sivasiva.org
Search this site with
song/pathigam/paasuram numbers
Or Tamil/English words

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     
Thirumurai
5.075   திருநாவுக்கரசர்   தேவாரம்   மரக் கொக்குஆம் என வாய்விட்டு
திருக்குறுந்தொகை   (திருக்குரக்குக்கா கொந்தளக்கருணைநாதர் கொந்தளநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=Ph5jvuLnL0Q

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5.075   மரக் கொக்குஆம் என வாய்விட்டு  
பண் - திருக்குறுந்தொகை   (திருத்தலம் திருக்குரக்குக்கா ; (திருத்தலம் அருள்தரு கொந்தளநாயகியம்மை உடனுறை அருள்மிகு கொந்தளக்கருணைநாதர் திருவடிகள் போற்றி )
மரக் கொக்குஆம் என வாய்விட்டு அலறி, நீர்,
சரக்குக் காவி, திரிந்து அயராது, கால்
பரக்கும் காவிரி நீர் அலைக்கும் கரைக்
குரக்குக்கா அடைய, கெடும், குற்றமே.

[1]
கட்டு ஆறே கழி காவிரி பாய் வயல்
கொட்டாறே, புனல் ஊறு குரக்குக்கா,
முட்டு ஆறா, அடி ஏத்த முயல்பவர்க்கு
இட்டு ஆறா, இடர் ஓட எடுக்குமே.

[2]
கை அனைத்தும் கலந்து எழு காவிரி,
செய் அனைத்திலும் சென்றிடும், செம் புனல்
கொய் அனைத்தும் கொணரும் குரக்குக்கா
ஐயனைத் தொழுவார்க்கு அல்லல் இல்லையே.

[3]
மிக்கு அனைத்துத் திசையும் அருவிகள்
புக்குக் காவிரி போந்த புனல் கரை,
கொக்கு இனம் பயில் சோலை, குரக்குக்கா
நக்கனை நவில்வார் வினை நாசமே.

[4]
விட்டு வெள்ளம் விரிந்து எழு காவிரி
இட்ட நீர் வயல் எங்கும் பரந்திட,
கொட்ட மா முழவு, ஓங்கு குரக்குக்கா
இட்டம் ஆய் இருப்பார்க்கு இடர் இல்லையே.

[5]
மேலை வானவரோடு, விரி கடல்
மாலும், நான்முகனாலும், அளப்பு ஒணாக்
கோல மாளிகைக் கோயில் குரக்குக்காப்-
பாலராய்த் திரிவார்க்கு இல்லை, பாவமே.

[6]
ஆலநீழல் அமர்ந்த அழகனார்,
காலனை உதைகொண்ட கருத்தனார்,
கோல மஞ்ஞைகள் ஆலும் குரக்குக்காப்-
பாலருக்கு அருள்செய்வர், பரிவொடே.

[7]
செக்கர் அங்கு எழு செஞ்சுடர்ச் சோதியார்,
அக்கு அரையர், எம் ஆதிபுராணனார்,
கொக்கு இனம் வயல் சேரும் குரக்குக்கா
நக்கனை, தொழ, நம் வினை நாசமே.

[8]
உருகி ஊன் குழைந்து ஏத்தி எழுமின், நீர்,
கரிய கண்டன் கழல் அடி தன்னையே!
குரவனம் செழுங் கோயில் குரக்குக்கா
இரவும் எல்லியும் ஏத்தித் தொழுமினே!

[9]
இரக்கம் இன்றி மலை எடுத்தான் முடி,
உரத்தை, ஒல்க அடர்த்தான் உறைவு இடம்-
குரக்கு இனம் குதிகொள்ளும் குரக்குக்கா;
வரத்தனைப் பெற வான் உலகு ஆள்வரே.

[10]
Back to Top

This page was last modified on Fri, 15 Dec 2023 21:06:13 +0000
          send corrections and suggestions to admin @ sivasiva.org   https://www.sivaya.org/thirumurai_list.php