சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Search this site with
song/pathigam/paasuram numbers
or words in any language

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     
Thirumurai
6.002   திருநாவுக்கரசர்   தேவாரம்   மங்குல் மதி தவழும் மாட
பண் - புக்கதிருத்தாண்டகம்   (கோயில் (சிதம்பரம்) திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் சிவகாமியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=8XU3EbcF0DM

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
6.002   மங்குல் மதி தவழும் மாட  
பண் - புக்கதிருத்தாண்டகம்   (திருத்தலம் கோயில் (சிதம்பரம்) ; (திருத்தலம் அருள்தரு சிவகாமியம்மை உடனுறை அருள்மிகு திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் திருவடிகள் போற்றி )
மங்குல் மதி தவழும் மாட வீதி மயிலாப்பில் உள்ளார்; மருகல் உள்ளார்;
கொங்கில் கொடுமுடியார்; குற்றாலத்தார்; குடமூக்கின் உள்ளார்; போய்க் கொள்ளம் பூதூர்த்
தங்கும் இடம் அறியார்; சால நாளார்; தருமபுரத்து   உள்ளார்; தக்களூரார்-
பொங்கு வெண்நீறு அணிந்து பூதம் சூழ, புலியூர்ச் சிற்றம்பலமே புக்கார்தாமே.

[1]
நாகம் அரைக்கு அசைத்த நம்பர் இந் நாள் நனிபள்ளி   உள்ளார்; போய் நல்லூர்த் தங்கி
பாகப் பொழுது எலாம் பாசூர்த் தங்கி, பரிதி நியமத்தார், பன்னிரு நாள்;
வேதமும் வேள்விப் புகையும் ஓவா விரிநீர் மிழலை எழுநாள்-தங்கி,
போகமும் பொய்யாப் பொருளும் ஆனார்-புலியூர்ச் சிற்றம்பலமே புக்கார்தாமே.

[2]
துறம் காட்டி, எல்லாம் விரித்தார் போலும்; தூ மதியும் பாம்பும் உடையார் போலும்;
மறம் காட்டி, மும்மதிலும் எய்தார் போலும்; மந்திரமும் தந்திரமும் தாமேபோலும்;
அறம் காட்டி, அந்தணர்க்கு அன்று ஆலநீழல் அறம் அருளிச்செய்த அரனார்-இந் நாள்,
புறங்காட்டு எரி ஆடிப் பூதம் சூழ, புலியூர்ச் சிற்றம்பலமே புக்கார் தாமே.

[3]
வார் ஏறு வனமுலையாள் பாகம் ஆக, மழுவாள் கை   ஏந்தி, மயானத்து ஆடி,
சீர் ஏறு தண் வயல் சூழ் ஓத வேலித் திரு   வாஞ்சியத்தார்; திரு நள்ளாற்றார்;
கார் ஏறு கண்டத்தார்; காமற் காய்ந்த கண் விளங்கு நெற்றியார்; கடல் நஞ்சு உண்டார்-
போர் ஏறு தாம் ஏறிப் பூதம் சூழ, புலியூர்ச் சிற்றம்பலமே புக்கார்தாமே.

[4]
கார் ஆர் கமழ் கொன்றைக் கண்ணி சூடி, கபாலம் கை ஏந்தி, கணங்கள் பாட,
ஊரார் இடு பிச்சை கொண்டு, உழ(ல்)லும் உத்தமராய் நின்ற ஒருவனார்தாம்:
சீர் ஆர் கழல் வணங்கும் தேவதேவர்; திரு ஆரூர்த் திரு மூலட்டானம் மேயார்-
போர் ஆர் விடை ஏறிப் பூதம் சூழ, புலியூர்ச் சிற்றம்பலமே புக்கார்தாமே.

[5]
காது ஆர் குழையினர்; கட்டங்கத்தர்; கயிலாயமாமலையார்; காரோணத்தார்;
மூதாயர் மூதாதை இல்லார் போலும்; முதலும் இறுதியும் தாமே போலும்;
மாது ஆய மாதர் மகிழ, அன்று, வன் மத வேள் தன் உடலம் காய்ந்தார்-இந்நாள்
போது ஆர் சடை தாழப் பூதம் சூழ, புலியூர்ச் சிற்றம்பலமே புக்கார் தாமே.

[6]
இறந்தார்க்கும் என்றும் இறவாதார்க்கும் இமையவர்க்கும் ஏகம் ஆய் நின்று, சென்று
பிறந்தார்க்கும் என்றும் பிறவாதார்க்கும் பெரியான்; தன் பெருமையே பேச நின்று,
மறந்தார் மனத்து என்றும் மருவார் போலும்; மறைக்காட்டு உறையும் மழுவாள் செல்வர்-
புறம் தாழ்சடை தாழப் பூதம் சூழ, புலியூர்ச் சிற்றம்பலமே புக்கார்தாமே.

[7]
குலா வெண்தலைமாலை என்பு பூண்டு, குளிர் கொன்றைத்தார் அணிந்து, கொல் ஏறு ஏறி,
கலா வெங்களிற்று உரிவைப்போர்வை மூடி, கை ஓடு அனல் ஏந்தி, காடு உறைவார்;
நிலா வெண்மதி உரிஞ்ச நீண்ட மாடம் நிறை வயல் சூழ் நெய்த்தானம் மேய செல்வர்-
புலா வெண்தலை ஏந்திப் பூதம் சூழ, புலியூர்ச் சிற்றம்பலமே புக்கார்தாமே.

[8]
சந்தித்த கோவணத்தர், வெண் நூல் மார்பர்; சங்கரனைக் கண்டீரோ? கண்டோம்-இந் நாள்,
பந்தித்த வெள்விடையைப் பாய ஏறி, படுதலையில்   என்கொலோ ஏந்திக் கொண்டு,
வந்து ஈங்கு என் வெள் வளையும் தாமும் எல்லாம், மணி ஆரூர் நின்று, அந்தி கொள்ளக்கொள்ள,
பொன் தீ மணிவிளக்குப் பூதம் பற்ற, புலியூர்ச் சிற்றம்பலமே புக்கார்தாமே.

[9]
பாதங்கள் நல்லார் பரவி ஏத்த, பத்திமையால் பணி செய்யும் தொண்டர்தங்கள்
ஏதங்கள் தீர, இருந்தார்போலும்; எழுபிறப்பும் ஆள் உடைய ஈசனார்தாம்-
வேதங்கள் ஓதி, ஓர் வீணை ஏந்தி, விடை ஒன்று தாம் ஏறி, வேதகீதர்,
பூதங்கள் சூழ, புலித்தோல் வீக்கி, புலியூர்ச் சிற்றம்பலமே புக்கார்தாமே.

[10]
பட்டு உடுத்து, தோல் போர்த்து, பாம்பு ஒன்று ஆர்த்து, பகவனார், பாரிடங்கள் சூழ நட்டம்
சிட்டராய், தீஏந்தி, செல்வார் தம்மைத் தில்லைச் சிற்றம்பலத்தே கண்டோம், இந் நாள்;
விட்டு இலங்கு சூலமே, வெண் நூல், உண்டே; ஓதுவதும் வேதமே; வீணை உண்டே;
கட்டங்கம் கையதே, -சென்று காணீர்!-கறை சேர் மிடற்று எம் கபாலியார்க்கே.

[11]
Back to Top

This page was last modified on Wed, 28 Feb 2024 01:04:02 -0500
          send corrections and suggestions to admin @ sivaya.org

thirumurai list