் தமிழ்மாலை நாவில்
ஓத வல்லார் உலகில் உறு நோய் களைவாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.002  
பந்து சேர் விரலாள், பவளத்துவர்   பண் - காந்தாரபஞ்சமம்   (திருப்பூந்தராய் )

பந்து சேர் விரலாள், பவளத்துவர் வாயினாள், பனி மா மதி போல் முகத்து
அந்தம் இல் புகழாள், மலைமாதொடும் ஆதிப்பிரான்
வந்து சேர்வு இடம் வானவர் எத்திசையும் நிறைந்து, வலம்செய்து, மாமலர்
புந்தி செய்து இறைஞ்சிப் பொழி பூந்தராய் போற்றுதுமே.

[1]
தேம்பல் நுண் இடையாள் செழுஞ் சேல் அன கண்ணியோடு
அண்ணல் சேர்வு இடம், தேன் அமர்
பூம்பொழில் திகழ், பொன் பதி பூந்தராய் போற்றுதும்! என்று
ஓம்பு தன்மையன்-முத்தமிழ் நால்மறை ஞானசம்பந்தன்-ஒண் தமிழ்மாலை கொண்டு
ஆம் படி இவை ஏத்த வல்லார்க்கு அடையா, வினையே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.118  
மடல் மலி கொன்றை, துன்று   பண் - புறநீர்மை   (சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)

மடல் மலி கொன்றை, துன்று வாள் எருக்கும், வன்னியும்,
மத்தமும், சடைமேல்
படல் ஒலி திரைகள் மோதிய கங்கைத் தலைவனார்தம் இடம் பகரில்,
விடல் ஒலி பரந்த வெண்திரை முத்தம் இப்பிகள்
கொணர்ந்து, வெள் அருவிக்
கடல் ஒலி ஓதம் மோத, வந்து அலைக்கும் கழுமலநகர் எனல் ஆமே.

[1]
கானல் அம் கழனி ஓதம் வந்து உலவும் கழுமல நகர் உறைவார்மேல்
ஞானசம்பந்தன் நல்-தமிழ்மாலை நன்மையால் உரை செய்து நவில்வார்
ஊன சம்பந்தத்து உறு பிணி நீங்கி, உள்ளமும் ஒருவழிக் கொண்டு
வான் இடை வாழ்வர்; மண்மிசைப் பிறவார்; மற்று இதற்கு
ஆணையும் நமதே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.083  
நீல நல் மாமிடற்றன்; இறைவன்;   பண் -   (திருக்கொச்சைவயம் (சீர்காழி) பண் - பியந்தைக்காந்தாரம்)

நீல நல் மாமிடற்றன்; இறைவன்; சினத்த நெடுமா உரித்த,
நிகர் இல்
சேல் அன கண்ணி வண்ணம் ஒருகூறு உருக் கொள்,
திகழ் தேவன்; மேவு பதிதான்
வேல் அன கண்ணிமார்கள் விளையாடும் ஓசை, விழவு
ஓசை, வேத ஒலியின்,
சால நல் வேலை ஓசை, தரு மாட வீதி கொடி ஆடு
கொச்சைவயமே.

[1]
இறைவனை, ஒப்பு இலாத ஒளி மேனியானை, உலகங்கள்
ஏழும் உடனே
மறைதரு வெள்ளம் ஏறி வளர் கோயில் மன்னி இனிதா
இருந்த மணியை,
குறைவு இல ஞானம் மேவு குளிர் பந்தன் வைத்த
தமிழ்மாலை பாடுமவர், போய்,
அறை கழல் ஈசன் ஆளும் நகர் மேவி, என்றும் அழகா
இருப்பது அறிவே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.089  
அறையும் பூம்புனலோடும் ஆடு அரவச்   பண் - பியந்தைக்காந்தாரம்   (திருக்கொச்சைவயம் (சீர்காழி) )

அறையும் பூம்புனலோடும் ஆடு அரவச் சடைதன் மேல்
பிறையும் சூடுவர்; மார்பில் பெண் ஒரு பாகம் அமர்ந்தார்
மறையின் ஒல்லொலி ஓவா மந்திர வேள்வி அறாத,
குறைவு இல் அந்தணர் வாழும், கொச்சை வயம்
அமர்ந்தாரே.

[1]
கொந்து அணி பொழில் சூழ்ந்த கொச்சைவய நகர் மேய
அந்தணன் அடி ஏத்தும் அருமறை ஞானசம்பந்தன்
சந்தம் ஆர்ந்து அழகு ஆய தண் தமிழ் மாலை வல்லோர்,
போய்,
முந்தி வானவரோடும் புக வலர்; முனை, கெட, வினையே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.117  
காடு அது, அணிகலம் கார்   பண் - வியாழக்குறிஞ்சி   (திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)

காடு அது, அணிகலம் கார் அரவம், பதி; கால் அதனில்,-
தோடு அது அணிகுவர் சுந்தரக் காதினில்,-தூச் சிலம்பர்;
வேடு அது அணிவர், விசயற்கு, உருவம், வில்லும் கொடுப்பர்;
பீடு அது மணி மாடப் பிரமபுரத்து அரரே.

[1]
கையது, வெண்குழை காதது, சூலம்; அமணர் புத்தர்,
எய்துவர், தம்மை, அடியவர், எய்தார்; ஓர் ஏனக்கொம்பு,
மெய் திகழ் கோவணம், பூண்பது, உடுப்பது; மேதகைய
கொய்து அலர் பூம்பொழில் கொச்சையுள் மேவிய கொற்றவரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.117  
யாமாமா நீ யாமாமா யாழீகாமா   பண் - கௌசிகம்   (திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)

யாமாமா நீ யாமாமா யாழீகாமா காணாகா
காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா!

[1]
நேரகழாமித யாசழிதா யேனனியேனனி ளாயுழிகா
காழியுளானின யேனினயே தாழிசயாதமி ழாகரனே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.067  
சுரர் உலகு, நரர்கள் பயில்   பண் - சாதாரி   (திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)

சுரர் உலகு, நரர்கள் பயில் தரணிதலம், முரண் அழிய, அரண மதில் முப்-
புரம் எரிய, விரவு வகை சர விசை கொள் கரம் உடைய
பரமன் இடம் ஆம்
வரம் அருள வரல் முறையின் நிரல் நிறை கொள்வரு சுருதிசிர உரையினால்,
பிரமன் உயர் அரன் எழில் கொள் சரண இணை பரவ, வளர் பிரமபுரமே.

[1]
நச்சு அரவு கச்சு என அசைச்சு, மதி உச்சியின் மிலைச்சு, ஒரு கையால்
மெய்ச் சிரம் அணைச்சு, உலகில் நிச்சம் இடு பிச்சை அமர் பிச்சன் இடம் ஆம்
மச்சம் மதம் நச்சி மதமச் சிறுமியைச் செய் தவ அச்ச விரதக்
கொச்சை முரவு அச்சர் பணிய, சுரர்கள் நச்சி மிடை
கொச்சைநகரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.127  
பிரம புரத்துறை பெம்மா னெம்மான்
பிரம
  பண் - வியாழக்குறிஞ்சி   (திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)

பிரம புரத்துறை பெம்மா னெம்மான்
பிரம புரத்துறை பெம்மா னெம்மான்
பிரம புரத்துறை பெம்மா னெம்மான்
பிரம புரத்துறை பெம்மா னெம்மான்.

[1]
கொச்சையன் அலைக்கூட கிலாருடன் மூடரே
கொச்சையன் அலைக்கூட கிலாருடன் மூடரே
கொச்சையன் அலைக்கூட கிலாருடன் மூடரே
கொச்சையன் அலைக்கூட கிலாருடன் மூடரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.110  
வரம் அதே கொளா, உரம்   பண் - பழம்பஞ்சுரம்   (திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)

வரம் அதே கொளா, உரம் அதே செயும் புரம்
எரித்தவன்-பிரமநல்புரத்து
அரன்-நன்நாமமே பரவுவார்கள் சீர் விரவும், நீள் புவியே.


[1]
விச்சை ஒன்று இலாச் சமணர் சாக்கியப் பிச்சர் தங்களைக் கரிசு அறுத்தவன்
கொச்சை மா நகர்க்கு அன்பு செய்பவர் குணங்கள்
கூறுமினே!

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.090  
அரனை உள்குவீர்! பிரமன் ஊருள்   பண் - குறிஞ்சி   (திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)

அரனை உள்குவீர்! பிரமன் ஊருள் எம்
பரனையே மனம் பரவி, உய்ம்மினே!

[1]
தேரர் அமணரைச் சேர்வு இல் கொச்சை மன்
நேர் இல் கழல் நினைந்து ஓரும், உள்ளமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.128  
ஓர் உரு ஆயினை; மான்   பண் - வியாழக்குறிஞ்சி   (திருப்பிரமபுரம் (சீர்காழி) )

ஓர் உரு ஆயினை; மான் ஆங்காரத்து
ஈர் இயல்பு ஆய், ஒரு விண் முதல் பூதலம்
ஒன்றிய இருசுடர் உம்பர்கள் பிறவும்
படைத்து, அளித்து, அழிப்ப, மும்மூர்த்திகள் ஆயினை;
இருவரோடு ஒருவன் ஆகி நின்றனை;

ஓர் ஆல் நீழல், ஒண் கழல் இரண்டும்
முப்பொழுது ஏத்திய நால்வர்க்கு ஒளிநெறி
காட்டினை; நாட்டம் மூன்றும் ஆகக் கோட்டினை;
இரு நதி அரவமோடு ஒருமதி சூடினை;
ஒருதாள் ஈர் அயில் மூ இலைச் சூலம்,

நால்கால் மான்மறி, ஐந்தலை அரவம்,
ஏந்தினை; காய்ந்த நால் வாய் மும் மதத்து
இரு கோட்டு ஒருகரி ஈடு அழித்து உரித்தனை;
ஒரு தனு இருகால் வளைய வாங்கி,
முப்புரத்தோடு நானிலம் அஞ்ச,

கொன்று தலத்து உற அவுணரை அறுத்தனை;
ஐம்புலன், நால் ஆம் அந்தக்கரணம்,
முக்குணம், இருவளி, ஒருங்கிய வானோர்
ஏத்த நின்றனை; ஒருங்கிய மனத்தோடு,
இரு பிறப்பு ஓர்ந்து, முப்பொழுது குறை முடித்து,

நால்மறை ஓதி, ஐவகை வேள்வி
அமைத்து, ஆறு அங்கம் முதல் எழுத்து ஓதி,
வரல் முறை பயின்று, எழு வான்தனை வளர்க்கும்
பிரமபுரம் பேணினை;
அறுபதம் முரலும் வேணுபுரம் விரும்பினை;

இகலி அமைந்து உணர் புகலி அமர்ந்தனை;
பொங்கு நால்கடல் சூழ் வெங்குரு விளங்கினை;
பாணி மூஉலகும் புதைய, மேல் மிதந்த
தோணிபுரத்து உறைந்தனை; தொலையா இருநிதி
வாய்ந்த பூந்தராய் ஏய்ந்தனை;

வர புரம் ஒன்று உணர் சிரபுரத்து உறைந்தனை;
ஒருமலை எடுத்த இருதிறல் அரக்கன்
விறல் கெடுத்து அருளினை; புறவம் புரிந்தனை;
முந்நீர்த் துயின்றோன், நான்முகன், அறியாப்
பண்பொடு நின்றனை; சண்பை அமர்ந்தனை;

ஐயுறும் அமணரும் அறுவகைத் தேரரும்
ஊழியும் உணராக் காழி அமர்ந்தனை;
எச்சன் ஏழ் இசையோன் கொச்சையை மெச்சினை;
ஆறுபதமும், ஐந்து அமர் கல்வியும்,
மறை முதல் நான்கும்,

மூன்று காலமும், தோன்ற நின்றனை;
இருமையின் ஒருமையும், ஒருமையின் பெருமையும்,
மறு இலா மறையோர்
கழுமல முது பதிக் கவுணியன் கட்டுரை
கழுமல முதுபதிக்கவுணியன் அறியும்;

அனைய தன்மையை ஆதலின், நின்னை
நினைய வல்லவர் இல்லை, நீள் நிலத்தே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.005  
தக்கன் வேள்வி தகர்த்தவன், பூந்தராய
மிக்க
  பண் - காந்தாரபஞ்சமம்   (திருப்பூந்தராய் )

தக்கன் வேள்வி தகர்த்தவன், பூந்தராய
மிக்க செம்மை விமலன், வியன் கழல்
சென்று சிந்தையில் வைக்க, மெய்க்கதி
நன்று அது ஆகிய நம்பன்தானே.

[1]
புந்தியால் மிக நல்லவர் பூந்தராய்
அந்தம் இல் எம் அடிகளை, ஞானசம்
பந்தன் மாலை கொண்டு ஏத்தி வாழும்! நும்
பந்தம் ஆர் வினை பாறிடுமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.003  
இயல் இசை எனும் பொருளின்   பண் - கொல்லி   (திருப்புகலி -(சீர்காழி ) மந்திரபுரீசுவரர் பெரியநாயகியம்மை)

இயல் இசை எனும் பொருளின் திறம் ஆம்
புயல் அன மிடறு உடைப் புண்ணியனே!
கயல் அன வரி நெடுங்கண்ணியொடும்
அயல் உலகு அடி தொழ அமர்ந்தவனே!
கலன் ஆவது வெண்தலை; கடிபொழில் புகலி தன்னுள்,
நிலன் நாள்தொறும் இன்பு உற, நிறை மதி அருளினனே.

[1]
புண்ணியர் தொழுது எழு புகலி(ந்) நகர்,
விண்ணவர் அடி தொழ விளங்கினானை,
நண்ணிய ஞானசம்பந்தன் வாய்மை
பண்ணிய அருந்தமிழ் பத்தும் வல்லார்,
நடலை அவை இன்றிப் போய் நண்ணுவர், சிவன் உலகம்;
இடர் ஆயின இன்றித் தாம் எய்துவர், தவநெறியே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.029  
முன்னிய கலைப்பொருளும், மூஉலகில் வாழ்வும்,
பன்னிய
  பண் - இந்தளம்   (திருப்புகலி -(சீர்காழி ) பிரமபுரீசர் திருநிலைநாயகி)

முன்னிய கலைப்பொருளும், மூஉலகில் வாழ்வும்,
பன்னிய ஒருத்தர் பழ ஊர் வினவின் ஞாலம்
துன்னி இமையோர்கள் துதிசெய்து முன் வணங்கும்
சென்னியர் விருப்புஉறு திருப் புகலிஆமே.

[1]
செந்தமிழ் பரப்புஉறு திருப் புகலிதன்மேல்,
அந்தம் முதல் ஆகி நடுவுஆய பெருமானைப்
பந்தன் உரை செந்தமிழ்கள்பத்தும் இசை கூர
வந்த வணம் ஏத்துமவர் வானம் உடையாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.084  
பெண் இயல் உருவினர், பெருகிய   பண் - சாதாரி   (திருப்புறவம் பிரமபுரீசர் திருநிலைநாயகி)

பெண் இயல் உருவினர், பெருகிய புனல் விரவிய பிறைக்
கண்ணியர், கடு நடை விடையினர், கழல் தொழும் அடியவர்
நண்ணிய பிணி கெட அருள்புரிபவர், நணுகு உயர் பதி
புண்ணிய மறையவர் நிறை புகழ் ஒலி மலி புறவமே.

[1]
போது இயல் பொழில் அணி புறவ நன் நகர் உறை புனிதனை,
வேதியர் அதிபதி மிகு தலை தமிழ் கெழு விரகினன்-
ஓதிய ஒருபதும் உரியது ஒர் இசை கொள உரைசெயும்
நீதியர் அவர், இரு நிலன் இடை நிகழ்தரு பிறவியே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.075  
எம் தமது சிந்தை பிரியாத   பண் - சாதாரி   (திருச்சண்பைநகர் (சீர்காழி) )

எம் தமது சிந்தை பிரியாத பெருமான்! என இறைஞ்சி, இமையோா
வந்து துதிசெய்ய, வளர் தூபமொடு தீபம் மலி வாய்மை அதனால்,
அந்தி அமர் சந்தி பல அர்ச்சனைகள் செய்ய அமர்கின்ற அழகன்,
சந்தம் மலி குந்தளம் நல் மாதினொடு, மேவு பதி சண்பைநகரே.

[1]
வாரின் மலி கொங்கை உமை நங்கையொடு சங்கரன் மகிழ்ந்து அமரும் ஊர்
சாரின் முரல் தெண்கடல் விசும்பு உற முழங்கு ஒலி கொள் சண்பைநகர்மேல்,
பாரின் மலிகின்ற புகழ் நின்ற தமிழ் ஞானசம்பந்தன், உரைசெய்
சீரின் மலி செந்தமிழ்கள் செப்புமவர், சேர்வர், சிவலோக நெறியே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.019  
பிறை அணி படர் சடை   பண் - நட்டபாடை   (சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)

பிறை அணி படர் சடை முடி இடைப் பெருகிய புனல்  உடையவன்; நிறை
இறை அணி வளை, இணை முலையவள், இணைவனது எழில் உடை இட வகை
கறை அணி பொழில் நிறை வயல் அணி கழுமலம் அமர் கனல் உருவினன்;
நறை அணி மலர் நறுவிரை புல்கு நலம் மலி கழல் தொழல் மருவுமே!

[1]
பெருகிய தமிழ் விரகினன், மலி பெயரவன், உறை பிணர் திரையொடு
கருகிய நிற விரிகடல் அடை கழுமலம் உறைவு இடம் என நனி
பெருகிய சிவன் அடி பரவிய, பிணை மொழியன, ஒருபதும் உடன்-
மருவிய மனம் உடையவர் மதி உடையவர்; விதி உடையவர்களே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.073  
விளங்கிய சீர்ப் பிரமன் ஊர்,   பண் - காந்தாரம்   (திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)

விளங்கிய சீர்ப் பிரமன் ஊர், வேணுபுரம், புகலி, வெங்குரு,
மேல் சோலை
வளம் கவரும் தோணிபுரம், பூந்தராய், சிரபுரம், வண்
புறவம், மண்மேல்
களங்கம் இல் ஊர்சண்பை, கமழ் காழி, வயம் கொச்சை,
கழுமலம், என்று இன்ன
இளங்குமரன் தன்னைப் பெற்று, இமையவர் தம் பகை
எறிவித்த இறைவன் ஊரே.

[1]
ஆக்கு அமர் சீர் ஊர் சண்பை, காழி, அமர் கொச்சை,
கழுமலம், அன்பான் ஊர்
ஓக்கம்(ம்) உடைத் தோணிபுரம், பூந்தராய், சிரபுரம், ஒண்
புறவம், நண்பு ஆர்
பூக்கமலத்தோன் மகிழ் ஊர், புரந்தரன் ஊர், புகலி,
வெங்குருவும், என்பர்
சாக்கியரோடு அமண்கையர் தாம் அறியா வகை நின்றான்
தங்கும் ஊரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.094  
விண்ணவர் தொழுது எழு வெங்குரு   பண் - சாதாரி   (திருவெங்குரு (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)

விண்ணவர் தொழுது எழு வெங்குரு மேவிய
சுண்ண வெண்பொடி அணிவீரே;
சுண்ண வெண்பொடி அணிவீர்! உம தொழு கழல்
எண்ண வல்லார் இடர் இலரே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.126  
பந்தத்தால் வந்து எப்பால் பயின்று   பண் - வியாழக்குறிஞ்சி   (சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)

பந்தத்தால் வந்து எப்பால் பயின்று நின்ற உம்பர், அப்
பாலே சேர்வு ஆய் ஏனோர், கான்பயில் கணமுனிவர்களும்,
சிந்தித்தே வந்திப்ப, சிலம்பின் மங்கை தன்னொடும்
சேர்வார், நாள்நாள் நீள்கயிலைத் திகழ்தரு பரிசு அது எலாம்
சந்தித்தே, இந்தப் பார்சனங்கள் நின்று தம் கணால்
தாமே காணா வாழ்வார் அத் தகவு செய்தவனது இடம்
கந்தத்தால் எண்திக்கும் கமழ்ந்து இலங்கு சந்தனக்
காடு ஆர், ஆர், சீர் மேவும் கழுமல வள நகரே.

[1]
கஞ்சத்தேன் உண்டிட்டே களித்து வண்டு, சண்பகக்
கானே தேனே போர் ஆரும் கழுமல நகர் இறையைத்
தஞ்சைச் சார் சண்பைக் கோன் சமைத்த நல் கலைத் துறை,
தாமே போல்வார் தேன் நேர் ஆர் தமிழ் விரகன் மொழிகள்,
எஞ்சத் தேய்வு இன்றிக்கே இமைத்து இசைத்து அமைத்த கொண்டு,
ஏழே ஏழே நாலே மூன்று இயல் இசை இசை இயல்பா,
வஞ்சத்து ஏய்வு இன்றிக்கே மனம் கொளப் பயிற்றுவோர்
மார்பே சேர்வாள், வானோர் சீர் மதிநுதல் மடவரலே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.074  
பூமகன் ஊர், புத்தேளுக்கு இறைவன்   பண் - காந்தாரம்   (திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)

பூமகன் ஊர், புத்தேளுக்கு இறைவன் ஊர், குறைவு இலாப்
புகலி, பூமேல்
மாமகள் ஊர், வெங்குரு, நல் தோணிபுரம், பூந்தராய்,
வாய்ந்த இஞ்சிச்
சேமம் மிகு சிரபுரம், சீர்ப் புறவம், நிறை புகழ்ச் சண்பை,
காழி, கொச்சை,
காமனை முன் காய்ந்த நுதல் கண்ணவன் ஊர் கழுமலம்
நாம் கருதும் ஊரே.

[1]
இறைவன் அமர் சண்பை, எழில் புறவம், அயன் ஊர்,
இமையோர்க்கு அதிபன் சேர் ஊர்,
குறைவு இல் புகழ்ப் புகலி, வெங்குரு, தோணிபுரம், குணம்
ஆர் பூந்தராய், நீர்ச்
சிறை மலி நல் சிரபுரம், சீர்க் காழி, வளர் கொச்சை,
கழுமலம் தேசு இன்றிப்
பறி தலையொடு அமண்கையர், சாக்கியர்கள், பரிசு அறியா
அம்மான் ஊரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.063  
எரி ஆர் மழு ஒன்று   பண் - தக்கேசி   (திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)

எரி ஆர் மழு ஒன்று ஏந்தி, அங்கை இடுதலையே கலனா,
வரி ஆர் வளையார் ஐயம் வவ்வாய், மா நலம் வவ்வுதியே?
சரியா நாவின் வேதகீதன், தாமரை நான்முகத்தன்,
பெரியான், பிரமன் பேணி ஆண்ட பிரமபுரத்தானே!

[1]
கட்டு ஆர் துழாயன், தாமரையான், என்று இவர் காண்பு அரிய
சிட்டார் பலி தேர்ந்து, ஐயம் வவ்வாய், செய் கலை வவ்வுதியே?
நட்டார் நடுவே நந்தன் ஆள, நல்வினையால் உயர்ந்த
கொட்டாறு உடுத்த தண்வயல் சூழ் கொச்சை அமர்ந்தவனே!

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.101  
தண் ஆர் திங்கள், பொங்கு   பண் - குறிஞ்சி   (திருக்கண்ணார்கோவில் (குறுமாணக்குடி) கண்ணாயிரேசுவரர் முருகுவளர்கோதையம்மை)

தண் ஆர் திங்கள், பொங்கு அரவம், தாழ்புனல், சூடி,
பெண் ஆண் ஆய பேர் அருளாளன் பிரியாத
கண்ணார்கோயில் கைதொழுவோர்கட்கு, இடர்பாவம்
நண்ணா ஆகும்; நல்வினை ஆய நணுகுமே.

[1]
காமரு கண்ணார்கோயில் உளானை, கடல் சூழ்ந்த
பூ மரு சோலைப் பொன் இயல் மாடப் புகலிக் கோன்-
நா மரு தொன்மைத்தன்மை உள் ஞானசம்பந்தன்-
பா மரு பாடல்பத்தும் வல்லார் மேல் பழி போமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.111  
அருத்தனை, அறவனை, அமுதனை, நீர்   பண் - வியாழக்குறிஞ்சி   (திருக்கடைமுடி (கீழையூர்) கடைமுடியீசுவரர் அபிராமியம்பிகை)

அருத்தனை, அறவனை, அமுதனை, நீர்
விருத்தனை, பாலனை, வினவுதிரேல்,
ஒருத்தனை, அல்லது இங்கு உலகம் ஏத்தும்
கருத்தவன், வள நகர் கடைமுடியே.

[1]
பொன் திகழ் காவிரிப் பொரு புனல் சீர்
சென்று அடை கடைமுடிச் சிவன் அடியை
நன்று உணர் ஞானசம்பந்தன் சொன்ன
இன்தமிழ் இவை சொல, இன்பம் ஆமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.005  
செய் அருகே புனல் பாய,   பண் - நட்டபாடை   (கீழைத்திருக்காட்டுப்பள்ளி ஆரணியச்சுந்தரர் அகிலாண்டநாயகியம்மை)

செய் அருகே புனல் பாய, ஓங்கிச் செங்கயல் பாய, சில மலர்த்தேன்-
கை அருகே கனி வாழை ஈன்று கானல் எலாம் கமழ் காட்டுப்பள்ளி,
பை அருகே அழல் வாய ஐவாய்ப் பாம்பு அணையான் பணைத் தோளி பாகம்
மெய் அருகே உடையானை உள்கி, விண்டவர் ஏறுவர், மேல் உலகே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.043  
கள் ஆர்ந்த பூங்கொன்றை, மதமத்தம்,   பண் - சீகாமரம்   (திருப்புள்ளிருக்குவேளூர் (வைத்தீச்சுரன்கோவில்) வைத்தியநாதர் தையல்நாயகியம்மை)

கள் ஆர்ந்த பூங்கொன்றை, மதமத்தம், கதிர் மதியம்,
உள் ஆர்ந்த சடைமுடி எம்பெருமானார் உறையும் இடம்
தள்ளாய சம்பாதி, சடாயு, என்பார்தாம் இருவர்
புள் ஆனார்க்கு அரையன் இடம் புள்ளிருக்குவேளூரே.

[1]
செடி ஆய உடல் தீர்ப்பான், தீவினைக்கு ஓர் மருந்து
ஆவான்,
பொடி ஆடிக்கு அடிமை செய்த புள்ளிருக்குவேளூரை,
கடி ஆர்ந்த பொழில் காழிக் கவுணியன் சம்பந்தன் சொல்
மடியாது சொல்ல வல்லார்க்கு இல்லை ஆம், மறுபிறப்பே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.018  
சூலம் படை; சுண்ணப்பொடி சாந்தம்,   பண் - நட்டபாடை   (திருநின்றியூர் இலட்சுமியீசுவரர் உலகநாயகியம்மை)

சூலம் படை; சுண்ணப்பொடி சாந்தம், சுடு நீறு;
பால் அம்மதி பவளச் சடை முடி மேலது பண்டைக்
காலன் வலி காலினொடு போக்கி, கடி கமழும்
நீல மலர்ப் பொய்கை நின்றியூரின் நிலையோர்க்கே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.027  
முந்தி நின்ற வினைகள் அவை   பண் - தக்கராகம்   (திருப்புன்கூர் சிவலோகநாதர் சொக்கநாயகியம்மை)

முந்தி நின்ற வினைகள் அவை போகச்
சிந்தி, நெஞ்சே! சிவனார் திருப் புன்கூர்;
அந்தம் இல்லா அடிகள் அவர் போலும்
கந்தம் மல்கு கமழ் புன் சடையாரே.

[1]
மாடம் மல்கு மதில் சூழ் காழி மன்,
சேடர் செல்வர் உறையும் திருப் புன்கூர்
நாட வல்ல ஞானசம்பந்தன்,
பாடல்பத்தும் பரவி வாழ்மினே!

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.097  
எய்யா வென்றித் தானவர் ஊர்மூன்று   பண் - குறிஞ்சி   (திருப்புறவம் பிரமபுரீசர் திருநிலைநாயகி)

எய்யா வென்றித் தானவர் ஊர்மூன்று எரிசெய்த
மை ஆர் கண்டன், மாது உமை வைகும் திருமேனிச்
செய்யான், வெண்நீறு அணிவான், திகழ் பொன் பதிபோலும்
பொய்யா நாவின் அந்தணர் வாழும் புறவமே.

[1]
பொன் இயல் மாடப் புரிசை நிலாவும் புறவத்து
மன்னிய ஈசன் சேவடி நாளும் பணிகின்ற
தன் இயல்பு இல்லாச் சண்பையர்கோன்-சீர்ச் சம்பந்தன்-
இன் இசைஈர்-ஐந்து ஏத்த வல்லோர்கட்கு இடர் போமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.016  
அயில் ஆரும் அம்புஅதனால் புரம்மூன்று   பண் - இந்தளம்   (எதிர்கொள்பாடி (மேலைத்திருமணஞ்சேரி) மணவாளநாயகர் யாழ்மொழியம்மை)

அயில் ஆரும் அம்புஅதனால் புரம்மூன்று எய்து
குயில் ஆரும் மென்மொழியாள் ஒருகூறுஆகி,
மயில் ஆரும் மல்கிய சோலை மணஞ்சேரிப்
பயில்வானைப் பற்றி நின்றார்க்கு இல்லை, பாவமே.

[1]
கண் ஆரும் காழியர்கோன் கருத்து ஆர்வித்த
தண் ஆர் சீர் ஞானசம்பந்தன் தமிழ்மாலை,
மண் ஆரும் மா வயல் சூழ்ந்த மணஞ்சேரி,
பண் ஆரப் பாட வல்லார்க்கு இல்லை, பாவமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.090  
ஓங்கி மேல் உழிதரும் ஒலி   பண் - சாதாரி   (திருத்துருத்தியும் - திருவேள்விக்குடியும் )

ஓங்கி மேல் உழிதரும் ஒலி புனல் கங்கையை ஒரு சடைமேல்
தாங்கினார், இடு பலி தலை கலனாக் கொண்ட தம் அடிகள்,
பாங்கினால் உமையொடும் பகல் இடம் புகல் இடம், பைம்பொழில் சூழ்
வீங்கு நீர்த் துருத்தியார்; இரவு இடத்து உறைவர்,
வேள்விக்குடியே.

[1]
விண் உலாம் விரி பொழில் விரை மணல்-துருத்தி,
வேள்விக்குடியும்,
ஒண் உலாம் ஒலிகழல் ஆடுவார் அரிவையோடு உறை பதியை
நண் உலாம் புகலியுள் அருமறை ஞானசம்பந்தன் சொன்ன
பண் உலாம் அருந்தமிழ் பாடுவார் ஆடுவார்; பழி இலரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.099  
இன்று நன்று, நாளை நன்று   பண் - நட்டராகம்   (திருக்கோடி (கோடிக்கரை) கோடீசுவரர் வடிவாம்பிகையம்மை)

இன்று நன்று, நாளை நன்று என்று நின்ற இச்சையால்
பொன்றுகின்ற வாழ்க்கையைப் போக விட்டுப் போதுமின்!
மின் தயங்கு சோதியான் வெண்மதி, விரிபுனல்,
கொன்றை, துன்று சென்னியான் கோடி காவு சேர்மினே!

[1]
கொந்து அணி குளிர்பொழில் கோடி காவு மேவிய
செந்தழல் உருவனை, சீர்மிகு திறல் உடை
அந்தணர் புகலியுள் ஆய கேள்வி ஞானசம்
பந்தன தமிழ் வல்லார் பாவம் ஆன பாறுமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.010  
சீரின் ஆர் மணியும்(ம்) அகில்   பண் - இந்தளம்   (திருமங்கலக்குடி புராணவரதேசுவரர் மங்களநாயகியம்மை)

சீரின் ஆர் மணியும்(ம்) அகில் சந்தும் செறி வரை
வாரி நீர் வரு பொன்னி வடமங்கலக்குடி
நீரின் மா முனிவன் நெடுங்கைகொடு நீர்தனைப்
பூரித்து ஆட்டி அர்ச்சிக்க இருந்த புராணனே.

[1]
மந்த மாம்பொழில் சூழ் மங்கலக்குடி மன்னிய
எந்தையை, எழில் ஆர் பொழில் காழியர்காவலன்
சிந்தைசெய்து அடி சேர்த்திடு ஞானசம்பந்தன் சொல்
முந்தி ஏத்த வல்லார், இமையோர்முதல் ஆவரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.013  
குரவம் கமழ் நறு மென்   பண் - நட்டபாடை   (திருவியலூர் யோகாநந்தேசுவரர் சவுந்தரநாயகியம்மை (எ) சாந்தநாயகியம்மை)

குரவம் கமழ் நறு மென் குழல் அரிவை அவள் வெருவ,
பொரு வெங்கரி பட வென்று, அதன் உரிவை உடல் அணிவோன்,
அரவும், அலைபுனலும், இளமதியும், நகுதலையும்,
விரவும் சடை அடிகட்கு இடம் விரி நீர் வியலூரே.

[1]
விளங்கும் பிறை சடை மேல் உடை விகிர்தன் வியலூரை,
தளம் கொண்டது ஒரு புகலித் தகு தமிழ் ஞானசம்பந்தன்
துளங்கு இல் தமிழ் பரவித் தொழும் அடியார் அவர், என்றும்
விளங்கும் புகழ் அதனோடு, உயர் விண்ணும் உடையாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.025  
மருந்து, வேண்டில்(ல்) இவை; மந்திரங்கள்(ள்)   பண் - கொல்லி   (திருந்துதேவன்குடி கர்க்கடகேசுவரர் அருமருந்துநாயகியம்மை)

மருந்து, வேண்டில்(ல்) இவை; மந்திரங்கள்(ள்) இவை;
புரிந்து கேட்கப்படும் புண்ணியங்கள்(ள்) இவை
திருந்து தேவன் குடித் தேவர் தேவு, எய்திய
அருந்தவத்தோர் தொழும் அடிகள், வேடங்களே

[1]
சேடர் தேவன்குடித் தேவர் தேவன்தனை,
மாடம் ஓங்கும் பொழில் மல்கு தண் காழியான்-
நாட வல்ல தமிழ் ஞானசம்பந்தன
பாடல் பத்தும் வல்லார்க்கு இல்லை ஆம், பாவமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.095  
எண் திசைக்கும் புகழ் இன்னம்பர்   பண் - சாதாரி   (திருஇன்னம்பர் எழுத்தறிந்தவீசுவரர் கொந்தார்பூங்குழலம்மை)

எண் திசைக்கும் புகழ் இன்னம்பர் மேவிய
வண்டு இசைக்கும் சடையீரே;
வண்டு இசைக்கும் சடையீர்! உமை வாழ்த்துவார்
தொண்டு இசைக்கும் தொழிலாரே.

[1]
ஏடு அமர் பொழில் அணி இன்னம்பர் ஈசனை,
நாடு அமர் ஞானசம்பந்தன்
நாடு அமர் ஞானசம்பந்தன நல்-தமிழ்,
பாட வல்லார் பழி இலரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.091  
கோங்கமே, குரவமே, கொழு மலர்ப்   பண் - சாதாரி   (திருவடகுரங்காடுதுறை குலைவணங்குநாதர் சடைமுடியம்மை)

கோங்கமே, குரவமே, கொழு மலர்ப் புன்னையே, கொகுடி, முல்லை,
வேங்கையே, ஞாழலே, விம்மு பாதிரிகளே, விரவி எங்கும்
ஓங்கு மா காவிரி வடகரை அடை குரங்காடுதுறை,
வீங்கு நீர்ச் சடைமுடி அடிகளார் இடம் என விரும்பினாரே.

[1]
தாழ் இளங் காவிரி வடகரை அடை குரங்காடுதுறை,
போழ் இளமதி பொதி புரிதரு சடைமுடிப் புண்ணியனை,
காழியான்-அருமறை ஞானசம்பந்தன கருது பாடல்
கோழையா அழைப்பினும், கூடுவார், நீடுவான் உலகின்
ஊடே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.067  
கண் மேல் கண்ணும், சடைமேல்   பண் - தக்கேசி   (திருப்பழனம் ஆபத்சகாயர் பெரியநாயகியம்மை)

கண் மேல் கண்ணும், சடைமேல் பிறையும், உடையார்; காலனைப்
புண் ஆர் உதிரம் எதிர் ஆறு ஓடப் பொன்றப் புறம்தாளால்
எண்ணாது உதைத்த எந்தை பெருமான்-இமவான் மகளோடும்,
பண் ஆர் களி வண்டு அறை பூஞ்சோலைப் பழன நகராரே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.130  
புலன் ஐந்தும் பொறி கலங்கி,   பண் - மேகராகக்குறிஞ்சி   (திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)

புலன் ஐந்தும் பொறி கலங்கி, நெறி மயங்கி, அறிவு அழிந்திட்டு, ஐம் மேல் உந்தி,
அலமந்த போது ஆக, அஞ்சேல்! என்று அருள் செய்வான் அமரும் கோயில்
வலம் வந்த மடவார்கள் நடம் ஆட, முழவு அதிர, மழை என்று அஞ்சி,
சிலமந்தி அலமந்து, மரம் ஏறி, முகில் பார்க்கும் திரு ஐயாறே.

[1]
அன்னம் மலி பொழில் புடை சூழ் ஐயாற்று எம்பெருமானை, அம் தண் காழி
மன்னிய சீர் மறை நாவன்-வளர் ஞானசம்பந்தன்-மருவு பாடல்
இன் இசையால் இவைபத்தும் இசையுங்கால், ஈசன் அடி ஏத்துவார்கள்
தன் இசையோடு அமருலகில் தவநெறி சென்று எய்துவார், தாழாது அன்றே!

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.006  
கோடல், கோங்கம், குளிர் கூவிளமாலை,   பண் - இந்தளம்   (திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)

கோடல், கோங்கம், குளிர் கூவிளமாலை, குலாய சீர்
ஓடு கங்கை, ஒளிவெண்பிறை, சூடும் ஒருவனார்
பாடல் வீணை, முழவம், குழல், மொந்தை, பண் ஆகவே
ஆடும் ஆறு வல்லானும் ஐயாறு உடை ஐயனே.

[1]
கையில் உண்டு உழல்வாரும், கமழ் துவர் ஆடையால்
மெய்யைப் போர்த்து உழல்வாரும், உரைப்பன மெய் அல;
மை கொள் கண்டத்து எண்தோள் முக்கணான் கழல்
வாழ்த்தவே.
ஐயம் தேர்ந்து அளிப்பானும் ஐயாறு உடை ஐயனே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.067  
மண்ணும் ஓர் பாகம் உடையார்;   பண் - காந்தாரம்   (திருப்பெரும்புலியூர் வியாக்கிரபுரீசுவரர் சவுந்தராம்பிகையம்மை)

மண்ணும் ஓர் பாகம் உடையார்; மாலும் ஓர்பாகம்
உடையார்;
விண்ணும் ஓர் பாகம் உடையார்; வேதம் உடைய விமலர்;
கண்ணும் ஓர் பாகம் உடையார்; கங்கை சடையில் கரந்தார்;
பெண்ணும் ஓர்பாகம் உடையார் பெரும்புலியூர் பிரியாரே.

[1]
பிறை வளரும் முடிச் சென்னிப் பெரும்புலியூர்ப்
பெருமானை,
நறை வளரும் பொழில் காழி நல் தமிழ் ஞானசம்பந்தன்,
மறை வளரும் தமிழ்மாலை வல்லவர், தம் துயர் நீங்கி,
நிறை வளர் நெஞ்சினர் ஆகி, நீடு உலகத்து இருப்பாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.015  
மை ஆடிய கண்டன், மலை   பண் - நட்டபாடை   (திருநெய்த்தானம் நெய்யாடியப்பர் வாலாம்பிகையம்மை)

மை ஆடிய கண்டன், மலை மகள் பாகம் அது உடையான்,
கை ஆடிய கேடு இல் கரி உரி மூடிய ஒருவன்,
செய் ஆடிய குவளை மலர் நயனத்தவளோடும்
நெய் ஆடிய பெருமான், இடம் நெய்த்தானம் எனீரே!

[1]
தலம் மல்கிய புனல் காழியுள் தமிழ் ஞானசம்பந்தன்
நிலம் மல்கிய புகழால் மிகும் நெய்த்தானனை நிகர் இல்
பலம் மல்கிய பாடல் இவை பத்தும் மிக வல்லார்,
சில மல்கிய செல்வன் அடி சேர்வர், சிவ கதியே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.048  
அங்கை ஆர் அழலன்(ன்), அழகு   பண் - கௌசிகம்   (திருமழபாடி வச்சிரத்தம்பேசுவரர் அழகாம்பிகையம்மை)

அங்கை ஆர் அழலன்(ன்), அழகு ஆர் சடைக்
கங்கையான், கடவுள்(ள்), இடம் மேவிய
மங்கையான், உறையும் மழபாடியைத்
தம் கையால்-தொழுவார் தகவாளரே.

[1]
மந்தம் உந்து பொழில் மழபாடி
எந்தை சந்தம் இனிது உகந்து ஏத்துவான்,
கந்தம் ஆர் கடல் காழியுள் ஞானசம்-
பந்தன் மாலை வல்லார்க்கு இல்லை, பாவமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.009  
களையும், வல்வினை; அஞ்சல், நெஞ்சே!   பண் - இந்தளம்   (திருமழபாடி வச்சிரத்தம்பேசுவரர் அழகாம்பிகையம்மை)

களையும், வல்வினை; அஞ்சல், நெஞ்சே! கருதார் புரம்
உளையும் பூசல் செய்தான்; உயர்மால்வரை நல் விலா
வளைய வெஞ்சரம் வாங்கி எய்தான் மதுத் தும்பிவண்டு
அளையும் கொன்றைஅம்தார் மழபாடியுள் அண்ணலே.

[1]
மலியும் மாளிகை சூழ் மழபாடியுள் வள்ளலைக்
கலிசெய் மா மதில் சூழ் கடல் காழிக் கவுணியன்,
ஒலிசெய் பாடல்கள் பத்துஇவை வல்லார்.......உலகத்திலே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.028  
காலை ஆர் வண்டு இனம்   பண் - கொல்லி   (திருமழபாடி வச்சிரத்தம்பேசுவரர் அழகாம்பிகையம்மை)

காலை ஆர் வண்டு இனம் கிண்டிய, கார் உறும்,
சோலை ஆர் பைங்கிளி சொல் பொருள் பயிலவே,
வேலை ஆர் விடம் அணி வேதியன் விரும்பு இடம்
மாலை ஆர் மதி தவழ் மா மழபாடியே.

[1]
ஞாலத்து ஆர் ஆதிரை நாளினான், நாள்தொறும்
சீலத்தான், மேவிய திரு மழபாடியை
ஞாலத்தால் மிக்க சீர் ஞானசம்பந்தன் சொல்
கோலத்தால் பாடுவார் குற்றம் அற்றார்களே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.073  
வான் ஆர் சோதி மன்னு   பண் - தக்கேசி   (திருக்கானூர் செம்மேனிநாயகர் சிவயோகநாயகியம்மை)

வான் ஆர் சோதி மன்னு சென்னி, வன்னி புனக்கொன்றைத்
தேன் ஆர் போது, தான் ஆர் கங்கை, திங்களொடு சூடி,
மான் ஏர் நோக்கி கண்டு அங்கு உவப்ப, மாலை ஆடுவார்
கானூர் மேய, கண் ஆர் நெற்றி, ஆன் ஊர் செல்வரே.

[1]
கழுது துஞ்சும் கங்குல் ஆடும் கானூர் மேயானை,
பழுது இல் ஞானசம்பந்தன் சொல்பத்தும் பாடியே,
தொழுது பொழுது தோத்திரங்கள் சொல்லித் துதித்து நின்று,
அழுதும் நக்கும் அன்பு செய்வார் அல்லல் அறுப்பாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.033  
கணை நீடு எரி, மால்,   பண் - தக்கராகம்   (திருஅன்பில் ஆலந்துறை சத்திவாகீசர் சவுந்தரநாயகியம்மை)

கணை நீடு எரி, மால், அரவம், வரை வில்லா,
இணையா எயில் மூன்றும் எரித்த இறைவர்
பிணை மா மயிலும், குயில், சேர் மட அன்னம்,
அணையும் பொழில் அன்பில் ஆலந் துறையாரே.

[1]
அரவு ஆர் புனல் அன்பில் ஆலந்துறை தன் மேல்
கரவாதவர் காழியுள் ஞானசம்பந்தன்
பரவு ஆர் தமிழ் பத்து இசை பாட வல்லார் போய்
விரவு ஆகுவர், வான் இடை; வீடு எளிது ஆமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.110  
செம்பொன் ஆர்தரு வேங்கையும், ஞாழலும்,   பண் - நட்டராகம்   (திருமாந்துறை ஐராவணேசுவரர் அழகாயமர்ந்தநாயகியம்மை)

செம்பொன் ஆர்தரு வேங்கையும், ஞாழலும், செருந்தி,
செண்பகம், ஆனைக்
கொம்பும், ஆரமும், மாதவி, சுரபுனை, குருந்து, அலர்
பரந்து உந்தி,
அம் பொன் நேர் வரு காவிரி வடகரை மாந்துறை
உறைகின்ற
எம்பிரான், இமையோர் தொழு, பைங்கழல் ஏத்துதல்
செய்வோமே.

[1]
வரை வளம் கவர் காவிரி வடகரை மாந்துறை உறைவானை,
சிரபுரம்பதி உடையவன் கவுணியன், செழுமறை நிறை
நாவன்,
அர எனும் பணி வல்லவன், ஞானசம்பந்தன் அன்பு உறு
மாலை
பரவிடும் தொழில் வல்லவர், அல்லலும் பாவமும் இலர்
தாமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.044  
துணி வளர் திங்கள் துளங்கி   பண் - தக்கராகம்   (திருப்பாச்சிலாச்சிராமம் (திருவாசி) மாற்றறிவரதர் பாலசுந்தரநாயகியம்மை)

துணி வளர் திங்கள் துளங்கி விளங்க, சுடர்ச்சடை சுற்றி முடித்து,
பணி வளர் கொள்கையர், பாரிடம் சூழ, ஆர் இடமும் பலி தேர்வர்;
அணி வளர் கோலம் எலாம் செய்து, பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற
மணி வளர் கண்டரோ, மங்கையை வாட மயல் செய்வதோ இவர் மாண்பே?

[1]
அகம் மலி அன்பொடு தொண்டர் வணங்க, ஆச்சிராமத்து உறைகின்ற
புகை மலி மாலை புனைந்து அழகு ஆய புனிதர் கொல் ஆம் இவர் என்ன,
நகை மலி தண்பொழில் சூழ்தரு காழி நல்-தமிழ் ஞானசம்பந்தன்
தகை மலி தண் தமிழ் கொண்டு இவை ஏத்த, சாரகிலா, வினைதானே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.014  
ஆரிடம் பாடலர், அடிகள், காடு   பண் - காந்தாரபஞ்சமம்   (திருப்பைஞ்ஞீலி நீலகண்டேசுவரர் விசாலாட்சியம்மை)

ஆரிடம் பாடலர், அடிகள், காடு அலால்
ஓர் இடம் குறைவு இலர், உடையர் கோவணம்,
நீர் இடம் சடை, விடை ஊர்தி, நித்தலும்
பாரிடம் பணி செயும், பயில் பைஞ்ஞீலியே.

[1]
கண் புனல் விளை வயல் காழிக் கற்பகம்
நண்பு உணர் அருமறை ஞானசம்பந்தன்
பண்பினர் பரவு பைஞ்ஞீலி பாடுவார்
உண்பின உலகினில், ஓங்கி வாழ்வரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.070  
வானத்து உயர் தண்மதி தோய்   பண் - தக்கேசி   (திருஈங்கோய்மலை )

வானத்து உயர் தண்மதி தோய் சடைமேல் மத்தமலர் சூடி,
தேன் ஒத்தன மென்மொழி மான்விழியாள் தேவி பாகமா,
கானத்து இரவில் எரி கொண்டு ஆடும் கடவுள் உலகு ஏத்த,
ஏனத்திரள் வந்து இழியும் சாரல் ஈங்கோய் மலையாரே.

[1]
விழவு ஆர் ஒலியும் முழவும் ஓவா வேணுபுரம் தன்னுள்,
அழல் ஆர் வண்ணத்து அடிகள் அருள் சேர் அணி கொள் சம்பந்தன்,
எழில் ஆர் சுனையும் பொழிலும் புடை சூழ் ஈங்கோய்மலை ஈசன்
கழல் சேர் பாடல் பத்தும் வல்லார் கவலை களைவாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.107  
வெந்த வெண் நீறு அணிந்து,   பண் - வியாழக்குறிஞ்சி   (திருக்கொடிமாடச்செங்குன்றூர் (திருச்செங்கோடு) அர்த்தநாரீசுவரர் அர்த்தநாரீசுவரி)

வெந்த வெண் நீறு அணிந்து, விரிநூல் திகழ் மார்பில் நல்ல
பந்து அணவும் விரலாள் ஒரு பாகம் அமர்ந்து அருளி,
கொந்து அணவும் பொழில் சூழ் கொடிமாடச் செங்குன்றூர் நின்ற
அந்தணனைத் தொழுவார் அவலம் அறுப்பாரே.
[1]
அலை மலி தண் புனல் சூழ்ந்து அழகு ஆர் புகலிநகர் பேணும்
தலைமகன் ஆகி நின்ற தமிழ் ஞானசம்பந்தன்,
கொலை மலி மூஇலையான் கொடி மாடச்செங்குன்றூர் ஏத்தும்
நலம் மலி பாடல் வல்லார் வினை ஆன நாசமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.072  
பந்து ஆர் விரல் மடவாள்   பண் - காந்தாரம்   (திருநணா (பவானி) சங்கமுகநாதேசுவரர் வேதமங்கையம்மை)

பந்து ஆர் விரல் மடவாள் பாகமா, நாகம் பூண்டு, எருது ஏறி,
அம் தார் அரவு அணிந்த அம்மான் இடம் போலும் அம் தண்சாரல்
வந்து ஆர் மடமந்தி கூத்து ஆட, வார் பொழிலில் வண்டு பாட,
செந்தேன் தெளி ஒளிர, தேமாங்கனி உதிர்க்கும் திரு நணாவே.

[1]
கல் வித்தகத்தால் திரை சூழ் கடல் காழிக் கவுணி சீர் ஆர்
நல் வித்தகத்தால் இனிது உணரும் ஞானசம்பந்தன் எண்ணும்
சொல் வித்தகத்தால் இறைவன் திரு நணா ஏத்து பாடல்,
வல் வித்தகத்தால் மொழிவார் பழி இலர், இம் மண்ணின்மேலே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.116  
அவ் வினைக்கு இவ் வினை   பண் - வியாழக்குறிஞ்சி   (பொது -திருநீலகண்டப்பதிகம் )

அவ் வினைக்கு இவ் வினை ஆம் என்று சொல்லும் அஃது அறிவீர்!
உய்வினை நாடாது இருப்பதும் உம்தமக்கு ஊனம் அன்றே?
கை வினை செய்து எம்பிரான் கழல் போற்றுதும், நாம் அடியோம்;
செய்வினை வந்து எமைத் தீண்டப்பெறா; திருநீலகண்டம்!

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.069  
பெண் அமர் மேனியினாரும், பிறை   பண் - காந்தாரம்   (திருப்பாண்டிக்கொடுமுடி கொடுமுடிநாதேசுவரர் பண்மொழியம்மை)

பெண் அமர் மேனியினாரும், பிறை புல்கு
செஞ்சடையாரும்,
கண் அமர் நெற்றியினாரும், காது அமரும் குழையாரும்,
எண் அமரும் குணத்தாரும், இமையவர் ஏத்த நின்றாரும்,
பண் அமர் பாடலினாரும் பாண்டிக்கொடு முடியாரே.

[1]
கலம் மல்கு தண் கடல் சூழ்ந்த காழியுள் ஞானசம்பந்தன்,
பலம் மல்கு வெண்தலை ஏந்தி பாண்டிக்கொடு
முடிதன்னைச்
சொல மல்கு பாடல்கள் பத்தும் சொல்ல வல்லார், துயர்
தீர்ந்து,
நலம் மல்கு சிந்தையர் ஆகி, நன்நெறி எய்துவர் தாமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.028  
தொண்டுஎலாம் மலர் தூவி ஏத்த,   பண் - இந்தளம்   (திருக்கருவூரானிலை (கரூர்) பசுபதீசுவரர் கிருபாநாயகியம்மை)

தொண்டுஎலாம் மலர் தூவி ஏத்த, நஞ்சு
உண்ட ஆர் உயிர் ஆய தன்மையர்;
கண்டு அனார் கருவூருள் ஆன்நிலை
அண்டனார், அருள் ஈயும் அன்பரே.

[1]
கந்தம் ஆர் பொழில் காழி ஞானசம்
பந்தன் சேர் கருவூருள் ஆன்நிலை
எந்தையைச் சொன்ன பத்தும் வல்லவர்,
சிந்தையில் துயர் ஆய தீர்வரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.135  
நீறு சேர்வது ஒர் மேனியர்,   பண் - மேகராகக்குறிஞ்சி   (திருப்பராய்துறை திருப்பராய்த்துறைநாதர் பசும்பொன்மயிலம்மை)

நீறு சேர்வது ஒர் மேனியர், நேரிழை
கூறு சேர்வது ஒர் கோலம் ஆய்,
பாறு சேர் தலைக் கையர் பராய்த்துறை
ஆறு சேர் சடை அண்ணலே.

[1]
செல்வம் மல்கிய செல்வர் பராய்த்துறைச்
செல்வர்மேல், சிதையாதன
செல்வன் ஞானசம்பந்தன செந்தமிழ்,
செல்வம் ஆம், இவை செப்பவே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.043  
வடம் திகழ் மென் முலையாளைப்   பண் - தக்கராகம்   (திருகற்குடி (உய்யக்கொண்டான்மலை) முத்தீசர் அஞ்சனாட்சியம்மை)

வடம் திகழ் மென் முலையாளைப் பாகம் அது ஆக மதித்து,
தடந் திரை சேர் புனல்மாதைத் தாழ்சடை வைத்த சதுரர்;
இடம் திகழ் முப்புரி நூலர்; துன்பமொடு இன்பம் அது எல்லாம்
கடந்தவர் காதலில் வாழும் கற்குடி மா மலையாரே.

[1]
காமரு வார் பொழில் சூழும் கற்குடி மா மலையாரை
நா மரு வண்புகழ்க் காழி நலம் திகழ் ஞானசம்பந்தன்
பா மரு செந்தமிழ் மாலை பத்து இவை பாட வல்லார்கள்
பூ மலி வானவரோடும் பொன்னுலகில் பொலிவாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.120  
சாந்தம் வெண்நீறு எனப் பூசி,   பண் - செவ்வழி   (திருமூக்கீச்சுரம் (உறையூர்) )

சாந்தம் வெண்நீறு எனப் பூசி, வெள்ளம் சடை வைத்தவர்,
காந்தள் ஆரும் விரல் ஏழையொடு ஆடிய காரணம்
ஆய்ந்து கொண்டு, ஆங்கு அறிய(ந்) நிறைந்தார் அவர்
ஆர்கொலோ?
வேந்தன் மூக்கீச்சுரத்து அடிகள் செய்கின்றது ஓர்
மெய்ம்மையே.

[1]
மல்லை ஆர் மும் முடிமன்னர் மூக்கீச்சுரத்து அடிகளைச்
செல்வர் ஆக நினையும் படி சேர்த்திய செந்தமிழ்,
நல்லவராய் வாழ்பவர் காழியுள் ஞானசம்பந்தன்
சொல்ல வல்லார் அவர், வான் உலகு ஆளவும் வல்லரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.023  
மழை ஆர் மிடறா! மழுவாள்   பண் - இந்தளம்   (திருவானைக்கா சம்புகேசுவரர் அகிலாண்டநாயகியம்மை)

மழை ஆர் மிடறா! மழுவாள் உடையாய்!
உழை ஆர் கரவா! உமையாள்கணவா!
விழவு ஆரும் வெண்நாவலின் மேவிய எம்
அழகா! எனும் ஆயிழையாள் அவளே

[1]
வெண்நாவல் அமர்ந்து உறை வேதியனை,
கண் ஆர் கமழ் காழியர்தம் தலைவன்,
பண்ணோடு இவை பாடிய பத்தும் வல்லார்
விண்ணோர் அவர் ஏத்த விரும்புவரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.109  
மண் அது உண்ட(அ)ரி மலரோன்   பண் - பழம்பஞ்சுரம்   (திருவானைக்கா )

மண் அது உண்ட(அ)ரி மலரோன் காணா
வெண்நாவல் விரும்பு மயேந்திரரும்,
கண்ணது ஓங்கிய கயிலையாரும்,
அண்ணல் ஆரூர் ஆதி ஆனைக்காவே.

[1]
ஏனம்மால் அயன் அவர் காண்பு அரியார்
கானம் ஆர் கயிலை நல் மயேந்திரரும்,
ஆன ஆரூர், ஆதி ஆனைக்காவை
ஞானசம்பந்தன் தமிழ் சொல்லுமே!

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.053  
வானைக் காவல் வெண்மதி மல்கு   பண் - கௌசிகம்   (திருவானைக்கா சம்புகேசுவரர் அகிலாண்டநாயகியம்மை)

வானைக் காவல் வெண்மதி மல்கு புல்கு வார்சடை,
தேனைக் காவில் இன்மொழித் தேவி பாகம் ஆயினான்,
ஆனைக்காவில் அண்ணலை, அபயம் ஆக வாழ்பவர்
ஏனைக் காவல் வேண்டுவார் ஏதும் ஏதம் இல்லையே.

[1]
ஊழி ஊழி வையகத்து உயிர்கள் தோற்றுவானொடும்,
ஆழியானும், காண்கிலா ஆனைக்காவில் அண்ணலை,
காழி ஞானசம்பந்தன் கருதிச் சொன்ன பத்து இவை
வாழி ஆகக் கற்பவர் வல்வினைகள் மாயுமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.056  
கார் ஆர் கொன்றை கலந்த   பண் - பழந்தக்கராகம்   (திருப்பாற்றுறை திருமூலநாதர் மோகாம்பிகையம்மை)

கார் ஆர் கொன்றை கலந்த முடியினர்,
சீர் ஆர் சிந்தை செலச் செய்தார்
பாரார் நாளும் பரவிய பாற்றுறை
யார், ஆர் ஆதி முதல்வரே.

[1]
பத்தர் மன்னிய பாற்றுறை மேவிய
பத்து-நூறு பெயரனை,
பத்தன் ஞானசம்பந்தனது இன் தமிழ்
பத்தும் பாடிப் பரவுமே!

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.052  
மறை உடையாய்! தோல் உடையாய்!   பண் - பழந்தக்கராகம்   (திருநெடுங்களம் நித்தியசுந்தரர் ஒப்பிலாநாயகியம்மை)

மறை உடையாய்! தோல் உடையாய்! வார்சடை மேல் வளரும்
பிறை உடையாய்! பிஞ்ஞகனே! என்று உனைப் பேசின் அல்லால்,
குறை உடையார் குற்றம் ஓராய்! கொள்கையினால் உயர்ந்த
நிறை உடையார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே!

[1]
நீட வல்ல வார் சடையான் மேய நெடுங்களத்தைச்
சேடர் வாழும் மா மறுகில் சிரபுரக் கோன் நலத்தால்
நாட வல்ல பனுவல்மாலை, ஞானசம்பந்தன் சொன்ன
பாடல் பத்தும், பாட வல்லார் பாவம் பறையுமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.029  
வாரு மன்னும் முலை மங்கை   பண் - கொல்லி   (மேலைத்திருக்காட்டுப்பள்ளி தீயாடியப்பர் வார்கொண்டமுலையம்மை)

வாரு மன்னும் முலை மங்கை ஓர் பங்கினன்;
ஊரு மன்னும் பலி உண்பதும் வெண்தலை
காரு மன்னும் பொழில் சூழ்ந்த காட்டுப்பள்
நீரு மன்னும் சடை நிமலர் தம் நீர்மையே!

[1]
பொரு புனல் புடை அணி புறவ நன் நகர் மனன்-
அருமறை அவை வல அணி கொள் சம்பந்தன்-சொல்,
கருமணி மிடற்றினன் கருது காட்டுப்பள்
பரவிய தமிழ் சொல, பறையும், மெய்ப் பாவமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.038  
வினவினேன், அறியாமையில்(ல்); உரைசெய்ம்மின், நீர்!   பண் - கொல்லி   (திருக்கண்டியூர் வீரட்டேசுவரர் மங்கைநாயகியம்மை)

வினவினேன், அறியாமையில்(ல்); உரைசெய்ம்மின், நீர்! அருள் வேண்டுவீர்
கனைவில் ஆர் புனல் காவிரிக் கரை மேய கண்டியூர் வீரட்டன்,
தனம் முனே தனக்கு இன்மையோ தமர் ஆயினார் அண்டம் ஆள, தான்
வனனில் வாழ்க்கை கொண்டு ஆடிப் பாடி, இவ் வையம்
மாப் பலி தேர்ந்ததே?

[1]
கருத்தனை, பொழில் சூழும் கண்டியூர் வீரட்டத்து உறை கள்வனை,
அருத்தனை, திறம் அடியர்பால் மிகக் கேட்டு உகந்த வினா உரை
திருத்தம் ஆம் திகழ் காழி ஞானசம்பந்தன் செப்பிய செந்தமிழ்
ஒருத்தர் ஆகிலும், பலர்கள் ஆகிலும், உரைசெய்வார்
உயர்ந்தார்களே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.028  
செப்பம் நெஞ்சே, நெறி கொள்!   பண் - தக்கராகம்   (திருச்சோற்றுத்துறை தொலையாச்செல்வர் ஒப்பிலாம்பிகையம்மை)

செப்பம் நெஞ்சே, நெறி கொள்! சிற்றின்பம்
துப்பன் என்னாது, அருளே துணை ஆக,
ஒப்பர் ஒப்பர் பெருமான், ஒளி வெண் நீற்று
அப்பர், சோற்றுத்துறை சென்று அடைவோமே.

[1]
அம் தண் சோற்றுத்துறை எம் ஆதியைச்
சிந்தை செய்ம்மின், அடியர் ஆயினீர்!
சந்தம் பரவு ஞானசம்பந்தன்
வந்த ஆறே புனைதல் வழிபாடே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.078  
நீறு, வரி ஆடு அரவொடு,   பண் - சாதாரி   (திருவேதிகுடி வேதபுரீசுவரர் மங்கையர்க்கரசியம்மை)

நீறு, வரி ஆடு அரவொடு, ஆமை, மனவு, என்பு, நிரை பூண்பர்; இடபம்,
ஏறுவர்; யாவரும் இறைஞ்சு கழல் ஆதியர்; இருந்த இடம் ஆம்
தாறு விரி பூகம் மலி வாழை விரை நாற, இணைவாளை மடுவில்
வேறு பிரியாது விளையாட, வளம் ஆரும் வயல் வேதிகுடியே.

[1]
கந்தம் மலி தண்பொழில் நல் மாடம் மிடை காழி வளர் ஞானம் உணர் சம்-
பந்தன் மலி செந்தமிழின் மாலைகொடு, வேதிகுடி ஆதி கழலே
சிந்தை செய வல்லவர்கள், நல்லவர்கள் என்ன நிகழ்வு எய்தி, இமையோர்
அந்த உலகு எய்தி அரசு ஆளுமதுவே சரதம்; ஆணை நமதே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.014  
சடையானை, சந்திரனோடு செங்கண் அரா
உடையானை,
  பண் - இந்தளம்   (திருவெண்ணியூர் வெண்ணிநாயகர் அழகியநாயகியம்மை)

சடையானை, சந்திரனோடு செங்கண் அரா
உடையானை, உடைதலையில் பலி கொண்டு ஊரும்
விடையானை, விண்ணவர்தாம் தொழும் வெண்ணியை
உடையானை, அல்லது உள்காது, எனது உள்ளமே.

[1]
மரு ஆரும் மல்கு காழித் திகழ் சம்பந்தன்,
திரு ஆரும் திகழ்தரு வெண்ணி அமர்ந்தானை,
உரு ஆரும் ஒண்தமிழ்மாலைஇவை வல்லார்
பொருஆகப் புக்கு இருப்பார், புவலோகத்தே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.027  
படையினார், வெண்மழு; பாய் புலித்தோல்   பண் - கொல்லி   (திருச்சக்கரப்பள்ளி (ஐயம்பேட்டை) ஆலந்துறைஈசுவரர் அல்லியங்கோதையம்மை)

படையினார், வெண்மழு; பாய் புலித்தோல் அரை
உடையினார்; உமை ஒரு கூறனார்; ஊர்வது ஓர்
விடையினார்; வெண்பொடிப் பூசியார்; விரிபுனல்
சடையினார்; உறைவு இடம் சக்கரப்பள்ளியே.

[1]
தண்வயல் புடை அணி சக்கரப்பள்ளி எம்
கண் நுதலவன் அடி, கழுமல வள நகர்
நண்ணிய செந்தமிழ் ஞானசம்பந்தன் சொல்
பண்ணிய இவை சொல, பறையும், மெய்ப் பாவமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.016  
பால் உந்து உறு திரள்   பண் - நட்டபாடை   (திருப்புள்ளமங்கை பசுபதிநாயகர் பால்வளைநாயகியம்மை (எ) பல்வளைநாயகியம்மை)

பால் உந்து உறு திரள் ஆயின பரமன், பிரமன் தான்
போலும் திறலவர் வாழ்தரு பொழில் சூழ் புள மங்கை,
காலன் திறல் அறச் சாடிய கடவுள் இடம் கருதில்,
ஆலந்துறை தொழுவார் தமை அடையா, வினை தானே.

[1]
பொந்தின் இடைத் தேன் ஊறிய பொழில் சூழ் புளமங்கை
அம் தண்புனல் வரு காவிரி ஆலந்துறை அரனைக்
கந்தம் மலி கமழ் காழியுள் கலை ஞானசம்பந்தன்
சந்தம் மலி பாடல் சொலி, ஆட, தவம் ஆமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.057  
பெண் அமரும் திருமேனி உடையீர்!   பண் - காந்தாரம்   (திருநல்லூர் பெரியாண்டேசுவரர் திரிபுரசுந்தரியம்மை)

பெண் அமரும் திருமேனி உடையீர்! பிறங்கு சடை தாழப்
பண் அமரும் நால்மறையே பாடி ஆடல் பயில்கின்றீர்!
திண் அமரும் பைம்பொழிலும் வயலும் சூழ்ந்த திரு
நல்லூர்,
மண் அமரும் கோயிலே கோயில் ஆக மகிழ்ந்தீரே.

[1]
கொந்து அணவும் பொழில் புடை சூழ் கொச்சை மேவு
&குலவேந்தன்
செந்தமிழின் சம்பந்தன் சிறை வண் புனல் சூழ் திரு
நல்லூர்,
பந்து அணவும் மெல்விரலாள் பங்கன்தன்னைப் பயில் பாடல்
சிந்தனையால் உரை செய்வார், சிவலோகம் சேர்ந்து இருப்பாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.086  
கொட்டும் பறை சீரால் குழும,   பண் - குறிஞ்சி   (திருநல்லூர் பெரியாண்டேசுவரர் திரிபுரசுந்தரியம்மை)

கொட்டும் பறை சீரால் குழும, அனல் ஏந்தி,
நட்டம் பயின்று ஆடும் நல்லூர்ப் பெருமானை
முட்டு இன்று இருபோதும், முனியாது எழுந்து, அன்பு-
பட்ட மனத்தார்கள் அறியார், பாவமே.

[1]
தண்ணம்புனல் காழி ஞானசம்பந்தன்,
நண்ணும் புனல் வேலி நல்லூர்ப் பெருமானை,
வண்ணம் புனை மாலை வைகல் ஏத்துவார்
விண்ணும் நிலனும் ஆய் விளங்கும் புகழாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.083  
வண்டு இரிய விண்ட மலர்   பண் - சாதாரி   (திருநல்லூர் பெரியாண்டேசுவரர் திரிபுரசுந்தரியம்மை)

வண்டு இரிய விண்ட மலர் மல்கு சடை தாழ, விடை ஏறி,
பண்டு எரி கை கொண்ட பரமன் பதி அது என்பர் அதன் அயலே
நண்டு இரிய, நாரை இரை தேர, வரைமேல் அருவி முத்தம்
தெண்திரைகள் மோத, விரி போது கமழும் திரு நலூரே.

[1]
திரைகள் இருகரையும் வரு பொன்னி நிலவும் திரு நலூர்மேல்
பரசு தரு பாணியை, நலம் திகழ் செய் தோணிபுர நாதன்-
உரைசெய் தமிழ் ஞானசம்பந்தன்-இசை மாலை மொழிவார், போய்,
விரை செய் மலர் தூவ, விதி பேணு கதிபேறு
பெறுவாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.046  
முத்து இலங்கு முறுவல்(ல்) உமை   பண் - கௌசிகம்   (திருக்கருகாவூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)

முத்து இலங்கு முறுவல்(ல்) உமை அஞ்சவே,
மத்தயானை மறுக(வ்), உரி வாங்கி, அக்
கத்தை போர்த்த கடவுள் கருகாவூர் எம்
அத்தர்; வண்ணம்(ம்) அழலும்(ம்) அழல்வண்ணமே.

[1]
கலவமஞ்ஞை உலவும் கருகாவூ
நிலவு பாடல் உடையான் தன நீள்கழல்
குலவு ஞானசம்பந்தன் செந்தமிழ்
சொல வலார் அவர் தொல்வினை தீருமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.035  
முன்னை நால் மறை அவை   பண் - கொல்லி   (திருத்தென்குடித்திட்டை பசுபதீசுவரர் உலகநாயகியம்மை)

முன்னை நால் மறை அவை முறை முறை, குறையொடும்,
தன்ன தாள் தொழுது எழ நின்றவன் தன் இடம்
மன்னு மா காவிரி வந்து அடி வருட, நல்
செந்நெல் ஆர் வளவயல்-தென்குடித்திட்டையே.

[1]
தேன் நல் ஆர் சோலை சூழ் தென்குடித்திட்டையை,
கானல் ஆர் கடிபொழில் சூழ்தரும் காழியுள
ஞானம் ஆர் ஞானசம்பந்தன செந்தமிழ்
பால் நல் ஆர் மொழி வலார்க்கு, இல்லை ஆம்,
பாவமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.082  
கொம்பு இரிய வண்டு உலவு   பண் - சாதாரி   (திருஅவளிவணல்லூர் சாட்சிநாயகர் சவுந்தரநாயகியம்மை)

கொம்பு இரிய வண்டு உலவு கொன்றை, புரிநூலொடு குலாவி,
தம் பரிசினோடு சுடுநீறு தடவந்து, இடபம் ஏறி,
கம்பு அரிய செம்பொன் நெடுமாட மதில், கல்வரை வில் ஆக,
அம்பு எரிய எய்த பெருமான் உறைவது அவளிவணலூரே.

[1]
ஆன மொழி ஆன திறலோர் பரவும் அவளி வணலூர் மேல்,
போன மொழி நல் மொழிகள் ஆய புகழ் தோணிபுர ஊரன்-
ஞான மொழிமாலை பல நாடு புகழ் ஞானசம்பந்தன்-
தேன மொழிமாலை புகழ்வார், துயர்கள் தீயது இலர், தாமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.104  
விண் கொண்ட தூ மதி   பண் - பழம்பஞ்சுரம்   (பரிதிநியமம் (பருத்தியப்பர்கோவில்) பருதியப்பர் மங்களநாயகியம்மை)

விண் கொண்ட தூ மதி சூடி நீடு விரி புன்சடை தாழ,
பெண் கொண்ட மார்பில் வெண்நீறு பூசி, பேண் ஆர் பலி தேர்ந்து,
கண் கொண்ட சாயலொடு ஏர் கவர்ந்த கள்வர்க்கு இடம்போலும்
பண் கொண்ட வண்டு இனம் பாடி ஆடும் பரிதி(ந்) நியமமே.

[1]
பை அரவம் விரி காந்தள் விம்மு பரிதி(ந்) நியமத்துத்
தையல் ஒர்பாகம் அமர்ந்தவனைத் தமிழ் ஞானசம்பந்தன்
பொய் இலி மாலை புனைந்த பத்தும் பரவிப் புகழ்ந்து ஏத்த,
ஐயுறவு இல்லை, பிறப்பு அறுத்தல்; அவலம் அடையாவே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.008  
புண்ணியர், பூதியர், பூத நாதர்,   பண் - நட்டபாடை   (திருஆவூர்ப்பசுபதீச்சுரம் (ஆவூர்) பசுபதீச்சுரர் மங்களநாயகியம்மை)

புண்ணியர், பூதியர், பூத நாதர், புடைபடுவார் தம் மனத்தார், திங்கள்
கண்ணியர்! என்று என்று காதலாளர் கைதொழுது ஏத்த, இருந்த ஊர் ஆம்
விண் உயர் மாளிகை மாட வீதி விரை கமழ் சோலை சுலாவி, எங்கும்
பண் இயல் பாடல் அறாத ஆவூர்ப் பசுபதியீச்சுரம் பாடு, நாவே!

[1]
எண் திசையாரும் வணங்கி ஏத்தும் எம்பெருமானை, எழில் கொள் ஆவூர்ப்
பண்டு உரியார் சிலர் தொண்டர் போற்றும் பசுபதியீச்சுரத்து ஆதிதன்மேல்,
கண்டல்கள் மிண்டிய கானல் காழிக் கவுணியன்- ஞானசம்பந்தன்-சொன்ன
கொண்டு, இனிதா இசை பாடி ஆடிக் கூடுமவர் உடையார்கள், வானே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.002  
விண்டு எலாம் மலர விரை   பண் - இந்தளம்   (திருவலஞ்சுழி காப்பகத்தீசுவரர் மங்களநாயகியம்மை)

விண்டு எலாம் மலர விரை நாறு தண் தேன் விம்மி,
வண்டுஎலாம் நசையால் இசை பாடும் வலஞ்சுழி,
தொண்டுஎலாம் பரவும் சுடர் போல் ஒளியீர்! சொலீர்
பண்டுஎலாம் பலி தேர்ந்து ஒலிபாடல் பயின்றதே?

[1]
வீடும் ஞானமும் வேண்டுதிரேல், விரதங்களால்
வாடின் ஞானம் என் ஆவதும்? எந்தை வலஞ்சுழி
நாடி, ஞானசம்பந்தன செந்தமிழ்கொண்டு இசை
பாடு ஞானம் வல்லார், அடி சேர்வது ஞானமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.106  
என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே!   பண் - நட்டராகம்   (திருவலஞ்சுழி சித்தீசநாதர் பெரியநாயகியம்மை)

என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே! இருங்கடல்
வையத்து
முன்னம் நீ புரி நல்வினைப் பயன் இடை,
முழுமணித்தரளங்கள்
மன்னு காவிரி சூழ் திரு வலஞ்சுழி வாணனை, வாய் ஆரப்
பன்னி, ஆதரித்து ஏத்தியும் பாடியும், வழிபடும் அதனாலே.

[1]
மாது ஒர் கூறனை, வலஞ்சுழி மருவிய மருந்தினை, வயல்
காழி
நாதன் வேதியன், ஞானசம்பந்தன் வாய் நவிற்றிய
தமிழ்மாலை
ஆதரித்து, இசை கற்று வல்லார், சொலக் கேட்டு உகந்தவர்
தம்மை
வாதியா வினை; மறுமைக்கும் இம்மைக்கும் வருத்தம் வந்து
அடையாவே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.106  
பள்ளம் அது ஆய படர்   பண் - பழம்பஞ்சுரம்   (திருவலஞ்சுழி காப்பகத்தீசுவரர் மங்களநாயகியம்மை)

பள்ளம் அது ஆய படர் சடை மேல் பயிலும் திரைக் கங்கை
வெள்ளம் அது ஆர விரும்பி நின்ற விகிர்தன், விடை ஏறும்
வள்ளல் வலஞ்சுழிவாணன் என்று மருவி நினைந்து ஏத்தி,
உள்ளம் உருக, உணருமின்கள்! உறு நோய் அடையாவே.

[1]
வாழி எம்மான், எனக்கு எந்தை, மேய வலஞ்சுழி மா நகர்மேல்,
காழியுள் ஞானசம்பந்தன் சொன்ன கருத்தின் தமிழ்மாலை,
ஆழி இவ் வையகத்து ஏத்த வல்லார் அவர்க்கும் தமருக்கும்
ஊழி ஒரு பெரும் இன்பம் ஓர்க்கும்; உருவும் உயர்வு ஆமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.073  
பாடல் மறை, சூடல் மதி,   பண் - சாதாரி   (திருப்பட்டீச்சரம் பட்டீச்சரநாதர் பல்வளைநாயகியம்மை)

பாடல் மறை, சூடல் மதி, பல்வளை ஒர்பாகம் மதில் மூன்று ஒர் கணையால்
கூட எரியூட்டி, எழில் காட்டி, நிழல் கூட்டு பொழில் சூழ் பழைசையுள்
மாட மழபாடி உறை பட்டிசுரம் மேய, கடி கட்டு அரவினார்
வேடம் நிலை கொண்டவரை வீடுநெறி காட்டி, வினை வீடுமவரே.

[1]
மந்தம் மலி சோலை மழபாடி நகர் நீடு பழையாறை அதனுள்
பந்தம் உயர் வீடு நல பட்டிசுரம் மேய படர் புன்சடையனை,
அம் தண் மறையோர் இனிது வாழ் புகலி ஞானசம்பந்தன் அணி ஆர்
செந்தமிழ்கள் கொண்டு இனிது செப்ப வல தொண்டர் வினை
நிற்பது இலவே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.036  
சீர் ஆர் கழலே தொழுவீர்!   பண் - இந்தளம்   (திருஇரும்பூளை (ஆலங்குடி) காசியாரண்ணியேசுவரர் ஏலவார்குழலம்மை)

சீர் ஆர் கழலே தொழுவீர்! இது செப்பீர்
வார் ஆர் முலை மங்கையொடும் உடன் ஆகி,
ஏர் ஆர் இரும்பூளை இடம்கொண்ட ஈசன்
கார் ஆர் கடல்நஞ்சு அமுதுஉண்ட கருத்தே?

[1]
எந்தை இரும்பூளை இடம்கொண்ட ஈசன்,
சந்தம் பயில் சண்பையுள் ஞானசம்பந்தன்
செந்தண்தமிழ் செப்பிய பத்துஇவை வல்லார்,
பந்தம் அறுத்து ஓங்குவர், பான்மையினாலே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.030  
பைத்த பாம்போடு, அரைக் கோவணம்,   பண் - கொல்லி   (திருஅரதைப்பெரும்பாழி (அரித்துவாரமங்கலம்) பரதேசுவரர் அலங்காரநாயகியம்மை)

பைத்த பாம்போடு, அரைக் கோவணம், பாய் புலி,
மொய்த்த பேய்கள் முழக்கம் முதுகாட்டு இடை,
நித்தம் ஆக(ந்) நடம் ஆடி, வெண் நீறு அணி
பித்தர் கோயில்(ல்) அரதைப் பெரும்பாழியே.

[1]
நீரின் ஆர் புன்சடை நிமலனுக்கு இடம் என,
பாரினார் பரவு அரதைப் பெரும்பாழியை,
சீரின் ஆர் காழியுள் ஞானசம்பந்தன் செய்
ஏரின் ஆர் தமிழ் வல்லார்க்கு இல்லை ஆம், பாவமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.086  
முறி உறு நிறம் மல்கு   பண் - சாதாரி   (திருச்சேறை (உடையார்கோவில்) சென்னெறியப்பர் ஞானவல்லியம்மை)

முறி உறு நிறம் மல்கு முகிழ்முலை மலைமகள் வெருவ, முன்,
வெறி உறு மதகரி அதள் பட உரிசெய்த விறலினர்;
நறி உறும் இதழியின் மலரொடு, நதி, மதி, நகுதலை,
செறி உறு சடைமுடி அடிகள் தம் வள நகர் சேறையே.

[1]
கற்ற நல்மறை பயில் அடியவர் அடி தொழு கவின் உறு
சிற்றிடையவளொடும் இடம் என உறைவது ஒர் சேறைமேல்,
குற்றம் இல் புகலியுள் இகல் அறு ஞானசம்பந்தன
சொல்,-தகவு உற மொழிபவர் அழிவு இலர்; துயர் தீருமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.046  
பால் ஊரும் மலைப்பாம்பும் பனிமதியும்   பண் - சீகாமரம்   (திருநாலூர்மயானம் பலாசவனேசுவரர் பெரியநாயகியம்மை)

பால் ஊரும் மலைப்பாம்பும் பனிமதியும் மத்தமும்
மேல் ஊரும் செஞ்சடையான், வெண்நூல் சேர் மார்பினான்,
நாலூர் மயானத்து நம்பான் தன் அடி நினைந்து,
மால் ஊரும் சிந்தையர்பால் வந்து ஊரா, மறுபிறப்பே.

[1]
ஞாலம் புகழ் காழி ஞானசம்பந்தன்தான்
நாலுமறை ஓதும் நாலூர்மயானத்தைச்
சீலம் புகழால் சிறந்து ஏத்த வல்லாருக்கு
ஏலும், புகழ்; வானத்து இன்பு ஆய் இருப்பாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.022  
திகழும் திருமாலொடு நான்முகனும்
புகழும் பெருமான்;
  பண் - இந்தளம்   (திருக்குடவாயில் கோணேசுவரர் பெரியநாயகியம்மை)

திகழும் திருமாலொடு நான்முகனும்
புகழும் பெருமான்; அடியார் புகல,
மகிழும் பெருமான் குடவாயில் மன்னி
நிகழும் பெருங்கோயில் நிலாயவனே.

[1]
கடுவாய் மலி நீர் குடவாயில்தனில்
நெடு மா பெருங்கோயில் நிலாயவனை,
தடம் ஆர் புகலித் தமிழ் ஆர் விரகன்,
வடம் ஆர் தமிழ் வல்லவர் நல்லவரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.058  
கலை வாழும் அம் கையீர்!   பண் - காந்தாரம்   (திருக்குடவாயில் கோணேசுவரர் பெரியநாயகியம்மை)

கலை வாழும் அம் கையீர்! கொங்கை ஆரும் கருங்கூந்தல்
அலை வாழும் செஞ்சடையில், அரவும் பிறையும்
அமர்வித்தீர்!
குலைவாழை கமுகம் பொன்பவளம் பழுக்கும் குடவாயில்,
நிலை வாழும் கோயிலே கோயில் ஆக நின்றீரே.

[1]
நளிர் பூந் திரை மல்கு காழி ஞானசம்பந்தன்,
குளிர் பூங் குடவாயில் கோயில் மேய கோமானை,
ஒளிர்பூந்தமிழ் மாலை உரைத்த பாடல் இவை வல்லார்,
தளர்வு ஆனதாம் ஒழிய, தகு சீர் வானத்து இருப்பாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.029  
ஊர் உலாவு பலி கொண்டு,   பண் - தக்கராகம்   (திருநறையூர்ச்சித்தீச்சுரம் (திருநறையூர்) சித்தநாதேசர் அழகாம்பிகையம்மை)

ஊர் உலாவு பலி கொண்டு, உலகு ஏத்த,
நீர் உலாவும் நிமிர் புன் சடை அண்ணல்,
சீர் உலாவும் மறையோர் நறையூரில்,
சேரும் சித்தீச்சுரம் சென்று அடை நெஞ்சே!

[1]
மெய்த்து உலாவும் மறையோர் நறையூரில்
சித்தன் சித்தீச்சுரத்தை உயர் காழி
அத்தன் பாதம் அணி ஞானசம்பந்தன்
பத்தும் பாட, பறையும், பாவமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.071  
பிறை கொள் சடையர்; புலியின்   பண் - தக்கேசி   (திருநறையூர்ச்சித்தீச்சுரம் (திருநறையூர்) சித்தநாதேசர் அழகாம்பிகையம்மை)

பிறை கொள் சடையர்; புலியின் உரியர்; பேழ்வாய் நாகத்தர்;
கறை கொள் கண்டர்; கபாலம் ஏந்தும் கையர்; கங்காளர்
மறை கொள் கீதம் பாடச் சேடர் மனையில் மகிழ்வு எய்தி,
சிறை கொள் வண்டு தேன் ஆர் நறையூர்ச் சித்தீச்சுரத்தாரே.

[1]
குயில் ஆர் கோல மாதவிகள், குளிர் பூஞ்சுர புன்னை,
செயில் ஆர் பொய்கை, சேரும் நறையூர்ச் சித்தீச்சுரத்தாரை,
மயில் ஆர் சோலை சூழ்ந்த காழி மல்கு சம்பந்தன்,
பயில்வார்க்கு இனிய, பாடல் வல்லார் பாவம் நாசமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.087  
நேரியன் ஆகும்; அல்லன், ஒருபாலும்;   பண் - பியந்தைக்காந்தாரம்   (திருநறையூர்ச்சித்தீச்சுரம் (திருநறையூர்) சித்தநாதேசர் அழகாம்பிகையம்மை)

நேரியன் ஆகும்; அல்லன், ஒருபாலும்; மேனி அரியான்;
முன் ஆய ஒளியான்;
நீர் இயல், காலும் ஆகி, நிறை வானும் ஆகி, உறு தீயும்
ஆய நிமலன்
ஊர் இயல் பிச்சைப் பேணி, உலகங்கள் ஏத்த, நல்க
உண்டு, பண்டு, சுடலை,
நாரி ஓர் பாகம் ஆக நடம் ஆட வல்ல நறையூரில்
நம்பன் அவனே.

[1]
கானல் உலாவி ஓதம் எதிர் மல்கு காழி மிகு பந்தன்,
முந்தி உண
ஞானம் உலாவு சிந்தை அடி வைத்து உகந்த நறையூரில்
நம்பன் அவனை,
ஈனம் இலாத வண்ணம், இசையால் உரைத்த தமிழ் மாலை
பத்தும் நினைவார்
வானம் நிலாவ வல்லர்; நிலம் எங்கும் நின்று வழிபாடு
செய்யும், மிகவே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.063  
மின்னும் சடைமேல் இளவெண் திங்கள்   பண் - காந்தாரம்   (திருஅரிசிற்கரைப்புத்தூர் படிக்காசளித்தவீசுவரர் அழகம்மை)

மின்னும் சடைமேல் இளவெண் திங்கள் விளங்கவே,
துன்னும் கடல் நஞ்சு இருள் தோய் கண்டர் தொல் மூதூர்
அன்னம் படியும் புனல் ஆர் அரிசில் அலை கொண்டு,
பொன்னும் மணியும் பொரு தென் கரைமேல் புத்தூரே.

[1]
நறவம் கமழ் பூங் காழி ஞானசம்பந்தன்,
பொறி கொள் அரவம் பூண்டான் ஆண்ட புத்தூர்மேல்,
செறி வண்தமிழ் செய் மாலை செப்ப வல்லார்கள்,
அறவன் கழல் சேர்ந்து, அன்பொடு இன்பம் அடைவாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.021  
புவம், வளி, கனல், புனல்,   பண் - நட்டபாடை   (திருச்சிவபுரம் பிரமபுரிநாயகர் பெரியநாயகியம்மை)

புவம், வளி, கனல், புனல், புவி, கலை, உரை மறை, திரிகுணம், அமர் நெறி,
திவம் மலிதரு சுரர் முதலியர் திகழ்தரும் உயிர் அவை, அவைதம
பவம் மலி தொழில் அது நினைவொடு, பதும நல்மலர் அது மருவிய
சிவனது சிவபுரம் நினைபவர் செழு நிலனினில் நிலைபெறுவரே.

[1]
திகழ் சிவபுர நகர் மருவிய சிவன் அடி இணை பணி சிரபுர
நகர் இறை தமிழ் விரகனது உரை நலம் மலி ஒருபதும் நவில்பவர்,
நிகழ் குலம், நிலம், நிறை திரு, உரு, நிகர் இல கொடை, மிகு சய மகள்;
புகழ், புவி வளர் வழி, அடிமையின் மிகை புணர் தர, நலம் மிகுவரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.112  
இன்குரல் இசை கெழும் யாழ்   பண் - வியாழக்குறிஞ்சி   (திருச்சிவபுரம் பிரமபுரிநாயகர் பெரியநாயகியம்மை)

இன்குரல் இசை கெழும் யாழ் முரலத்
தன் கரம் மருவிய சதுரன் நகர்
பொன் கரை பொரு பழங்காவிரியின்
தென் கரை மருவிய சிவபுரமே.

[1]
சிவன் உறைதரு, சிவபுரநகரைக்
கவுணியர் குலபதி காழியர்கோன்-
தவம் மல்கு தமிழ் இவை சொல்ல வல்லார்
நவமொடு சிவகதி நண்ணுவரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.125  
கலை மலி அகல் அல்குல்   பண் - வியாழக்குறிஞ்சி   (திருச்சிவபுரம் பிரமபுரிநாயகர் பெரியநாயகியம்மை)

கலை மலி அகல் அல்குல் அரிவைதன் உருவினன்,
முலை மலிதரு திரு உருவம் அது உடையவன்,
சிலை மலி மதில் பொதி சிவபுரநகர் தொழ,
இலை, நலி வினை; இருமையும் இடர் கெடுமே.

[1]
புந்தியர் மறை நவில் புகலி மன் ஞானசம்-
பந்தன தமிழ்கொடு, சிவபுரநகர் உறை
எந்தையை உரைசெய்த இசை மொழிபவர், வினை
சிந்தி முன் உற, உயர்கதி பெறுவர்களே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.059  
அர விரி கோடல் நீடல்   பண் - பஞ்சமம்   (திருகுடமூக்கு (கும்பகோணம்) கும்பேசுவரர் மங்களநாயகியம்மை)

அர விரி கோடல் நீடல் அணி காவிரியாற்று அயலே,
மர விரி போது, மௌவல், மணமல்லிகை, கள் அவிழும்
குர, விரி சோலை சூழ்ந்த, குழகன், குடமூக்கு இடமா,
இர விரி திங்கள் சூடி இருந்தான்; அவன் எம் இறையே.

[1]
வெண்கொடி மாடம் ஓங்கு விறல் வெங்குரு நன் நகரான்-
நண்பொடு நின்ற சீரான், தமிழ் ஞானசம்பந்தன்-நல்ல
தண் குடமூக்கு அமர்ந்தான் அடி சேர் தமிழ் பத்தும் வல்லார்
விண் புடை மேல் உலகம் வியப்பு எய்துவர்; வீடு எளிதே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.072  
வார் ஆர் கொங்கை மாது   பண் - தக்கேசி   (திருக்குடந்தைக்காரோணம் (விஸ்வநாதர்கோவில்) சோமநாதர் தேனார்மொழியம்மை)

வார் ஆர் கொங்கை மாது ஓர் பாகம் ஆக, வார்சடை,
நீர் ஆர் கங்கை திங்கள் சூடி, நெற்றி ஒற்றைக்கண்,
கூர் ஆர் மழு ஒன்று ஏந்தி, அம் தண் குழகன்-குடமூக்கில்,
கார் ஆர் கண்டத்து எண்தோள் எந்தை, காரோணத்தாரே.

[1]
கரு ஆர் பொழில் சூழ்ந்து அழகு ஆர் செல்வக் காரோணத்தாரை,
திரு ஆர் செல்வம் மல்கு சண்பைத் திகழும் சம்பந்தன்
உரு ஆர் செஞ்சொல்மாலை இவைபத்து உரைப்பார், உலகத்துக்
கரு ஆர் இடும்பைப் பிறப்பு அது அறுத்து, கவலை கழிவாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.021  
நனவிலும் கனவிலும், நாளும், தன்   பண் - காந்தாரபஞ்சமம்   (திருக்கருக்குடி (மருதாந்தநல்லூர்) சற்குணலிங்கேசுவரர் சர்வாலங்கிரதமின்னம்மை)

நனவிலும் கனவிலும், நாளும், தன் ஒளி
நினைவிலும் எனக்கு வந்து எய்தும் நின்மலன்-
கனைகடல் வையகம் தொழு கருக்கு
அனல்-எரி ஆடும் எம் அடிகள்; காண்மினே!

[1]
கானலில் விரைமலர் விம்மு காழியான்,
வானவன் கருக்குடி மைந்தன் தன் ஒளி
ஆன, மெய்ஞ் ஞானசம்பந்தன், சொல்லிய
ஊனம் இல் மொழி வலார்க்கு உயரும், இன்பமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.119  
தழை கொள் சந்தும்(ம்), அகிலும்,   பண் - செவ்வழி   (திருநாகேச்சுரம் செண்பகாரணியேசுவரர் குன்றமுலைநாயகியம்மை)

தழை கொள் சந்தும்(ம்), அகிலும், மயில்பீலியும், சாதியின்
பழமும், உந்திப் புனல் பாய் பழங்காவிரித் தென்கரை,
நழுவு இல் வானோர் தொழ, நல்கு சீர் மல்கு நாகேச்சுரத்து
அழகர் பாதம் தொழுது ஏத்த வல்லார்க்கு அழகு ஆகுமே.

[1]
கந்தம் நாறும் புனல் காவிரித் தென்கரை, கண்ணுதல்
நந்தி சேரும் திரு நாகேச்சுரத்தின் மேல், ஞானசம்
பந்தன் நாவில் பனுவல்(ல்) இவைபத்தும் வல்லார்கள்,
போய்,
எந்தை ஈசன் இருக்கும்(ம்) உலகு எய்த வல்லார்களே

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.024  
பொன் ஏர்தரு மேனியனே! புரியும்
மின்
  பண் - இந்தளம்   (திருநாகேச்சுரம் செண்பகாரணியேசுவரர் குன்றமுலைநாயகியம்மை)

பொன் ஏர்தரு மேனியனே! புரியும்
மின் நேர் சடையாய்! விரை காவிரியின்
நன்நீர் வயல் நாகேச்சுரநகரின்
மன்னே! என, வல்வினை மாய்ந்து அறுமே.

[1]
கலம் ஆர் கடல் சூழ்தரு காழியர்கோன்
தலம் ஆர்தரு செந்தமிழின் விரகன்
நலம் ஆர்தரு நாகேச்சுரத்து அரனைச்
சொலல் மாலைகள் சொல்ல, நிலா, வினையே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.032  
ஓடே கலன்; உண்பதும் ஊர்   பண் - தக்கராகம்   (திருவிடைமருதூர் மருதீசர் நலமுலைநாயகியம்மை)

ஓடே கலன்; உண்பதும் ஊர் இடு பிச்சை;
காடே இடம் ஆவது; கல்லால் நிழல் கீழ்
வாடா முலை மங்கையும் தானும் மகிழ்ந்து,
ஈடா உறைகின்ற இடை மருது ஈதோ.

[1]
கண் ஆர் கமழ் காழியுள் ஞானசம்பந்தன்
எண் ஆர் புகழ் எந்தை இடைமருதின்மேல்
பண்ணோடு இசை பாடிய பத்தும் வல்லார்கள்
விண்ணோர் உலகத்தினில் வீற்றிருப்பாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.056  
பொங்கு நூல் மார்பினீர்! பூதப்படையினீர்!   பண் - காந்தாரம்   (திருவிடைமருதூர் மருதீசர் நலமுலைநாயகியம்மை)

பொங்கு நூல் மார்பினீர்! பூதப்படையினீர்! பூங் கங்கை
தங்கு செஞ்சடையினீர்! சாமவேதம் ஓதினீர்!
எங்கும் எழில் ஆர் மறையோர்கள் முறையால் ஏத்த,
இடைமருதில்,
மங்குல் தோய் கோயிலே கோயில் ஆக மகிழ்ந்தீரே.

[1]
கல்லின் மணி மாடக் கழுமலத்தார் காவலவன்
[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.096  
மன்னி ஊர் இறை; சென்னியார்,   பண் - குறிஞ்சி   (திருஅன்னியூர் (பொன்னூர்) ஆபத்சகாயர் பெரியநாயகியம்மை)

மன்னி ஊர் இறை; சென்னியார், பிறை
அன்னியூர் அமர் மன்னுசோதியே.

[1]
பூந்தராய்ப் பந்தன் ஆய்ந்த பாடலால்,
வேந்தன் அன்னியூர் சேர்ந்து, வாழ்மினே!

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.110  
மருந்து அவன், வானவர் தானவர்க்கும்
பெருந்தகை,
  பண் - வியாழக்குறிஞ்சி   (திருவிடைமருதூர் மருதீசர் நலமுலைநாயகியம்மை)

மருந்து அவன், வானவர் தானவர்க்கும்
பெருந்தகை, பிறவினொடு இறவும் ஆனான்,
அருந்தவ முனிவரொடு ஆல் நிழல் கீழ்
இருந்தவன், வள நகர் இடைமருதே.

[1]
இலை மலி பொழில் இடைமருது இறையை
நலம் மிகு ஞானசம்பந்தன் சொன்ன
பலம் மிகு தமிழ் இவைபத்தும் வல்லார்
உலகு உறு புகழினொடு ஓங்குவரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.121  
நடை மரு திரிபுரம் எரியுண   பண் - வியாழக்குறிஞ்சி   (திருவிடைமருதூர் மருதீசர் நலமுலைநாயகியம்மை)

நடை மரு திரிபுரம் எரியுண நகை செய்த
படை மரு தழல் எழ மழு வல பகவன்,
புடை மருது இள முகில் வளம் அமர் பொதுளிய,
இடை மருது அடைய, நம் இடர் கெடல் எளிதே.

[1]
தட மலி புகலியர் தமிழ் கெழு விரகினன்,
இடம் மலி பொழில் இடைமருதினை இசை செய்த,
படம் மலி, தமிழ் இவை பரவ வல்லவர் வினை
கெட, மலி புகழொடு கிளர் ஒளியினரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.122  
விரிதரு புலிஉரி விரவிய அரையினர்,
திரிதரும்
  பண் - வியாழக்குறிஞ்சி   (திருவிடைமருதூர் மருதீசர் நலமுலைநாயகியம்மை)

விரிதரு புலிஉரி விரவிய அரையினர்,
திரிதரும் எயில் அவை புனை கணையினில் எய்த
எரிதரு சடையினர், இடைமருது அடைவு உனல்
புரிதரும் மன்னவர் புகழ் மிக உளதே.

[1]
பொருகடல் அடைதரு புகலியர் தமிழொடு
விரகினன், விரிதரு பொழில் இடைமருதினைப்
பரவிய ஒருபது பயில வல்லவர் இடர்
விரவிலர், வினையொடு; வியன் உலகு உறவே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.035  
பரவக் கெடும், வல்வினை பாரிடம்   பண் - இந்தளம்   (திருத்தென்குரங்காடுதுறை குலைவணங்குநாதர் அழகுசடைமுடியம்மை)

பரவக் கெடும், வல்வினை பாரிடம் சூழ,
இரவில் புறங்காட்டுஇடை நின்று எரிஆடி;
அரவச் சடை அந்தணன்; மேய, அழகு ஆர்
குரவப்பொழில் சூழ், குரங்காடுதுறையே.

[1]
நல்லார் பயில் காழியுள் ஞானசம்பந்தன்,
கொல் ஏறு உடையான் குரங்காடுதுறைமேல்
சொல் ஆர் தமிழ்மாலைபத்தும், தொழுது ஏத்த
வல்லார் அவர், வானவரோடு உறைவாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.004  
இடரினும், தளரினும், எனது உறு   பண் - காந்தாரபஞ்சமம்   (திருவாவடுதுறை மாசிலாமணியீசுவரர் ஒப்பிலாமுலையம்மை)

இடரினும், தளரினும், எனது உறு நோய்
தொடரினும், உன கழல் தொழுது எழுவேன்;
கடல்தனில் அமுதொடு கலந்த நஞ்சை
மிடறினில் அடக்கிய வேதியனே!
இதுவோ எமை ஆளும் ஆறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்,
அதுவோ உனது இன் அருள்? ஆவடுதுறை அரனே!

[1]
அலை புனல் ஆவடுதுறை அமர்ந்த
இலை நுனை வேல்படை எம் இறையை,
நலம் மிகு ஞானசம்பந்தன் சொன்ன
விலை உடை அருந்தமிழ்மாலை வல்லார்,
வினை ஆயின நீங்கிப் போய், விண்ணவர் வியன் உலகம்
நிலை ஆக முன் ஏறுவர்; நிலம்மிசை நிலை இலரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.013  
நீற்றானை, நீள்சடைமேல் நிறைவு உள்ளது   பண் - இந்தளம்   (திருக்கோழம்பம் கோகுலேசுவரர் சவுந்தரியம்மை)

நீற்றானை, நீள்சடைமேல் நிறைவு உள்ளது ஓர்
ஆற்றானை, அழகு அமர் மென்முலையாளை ஓர்
கூற்றானை, குளிர் பொழில் கோழம்பம் மேவிய
ஏற்றானை, ஏத்துமின், நும் இடர் ஏகவே!

[1]
தண்புனல் ஓங்கு தண் அம் தராய் மா நகர்
நண்பு உடை ஞானசம்பந்தன், நம்பான் உறை
விண் பொழில் கோழம்பம் மேவிய பத்துஇவை
பண் கொளப் பாட வல்லார்க்கு இல்லை, பாவமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.018  
துள மதி உடை மறி   பண் - காந்தாரபஞ்சமம்   (திருவைகல்மாடக்கோயில் வைகனாதேசுவரர் வைகலம்பிகையம்மை)

துள மதி உடை மறி தோன்று கையினர்
இளமதி அணி சடை எந்தையார், இடம்
உளம் மதி உடையவர் வைகல் ஓங்கிய,
வள மதி தடவிய, மாடக்கோயிலே.

[1]
மைந்தனது இடம் வைகல் மாடக்கோயிலை,
சந்து அமர் பொழில் அணி சண்பை ஞானசம்-
பந்தன தமிழ் கெழு பாடல் பத்து இவை
சிந்தை செய்பவர், சிவலோகம் சேர்வரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.085  
கல்லால் நிழல் மேய கறை   பண் - குறிஞ்சி   (திருநல்லம் உமாமகேசுவரர் மங்களநாயகியம்மை)

கல்லால் நிழல் மேய கறை சேர் கண்டா! என்று
எல்லாமொழியாலும் இமையோர் தொழுது ஏத்த,
வில்லால் அரண்மூன்றும் வெந்து விழ எய்த
நல்லான்; நமை ஆள்வான்-நல்லம் நகரானே.

[1]
நலம் ஆர் மறையோர் வாழ் நல்லம் நகர் மேய
கொலை சேர் மழுவானை, கொச்சை அமர்ந்து ஓங்கு
தலம் ஆர் தமிழ் ஞானசம்பந்தன், சொன்ன
கலைகள் இவை வல்லார் கவலை கழிவாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.097  
திடம் மலி மதில் அணி   பண் - சாதாரி   (திருச்சிறுகுடி மங்களேசுவரர் மங்களநாயகியம்மை)

திடம் மலி மதில் அணி சிறுகுடி மேவிய
படம் மலி அரவு உடையீரே;
படம் மலி அரவு உடையீர்! உமைப் பணிபவர்
அடைவதும், அமருலகு அதுவே.

[1]
தேன் அமர் பொழில் அணி சிறுகுடி மேவிய
மான் அமர் கரம் உடையீரே;
மான் அமர் கரம் உடையீர்! உமை வாழ்த்திய
ஞானசம்பந்தன தமிழே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.020  
தொழும் ஆறு வல்லார், துயர்   பண் - இந்தளம்   (திருஅழுந்தூர் வேதபுரீசுவரர் சவுந்தராம்பிகையம்மை)

தொழும் ஆறு வல்லார், துயர் தீர நினைந்து
எழும் ஆறு வல்லார், இசை பாட விம்மி
அழும் ஆறு வல்லார், அழுந்தை மறையோர்
வழிபாடு செய் மா மடம் மன்னினையே.

[1]
அரு ஞானம் வல்லார் அழுந்தை மறையோர்
பெரு ஞானம் உடைப் பெருமான் அவனைத்
திருஞானசம்பந்தன செந்தமிழ்கள்,
உருஞானம் உண்டுஆம், உணர்ந்தார்தமக்கே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.098  
வரைத்தலைப் பசும் பொனோடு அருங்   பண் - நட்டராகம்   (திருத்துருத்தி வேதேசுவரர் முகிழாம்பிகையம்மை)

வரைத்தலைப் பசும் பொனோடு அருங் கலங்கள் உந்தி
வந்து
இரைத்து, அலைச் சுமந்து கொண்டு எறிந்து, இலங்கு
காவிரிக்
கரைத்தலைத் துருத்தி புக்கு இருப்பதே கருத்தினாய்!
உரைத்தலைப் பொலிந்த உனக்கு உணர்த்தும் ஆறு
வல்லமே?

[1]
கற்று முற்றினார் தொழும் கழுமலத்து அருந்தமிழ்
சுற்றும் முற்றும் ஆயினான் அவன் பகர்ந்த சொற்களால்,
பெற்றம் ஒன்று உயர்த்தவன் பெருந் துருத்தி பேணவே,
குற்றம் முற்றும் இன்மையின், குணங்கள் வந்து கூடுமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.070  
ஏன எயிறு, ஆடு அரவொடு,   பண் - சாதாரி   (திருமயிலாடுதுறை மாயூரநாதர் அஞ்சநாயகியம்மை)

ஏன எயிறு, ஆடு அரவொடு, என்பு, வரி ஆமை, இவை
பூண்டு, இளைஞராய்,
கான வரி நீடு உழுவை அதள் உடைய படர் சடையர் காணி
எனல் ஆம்
ஆன புகழ் வேதியர்கள் ஆகுதியின் மீது புகை போகி, அழகு
ஆர்
வானம் உறு சோலை மிசை மாசு பட மூசும்
மயிலாடுதுறையே.

[1]
நிணம் தரு மயானம், நிலம் வானம் மதியாதது ஒரு சூலமொடு பேய்க்-
கணம் தொழு கபாலி கழல் ஏத்தி, மிக வாய்த்தது ஒரு
காதன்மையினால்,
மணம் தண் மலி காழி மறை ஞானசம்பந்தன்,
மயிலாடுதுறையைப்
புணர்ந்த தமிழ்பத்தும் இசையால் உரைசெய்வார், பெறுவர்,
பொன்னுலகமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.038  
கரவு இன்றி நல்மாமலர் கொண்டே
இரவும்
  பண் - தக்கராகம்   (திருமயிலாடுதுறை மாயூரநாதர் அஞ்சநாயகியம்மை)

கரவு இன்றி நல்மாமலர் கொண்டே
இரவும் பகலும் தொழுவார்கள்
சிரம் ஒன்றிய செஞ்சடையான் வாழ்
வர மா மயிலாடுதுறையே.

[1]
நயர் காழியுள் ஞானசம்பந்தன்
மயர் தீர் மயிலாடுதுறைமேல்
செயலால் உரை செய்தன பத்தும்
உயர்வு ஆம், இவை உற்று உணர்வார்க்கே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.025  
மரு ஆர் குழலிமாது ஓர்   பண் - தக்கராகம்   (திருச்செம்பொன்பள்ளி சொர்னபுரீசர் சுகந்தவனநாயகியம்மை)

மரு ஆர் குழலிமாது ஓர் பாகம் ஆய்,
திரு ஆர் செம்பொன் பள்ளி மேவிய,
கரு ஆர் கண்டத்து, ஈசன் கழல்களை
மருவாதவர் மேல் மன்னும், பாவமே.

[1]
நறவு ஆர் புகலி ஞானசம்பந்தன்
செறு ஆர் செம்பொன் பள்ளி மேயானைப்
பெறும் ஆறு இசையால் பாடல் இவைபத்தும்
உறுமா சொல்ல, ஓங்கி வாழ்வரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.078  
ஒளிர் இளம்பிறை சென்னிமேல் உடையர்,   பண் - காந்தாரம்   (திருவிளநகர் துறைகாட்டும்வள்ளநாதர் தோழியம்மை)

ஒளிர் இளம்பிறை சென்னிமேல் உடையர், கோவண
ஆடையர்,
குளிர் இள(ம்) மழை தவழ் பொழில் கோல நீர் மல்கு
காவிரி
நளிர் இளம்புனல் வார் துறை நங்கை கங்கையை
நண்ணினார்,
மிளிர் இளம் பொறி அரவினார், மேயது விளநகர் அதே.

[1]
மென் சிறைவண்டு யாழ்முரல் விளநகர்த் துறை மேவிய
நன் பிறை நுதல் அண்ணலைச் சண்பை ஞானசம்பந்தன்,
சீர்
இன்பு உறும் தமிழால் சொன்ன ஏத்துவார், வினை நீங்கிப்
போய்,
துன்பு உறும் துயரம்(ம்) இலாத் தூநெறி பெறுவார்களே

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.134  
கருத்தன், கடவுள், கனல் ஏந்தி   பண் - மேகராகக்குறிஞ்சி   (திருப்பறியலூர் (பரசலூர்) திருவீரட்டம் )

கருத்தன், கடவுள், கனல் ஏந்தி ஆடும்
நிருத்தன், சடைமேல் நிரம்பா மதியன்-
திருத்தம் உடையார் திருப் பறியலூரில்,
விருத்தன் எனத் தகும் வீரட்டத்தானே.

[1]
நறு நீர் உகும் காழி ஞானசம்பந்தன்,
வெறி நீர்த் திருப் பறியல் வீரட்டத்தானை,
பொறி நீடு அரவன், புனை பாடல் வல்லார்க்கு
அறும், நீடு அவலம்; அறும், பிறப்புத்தானே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.066  
வண்டு இரைக்கும் மலர்க்கொன்றை விரி   பண் - பஞ்சமம்   (திருவேட்டக்குடி திருமேனியழகீசுவரர் சாந்தநாயகியம்மை)

வண்டு இரைக்கும் மலர்க்கொன்றை விரி சடைமேல் வரி அரவம்
கண்டு இரைக்கும் பிறைச் சென்னிக் காபாலி கனை கழல்கள்
தொண்டு இரைத்துத் தொழுது இறைஞ்ச, துளங்கு ஒளி நீர்ச் சுடர்ப் பவளம்
தெண்திரை(க்)கள் கொணர்ந்து எறியும் திரு வேட்டக் குடியாரே.

[1]
தெண்திரை சேர் வயல் உடுத்த திரு வேட்டக்குடியாரை,
தண்டலை சூழ் கலிக் காழித் தமிழ் ஞானசம்பந்தன்
ஒண் தமிழ் நூல் இவை பத்தும் உணர்ந்து ஏத்த வல்லார், போய்,
உண்டு உடுப்பு இல் வானவரோடு, உயர்வானத்து
இருப்பாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.136  
மாதர் மடப்பிடியும் மட அன்னமும்   பண் - யாழ்முரி   (தருமபுரம் திருதருமபுரம் பண் - யாழ்மூரி)

மாதர் மடப்பிடியும் மட அன்னமும் அன்னது ஓர்
நடை உடை மலைமகள் துணை என மகிழ்வர்,
த இனப்படை நின்று இசை பாடவும் ஆடுவர்,
அவர் படர் சடை நெடுமுடியது ஒர் புனலர்,
வேதமொடு ஏழிசை பாடுவர் ஆழ்கடல் வெண்திரை
இரை நுரை கரை பொருது, விம்மி நின்று, அயலே
தாது அவிழ் புன்னை தயங்கு மலர்ச் சிறைவண்டு அறை
எழில் பொழில் குயில் பயில் தருமபுரம்பதியே.

[1]
பொன் நெடு நல் மணி மாளிகை சூழ் விழவம் மலீ
பொரூஉ புனல் திரூஉ அமர் புகலி என்று உலகில்
தன்னொடு நேர் பிற இல் பதி ஞானசம்பந்தனது
செந்தமிழ்த் தடங்கல்-தருமபுரம்பதியைப்
பின் நெடுவார் சடையில் பிறையும் அரவும் உடையவன்
பிணைதுணை கழல்கள் பேணுதல் உரியார்,
இன் நெடுநன் உலகு எய்துவர்; எய்திய போகமும்
உறுவர்கள்; இடர், பிணி, துயர், அணைவு இலரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.049  
போகம் ஆர்த்த பூண் முலையாள்   பண் - பழந்தக்கராகம்   (திருநள்ளாறு தெர்ப்பாரணியர் போகமார்த்தபூண்முலையம்மை)

போகம் ஆர்த்த பூண் முலையாள் தன்னோடும் பொன் அகலம்
பாகம் ஆர்த்த பைங்கண் வெள் ஏற்று அண்ணல், பரமேட்டி,
ஆகம் ஆர்த்த தோல் உடையன், கோவண ஆடையின் மேல்
நாகம் ஆர்த்த நம்பெருமான், மேயது நள்ளாறே.

[1]
தண்புனலும் வெண்பிறையும் தாங்கிய தாழ்சடையன்,
நண்பு நல்லார் மல்கு காழி ஞானசம்பந்தன், நல்ல
பண்பு நள்ளாறு ஏத்து பாடல் பத்தும் இவை வல்லார்
உண்பு நீங்கி, வானவரோடு உலகில் உறைவாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.052  
கருந்தடங்கணின் மாதரார் இசை செய்ய,   பண் - சீகாமரம்   (திருக்கோட்டாறு ஐராபதேசுவரர் வண்டமர்பூங்குழலம்மை)

கருந்தடங்கணின் மாதரார் இசை செய்ய, கார்
அதிர்கின்ற பூம்பொழில்
குருந்தம் மாதவியின் விரை மல்கு கோட்டாற்றில்
இருந்த எம்பெருமானை, உள்கி, இணை அடி தொழுது ஏத்தும் மாந்தர்கள்
வருந்தும் ஆறு அறியார்; நெறி சேர்வர், வான் ஊடே

[1]
விடை ஆர் கொடியான் மேவி உறையும் வெண் காட்டை,
கடை ஆர் மாடம் கலந்து தோன்றும் காழியான்
நடை ஆர் இன்சொல் ஞானசம்பந்தன் தமிழ் வல்லார்க்கு
அடையா, வினைகள்; அமரலோகம் ஆள்வாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.012  
வேதியன், விண்ணவர் ஏத்த நின்றான்,   பண் - காந்தாரபஞ்சமம்   (திருக்கோட்டாறு ஐராபதேசுவரர் வண்டமர்பூங்குழலம்மை)

வேதியன், விண்ணவர் ஏத்த நின்றான், விளங்கும் மறை
ஓதிய ஒண்பொருள் ஆகி நின்றான், ஒளி ஆர் கிளி
கோதிய தண்பொழில் சூழ்ந்து அழகு ஆர் திருக்கோட்டாற்றுள்
ஆதியையே நினைந்து ஏத்த வல்லார்க்கு அல்லல் இல்லையே.

[1]
கொடி உயர் மால்விடை ஊர்தியினான் திருக்கோட்டாற்றுள்
அடி கழல் ஆர்க்க நின்று ஆட வல்ல அருளாளனை,
கடி கமழும் பொழில் காழியுள் ஞானசம்பந்தன் சொல்-
படி, இவை பாடி நின்று ஆட வல்லார்க்கு இல்லை, பாவமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.058  
திரு மலர்க்கொன்றை மாலை திளைக்கும்   பண் - பஞ்சமம்   (திருச்சாத்தமங்கை அயவந்தீசுவரர் மலர்க்கணம்பிகையம்மை)

திரு மலர்க்கொன்றை மாலை திளைக்கும் மதி சென்னி வைத்தீர்
இரு மலர்க் கண்ணி தன்னோடு உடன் ஆவதும் ஏற்பது ஒன்றே?
பெரு மலர்ச்சோலை மேகம் உரிஞ்சும் பெருஞ் சாத்தமங்கை
அரு மலர் ஆதிமூர்த்தி! அயவந்தி அமர்ந்தவனே!

[1]
மறையினார் மல்கு காழித் தமிழ் ஞானசம்பந்தன், மன்னும்
நிறையின் ஆர் நீலநக்கன் நெடு மா நகர் என்று தொண்டர்
அறையும் ஊர் சாத்தமங்கை அயவந்திமேல் ஆய்ந்த பத்தும்,
முறைமையால் ஏத்த வல்லார், இமையோரிலும் முந்துவரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.084  
புனையும் விரிகொன்றைக் கடவுள், புனல்   பண் - குறிஞ்சி   (திருநாகைக்காரோணம் (நாகப்பட்டினம்) காயாரோகணேசுவரர் நீலாயதாட்சியம்மை)

புனையும் விரிகொன்றைக் கடவுள், புனல் பாய
நனையும் சடைமேல் ஓர் நகுவெண் தலை சூடி,
வினை இல் அடியார்கள் விதியால் வழிபட்டு,
கனையும் கடல் நாகைக்காரோணத்தானே.

[1]
கரை ஆர் கடல் நாகைக்காரோணம் மேய
நரை ஆர் விடையானை நவிலும் சம்பந்தன்
உரை ஆர் தமிழ்மாலை பாடும் அவர் எல்லாம்
கரையா உரு ஆகிக் கலி வான் அடைவாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.116  
கூனல் திங்கள் குறுங்கண்ணி கான்ற(ந்)   பண் - செவ்வழி   (திருநாகைக்காரோணம் (நாகப்பட்டினம்) காயாரோகணேசுவரர் நீலாயதாட்சியம்மை)

கூனல் திங்கள் குறுங்கண்ணி கான்ற(ந்) நெடு வெண் நிலா,
வேனல் பூத்த(ம்) மராம் கோதையோடும் விராவும் சடை,
வான நாடன், அமரர் பெருமாற்கு இடம் ஆவது
கானல் வேலி கழி சூழ் கடல் நாகைக்காரோணமே.

[1]
மல்கு தண் பூம் புனல் வாய்ந்து ஒழுகும் வயல் காழியான்
நல்ல கேள்வித் தமிழ் ஞானசம்பந்தன் நல்லார்கள் முன்
வல்ல ஆறே புனைந்து ஏத்தும் காரோணத்து வண் தமிழ்
சொல்லுவார்க்கும் இவை கேட்பவர்க்கும் துயர் இல்லையே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.008  
வான் உலாவும் மதி வந்து   பண் - இந்தளம்   (திருச்சிக்கல் நவநீதநாதர் வேனெடுங்கண்ணியம்மை)

வான் உலாவும் மதி வந்து உலவும் மதில் மாளிகை,
தேன் உலாவும் மலர்ச்சோலை, மல்கும் திகழ் சிக்கலுள்
வேனல் வேளை விழித்திட்ட வெண்ணெய்ப்பெருமான் அடி
ஞானம் ஆக நினைவார் வினைஆயின நையுமே.

[1]
கந்தம் ஆர் பொழில் காழியுள் ஞானசம்பந்தன், நல்
செந் தண்பூம்பொழில் சிக்கல் வெண்ணெய்ப்பெருமான்
அடிச்
சந்தமாச் சொன்ன செந்தமிழ் வல்லவர், வான் இடை
வெந்தநீறு அணியும் பெருமான் அடி மேவரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.105  
மின் உலாவிய சடையினர், விடையினர்,   பண் - நட்டராகம்   (திருக்கீழ்வேளூர் அட்சயலிங்கநாதர் வனமுலைநாயகியம்மை)

மின் உலாவிய சடையினர், விடையினர், மிளிர்தரும்
அரவோடும்
பன் உலாவிய மறைஒலி நாவினர், கறை அணி கண்டத்தர்,
பொன் உலாவிய கொன்றை அம்தாரினர், புகழ் மிகு
கீழ்வேளூர்
உன் உலாவிய சிந்தையர் மேல் வினை ஓடிட, வீடு ஆமே.

[1]
குருண்ட வார் குழல் சடை உடைக் குழகனை, அழகு அமர்
கீழ்வேளூர்த்
திரண்ட மா மறையவர் தொழும் பெருந்திருக்கோயில்
எம்பெருமானை,
இருண்ட மேதியின் இனம் மிகு வயல் மல்கு புகலி மன்
சம்பந்தன்
தெருண்ட பாடல் வல்லார் அவர், சிவகதி பெறுவது திடம்
ஆமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.063  
பைங்கோட்டு மலர்ப் புன்னைப் பறவைகாள்!   பண் - பஞ்சமம்   (திருச்செங்காட்டங்குடி கணபதீசுவரர் திருக்குழல்மாதம்மை)

பைங்கோட்டு மலர்ப் புன்னைப் பறவைகாள்! பயப்பு ஊர,
சங்கு ஆட்டம் தவிர்த்து, என்னைத் தவிரா நோய் தந்தானே
செங்காட்டங்குடி மேய சிறுத்தொண்டன் பணி செய்ய,
வெங்காட்டுள் அனல் ஏந்தி விளையாடும் பெருமானே.

[1]
செந்தண் பூம் புனல் பரந்த செங்காட்டங்குடி மேய,
வெந்த நீறு அணி மார்பன், சிறுத்தொண்டன் அவன் வேண்ட,
அம் தண் பூங் கலிக் காழி அடிகளையே அடி பரவும்
சந்தம் கொள் சம்பந்தன் தமிழ் உரைப்போர் தக்கோரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.061  
நறை கொண்ட மலர் தூவி,   பண் - பழந்தக்கராகம்   (திருச்செங்காட்டங்குடி கணபதீசுவரர் திருக்குழல்மாதம்மை)

நறை கொண்ட மலர் தூவி, விரை அளிப்ப, நாள் தோறும்
முறை கொண்டு நின்று, அடியார் முட்டாமே பணி செய்ய,
சிறை கொண்ட வண்டு அறையும் செங்காட்டங்குடி அதனுள்,
கறை கொண்ட கண்டத்தான்-கணபதீச்சரத்தானே.

[1]
கறை இலங்கு மலர்க்குவளை கண் காட்டக் கடிபொழிலின்
நறை இலங்கு வயல் காழித் தமிழ் ஞானசம்பந்தன்,
சிறை இலங்கு புனல் படப்பைச் செங்காட்டங்குடி சேர்த்தும்
மறை இலங்கு தமிழ் வல்லார் வான் உலகத்து இருப்பாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.018  
சடையாய்! எனுமால்; சரண் நீ!   பண் - இந்தளம்   (திருமருகல் மாணிக்கவண்ணர் வண்டுவார்குழலி)

சடையாய்! எனுமால்; சரண் நீ! எனுமால்;
விடையாய்! எனுமால்; வெருவா விழுமால்;
மடை ஆர் குவளை மலரும் மருகல்
உடையாய்! தகுமோ, இவள் உள் மெலிவே?

[1]
வயஞானம் வல்லார் மருகல் பெருமான்
உயர் ஞானம் உணர்ந்து, அடி உள்குதலால்,
இயல் ஞானசம்பந்தன பாடல் வல்லார்,
வியன்ஞாலம் எல்லாம் விளங்கும், புகழே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.006  
அங்கமும் வேதமும் ஓதும் நாவர்   பண் - நட்டபாடை   (திருமருகலும் திருச்செங்காட்டங்குடியும் மாணிக்கவண்ணர் கணபதீசுவரர் வண்டுவார்குழலி திருக்குழல்நாயகி)

அங்கமும் வேதமும் ஓதும் நாவர் அந்தணர் நாளும் அடி பரவ,
மங்குல்மதி தவழ் மாட வீதி மருகல் நிலாவிய மைந்த! சொல்லாய்
செங்கயல் ஆர் புனல் செல்வம் மல்கு சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள்
கங்குல் விளங்கு எரி ஏந்தி ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே?

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.115  
சங்கு ஒளிர் முன் கையர்   பண் - வியாழக்குறிஞ்சி   (திருஇராமனதீச்சரம் இராமநாதேசுவரர் சரிவார்குழலியம்மை)

சங்கு ஒளிர் முன் கையர் தம் இடையே
அங்கு இடு பலி கொளுமவன், கோபப்
பொங்கு அரவு ஆடலோன், புவனி ஓங்க
எங்கும் மன், இராமன் நந்தீச்சுரமே.

[1]
தேன் மலர்க் கொன்றை யோன்........

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.115  
வெங் கள் விம்மு குழல்   பண் - செவ்வழி   (திருப்புகலூர் வர்த்தமானீசுவரர் கருந்தார்க்குழலியம்மை)

வெங் கள் விம்மு குழல் இளையர் ஆட(வ்) வெறி விரவு
நீர்ப்
பொங்கு செங்கண் கருங்கயல்கள் பாயும் புகலூர்தனுள்
திங்கள் சூடி, திரிபுரம் ஒர் அம்பால் எரியூட்டிய
எங்கள் பெம்மான் அடி பரவ, நாளும்(ம்), இடர் கழியுமே.

[1]
புந்தி ஆர்ந்த பெரியோர்கள் ஏத்தும் புகலூர்தனுள்
வெந்தசாம்பல்பொடிப் பூச வல்ல விடை ஊர்தியை,
அந்தம் இல்லா அனல் ஆடலானை, அணி ஞானசம்
பந்தன் சொன்ன தமிழ் பாடி ஆட, கெடும், பாவமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.092  
பட்டம், பால்நிற மதியம், படர்   பண் - பியந்தைக்காந்தாரம்   (திருப்புகலூர்வர்த்தமானீச்சரம் வர்த்தமானீசுவரர் கருந்தார்க்குழலியம்மை)

பட்டம், பால்நிற மதியம், படர் சடைச் சுடர் விடு பாணி,
நட்டம் நள் இருள் ஆடும் நாதன் நவின்று உறை கோயில்,
புள் தன் பேடையொடு ஆடும் பூம் புகலூர், தொண்டர்
போற்றி
வட்டம் சூழ்ந்து அடி பரவும் வர்த்தமானீச்சுரத்தாரே.

[1]
பொங்கு தண்புனல் சூழ்ந்து போது அணி பொழில்
புகலூரில்,
மங்குல் மா மதி தவழும் வர்த்தமானீச்சுரத்தாரை,
தங்கு சீர் திகழ் ஞானசம்பந்தன் தண் தமிழ்பத்தும்
எங்கும் ஏத்த வல்லார்கள், எய்துவர், இமையவர் உலகே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.108  
வடி கொள் மேனியர், வான   பண் - நட்டராகம்   (திருவிற்குடிவீரட்டம் வீரட்டானேசுவரர் மைவார்குழலியம்மை)

வடி கொள் மேனியர், வான மா மதியினர், நதியினர் மது
ஆர்ந்த
கடி கொள் கொன்றை அம் சடையினர், கொடியினர், உடை
புலி அதள் ஆர்ப்பர்,
விடை அது ஏறும் எம்மான், அமர்ந்து இனிது உறை
விற்குடி வீரட்டம்,
அடியர் ஆகி நின்று, ஏத்த வல்லார் தமை அருவினை
அடையாவே.

[1]
விலங்கலே சிலை இடம் என உடையவன்,
விற்குடிவீரட்டத்து
இலங்கு சோதியை, எம்பெருமான் தனை, எழில் திகழ் கழல்
பேணி,
நலம் கொள் வார் பொழில் காழியுள் ஞானசம்பந்தன் நல்
தமிழ்மாலை
வலம் கொடே இசை மொழியுமின்! மொழிந்தக்கால், மற்று
அது வரம் ஆமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.105  
பாடலன் நால்மறையன்; படி பட்ட   பண் - வியாழக்குறிஞ்சி   (திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)

பாடலன் நால்மறையன்; படி பட்ட கோலத்தன்; திங்கள்
சூடலன்; மூ இலையசூலம் வலன் ஏந்தி;
கூடலர் மூஎயிலும் எரியுண்ண, கூர் எரி கொண்டு, எல்லி
ஆடலன்; ஆதிரையன்-ஆரூர் அமர்ந்தானே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.101  
பருக் கை யானை மத்தகத்து   பண் - நட்டராகம்   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)

பருக் கை யானை மத்தகத்து அரிக்குலத்து உகிர்ப் புக
நெருக்கி, வாய நித்திலம் நிரக்கு நீள் பொருப்பன் ஊர்
தருக் கொள் சோலை சூழ, நீடு மாட மாளிகைக் கொடி
அருக்கன் மண்டலத்து அணாவும் அம் தண் ஆரூர்
என்பதே.

[1]
வல்லி சோலை சூதம் நீடு மன்னு வீதி பொன் உலா
அல்லி மாது அமர்ந்து இருந்த அம் தண் ஆரூர் ஆதியை,
நல்ல சொல்லும் ஞானசம்பந்தன் நாவின் இன் உரை
வல்ல தொண்டர், வானம் ஆள வல்லர், வாய்மை ஆகவே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.091  
சித்தம் தெளிவீர்காள்! அத்தன் ஆரூரைப்
பத்தி
  பண் - குறிஞ்சி   (திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)

சித்தம் தெளிவீர்காள்! அத்தன் ஆரூரைப்
பத்தி மலர் தூவ, முத்தி ஆகுமே.

[1]
சீர் ஊர் சம்பந்தன் ஆரூரைச் சொன்ன
பார் ஊர் பாடலார் பேரார், இன்பமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.045  
அந்தம் ஆய், உலகு ஆதியும்   பண் - கௌசிகம்   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)

அந்தம் ஆய், உலகு ஆதியும் ஆயினான்,
வெந்த வெண் பொடிப் பூசிய வேதியன்,
சிந்தையே புகுந்தான்-திரு ஆரூர் எம்
எந்தைதான்; எனை ஏன்று கொளும்கொலோ?

[1]
வன்னி, கொன்றை, மதியொடு, கூவிளம்,
சென்னி வைத்த பிரான் திரு ஆரூரை,
மன்னு காழியுள் ஞானசம்பந்தன் வாய்ப்
பன்னு பாடல் வல்லார்க்கு இல்லை, பாவமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.050  
மெய்யர் ஆகிப் பொய்யை நீக்கி,   பண் - பழந்தக்கராகம்   (திருவலிவலம் மனத்துணைநாதர் வாளையங்கண்ணியம்மை)

மெய்யர் ஆகிப் பொய்யை நீக்கி, வேதனையைத் துறந்து,
செய்யர் ஆனார் சிந்தையானே! தேவர் குலக்கொழுந்தே!
நைவன், நாயேன்; உன்தன் நாமம் நாளும் நவிற்றுகின்றேன்;
வையம் முன்னே வந்து நல்காய் வலிவலம் மேயவனே!

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.123  
பூ இயல் புரிகுழல்; வரிசிலை   பண் - வியாழக்குறிஞ்சி   (திருவலிவலம் மனத்துணைநாதர் வாளையங்கண்ணியம்மை)

பூ இயல் புரிகுழல்; வரிசிலை நிகர் நுதல்;
ஏ இயல் கணை, பிணை, எதிர் விழி; உமையவள்
மேவிய திரு உரு உடையவன்-விரைமலர்
மா இயல் பொழில் வலிவலம் உறை இறையே.

[1]
மன்னிய வலி வல நகர் உறை இறைவனை,
இன் இயல் கழுமல நகர் இறை எழில் மறை
தன் இயல் கலை வல தமிழ் விரகனது உரை
உன்னிய ஒருபதும் உயர்பொருள் தருமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.062  
நாள் ஆய போகாமே, நஞ்சு   பண் - பழந்தக்கராகம்   (திருக்கோளிலி (திருக்குவளை) கோளிலியப்பர் வண்டமர்பூங்குழலம்மை)

நாள் ஆய போகாமே, நஞ்சு அணியும் கண்டனுக்கே
ஆள் ஆய அன்பு செய்வோம்; மட நெஞ்சே! அரன் நாமம்
கேளாய்! நம் கிளை கிளைக்கும் கேடு படாத் திறம் அருளிக்
கோள் ஆய நீக்குமவன்-கோளிலி எம்பெருமானே.

[1]
நம்பனை, நல் அடியார்கள் நாம் உடை மாடு என்று இருக்கும்
கொம்பு அனையாள் பாகன், எழில் கோளிலி எம்பெருமானை,
வம்பு அமரும் தண் காழிச் சம்பந்தன் வண் தமிழ் கொண்டு
இன்பு அமர வல்லார்கள் எய்துவர்கள், ஈசனையே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.050  
விரும்பும் திங்களும் கங்கையும் விம்மவே,
சுரும்பும்
  பண் - கௌசிகம்   (திருத்தண்டலைநீணெறி நீணெறிநாதேசுவரர் ஞானாம்பிகையம்மை)

விரும்பும் திங்களும் கங்கையும் விம்மவே,
சுரும்பும் தும்பியும் சூழ் சடையார்க்கு இடம்
கரும்பும் செந்நெலும் காய் கமுகின் வளம்
நெருங்கும் தண்டலை நீணெறி; காண்மினே!

[1]
நீற்றர், தண்டலை நீணெறி நாதனை,
தோற்றும் மேன்மையர் தோணிபுரத்து இறை
சாற்று ஞானசம்பந்தன்-தமிழ் வலார்
மாற்று இல் செல்வர்; மறப்பர், பிறப்பையே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.079  
பவனம் ஆய், சோடை ஆய்,   பண் - காந்தாரம்   (திருவாரூர் முல்லைவனேசுவரர் கரும்பனையாளம்மை)

பவனம் ஆய், சோடை ஆய், நா எழா, பஞ்சு தோய்ச்சு
அட்ட உண்டு
சிவன தாள் சிந்தியாப் பேதைமார் போல, நீ
வெள்கினாயே?
கவனம் ஆய்ப் பாய்வது ஓர் ஏறு உகந்து ஏறிய காள
கண்டன்
அவனது ஆரூர் தொழுது உய்யல் ஆம்; மையல் கொண்டு
அஞ்சல், நெஞ்சே!

[1]
பல் இதழ் மாதவி அல்லி வண்டு யாழ் செயும் காழி ஊரன்
நல்லவே நல்லவே சொல்லிய ஞானசம்பந்தன் ஆரூர்
எல்லி அம்போது எரி ஆடும் எம் ஈசனை ஏத்து பாடல்
சொல்லவே வல்லவர், தீது இலார், ஓத நீர் வையகத்தே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.037  
அரவச் சடை மேல் மதி,   பண் - தக்கராகம்   (திருப்பனையூர் சவுந்தரேசர் பெரியநாயகியம்மை)

அரவச் சடை மேல் மதி, மத்தம்,
விரவிப் பொலிகின்றவன் ஊர் ஆம்
நிரவிப் பல தொண்டர்கள் நாளும்
பரவிப் பொலியும் பனையூரே.

[1]
பார் ஆர் விடையான் பனையூர் மேல்
சீர் ஆர் தமிழ் ஞானசம்பந்தன்
ஆராத சொல் மாலைகள் பத்தும்
ஊர் ஊர் நினைவார் உயர்வாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.002  
குறி கலந்த இசை பாடலினான்,   பண் - நட்டபாடை   (திருப்புகலூர் அக்கினீசுவரர் கருந்தார்க்குழலியம்மை)

குறி கலந்த இசை பாடலினான், நசையால், இவ் உலகு எல்லாம்
நெறி கலந்தது ஒரு நீர்மையனாய், எருது ஏறி, பலி பேணி,
முறி கலந்தது ஒரு தோல் அரைமேல் உடையான் இடம் மொய்ம் மலரின்
பொறி கலந்த பொழில் சூழ்ந்து, அயலே புயல் ஆரும் புகலூரே.

[1]
புற்றில் வாழும் அரவம்(ம்) அரை ஆர்த்தவன் மேவும் புகலூரை,
கற்று நல்ல அவர் காழியுள் ஞானசம்பந்தன் தமிழ் மாலை
பற்றி, என்றும் இசை பாடிய மாந்தர், பரமன் அடி சேர்ந்து,
குற்றம் இன்றி, குறைபாடு ஒழியா, புகழ் ஓங்கி, பொலிவாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.103  
புல்கு பொன் நிறம் புரி   பண் - நட்டராகம்   (திருஅம்பர்மாகாளம் காளகண்டேசுவரர் பட்சநாயகியம்மை)

புல்கு பொன் நிறம் புரி சடை நெடு முடிப் போழ் இளமதி
சூடி,
பில்கு தேன் உடை நறு மலர்க் கொன்றையும் பிணையல்
செய்தவர் மேய
மல்கு தண் துறை அரிசிலின் வடகரை, வருபுனல் மாகாளம்,
அல்லும் நண் பகலும் தொழும் அடியவர்க்கு அருவினை
அடையாவே.

[1]
மாறு தன்னொடு மண்மிசை இல்லது வருபுனல் மாகாளத்து
ஈறும் ஆதியும் ஆகிய சோதியை, ஏறு அமர் பெருமானை,
நாறு பூம் பொழில் காழியுள் ஞானசம்பந்தன தமிழ் மாலை
கூறுவாரையும் கேட்க வல்லாரையும் குற்றங்கள் குறுகாவே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.083  
அடையார் புரம் மூன்றும் அனல்வாய்   பண் - குறிஞ்சி   (திருஅம்பர்மாகாளம் காளகண்டேசுவரர் பட்சநாயகியம்மை)

அடையார் புரம் மூன்றும் அனல்வாய் விழ எய்து,
மடை ஆர் புனல் அம்பர்மாகாளம் மேய
விடை ஆர் கொடி எந்தை, வெள்ளைப்பிறை சூடும்
சடையான், கழல் ஏத்த, சாரா, வினைதானே.

[1]
வெருநீர் கொள ஓங்கும் வேணுபுரம் தன்னுள்-
திருமாமறை ஞானசம்பந்தன சேண் ஆர்
பெருமான் மலி அம்பர்மாகாளம் பேணி
உருகா, உரை செய்வார் உயர்வான் அடைவாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.093  
படியுள் ஆர் விடையினர், பாய்   பண் - சாதாரி   (திருஅம்பர்மாகாளம் காளகண்டேசுவரர் பட்சநாயகியம்மை)

படியுள் ஆர் விடையினர், பாய் புலித்தோலினர், பாவநாசர்
பொடி கொள் மா மேனியர், பூதம் ஆர் படையினர், பூணநூலர்,
கடி கொள் மா மலர் இடும் அடியினர், பிடி நடை
மங்கையோடும்
அடிகளார் அருள் புரிந்து இருப்பு இடம் அம்பர்மாகாளம்
தானே.

[1]
செம்பொன் மா மணி கொழித்து எழு திரை வருபுனல்
அரிசில் சூழ்ந்த
அம்பர் மாகாளமே கோயிலா அணங்கினோடு இருந்த கோனை,
கம்பின் ஆர் நெடுமதில் காழியுள் ஞானசம்பந்தன் சொன்ன
நம்பி, நாள் மொழிபவர்க்கு இல்லை ஆம், வினை; நலம்
பெறுவர், தாமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.019  
எரிதர அனல் கையில் ஏந்தி,   பண் - காந்தாரபஞ்சமம்   (திருஅம்பர்ப்பெருந்திருக்கோயில் (அம்பர்) பிரமபுரிநாதேசுவரர் பூங்குழனாயகியம்மை)

எரிதர அனல் கையில் ஏந்தி, எல்லியில்,
நரி திரி கான் இடை, நட்டம் ஆடுவர்
அரிசில் அம் பொரு புனல் அம்பர் மா நகர்
குரிசில் செங்கண்ணவன் கோயில் சேர்வரே.

[1]
அழகரை, அடிகளை, அம்பர் மேவிய
நிழல் திகழ் சடைமுடி நீலகண்டரை,
உமிழ் திரை உலகினில் ஓதுவீர்! கொண்மின்-
தமிழ் கெழு விரகினன் தமிழ்செய்மாலையே!

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.008  
சடை உடையானும், நெய் ஆடலானும்,   பண் - காந்தாரபஞ்சமம்   (திருக்கடவூர் வீரட்டம் அமிர்தகடேசுவரர் அபிராமியம்மை)

சடை உடையானும், நெய் ஆடலானும், சரி கோவண-
உடை உடையானும், மை ஆர்ந்த ஒண்கண் உமை கேள்வனும்,
கடை உடை நன்நெடு மாடம் ஓங்கும் கடவூர்தனுள்
விடை உடை அண்ணலும் வீரட்டானத்து அரன் அல்லனே?

[1]
வெந்த வெண்நீறு அணி வீரட்டானத்து உறை வேந்தனை,
அந்தணர் தம் கடவூர் உளானை, அணி காழியான்
சந்தம் எல்லாம் அடிச் சாத்த வல்ல மறை ஞானசம்-
பந்தன செந்தமிழ் பாடி ஆட, கெடும், பாவமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.080  
வரிய மறையார், பிறையார், மலை   பண் - காந்தாரம்   (திருக்கடவூர் மயானம் பிரமபுரீசுவரர் மலர்க்குழல்மின்னம்மை)

வரிய மறையார், பிறையார், மலை ஓர் சிலையா வணக்கி
எரிய மதில்கள் எய்தார், எறியும் முசலம் உடையார்,
கரிய மிடறும் உடையார் கடவூர் மயானம் அமர்ந்தார்;
பெரிய விடைமேல் வருவார் அவர் எம்பெருமான் அடிகளே

[1]
மரவம்பொழில் சூழ் கடவூர் மன்னு மயானம் அமர்ந்த,
அரவம் அசைத்த, பெருமான் அகலம் அறியல் ஆகப்
பரவும் முறையே பயிலும் பந்தன் செஞ்சொல் மாலை,
இரவும் பகலும் பரவி நினைவார், வினைகள் இலரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.042  
அக்கு இருந்த ஆரமும், ஆடு   பண் - சீகாமரம்   (திருஆக்கூர் சுயம்புநாதேசுவரர் கட்கநேத்திரவம்மை)

அக்கு இருந்த ஆரமும், ஆடு அரவும், ஆமையும்,
தொக்கு இருந்த மார்பினான்; தோல் உடையான்; வெண்
நீற்றான்;
புக்கு இருந்த தொல் கோயில் பொய் இலா மெய்ந்நெறிக்கே
தக்கிருந்தார் ஆக்கூரில் தான் தோன்றி மாடமே.

[1]
ஆடல் அமர்ந்தானை, ஆக்கூரில் தான் தோன்றி
மாடம் அமர்ந்தானை, மாடம் சேர் தண் காழி,
நாடற்கு அரிய சீர், ஞானசம்பந்தன் சொல்
பாடல் இவை வல்லார்க்கு இல்லை ஆம், பாவமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.062  
காயச் செவ்விக் காமற் காய்ந்து,   பண் - காந்தாரம்   (திருமீயச்சூர் முயற்சிநாதேசுவரர் சுந்தரநாயகியம்மை)

காயச் செவ்விக் காமற் காய்ந்து, கங்கையைப்
பாயப் படர் புன் சடையில் பதித்த பரமேட்டி
மாயச் சூர் அன்று அறுத்த மைந்தன் தாதை; தன்
மீயச் சூரைத் தொழுது, வினையை வீட்டுமே!

[1]
வேடம் உடைய பெருமான் உறையும் மீயச்சூர்,
நாடும் புகழ் ஆர் புகலி ஞானசம்பந்தன்
பாடல் ஆய தமிழ் ஈர் ஐந்தும் மொழிந்து, உள்கி,
ஆடும் அடியார், அகல் வான் உலகம் அடைவாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.041  
சீர் அணி திகழ் திருமார்பில்   பண் - தக்கராகம்   (திருப்பாம்புரம் பாம்புரேசர் (எ) பாம்புரநாதர் வண்டமர்பூங்குழலம்மை (எ) வண்டார்பூங்குழலி)

சீர் அணி திகழ் திருமார்பில் வெண்நூலர், திரிபுரம் எரிசெய்த செல்வர்,
வார் அணி வனமுலை மங்கை ஓர் பங்கர், மான்மறி ஏந்திய மைந்தர்,
கார் அணி மணி திகழ் மிடறு உடை அண்ணல், கண்ணுதல், விண்ணவர் ஏத்தும்
பார் அணி திகழ் தரு நால்மறையாளர் பாம்புர நன்நகராரே.

[1]
பார் மலிந்து ஓங்கிப் பரு மதில் சூழ்ந்த பாம்புர நன் நகராரைக்
கார் மலிந்து அழகு ஆர் கழனி சூழ் மாடக் கழுமல முது பதிக் கவுணி
நார் மலிந்து ஓங்கும் நால் மறை ஞானசம்பந்தன்-செந்தமிழ் வல்லார்
சீர் மலிந்து அழகு ஆர் செல்வம் அது ஓங்கி, சிவன் அடி நண்ணுவர் தாமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.035  
அரை ஆர் விரி கோவண   பண் - தக்கராகம்   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)

அரை ஆர் விரி கோவண ஆடை,
நரை ஆர் விடை ஊர்தி, நயந்தான்,
விரை ஆர் பொழில், வீழி மிழலை
உரையால் உணர்வார் உயர்வாரே.

[1]
நளிர் காழியுள் ஞானசம்பந்தன்
குளிர் ஆர் சடையான் அடி கூற,
மிளிர் ஆர் பொழில், வீழி மிழலை
கிளர் பாடல் வல்லார்க்கு இலை, கேடே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.011  
சடை ஆர் புனல் உடையான்,   பண் - நட்டபாடை   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)

சடை ஆர் புனல் உடையான், ஒரு சரி கோவணம் உடையான்,
படை ஆர் மழு உடையான், பல பூதப்படை உடையான்,
மடமான் விழி உமைமாது இடம் உடையான், எனை உடையான்,
விடை ஆர் கொடி உடையான், இடம் வீழிமிழலையே.

[1]
வீழிமிழலை மேவிய விகிர்தன்தனை, விரை சேர்
காழி நகர் கலை ஞானசம்பந்தன் தமிழ்பத்தும்
யாழின் இசை வல்லார், சொலக் கேட்டார், அவர் எல்லாம்
ஊழின் மலி வினை போயிட, உயர்வான் அடைவாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.042  
பைம் மா நாகம், பல்மலர்க்   பண் - தக்கராகம்   (திருப்பேணுபெருந்துறை சிவாநந்தநாதர் மலையரசியம்மை)

பைம் மா நாகம், பல்மலர்க் கொன்றை, பன்றி வெண் கொம்பு ஒன்று, பூண்டு,
செம்மாந்து, ஐயம் பெய்க! என்று சொல்லி, செய் தொழில் பேணியோர்; செல்வர்;
அம் மான் நோக்கு இயல், அம் தளிர்மேனி, அரிவை ஓர்பாகம் அமர்ந்த
பெம்மான்; நல்கிய தொல்புகழாளர் பேணு பெருந்துறையாரே.

[1]
கடை ஆர் மாடம் நன்கு எழு வீதிக் கழுமல ஊரன்-கலந்து
நடை ஆர் இன்சொல் ஞானசம்பந்தன்-நல்ல பெருந்துறை மேய
படை ஆர் சூலம் வல்லவன் பாதம் பரவிய பத்து இவை வல்லார்
உடையார் ஆகி, உள்ளமும் ஒன்றி, உலகினில் மன்னுவர்தாமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.118  
பொடிகள் பூசிப் பலதொண்டர் கூடி,   பண் - செவ்வழி   (திருதிலதைப்பதி (மதிமுத்தம்) மதிமுத்தநாதேசுவரர் பொற்கொடியம்மை)

பொடிகள் பூசிப் பலதொண்டர் கூடி, புலர் காலையே,
அடிகள் ஆரத் தொழுது, ஏத்த நின்ற(வ்) அழகன்(ன்) இடம்
கொடிகள் ஓங்கிக் குலவும் விழவு ஆர் திலதைப்பதி,
வடி கொள் சோலை(ம்) மலர் மணம் கமழும் மதிமுத்தமே.

[1]
மந்தம் ஆரும் பொழில் சூழ் திலதை(ம்) மதிமுத்தர்மேல்,
கந்தம் ஆரும் கடல் காழி உள்ளான் தமிழ் ஞானசம்
பந்தன் மாலை, பழி தீர நின்று ஏத்த வல்லார்கள், போய்ச்
சிந்தைசெய்வார், சிவன் சேவடி சேர்வது திண்ணமே.
[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.004  
மைம் மரு பூங்குழல் கற்றை   பண் - நட்டபாடை   (திருவீழிமிழலை பிரமபுரீசர் வீழியழகர் திருநிலைநாயகி, சுந்தரகுசாம்பிகை)

மைம் மரு பூங்குழல் கற்றை துற்ற, வாள்நுதல் மான்விழி மங்கையோடும்,
பொய்ம் மொழியா மறையோர்கள் ஏத்த, புகலி நிலாவிய புண்ணியனே!
எம் இறையே! இமையாத முக்கண் ஈச! என் நேச! இது என்கொல சொல்லாய்
மெய்ம்மொழி நால்மறையோர் மிழலை விண் இழி கோயில் விரும்பியதே?

[1]
விண் இழி கோயில் விரும்பி மேவும் வித்தகம் என்கொல் இது! என்று சொல்லி,
புண்ணியனை, புகலி நிலாவு பூங்கொடியோடு இருந்தானைப் போற்றி,
நண்ணிய கீர்த்தி நலம் கொள் கேள்வி நால்மறை ஞானசம்பந்தன் சொன்ன
பண் இயல் பாடல் வல்லார்கள் இந்தப் பாரொடு விண் பரிபாலகரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.020  
தட நிலவிய மலை நிறுவி,   பண் - நட்டபாடை   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)

தட நிலவிய மலை நிறுவி, ஒரு தழல் உமிழ்தரு பட அரவுகொடு,
அடல் அசுரரொடு அமரர்கள், அலைகடல் கடைவுழி எழும் மிகு சின
விடம் அடைதரும் மிடறு உடையவன்; விடைமிசை வருமவன்; உறை பதி
திடம் மலிதரு மறை முறை உணர் மறையவர் நிறை திரு மிழலையே.

[1]
சினம் மலி கரி உரிசெய்த சிவன் உறைதரு திரு மிழலையை, மிகு
தன மனர், சிரபுரநகர் இறை தமிழ்விரகனது உரை ஒருபதும்
மன மகிழ்வொடு பயில்பவர், எழில் மலர் மகள், கலை மகள், சய மகள்,
இனம் மலி புகழ்மகள், இசை தர, இரு நிலன் இடை இனிது அமர்வரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.082  
இரும் பொன்மலை வில்லா, எரி   பண் - குறிஞ்சி   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)

இரும் பொன்மலை வில்லா, எரி அம்பா, நாணில்,-
திரிந்த புரம் மூன்றும் செற்றான் உறை கோயில்
தெரிந்த அடியார்கள் சென்ற திசைதோறும்
விரும்பி எதிர்கொள்வார் வீழி மிழலையே.

[1]
மேல் நின்று இழி கோயில் வீழி மிழலையுள்
ஏனத்து எயிற்றானை, எழில் ஆர் பொழில் காழி
ஞானத்து உயர்கின்ற நலம் கொள் சம்பந்தன்
வாய்மைத்து இவை சொல்ல, வல்லோர் நல்லோரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.124  
அலர்மகள் மலிதர, அவனியில் நிகழ்பவர்
மலர்
  பண் - வியாழக்குறிஞ்சி   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)

அலர்மகள் மலிதர, அவனியில் நிகழ்பவர்
மலர் மலி குழல் உமைதனை இடம் மகிழ்பவர்,
நலம் மலி உரு உடையவர், நகர் மிகு புகழ்
நிலம் மலி மிழலையை நினைய வல்லவரே.

[1]
நித்திலன் மிழலையை, நிகர் இலி புகலியுள்
வித்தகமறை மலி தமிழ்விரகன மொழி
பத்தியில் வருவன பத்து இவை பயில்வொடு
கற்று வல்லவர் உலகினில் அடியவரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.132  
ஏர் இசையும் வட-ஆலின்கீழ் இருந்து,   பண் - மேகராகக்குறிஞ்சி   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)

ஏர் இசையும் வட-ஆலின்கீழ் இருந்து, அங்கு
ஈர்-இருவர்க்கு இரங்கி நின்று,
நேரிய நால்மறைப்பொருளை உரைத்து, ஒளி சேர்
நெறி அளித்தோன் நின்றகோயில்
பார் இசையும் பண்டிதர்கள் பல்-நாளும்
பயின்று ஓதும் ஓசை கேட்டு,
வேரி மலி பொழில், கிள்ளை வேதங்கள்
பொருள் சொல்லும் மிழலை ஆமே.

[1]
மின் இயலும் மணி மாடம் மிடை வீழி மிழலையான் விரை ஆர்
பாதம்
சென்னிமிசைக் கொண்டு ஒழுகும் சிரபுரக் கோன்-செழுமறைகள்
  பயிலும் நாவன்,
பன்னிய சீர் மிகு ஞானசம்பந்தன்-பரிந்து உரைத்த பத்தும் ஏத்தி,
இன் இசையால் பாட வல்லார், இருநிலத்தில் ஈசன் எனும்
இயல்பினோரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.009  
கேள்வியர், நாள்தொறும் ஓது நல்வேதத்தர்   பண் - காந்தாரபஞ்சமம்   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)

கேள்வியர், நாள்தொறும் ஓது நல்வேதத்தர் கேடு இலா
வேள்வி செய் அந்தணர் வேதியர் வீழிமிழலையார்,
வாழியர்; தோற்றமும் கேடும் வைப்பார், உயிர்கட்கு எலாம்;
ஆழியர்; தம் அடி போற்றி! என்பார்கட்கு அணியரே.

[1]
வேதியர் கைதொழு வீழிமிழலை விரும்பிய
ஆதியை, வாழ் பொழில் காழியுள் ஞானசம்பந்தன் ஆய்ந்து,
ஓதிய ஒண்தமிழ் பத்து இவை உற்று உரைசெய்பவர்,
மாது இயல் பங்கன் மலர் அடி சேரவும் வல்லரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.080  
சீர் மருவு தேசினொடு தேசம்   பண் - சாதாரி   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)

சீர் மருவு தேசினொடு தேசம் மலி செல்வ மறையோர்கள் பணிய,
தார் மருவு கொன்றை அணி தாழ்சடையினான் அமர் சயம் கொள் பதிதான்-
பார் மருவு பங்கயம் உயர்ந்த வயல் சூழ் பழனம் நீட, அருகே
கார் மருவு வெண்களப மாளிகை கவின் பெருகு வீழிநகரே.

[1]
மத்தம் மலி கொன்றை வளர் வார்சடையில் வைத்த பரன், வீழிநகர் சேர்
வித்தகனை, வெங்குருவில் வேதியன் விரும்பு தமிழ் மாலைகள் வலார்
சித்திர விமானம் அமர் செல்வம் மலிகின்ற சிவலோகம் மருவி,
அத்தகு குணத்தவர்கள் ஆகி, அனுபோகமொடு யோகு அவரதே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.085  
மட்டு ஒளி விரிதரு மலர்   பண் - சாதாரி   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)

மட்டு ஒளி விரிதரு மலர் நிறை சுரிகுழல் மடவரல்
பட்டு ஒளி மணி அல்குல் உமை அமை உரு ஒருபாகமா,
கட்டு ஒளிர் புனலொடு கடி அரவு உடன் உறை முடிமிசை
விட்டு ஒளி உதிர் பிதிர் மதியவர் பதி விழிமிழலையே.

[1]
உன்னிய அருமறை ஒலியினை முறை மிகு பாடல்செய்
இன் இசையவர் உறை எழில் திகழ் பொழில் விழிமிழலையை,
மன்னிய புகலியுள் ஞானசம்பந்தன வண்தமிழ்
சொன்னவர் துயர் இலர்; வியன் உலகு உறு கதி பெறுவரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.098  
வெண்மதி தவழ் மதில் மிழலை   பண் - சாதாரி   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)

வெண்மதி தவழ் மதில் மிழலை உளீர், சடை
ஒண்மதி அணி உடையீரே;
ஒண்மதி அணி உடையீர்! உமை உணர்பவர்
கண் மதி மிகுவது கடனே.

[1]
விண் பயில் பொழில் அணி மிழலையுள் ஈசனை,
சண்பையுள் ஞானசம்பந்தன்
சண்பையுள் ஞானசம்பந்தன தமிழ் இவை,
ஒண் பொருள் உணர்வதும் உணர்வே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.111  
வேலின் நேர்தரு கண்ணினாள் உமை   பண் - பழம்பஞ்சுரம்   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)

வேலின் நேர்தரு கண்ணினாள் உமை பங்கன்-அங்கணன்,
மிழலை மா நகர்
ஆல நீழலில் மேவினான்-அடிக்கு அன்பர் துன்பு இலரே.

[1]
சந்தம் ஆர் பொழில் மிழலை ஈசனைச் சண்பை
ஞானசம்பந்தன் வாய் நவில்
பந்தம் ஆர் தமிழ்பத்தும் வல்லவர் பத்தர் ஆகுவரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.116  
துன்று கொன்றை நம் சடையதே;   பண் - பழம்பஞ்சுரம்   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)

துன்று கொன்றை நம் சடையதே; தூய கண்டம் நஞ்சு அடையதே;
கன்றின்மான் இடக் கையதே; கல்லின்மான் இடக்கை அதே;
என்றும் ஏறுவது இடவமே; என் இடைப் பலி இட வ(ம்)மே!
நின்றதும் மிழலையுள்ளுமே; நீர் எனைச் சிறிதும் உள்ளுமே!

[1]
மேய செஞ்சடையின் அப்பனே! மிழலை மேவிய என் அப்பனே!
ஏயுமா செய இருப்பனே இசைந்தவா செய விருப்பனே!
காய வர்க்க(அ) சம்பந்தனே! காழி ஞானசம்பந்தனே
வாய் உரைத்த தமிழ்பத்துமே வல்லவர்க்கும் இவை
பத்துமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.119  
புள்ளித்தோல் ஆடை; பூண்பது நாகம்;   பண் - புறநீர்மை   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)

புள்ளித்தோல் ஆடை; பூண்பது நாகம்; பூசு சாந்தம் பொடி-நீறு;
கொள்ளித்தீ விளக்கு; கூளிகள் கூட்டம்; காளியைக் குணம்
செய் கூத்து உடையோன்-
அள்ளல் கார் ஆமை அகடு வான்மதியம் ஏய்க்க,
முள்-தாழைகள் ஆனை
வெள்ளைக்கொம்பு ஈனும் விரி பொழில் வீழிமிழலையான்
என, வினை கெடுமே.

[1]
வேந்தர் வந்து இறைஞ்ச, வேதியர், வீழிமிழலையுள், விண் இழிவிமானத்து
ஏய்ந்த தன் தேவியோடு உறைகின்ற ஈசனை, எம்பெருமானை,
தோய்ந்த நீர்த் தோணிபுரத்து உறை மறையோன்-தூ மொழி ஞானசம்பந்தன்-
வாய்ந்த பாமாலை வாய் நவில்வாரை வானவர் வழிபடுவாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.092  
வாசி தீரவே, காசு நல்குவீர்!
மாசு
  பண் - குறிஞ்சி   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)

வாசி தீரவே, காசு நல்குவீர்!
மாசு இல் மிழலையீர்! ஏசல் இல்லையே.

[1]
காழி மா நகர் வாழி சம்பந்தன்
வீழிமிழலைமேல்-தாழும் மொழிகளே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.007  
வன்னி கொன்றை மதமத்தம் எருக்கொடு   பண் - இந்தளம்   (திருவாஞ்சியம் வாஞ்சியநாதர் வாழவந்தநாயகியம்மை)

வன்னி கொன்றை மதமத்தம் எருக்கொடு கூவிளம்
பொன் இயன்ற சடையில் பொலிவித்த புராணனார்,
தென்ன என்று வரிவண்டு இசைசெய் திரு வாஞ்சியம்,
என்னை ஆள் உடையான், இடம் ஆக உகந்ததே.

[1]
தென்றல் துன்று பொழில் சென்று அணையும் திரு
வாஞ்சியத்து
என்றும் நின்ற இறையானை உணர்ந்து அடி ஏத்தலால்,
நன்று காழி மறை ஞானசம்பந்தன செந்தமிழ்
ஒன்றும் உள்ளம் உடையார் அடைவார், உயர்வானமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.064  
அண்ணாவும் கழுக்குன்றும் ஆய மலை   பண் - பஞ்சமம்   (திருப்பெருவேளூர் (காட்டூரையன்பேட்டை) பிரியாவீசுவரர் மின்னனையாளம்மை)

அண்ணாவும் கழுக்குன்றும் ஆய மலை அவை வாழ்வார்
விண்ணோரும் மண்ணோரும் வியந்து ஏத்த அருள் செய்வார்
கண் ஆவார், உலகுக்குக் கருத்து ஆனார், புரம் எரித்த
பெண் ஆண் ஆம் பெருமானார் பெருவேளூர் பிரியாரே.

[1]
பைம் பொன் சீர் மணி வாரி பலவும் சேர் கனி உந்தி,
அம் பொன் செய் மடவரலார் அணி மல்கு பெருவேளூர்
நம்பன் தன் கழல் பரவி, நவில்கின்ற மறை ஞான-
சம்பந்தன் தமிழ் வல்லார்க்கு, அருவினை நோய் சாராவே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.058  
அரியும், நம் வினை உள்ளன   பண் - பழந்தக்கராகம்   (திருக்கரவீரம் கரவீரேசுவரர் பிரத்தியட்சமின்னாளம்மை)

அரியும், நம் வினை உள்ளன ஆசு அற
வரி கொள் மாமணி போல் கண்டம்
கரியவன், திகழும் கரவீரத்து எம்
பெரியவன், கழல் பேணவே.

[1]
வீடு இலான், விளங்கும் கரவீரத்து எம்
சேடன் மேல் கசிவால்-தமிழ்
நாடும் ஞானசம்பந்தன் சொல் இவை
பாடுவார்க்கு இல்லை, பாவமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.088  
மத்தகம் அணி பெற மலர்வது   பண் - சாதாரி   (திருவிளமர் பதஞ்சலிமனோகரேசுவரர் யாழினுமென்மொழியம்மை)

மத்தகம் அணி பெற மலர்வது ஒர் மதி புரை நுதல், கரம்
ஒத்து, அகம் நக, மணி மிளிர்வது ஒர் அரவினர்; ஒளி கிளா
அத் தகவு அடி தொழ, அருள் பெறு கணனொடும் உமையவள்
வித்தகர்; உறைவது விரி பொழில் வள நகர் விளமரே.

[1]
வெந்த வெண்பொடி அணி அடிகளை, விளமருள் விகிர்தரை,
சிந்தையுள் இடைபெற உரை செய்த தமிழ் இவை செழுவிய
அந்தணர் புகலியுள் அழகு அமர் அருமறை ஞானசம்-
பந்தன மொழி இவை உரை செயுமவர் வினை பறையுமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.015  
நீரானே! நீள்சடைமேல் ஒர் நிரை   பண் - இந்தளம்   (திருக்காறாயில் (திருக்காறைவாசல்) கண்ணாயிரநாதர் கயிலாயநாயகியம்மை)

நீரானே! நீள்சடைமேல் ஒர் நிரை கொன்றைத்
தாரானே! தாமரைமேல் அயன்தான் தொழும்
சீரானே! சீர் திகழும் திருக்காறாயில்
ஊரானே! என்பவர் ஊனம் இலாதாரே.

[1]
ஏய்ந்த சீர் எழில் திகழும் திருக்காறாயில்
ஆய்ந்த சீரான் அடி ஏத்தி அருள் பெற்ற
பாய்ந்த நீர்க் காழியுள் ஞானசம்பந்தன் சொல்
வாய்ந்தஆறு ஏத்துவார் வான் உலகு ஆள்வாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.082  
பண் நிலாவிய மொழி உமை   பண் - காந்தாரம்   (திருத்தேவூர் தேவகுருநாதர் தேன்மொழியம்மை)

பண் நிலாவிய மொழி உமை பங்கன், எம்பெருமான்,
விண்ணில் வானவர்கோன், விமலன், விடை ஊர்தி
தெண் நிலா மதி தவழ் தரு மாளிகைத் தேவூர்
அண்ணல்; சேவடி அடைந்தனம், அல்லல் ஒன்று இலமே.

[1]
அல்லல் இன்றி விண் ஆள்வர்கள் காழியர்க்கு அதிபன்,
நல்ல செந்தமிழ் வல்லவன், ஞானசம்பந்தன்,
எல்லை இல் புகழ் மல்கிய எழில் வளர் தேவூர்த்
தொல்லை நம்பனைச் சொல்லிய பத்தும் வல்லாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.074  
காடு பயில் வீடு, முடை   பண் - சாதாரி   (திருத்தேவூர் தேவகுருநாதர் தேன்மொழியம்மை)

காடு பயில் வீடு, முடை ஓடு கலன், மூடும் உடை ஆடை புலிதோல்,
தேடு பலி ஊண் அது உடை வேடம் மிகு வேதியர் திருந்து பதிதான்-
நாடகம் அது ஆட ம(ஞ்)ஞை, பாட அரி, கோடல் கைம் மறிப்ப, நலம் ஆர்
சேடு மிகு பேடை அனம் ஊடி மகிழ் மாடம் மிடை தேவூர் அதுவே.

[1]
துங்கம் மிகு பொங்கு அரவு தங்கு சடை நங்கள் இறை துன்று குழல் ஆர்
செங்கயல்கண் மங்கை உமை நங்கை ஒருபங்கன்-அமர் தேவூர் அதன்மேல்,
பைங்கமலம் அங்கு அணி கொள் திண் புகலி ஞானசம்பந்தன், உரைசெய்
சங்கம் மலி செந்தமிழ்கள் பத்தும் இவை வல்லவர்கள், சங்கை இலரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.019  
அறத்தால் உயிர் காவல் அமர்ந்து   பண் - இந்தளம்   (திருநெல்லிக்கா நெல்லிவனேசுவரர் மங்களநாயகியம்மை)

அறத்தால் உயிர் காவல் அமர்ந்து அருள
மறத்தால் மதில்மூன்றுஉடன் மாண்பு அழித்த
திறத்தால், தெரிவு எய்திய தீ, வெண்திங்கள்,
நிறத்தான் நெல்லிக்காவுள் நிலாயவனே.

[1]
புகர் ஏதும் இலாத புத்தேள் உலகின்
நிகர் ஆம் நெல்லிக்காவுள் நிலாயவனை,
நகரா நல ஞானசம்பந்தன் சொன்ன,
பகர்வார் அவர் பாவம் இலாதவரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.045  
தையல் ஓர் கூறு உடையான்,   பண் - சீகாமரம்   (கைச்சின்னம் (கச்சன்னம்) கைச்சினநாதர் வேள்வளையம்மை)

தையல் ஓர் கூறு உடையான், தண்மதி சேர் செஞ்சடையான்,
மை உலாம் மணிமிடற்றான், மறை விளங்கு பாடலான்,
நெய் உலாம் மூ இலைவேல் ஏந்தி நிவந்து ஒளி சேர்
கை உடையான், மேவி உறை கோயில் கைச்சினமே.

[1]
தண்வயல் சூழ் காழித் தமிழ் ஞானசம்பந்தன்,
கண்நுதலான் மேவி உறை கோயில் கைச்சினத்தை,
பண் இசையால் ஏத்திப் பயின்ற இவை வல்லார்,
விண்ணவராய் ஓங்கி, வியன் உலகம் ஆள்வாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.093  
புரை செய் வல்வினை தீர்க்கும்   பண் - பியந்தைக்காந்தாரம்   (திருத்தெங்கூர் வெள்ளிமலையீசுவரர் பெரியாம்பிகையம்மை)

புரை செய் வல்வினை தீர்க்கும் புண்ணியர்; விண்ணவர்
போற்ற,
கரை செய் மால் கடல் நஞ்சை உண்டவர்; கருதலர்
புரங்கள்
இரை செய்து ஆர் அழலூட்டி, உழல்பவர், இடுபலிக்கு;
எழில் சேர்
விரை செய் பூம்பொழில் தெங்கூர் வெள்ளி அம் குன்று
அமர்ந்தாரே.

[1]
வெந்த நீற்றினர் தெங்கூர் வெள்ளி அம் குன்று
அமர்ந்தாரை,
கந்தம் ஆர் பொழில் சூழ்ந்த காழியுள் ஞானசம்பந்தன்,
சந்தம் ஆயின பாடல் தண்தமிழ் பத்தும் வல்லார்மேல்,
பந்தம் ஆயின பாவம் பாறுதல் தேறுதல் பயனே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.016  
நிணம் படு சுடலையில், நீறு   பண் - காந்தாரபஞ்சமம்   (திருக்கொள்ளிக்காடு அக்கினீசுவரர் பஞ்சினுமெல்லடியம்மை)

நிணம் படு சுடலையில், நீறு பூசி நின்று,
இணங்குவர், பேய்களோடு; இடுவர், மாநடம்;
உணங்கல் வெண் தலைதனில் உண்பர்; ஆயினும்,
குணம் பெரிது உடையர் நம் கொள்ளிக்காடரே.

[1]
நல்-தவர் காழியுள் ஞானசம்பந்தன்,
குற்றம் இல் பெரும் புகழ்க் கொள்ளிக்காடரைச்
சொல்-தமிழ் இன் இசைமாலை, சோர்வு இன்றிக்
கற்றவர், கழல் அடி காண வல்லரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.109  
நீலம் ஆர்தரு கண்டனே! நெற்றி   பண் - நட்டராகம்   (திருக்கோட்டூர் கொழுந்தீசுவரர் தேன்மொழிப்பாவையம்மை)

நீலம் ஆர்தரு கண்டனே! நெற்றி ஓர் கண்ணனே! ஒற்றை
விடைச்
சூலம் ஆர்தரு கையனே! துன்று பைம்பொழில்கள் சூழ்ந்து
அழகு ஆய
கோல மா மலர் மணம் கமழ் கோட்டூர் நற்கொழுந்தே!
என்று எழுவார்கள்
சால நீள் தலம் அதன் இடைப் புகழ் மிகத் தாங்குவர்,
பாங்காலே.

[1]
பந்து உலா விரல் பவளவாய்த் தேன் மொழிப்பாவையோடு
உரு ஆரும்
கொந்து உலாம் மலர் விரி பொழில் கோட்டூர்
நற்கொழுந்தினை, செழும் பவளம்
வந்து உலாவிய காழியுள் ஞானசம்பந்தன் வாய்ந்து
உரைசெய்த
சந்து உலாம் தமிழ்மாலைகள் வல்லவர் தாங்குவர்,
புகழாலே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.061  
ஆதியன், ஆதிரையன், அனல் ஆடிய   பண் - பஞ்சமம்   (திருவெண்டுறை வெண்டுறைநாதேசுவரர் வேனெடுங்கண்ணியம்மை)

ஆதியன், ஆதிரையன், அனல் ஆடிய ஆர் அழகன்,
பாதி ஒர் மாதினொடும் பயிலும் பரமாபரமன்,
போது இயலும் முடிமேல் புனலோடு அரவம் புனைந்த
வேதியன், மாதிமையால் விரும்பும்(ம்) இடம் வெண்டுறையே.

[1]
திண் அமரும் புரிசைத் திரு வெண்டுறை மேயவனை,
தண் அமரும் பொழில் சூழ்தரு சண்பையர் தம் தலைவன்-
எண் அமர் பல்கலையான், இசை ஞானசம்பந்தன்-சொன்ன
பண் அமர் பாடல் வல்லார் வினை ஆயின பற்று அறுமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.042  
நிறை வெண் திங்கள் வாள்முக   பண் - கொல்லிக்கௌவாணம்   (திருச்சிற்றேமம் பொன்வைத்தநாதர் அகிலாண்டேசுவரியம்மை)

நிறை வெண் திங்கள் வாள்முக மாதர் பாட, நீள்சடைக்
குறை வெண் திங்கள் சூடி, ஓர் ஆடல் மேய கொள்கையான்-
சிறைவண்டு யாழ்செய் பைம்பொழில் பழனம் சூழ்
சிற்றேமத்தான்;
இறைவன்! என்றே உலகு எலாம் ஏத்த நின்ற பெருமானே.

[1]
கல்லிலோதம் மல்குதண் கானல்சூழ்ந்த காழியான்
நல்லவாய வின்றமிழ் நவிலும்ஞான சம்பந்தன்
செல்வனூர்சிற் றேமத்தைப் பாடல்சீரார் நாவினால்
வல்லராகி வாழ்த்துவார் அல்லலின்றி வாழ்வரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.051  
நீருள் ஆர் கயல் வாவி   பண் - சீகாமரம்   (திருக்களர் களர்முளையீசுவரர் அழகேசுவரியம்மை)

நீருள் ஆர் கயல் வாவி சூழ் பொழில், நீண்ட மா வயல்,
ஈண்டு மா மதில்,
தேரின் ஆர் மறுகில் விழா மல்கு திருக்களருள
ஊர் உளார் இடு பிச்சை பேணும் ஒருவனே! ஒளிர்
செஞ்சடை(ம்) மதி
ஆர நின்றவனே! அடைந்தார்க்கு அருளாயே!

[1]
இந்து வந்து எழும் மாட வீதி எழில் கொள் காழி(ந்) நகர்க் கவுணியன்,
செந்து நேர் மொழியார் அவர் சேரும் திருக்களருள
அந்தி அன்னது ஓர் மேனியானை, அமரர் தம் பெருமானை, ஞானசம்
பந்தன் சொல் இவைபத்தும் பாட, தவம் ஆமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.022  
சிலை தனை நடு இடை   பண் - நட்டபாடை   (திருமறைக்காடு (வேதாரண்யம்) மறைக்காட்டீசுரர் யாழைப்பழித்தமொழியம்மை)

சிலை தனை நடு இடை நிறுவி, ஒரு சினம் மலி அரவு அது கொடு, திவி
தலம் மலி சுரர் அசுரர்கள், ஒலி சலசல கடல் கடைவுழி, மிகு
கொலை மலி விடம் எழ, அவர் உடல் குலை தர, அது நுகர்பவன்-எழில்
மலை மலி மதில் புடை தழுவிய மறைவனம் அமர் தரு பரமனே.

[1]
வசை அறு மலர்மகள் நிலவிய மறைவனம் அமர் பரமனை நினை
பசையொடு, மிகு கலைபல பயில் புலவர்கள் புகழ் வழி வளர்தரு
இசை அமர் கழுமல நகர் இறை, தமிழ்விரகனது உரை இயல் வல
இசை மலி தமிழ் ஒருபதும் வல அவர் உலகினில் எழில் பெறுவரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.091  
பொங்கு வெண்மணல் கானல் பொருகடல்   பண் - பியந்தைக்காந்தாரம்   (திருமறைக்காடு (வேதாரண்யம்) வேதாரணியேசுவரர் யாழைப்பழித்தமொழியம்மை)

பொங்கு வெண்மணல் கானல் பொருகடல் திரை தவழ்
முத்தம்
கங்குல் ஆர் இருள் போழும் கலி மறைக்காடு அமர்ந்தார்
தாம்
திங்கள் சூடினரேனும், திரிபுரம் எரித்தனரேனும்,
எங்கும் எங்கள் பிரானார் புகழ் அலது, இகழ் பழி இலரே.

[1]
மை உலாம் பொழில் சூழ்ந்த மா மறைக்காடு
அமர்ந்தாரைக்
கையினால் தொழுது எழுவான், காழியுள் ஞானசம்பந்தன்,
செய்த செந்தமிழ் பத்தும் சிந்தையுள் சேர்க்க வல்லார்,
போய்,
பொய் இல் வானவரோடும் புக வலர்; கொள வலர், புகழே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.076  
கல் பொலி சுரத்தின் எரி   பண் - சாதாரி   (திருமறைக்காடு (வேதாரண்யம்) வேதாரணியேசுவரர் யாழைப்பழித்தமொழியம்மை)

கல் பொலி சுரத்தின் எரி கானின் இடை மாநடம் அது ஆடி, மடவார்
இல் பலி கொளப் புகுதும் எந்தை பெருமானது இடம் என்பர் புவிமேல்
மல் பொலி கலிக் கடல் மலைக்குவடு எனத் திரை கொழித்த மணியை
வில் பொலி நுதல், கொடி இடை, கனிகைமார் கவரும் வேதவனமே.

[1]
மந்த முரவம் கடல் வளம் கெழுவு காழிபதி மன்னு கவுணி,
வெந்த பொடி நீறு அணியும் வேதவனம் மேவு சிவன் இன் அருளினால்,
சந்தம் இவை தண் தமிழின் இன் இசை எனப் பரவு பாடல் உலகில்,
பந்தன் உரை கொண்டு மொழிவார்கள் பயில்வார்கள், உயர்
வான் உலகமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.037  
சதுர மறைதான் துதிசெய்து வணங்கும்
மதுரம்
  பண் - இந்தளம்   (திருமறைக்காடு (வேதாரண்யம்) வேதாரணியேசுவரர் யாழைப்பழித்தமொழியம்மை)

சதுர மறைதான் துதிசெய்து வணங்கும்
மதுரம் பொழில் சூழ் மறைக்காட்டு உறை மைந்தா!
இது நன்கு இறை வைத்து அருள்செய்க, எனக்கு உன்
கதவம் திருக்காப்புக் கொள்ளும் கருத்தாலே!

[1]
காழி நகரான் கலை ஞானசம்பந்தன்
வாழி மறைக்காடனை வாய்ந்து அறிவித்த
ஏழ் இன் இசைமாலை ஈர் ஐந்துஇவை வல்லார்,
வாழி உலகோர் தொழ, வான் அடைவாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.111  
தளிர் இள வளர் என   பண் - நட்டராகம்   (திருவாய்மூர் வாய்மூரீசுவரர் பாலினுநன்மொழியம்மை)

தளிர் இள வளர் என உமை பாட, தாளம்(ம்) இட, ஓர்
கழல் வீசி,
கிளர் இள மணி அரவு அரை ஆர்த்து, ஆடும் வேடக்
கிறிமையார்;
விளர் இளமுலையவர்க்கு அருள் நல்கி வெண் நீறு
அணிந்து, ஓர் சென்னியின் மேல்
வளர் இளமதியமொடு, இவராணீர் வாய்மூர் அடிகள்
வருவாரே.

[1]
திங்களொடு அரு வரைப் பொழில் சோலைத் தேன் நலம்
கானல் அம் திரு வாய்மூர்,
அங்கமொடு அருமறை ஒலி பாடல் அழல் நிற வண்ணர்தம்
அடி பரவி,
நங்கள் தம் வினை கெட மொழிய வல்ல ஞானசம்பந்தன்
தமிழ் மாலை
தங்கிய மனத்தினால் தொழுது எழுவார் தமர் நெறி,
உலகுக்கு ஓர் தவநெறியே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.085  
வேய் உறு தோளி பங்கன்,   பண் - பியந்தைக்காந்தாரம்   (திருமறைக்காடு (வேதாரண்யம்) )

வேய் உறு தோளி பங்கன், விடம் உண்ட கண்டன்,
மிகநல்ல வீணை தடவி,
மாசு அறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்து, என்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன் வியாழம், வெள்ளி,
சனி, பாம்பு இரண்டும், உடனே
ஆசு அறு; நல்ல நல்ல; அவை நல்ல நல்ல,
அடியார் அவர்க்கு மிகவே.

[1]
தேன் அமர் பொழில் கொள் ஆலை விளை செந்நெல் துன்னி,
வளர் செம்பொன் எங்கும் நிகழ,
நான்முகன் ஆதி ஆய பிரமாபுரத்து
மறைஞான ஞானமுனிவன்,
தான் உறு கோளும் நாளும் அடியாரை வந்து
நலியாத வண்ணம் உரை செய்
ஆன சொல் மாலை ஓதும் அடியார்கள், வானில்
அரசு ஆள்வர்; ஆணை நமதே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.076  
வாடிய வெண்தலை மாலை சூடி,   பண் - காந்தாரம்   (திருஅகத்தியான்பள்ளி அகத்தீசுவரர் மங்கைநாயகியம்மை)

வாடிய வெண்தலை மாலை சூடி, வயங்கு இருள
நீடு உயர் கொள்ளி விளக்கும் ஆக, நிவந்து எரி
ஆடிய எம்பெருமான் அகத்தியான் பள்ளியைப்
பாடிய சிந்தையினார்கட்கு இல்லை ஆம், பாவமே.

[1]
ஞாலம் மல்கும் தமிழ் ஞானசம்பந்தன், மா மயில்
ஆலும் சோலை புடை சூழ் அகத்தியான் பள்
சூலம் நல்ல படையான் அடி தொழுது ஏத்திய
மாலை வல்லார் அவர் தங்கள் மேல் வினை மாயுமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.104  
பொடி கொள் மேனி வெண்   பண் - நட்டராகம்   (திருக்கடிக்குளம் கற்பகேசுவரர் சவுந்தரநாயகியம்மை)

பொடி கொள் மேனி வெண் நூலினர், தோலினர், புலி உரி
அதள் ஆடை,
கொடி கொள் ஏற்றினர், மணி, கிணின் என வரு குரை
கழல் சிலம்பு ஆர்க்க,
கடி கொள் பூம்பொழில் சூழ்தரு கடிக்குளத்து உறையும்
கற்பகத்தை, தம்
முடிகள் சாய்த்து அடி வீழ்தரும் அடியரை முன்வினை
மூடாவே.

[1]
தனம் மலி புகழ் தயங்கு பூந்தராயவர் மன்னன் நல்
சம்பந்தன்
மனம் மலி புகழ் வண் தமிழ் மாலைகள் மால் அது ஆய்,
மகிழ்வோடும்,
கனம் மலி கடல் ஓதம் வந்து உலவிய கடிக்குளத்து
அமர்வானை,
இனம் மலிந்து இசை பாட வல்லார்கள், போய்
இறைவனோடு உறைவாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.017  
மனம் ஆர்தரு மடவாரொடு மகிழ்   பண் - நட்டபாடை   (திருஇடும்பாவனம் சற்குணநாதர் மங்களநாயகியம்மை)

மனம் ஆர்தரு மடவாரொடு மகிழ் மைந்தர்கள் மலர் தூய்,
தனம் ஆர்தரு, சங்கக் கடல் வங்கத்திரள் உந்தி,
சினம் ஆர்தரு திறல் வாள் எயிற்று அரக்கன் மிகு, குன்றில்
இன மா தவர் இறைவர்க்கு இடம் இடும்பாவனம் இதுவே.

[1]
கொடி ஆர் நெடுமாடக் குன்றளூரின் கரைக் கோல
இடி ஆர் கடல் அடி வீழ்தரும் இடும்பாவனத்து இறையை,
அடி ஆயும் அந்தணர் காழியுள் அணி ஞானசம்பந்தன்
படியால் சொன்ன பாடல் சொல, பறையும், வினைதானே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.033  
நீர் இடைத் துயின்றவன், தம்பி,   பண் - கொல்லி   (திருவுசாத்தானம் (கோவிலூர்) மந்திரபுரீசுவரர் பெரியநாயகியம்மை)

நீர் இடைத் துயின்றவன், தம்பி, நீள் சாம்புவான்,
போர் உடைச் சுக்கிரீவன், அனுமான், தொழ;
கார் உடை நஞ்சு உண்டு, காத்து; அருள்செய்த எம்
சீர் உடைச் சேடர் வாழ் திரு உசாத்தானமே.

[1]
வரை திரிந்து இழியும் நீர் வளவயல் புகலி மன்,
திரை திரிந்து எறிகடல்-திரு உசாத்தானரை
உரை தெரிந்து உணரும் சம்பந்தன், ஒண் தமிழ் வல்லார்
நரை திரை இன்றியே நன்நெறி சேர்வரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.014  
வானில் பொலிவு எய்தும் மழை   பண் - நட்டபாடை   (திருக்கொடுங்குன்றம் (பிரான்மலை) கொடுங்குன்றேசுவரர் (எ) கொடுங்குன்றீசர் அமுதவல்லியம்மை (எ) குயிலமுதநாயகி)

வானில் பொலிவு எய்தும் மழை மேகம் கிழித்து ஓடி,
கூனல் பிறை சேரும் குளிர் சாரல் கொடுங்குன்றம்
ஆனில் பொலி ஐந்தும் அமர்ந்து ஆடி, உலகு ஏத்த,
தேனின் பொலி மொழியாளொடும் மேயான் திரு நகரே.

[1]
கூனல் பிறை சடைமேல் மிக உடையான் கொடுங்குன்றைக்
கானல் கழுமலமா நகர்த் தலைவன் நல கவுணி,
ஞானத்து உயர் சம்பந்தன நலம் கொள் தமிழ் வல்லார்,
ஊனத்தொடு துயர் தீர்ந்து, உலகு ஏத்தும் எழிலோரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.094  
நீலமாமிடற்று ஆலவாயிலான்
பால் அது ஆயினார்
  பண் - குறிஞ்சி   (திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)

நீலமாமிடற்று ஆலவாயிலான்
பால் அது ஆயினார் ஞாலம் ஆள்வரே.

[1]
அடிகள் ஆலவாய், படி கொள் சம்பந்தன்,
முடிவு இல் இன்தமிழ் செடிகள் நீக்குமே.
[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.120  
மங்கையர்க்கு அரசி வளவர்கோன் பாவை,   பண் - புறநீர்மை   (திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)

மங்கையர்க்கு அரசி வளவர்கோன் பாவை, வரி வளைக்
கைம் மடமானி,
பங்கயச்செல்வி, பாண்டிமாதேவி பணி செய்து நாள்தொறும் பரவ,
பொங்கு அழல் உருவன், பூதநாயகன், நால்வேதமும்
பொருள்களும் அருள
அம் கயல்கண்ணிதன்னொடும் அமர்ந்த ஆலவாய் ஆவதும்
இதுவே.

[1]
பல்-நலம் புணரும் பாண்டிமாதேவி, குலச்சிறை, எனும் இவர் பணியும்
அந் நலம் பெறு சீர் ஆலவாய் ஈசன் திருவடி ஆங்கு அவை போற்றி,
கன்னல் அம் பெரிய காழியுள் ஞானசம்பந்தன் செந்தமிழ் இவை கொண்டு
இன்நலம் பாட வல்லவர், இமையோர் ஏத்த, வீற்றிருப்பவர், இனிதே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.095  
தோடு ஓர் காதினன்; பாடு   பண் - குறிஞ்சி   (திருவிடைமருதூர் மருதீசர் நலமுலைநாயகியம்மை)

தோடு ஓர் காதினன்; பாடு மறையினன்-
காடு பேணி நின்று ஆடும் மருதனே.

[1]
கருது சம்பந்தன், மருதர் அடி பாடி,
பெரிதும் தமிழ் சொல்ல, பொருத வினை போமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.051  
செய்யனே! திரு ஆலவாய் மேவிய
ஐயனே!
  பண் - கௌசிகம்   (திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)

செய்யனே! திரு ஆலவாய் மேவிய
ஐயனே! அஞ்சல்! என்று அருள்செய், எனை;
பொய்யர் ஆம் அமணர் கொளுவும் சுடர்
பையவே சென்று, பாண்டியற்கு ஆகவே!

[1]
அப்பன்-ஆலவாய் ஆதி அருளினால்,
வெப்பம் தென்னவன் மேல் உற, மேதினிக்கு
ஒப்ப, ஞானசம்பந்தன் உரைபத்தும்,
செப்ப வல்லவர் தீது இலாச் செல்வரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.047  
காட்டு மா அது உரித்து,   பண் - கௌசிகம்   (திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)

காட்டு மா அது உரித்து, உரி போர்த்து உடல்,
நாட்டம் மூன்று உடையாய்! உரைசெய்வன், நான்;
வேட்டு, வேள்வி செய்யா அமண்கையரை
ஓட்டி வாது செயத் திரு உள்ளமே?

[1]
செந்து எனா முரலும் திரு ஆலவாய்
மைந்தனே! என்று, வல் அமண் ஆசு அற,
சந்தம் ஆர் தமிழ் கேட்ட மெய்ஞ் ஞானசம்-
பந்தன் சொல் பகரும், பழி நீங்கவே!

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.108  
வேத வேள்வியை நிந்தனை செய்து   பண் - பழம்பஞ்சுரம்   (திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)

வேத வேள்வியை நிந்தனை செய்து உழல்
ஆதம் இ(ல்)லி அமணொடு தேரரை
வாதில் வென்று அழிக்கத் திரு உள்ளமே?
பாதி மாது உடன் ஆய பரமனே!
ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென்-
ஆலவாயில் உறையும் எம் ஆதியே!

[1]
கூடல் ஆலவாய்க்கோனை விடைகொண்டு
வாடல் மேனி அமணரை வாட்டிட,
மாடக் காழிச் சம்பந்தன் மதித்த இப்
பாடல் வல்லவர் பாக்கியவாளரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.070  
பிரமன் ஊர், வேணுபுரம், புகலி,   பண் - காந்தாரம்   (திருஆலவாய் (மதுரை) பிரமபுரீசர் திருநிலைநாயகி)

பிரமன் ஊர், வேணுபுரம், புகலி, வெங்குரு, பெருநீர்த்
தோணி
புரம், மன்னு பூந்தராய், பொன் அம் சிரபுரம், புறவம்,
சண்பை,
அரன் மன்னு தண் காழி, கொச்சைவயம், உள்ளிட்டு அங்கு
ஆதி ஆய
பரமன் ஊர் பன்னிரண்டு ஆய் நின்ற திருக்கழுமலம் நாம்
பரவும் ஊரே.

[1]
கொச்சைவயம், பிரமன் ஊர், புகலி, வெங்குரு, புறவம்,
காழி,
நிச்சல் விழவு ஓவா நீடு ஆர் சிரபுரம், நீள் சண்பை மூதூர்,
நச்சு இனிய பூந்தராய், வேணுபுரம், தோணிபுரம், ஆகி
நம்மேல்
அச்சங்கள் தீர்த்து அருளும் அம்மான் கழுமலம் நாம் அமரும் ஊரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.039  
மானின் நேர் விழி மாதராய்!   பண் - கொல்லி   (திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)

மானின் நேர் விழி மாதராய்! வழுதிக்கு மா பெருந்தேவி! கேள்
பால் நல் வாய் ஒரு பாலன் ஈங்கு இவன் என்று நீ பரிவு எய்திடேல்!
ஆனைமாமலை ஆதி ஆய இடங்களில் பல அல்லல் சேர்
ஈனர்கட்கு எளியேன் அலேன்-திரு ஆலவாய் அரன் நிற்கவே.

[1]
எக்கர் ஆம் அமண்கையருக்கு எளியேன் அலேன், திரு ஆலவாய்ச்
சொக்கன் என் உள் இருக்கவே, துளங்கும் முடித்
தென்னன்முன், இவை
தக்க சீர்ப் புகலிக்கு மன்-தமிழ் நாதன், ஞானசம்பந்தன்-வாய்
ஒக்கவே உரைசெய்த பத்தும் உரைப்பவர்க்கு இடர் இல்லையே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.066  
மந்திரம் ஆவது நீறு; வானவர்   பண் - காந்தாரம்   (திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)

மந்திரம் ஆவது நீறு; வானவர் மேலது நீறு;
சுந்தரம் ஆவது நீறு; துதிக்கப்படுவது நீறு;
தந்திரம் ஆவது நீறு; சமயத்தில் உள்ளது நீறு;
செந்துவர்வாய் உமை பங்கன் திரு ஆலவாயான் திருநீறே.

[1]
ஆற்றல் அடல் விடை ஏறும் ஆலவாயான் திருநீற்றைப்
போற்றி, புகலி நிலாவும் பூசுரன் ஞானசம்பந்தன்,
தேற்றி, தென்னன் உடல் உற்ற தீப்பிணி ஆயின தீரச்
சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.087  
தளிர் இள வளர் ஒளி   பண் - சாதாரி   (திருஆலவாய் (மதுரை) தெர்ப்பாரணியர் போகமார்த்தபூண்முலையம்மை)

தளிர் இள வளர் ஒளி தனது எழில் தரு திகழ் மலைமகள்
குளிர் இள வளர் ஒளி வன முலை இணை அவை குலவலின்,
நளிர் இள வளர் ஒளி மருவும் நள்ளாறர் தம் நாமமே,
மிளிர் இள வளர் எரி இடில், இவை பழுது இலை;
மெய்ம்மையே!

[1]
சிற்றிடை அரிவை தன் வனமுலை இணையொடு செறிதரும்
நல்-திறம் உறு, கழுமல நகர் ஞானசம்பந்தன
கொற்றவன் எதிர் இடை எரியினில் இட, இவை கூறிய
சொல்-தெரி ஒருபதும் அறிபவர் துயர் இலர்; தூயரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.054  
வாழ்க அந்தணர், வானவர், ஆன்   பண் - கௌசிகம்   (திருஆலவாய் (மதுரை) )

வாழ்க அந்தணர், வானவர், ஆன் இனம்!
வீழ்க, தண்புனல்! வேந்தனும் ஓங்குக!
ஆழ்க, தீயது எல்லாம்! அரன் நாமமே
சூழ்க! வையகமும் துயர் தீர்கவே!

[1]
அற்று அன்றி அம் தண் மதுரைத் தொகை ஆக்கினானும்,
தெற்று என்ற தெய்வம் தெளியார் கரைக்கு ஓலை தெண் நீர்ப்
பற்று இன்றிப் பாங்கு எதிர்வின் ஊரவும், பண்பு நோக்கில்,
பெற்றொன்று உயர்த்த பெருமான் பெருமானும் அன்றே!

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.032  
வன்னியும் மத்தமும் மதி பொதி   பண் - கொல்லி   (திருஆலவாய் (மதுரை) )

வன்னியும் மத்தமும் மதி பொதி சடையினன்,
பொன் இயல் திருவடி புதுமலர் அவைகொடு
மன்னிய மறையவர் வழிபட, அடியவர்
இன் இசை பாடல் ஆர் ஏடகத்து ஒருவனே.

[1]
கோடு, சந்தனம், அகில், கொண்டு இழி வைகை நீா
ஏடு சென்று அணைதரும் ஏடகத்து ஒருவனை,
நாடு தென்புகலியுள் ஞானசம்பந்தன
பாடல் பத்து இவை வலார்க்கு இல்லை ஆம், பாவமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.052  
வீடு அலால் அவாய் இலாஅய்,   பண் - கௌசிகம்   (திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)

வீடு அலால் அவாய் இலாஅய், விழுமியார்கள் நின்கழல்
பாடல் ஆலவாய் இலாய்! பரவ நின்ற பண்பனே!
காடு அலால் அவாய் இலாய்! கபாலி! நீள்கடி(ம்) மதில்
கூடல் ஆலவாயிலாய்! குலாயது என்ன கொள்கையே?

[1]
போய நீர் வளம் கொளும் பொரு புனல் புகலியான்-
பாய கேள்வி ஞானசம்பந்தன்-நல்ல பண்பினால்,
ஆய சொல்லின் மாலைகொண்டு, ஆலவாயில் அண்ணலைத்
தீய தீர எண்ணுவார்கள் சிந்தை ஆவர், தேவரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.115  
ஆல நீழல் உகந்தது இருக்கையே;   பண் - பழம்பஞ்சுரம்   (திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)

ஆல நீழல் உகந்தது இருக்கையே; ஆன பாடல் உகந்தது இருக்கையே;
பாலின் நேர் மொழியாள் ஒருபங்கனே; பாதம் ஓதலர் சேர் புர பங்கனே;
கோலம் நீறு அணி மே தகு பூதனே; கோது இலார் மனம் மேவிய பூதனே;
ஆல நஞ்சு அமுது உண்ட களத்தனே ஆலவாய் உறை
அண்டர்கள் அத்தனே.

[1]
ஈன ஞானிகள் தம்மொடு விரகனே! ஏறு பல்பொருள்
முத்தமிழ் விரகனே,
ஆன காழியுள் ஞானசம்பந்தனே ஆலவாயினில் மேய சம்பந்தனே!
ஆன வானவர் வாயின் உளத்தனே! அன்பர் ஆனவர்
வாயினுள் அத்தனே!
நான் உரைத்தன செந்தமிழ் பத்துமே வல்லவர்க்கு, இவை
நற்று அமிழ் பத்துமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.024  
மண்ணின் நல்ல வண்ணம் வாழல்   பண் - கொல்லி   (திருக்கழுமலம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)

மண்ணின் நல்ல வண்ணம் வாழல் ஆம், வைகலும்;
எண்ணின் நல்ல கதிக்கு யாதும் ஓர் குறைவு இலை
கண்ணின் நல்ல(ஃ)து உறும் கழுமல வள நகர்
பெண்ணின் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே!

[1]
கருந் தடந் தேன் மல்கு கழுமல வள நகர்ப்
பெருந்தடங் கொங்கையொடு இருந்த எம்பிரான் தனை
அருந்தமிழ் ஞானசம்பந்தன செந்தமிழ்
விரும்புவார் அவர்கள், போய், விண்ணுலகு ஆள்வரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.100  
நீடு அலர் சோதி வெண்பிறையோடு   பண் - குறிஞ்சி   (திருப்பரங்குன்றம் பரங்கிரிநாதர் ஆவுடைநாயகியம்மை)

நீடு அலர் சோதி வெண்பிறையோடு நிரை கொன்றை
சூடலன், அந்திச் சுடர் எரி ஏந்திச் சுடுகானில்
ஆடலன், அம் சொல் அணியிழையாளை ஒருபாகம்
பாடலன், மேய நன்நகர்போலும் பரங்குன்றே.

[1]
தட மலி பொய்கைச் சண்பை மன் ஞானசம்பந்தன்,
படம் மலி நாகம் அரைக்கு அசைத்தான் தன் பரங்குன்றைத்
தொடை மலி பாடல் பத்தும் வல்லார், தம் துயர் போகி,
விடம் மலி கண்டன் அருள் பெறும் தன்மை மிக்கோரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.088  
முற்றும் சடை முடி மேல்   பண் - குறிஞ்சி   (திருஆப்பனூர் ஆப்பனூரீசுவரர் அம்பிகையம்மை)

முற்றும் சடை முடி மேல் முதிரா இளம்பிறையன்,
ஒற்றைப் பட அரவம் அது கொண்டு அரைக்கு அணிந்தான்,
செற்றம் இல் சீரானைத் திரு ஆப்பனூரானைப்
பற்றும் மனம் உடையார் வினை பற்று அறுப்பாரே.

[1]
அம் தண்புனல் வைகை அணி ஆப்பனூர் மேய
சந்த மலர்க்கொன்றை சடைமேல் உடையானை,
நந்தி அடி பரவும் நல ஞானசம்பந்தன்
சந்தம் இவை வல்லார் தடுமாற்று அறுப்பாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.026  
வெங் கள் விம்மு வெறி   பண் - தக்கராகம்   (திருப்புத்தூர் புத்தூரீசர் சிவகாமியம்மை)

வெங் கள் விம்மு வெறி ஆர் பொழில் சோலை
திங்களோடு திளைக்கும் திருப்புத்தூர்,
கங்கை தங்கும் முடியார் அவர்போலும்
எங்கள் உச்சி உறையும் இறையாரே.

[1]
நல்ல கேள்வி ஞானசம்பந்தன்
செல்வர் சேடர் உறையும் திருப்புத்தூர்ச்
சொல்லல் பாடல் வல்லார் தமக்கு என்றும்
அல்லல் தீரும்; அவலம் அடையாவே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.064  
அறை ஆர் புனலும் மா   பண் - தக்கேசி   (திருப்பூவணம் பூவணநாதர் மின்னாம்பிகையம்மை)

அறை ஆர் புனலும் மா மலரும் ஆடு அரவு ஆர் சடைமேல்
குறை ஆர் மதியும் சூடி, மாது ஓர் கூறு உடையான் இடம் ஆம்
முறையால் முடி சேர் தென்னர் சேரர் சோழர்கள் தாம் வணங்கும்,
திறை ஆர் ஒளி சேர், செம்மை ஓங்கும், தென் திருப்பூவணமே.

[1]
திண் ஆர் புரிசை மாடம் ஓங்கும் தென்திருப்பூவணத்துப்
பெண் ஆர் மேனி எம் இறையை, பேர் இயல் இன்தமிழால்,
நண்ணார் உட்கக் காழி மல்கும் ஞானசம்பந்தன் சொன்ன
பண் ஆர் பாடல் பத்தும் வல்லார் பயில்வது வான் இடையே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.020  
மாது அமர் மேனியன் ஆகி,   பண் - காந்தாரபஞ்சமம்   (திருப்பூவணம் பூவணநாதர் மின்னாம்பிகையம்மை)

மாது அமர் மேனியன் ஆகி, வண்டொடு
போது அமர் பொழில் அணி பூவணத்து உறை
வேதனை, விரவலர் அரணம் மூன்று எய்த
நாதனை, அடி தொழ, நன்மை ஆகுமே.

[1]
புண்ணியர் தொழுது எழு பூவணத்து உறை
அண்ணலை அடி தொழுது, அம் தண் காழியுள
நண்ணிய அருமறை ஞானசம்பந்தன்
பண்ணிய தமிழ் சொல, பறையும், பாவமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.026  
பிடி எலாம் பின் செல,   பண் - கொல்லி   (திருக்கானப்பேர் (திருக்காளையார்கோயில்) காளையீசுவரர் மகமாயியம்மை)

பிடி எலாம் பின் செல, பெருங்கை மா மலர் தழீஇ,
விடியலே தடம் மூழ்கி, விதியினால் வழிபடும்
கடி உலாம் பூம்பொழில் கானப்பேர் அண்ணல்! நின்
அடி அலால் அடை சரண் உடையரோ, அடியரே?

[1]
காட்டு அகத்து ஆடலான் கருதிய கானப்பேர்
கோட்டகத்து இள வரால் குதிகொளும் காழியான்-
நாட்டு அகத்து ஓங்கு சீர் ஞானசம்பந்தன்
பாட்டு அகத்து இவை வலார்க்கு இல்லை ஆம், பாவமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.099  
வம்பு ஆர் குன்றம், நீடு   பண் - குறிஞ்சி   (திருக்குற்றாலம் குறும்பலாவீசுவரர் குழல்வாய்மொழியம்மை)

வம்பு ஆர் குன்றம், நீடு உயர் சாரல், வளர் வேங்கைக்
கொம்பு ஆர் சோலைக் கோல வண்டு யாழ்செய் குற்றாலம்
அம் பால் நெய்யோடு ஆடல் அமர்ந்தான், அலர்கொன்றை
நம்பான், மேய நன்நகர்போலும்; நமரங்காள்!

[1]
மாட வீதி வருபுனல் காழியார் மன்னன்,
கோடல் ஈன்று கொழு முனை கூம்பும் குற்றாலம்
நாட வல்ல, நல்-தமிழ் ஞானசம்பந்தன்,
பாடல்பத்தும் பாட, நம் பாவம் பறையுமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.071  
திருந்த மதி சூடி, தெண்   பண் - காந்தாரம்   (திருக்குறும்பலா (குற்றாலம்) குறும்பலாநாதர் குழன்மொழியம்மை)

திருந்த மதி சூடி, தெண் நீர் சடைக் கரந்து, தேவி பாகம்
பொகுந்தி, பொருந்தாத வேடத்தால் காடு உறைதல் புரிந்த
செல்வர்
இருந்த இடம் வினவில் ஏலம் கமழ் சோலை இனவண்டு
யாழ்செய்,
குருந்த மணம் நாறும் குன்று இடம் சூழ் தணசாரல்,
குறும்பலாவே.

[1]
கொம்பு ஆர் பூஞ்சோலைக் குறும்பலா மேவிய கொல்
ஏற்று அண்ணல்,
நம்பான், அடி பரவும் நால்மறையான் ஞானசம்பந்தன்
சொன்ன
இன்பு ஆய பாடல் இவைபத்தும் வல்லார், விரும்பிக்
கேட்பார்
தம்பால தீவினைகள் போய் அகலும்; நல்வினைகள் தளரா
அன்றே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.092  
மருந்து அவை; மந்திரம், மறுமை   பண் - சாதாரி   (திருநெல்வேலி )

மருந்து அவை; மந்திரம், மறுமை நன்நெறி அவை; மற்றும் எல்லாம்;
அருந்துயர் கெடும்; அவர் நாமமே சிந்தை செய், நன் நெஞ்சமே!
பொருந்து தண்புறவினில் கொன்றை பொன் சொரிதர, துன்று பைம்பூஞ்-
செருந்தி செம்பொன்மலர் திரு நெல்வேலி உறை செல்வர் தாமே.

[1]
பெருந் தண் மா மலர்மிசை அயன் அவன் அனையவர், பேணு கல்வித்
திருந்து மா மறையவர், திரு நெல்வேலி உறை செல்வர் தம்மை,
பொருந்து நீர்த்தடம் மல்கு புகலியுள் ஞானசம்பந்தன் சொன்ன
அருந்தமிழ் மாலைகள் பாடி ஆட, கெடும், அருவினையே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.010  
அலை, வளர் தண்மதியோடு அயலே   பண் - காந்தாரபஞ்சமம்   (திருஇராமேச்சுரம் இராமநாதேசுவரர் பர்வதவர்த்தனி)

அலை, வளர் தண்மதியோடு அயலே அடக்கி, உமை
முலை வளர் பாகம் முயங்க வல்ல முதல்வன்; முனி;
இலை வளர் தாழைகள் விம்மு கானல் இராமேச்சுரம்,
தலை வளர் கோல நல் மாலையன்தான் இருந்து ஆட்சியே.

[1]
பகலவன் மீது இயங்காமைக் காத்த பதியோன்தனை
இகல் அழிவித்தவன் ஏத்து கோயில் இராமேச்சுரம்,
புகலியுள் ஞானசம்பந்தன் சொன்ன தமிழ், புந்தியால்,
அகலிடம் எங்கும் நின்று, ஏத்த வல்லார்க்கு இல்லை, அல்லலே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.101  
திரிதரு மா மணி நாகம்   பண் - சாதாரி   (திருஇராமேச்சுரம் இராமநாதேசுவரர் பர்வதவர்த்தனி)

திரிதரு மா மணி நாகம் ஆடத் திளைத்து, ஒரு தீ-அழல்வாய்,
நரி கதிக்க, எரி ஏந்தி ஆடும் நலமே தெரிந்து உணர்வார்
எரி கதிர் முத்தம் இலங்கு கானல் இராமேச்சுரம் மேய,
விரி கதிர் வெண்பிறை மல்கு சென்னி, விமலர்; செயும் செயலே!

[1]
தேவியை வவ்விய தென் இலங்கை அரையன் திறல் வாட்டி
ஏ இயல் வெஞ்சிலை அண்ணல் நண்ணும் இராமேச்சுரத்தாரை,
நா இயல் ஞானசம்பந்தன் நல்ல மொழியால் நவின்று ஏத்தும்
பா இயல் மாலை வல்லார் அவர் தம் வினை ஆயின பற்று அறுமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.123  
நிரை கழல் அரவம் சிலம்பு   பண் - புறநீர்மை   (திருக்கோணமலை கோணீசர் மாதுமையம்மை)

நிரை கழல் அரவம் சிலம்பு ஒலி அலம்பும் நிமலர், நீறு அணி திருமேனி
வரை கெழு மகள் ஓர்பாகமாப் புணர்ந்த வடிவினர், கொடி விடையர்
கரை கெழு சந்தும் கார் அகில் பிளவும் அளப்ப(அ)ருங்
கன மணி வரன்றி,
குரைகடல் ஓதம் நித்திலம் கொழிக்கும் கோணமாமலை அமர்ந்தாரே.

[1]
குற்றம் இலாதார் குரைகடல் சூழ்ந்த கோணமாமலை
அமர்ந்தாரை,
கற்று உணர் கேள்விக் காழியர்பெருமான்-கருத்து உடை
ஞானசம்பந்தன்-
உற்ற செந்தமிழ் ஆர் மாலை ஈர்-ஐந்தும் உரைப்பவர்,
கேட்பவர், உயர்ந்தோர்
சுற்றமும் ஆகித் தொல்வினை அடையார்; தோன்றுவர்,
வான் இடைப் பொலிந்தே.
[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.107  
விருது குன்ற, மாமேரு வில்,   பண் - நட்டராகம்   (திருக்கேதீச்சரம் கேதீச்சுவரர் கௌரிநாயகியம்மை)

விருது குன்ற, மாமேரு வில், நாண் அரவா, அனல் எரி
அம்பா,
பொருது மூஎயில் செற்றவன் பற்றி நின்று உறை பதி
எந்நாளும்
கருதுகின்ற ஊர் கனைகடல் கடி கமழ் பொழில் அணி
மாதோட்டம்,
கருத நின்ற கேதீச்சுரம் கைதொழ, கடுவினை அடையாவே.

[1]
மாடு எலாம் மணமுரசு எனக் கடலினது ஒலி கவர்
மாதோட்டத்து
ஆடல் ஏறு உடை அண்ணல் கேதீச்சுரத்து அடிகளை,
அணி காழி
நாடு உளார்க்கு இறை ஞானசம்பந்தன் சொல் நவின்று எழு
பாமாலைப்
பாடல் ஆயின பாடுமின், பத்தர்காள்! பரகதி பெறல் ஆமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.112  
மாது ஓர் கூறு உகந்து,   பண் - நட்டராகம்   (திருவாடானை ஆதிரத்தினேசுவரர் அம்பாயிரவல்லியம்மை)

மாது ஓர் கூறு உகந்து, ஏறு அது ஏறிய
ஆதியான் உறை ஆடானை
போதினால் புனைந்து, ஏத்துவார் தமை
வாதியா வினை மாயுமே.

[1]
வீடினார் மலி வெங்கடத்து நின்று
ஆடலான் உறை ஆடானை
நாடி, ஞானசம்பந்தன் செந்தமிழ்
பாட, நோய் பிணி பாறுமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.011  
மின் இயல் செஞ்சடை வெண்பிறையன்,   பண் - காந்தாரபஞ்சமம்   (திருப்புனவாயில் புனவாயிலீசுவரர் கருணையீசுவரியம்மை)

மின் இயல் செஞ்சடை வெண்பிறையன், விரி நூலினன்,
பன்னிய நால்மறை பாடி ஆடி, பல ஊர்கள் போய்,
அன்னம் அன்ன(ந்) நடையாளொடும்(ம்) அமரும்(ம்) இடம்
புன்னை நல் மா மலர் பொன் உதிர்க்கும் புனவாயிலே.

[1]
பொன்தொடியாள் உமை பங்கன் மேவும் புனவாயிலை,
கற்றவர்தாம் தொழுது ஏத்த நின்ற கடல் காழியான்-
நல்-தமிழ் ஞானசம்பந்தன்-சொன்ன தமிழ், நன்மையால்
அற்றம் இல் பாடல்பத்து, ஏத்த வல்லார் அருள் சேர்வரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.108  
மின் இயல் செஞ்சடைமேல் விளங்கும்   பண் - வியாழக்குறிஞ்சி   (திருப்பாதாளீச்சரம் )

மின் இயல் செஞ்சடைமேல் விளங்கும் மதி மத்தமொடு நல்ல
பொன் இயல் கொன்றையினான்; புனல் சூடி; பொற்பு அமரும்
அன்னம் அன நடையாள் ஒரு பாகத்து அமர்ந்து அருளி; நாளும்
பன்னிய பாடலினான்; உறை கோயில்-பாதாளே.

[1]
பல்மலர் வைகு பொழில் புடை சூழ்ந்த பாதாளைச் சேர,
பொன் இயல் மாடம் மல்கு புகலி நகர் மன்னன்-
தன் ஒளி மிக்கு உயர்ந்த தமிழ் ஞானசம்பந்தன்-சொன்ன
இன் இசைபத்தும் வல்லார் எழில் வானத்து இருப்பாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.006  
கொட்டமே கமழும் கொள்ளம்பூதூர்
நட்டம் ஆடிய
  பண் - காந்தாரபஞ்சமம்   (திருக்கொள்ளம்பூதூர் வில்வவனேசுவரர் சவுந்தராம்பிகையம்மை)

கொட்டமே கமழும் கொள்ளம்பூதூர்
நட்டம் ஆடிய நம்பனை உள்க,
செல்ல உந்துக சிந்தையார் தொழ,
நல்கும் ஆறு அருள் நம்பனே!

[1]
கொன்றை சேர் சடையான் கொள்ளம்பூதூர்,
நன்று காழியுள் ஞானசம்பந்தன்
இன்று சொல் மாலை கொண்டு ஏத்த வல்லார், போய்,
என்றும் வானவரோடு இருப்பாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.007  
பாடக மெல் அடிப் பாவையோடும்,   பண் - நட்டபாடை   (திருநள்ளாறும் திருஆலவாயும் தெர்ப்பாரணியேசுவரர் சொக்கநாதசுவாமி போகமார்த்தபூண்முலையம்மை மீனாட்சியம்மை)

பாடக மெல் அடிப் பாவையோடும், படு பிணக்காடு இடம் பற்றி நின்று,
நாடகம் ஆடும், நள்ளாறு உடைய, நம்பெருமான்! இது என்கொல் சொல்லாய்
சூடக முன்கை மடந்தைமார்கள் துணைவரொடும் தொழுது ஏத்தி வாழ்த்த,
ஆடகமாடம் நெருங்கு கூடல் ஆலவாயின் கண் அமர்ந்த ஆறே?

[1]
அன்பு உடையானை, அரனை, கூடல் ஆலவாய் மேவியது என்கொல்? என்று,
நன்பொனை, நாதனை, நள்ளாற்றானை, நயம் பெறப் போற்றி, நலம் குலாவும்
பொன் புடை சூழ்தரு மாடக் காழிப் பூசுரன்-ஞானசம்பந்தன்-சொன்ன
இன்பு உடைப் பாடல்கள்பத்தும் வல்லார், இமையவர் ஏத்த இருப்பர் தாமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.033  
ஏடு மலி கொன்றை, அரவு,   பண் - இந்தளம்   (திருநள்ளாறு தெர்ப்பாரணியர் போகமார்த்தபூண்முலையம்மை)

ஏடு மலி கொன்றை, அரவு, இந்து, இள வன்னி,
மாடு அவல செஞ்சடை எம் மைந்தன் இடம் என்பர்
கோடு மலி ஞாழல், குரவு, ஏறு சுரபுன்னை,
நாடு மலி வாசம் அது வீசிய நள்ளாறே.

[1]
ஆடல் அரவு ஆர் சடையன் ஆயிழைதனோடும்
நாடு மலிவு எய்திட இருந்தவன் நள்ளாற்றை,
மாடம் மலி காழி வளர் பந்தனது செஞ்சொல்
பாடல் உடையாரை அடையா, பழிகள் நோயே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.003  
பூ அலர்ந்தன கொண்டு முப்போதும்   பண் - இந்தளம்   (திருத்தெளிச்சேரி பார்வதீசுவரர் சத்தியம்மாளம்மை)

பூ அலர்ந்தன கொண்டு முப்போதும் உம் பொன்கழல்
தேவர் வந்து வணங்கும் மிகு தெளிச்சேரியீர்!
மே வரும் தொழிலாளொடு கேழல்பின் வேடன் ஆம்
பாவகம்கொடு நின்றதுபோலும், நும் பான்மையே?

[1]
திக்கு உலாம், பொழில் சூழ், தெளிச்சேரி எம் செல்வனை,
மிக்க காழியுள் ஞானசம்பந்தன் விளம்பிய
தக்க பாடல்கள்பத்தும் வல்லார்கள், தட முடித்
தொக்க வானவர் சூழ இருப்பவர், சொல்லிலே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.036  
கலை ஆர் மதியோடு உர   பண் - தக்கராகம்   (திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)

கலை ஆர் மதியோடு உர நீரும்
நிலை ஆர் சடையார் இடம் ஆகும்
மலை ஆரமும் மா மணி சந்தோடு
அலை ஆர் புனல் சேரும் ஐயாறே.

[1]
கலை ஆர் கலிக்காழியர் மன்னன்-
நலம் ஆர்தரு ஞானசம்பந்தன்-
அலை ஆர் புனல் சூழும் ஐயாற்றைச்
சொலும் மாலை வல்லார் துயர் வீடே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.120  
பணிந்தவர் அருவினை பற்று அறுத்து   பண் - வியாழக்குறிஞ்சி   (திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)

பணிந்தவர் அருவினை பற்று அறுத்து அருள்செயத்
துணிந்தவன், தோலொடு நூல் துதை மார்பினில்
பிணிந்தவன், அரவொடு பேர் எழில் ஆமை கொண்டு
அணிந்தவன், வள நகர் அம் தண் ஐயாறே.

[1]
நலம் மலி ஞானசம்பந்தனது இன்தமிழ்
அலை மலி புனல் மல்கும் அம் தண் ஐயாற்றினைக்
கலை மலி தமிழ் இவை கற்று வல்லார் மிக
நலம் மலி புகழ் மிகு நன்மையர்தாமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.032  
திருத் திகழ் மலைச்சிறுமியோடு மிகு   பண் - இந்தளம்   (திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)

திருத் திகழ் மலைச்சிறுமியோடு மிகு தேசர்,
உருத் திகழ் எழில் கயிலைவெற்பில் உறைதற்கே
விருப்பு உடைய அற்புதர், இருக்கும் இடம் ஏர் ஆர்
மருத் திகழ் பொழில் குலவு வண் திரு ஐயாறே.

[1]
வாசம் மலியும் பொழில் கொள் வண் திரு ஐயாற்றுள்
ஈசனை, எழில் புகலி மன்னவன் மெய்ஞ்ஞானப்
பூசுரன் உரைத்த தமிழ் பத்தும் இவை வல்லார்,
நேசம் மலி பத்தர் அவர், நின்மலன் அடிக்கே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.113  
உற்று உமை சேர்வது மெய்யினையே;   பண் - பழம்பஞ்சுரம்   (திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)

உற்று உமை சேர்வது மெய்யினையே; உணர்வதும் நின்
அருள் மெய்யினையே;
கற்றவர் காய்வது காமனையே; கனல் விழி காய்வது காமனையே;
அற்றம் மறைப்பதும் உன் பணியே; அமரர்கள் செய்வதும் உன் பணியே;
பெற்று முகந்தது கந்தனையே; பிரமபுரத்தை உகந்தனையே.

[1]
கண் நிகழ் புண்டரிகத்தினனே, கலந்து இரி புண் தரி கத்தினனே,
மண் நிகழும் பரிசு ஏனம் அதே, வானகம் ஏய் வகை சேனம் அதே,
நண்ணி அடிமுடி எய்தலரே; நளிர் மலி சோலையில் எய்து அலரே
பண் இயல் கொச்சை பசுபதியே, பசு மிக ஊர்வர்,
பசுபதியே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.077  
பொன் இயல் பொருப்பு அரையன்   பண் - சாதாரி   (திருமாணிகுழி மாணிக்கமேனியீசுவரர் மாணிக்கவல்லியம்மை)

பொன் இயல் பொருப்பு அரையன் மங்கை ஒரு பங்கர், புனல் தங்கு சடைமேல்
வன்னியொடு மத்தமலர் வைத்த விறல் வித்தகர், மகிழ்ந்து உறைவு இடம்
கன்னி இளவாளை குதிகொள்ள, இள வள்ளை படர் அள்ளல் வயல்வாய்
மன்னி இள மேதிகள் படிந்து, மனை சேர் உதவி
மாணிகுழியே.

[1]
உந்தி வரு தண் கெடிலம் ஓடு புனல் சூழ் உதவி மாணிகுழிமேல்,
அந்தி மதி சூடிய எம்மானை அடி சேரும் அணி காழி நகரான்-
சந்தம் நிறை தண் தமிழ் தெரிந்து உணரும் ஞானசம்பந்தனது சொல்
முந்தி இசை செய்து மொழிவார்கள் உடையார்கள், நெடு வான நிலனே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.121  
முன்னம் நின்ற முடக்கால் முயற்கு   பண் - செவ்வழி   (திருப்பாதிரிப்புலியூர் (கடலூர்) தோன்றாத்துணையீசுவரர் தோகையம்பிகையம்மை)

முன்னம் நின்ற முடக்கால் முயற்கு அருள்செய்து, நீள
புன்னை நின்று கமழ் பாதிரிப்புலியூர் உளான்
தன்னை நின்று வணங்கும் தனைத் தவம் இ(ல்)லிகள்,
பின்னை நின்ற பிணி யாக்கையைப் பெறுவார்களே

[1]
அம் தண் நல்லார் அகன் காழியுள் ஞானசம்
பந்தன், நல்லார் பயில் பாதிரிப்புலியூர்தனுள்
சந்த மாலைத்தமிழ் பத்து இவை தரித்தார்கள் மேல்,
வந்து தீய(வ்) அடையாமையால், வினை மாயுமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.087  
சுடு கூர் எரிமாலை அணிவர்;   பண் - குறிஞ்சி   (திருவடுகூர் (ஆண்டார்கோவில்) வடுகேசுவரர் வடுவகிர்க்கண்ணியம்மை)

சுடு கூர் எரிமாலை அணிவர்; சுடர் வேலர்;
கொடுகு ஊர் மழுவாள் ஒன்று உடையார்; விடை ஊர்வர்;
கடுகு ஊர் பசி, காமம், கவலை, பிணி, இல்லார்
வடு கூர் புனல் சூழ்ந்த வடுகூர் அடிகளே.

[1]
படி நோன்பு அவை ஆவர், பழி இல் புகழ் ஆன,
கடிநாள் நிகழ் சோலை கமழும் வடுகூரை,
படி ஆன சிந்தை மொழி ஆர் சம்பந்தன்
அடிஞானம் வல்லார் அடி சேர்வார்களே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.060  
கறை அணி மா மிடற்றான்,   பண் - பஞ்சமம்   (திருவக்கரை சந்திரசேகரேசுவரர் வடிவாம்பிகையம்மை)

கறை அணி மா மிடற்றான், கரிகாடு அரங்கா உடையான்,
பிறை அணி கொன்றையினான், ஒருபாகமும் பெண் அமர்ந்தான்,
மறையவன் தன் தலையில் பலி கொள்பவன்-வக்கரையில்
உறைபவன், எங்கள் பிரான்; ஒலி ஆர் கழல் உள்குதுமே.

[1]
தண்புனலும்(ம்) அரவும் சடைமேல் உடையான், பிறை தோய்
வண் பொழில் சூழ்ந்து அழகு ஆர் இறைவன்(ன்), உறை வக்கரையை,
சண்பையர் தம் தலைவன்-தமிழ் ஞானசம்பந்தன்-சொன்ன
பண் புனை பாடல் வல்லார் அவர் தம் வினை பற்று அறுமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.117  
மண்டு கங்கை சடையில் கரந்தும்,   பண் - செவ்வழி   (திருஇரும்பைமாகாளம் மாகாளேசுவரர் குயிலம்மை)

மண்டு கங்கை சடையில் கரந்தும், மதி சூடி, மான்
கொண்ட கையான், புரம் மூன்று எரித்த குழகன்(ன்), இடம்
எண்திசையும் புகழ் போய் விளங்கும் இரும்பைதனுள்,
வண்டு கீதம் முரல் பொழில் சுலாய் நின்ற மாகாளமே.

[1]
எந்தை பெம்மான் இடம், எழில் கொள் சோலை
இரும்பைதனுள்
மந்தம் ஆய பொழில் சூழ்ந்து அழகு ஆரும் மாகாளத்தில்,
அந்தம் இல்லா அனல் ஆடுவானை, அணி ஞானசம்
பந்தன் சொன்ன தமிழ் பாட வல்லார் பழி போகுமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.046  
குண்டைக் குறள் பூதம் குழும,   பண் - தக்கராகம்   (திருவதிகை வீரட்டானம் அதிகைநாதர் (எ) வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி)

குண்டைக் குறள் பூதம் குழும, அனல் ஏந்தி,
கெண்டை பிறழ் தெண் நீர்க் கெடில வடபக்கம்,
வண்டு மருள் பாட, வளர் பொன் விரி கொன்றை
விண்ட தொடையலான் ஆடும், வீரட்டானத்தே.

[1]
ஞாழல் கமழ் காழியுள் ஞானசம்பந்தன்,
வேழம் பொரு தெண் நீர் அதிகை வீரட்டானத்துச்
சூழும் கழலானைச் சொன்ன தமிழ்மாலை,
வாழும் துணை ஆக நினைவார் வினை இலாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.050  
குன்ற வார்சிலை, நாண் அரா,   பண் - சீகாமரம்   (திருஆமாத்தூர் அழகியநாதேசுவரர் அழகியநாயகியம்மை)

குன்ற வார்சிலை, நாண் அரா, அரி வாளி, கூர் எரி, காற்றின், மும்மதில்
வென்ற ஆறு எங்ஙனே? விடை ஏறும் வேதியனே!
தென்றல் ஆர் மணி மாட மாளிகை சூளிகைக்கு எதிர்
நீண்ட பெண்ணைமேல்
அன்றில் வந்து அணையும் ஆமாத்தூர் அம்மானே!

[1]
வாடல் வெண் தலைமாலை ஆர்த்து, மயங்கு இருள்(ள்), எரி ஏந்தி, மாநடம்
ஆடல் மேயது என்? என்று ஆமாத்தூர் அம்மானை,
கோடல் நாகம் அரும்பு பைம்பொழில் கொச்சையார் இறை ஞானசம்பந்தன்
பாடல் பத்தும் வல்லார் பரலோகம் சேர்வாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.044  
துன்னம் பெய் கோவணமும் தோலும்   பண் - சீகாமரம்   (திருஆமாத்தூர் அழகியநாதேசுவரர் அழகியநாயகியம்மை)

துன்னம் பெய் கோவணமும் தோலும் உடை ஆடை,
பின் அம் சடைமேல் ஓர் பிள்ளைமதி சூடி,
அன்னம் சேர் தண் கானல் ஆமாத்தூர் அம்மான்தன்
பொன் அம் கழல் பரவாப் பொக்கமும் பொக்கமே?

[1]
ஆடல் அரவு அசைத்த ஆமாத்தூர் அம்மானை,
கோடல் இரும் புறவின் கொச்சைவயத் தலைவன்
நாடல் அரிய சீர் ஞானசம்பந்தன் தன்
பாடல் இவை வல்லார்க்கு இல்லை ஆம், பாவமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.100  
படை கொள் கூற்றம் வந்து,   பண் - நட்டராகம்   (திருக்கோவலூர் வீரட்டம் வீரட்டானேசுவரர் சிவானந்தவல்லியம்மை)

படை கொள் கூற்றம் வந்து, மெய்ப் பாசம்
விட்டபோதின்கண்,
இடை கொள்வார் எமக்கு இலை; எழுக! போது, நெஞ்சமே!
குடை கொள் வேந்தன் மூதாதை, குழகன், கோவலூர் தனுள்
விடை அது ஏறும் கொடியினான் வீரட்டானம் சேர்துமே.

[1]
கழியொடு உலவு கானல் சூழ் காழி ஞானசம்பந்தன்,
பழிகள் தீரச் சொன்ன சொல் பாவநாசம் ஆதலால்,
அழிவு இலீர், கொண்டு ஏத்துமின்! அம் தண்
கோவலூர்தனில்,
விழி கொள் பூதப்படையினான், வீரட்டானம் சேர்துமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.077  
பீடினால் பெரியோர்களும், பேதைமை கெடத்   பண் - காந்தாரம்   (திருஅறையணிநல்லூர் (அரகண்டநல்லூர்) அறையணிநாதேசுவரர் அருள்நாயகியம்மை)

பீடினால் பெரியோர்களும், பேதைமை கெடத் தீது இலா
வீடினால் உயர்ந்தார்களும் வீடு இலார், இளவெண்மதி
சூடினார், மறை பாடினார், சுடலை நீறு அணிந்தார், அழல்
ஆடினார், அறையணி நல்லூர் அம் கையால்
தொழுவார்களே.

[1]
கழி உலாம் கடல் கானல் சூழ் கழுமலம் அமர் தொல்
பதிப்
பழி இலா மறை ஞானசம்பந்தன், நல்லது ஓர் பண்பின்
ஆர்
மொழியினால், அறையணி நல்லூர் முக்கண் மூர்த்திதன்
தாள் தொழக்
கெழுவினார் அவர், தம்மொடும் கேடு இல் வாழ் பதி
பெறுவரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.010  
உண்ணாமுலை உமையாளொடும் உடன் ஆகிய   பண் - நட்டபாடை   (திருவண்ணாமலை அருணாசலேசுவரர் உண்ணாமுலையம்மை)

உண்ணாமுலை உமையாளொடும் உடன் ஆகிய ஒருவன்,
பெண் ஆகிய பெருமான், மலை திரு மா மணி திகழ,
மண் ஆர்ந்தன அருவித்திரள் மழலை முழவு அதிரும்
அண்ணாமலை தொழுவார் வினை வழுவா வண்ணம் அறுமே.

[1]
வெம்பு உந்திய கதிரோன் ஒளி விலகும் விரிசாரல்,
அம்பு உந்தி மூ எயில் எய்தவன் அண்ணாமலை அதனை,
கொம்பு உந்துவ, குயில் ஆலுவ, குளிர் காழியுள் ஞான
சம்பந்தன தமிழ் வல்லவர் அடி பேணுதல் தவமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.069  
பூ ஆர் மலர் கொண்டு   பண் - தக்கேசி   (திருவண்ணாமலை அருணாசலேசுவரர் உண்ணாமுலையம்மை)

பூ ஆர் மலர் கொண்டு அடியார் தொழுவார்; புகழ்வார், வானோர்கள்;
மூவார் புரங்கள் எரித்த அன்று மூவர்க்கு அருள் செய்தார்
தூ மாமழை நின்று அதிர, வெருவித் தொறுவின் நிரையோடும்
ஆமாம் பிணை வந்து அணையும் சாரல் அண்ணாமலையாரே.

[1]
அல் ஆடு அரவம் இயங்கும் சாரல் அண்ணாமலையாரை,
நல்லார் பரவப்படுவான் காழி ஞானசம்பந்தன்
சொல்லால் மலிந்த பாடல் ஆன பத்தும் இவை கற்று
வல்லார் எல்லாம் வானோர் வணங்க மன்னி வாழ்வாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.054  
பூத் தேர்ந்து ஆயன கொண்டு,   பண் - பழந்தக்கராகம்   (திருஓத்தூர் (செய்யாறு) வேதநாதர் இளமுலைநாயகியம்மை)

பூத் தேர்ந்து ஆயன கொண்டு, நின் பொன் அடி
ஏத்தாதார் இல்லை, எண்ணுங்கால்
ஓத்தூர் மேய ஒளி மழுவாள் அங்கைக்
கூத்தீர்! உம குணங்களே.

[1]
குரும்பை ஆண்பனை ஈன் குலை ஓத்தூர்
அரும்பு கொன்றை அடிகளை,
பெரும் புகலியுள் ஞானசம்பந்தன் சொல்
விரும்புவார் வினை வீடே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.072  
விங்கு விளை கழனி, மிகு   பண் - சாதாரி   (திருமாகறல் அடைக்கலங்காத்தநாதர் புவனநாயகியம்மை)

விங்கு விளை கழனி, மிகு கடைசியர்கள் பாடல் விளையாடல் அரவம்,
மங்குலொடு நீள்கொடிகள் மாடம் மலி, நீடு பொழில், மாகறல் உளான்-
கொங்கு விரிகொன்றையொடு, கங்கை, வளர் திங்கள், அணி செஞ்சடையினான்;
செங்கண் விடை அண்ணல் அடி சேர்பவர்கள் தீவினைகள் தீரும், உடனே.

[1]
கடை கொள் நெடுமாடம் மிக ஓங்கு கமழ் வீதி மலி காழியவர்கோன்-
அடையும் வகையால் பரவி அரனை அடி கூடு சம்பந்தன்-உரையால்,
மடை கொள் புனலோடு வயல் கூடு பொழில் மாகறல் உளான் அடியையே
உடைய தமிழ் பத்தும் உணர்வார் அவர்கள் தொல்வினைகள்
ஒல்கும், உடனே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.031  
விழுநீர், மழுவாள் படை, அண்ணல்   பண் - தக்கராகம்   (திருக்குரங்குஅணில்முட்டம் வாலீசுவரர் இறையார்வளையம்மை)

விழுநீர், மழுவாள் படை, அண்ணல் விளங்கும்
கழுநீர் குவளை மலரக் கயல் பாயும்
கொழுநீர் வயல் சூழ்ந்த குரங்கணில் முட்டம்
தொழும் நீர்மையர் தீது உறு துன்பம் இலரே.

[1]
கல் ஆர் மதில் காழியுள் ஞானசம்பந்தன்
கொல் ஆர் மழு ஏந்தி குரங்கணில் முட்டம்
சொல் ஆர் தமிழ் மாலை செவிக்கு இனிது ஆக
வல்லார்க்கு எளிது ஆம், பிறவா வகை வீடே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.012  
மறையானை, மாசு இலாப் புன்சடை   பண் - இந்தளம்   (கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்) ஏகாம்பரநாதர் காமாட்சியம்மை)

மறையானை, மாசு இலாப் புன்சடை மல்கு வெண்
பிறையானை, பெண்ணொடு ஆண் ஆகிய பெம்மானை,
இறையானை, ஏர் கொள் கச்சித் திரு ஏகம்பத்து
உறைவானை, அல்லது உள்காது, எனது உள்ளமே.

[1]
அம் தண் பூங்கச்சி ஏகம்பனை, அம்மானை,
கந்து அண் பூங்காழிஊரன் கலிக்கோவையால்
சந்தமே பாட வல்ல தமிழ் ஞானசம்
பந்தன் சொல் பாடி ஆட, கெடும், பாவமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.114  
பாயும் மால்விடைமேல் ஒரு பாகனே;   பண் - பழம்பஞ்சுரம்   (கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்) ஏகாம்பரநாதர் காமாட்சியம்மை)

பாயும் மால்விடைமேல் ஒரு பாகனே; பாவை தன் உருமேல் ஒரு பாகனே;
தூய வானவர் வேதத் துவனியே; சோதி மால் எரி வேதத்து வ(ன்)னியே;
ஆயும் நன்பொருள் நுண்பொருள் ஆதியே; ஆலநீழல்
அரும்பொருள் ஆதியே;
காய, வில் மதன் பட்டது கம்பமே; கண் நுதல் பரமற்கு
இடம் கம்பமே.

[1]
கந்தம் ஆர் பொழில் சூழ்தரு கம்பமே காதல் செய்பவர்
தீர்த்திடு உகு அம்பமே;
புந்தி செய்வது விரும்பிப் புகலியே பூசுரன் தன் விரும்பிப் புகலியே
அந்தம் இல் பொருள் ஆயின கொண்டுமே, அண்ணலின்
பொருள் ஆயின கொண்டுமே,
பந்தன் இன் இயல் பாடிய பத்துமே பாட வல்லவர் ஆயின,
பத்துமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.041  
கரு ஆர் கச்சித் திரு   பண் - கொல்லி   (கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்) ஏகாம்பரநாதர் காமாட்சியம்மை)

கரு ஆர் கச்சித் திரு ஏகம்பத்து
ஒருவா! என்ன, மருவா, வினையே.

[1]
கொச்சை வேந்தன் கச்சிக் கம்பம்
மெச்சும் சொல்லை, நச்சும், புகழே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.133  
வெந்த வெண்பொடிப் பூசும் மார்பின்   பண் - மேகராகக்குறிஞ்சி   (கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்) ஏகாம்பரநாதர் காமாட்சியம்மை)

வெந்த வெண்பொடிப் பூசும் மார்பின் விரிநூல் ஒருபால் பொருந்த,
கந்தம் மல்கு குழலியோடும் கடிபொழில் கச்சி தன்னுள்,
அந்தம் இல் குணத்தார் அவர் போற்ற, அணங்கினொடு ஆடல் புரி
எந்தை மேவிய ஏகம்பம் தொழுது ஏத்த, இடர் கெடுமே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.065  
வார் அணவு முலை மங்கை   பண் - பஞ்சமம்   (திருக்கச்சிநெறிக்காரைக்காடு காரைத்திருநாதஈசுவரர் காரார்குழலியம்மை)

வார் அணவு முலை மங்கை பங்கினராய், அம் கையினில்
போர் அணவு மழு ஒன்று அங்கு ஏந்தி, வெண்பொடி அணிவர்
கார் அணவு மணி மாடம் கடை நவின்ற கலிக் கச்சி,
நீர் அணவு மலர்ப்பொய்கை நெறிக்காரைக்காட்டாரே.

[1]
கண் ஆரும் கலிக் கச்சி நெறிக்காரைக்காட்டு உறையும்
பெண் ஆரும் திருமேனிப் பெருமானது அடி வாழ்த்தி,
தண் ஆரும் பொழில் காழித் தமிழ் ஞானசம்பந்தன்
பண் ஆரும் தமிழ் வல்லார், பரலோகத்து இருப்பாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.055  
ஊறி ஆர்தரு நஞ்சினை உண்டு,   பண் - பழந்தக்கராகம்   (திருமாற்பேறு மால்வணங்குமீசர் கருணைநாயகியம்மை)

ஊறி ஆர்தரு நஞ்சினை உண்டு, உமை
நீறு சேர் திருமேனியர்
சேறு சேர் வயல் தென் திருமாற் பேற்றில்
மாறு இலா மணிகண்டரே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.114  
குருந்து அவன், குருகு அவன்,   பண் - வியாழக்குறிஞ்சி   (திருமாற்பேறு மால்வணங்குமீசர் கருணைநாயகியம்மை)

குருந்து அவன், குருகு அவன், கூர்மை அவன்,
பெருந்தகை, பெண் அவன், ஆணும் அவன்,
கருந்தட மலர்க்கண்ணி காதல் செய்யும்
மருந்து அவன், வள நகர் மாற்பேறே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.113  
எரித்தவன், முப்புரம் எரியில் மூழ்க;
தரித்தவன்,
  பண் - வியாழக்குறிஞ்சி   (திருவல்லம் வல்லநாதர் வல்லாம்பிகையம்மை)

எரித்தவன், முப்புரம் எரியில் மூழ்க;
தரித்தவன், கங்கையைத் தாழ்சடைமேல்;
விரித்தவன் வேதங்கள்; வேறுவேறு
தெரித்தவன், உறைவு இடம் திரு வல்லமே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.076  
மலையினார் பருப்பதம், துருத்தி, மாற்பேறு,   பண் - குறிஞ்சி   (திருஇலம்பையங்கோட்டூர் சந்திரசேகரர் கோடேந்துமுலையம்மை)

மலையினார் பருப்பதம், துருத்தி, மாற்பேறு, மாசு இலாச் சீர்
மறைக்காடு, நெய்த் தானம்,
நிலையினான், எனது உரை தனது உரை ஆக, நீறு அணிந்து ஏறு
உகந்து ஏறிய நிமலன்-
கலையின் ஆர் மடப்பிணை துணையொடும் துயில, கானல் அம்
பெடை புல்கிக் கணமயில் ஆலும்
இலையின் ஆர் பைம்பொழில் இலம்பையங்கோட்டூர்
இருக்கையாப் பேணி, என் எழில் கொள்வது இயல்பே?

[1]
கந்தனை மலி கனைகடல் ஒலி ஓதம் கானல் அம் கழி வளர்
கழுமலம் என்னும்
நந்தியார் உறை பதி நால்மறை நாவன்-நல்-தமிழ்க்கு இன்துணை, ஞானசம்பந்தன்-
எந்தையார் வள நகர் இலம்பையங்கோட்டூர் இசையொடு கூடிய
பத்தும் வல்லார், போய்
வெந்துயர் கெடுகிட, விண்ணவரோடும் வீடு பெற்று,
வீடு எளிது ஆமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.023  
உருவின் ஆர் உமையொடும் ஒன்றி   பண் - காந்தாரபஞ்சமம்   (திருவிற்கோலம் (கூவம்) புராந்தகேசுவரர் புராந்தரியம்மை)

உருவின் ஆர் உமையொடும் ஒன்றி நின்றது ஓர்
திருவினான்; வளர்சடைத் திங்கள் கங்கையான்;
வெருவி வானவர் தொழ, வெகுண்டு நோக்கிய
செருவினான்; உறைவு இடம் திரு விற்கோலமே.

[1]
கோடல் வெண்பிறையனை, கூகம் மேவிய
சேடன செழு மதில் திரு விற்கோலத்தை,
நாட வல்ல தமிழ் ஞானசம்பந்தன
பாடல் வல்லார்களுக்கு இல்லை, பாவமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.106  
மாறு இல் அவுணர் அரணம்   பண் - வியாழக்குறிஞ்சி   (திருஊறல் (தக்கோலம்) உமாபதீசுவரர் உமையம்மை)

மாறு இல் அவுணர் அரணம் அவை மாய, ஓர் வெங்கணையால், அன்று,
நீறு எழ எய்த எங்கள் நிமலன் இடம் வினவில்
தேறல் இரும் பொழிலும், திகழ் செங்கயல் பாய் வயலும், சூழ்ந்த
ஊறல்; அமர்ந்த பிரான் ஒலி ஆர் கழல் உள்குதுமே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.119  
முள்ளின் மேல் முது கூகை   பண் - வியாழக்குறிஞ்சி   (திருக்கள்ளில் சிவானந்தேசுவரர் ஆனந்தவல்லியம்மை)

முள்ளின் மேல் முது கூகை முரலும் சோலை,
வெள்ளில் மேல் விடு கூறைக்கொடி விளைந்த
கள்ளில் மேய அண்ணல் கழல்கள் நாளும்
உள்ளும்! மேல் உயர்வு எய்தல் ஒருதலையே.

[1]
திகை நான்கும் புகழ் காழிச் செல்வம் மல்கு
பகல் போலும் பேர் ஒளியான்-பந்தன்-நல்ல
முகை மேவு முதிர் சடையான் கள்ளில் ஏத்த,
புகழோடும் பேர் இன்பம் புகுதும் அன்றே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.045  
துஞ்ச வருவாரும், தொழுவிப்பாரும், வழுவிப்   பண் - தக்கராகம்   (திருவாலங்காடு (பழையனூர்) ஊர்த்ததாண்டவேசுரர் வண்டார்குழலியம்மை)

துஞ்ச வருவாரும், தொழுவிப்பாரும், வழுவிப் போய்
நெஞ்சம் புகுந்து என்னை நினைவிப்பாரும் முனை நட்பு ஆய்
வஞ்சப்படுத்து ஒருத்தி வாழ்நாள் கொள்ளும் வகை கேட்டு,
அஞ்சும் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளே.

[1]
போழம்பல பேசிப் போது சாற்றித் திரிவாரும்,
வேழம் வரும் அளவும் வெயிலே துற்றித் திரிவாரும்,
கேழல் வினை போகக் கேட்பிப்பாரும்; கேடு இலா
ஆழ்வர் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.060  
சிந்தை இடையார், தலையின் மிசையார்,   பண் - காந்தாரம்   (திருப்பாசூர் பாசூர்நாதர் பசுபதிநாயகியம்மை)

சிந்தை இடையார், தலையின் மிசையார், செஞ்சொல்லார்,
வந்து மாலை வைகும்போழ்து என் மனத்து உள்ளார்,
மைந்தர், மணாளர் என்ன, மகிழ்வார் ஊர்போலும்
பைந் தண் மாதவி சோலை சூழ்ந்த பாசூரே.

[1]
ஞானம் உணர்வான் காழி ஞானசம்பந்தன்
தேனும் வண்டும் இன் இசை பாடும் திருப் பாசூர்க்
கானம் உறைவார் கழல் சேர் பாடல் இவை வல்லார்,
ஊனம் இலராய், உம்பர் வானத்து உறைவாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.069  
வானவர்கள் தானவர்கள் வாதைபட வந்தது   பண் - சாதாரி   (திருக்காளத்தி காளத்திநாதர் ஞானப்பூங்கோதையாரம்மை)

வானவர்கள் தானவர்கள் வாதைபட வந்தது ஒரு மா கடல் விடம்
தான் அமுது செய்து, அருள்புரிந்த சிவன் மேவும் மலை
தன்னை வினவில்
ஏனம் இனமானினொடு கிள்ளை தினை கொள்ள, எழில் ஆர் கவணினால்,
கானவர் தம் மா மகளிர் கனகம் மணி விலகு
காளத்திமலையே.

[1]
காடு அது இடம் ஆக நடம் ஆடு சிவன் மேவு காளத்திமலையை,
மாடமொடு மாளிகைகள் நீடு வளர் கொச்சைவயம் மன்னு தலைவன்-
நாடு பல நீடு புகழ் ஞானசம்பந்தன்-உரை நல்ல தமிழின்
பாடலொடு பாடும் இசை வல்லவர்கள் நல்லர்; பரலோகம் எளிதே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.068  
பொடி கொள் உருவர், புலியின்   பண் - தக்கேசி   (திருக்கயிலாயம் கயிலாயநாதர் பார்வதியம்மை)

பொடி கொள் உருவர், புலியின் அதளர், புரிநூல் திகழ் மார்பில்
கடி கொள் கொன்றை கலந்த நீற்றர், கறை சேர் கண்டத்தர்,
இடிய குரலால் இரியும் மடங்கல் தொடங்கு முனைச்சாரல்
கடிய விடை மேல் கொடி ஒன்று உடையார் கயிலை மலையாரே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.068  
வாள வரி கோள புலி   பண் - சாதாரி   (திருக்கயிலாயம் கயிலாயநாதர் பார்வதியம்மை)

வாள வரி கோள புலி கீள் அது உரி தாளின் மிசை நாளும் மகிழ்வர்
ஆளுமவர் வேள் அநகர், போள் அயில கோள களிறு ஆளி, வர இல்
தோள் அமரர் தாளம், மதர் கூளி, எழ மீளி, மிளிர் தூளி, வளர் பொன்
காளமுகில் மூளும் இருள் கீள, விரி தாள கயிலாயமலையே.

[1]
அம் தண் வரை வந்த புனல் தந்த திரை சந்தனமொடு உந்தி, அகிலும்
கந்தமலர் கொந்தினொடு மந்திபல சிந்து கயிலாயமலைமேல்,
எந்தை அடி வந்து அணுகு சந்தமொடு செந்தமிழ் இசைந்த புகலிப்
பந்தன் உரை சிந்தை செய, வந்த வினை நைந்து, பரலோகம் எளிதே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.114  
தொண்டர் அஞ்சுகளிறும்(ம்) அடக்கி, சுரும்பு   பண் - செவ்வழி   (திருக்கேதாரம் கேதாரேசுவரர் கௌரியம்மை)

தொண்டர் அஞ்சுகளிறும்(ம்) அடக்கி, சுரும்பு ஆர் மலர்
இண்டை கட்டி, வழிபாடு செய்யும் இடம் என்பரால்
வண்டு பாட, மயில் ஆல, மான் கன்று துள்ள(வ்), வரிக்
கெண்டை பாய, சுனை நீலம் மொட்டு அலரும் கேதாரமே.

[1]
வாய்ந்த செந்நெல் விளை கழனி மல்கும் வயல் காழியான்,
ஏய்ந்த நீர்க்கோட்டு இமையோர் உறைகின்ற கேதாரத்தை
ஆய்ந்து சொன்ன அருந்தமிழ்கள் பத்தும் இசை வல்லவர்,
வேந்தர் ஆகி உலகு ஆண்டு, வீடுகதி பெறுவரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.079  
என்றும் அரியான், அயலவர்க்கு; இயல்   பண் - சாதாரி   (திருகோகர்ணம் (கோகர்ணா) மாபலநாதர் கோகரணநாயகியம்மை)

என்றும் அரியான், அயலவர்க்கு; இயல் இசைப்பொருள்கள் ஆகி எனது உள்
நன்றும் ஒளியான்; ஒளி சிறந்த பொன் முடிக் கடவுள்;
நண்ணும் இடம் ஆம்
ஒன்றிய மனத்து அடியர் கூடி, இமையோர் பரவும் நீடு அரவம் ஆர்
குன்றுகள் நெருங்கி, விரி தண்டலை மிடைந்து, வளர் கோகரணமே.

[1]
கோடல் அரவு ஈனும் விரி சாரல் முன் நெருங்கி வளர்
கோகரணமே
ஈடம் இனிது ஆக உறைவான் அடிகள் பேணி, அணி காழி நகரான்-
நாடிய தமிழ்க்கிளவி இன் இசை செய்
ஞானசம்பந்தன்-மொழிகள்
பாட வல பத்தர் அவர் எத்திசையும் ஆள்வர்; பரலோகம் எளிதே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.118  
சுடுமணி உமிழ் நாகம் சூழ்தர   பண் - வியாழக்குறிஞ்சி   (திருப்பருப்பதம் (ஸ்ரீசைலம்) பருப்பதேசுவரர் பருப்பதமங்கையம்மை)

சுடுமணி உமிழ் நாகம் சூழ்தர அரைக்கு அசைத்தான்;
இடு மணி எழில் ஆனை ஏறலன், எருது ஏறி;
விடம் அணி மிடறு உடையான்; மேவிய நெடுங்கோட்டுப்
படு மணிவிடு சுடர் ஆர் பருப்பதம் பரவுதுமே.

[1]
வெண் செ(ந்) நெல் விளை கழனி விழவு ஒலி கழுமலத்தான்,
பண் செலப் பல பாடல் இசை முரல் பருப்பதத்தை,
நன் சொலினால் பரவும் ஞானசம்பந்தன், நல்ல
ஒண் சொலின் இவைமாலை உரு எண, தவம் ஆமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.027  
குலவு பாரிடம் போற்ற வீற்றிருந்து
இலகு
  பண் - இந்தளம்   (இந்திரநீலப்பருப்பதம் (நீலகண்டசிகரம்) நீலாசலநாதர் நீலாம்பிகையம்மை)

குலவு பாரிடம் போற்ற வீற்றிருந்து
இலகு மான் மழு ஏந்தும் அம் கையன்,
நிலவும் இந்திரநீலப்பர்ப்பதத்து
உலவினான், அடி உள்க, நல்குமே.

[1]
கந்தம் ஆர் பொழில் சூழ்ந்த காழியான்,
இந்திரன் தொழும் நீலப்பர்ப்பதத்து
அந்தம் இலியை ஏத்து ஞானசம்
பந்தன் பாடல் கொண்டு ஓதி வாழ்மினே!

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.005  
நீடல் மேவு நிமிர்புன்சடைமேல் ஒர்   பண் - இந்தளம்   (திருஅனேகதங்காவதம் (கௌரிகுண்டம்) அருள்மன்னர் மனோன்மணியம்மை)

நீடல் மேவு நிமிர்புன்சடைமேல் ஒர் நிலாமு
சூடல் மேவு, மறையின் முறையால் ஒர் சுலாவு அழல்
ஆடல் மேவுமவர் மேய அனேகதங்காவதம்
பாடல் மேவும் மனத்தார் வினை பற்றுஅறுப்பார்களே!

[1]
தொல்லைஊழிப் பெயர் தோன்றிய தோணிபுரத்து இறை
நல்ல கேள்வித் தமிழ் ஞானசம்பந்தன் நல்லார்கள்முன்
அல்லல் தீர உரைசெய்த அனேகதங்காவதம்
சொல்ல, நல்ல அடையும்; அடையா, சுடுதுன்பமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.036  
சந்தம், ஆர், அகிலொடு, சாதி,   பண் - கொல்லி   (திருக்காளத்தி காளத்திநாதர் ஞானப்பூங்கோதையாரம்மை)

சந்தம், ஆர், அகிலொடு, சாதி, தேக்க(ம்) மரம்,
உந்தும் மா முகலியின் கரையினில், உமையொடும்,
மந்தம் ஆர் பொழில் வளர் மல்கு வண் காளத்தி
எந்தையார் இணை அடி, என் மனத்து உள்ளவே.

[1]
அட்ட மாசித்திகள் அணை தரு காளத்தி
வட்ட வார் சடையனை, வயல் அணி காழியான்-
சிட்ட நால்மறை வல ஞானசம்பந்தன்-சொல்
இட்டமாப் பாடுவார்க்கு இல்லை ஆம், பாவமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.057  
ஒள்ளிது உள்ள, கதிக்கு ஆம்;   பண் - பழந்தக்கராகம்   (திருவேற்காடு வேற்காட்டீசுவரர் வேற்கண்ணியம்மை)

ஒள்ளிது உள்ள, கதிக்கு ஆம்; இவன் ஒளி
வெள்ளியான் உறை வேற்காடு
உள்ளியார் உயர்ந்தார்; இவ் உலகினில்
தெள்ளியார்; அவர் தேவரே.

[1]
விண்ட மாம்பொழில் சூழ் திரு வேற்காடு
கண்டு, நம்பன் கழல் பேணி,
சண்பை ஞானசம்பந்தன் செந்தமிழ்
கொண்டு பாட, குணம் ஆமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.003  
பத்தரோடு பலரும் பொலிய மலர்   பண் - நட்டபாடை   (திருவலிதாயம் (பாடி) வலிதாயநாதர் தாயம்மை)

பத்தரோடு பலரும் பொலிய மலர் அங்கைப் புனல் தூவி,
ஒத்த சொல்லி, உலகத்தவர் தாம் தொழுது ஏத்த, உயர் சென்னி
மத்தம் வைத்த பெருமான் பிரியாது உறைகின்ற வலி தாயம்,
சித்தம் வைத்த அடியார் அவர்மேல் அடையா, மற்று இடர், நோயே.

[1]
வண்டு வைகும் மணம் மல்கிய சோலை வளரும் வலிதாயத்து
அண்டவாணன் அடி உள்குதலால், அருள்மாலைத் தமிழ் ஆக,
கண்டல் வைகு கடல் காழியுள் ஞானசம்பந்தன் தமிழ் பத்தும்
கொண்டு வைகி இசை பாட வல்லார் குளிர் வானத்து உயர் வாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.057  
விடையவன், விண்ணும் மண்ணும் தொழ   பண் - பஞ்சமம்   (திருவொற்றியூர் மாணிக்கத்தியாகர் வடிவுடையம்மை)

விடையவன், விண்ணும் மண்ணும் தொழ நின்றவன், வெண்மழுவாள
படையவன், பாய் புலித்தோல் உடை, கோவணம், பல்கரந்தைச்
சடையவன், சாமவேதன், சசி தங்கிய சங்க வெண்தோடு
உடையவ(ன்), ஊனம் இ(ல்)லி உறையும்(ம்) இடம்
ஒற்றியூரே.

[1]
ஒண்பிறை மல்கு சென்னி இறைவன்(ன்) உறை ஒற்றியூரை,
சண்பையர் தம் தலைவன்-தமிழ் ஞானசம்பந்தன்-சொன்ன
பண் புனை பாடல்பத்தும் பரவிப் பணிந்து ஏத்த வல்லார்
விண் புனை மேல் உலகம் விருப்பு எய்துவர்; வீடு எளிதே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.047  
மட்டு இட்ட புன்னை அம்கானல்   பண் - சீகாமரம்   (திருமயிலை (மயிலாப்பூர்) கபாலீசுவரர் கற்பகவல்லியம்மை)

மட்டு இட்ட புன்னை அம்கானல் மடமயிலைக்
கட்டு இட்டம் கொண்டான், கபாலீச்சரம் அமர்ந்தான்,
ஒட்டிட்ட பண்பின் உருத்திரபல் கணத்தார்க்கு
அட்டு இட்டல் காணாதே போதியோ? பூம்பாவாய்!

[1]
கான் அமர் சோலைக் கபாலீச்சரம் அமர்ந்தான்
தேன் அமர் பூம்பாவைப் பாட்டு ஆகச் செந்தமிழான்
ஞானசம்பந்தன் நலம் புகழ்ந்த பத்தும் வலார்,
வான சம்பந்தத்தவரோடும் வாழ்வாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.004  
கரை உலாம் கடலில் பொலி   பண் - இந்தளம்   (திருவான்மியூர் மருந்தீசுவரர் சுந்தரமாது (அ) சொக்கநாயகி)

கரை உலாம் கடலில் பொலி சங்கம் வெள் இப்பி வன்
திரை உலாம் கழி மீன் உகளும் திரு வான்மியூர்;
உரை எலாம் பொருள் ஆய் உலகு ஆள் உடையீர்! சொலீர்
வரை உலாம் மடமாது உடன் ஆகிய மாண்புஅதே?

[1]
மாது ஓர் கூறுஉடை நல் தவனைத் திரு வான்மியூர்
ஆதிஎம்பெருமான் அருள்செய்ய, வினாஉரை
ஓதி, அன்று எழு காழியுள் ஞானசம்பந்தன் சொல்
நீதியால் நினைவார் நெடுவான் உலகு ஆள்வரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.055  
விரை ஆர் கொன்றையினாய்! விடம்   பண் - கௌசிகம்   (திருவான்மியூர் மருந்தீசுவரர் சுந்தரமாது (அ) சொக்கநாயகி)

விரை ஆர் கொன்றையினாய்! விடம் உண்ட மிடற்றினனே!
உரை ஆர் பல்புகழாய்! உமை நங்கை ஒர் பங்கு உடையாய்!
திரை ஆர் தெண்கடல் சூழ் திரு வான்மியூர் உறையும்
அரையா! உன்னை அல்லால் அடையாது, எனது ஆதரவே.

[1]
கன்று ஆரும் கமுகின் வயல் சூழ்தரு காழிதனில்
நன்று ஆன புகழான் மிகு ஞானசம்பந்தன் உரை,
சென்றார் தம் இடர் தீர் திரு வான்மியூர் அதன் மேல்,
குன்றாது ஏத்த வல்லார் கொடுவல் வினை போய் அறுமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.078  
வரி வளர் அவிர் ஒளி   பண் - குறிஞ்சி   (திருஇடைச்சுரம் இடைச்சுரநாதர் இமயமடக்கொடியம்மை)

வரி வளர் அவிர் ஒளி அரவு அரை தாழ, வார் சடை முடிமிசை வளர்மதி சூடி,
கரி வளர்தரு கழல்கால் வலன் ஏந்தி, கனல் எரி ஆடுவர், காடு அரங்கு ஆக;
விரி வளர்தரு பொழில் இனமயில் ஆல, வெண் நிறத்து அருவிகள திண்ணென வீழும்,
எரி வளர் இனமணி புனம் அணி சாரல் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே?

[1]
மடைச்சுரம் மறிவன வாளையும் கயலும் மருவிய வயல் தனில் வருபுனல் காழிச்
சடைச்சுரத்து உறைவது ஓர் பிறை உடை அண்ணல் சரிதைகள்
பரவி நின்று உருகு சம்பந்தன்,
புடைச் சுரத்து அரு வரைப் பூக் கமழ் சாரல் புணர் மட நடையவர்
புடை இடை ஆர்ந்த
இடைச்சுரம் ஏத்திய இசையொடு பாடல், இவை சொல வல்லவர் பிணி இலர்தாமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.103  
தோடு உடையான் ஒரு காதில்-தூய   பண் - குறிஞ்சி   (திருக்கழுக்குன்றம் வேதகிரீசுவரர் பெண்ணினல்லாளம்மை)

தோடு உடையான் ஒரு காதில்-தூய குழை தாழ
ஏடு உடையான், தலை கலன் ஆக இரந்து உண்ணும்
நாடு உடையான், நள் இருள் ஏமம் நடம் ஆடும்
காடு உடையான், காதல் செய் கோயில் கழுக்குன்றே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.077  
பொன் திரண்டன்ன புரிசடை புரள,   பண் - குறிஞ்சி   (திருஅச்சிறுபாக்கம் பாக்கபுரேசர் சுந்தரமாதம்மை)

பொன் திரண்டன்ன புரிசடை புரள, பொருகடல் பவளமொடு
அழல் நிறம் புரைய,
குன்று இரண்டு அன்ன தோள் உடை அகலம் குலாய வெண்
நூலொடு கொழும்பொடி அணிவர்;
மின் திரண்டன்ன நுண் இடை அரிவை மெல்லியலாளை 
ஓர்பாகமாப் பேணி,
அன்று இரண்டு உருவம் ஆய எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது
ஆட்சி கொண்டாரே.

[1]
மைச் செறி குவளை தவளை வாய் நிறைய மதுமலர்ப்
பொய்கையில் புதுமலர் கிழியப்
பச்சிறவு எறி வயல் வெறி கமழ் காழிப்பதியவர் அதிபதி
கவுணியர் பெருமான்,
கைச் சிறுமறியவன் கழல் அலால் பேணாக் கருத்து உடை
ஞானசம்பந்தன்-தமிழ் கொண்டு,
அச்சிறுபாக்கத்து அடிகளை ஏத்தும் அன்பு உடை அடியவர்
அருவினை இலரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.095  
பாடல் வண்டு அறை கொன்றை,   பண் - பியந்தைக்காந்தாரம்   (திருஅரசிலி (ஒழுந்தியாப்பட்டு) அரைசிலிநாதர் பெரியம்மை)

பாடல் வண்டு அறை கொன்றை, பால்மதி, பாய் புனல்
கங்கை,
கோடல், கூவிள மாலை, மத்தமும், செஞ்சடைக் குலாவி,
வாடல் வெண் தலை மாலை மருவிட, வல்லியந் தோல்மேல்
ஆடல் மாசுணம் அசைத்த அடிகளுக்கு இடம் அரசிலியே.

[1]
அல்லி நீள் வயல் சூழ்ந்த அரசிலி அடிகளை, காழி
நல்ல ஞானசம்பந்தன் நல் தமிழ் பத்து இவை, நாளும்,
சொல்ல வல்லவர், தம்மைச் சூழ்ந்து அமரர் தொழுது ஏத்த,
வல்ல வான் உலகு எய்தி, வைகலும் மகிழ்ந்து இருப்பாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.053  
விண் அமர்ந்தன மும்மதில்களை வீழ   பண் - சீகாமரம்   (திருப்புறவார்பனங்காட்டூர் பனங்காட்டீசுவரர் திருப்புருவமின்னாளம்மை)

விண் அமர்ந்தன மும்மதில்களை வீழ வெங்கணையால் எய்தாய்! வரி
பண் அமர்ந்து ஒலி சேர் புறவு ஆர் பனங்காட்டூர்,
பெண் அமர்ந்து ஒரு பாகம் ஆகிய பிஞ்ஞகா! பிறை சேர் நுதல் இடைக்
கண் அமர்ந்தவனே! கலந்தார்க்கு அருளாயே!

[1]
மையின் ஆர் மணி போல் மிடற்றனை, மாசு இல் வெண்பொடிப் பூசும் மார்பனை,
பைய தேன் பொழில் சூழ் புறவு ஆர் பனங்காட்டூர்,
ஐயனை, புகழ் ஆன காழியுள் ஆய்ந்த நால்மறை ஞானசம்பந்தன்
செய்யுள் பாட வல்லார், சிவலோகம் சேர்வாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.051  
வெங் கண் ஆனை ஈர்   பண் - பழந்தக்கராகம்   (திருச்சோபுரம் (தியாகவல்லி) சோபுரநாதர் சோபுரநாயகியம்மை)

வெங் கண் ஆனை ஈர் உரிவை போர்த்து, விளங்கும் மொழி
மங்கை பாகம் வைத்து உகந்த மாண்பு அது என்னை கொல் ஆம்?
கங்கையோடு திங்கள் சூடி, கடி கமழும் கொன்றைத்
தொங்கலானே! தூய நீற்றாய்! சோபுரம் மேயவனே!

[1]
சோலை மிக்க தண்வயல் சூழ் சோபுரம் மேயவனை,
சீலம் மிக்க தொல்புகழ் ஆர் சிரபுரக் கோன்-நலத்தான்,
ஞாலம் மிக்க தண் தமிழான், ஞானசம்பந்தன்-சொன்ன
கோலம் மிக்க மாலை வல்லார் கூடுவர், வான் உலகே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.009  
வண்டு ஆர் குழல் அரிவையொடு   பண் - நட்டபாடை   (திருவேணுபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)

வண்டு ஆர் குழல் அரிவையொடு பிரியா வகை பாகம்
பெண்தான் மிக ஆனான், பிறைச் சென்னிப் பெருமான், ஊர்
தண் தாமரை மலராள் உறை தவள நெடுமாடம்
விண் தாங்குவ போலும் மிகு வேணுபுரம் அதுவே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.097  
நம் பொருள், நம் மக்கள்   பண் - நட்டராகம்   (சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)

நம் பொருள், நம் மக்கள் என்று நச்சி, இச்சை செய்து, நீர்,
அம்பரம் அடைந்து, சால அல்லல் உய்ப்பதன் முனம்
உம்பர் நாதன், உத்தமன், ஒளி மிகுத்த செஞ்சடை
நம்பன், மேவு நன் நகர் நலம் கொள் காழி சேர்மினே!

[1]
தக்கனார் தலை அரிந்த சங்கரன் தனது அரை
அக்கினோடு அரவு அசைத்த அந்திவண்ணர் காழியை,
ஒக்க ஞானசம்பந்தன் உரைத்த பாடல் வல்லவர்,
மிக்க இன்பம் எய்தி வீற்றிருந்து வாழ்தல் மெய்ம்மையே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.065  
கறை அணி வேல் இலர்போலும்;   பண் - காந்தாரம்   (திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)

கறை அணி வேல் இலர்போலும்; கபாலம் தரித்திலர்
போலும்;
மறையும் நவின்றிலர் போலும்; மாசுணம் ஆர்த்திலர் போலும்;
பறையும் கரத்து இலர்போலும்; பாசம் பிடித்திலர் போலும்;
பிறையும் சடைக்கு இலர்போலும் பிரமபுரம் அமர்ந்தாரே.

[1]
பெண் உரு ஆண் உரு அல்லாப் பிரமபுர நகர் மேய
அண்ணல் செய்யாதன எல்லாம் அறிந்து, வகைவகையாலே,
நண்ணிய ஞானசம்பந்தன் நவின்றனபத்தும் வல்லார்கள்,
விண்ணவரொடு இனிது ஆக வீற்றிருப்பார், அவர்தாமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.037  
கரம் முனம் மலரால், புனல்   பண் - கொல்லி   (திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)

கரம் முனம் மலரால், புனல் மலர் தூவியே கலந்து ஏத்துமின்-
பரமன் ஊர் பலபேரினால் பொலி, பத்தர் சித்தர்கள் தாம் பயில்,
வரம் முன்ன(வ்) அருள் செய்ய வல்ல எம் ஐயன் நாள்தொறும் மேய சீர்ப்
பிரமன் ஊர், பிரமாபுரத்து உறை பிஞ்ஞகன்(ன்) அருள் பேணியே!

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.056  
இறையவன், ஈசன், எந்தை, இமையோர்   பண் - பஞ்சமம்   (திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)

இறையவன், ஈசன், எந்தை, இமையோர் தொழுது ஏத்த நின்ற
கறை அணி கண்டன், வெண்தோடு அணி காதினன், காலத்து அன்று
மறை மொழி வாய்மையினான், மலையாளொடு மன்னு சென்னிப்
பிறை அணி செஞ்சடையான், பிரமாபுரம் பேணுமினே!

[1]
உரை தரு நால்மறையோர் புகழ்ந்து ஏத்த, ஒண் மாதினொடும்
வரை என வீற்றிருந்தான், மலிகின்ற பிரமபுரத்து
அரசினை ஏத்த வல்ல அணி சம்பந்தன் பத்தும் வல்லார்
விரைதரு விண்ணுலகம் எதிர் கொள்ள விரும்புவரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.017  
நிலவும், புனலும், நிறை வாள்   பண் - இந்தளம்   (திருவேணுபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)

நிலவும், புனலும், நிறை வாள் அரவும்,
இலகும் சடையார்க்கு இடம் ஆம் எழிலார்
உலவும் வயலுக்கு ஒளி ஆர் முத்தம்
விலகும் கடல் ஆர் வேணுபுரமே.

[1]
கலம் ஆர் கடல் போல் வளம் ஆர்தரு, நல்
புலம் ஆர்தரு, வேணுபுரத்து இறையை,
நலம் ஆர்தரு ஞானசம்பந்தன், சொன்ன
குலம் ஆர் தமிழ் கூறுவர் கூர்மையரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.081  
பூதத்தின் படையினீர்! பூங்கொன்றைத் தாரினீர்!
ஓதத்தின்
  பண் - காந்தாரம்   (திருவேணுபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)

பூதத்தின் படையினீர்! பூங்கொன்றைத் தாரினீர்!
ஓதத்தின் ஒலியோடும் உம்பர்வானவர் புகுந்து
வேதத்தின் இசை பாடி, விரைமலர்கள் சொரிந்து, ஏத்தும்
பாதத்தீர்! வேணுபுரம் பதி ஆகக் கொண்டீரே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.030  
விதி ஆய், விளைவு ஆய்,   பண் - தக்கராகம்   (திருப்புகலி -(சீர்காழி ) பிரமபுரீசர் திருநிலைநாயகி)

விதி ஆய், விளைவு ஆய், விளைவின் பயன் ஆகி,
கொதியா வரு கூற்றை உதைத்தவர் சேரும்
பதி ஆவது பங்கயம் நின்று அலர, தேன்
பொதி ஆர் பொழில் சூழ் புகலி நகர்தானே.

[1]
இரைக்கும் புனல் செஞ்சடை வைத்த எம்மான் தன்-
புரைக்கும் பொழில் பூம் புகலி நகர் தன் மேல்
உரைக்கும் தமிழ் ஞானசம்பந்தன் ஒண் மாலை
வரைக்கும் தொழில் வல்லவர் நல்லவர் தாமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.025  
உகலி ஆழ்கடல் ஓங்கு பார்   பண் - இந்தளம்   (திருப்புகலி -(சீர்காழி ) பிரமபுரீசர் திருநிலைநாயகி)

உகலி ஆழ்கடல் ஓங்கு பார் உளீர்!
அகலியா வினை அல்லல் போய் அறும்
இகலியார் புரம் எய்தவன் உறை
புகலி மா நகர் போற்றி வாழ்மினே!

[1]
புல்லம் ஏறிதன் பூம் புகலியை,
நல்ல ஞானசம்பந்தன் நாவினால்
சொல்லும் மாலைஈர் ஐந்தும் வல்லவர்க்கு,
இல்லை ஆம் வினை, இரு நிலத்துளே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.054  
உரு ஆர்ந்த மெல்லியல் ஓர்பாகம்   பண் - சீகாமரம்   (திருப்புகலி -(சீர்காழி ) பிரமபுரீசர் திருநிலைநாயகி)

உரு ஆர்ந்த மெல்லியல் ஓர்பாகம் உடையீர்! அடைவோர்க்குக்
கரு ஆர்ந்த வான் உலகம் காட்டிக் கொடுத்தல் கருத்து ஆனீர்!
பொரு ஆர்ந்த தெண்கடல் ஒண்சங்கம் திளைக்கும் பூம் புகலி,
திரு ஆர்ந்த கோயிலே கோயில் ஆக்த் திகழ்ந்தீரே.[1]
ஒப்பு அரிய பூம் புகலி ஓங்கு கோயில் மேயானை,
அப் பரிசில் பதி ஆன அணி கொள் ஞானசம்பந்தன்,
செப்ப(அ)ரிய தண்தமிழால் தெரிந்த பாடல் இவை வல்லார்,
எப்பரிசில் இடர் நீங்கி, இமையோர் உலகத்து இருப்பாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.122  
விடை அது ஏறி, வெறி   பண் - செவ்வழி   (திருப்புகலி -(சீர்காழி ) பிரமபுரீசர் திருநிலைநாயகி)

விடை அது ஏறி, வெறி அக்கு அரவு ஆர்த்த விமலனார்,
படை அது ஆகப் பரசு தரித்தார்க்கு இடம் ஆவது
கொடையில் ஓவார், குலமும்(ம்) உயர்ந்த(ம்) மறையோர்கள் தாம்
புடை கொள் வேள்விப்புகை உம்பர் உலாவும் புகலியே.

[1]
எய்த ஒண்ணா இறைவன் உறைகின்ற புகலியை,
கைதவம் இல்லாக் கவுணியன் ஞானசம்பந்தன் சீர்
செய்த பத்தும்(ம்) இவை செப்ப வல்லார், சிவலோகத்தில்
எய்தி, நல்ல இமையோர்கள் ஏத்த, இருப்பார்களே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.007  
கண் நுதலானும், வெண் நீற்றினானும்,   பண் - காந்தாரபஞ்சமம்   (திருப்புகலி -(சீர்காழி ) பிரமபுரீசர் திருநிலைநாயகி)

கண் நுதலானும், வெண் நீற்றினானும், கழல் ஆர்க்கவே
பண் இசை பாட நின்று ஆடினானும், பரஞ்சோதியும்
புண்ணிய நால்மறையோர்கள் ஏத்தும் புகலி(ந்) நகர்,
பெண்ணின் நல்லாளொடும் வீற்றிருந்த பெருமான் அன்றே!

[1]
பூங் கமழ் கோதையொடும்(ம்) இருந்தான், புகலி(ந்) நகர்ப்
பாங்கனை, ஞானசம்பந்தன் சொன்ன தமிழ் பத்து இவை,
ஆங்கு அமர்வு எய்திய ஆதி ஆக, இசை வல்லவர்,
ஓங்கு அமராவதியோர் தொழச் செல்வதும் உண்மையே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.075  
காலை நல்மாமலர் கொண்டு அடி   பண் - குறிஞ்சி   (திருவெங்குரு (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)

காலை நல்மாமலர் கொண்டு அடி பரவி, கைதொழு மாணியைக் கறுத்த வெங்காலன்,
ஓலம் அது இட, முன் உயிரொடு மாள உதைத்தவன்; உமையவள் விருப்பன்; எம்பெருமான்-
மாலை வந்து அணுக, ஓதம் வந்து உலவி, மறிதிரை சங்கொடு பவளம் முன் உந்தி,
வேலை வந்து அணையும் சோலைகள் சூழ்ந்த வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரே.

[1]
விண் இயல் விமானம் விரும்பிய பெருமான் வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரை,
நண்ணிய நூலன்-ஞானசம்பந்தன்-நவின்ற இவ் வாய்மொழி நலம் மிகு பத்தும்
பண் இயல்பு ஆகப் பத்திமையாலே பாடியும் ஆடியும் பயில வல்லார்கள்,
விண்ணவர் விமானம் கொடுவர ஏறி, வியன் உலகு ஆண்டு வீற்றிருப்பவர் தாமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.060  
வண் தரங்கப் புனல் கமல   பண் - பழந்தக்கராகம்   (சீர்காழி தோணியப்பர் திருநிலைநாயகியம்மை)

வண் தரங்கப் புனல் கமல மது மாந்திப் பெடையினொடும்
ஒண் தரங்க இசை பாடும் அளி அரசே! ஒளி மதியத்
துண்டர், அங்கப்பூண் மார்பர், திருத் தோணிபுரத்து உறையும்
பண்டரங்கர்க்கு என் நிலைமை பரிந்து ஒரு கால் பகராயே!

[1]
போர் மிகுத்த வயல்-தோணிபுரத்து உறையும் புரிசடை எம்
கார் மிகுத்த கறைக் கண்டத்து இறையவனை, வண்கமலத்
தார் மிகுத்த வரைமார்பன்-சம்பந்தன்-உரைசெய்த
சீர் மிகுத்த தமிழ் வல்லார் சிவலோகம் சேர்வாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.100  
கரும்பு அமர் வில்லியைக் காய்ந்து,   பண் - சாதாரி   (சீர்காழி தோணியப்பர் திருநிலைநாயகியம்மை)

கரும்பு அமர் வில்லியைக் காய்ந்து, காதல் காரிகை மாட்டு அருள
அரும்பு அமர் கொங்கை ஓர்பால் மகிழ்ந்த அற்புதம் செப்ப(அ)ரிதால்;
பெரும் பகலே வந்து, என் பெண்மை கொண்டு, பேர்ந்தவர் சேர்ந்த இடம்
சுரும்பு அமர் சோலைகள் சூழ்ந்த செம்மைத் தோணிபுரம் தானே.

[1]
தூ மரு மாளிகை மாடம் நீடு தோணிபுரத்து இறையை,
மாமறை நான்கினொடு அங்கம் ஆறும் வல்லவன்-
வாய்மையினால்
நா மரு கேள்வி நலம் திகழும் ஞானசம்பந்தன்-சொன்ன
பா மரு பாடல்கள் பத்தும் வல்லார் பார் முழுது ஆள்பவரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.013  
மின் அன எயிறு உடை   பண் - காந்தாரபஞ்சமம்   (திருப்பூந்தராய் )

மின் அன எயிறு உடை விரவலோர்கள் தம்
துன்னிய புரம் உகச் சுளிந்த தொன்மையர்
புன்னை அம்பொழில் அணி பூந்தராய் நகர்
அன்ன அன்ன(ந்) நடை அரிவை பங்கரே.

[1]
புரம் எரி செய்தவர், பூந்தராய் நகர்ப்
பரம் மலி குழல் உமை நங்கை பங்கரைப்
பரவிய பந்தன் மெய்ப் பாடல் வல்லவர்
சிரம் மலி சிவகதி சேர்தல் திண்ணமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.047  
பல் அடைந்த வெண் தலையில்   பண் - பழந்தக்கராகம்   (திருச்சிரபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)

பல் அடைந்த வெண் தலையில் பலி கொள்வது அன்றியும், போய்,
வில் அடைந்த புருவ நல்லாள் மேனியில் வைத்தல் என்னே
சொல் அடைந்த தொல் மறையோடு அங்கம் கலைகள் எல்லாம்
செல் அடைந்த செல்வர் வாழும் சிரபுரம் மேயவனே?

[1]
தெங்கம் நீண்ட சோலை சூழ்ந்த சிரபுரம் மேயவனை
அங்கம் நீண்ட மறைகள் வல்ல அணி கொள் சம்பந்தன் உரை
பங்கம் நீங்கப் பாட வல்ல பத்தர்கள் பார் இதன் மேல்
சங்கமோடு நீடி வாழ்வர், தன்மையினால் அவரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.109  
வார் உறு வனமுலை மங்கை   பண் - வியாழக்குறிஞ்சி   (திருச்சிரபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)

வார் உறு வனமுலை மங்கை பங்கன்,
நீர் உறு சடை முடி நிமலன், இடம்
கார் உறு கடி பொழில் சூழ்ந்து அழகு ஆர்
சீர் உறு வளவயல் சிரபுரமே.

[1]
அருமறை ஞானசம்பந்தன், அம் தண்
சிரபுரநகர் உறை சிவன் அடியைப்
பரவிய செந்தமிழ் பத்தும் வல்லார்
திருவொடு புகழ் மல்கு தேசினரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.098  
நன்று உடையானை, தீயது இலானை,   பண் - குறிஞ்சி   (திருச்சிராப்பள்ளி தாயுமானேசுவரர் மட்டுவார்குழலம்மை)

நன்று உடையானை, தீயது இலானை, நரை-வெள் ஏறு
ஒன்று உடையானை, உமை ஒரு பாகம் உடையானை,
சென்று அடையாத திரு உடையானை, சிராப்பள்ளிக்-
குன்று உடையானை, கூற, என் உள்ளம் குளிருமே.

[1]
தேன் நயம் பாடும் சிராப்பள்ளியானை, திரை சூழ்ந்த
கானல் சங்கு ஏறும் கழுமல ஊரில் கவுணியன்-
ஞானசம்பந்தன்-நலம் மிகு பாடல் இவை வல்லார்
வான சம்பந்தத்தவரொடும் மன்னி வாழ்வாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.066  
பங்கம் ஏறு மதி சேர்   பண் - தக்கேசி   (திருச்சண்பைநகர் (சீர்காழி) )

பங்கம் ஏறு மதி சேர் சடையார், விடையார், பலவேதம்
அங்கம் ஆறும் மறை நான்கு அவையும் ஆனார் மீன் ஆரும்
வங்கம் மேவு கடல் வாழ் பரதர் மனைக்கே நுனை மூக்கின்
சங்கம் ஏறி முத்தம் ஈனும் சண்பை நகராரே.

[1]
வேதம் ஓதி, வெண்நூல் பூண்டு, வெள்ளை எருது ஏறி,
பூதம் சூழ, பொலிய வருவார்; புலியின் உரி-தோலார்;
நாதா! எனவும், நக்கா! எனவும், நம்பா! என நின்று,
பாதம் தொழுவார் பாவம் தீர்ப்பார் பழனநகராரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.034  
அடல் ஏறு அமரும் கொடி   பண் - தக்கராகம்   (சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)

அடல் ஏறு அமரும் கொடி அண்ணல்
மடல் ஆர் குழலாளொடு மன்னும்,
கடல் ஆர் புடை சூழ் தரு, காழி
தொடர்வார் அவர் தூ நெறியாரே.

[1]
நலம் ஆகிய ஞானசம்பந்தன்
கலம் ஆர் கடல் சூழ் தரு காழி
நிலை ஆக நினைந்தவர் பாடல்
வலர் ஆனவர் வான் அடைவாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.081  
நல்லார், தீ மேவும் தொழிலார்,   பண் - குறிஞ்சி   (சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)

நல்லார், தீ மேவும் தொழிலார், நால்வேதஞ்-
சொல்லார், கேண்மையார், சுடர் பொன்கழல் ஏத்த,
வில்லால் புரம் செற்றான் மேவும் பதிபோலும்
கல் ஆர் மதில் சூழ்ந்த காழி நகர்தானே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.102  
உரவு ஆர் கலையின் கவிதைப்   பண் - குறிஞ்சி   (சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)

உரவு ஆர் கலையின் கவிதைப் புலவர்க்கு ஒருநாளும்
கரவா வண்கைக் கற்றவர் சேரும் கலிக் காழி
அரவு ஆர் அரையா! அவுணர் புரம் மூன்று எரி செய்த
சரவா! என்பார் தத்துவஞானத் தலையாரே.

[1]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.011  
நல்லானை, நால்மறையோடு இயல் ஆறுஅங்கம்
வல்லானை,
  பண் - இந்தளம்   (சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)

நல்லானை, நால்மறையோடு இயல் ஆறுஅங்கம்
வல்லானை, வல்லவர்பால் மலிந்து ஓங்கிய
சொல்லானை, தொல் மதில் காழியே கோயில் ஆம்
இல்லானை, ஏத்த நின்றார்க்கு உளது, இன்பமே.

[1]
கழி ஆர் சீர் ஓதம் மல்கும் கடல் காழியு
ஒழியாது கோயில்கொண்டானை, உகந்து உள்கித்
தழி ஆர் சொல் ஞானசம்பந்தன் தமிழ் ஆர
மொழிவார்கள், மூஉலகும் பெறுவார்களே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.049  
பண்ணின் நேர் மொழி மங்கைமார்   பண் - சீகாமரம்   (சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)

பண்ணின் நேர் மொழி மங்கைமார் பலர் பாடி ஆடிய ஓசை நாள்தொறும்
கண்ணின் நேர் அயலே பொலியும் கடல் காழி,
பெண்ணின் நேர் ஒருபங்கு உடைப் பெருமானை, எம்பெருமான்! என்று என்று உன்னும்
அண்ணல் ஆர் அடியார் அருளாலும் குறைவு இலரே.

[1]
பெயர் எனும்(ம்) இவை பன்னிரண்டினும் உண்டு எனப்
பெயர் பெற்ற ஊர், திகழ்
கயல் உலாம் வயல் சூழ்ந்து அழகு ஆர் கலிக் காழி,
நயன் நடன் கழல் ஏத்தி வாழ்த்திய ஞானசம்பந்தன்
செந்தமிழ் உரை
உயருமா மொழிவார் உலகத்து உயர்ந்தாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.059  
நலம் கொள் முத்தும் மணியும்   பண் - காந்தாரம்   (சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)

நலம் கொள் முத்தும் மணியும் அணியும் திரள் ஓதம்
கலங்கள் தன்னில் கொண்டு கரை சேர் கலிக் காழி,
வலம் கொள் மழு ஒன்று உடையாய்! விடையாய்! என
ஏத்தி,
அலங்கல் சூட்ட வல்லார்க்கு அடையா, அருநோயே.

[1]
ஊழி ஆய பாரில் ஓங்கும் உயர் செல்வக்
காழி ஈசன் கழலே பேணும் சம்பந்தன்,
தாழும் மனத்தால், உரைத்த தமிழ்கள் இவை வல்லார்,
வாழி நீங்கா வானோர் உலகில் மகிழ்வாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.075  
விண் இயங்கும் மதிக்கண்ணியான், விரியும்   பண் - காந்தாரம்   (சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)

விண் இயங்கும் மதிக்கண்ணியான், விரியும் சடைப்
பெண் நயம் கொள் திருமேனியான், பெருமான், அனல்
கண் நயம் கொள் திருநெற்றியான் கலிக் காழியுள
மண் நயம் கொள் மறையாளர் ஏத்து மலர்ப்பாதனே.

[1]
கண்ணு மூன்றும் உடை ஆதி வாழ் கலிக் காழியு
அண்ணல் அம் தண் அருள் பேணி ஞானசம்பந்தன்
சொல்,
வண்ணம் ஊன்றும் தமிழில் தெரிந்து இசை பாடுவார்,
விண்ணும் மண்ணும் விரிகின்ற தொல்புகழாளரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.096  
பொங்கு வெண்புரி வளரும் பொற்பு   பண் - பியந்தைக்காந்தாரம்   (சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)

பொங்கு வெண்புரி வளரும் பொற்பு உடை மார்பன்,
எம்பெருமான்,
செங்கண் ஆடு அரவு ஆட்டும் செல்வன், எம் சிவன்,
உறை கோயில்
பங்கம் இல் பலமறைகள் வல்லவர், பத்தர்கள், பரவும்
தங்கு வெண்திரைக் கானல் தண்வயல் காழி நன் நகரே.

[1]
ஊழி ஆனவை பலவும் ஒழித்திடும் காலத்தில் ஓங்கு...........

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.113  
பொடி இலங்கும் திருமேனியாளர், புலி   பண் - செவ்வழி   (சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)

பொடி இலங்கும் திருமேனியாளர், புலி அதளினர்,
அடி இலங்கும் கழல் ஆர்க்க ஆடும் அடிகள்(ள்), இடம்
இடி இலங்கும் குரல் ஓதம் மல்க(வ்) எறி வார் திரைக்
கடி இலங்கும் புனல் முத்து அலைக்கும் கடல் காழியே.

[1]
கருகு முந்நீர் திரை ஓதம் ஆரும் கடல் காழியு
உரகம் ஆரும் சடை அடிகள் தம்பால் உணர்ந்து
உறுதலால்,
பெருக மல்கும் புகழ் பேணும் தொண்டர்க்கு, இசை
ஆர் தமிழ்
விரகன் சொன்ன இவை பாடி ஆட, கெடும், வினைகளே

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.043  
சந்தம் ஆர் முலையாள் தன   பண் - கௌசிகம்   (சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)

சந்தம் ஆர் முலையாள் தன கூறனார்
வெந்த வெண்பொடி ஆடிய மெய்யனார்
கந்தம் ஆர் பொழில் சூழ்தரு காழியுள்
எந்தையார், அடி என் மனத்து உள்ளவே.

[1]
கானல் வந்து உலவும் கடல் காழியு
ஈனம் இ(ல்)லி இணை அடி ஏத்திடும்
ஞானசம்பந்தன் சொல்லிய நல்-தமிழ்,
மானம் ஆக்கும், மகிழ்ந்து உரைசெய்யவே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.089  
திருந்து மா களிற்று இள   பண் - சாதாரி   (திருக்கொச்சைவயம் (சீர்காழி) )

திருந்து மா களிற்று இள மருப்பொடு திரள் மணிச் சந்தம் உந்தி,
குருந்து மா குரவமும் குடசமும் பீலியும் சுமந்து கொண்டு,
நிரந்து மா வயல் புகு நீடு கோட்டாறு சூழ் கொச்சை மேவிப்
பொருந்தினார் திருந்து அடி போற்றி வாழ், நெஞ்சமே! புகல் அது ஆமே.

[1]
காய்ந்து தம் காலினால் காலனைச் செற்றவர், கடி கொள்
கொச்சை
ஆய்ந்து கொண்டு இடம் என இருந்த நல் அடிகளை, ஆதரித்தே
ஏய்ந்த தொல்புகழ் மிகும் எழில்மறை ஞானசம்பந்தன் சொன்ன
வாய்ந்த இம் மாலைகள் வல்லவர் நல்லர், வான் உலகின்
மேலே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.079  
அயில் உறு படையினர்; விடையினர்;   பண் - குறிஞ்சி   (சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)

அயில் உறு படையினர்; விடையினர்; முடிமேல் அரவமும்
மதியமும் விரவிய அழகர்;
மயில் உறு சாயல் வனமுலை ஒருபால் மகிழ்பவர்; வான் இடை
முகில் புல்கும் மிடறர்;
பயில்வு உறு சரிதையர்; எருது உகந்து ஏறிப் பாடியும் ஆடியும் பலி
கொள்வர்; வலி சேர்
கயிலையும் பொதியிலும் இடம் என உடையார் கழுமலம் நினைய,
நம் வினைகரிசு அறுமே.

[1]
கலி கெழு பார் இடை ஊர் என உளது ஆம் கழுமலம் விரும்பிய
  கோயில் கொண்டவர் மேல்,
வலி கெழு மனம் மிக வைத்தவன், மறை சேர்வரும் கலை
ஞானசம்பந்தன் தமிழின்
ஒலிகெழுமாலை என்று உரைசெய்த பத்தும் உண்மையினால்
  நினைந்து ஏத்த வல்லார்மேல்
மெலி குழு துயர் அடையா; வினை சிந்தும்; விண்ணவர் ஆற்றலின்
மிகப் பெறுவாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1 -ஆம் திருமுறை   பதிகம் 1.129  
சே உயரும் திண் கொடியான்   பண் - மேகராகக்குறிஞ்சி   (சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)

சே உயரும் திண் கொடியான் திருவடியே
சரண் என்று சிறந்த அவன்பால்
நா இயலும் மங்கையொடு நான்முகன்
தான் வழிபட்ட நலம் கொள் கோயில்
வாவிதொறும் வண்கமலம் முகம் காட்ட,
செங்குமுதம் வாய்கள் காட்ட,
காவி இருங்கருங்குவளை கரு நெய்தல்
கண் காட்டும் கழுமலமே.

[1]
கற்றவர்கள் பணிந்து ஏத்தும் கழுமலத்துள்
ஈசன்தன் கழல்மேல், நல்லோர்
நல்-துணை ஆம் பெருந்தன்மை ஞானசம்
பந்தன்தான் நயந்து சொன்ன
சொல்-துணை ஓர் ஐந்தினொடு ஐந்து இவை வல்லார்,
தூமலராள் துணைவர் ஆகி,
முற்று உலகம் அது கண்டு, முக்கணான்
அடி சேர முயல்கின்றாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2 -ஆம் திருமுறை   பதிகம் 2.039  
ஆரூர், தில்லை அம்பலம், வல்லம்,   பண் - இந்தளம்   (சீர்காழி )

ஆரூர், தில்லை அம்பலம், வல்லம், நல்லம்,
வடகச்சியும்,அச்சிறுபாக்கம், நல்ல
கூரூர், குடவாயில், குடந்தை, வெண்ணி,
கடல் சூழ் கழிப்பாலை, தென் கோடி, பீடு ஆர்
நீர் ஊர் வயல் நின்றியூர், குன்றியூரும்,
குருகாவையூர், நாரையூர், நீடு கானப்
பேரூர், நல் நீள் வயல் நெய்த்தானமும்,
பிதற்றாய், பிறைசூடிதன் பேர் இடமே!

[1]
அம்மானை, அருந்தவம் ஆகிநின்ற
அமரர்பெருமான், பதி ஆன உன்னி,
கொய்ம் மா மலர்ச்சோலை குலாவு கொச்சைக்கு
இறைவன் சிவ ஞானசம்பந்தன் சொன்ன
இம் மாலை ஈர் ஐந்தும் இரு நிலத்தில்
இரவும் பகலும் நினைந்து ஏத்தி நின்று,
விம்மா, வெருவா, விரும்பும்(ம்) அடியார்,
விதியார் பிரியார் சிவன் சேவடிக்கே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.040  
கல்லால் நீழல் அல்லாத் தேவை
நல்லார்
  பண் - கொல்லி   (சீர்காழி )

கல்லால் நீழல் அல்லாத் தேவை
நல்லார் பேணார்; அல்லோம், நாமே.

[1]
அம் தண் காழிப் பந்தன் சொல்லைச்
சிந்தை செய்வோர் உய்ந்து உளோரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.125  
கல் ஊர்ப் பெரு மணம்   பண் - அந்தாளிக்குறிஞ்சி   (திருநல்லூர்ப்பெருமணம் (ஆச்சாள்புரம்) சிவலோகத்தியாகேசர் நங்கையுமைநாயகியம்மை)

கல் ஊர்ப் பெரு மணம் வேண்டா கழுமலம்
பல் ஊர்ப் பெரு மணம் பாட்டு மெய் ஆய்த்தில?
சொல் ஊர்ப் பெரு மணம் சூடலரே! தொண்டர்
நல்லூர்ப்பெருமணம் மேய நம்பானே!

[1]
நறும்பொழில் காழியுள் ஞானசம்பந்தன்,
பெறும் பத நல்லூர்ப்பெருமணத்தானை,
உறும் பொருளால் சொன்ன ஒண்தமிழ் வல்லார்க்கு
அறும், பழி பாவம்; அவலம் இலரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.049  
காதல் ஆகி, கசிந்து, கண்ணீர்   பண் - கௌசிகம்   (நல்லூர்ப்பெருமணம் -நமசிவாயத் திருப்பதிகம் )

காதல் ஆகி, கசிந்து, கண்ணீர் மல்கி,
ஓதுவார் தமை நன் நெறிக்கு உய்ப்பது;
வேதம் நான்கினும் மெய்ப்பொருள் ஆவது
நாதன் நாமம் நமச்சிவாயவே.

[1]
நந்தி நாமம் நமச்சிவாய! என்னும்
சந்தையால்,-தமிழ் ஞானசம்பந்தன் சொல்
சிந்தையால் மகிழ்ந்து ஏத்த வல்லார் எலாம்
பந்தபாசம் அறுக்க வல்லார்களே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.901  
மறியார் கரத்தெந்தையம் மாதுமை யோடும்
பிறியாத
  பண் -   (திருவிடைவாய் )

மறியார் கரத்தெந்தையம் மாதுமை யோடும்
பிறியாத பெம்மான் உறையும் இடமென்பர்
பொறிவாய் வரிவண்டுதன் பூம்பெடை புல்கி
வெறியார் மலரில் துயிலும் விடைவாயே.

[1]
ஆறும் மதியும்பொதி வேணியன் ஊராம்
மாறில் பெருஞ்செல்வம் மலிவிடை வாயை
நாறும் பொழிற்காழியர் ஞானசம் பந்தன்
கூறுந் தமிழ்வல்லவர் குற்றமற் றோரே.
<

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3 -ஆம் திருமுறை   பதிகம் 3.902  
தார்சி றக்கும் சடைக்கணி வள்ளலின்
சீர்சி
  பண் -   (திருக்கிளியன்னவூர் )

தார்சி றக்கும் சடைக்கணி வள்ளலின்
சீர்சி றக்கும் துணைப்பதம் உன்னுவோர்
பேர்சி றக்கும் பெருமொழி உய்வகை
ஏர்சி றக்கும் கிளியன்ன வூரனே.

[1]
நிறைய வாழ்கிளி யன்னவூர் ஈசனை
உறையும் ஞானசம் பந்தன்சொல் சீரினை
அறைய நின்றன பத்தும்வல் லார்க்குமே
குறையி லாது கொடுமை தவிர்வரே.

[11]

This page was last modified on Sun, 15 Aug 2021 00:03:43 -0500
          send corrections and suggestions to admin @ sivasiva.org