sivasiva.org
Search this site with
song/pathigam/paasuram numbers
Or Tamil/English words

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  
12.360   சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்   12 th/nd Thirumurai (   Location: God: Goddess: ) ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
உருநாட்டும் செயல்காமன்
ஒழியவிழி பொழிசெந்தீ
வருநாட்டத் திருநுதலார்
மகிழ்ந்தருளும் பதிவயலில்
கருநாட்டக் கடைசியர்தங்
களிகாட்டுங் காவேரித்
திருநாட்டு வளங்காட்டுஞ்
செங்காட்டங் குடியாகும்.

[ 1]


நிலவியஅத் திருப்பதியில்
நெடுஞ்சடையார் நீற்றடைவால்
உலகில்வள ருயிர்க்கெல்லாம்
உயர்காவல் தொழில்பூண்டு
மலர்புகழ்மா மாத்திரர்தங்
குலம்பெருக வந்துள்ளார்
பலர்புகழுந் திருநாமம்
பரஞ்சோதி யாரென்பார்.

[ 2]


ஆயுள்வே தக்கலையும்
அலகில்வட நூற்கலையும்
தூயபடைக் கலத்தொழிலும்
துறைநிரம்பப் பயின்றுள்ளார்
பாயுமதக் குஞ்சரமும்
பரியுமுகைக் கும்பண்பு
மேயதொழில் விஞ்சையினும்
மேதினியில் மேலானார்.

[ 3]


உள்ளநிறை கலைத்துறைகள்
ஒழிவின்றிப் பயின்றவற்றால்
தெள்ளிவடித் தறிந்தபொருள்
சிவன்கழலிற் செறிவென்றே
கொள்ளும்உணர் வினின்முன்னே
கூற்றுதைத்த கழற்கன்பு
பள்ளமடை யாய்என்றும்
பயின்றுவரும் பண்புடையார்.

[ 4]


ஈசன்அடி யார்க்கென்றும்
இயல்பான பணிசெய்தே
ஆசில்புகழ் மன்னவன்பால்
அணுக்கராய் அவற்காகப்
பூசல்முனைக் களிறுகைத்துப்
போர்வென்று பொருமரசர்
தேசங்கள் பலகொண்டு
தேர்வேந்தன் பாற்சிறந்தார்.

[ 5]


Go to top
மன்னவற்குத் தண்டுபோய்
வடபுலத்து வாதாவித்
தொன்னகரம் துகளாகத்
துளைநெடுங்கை வரையுகைத்துப்
பன்மணியும் நிதிக்குவையும்
பகட்டினமும் பரித்தொகையும்
இன்னனஎண் ணிலகவர்ந்தே
இகலரசன் முன்கொணர்ந்தார்.

[ 6]


கதிர்முடிமன் னனுமிவர்தங்
களிற்றுரிமை யாண்மையினை
அதிசயித்துப் புகழ்ந்துரைப்ப
அறிந்தவமைச் சர்களுரைப்பார்
மதியணிந்தார் திருத்தொண்டு
வாய்த்தவலி யுடைமையினால்
எதிரிவருக் கிவ்வுலகி
லில்லையென வெடுத்துரைத்தார்.

[ 7]


தம்பெருமான் திருத்தொண்டர்
எனக்கேட்ட தார்வேந்தன்
உம்பர்பிரான் அடியாரை
உணராதே கெட்டொழிந்தேன்
வெம்புகொடும் போர்முனையில்
விட்டிருந்தேன் எனவெருவுற்று
எம்பெருமான் இதுபொறுக்க
வேண்டுமென இறைஞ்சினான்.

[ 8]


இறைஞ்சுதலும் முன்னிறைஞ்சி
என்னுரிமைத் தொழிற்கடுத்த
திறம்புரிவேன் அதற்கென்னோ
தீங்கென்ன ஆங்கவர்க்கு
நிறைந்தநிதிக் குவைகளுடன்
நீடுவிருத் திகளளித்தே
அறம்புரிசெங் கோலரசன்
அஞ்சலிசெய் துரைக்கின்றான்.

[ 9]


உம்முடைய நிலைமையினை
அறியாமை கொண்டுய்த்தீர்
எம்முடைய மனக்கருத்துக்
கினிதாக விசைந்துஉமது

மெய்ம்மைபுரி செயல்விளங்க வேண்டியவா றேசரித்துச்
செம்மைநெறித் திருத்தொண்டு
செய்யுமென விடைகொடுத்தான்.

[ 10]


Go to top
மன்னவனை விடைகொண்டு
தம்பதியில் வந்தடைந்து
பன்னுபுகழ்ப் பரஞ்சோதி
யார்தாமும் பனிமதிவாழ்
சென்னியரைக் கணபதீச்
சரத்திறைஞ்சித் திருத்தொண்டு
முன்னை நிலைமை யில்வழுவா
முறையன்பிற் செய்கின்றார்.

[ 11]


வேதகா ரணர்அடியார்
வேண்டியமெய்ப் பணிசெய்யத்
தீதில்குடிப் பிறந்ததிரு
வெண்காட்டு நங்கையெனும்
காதன்மனைக் கிழத்தியார்
கருத்தொன்ற வரும்பெருமை
நீதிமனை யறம்புரியும்
நீர்மையினில் நிலைநிற்பார்.

[ 12]


நறையிதழித் திருமுடியார்
அடியாரை நாள்தோறும்
முறைமையினில் திருவமுது
முன்னூட்டிப் பின்னுண்ணும்
நிறையுடைய பெருவிருப்பால்
நியதியா கக்கொள்ளும்
துறைவழுவா வகையொழுகுந்
தூயதொழில் தலைநின்றார்.

[ 13]


தூயதிரு வமுதுகனி
கன்னல்அறு சுவைக்கறிநெய்
பாயதயிர் பால்இனிய
பண்ணியம்முண் ணீரமுதம்
மேயபடி யாலமுது
செய்விக்க இசைந்தடியார்
மாயிருஞா லம்போற்ற
வருமிவர்பால் மனமகிழ்ந்தார்.

[ 14]


சீதமதி அரவினுடன்
செஞ்சடைமேற் செறிவித்த
நாதன்அடி யார்தம்மை
நயப்பாட்டு வழிபாட்டால்
மேதகையார் அவர்முன்பு
மிகச்சிறிய ராய்அடைந்தார்
ஆதலினால் சிறுத்தொண்டர்
எனநிகழ்ந்தார் அவனியின்மேல்.

[ 15]


Go to top
கண்ணுதலார் கணபதீச்
சரத்தின்கண் கருத்தமர
உண்ணிறைஅன் பினிற்பணிசெய்
தொழுகுவார் வழுவின்றி
எண்ணில்பெருஞ் சீரடியார்
இடைவிடா தமுதுசெய
நண்ணியபே ருவகையுடன்
நயந்துறையும் நாளின்கண்.

[ 16]


நீராருஞ் சடைமுடியார்
அருளினால் நிறைதவத்துப்
பேராளர் அவர்தமக்குப்
பெருகுதிரு மனையறத்தின்
வேராகி விளங்குதிரு
வெண்காட்டு நங்கைபால்
சீராள தேவரெனும்
திருமைந்தர் அவதரித்தார்.

[ 17]


அருமையினில் தனிப்புதல்வர்
பிறந்தபொழு தலங்கரித்த
பெருமையினிற் கிளைகளிப்ப
பெறற்கரிய மணிபெற்று
வருமகிழ்ச்சி தாதையார்
மனத்தடங்கா வகைவளரத்
திருமலிநெய் யாடல்விழாச்
செங்காட்டங் குடியெடுப்ப.

[ 18]


மங்கலநல் லியம்முழக்கம்
மறைமுழக்கம் வானளப்ப
அங்கணர்தஞ் சீரடியார்க்
களவிறந்த நிதியளித்துத்
தங்கள்மர பினில்உரிமைச்
சடங்குதச தினத்தினிலும்
பொங்குபெரு மகிழ்ச்சியுடன்
புரிந்துகாப் பணிபுனைந்தார்.

[ 19]


ஆர்வநிறை பெருஞ்சுற்றம்
அகம்மலர வளித்தவர்தாம்
பார்பெருகு மகிழ்ச்சியுடன்
பருவமுறைப் பாராட்டுச்
சீர்பெருகச் செய்யவளர்
திருமகனார் சீரடியில்
தார்வளர்கிண் கிணியசையத்
தளர்நடையின் பதஞ்சார்ந்தார்.

[ 20]


Go to top
சுருளுமயிர் நுதற்சுட்டி
துணைக்காதின் மணிக்குதம்பை
மருவுதிருக் கண்டநாண்
மார்பினில்ஐம் படைகையில்
பொருவில்வயி ரச்சரிகள்
பொன்னரைஞாண் புனைசதங்கை
தெருவிலொளி விளங்கவளர்
திருவிளையாட் டினிலமர்ந்தார்.

[ 21]


வந்துவளர் மூவாண்டில்
மயிர்வினைமங் கலஞ்செய்து
தந்தையா ரும்பயந்த
தாயாருந் தனிச்சிறுவர்
சிந்தைமலர் சொல்தெளிவில்
செழுங்கலைகள் பயிலத்தம்
பந்தமற வந்தவரைப்
பள்ளியினில் இருத்தினார்.

[ 22]


அந்நாளில் சண்பைநகர்
ஆண்டகையார் எழுந்தருள
முன்னாக எதிர்கொண்டு
கொடுபுகுந்து முந்நூல்சேர்
பொன்மார்பிற் சிறுத்தொண்டர்
புகலிகா வலனார்தம்
நன்னாமச் சேவடிகள்
போற்றிசைத்து நலஞ்சிறந்தார்.

[ 23]


சண்பையர்தம் பெருமானும்
தாங்கரிய பெருங்காதல்
பண்புடைய சிறுத்தொண்ட
ருடன்பயின்று மற்றவரை
மண்பரவுந் திருப்பதிகத்
தினில்வைத்துச் சிறப்பித்து
நண்பருளி எழுந்தருளத்
தாமினிது நயப்புற்றார்.

[ 24]


இத்தன்மை நிகழுநாள்
இவர்திருத்தொண் டிருங்கயிலை
அத்தர்திரு வடியிணைக்கீழ்ச்
சென்றணைய அவருடைய
மெய்த்தன்மை அன்புநுகர்ந்
தருளுதற்கு விடையவர்தாம்
சித்தமகிழ் வயிரவராய்த்
திருமலைநின் றணைகின்றார்.

[ 25]


Go to top
மடல்கொண்ட மலரிதழி
நெடுஞ்சடையை வனப்பெய்தக்
கடல்மண்டி முகந்தெழுந்த
காளமேகச் சுருள்போல்
தொடர்பங்கி சுருண்டிருண்டு
தூறிநெறித் தசைந்துசெறி
படர்துஞ்சின் கருங்குஞ்சி
கொந்தளமா கப்பரப்பி.

[ 26]


அஞ்சனம்மஞ் சனஞ்செய்த
தனையவணி கிளர்பம்பை
மஞ்சினிடை யிடையெழுந்த
வானமீன் பரப்பென்னப்
புஞ்சநிரை வண்டுதேன்
சுரும்புபுடை படர்ந்தார்ப்பத்
துஞ்சினுனித் தனிப்பரப்புந்
தும்பைநறு மலர்தோன்ற.

[ 27]


அருகுதிரு முடிச்செருகும்
அந்தியிளம் பிறைதன்னைப்
பெருகுசிறு மதியாக்கிப்
பெயர்த்துச்சாத் தியதென்ன
விரிசுடர்ச்செம் பவளவொளி
வெயில்விரிக்கும் விளங்குசுடர்த்
திருநுதல்மேல் திருநீற்றுத்
தனிப்பொட்டுத் திகழ்ந்திலங்க.

[ 28]


வெவ்வருக்கன் மண்டலமும்
விளங்குமதி மண்டலமும்
அவ்வனற்செய் மண்டலமும்
உடன்அணைந்த தெனவழகை
வவ்வுதிருக் காதின்மணிக்
குழைச்சங்கு வளைத்ததனுள்
செவ்வரத்த மலர்செறித்த
திருத்தோடு புடைசிறக்க.

[ 29]


களங்கொள்விடம் மறைத்தருளக்
கடலமுதக் குமிழிநிரைத்
துளங்கொளிவெண் திரள்கோவைத்
தூயவடம் அணிந்ததென
உளங்கொள்பவர் கரைந்துடலும்
உயிரும்உரு கப்பெருக
விளங்குதிருக் கழுத்தினிடை
வெண்பளிங்கின் வடந்திகழ.

[ 30]


Go to top
செம்பரிதி கடலளித்த
செக்கரொளி யினைஅந்திப்
பம்புமிருள் செறிபொழுது
படர்ந்தணைந்து சூழ்வதெனத்
தம்பழைய கரியுரிவை
கொண்டுசமைத் ததுசாத்தும்
அம்பவளத் திருமேனிக்
கஞ்சுகத்தின் அணிவிளங்க.

[ 31]


மிக்கெழும்அன் பர்கள்அன்பு
திருமேனி விளைந்ததென
அக்குமணி யாற்சன்ன
வீரமும்ஆ ரமும்வடமும்
கைக்கணிதோள் வளைச்சரியும்
அரைக்கடிசூத் திரச்சரியும்
தக்கதிருக் காற்சரியுஞ்
சாத்தியவொண் சுடர்தயங்க.

[ 32]


பொருவில்திருத் தொண்டர்க்குப்
புவிமேல்வந் தருள்புரியும்
பெருகருளின் திறங்கண்டு
பிரானருளே பேணுவீர்
வரும்அன்பின் வழிநிற்பீர்
எனமறைபூண் டறைவனபோல்
திருவடிமேல் திருச்சிலம்பு
திசைமுழுதுஞ் செலவொலிப்ப.

[ 33]


அயன்கபா லந்தரித்த
விடத்திருக்கை யாலணைத்த
வயங்கொளிமூ விலைச்சூல
மணித்திருத்தோள் மிசைப்பொலியத்
தயங்குசுடர் வலத்திருக்கைத்
தமருகத்தின் ஒலிதழைப்பப்
பயன்தவத்தாற் பெறும்புவியும்
பாததா மரைசூட.

[ 34]


அருள்பொழியுந் திருமுகத்தில்
அணிமுறுவல் நிலவெறிப்ப
மருள்மொழிமும் மலஞ்சிதைக்கும்
வடிச்சூலம் வெயிலெறிப்பப்
பொருள்பொழியும் பெருகன்பு
தழைத்தோங்கிப் புவியேத்தத்
தெருள்பொழிவண் தமிழ்நாட்டுச்
செங்காட்டங் குடிசேர்ந்தார்.

[ 35]


Go to top
தண்டாத தொருவேட்கைப்
பசியுடையார் தமைப்போலக்
கண்டாரைச் சிறுத்தொண்டர்
மனைவினவிக் கடிதணைந்து
தொண்டானார்க் கெந்நாளும்
சோறளிக்குந் திருத்தொண்டர்
வண்டார்பூந் தாரார்இம்
மனைக்குள்ளா ரோவென்ன.

[ 36]


வந்தணைந்து வினவுவார்
மாதவரே யாம்என்று
சந்தனமாந் தையலார்
முன்வந்து தாள்வணங்கி
அந்தமில்சீ ரடியாரைத்
தேடியவர் புறத்தணைந்தார்
எந்தமையா ளுடையவரே
அகத்துள்எழுந் தருளுமென.

[ 37]


மடவரலை முகநோக்கி
மாதரார் தாம்இருந்த
இடவகையில் தனிபுகுதோம்
என்றருள அதுகேட்டு
விடவகல்வார் போலிருந்தார்
எனவெருவி விரைந்துமனைக்
கடனுடைய திருவெண்காட்
டம்மைகடைத் தலையெய்தி.

[ 38]


அம்பலவ ரடியாரை
யமுதுசெய்விப் பாரிற்றைக்
கெம்பெருமான் யாவரையுங்
கண்டிலர்தே டிப்போனார்
வம்பெனநீ ரெழுந்தருளி
வருந்திருவே டங்கண்டால்
தம்பெரிய பேறென்றே
மிகமகிழ்வர் இனித்தாழார்.

[ 39]


இப்பொழுதே வந்தணைவர்
எழுந்தருளி யிரும்என்ன
ஒப்பின் மனை யறம்புரப்பீர்
உத்தரா பதியுள்ளோம்
செப்பருஞ்சீர்ச் சிறுத்தொண்டர்
தமைக்காணச் சேர்ந்தனம்யாம்
எப்பரிசும் அவரொழிய
இங்கிரோம் என்றருளி.

[ 40]


Go to top
கண்ணுதலிற் காட்டாதார்
கணபதீச் சரத்தின்கண்
வண்ணமலர் ஆத்தியின்கீழ்
இருக்கின்றோம் மற்றவர் தாம்
நண்ணினால் நாமிருந்த
பரிசுரைப்பீர் என்றருளி
அண்ணலார் திருவாத்தி
யணைந்தருளி அமர்ந்திருந்தார்.

[ 41]


நீரார் சடையான் அடியாரை
நேடி யெங்குங் காணாது
சீரார் தவத்துச் சிறுத்தொண்டர்
மீண்டுஞ் செல்வ மனையெய்தி
ஆரா அன்பின் மனைவியார்க்கு
இயம்பி அழிவெய் திடஅவரும்
பார்ஆ தரிக்குந் திருவேடத்
தொருவர் வந்த படிபகர்ந்தார்.

[ 42]


அடியேன் உய்ந்தேன் எங்குற்றார்
உரையா யென்ன அவர்மொழிவார்
வடிசேர் சூல கபாலத்தர்
வடதே சத்தோம் என்றார்வண்
துடிசேர் கரத்துப் பயிரவர்யாம்
சொல்ல இங்கும் இராதேபோய்க்
கடிசேர் திருவாத் தியினிழற்கீழ்
இருந்தார் கணப தீச்சரத்து.

[ 43]


என்று மனைவி யார்இயம்ப
எழுந்த விருப்பால் விரைந்தெய்திச்
சென்று கண்டு திருப்பாதம்
பணிந்து நின்றார் சிறுத்தொண்டர்
நின்ற தொண்டர் தமைநோக்கி
நீரோ பெரிய சிறுத்தொண்டர்
என்று திருவாய் மலர்ந்தருள
இறைவர் தம்மைத் தொழுதுரைப்பார்.

[ 44]


பூதி யணிசா தனத்தவர்முன்
போற்றப் போதேன் ஆயிடினும்
நாதன் அடியார் கருணையினால்
அருளிச் செய்வர் நானென்று
கோதில் அன்பர் தமையமுது
செய்விப் பதற்குக் குலப்பதியில்
காத லாலே தேடியுமுன்
காணேன் தவத்தால் உமைக்கண்டேன்.

[ 45]


Go to top
அடியேன் மனையில் எழுந்தருளி
அமுதுசெய்ய வேண்டுமென
நெடியோ னறியா வடியார்தாம்
நிகழுந் தவத்தீர் உமைக்காணும்
படியால் வந்தோம் உத்தரா
பதியோம் எம்மைப் பரிந்தூட்ட
முடியா துமக்குச் செய்கையரி
தொண்ணா தென்று மொழிந்தருள.

[ 46]


எண்ணா தடியேன் மொழியேன்நீர்
அமுது செய்யும் இயல்பதனைக்
கண்ணார் வேட நிறைதவத்தீர்
அருளிச் செய்யுங் கடிதமைக்கத்
தண்ணார் இதழி முடியார்தம்
அடியார் தலைப்பட் டால்தேட
ஒண்ணா தனவும் உளவாகும்
அருமை யில்லை யெனவுரைத்தார்.

[ 47]


அரிய தில்லை எனக் கேட்ட
பொழுதில் அழகு பொழிகின்ற
பெரிய பயிர வக்கோலப்
பிரானார் அருளிச் செய்வார்யாம்
பரியுந் தொண்டீர் மூவிருது
கழித்தாற் பசுவீழ்த் திடவுண்ப
துரிய நாளு மதற்கின்றால்
ஊட்ட அரிதாம் உமக்கென்றார்.

[ 48]


சால நன்று முந்நிரையும்
உடையேன் தாழ்விங் கெனக்கில்லை
ஆலம் உண்டா ரன்பர்உமக்
கமுதாம் பசுத்தான் இன்னதென
ஏல வருளிச் செயப்பெற்றால்
யான்போய் அமுது கடிதமைத்துக்
காலந் தப்பா மேவருவேன்
என்று மொழிந்து கைதொழுதார்.

[ 49]


பண்பு மிக்க சிறுத்தொண்டர்
பரிவு கண்டு பயிரவரும்
நண்பு மிக்கீர் நாம்உண்ணப்
படுக்கும் பசுவும் நரப்பசுவாம்
உண்ப தஞ்சு பிராயத்தில்
உறுப்பின் மறுவின் றேல்இன்னம்
புண்செய் நோவில் வேலெறிந்தாற்
போலும் புகல்வ தொன்றென்றார்.

[ 50]


Go to top
யாதும் அரிய தில்லைஇனி
ஈண்ட அருளிச் செய்யுமென
நாதன் தானும் ஒருகுடிக்கு
நல்ல சிறுவன் ஒருமகனைத்
தாதை அரியத் தாய்பிடிக்கும்
பொழுது தம்மில் மனமுவந்தே
ஏத மின்றி யமைத்தகறி
யாம்இட் டுண்ப தெனமொழிந்தார்.

[ 51]


அதுவும் முனைவர் மொழிந்தருளக்
கேட்ட தொண்டர் அடியேனுக்
கிதுவும் அரிதன் றெம்பெருமான்
அமுது செய்யப் பெறிலென்று
கதுமென் விரைவில் அவரிசையப்
பெற்றுக் களிப்பாற் காதலொடு
மதுமென் கமல மலர்ப்பாதம்
பணிந்து மனையின் வந்தணைந்தார்.

[ 52]


அன்பு மிக்க பெருங்கற்பின்
அணங்கு திருவெண் காட்டம்மை
முன்பு வந்து சிறுத்தொண்டர்
வரவு நோக்கி முன்னின்றே
இன்பம் பெருக மலர்ந்தமுகங்
கண்டு பாத மிசையிறைஞ்சிப்
பின்பு கணவர் முகம்நோக்கிப்
பெருகுந் தவத்தோர் செயல்வினவ.

[ 53]


வள்ள லாரும் மனையாரை
நோக்கி வந்த மாதவர்தாம்
உள்ள மகிழ அமுதுசெய
இசைந்தார் குடிக்கோர் சிறுவனுமாய்க்
கொள்ளும் பிராயம் ஐந்துளனாய்
உறுப்பிற் குறைபா டின்றித்தாய்
பிள்ளை பிடிக்க வுவந்துபிதா
அரிந்து சமைக்கப் பெறினென்றார்.

[ 54]


அரிய கற்பின் மனைவியார்
அவரை நோக்கி யுரைசெய்வார்
பெரிய பயிர வத்தொண்டர்
அமுது செய்யப் பெறுமதற்கிங்
குரியவகையால் அமுதமைப்போம்
ஒருவ னாகி ஒருகுடிக்கு
வருமச் சிறுவன் தனைப்பெறுமாறு
எவ்வா றென்று வணங்குதலும்.

[ 55]


Go to top
மனைவி யார்தம் முகநோக்கி
மற்றித் திறத்து மைந்தர் தமை
நினைவு நிரம்ப நிதிகொடுத்தால்
தருவா ருளரே நேர்நின்று
தனையன் தன்னைத் தந்தைதாய்
அரிவா ரில்லைத் தாழாமே
எனையிங் குய்ய நீபயந்தான்
தன்னை அழைப்போம் யாம்என்றார்.

[ 56]


என்று கணவர் கூறுதலும்
அதனுக் கிசைந்தெம் பிரான்தொண்டர்
இன்று தாழா தமுதுசெய்யப்
பெற்றிங் கவர்தம் மலர்ந்தமுகம்
நன்று காண்ப தெனநயந்து
நம்மைக் காக்க வருமணியைச்
சென்று பள்ளி யினிற்கொண்டு
வாரும் என்றார் திருவனையார்.

[ 57]


காதல் மனையார் தாங்கூறக்
கணவ னாருங் காதலனை
ஏதம் அகலப் பெற்றபே
றெல்லா மெய்தி னார்போல
நாதர் தமக்கங் கமுதாக்க
நறுமென் குதலை மொழிப்புதல்வன்
ஓத வணைந்த பள்ளியினில்
உடன்கொண் டெய்தக் கடிதகன்றார்.

[ 58]


பள்ளி யினிற்சென் றெய்துதலும்
பாத சதங்கை மணியொலிப்பப்
பிள்ளை யோடி வந்தெதிரே
தழுவ எடுத்துப் பியலின்மேல்
கொள்ள அணைத்துக் கொண்டுமீண்டு
இல்லம் புகுதக் குலமாதர்
வள்ள லார்தம் முன்சென்று
மைந்தன் தன்னை யெதிர்வாங்கி.

[ 59]


குஞ்சி திருத்தி முகந்துடைத்துக்
கொட்டை யரைநாண் துகள்நீக்கி
மஞ்சள் அழிந்த அதற்கிரங்கி
மையுங் கண்ணின் மருங்கொதுக்கிப்
பஞ்சி யஞ்சு மெல்லடியார்
பரிந்து திருமஞ் சனமாட்டி
எஞ்ச லில்லாக் கோலஞ்செய்
தெடுத்துக் கணவர் கைக்கொடுத்தார்.

[ 60]


Go to top
அச்சம் எய்திக் கறியமுதாம்
என்னு மதனால் அரும்புதல்வன்
உச்சி மோவார் மார்பின்கண்
அணைத்தே முத்தந் தாமுண்ணார்
பொச்ச மில்லாத் திருத்தொண்டர்
புனிதர் தமக்குக் கறியமைக்க
மெச்சு மனத்தார் அடுக்களையின்
மேவார் வேறு கொண்டணைவார்.

[ 61]


ஒன்று மனத்தார் இருவர்களும்
உலகர் அறியா ரெனமறைவில்
சென்று புக்குப் பிள்ளைதனைப்
பெற்ற தாயார் செழுங்கலங்கள்
நன்று கழுவிக் கொடுசெல்ல
நல்ல மகனை யெடுத்துலகை
வென்ற தாதை யார்தலையைப்
பிடிக்க விரைந்து மெய்த்தாயர்.

[ 62]


இனிய மழலைக் கிண்கிணிக்கால்
இரண்டும் மடியின் புடையிடுக்கிக்
கனிவாய் மைந்தன் கையிரண்டுங்
கையாற் பிடிக்கக் காதலனும்
நனிநீ டுவகை யுறுகின்றார்
என்று மகிழ்ந்து நகைசெய்யத்
தனிமா மகனைத் தாதையார்
கருவி கொண்டு தலையரிவார்.

[ 63]


பொருவில் பெருமைப் புத்திரன்மெய்த்
தன்மை யளித்தான் எனப்பொலிந்து
மருவு மகிழ்ச்சி யெய்தஅவர்
மனைவி யாருங் கணவனார்
அருமை யுயிரை யெனக்களித்தான்
என்று மிகவும் அகம்மலர
இருவர் மனமும் பேருவகை
யெய்தி அரிய வினைசெய்தார்.

[ 64]


அறுத்த தலையின் இறைச்சிதிரு
வமுதுக் காகா தெனக்கழித்து
மறைத்து நீக்கச் சந்தனத்தார்
கையிற் கொடுத்து மற்றையுறுப்
பிறைச்சி யெல்லாங் கொத்தியறுத்
தெலும்பு மூளை திறந்திட்டுக்
கறிக்கு வேண்டும் பலகாயம்
மரைத்துக் கூட்டிக் கடிதமைப்பார்.

[ 65]


Go to top
மட்டு விரிபூங் குழன்மடவார்
அடுப்பில் ஏற்றி மனமகிழ்ந்தே
அட்ட கறியின் பதம்அறிந்தங்
கிழிச்சி வேறோர் அருங்கலத்துப்
பட்ட நறையால் தாளித்துப்
பலவும் மற்றுங் கறிசமைத்துச்
சட்ட விரைந்து போனகமும்
சமைத்துக் கணவர் தமக்குரைத்தார்.

[ 66]


உடைய நாதர் அமுதுசெய
வுரைத்த படியே அமைத்தஅதற்
கடையு மின்ப முன்னையிலும்
ஆர்வம் பெருகிக் களிகூர
விடையில் வருவார் தொண்டர்தாம்
விரைந்து சென்று மென்மலரின்
புடைவண் டறையும் ஆத்தியின்கீழ்
இருந்த புனிதர் முன்சென்றார்.

[ 67]


அண்ணல் திருமுன் பணைந்திறைஞ்சி
அன்பர் மொழிவார் அடியேன்பால்
நண்ணி நீரிங் கமுதுசெய
வேண்டு மென்று நான்பரிவு
பண்ணி னேனாய்ப் பசித்தருளத்
தாழ்த்த தெனினும் பணிசமைத்தேன்
எண்ணம் வாய்ப்ப எழுந்தருள
வேண்டும் என்றுஅங்கு எடுத்துரைப்பார்.

[ 68]


இறையுந் தாழா தெழுந்தருளி
அமுது செய்யும் என்றிறைஞ்சக்
கறையுங் கண்டத் தினின்மறைத்துக்
கண்ணும் நுதலிற் காட்டாதார்
நிறையும் பெருமைச் சிறுத்தொண்டீர்
போதும் என்ன நிதியிரண்டும்
குறைவ னொருவன் பெற்றுவந்தாற்
போலக் கொண்டு மனைபுகுந்தார்.

[ 69]


வந்து புகுந்து திருமனையின்
மனைவி யார்தாம் மாதவரை
முந்த எதிர்சென் றடிவணங்கி
முழுதும் அழகு செய்தமனைச்
சந்த மலர்மா லைகள்முத்தின்
தாம நாற்றித் தவிசடுத்த
கந்த மலரா சனங்காட்டிக்
கமழ்நீர்க் கரகம் எடுத்தேந்த.

[ 70]


Go to top
தூய நீரால் சிறுத்தொண்டர்
சோதி யார்தங் கழல்விளக்கி
ஆய புனிதப் புனல்தங்கள்
தலைமேல் ஆரத் தெளித்தின்பம்
மேய இல்லம் எம்மருங்கும்
வீசி விரைமென் மலர்சாந்தம்
ஏயுந் தூப தீபங்கள்
முதற்பூ சனைசெய் திறைஞ்சுவார்.

[ 71]


பனிவெண் திங்கள் சடைவிரித்த
பயில்பூங் குஞ்சிப் பயிரவராம்
புனிதர் தம்மைப் போனகமும்
கறியும் படைக்கும் படிபொற்பின்
வனிதை யாருங் கணவரும்முன்
வணங்கிக் கேட்ப மற்றவர்தாம்
இனிய அன்ன முடன்கறிகள்
எல்லாம் ஒக்கப் படைக்கவென.

[ 72]


பரிசு விளங்கப் பரிகலமும்
திருத்திப் பாவா டையில்ஏற்றித்
தெரியும் வண்ணஞ் செஞ்சாலிச்
செழுபோ னகமுங் கறியமுதும்
வரிசை யினின்முன் படைத்தெடுத்து
மன்னும் பரிக லக்கான்மேல்
விரிவெண் டுகிலின் மிசைவைக்க
விமலர் பார்த்தங் கருள்செய்வார்.

[ 73]


சொன்ன முறையிற் படுத்தபசுத்
தொடர்ந்த வுறுப்பெல் லாங்கொண்டு
மன்னு சுவையிற் கறியாக்கி
மாண அமைத்தீ ரேஎன்ன
அன்ன மனையார் தலையிறைச்சி
யமுதுக் காகா தெனக்கழித்தோம்
என்ன வதுவுங் கூடநாம்
உண்ப தென்றா ரிடர்தீர்ப்பார்.

[ 74]


சிந்தை கலங்கிச் சிறுத்தொண்டர்
மனையா ரோடுந் திகைத்தயரச்
சந்த னத்தா ரெனுந்தாதி
யார்தாம் அந்தத் தலையிறைச்சி
வந்த தொண்டர் அமுதுசெயும்
பொழுது நினைக்க வருமென்றே
முந்த வமைத்தேன் கறியமுதென்று
எடுத்துக் கொடுக்க முகமலர்ந்தார்.

[ 75]


Go to top
வாங்கி மகிழ்ந்து படைத்ததற்பின்
வணங்குஞ் சிறுத்தொண் டரைநோக்கி
ஈங்கு நமக்குத் தனியுண்ண
ஒண்ணா தீசன் அடியாரிப்
பாங்கு நின்றார் தமைக்கொணர்வீர்
என்று பரமர் பணித்தருள
ஏங்கிக் கெட்டேன் அமுதுசெய
இடையூ றிதுவோ வெனநினைவார்.

[ 76]


அகத்தின் புறத்துப் போயருளால்
எங்குங் காணார் அழிந்தணைந்து
முகத்தில் வாட்டம் மிகப்பெருகப்
பணிந்து முதல்வர்க் குரைசெய்வார்
இகத்தும் பரத்தும் இனியாரைக்
காணேன் யானுந் திருநீறு
சகத்தி லிடுவார் தமைக்கண்டே
யிடுவே னென்று தாழ்ந்திறைஞ்ச.

[ 77]


உம்மைப் போல நீறிட்டார்
உளரோ வுண்பீர் நீரென்று
செம்மைக் கற்பில் திருவெண்காட்
டம்மை தம்மைக் கலந்திருத்தி
வெம்மை இறைச்சி சோறிதனின்
மீட்டுப் படையு மெனப்படைத்தார்
தம்மை யூட்ட வேண்டியவர்
உண்ணப் புகலுந் தடுத்தருளி.

[ 78]


ஆறு திங்கள் ஒழித்துண்போம்
உண்ணு மளவுந் தரியாது
சோறு நாளு முண்பீர்முன்
னுண்ப தென்நம் முடன்றுய்ப்ப
மாறின் மகவு பெற்றீரேல்
மைந்தன் தன்னை யழையுமென
ஈறு முதலு மில்லா தார்க்
கிப்போ துதவான் அவனென்றார்.

[ 79]


நாம்இங் குண்ப தவன்வந்தால்
நாடி யழையு மெனநம்பர்
தாமங் கருளிச் செயத்தரியார்
தலைவ ரமுது செய்தருள
யாமிங் கென்செய் தாலாகும்
என்பார் விரைவுற் றெழுந்தருளால்
பூமென் குழலார் தம்மோடும்
புறம்போ யழைக்கப் புகும்பொழுது.

[ 80]


Go to top
வையம் நிகழுஞ் சிறுத்தொண்டர்
மைந்தா வருவா யெனவழைத்தார்
தைய லாருந் தலைவர்பணி
தலைநிற் பாராய்த் தாமழைப்பார்
செய்ய மணியே சீராளா
வாராய் சிவனா ரடியார்யாம்
உய்யும் வகையால் உடன்உண்ண
அழைக்கின் றார்என்று ஓலமிட.

[ 81]


பரம ரருளாற் பள்ளியினின்
றோடி வருவான் போல்வந்த
தரமில் வனப்பிற் றனிப்புதல்வன்
தன்னை யெடுத்துத் தழுவித்தம்
கரமுன் னணைத்துக் கணவனார்
கையிற் கொடுப்பக் களிகூர்ந்தார்
புரமூன் றெரித்தார் திருத்தொண்டர்
உண்ணப் பெற்றோ மெனும்பொலிவால்.

[ 82]


வந்த மகனைக் கடிதிற்கொண்
டமுது செய்விப் பான்வந்தார்
முந்த வேஅப் பயிரவராம்
முதல்வர் அங்கண் மறைந்தருளச்
சிந்தை கலங்கிக் காணாது
திகைத்தார் வீழ்ந்தார் தெருமந்தார்
வெந்த இறைச்சிக் கறியமுதுங்
கலத்திற் காணார் வெருவுற்றார்.

[ 83]


செய்ய மேனிக் கருங்குஞ்சிச்
செழுங்கஞ் சுகத்துப் பயிரவர்யாம்
உய்ய அமுது செய்யாதே
ஒளித்த தெங்கே யெனத்தேடி
மையல் கொண்டு புறத்தணைய
மறைந்த அவர்தாம் மலைபயந்த
தைய லோடுஞ் சரவணத்துத்
தனய ரோடுந் தாமணைவார்.

[ 84]


தனிவெள் விடைமேல் நெடுவிசும்பில்
தலைவர் பூத கணநாதர்
முனிவ ரமரர் விஞ்சையர்கள்
முதலா யுள்ளோர் போற்றிசைப்ப
இனிய கறியுந் திருவமுதும்
அமைத்தார் காண எழுந்தருளிப்
பனிவெண் திங்கள் முடிதுளங்கப்
பரந்த கருணை நோக்களித்தார்.

[ 85]


Go to top
அன்பின் வென்ற தொண்டரவர்க்கு
அமைந்த மனைவி யார்மைந்தர்
முன்பு தோன்றும் பெருவாழ்வை
முழுதுங் கண்டு பரவசமாய்
என்பு மனமுங் கரைந்துருக
விழுந்தார் எழுந்தார் ஏத்தினார்
பின்பு பரமர் தகுதியினால்
பெரியோ ரவருக் கருள்புரிவார்.

[ 86]


கொன்றை வேணி யார் தாமும்
பாகங் கொண்ட குலக்கொடியும்
வென்றி நெடுவேல் மைந்தரும்தம்
விரைப்பூங் கமலச் சேவடிக்கீழ்
நின்ற தொண்டர் மனைவியார்
நீடு மகனார் தாதியார்
என்றும் பிரியா தேயிறைஞ்சி
யிருக்க வுடன்கொண் டேகினார்.

[ 87]


ஆறு முடிமேல் அணிந்தவருக்
அடியா ரென்று கறியமுதா
ஊறி லாத தனிப்புதல்வன்
தன்னை யரிந்தங் கமுதூட்டப்
பேறு பெற்றார் சேவடிகள்
தலைமேற் கொண்டு பிறவுயிர்கள்
வேறு கழறிற் றறிவார் தம்
பெருமை தொழுது விளம்புவாம்.

[ 88]



Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location:
10.000   திருமூலர்   திருமந்திரம்   விநாயகர் வணக்கம்
Tune -   ( )
10.100   திருமூலர்   திருமந்திரம்   பாயிரம்
Tune -   ( )
10.101   திருமூலர்   திருமந்திரம்   முதல் தந்திரம் - 1. சிவபரத்துவம்
Tune -   ( )
10.102   திருமூலர்   திருமந்திரம்   முதல் தந்திரம் - 2. வேதச் சிறப்பு
Tune -   ( )
10.103   திருமூலர்   திருமந்திரம்   முதல் தந்திரம் - 3. ஆகமச் சிறப்பு
Tune -   ( )
10.104   திருமூலர்   திருமந்திரம்   முதல் தந்திரம் - 4. உபதேசம்
Tune -   ( )
10.105   திருமூலர்   திருமந்திரம்   முதல் தந்திரம் - 5. யாக்கை நிலையாமை
Tune -   ( )
10.106   திருமூலர்   திருமந்திரம்   முதல் தந்திரம் - 6. செல்வம் நிலையாமை
Tune -   ( )
10.107   திருமூலர்   திருமந்திரம்   முதல் தந்திரம் - 7. இளமை நிலையாமை
Tune -   ( )
10.108   திருமூலர்   திருமந்திரம்   முதல் தந்திரம் - 8. உயிர் நிலையாமை
Tune -   ( )
10.109   திருமூலர்   திருமந்திரம்   முதல் தந்திரம் - 9. கொல்லாமை
Tune -   ( )
10.110   திருமூலர்   திருமந்திரம்   முதல் தந்திரம் - 10. புலால் மறுத்தல்
Tune -   ( )
10.111   திருமூலர்   திருமந்திரம்   முதல் தந்திரம் - 11. பிறன்மனை நயவாமை
Tune -   ( )
10.112   திருமூலர்   திருமந்திரம்   முதல் தந்திரம் - 12. மகளிர் இழிவு
Tune -   ( )
10.113   திருமூலர்   திருமந்திரம்   முதல் தந்திரம் - 13. நல்குரவு
Tune -   ( )
10.114   திருமூலர்   திருமந்திரம்   முதல் தந்திரம் - 14. அக்கினி காரியம்
Tune -   ( )
10.115   திருமூலர்   திருமந்திரம்   முதல் தந்திரம் - 15. அந்தணர் ஒழுக்கம்
Tune -   ( )
10.116   திருமூலர்   திருமந்திரம்   முதல் தந்திரம் - 16. அரசாட்சி முறை
Tune -   ( )
10.117   திருமூலர்   திருமந்திரம்   முதல் தந்திரம் - 17. வானச் சிறப்பு
Tune -   ( )
10.118   திருமூலர்   திருமந்திரம்   முதல் தந்திரம் - 18. தானச் சிறப்பு
Tune -   ( )
10.119   திருமூலர்   திருமந்திரம்   முதல் தந்திரம் - 19. அறஞ்செய்வான் திறம்
Tune -   ( )
10.120   திருமூலர்   திருமந்திரம்   முதல் தந்திரம் - 20. அறஞ்செயான் திறம்
Tune -   ( )
10.121   திருமூலர்   திருமந்திரம்   முதல் தந்திரம் - 21. அன்புடைமை
Tune -   ( )
10.122   திருமூலர்   திருமந்திரம்   முதல் தந்திரம் - 22. அன்பு செய்வாரை அறிவன் சிவன்
Tune -   ( )
10.123   திருமூலர்   திருமந்திரம்   முதல் தந்திரம் - 23. கல்வி
Tune -   ( )
10.124   திருமூலர்   திருமந்திரம்   முதல் தந்திரம் - 24. கேள்வி கேட்டமைதல்
Tune -   ( )
10.125   திருமூலர்   திருமந்திரம்   முதல் தந்திரம் - 25. கல்லாமை
Tune -   ( )
10.126   திருமூலர்   திருமந்திரம்   முதல் தந்திரம் - 26. நடுவு நிலைமை
Tune -   ( )
10.127   திருமூலர்   திருமந்திரம்   முதல் தந்திரம் - 27. கள்ளுண்ணாமை
Tune -   ( )
10.201   திருமூலர்   திருமந்திரம்   இரண்டாம் தந்திரம் - 1. அகத்தியம்
Tune -   ( )
10.202   திருமூலர்   திருமந்திரம்   இரண்டாம் தந்திரம் - 2. பதிவலியில் வீரட்டம் எட்டு
Tune -   ( )
10.203   திருமூலர்   திருமந்திரம்   இரண்டாம் தந்திரம் - 3. இலிங்க புராணம்
Tune -   ( )
10.204   திருமூலர்   திருமந்திரம்   இரண்டாம் தந்திரம் - 4. தக்கன் வேள்வி
Tune -   ( )
10.205   திருமூலர்   திருமந்திரம்   இரண்டாம் தந்திரம் - 5. பிரளயம்
Tune -   ( )
10.206   திருமூலர்   திருமந்திரம்   இரண்டாம் தந்திரம் - 6. சக்கரப் பேறு
Tune -   ( )
10.207   திருமூலர்   திருமந்திரம்   இரண்டாம் தந்திரம் - 7. எலும்பும் கபாலமும்
Tune -   ( )
10.208   திருமூலர்   திருமந்திரம்   இரண்டாம் தந்திரம் - 8. அடிமுடி தேடல்
Tune -   ( )
10.209   திருமூலர்   திருமந்திரம்   இரண்டாம் தந்திரம் - 9. சருவ சிருட்டி
Tune -   ( )
10.210   திருமூலர்   திருமந்திரம்   இரண்டாம் தந்திரம் - 10. திதி
Tune -   ( )
10.211   திருமூலர்   திருமந்திரம்   இரண்டாம் தந்திரம் - 11. சங்காரம்
Tune -   ( )
10.212   திருமூலர்   திருமந்திரம்   இரண்டாம் தந்திரம் - 12. திரோபவம்
Tune -   ( )
10.213   திருமூலர்   திருமந்திரம்   இரண்டாம் தந்திரம் - 13. அநுக்கிரகம்
Tune -   ( )
10.214   திருமூலர்   திருமந்திரம்   இரண்டாம் தந்திரம் - 14. கர்ப்பக் கிரியை
Tune -   ( )
10.215   திருமூலர்   திருமந்திரம்   இரண்டாம் தந்திரம் - 15. மூவகைச் சீவ வர்க்கம்
Tune -   ( )
10.216   திருமூலர்   திருமந்திரம்   இரண்டாம் தந்திரம் - 16. பாத்திரம்
Tune -   ( )
10.217   திருமூலர்   திருமந்திரம்   இரண்டாம் தந்திரம் - 17. அபாத்திரம்
Tune -   ( )
10.218   திருமூலர்   திருமந்திரம்   இரண்டாம் தந்திரம் - 18. தீர்த்த உண்மை
Tune -   ( )
10.219   திருமூலர்   திருமந்திரம்   இரண்டாம் தந்திரம் - 19. திருக்கோயிற் குற்றம்
Tune -   ( )
10.220   திருமூலர்   திருமந்திரம்   இரண்டாம் தந்திரம் - 20. அதோமுக தரிசனம்
Tune -   ( )
10.221   திருமூலர்   திருமந்திரம்   இரண்டாம் தந்திரம் - 21. சிவநிந்தை கூடாமை
Tune -   ( )
10.222   திருமூலர்   திருமந்திரம்   இரண்டாம் தந்திரம் - 22. குரு நிந்தை கூடாமை
Tune -   ( )
10.223   திருமூலர்   திருமந்திரம்   இரண்டாம் தந்திரம் - 23. மாகேசுர நிந்தை கூடாமை
Tune -   ( )
10.224   திருமூலர்   திருமந்திரம்   இரண்டாம் தந்திரம் - 24. பொறையுடைமை
Tune -   ( )
10.225   திருமூலர்   திருமந்திரம்   இரண்டாம் தந்திரம் - 25. பெரியாரைத் துணைக்கோடல்
Tune -   ( )
10.301   திருமூலர்   திருமந்திரம்   மூன்றாம் தந்திரம் - 1. அட்டாங்க யோகம்
Tune -   ( )
10.302   திருமூலர்   திருமந்திரம்   மூன்றாம் தந்திரம் - 2. இயமம்
Tune -   ( )
10.303   திருமூலர்   திருமந்திரம்   மூன்றாம் தந்திரம் - 3. நியமம்
Tune -   ( )
10.304   திருமூலர்   திருமந்திரம்   மூன்றாம் தந்திரம் - 4. ஆதனம்
Tune -   ( )
10.305   திருமூலர்   திருமந்திரம்   மூன்றாம் தந்திரம் - 5. பிராணாயாமம்
Tune -   ( )
10.306   திருமூலர்   திருமந்திரம்   மூன்றாம் தந்திரம் - 6. பிரத்தியாகாரம்
Tune -   ( )
10.307   திருமூலர்   திருமந்திரம்   மூன்றாம் தந்திரம் - 7. தாரணை
Tune -   ( )
10.308   திருமூலர்   திருமந்திரம்   மூன்றாம் தந்திரம் - 8. தியானம்
Tune -   ( )
10.309   திருமூலர்   திருமந்திரம்   மூன்றாம் தந்திரம் - 9. சமாதி
Tune -   ( )
10.310   திருமூலர்   திருமந்திரம்   மூன்றாம் தந்திரம் - 10. அட்டாங்க யோகப் பேறு
Tune -   ( )
10.311   திருமூலர்   திருமந்திரம்   மூன்றாம் தந்திரம - 11. அட்டமா சித்தி
Tune -   ( )
10.312   திருமூலர்   திருமந்திரம்   மூன்றாம் தந்திரம் - 12. கலைநிலை
Tune -   ( )
10.313   திருமூலர்   திருமந்திரம்   மூன்றாம் தந்திரம் - 13. காய சித்தி உபாயம்
Tune -   ( )
10.314   திருமூலர்   திருமந்திரம்   மூன்றாம் தந்திரம் - 14. கால சக்கரம்
Tune -   ( )
10.315   திருமூலர்   திருமந்திரம்   மூன்றாம் தந்திரம் - 15. ஆயுள் பரீட்சை
Tune -   ( )
10.316   திருமூலர்   திருமந்திரம்   மூன்றாம் தந்திரம் - 16. வார சரம்
Tune -   ( )
10.317   திருமூலர்   திருமந்திரம்   மூன்றாம் தந்திரம் - 17. வார சூலம்
Tune -   ( )
10.318   திருமூலர்   திருமந்திரம்   மூன்றாம் தந்திரம் - 18. கேசரி யோகம்
Tune -   ( )
10.319   திருமூலர்   திருமந்திரம்   மூன்றாம் தந்திரம் - 19. பரியங்க யோகம்
Tune -   ( )
10.320   திருமூலர்   திருமந்திரம்   மூன்றாம் தந்திரம் - 20. அமுரி தாரணை
Tune -   ( )
10.321   திருமூலர்   திருமந்திரம்   மூன்றாம் தந்திரம் - 21. சந்திரயோகம்
Tune -   ( )
10.401   திருமூலர்   திருமந்திரம்   நான்காம் தந்திரம் - 1. அசபை
Tune -   ( )
10.402   திருமூலர்   திருமந்திரம்   நான்காம் தந்திரம் - 2. திருவம்பலச் சக்கரம்
Tune -   ( )
10.403   திருமூலர்   திருமந்திரம்   நான்காம் தந்திரம் - 3. அருச்சனை
Tune -   ( )
10.404   திருமூலர்   திருமந்திரம்   நான்காம் தந்திரம் - 4. நவகுண்டம்
Tune -   ( )
10.405   திருமூலர்   திருமந்திரம்   நான்காம் தந்திரம் - 5. சத்திபேதம்
Tune -   ( )
10.406   திருமூலர்   திருமந்திரம்   நான்காம் தந்திரம - 6.வயிரவி மந்திரம்
Tune -   ( )
10.407   திருமூலர்   திருமந்திரம்   நான்காம் தந்திரம் - 7. பூரண சத்தி
Tune -   ( )
10.408   திருமூலர்   திருமந்திரம்   நான்காம் தந்திரம் - 8. ஆதார ஆதேயம்
Tune -   ( )
10.409   திருமூலர்   திருமந்திரம்   நான்காம் தந்திரம் - 9. ஏரொளிச் சக்கரம்
Tune -   ( )
10.410   திருமூலர்   திருமந்திரம்   நான்காம் தந்திரம் - 10. வயிரவச் சக்கரம்
Tune -   ( )
10.411   திருமூலர்   திருமந்திரம்   நான்காம் தந்திரம் - 11. சாம்பவி மண்டலச் சக்கரம்
Tune -   ( )
10.412   திருமூலர்   திருமந்திரம்   நான்காம் தந்திரம் - 12. புவனாபதிச் சக்கரம்
Tune -   ( )
10.413   திருமூலர்   திருமந்திரம்   நான்காம் தந்திரம் - 13. நவாக்கரி சக்கரம்
Tune -   ( )
10.501   திருமூலர்   திருமந்திரம்   ஐந்தாம் தந்திரம் - 1. சுத்த சைவம்
Tune -   ( )
10.502   திருமூலர்   திருமந்திரம்   ஐந்தாம் தந்திரம் - 2. அசுத்த சைவம்
Tune -   ( )
10.503   திருமூலர்   திருமந்திரம்   ஐந்தாம் தந்திரம் - 3. மார்க்க சைவம்
Tune -   ( )
10.504   திருமூலர்   திருமந்திரம்   ஐந்தாம் தந்திரம் - 4. கடுஞ் சுத்த சைவம்
Tune -   ( )
10.505   திருமூலர்   திருமந்திரம்   ஐந்தாம் தந்திரம் - 5. சரியை
Tune -   ( )
10.506   திருமூலர்   திருமந்திரம்   ஐந்தாம் தந்திரம் - 6. கிரியை
Tune -   ( )
10.507   திருமூலர்   திருமந்திரம்   ஐந்தாம் தந்திரம் - 7. யோகம்
Tune -   ( )
10.508   திருமூலர்   திருமந்திரம்   ஐந்தாம் தந்திரம் - 8. ஞானம்
Tune -   ( )
10.509   திருமூலர்   திருமந்திரம்   ஐந்தாம் தந்திரம் - 9. சன்மார்க்கம்
Tune -   ( )
10.510   திருமூலர்   திருமந்திரம்   ஐந்தாம் தந்திரம் - 10. சகமார்க்கம்
Tune -   ( )
10.511   திருமூலர்   திருமந்திரம்   ஐந்தாம் தந்திரம் - 11. சற்புத்திர மார்க்கம்
Tune -   ( )
10.512   திருமூலர்   திருமந்திரம்   ஐந்தாம் தந்திரம் - 12. தாச மார்க்கம்
Tune -   ( )
10.513   திருமூலர்   திருமந்திரம்   ஐந்தாம் தந்திரம் - 13. சாலோக மாதி
Tune -   ( )
10.514   திருமூலர்   திருமந்திரம்   ஐந்தாம் தந்திரம் - 14. சாரூபம்
Tune -   ( )
10.515   திருமூலர்   திருமந்திரம்   ஐந்தாம் தந்திரம் - 15. சாயுச்சம்
Tune -   ( )
10.516   திருமூலர்   திருமந்திரம்   ஐந்தாம் தந்திரம் - 16. சத்திநிபாதம்
Tune -   ( )
10.517   திருமூலர்   திருமந்திரம்   ஐந்தாம் தந்திரம் - 17. புறச்சமய தூடணம்
Tune -   ( )
10.518   திருமூலர்   திருமந்திரம்   ஐந்தாம் தந்திரம் - 18. நிராசாரம்
Tune -   ( )
10.519   திருமூலர்   திருமந்திரம்   ஐந்தாம் தந்திரம் - 19. உட்சமயம்
Tune -   ( )
10.601   திருமூலர்   திருமந்திரம்   ஆறாம் தந்திரம் - 1. சிவகுரு தரிசனம்
Tune -   ( )
10.602   திருமூலர்   திருமந்திரம்   ஆறாம் தந்திரம் - 2. திருவடிப்பேறு
Tune -   ( )
10.603   திருமூலர்   திருமந்திரம்   ஆறாம் தந்திரம் - 3. ஞாதுரு ஞான ஞேயம்
Tune -   ( )
10.604   திருமூலர்   திருமந்திரம்   ஆறாம் தந்திரம் - 4.துறவு
Tune -   ( )
10.605   திருமூலர்   திருமந்திரம்   ஆறாம் தந்திரம் - 5.தவம்
Tune -   ( )
10.606   திருமூலர்   திருமந்திரம்   ஆறாம் தந்திரம் - 6. தவ தூடணம்
Tune -   ( )
10.607   திருமூலர்   திருமந்திரம்   ஆறாம் தந்திரம் - 7. அருளுடைமையின் ஞானம் வருதல்
Tune -   ( )
10.608   திருமூலர்   திருமந்திரம்   ஆறாம் தந்திரம் - 8. அவ வேடம்
Tune -   ( )
10.609   திருமூலர்   திருமந்திரம்   ஆறாம் தந்திரம் - 9. தவவேடம்
Tune -   ( )
10.610   திருமூலர்   திருமந்திரம்   ஆறாம் தந்திரம் - 10. திருநீறு
Tune -   ( )
10.611   திருமூலர்   திருமந்திரம்   ஆறாம் தந்திரம் - 11. ஞான வேடம்
Tune -   ( )
10.612   திருமூலர்   திருமந்திரம்   ஆறாம் தந்திரம் - 12. சிவ வேடம்
Tune -   ( )
10.613   திருமூலர்   திருமந்திரம்   ஆறாம் தந்திரம் - 13. அபக்குவன்
Tune -   ( )
10.614   திருமூலர்   திருமந்திரம்   ஆறாம் தந்திரம் - 14. பக்குவன்
Tune -   ( )
10.701   திருமூலர்   திருமந்திரம்   ஏழாம் தந்திரம் - 1. ஆறாதாரம்
Tune -   ( )
10.702   திருமூலர்   திருமந்திரம்   ஏழாம் தந்திரம் - 2. அண்ட லிங்கம்
Tune -   ( )
10.703   திருமூலர்   திருமந்திரம்   ஏழாம் தந்திரம் - 3. பிண்ட லிங்கம்
Tune -   ( )
10.704   திருமூலர்   திருமந்திரம்   ஏழாம் தந்திரம் - 4. சதாசிவ லிங்கம்
Tune -   ( )
10.705   திருமூலர்   திருமந்திரம்   ஏழாம் தந்திரம் - 5. ஆத்தும லிங்கம்
Tune -   ( )
10.706   திருமூலர்   திருமந்திரம்   ஏழாம் தந்திரம் - 6. ஞான லிங்கம்
Tune -   ( )
10.707   திருமூலர்   திருமந்திரம்   ஏழாம் தந்திரம் - 7. சிவலிங்கம்
Tune -   ( )
10.708   திருமூலர்   திருமந்திரம்   ஏழாம் தந்திரம் - 8. சம்பிரதாயம்
Tune -   ( )
10.709   திருமூலர்   திருமந்திரம்   ஏழாம் தந்திரம் - 9. திருவருள் வைப்பு
Tune -   ( )
10.710   திருமூலர்   திருமந்திரம்   ஏழாம் தந்திரம் - 10.அருளொளி
Tune -   ( )
10.711   திருமூலர்   திருமந்திரம்   ஏழாம் தந்திரம் - 11. சிவ பூசை
Tune -   ( )
10.712   திருமூலர்   திருமந்திரம்   ஏழாம் தந்திரம் - 12. குருபூசை
Tune -   ( )
10.713   திருமூலர்   திருமந்திரம்   ஏழாம் தந்திரம் - 13. மாகேசுர பூசை
Tune -   ( )
10.714   திருமூலர்   திருமந்திரம்   ஏழாம் தந்திரம் - 14. அடியார் பெருமை
Tune -   ( )
10.715   திருமூலர்   திருமந்திரம்   ஏழாம் தந்திரம் - 15. போசன விதி
Tune -   ( )
10.716   திருமூலர்   திருமந்திரம்   ஏழாம் தந்திரம் - 16. பிட்சா விதி
Tune -   ( )
10.717   திருமூலர்   திருமந்திரம்   ஏழாம் தந்திரம் - 17. முத்திரை பேதம்
Tune -   ( )
10.718   திருமூலர்   திருமந்திரம்   ஏழாம் தந்திரம் - 18. பூரணக் குகைநெறிச் சமாதி
Tune -   ( )
10.719   திருமூலர்   திருமந்திரம்   ஏழாம் தந்திரம் - 19. சமாதிக் கிரியை
Tune -   ( )
10.720   திருமூலர்   திருமந்திரம்   ஏழாம் தந்திரம் - 20. விந்துற்பனம்
Tune -   ( )
10.721   திருமூலர்   திருமந்திரம்   ஏழாம் தந்திரம் - 21. விந்து சயம்
Tune -   ( )
10.722   திருமூலர்   திருமந்திரம்   ஏழாம் தந்திரம் - 22. ஆதித்த நிலை - அண்டாதித்தன்
Tune -   ( )
10.723   திருமூலர்   திருமந்திரம்   ஏழாம் தந்திரம் - 23. பிண்டாதித்தன்
Tune -   ( )
10.724   திருமூலர்   திருமந்திரம்   ஏழாம் தந்திரம் - 24. மனவாதித்தன்
Tune -   ( )
10.725   திருமூலர்   திருமந்திரம்   ஏழாம் தந்திரம் - 25. ஞானாதித்தன்
Tune -   ( )
10.726   திருமூலர்   திருமந்திரம்   ஏழாம் தந்திரம் - 26. சிவாதித்தன்
Tune -   ( )
10.727   திருமூலர்   திருமந்திரம்   ஏழாம் தந்திரம் - 27. பசு லக்கணம் - பிராணன்
Tune -   ( )
10.728   திருமூலர்   திருமந்திரம்   ஏழாம் தந்திரம் - 28. புருடன்
Tune -   ( )
10.729   திருமூலர்   திருமந்திரம்   ஏழாம் தந்திரம் - 29. சீவன்
Tune -   ( )
10.730   திருமூலர்   திருமந்திரம்   ஏழாம் தந்திரம் - 30. பசு
Tune -   ( )
10.731   திருமூலர்   திருமந்திரம்   ஏழாம் தந்திரம் - 31. போதன்
Tune -   ( )
10.732   திருமூலர்   திருமந்திரம்   ஏழாம் தந்திரம் - 32. ஐந்திந்திரியம் அடக்கும் அருமை
Tune -   ( )
10.733   திருமூலர்   திருமந்திரம்   ஏழாம் தந்திரம் - 33. ஐந்திந்திரியம் அடக்கும் முறைமை
Tune -   ( )
10.734   திருமூலர்   திருமந்திரம்   ஏழாம் தந்திரம் - 34. அசற்குரு நெறி
Tune -   ( )
10.735   திருமூலர்   திருமந்திரம்   ஏழாம் தந்திரம் - 35. சற்குரு நெறி
Tune -   ( )
10.736   திருமூலர்   திருமந்திரம்   ஏழாம் தந்திரம் - 36. கூடா ஒழுக்கம்
Tune -   ( )
10.737   திருமூலர்   திருமந்திரம்   ஏழாம் தந்திரம் - 37. கேடுகண்டிரங்கல்
Tune -   ( )
10.738   திருமூலர்   திருமந்திரம்   ஏழாம் தந்திரம் 38. இதோபதேசம்
Tune -   ( )
10.801   திருமூலர்   திருமந்திரம்   எட்டாம் தந்திரம் - 1. உடலில் பஞ்ச பேதம்
Tune -   ( )
10.802   திருமூலர்   திருமந்திரம்   எட்டாம் தந்திரம் - 2. உடல் விடல்
Tune -   ( )
10.803   திருமூலர்   திருமந்திரம்   எட்டாம் தந்திரம் - 3. அவத்தை பேதம்
Tune -   ( )
10.804   திருமூலர்   திருமந்திரம்   எட்டாம் தந்திரம் - 4. மத்திய சாக்கிராவத்தை
Tune -   ( )
10.805   திருமூலர்   திருமந்திரம்   எட்டாம் தந்திரம் - 5. அத்துவாக்கள்
Tune -   ( )
10.806   திருமூலர்   திருமந்திரம்   எட்டாம் தந்திரம் - 6. சுத்த நனவாதி பருவம்
Tune -   ( )
10.807   திருமூலர்   திருமந்திரம்   எட்டாம் தந்திரம் - 7. கேவல சகல சுத்தம்
Tune -   ( )
10.808   திருமூலர்   திருமந்திரம்   எட்டாம் தந்திரம் - 8. பராவத்தை
Tune -   ( )
10.809   திருமூலர்   திருமந்திரம்   எட்டாம் தந்திரம் - 9. முக்குண நிர்க்குணங்கள்
Tune -   ( )
10.810   திருமூலர்   திருமந்திரம்   எட்டாம் தந்திரம் - 10. அண்டாதி பேதம்
Tune -   ( )
10.811   திருமூலர்   திருமந்திரம்   எட்டாம் தந்திரம் - 11. பதினொன்றாந்தானமும் `அவத்தை` எனக்காணல்
Tune -   ( )
10.812   திருமூலர்   திருமந்திரம்   எட்டாம் தந்திரம் - 12. கலவு செலவுகள்
Tune -   ( )
10.813   திருமூலர்   திருமந்திரம்   எட்டாம் தந்திரம் - 13. நின்மலாவத்தை
Tune -   ( )
10.814   திருமூலர்   திருமந்திரம்   எட்டாம் தந்திரம - 14. அறிவுதயம்
Tune -   ( )
10.815   திருமூலர்   திருமந்திரம்   எட்டாம் தந்திரம் - 15. ஆறந்தம்
Tune -   ( )
10.816   திருமூலர்   திருமந்திரம்   எட்டாம் தந்திரம் - 16. பதி பசு பாசம் வேறின்மை
Tune -   ( )
10.817   திருமூலர்   திருமந்திரம்   எட்டாம் தந்திரம் - 17. அடிதலை அறியும் திறங்கூறல்
Tune -   ( )
10.818   திருமூலர்   திருமந்திரம்   எட்டாம் தந்திரம் - 18. முக்குற்றம்
Tune -   ( )
10.819   திருமூலர்   திருமந்திரம்   எட்டாம் தந்திரம் - 19. முப்பதம்
Tune -   ( )
10.820   திருமூலர்   திருமந்திரம்   எட்டாம் தந்திரம் - 20. முப்பரம்
Tune -   ( )
10.821   திருமூலர்   திருமந்திரம்   எட்டாம் தந்திரம் - 21. பர லக்கணம்
Tune -   ( )
10.822   திருமூலர்   திருமந்திரம்   எட்டாம் தந்திரம் - 22. முத்துரியம்
Tune -   ( )
10.823   திருமூலர்   திருமந்திரம்   எட்டாம் தந்திரம் - 23. மும்முத்தி
Tune -   ( )
10.824   திருமூலர்   திருமந்திரம்   எட்டாம் தந்திரம் - 24. முச்சொரூபம்
Tune -   ( )
10.825   திருமூலர்   திருமந்திரம்   எட்டாம் தந்திரம் - 25. முக்கரணம்
Tune -   ( )
10.826   திருமூலர்   திருமந்திரம்   எட்டாம் தந்திரம் - 26. முச்சூனிய தொந்தத்தசி
Tune -   ( )
10.827   திருமூலர்   திருமந்திரம்   எட்டாம் தந்திரம் - 27. முப்பாழ்
Tune -   ( )
10.828   திருமூலர்   திருமந்திரம்   எட்டாம் தந்திரம் - 28. காரிய காரண உபாதி
Tune -   ( )
10.829   திருமூலர்   திருமந்திரம்   எட்டாம் தந்திரம் - 29. உபசாந்தம்
Tune -   ( )
10.830   திருமூலர்   திருமந்திரம்   எட்டாம் தந்திரம் - 30. புறங்கூறாமை
Tune -   ( )
10.831   திருமூலர்   திருமந்திரம்   எட்டாம் தந்திரம் - 31. அட்ட தள கமல முக்குண அவத்தை
Tune -   ( )
10.832   திருமூலர்   திருமந்திரம்   எட்டாம் தந்திரம் - 32. நவாவத்தை அபிமானி
Tune -   ( )
10.833   திருமூலர்   திருமந்திரம்   எட்டாம் தந்திரம் - 33. சுத்தா சுத்தம
Tune -   ( )
10.834   திருமூலர்   திருமந்திரம்   எட்டாம் தந்திரம் - 34. மோட்ச நிந்தை
Tune -   ( )
10.835   திருமூலர்   திருமந்திரம்   எட்டாம் தந்திரம் - 35. இலக்கணாத் திரயம்
Tune -   ( )
10.836   திருமூலர்   திருமந்திரம்   எட்டாம் தந்திரம் - 36. `தத்துவமசி` மகாவாக்கியம்
Tune -   ( )
10.837   திருமூலர்   திருமந்திரம்   எட்டாம் தந்திரம் - 37. விசுவக் கிராசம்
Tune -   ( )
10.838   திருமூலர்   திருமந்திரம்   எட்டாம் தந்திரம் - 38. வாய்மை
Tune -   ( )
10.839   திருமூலர்   திருமந்திரம்   எட்டாம் தந்திரம் - 39. ஞானிகள் செயல்
Tune -   ( )
10.840   திருமூலர்   திருமந்திரம்   எட்டாம் தந்திரம் - 40. அவா அறுத்தல்
Tune -   ( )
10.841   திருமூலர்   திருமந்திரம்   எட்டாம் தந்திரம் - 41. பத்தியுடைமை
Tune -   ( )
10.842   திருமூலர்   திருமந்திரம்   எட்டாம் தந்திரம் - 42. முத்தியுடைமை
Tune -   ( )
10.843   திருமூலர்   திருமந்திரம்   எட்டாம் தந்திரம் - 43. சோதனை
Tune -   ( )
10.901   திருமூலர்   திருமந்திரம்   ஒன்பதாம் தந்திரம் - 1. குருமட தரிசனம்
Tune -   ( )
10.902   திருமூலர்   திருமந்திரம்   ஒன்பதாம் தந்திரம் - 2. ஞானகுரு தரிசனம்
Tune -   ( )
10.903   திருமூலர்   திருமந்திரம்   ஒன்பதாம் தந்திரம் - 3. பிரணவ சமாதி
Tune -   ( )
10.904   திருமூலர்   திருமந்திரம்   ஒன்பதாம் தந்திரம் - 4. ஒளிவகை
Tune -   ( )
10.905   திருமூலர்   திருமந்திரம்   ஒன்பதாம் தந்திரம் - 5. பஞ்சாக்கரம் - தூலம்
Tune -   ( )
10.906   திருமூலர்   திருமந்திரம்   ஒன்பதாம் தந்திரம் - 6. பஞ்சாக்கரம் - சூக்குமம்
Tune -   ( )
10.907   திருமூலர்   திருமந்திரம்   ஒன்பதாம் தந்திரம் - 7. அதி சூக்கும பஞ்சாக்கரம்
Tune -   ( )
10.908   திருமூலர்   திருமந்திரம்   ஒன்பதாம் தந்திரம் - 8. காரண பஞ்சாக்கரம்
Tune -   ( )
10.909   திருமூலர்   திருமந்திரம்   ஒன்பதாம் தந்திரம் - 9. மகா காரண பஞ்சாக்கரம்
Tune -   ( )
10.910   திருமூலர்   திருமந்திரம்   ஒன்பதாம் தந்திரம் - 10. திருக்கூத்து
Tune -   ( )
10.911   திருமூலர்   திருமந்திரம்   ஒன்பதாம் தந்திரம் - 11. சிவானந்தக் கூத்து
Tune -   ( )
10.912   திருமூலர்   திருமந்திரம்   ஒன்பதாம் தந்திரம் - 12. சுந்தரக் கூத்து
Tune -   ( )
10.913   திருமூலர்   திருமந்திரம்   ஒன்பதாம் தந்திரம் - 13. பொற்பதிக் கூத்து
Tune -   ( )
10.914   திருமூலர்   திருமந்திரம்   ஒன்பதாம் தந்திரம் - 14. பொற்றில்லைக் கூத்து
Tune -   ( )
10.915   திருமூலர்   திருமந்திரம்   ஒன்பதாம் தந்திரம் - 15. அற்புதக் கூத்து
Tune -   ( )
10.916   திருமூலர்   திருமந்திரம்   ஒன்பதாம் தந்திரம் - 16. ஆகாசப் பேறு
Tune -   ( )
10.917   திருமூலர்   திருமந்திரம்   ஒன்பதாம் தந்திரம் - 17. ஞானோதயம்
Tune -   ( )
10.918   திருமூலர்   திருமந்திரம்   ஒன்பதாம் தந்திரம் - 18. சத்திய ஞானானந்தம்
Tune -   ( )
10.919   திருமூலர்   திருமந்திரம்   ஒன்பதாம் தந்திரம் - 19. சொரூப உதயம்
Tune -   ( )
10.920   திருமூலர்   திருமந்திரம்   ஒன்பதாம் தந்திரம் - 20. ஊழ்
Tune -   ( )
10.921   திருமூலர்   திருமந்திரம்   ஒன்பதாம் தந்திரம் - 21. சிவ ரூபம்
Tune -   ( )
10.922   திருமூலர்   திருமந்திரம்   ஒன்பதாம் தந்திரம் - 22. சிவ தரிசனம்
Tune -   ( )
10.923   திருமூலர்   திருமந்திரம்   ஒன்பதாம் தந்திரம் - 23. முத்தி பேதம் கரும நிருவாணம்
Tune -   ( )
10.924   திருமூலர்   திருமந்திரம்   ஒன்பதாம் தந்திரம் - 24. சூனிய சம்பாடணை
Tune -   ( )
10.925   திருமூலர்   திருமந்திரம்   ஒன்பதாம் தந்திரம் - 25. மோன சமாதி
Tune -   ( )
10.926   திருமூலர்   திருமந்திரம்   ஒன்பதாம் தந்திரம் - 26. வரையுரை மாட்சி
Tune -   ( )
10.927   திருமூலர்   திருமந்திரம்   ஒன்பதாம் தந்திரம் - 27. அணைந்தோர் தன்மை
Tune -   ( )
10.928   திருமூலர்   திருமந்திரம்   ஒன்பதாம் தந்திரம் - 28. தோத்திரம்
Tune -   ( )
10.929   திருமூலர்   திருமந்திரம்   ஒன்பதாம் தந்திரம் - 29. சருவ வியாபகம்
Tune -   ( )
11.001   திரு ஆலவாய் உடையார்   திருமுகப் பாசுரம்   திருமுகப் பாசுரம்
Tune -   ( )
11.003   காரைக்கால் அம்மையார்    திரு இரட்டை மணிமாலை   திரு இரட்டை மணிமாலை
Tune -   ( )
11.004   காரைக்கால் அம்மையார்    அற்புதத் திருவந்தாதி   அற்புதத் திருவந்தாதி
Tune -   ( )
11.005   ஐயடிகள் காடவர்கோன் நாயனார்   திருக்கோயில் திருவெண்பா சேத்திரத்   திருக்கோயில் திருவெண்பா சேத்திரத்
Tune -   ( )
11.012   நக்கீரதேவ நாயனார்   திருஎழு கூற்றிருக்கை   திருஎழு கூற்றிருக்கை
Tune -   ( )
11.013   நக்கீரதேவ நாயனார்   பெருந்தேவ பாணி   பெருந்தேவ பாணி
Tune -   ( )
11.014   நக்கீரதேவ நாயனார்   கோபப் பிரசாதம்   கோபப் பிரசாதம்
Tune -   ( )
11.015   நக்கீரதேவ நாயனார்   கார் எட்டு   கார் எட்டு
Tune -   ( )
11.016   நக்கீரதேவ நாயனார்   போற்றித் திருக்கலி வெண்பா   போற்றித் திருக்கலி வெண்பா
Tune -   ( )
11.018   நக்கீரதேவ நாயனார்   திருக்கண்ணப்பதேவர் திருமறம்   திருக்கண்ணப்பதேவர் திருமறம்
Tune -   ( )
11.019   கல்லாடதேவ நாயனார்   திருக்கண்ணப்பதேவர் திருமறம்   திருக்கண்ணப்பதேவர் திருமறம்
Tune -   ( )
11.020   கபிலதேவ நாயனார்    மூத்த நாயனார் திருஇரட்டைமணிமாலை   மூத்த நாயனார் திருஇரட்டைமணிமாலை
Tune -   ( )
11.021   கபிலதேவ நாயனார்    சிவபெருமான் திருஇரட்டைமணிமாலை   சிவபெருமான் திருஇரட்டைமணிமாலை
Tune -   ( )
11.022   கபிலதேவ நாயனார்    சிவபெருமான் திருவந்தாதி   சிவபெருமான் திருவந்தாதி
Tune -   ( )
11.023   பரணதேவ நாயனார்   சிவபெருமான் திருவந்தாதி   சிவபெருமான் திருவந்தாதி
Tune -   ( )
11.024   இளம்பெருமான் அடிகள்   சிவபெருமான் திருமும்மணிக்கோவை   சிவபெருமான் திருமும்மணிக்கோவை
Tune -   ( )
11.025   அதிராவடிகள்   மூத்த பிள்ளையார் திருமும்மணிக்கோவை   மூத்த பிள்ளையார் திருமும்மணிக்கோவை
Tune -   ( )
11.033   நம்பியாண்டார் நம்பி   திருத்தொண்டர் திருவந்தாதி   திருத்தொண்டர் திருவந்தாதி
Tune -   ( )
11.034   நம்பியாண்டார் நம்பி   ஆளுடையபிள்ளையார் திருவந்தாதி   ஆளுடையபிள்ளையார் திருவந்தாதி
Tune -   ( )
11.035   நம்பியாண்டார் நம்பி   ஆளுடையபிள்ளையார் திருச்சண்பை விருத்தம்   ஆளுடையபிள்ளையார் திருச்சண்பை விருத்தம்
Tune -   ( )
11.036   நம்பியாண்டார் நம்பி   ஆளுடையபிள்ளையார் திருமும்மணிக்கோவை   ஆளுடையபிள்ளையார் திருமும்மணிக்கோவை
Tune -   ( )
11.037   நம்பியாண்டார் நம்பி   ஆளுடையபிள்ளையார் திருவுலாமாலை   ஆளுடையபிள்ளையார் திருவுலாமாலை
Tune -   ( )
11.038   நம்பியாண்டார் நம்பி   ஆளுடையபிள்ளையார் திருக்கலம்பகம்   ஆளுடையபிள்ளையார் திருக்கலம்பகம்
Tune -   ( )
11.039   நம்பியாண்டார் நம்பி   ஆளுடையபிள்ளையார் திருத்தொகை   ஆளுடையபிள்ளையார் திருத்தொகை
Tune -   ( )
11.040   நம்பியாண்டார் நம்பி   திருநாவுக்கரசு தேவர் திருஏகாதசமாலை   திருநாவுக்கரசு தேவர் திருஏகாதசமாலை
Tune -   ( )
12.000   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்   பாயிரம்
Tune -   ( )
12.010   சேக்கிழார்   தில்லை வாழ் அந்தணர் சருக்கம்   தில்லை வாழ் அந்தணர்
Tune -   ( )
12.020   சேக்கிழார்   தில்லை வாழ் அந்தணர் சருக்கம்   திருநீலகண்ட நாயனார் புராணம்
Tune -   ( )
12.030   சேக்கிழார்   தில்லை வாழ் அந்தணர் சருக்கம்   இயற்பகை நாயனார் புராணம்
Tune -   ( )
12.040   சேக்கிழார்   தில்லை வாழ் அந்தணர் சருக்கம்   இளையான் குடி மாற
Tune -   ( )
12.050   சேக்கிழார்   தில்லை வாழ் அந்தணர் சருக்கம்   மெய்ப் பொருள் நாயனார்
Tune -   ( )
12.060   சேக்கிழார்   தில்லை வாழ் அந்தணர் சருக்கம்   விறன்மிண்ட நாயனார் புராணம்
Tune -   ( )
12.070   சேக்கிழார்   தில்லை வாழ் அந்தணர் சருக்கம்   அமர் நீதி நாயனார்
Tune -   ( )
12.080   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்   எறி பத்த நாயனார்
Tune -   ( )
12.090   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்   ஏனாதிநாத நாயனார் புராணம்
Tune -   ( )
12.100   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்   கண்ணப்ப நாயனார் புராணம்
Tune -   ( )
12.110   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்   குங்குலியக் கலய நாயனார்
Tune -   ( )
12.120   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்   மானக்கஞ்சாற நாயனார் புராணம்
Tune -   ( )
12.130   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்   அரிவாட்டாய நாயனார் புராணம்
Tune -   ( )
12.140   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்   ஆனாய நாயனார் புராணம்
Tune -   ( )
12.150   சேக்கிழார்   மும்மையால் உலகாண்ட சருக்கம்   மூர்த்தி நாயனார் புராணம்
Tune -   ( )
12.160   சேக்கிழார்   மும்மையால் உலகாண்ட சருக்கம்   முருக நாயனார் புராணம்
Tune -   ( )
12.170   சேக்கிழார்   மும்மையால் உலகாண்ட சருக்கம்   உருத்திர பசுபதி நாயனார்
Tune -   ( )
12.180   சேக்கிழார்   மும்மையால் உலகாண்ட சருக்கம்   திரு நாளைப் போவர்
Tune -   ( )
12.190   சேக்கிழார்   மும்மையால் உலகாண்ட சருக்கம்   திருக் குறிப்புத் தொண்ட
Tune -   ( )
12.200   சேக்கிழார்   மும்மையால் உலகாண்ட சருக்கம்   சண்டேசுர நாயனார் புராணம்
Tune -   ( )
12.210   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்   திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்
Tune -   ( )
12.220   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்   குலச்சிறை நாயனார் புராணம்
Tune -   ( )
12.230   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்   பெரு மிழலைக் குறும்ப
Tune -   ( )
12.240   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்   காரைக்கால் அம்மையார் புராணம்
Tune -   ( )
12.250   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்   அப்பூதி அடிகள் நாயனார்
Tune -   ( )
12.260   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்   திரு நீல நக்க
Tune -   ( )
12.270   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்   நமிநந்தி அடிகள் நாயனார்
Tune -   ( )
12.280   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்   திருஞான சம்பந்த சுவாமிகள்
Tune -   ( )
12.290   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்   ஏயர்கோன் கலிக்காம நாயனார்
Tune -   ( )
12.300   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்   திரு மூல நாயனார்
Tune -   ( )
12.310   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்   தண்டியடிகள் புராணம்
Tune -   ( )
12.320   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்   மூர்க்க நாயனார் புராணம்
Tune -   ( )
12.330   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்   சோமாசி மாற நாயனார்
Tune -   ( )
12.340   சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்   சாக்கிய நாயனார் புராணம்
Tune -   ( )
12.350   சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்   சிறப்புலி நாயனார் புராணம்
Tune -   ( )
12.360   சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்   சிறுத்தொண்ட நாயனார் புராணம்
Tune -   ( )
12.370   சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்   கழற்றி அறிவார் நாயனார்
Tune -   ( )
12.380   சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்   கணநாத நாயனார் புராணம்
Tune -   ( )
12.390   சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்   கூற்றுவ நாயனார் புராணம்
Tune -   ( )
12.400   சேக்கிழார்   பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம்   பொய்யடிமை யில்லாத புலவர்
Tune -   ( )
12.410   சேக்கிழார்   பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம்   புகழ்ச் சோழ நாயனார்
Tune -   ( )
12.420   சேக்கிழார்   பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம்   நரசிங்க முனையரைய நாயனார்
Tune -   ( )
12.430   சேக்கிழார்   பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம்   அதிபத்த நாயனார் புராணம்
Tune -   ( )
12.440   சேக்கிழார்   பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம்   கலிக்கம்ப நாயனார் புராணம்
Tune -   ( )
12.450   சேக்கிழார்   பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம்   கலிய நாயனார் புராணம்
Tune -   ( )
12.460   சேக்கிழார்   பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம்   சத்தி நாயனார் புராணம்
Tune -   ( )
12.470   சேக்கிழார்   பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம்   ஐயடிகள் காடவர்கோன் நாயனார்
Tune -   ( )
12.480   சேக்கிழார்   கறைக் கண்டன் சருக்கம்   கணம்புல்ல நாயனார் புராணம்
Tune -   ( )
12.490   சேக்கிழார்   கறைக் கண்டன் சருக்கம்   காரிநாயனார் புராணம்
Tune -   ( )
12.500   சேக்கிழார்   கறைக் கண்டன் சருக்கம்   நின்ற சீர் நெடுமாற
Tune -   ( )
12.510   சேக்கிழார்   கறைக் கண்டன் சருக்கம்   வாயிலார் நாயனார் புராணம்
Tune -   ( )
12.520   சேக்கிழார்   கறைக் கண்டன் சருக்கம்   முனையடுவார் நாயனார் புராணம்
Tune -   ( )
12.530   சேக்கிழார்   கடல் சூழ்ந்த சருக்கம்   கழற்சிங்க நாயனார் புராணம்
Tune -   ( )
12.540   சேக்கிழார்   கடல் சூழ்ந்த சருக்கம்   இடங்கழி நாயனார் புராணம்
Tune -   ( )
12.550   சேக்கிழார்   கடல் சூழ்ந்த சருக்கம்   செருத்துணை நாயனார் புராணம்
Tune -   ( )
12.560   சேக்கிழார்   கடல் சூழ்ந்த சருக்கம்   புகழ்த்துணை நாயனார் புராணம்
Tune -   ( )
12.570   சேக்கிழார்   கடல் சூழ்ந்த சருக்கம்   கோட்புலி நாயனார் புராணம்
Tune -   ( )
12.580   சேக்கிழார்   பத்தராய்ப் பணிவார் சருக்கம்   பத்தாராய்ப் பணிவார் புராணம்
Tune -   ( )
12.590   சேக்கிழார்   பத்தராய்ப் பணிவார் சருக்கம்   பரமனையே பாடுவார் புராணம்
Tune -   ( )
12.600   சேக்கிழார்   பத்தராய்ப் பணிவார் சருக்கம்   சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்
Tune -   ( )
12.610   சேக்கிழார்   பத்தராய்ப் பணிவார் சருக்கம்   திருவாரூர் பிறந்தார் புராணம்
Tune -   ( )
12.620   சேக்கிழார்   பத்தராய்ப் பணிவார் சருக்கம்   முப்போதும் திருமேனி தீண்டுவார்
Tune -   ( )
12.630   சேக்கிழார்   பத்தராய்ப் பணிவார் சருக்கம்   முழுநீறு பூசிய முனிவர்
Tune -   ( )
12.640   சேக்கிழார்   பத்தராய்ப் பணிவார் சருக்கம்   அப்பாலும் அடிச்சார்ந்தார் புராணம்
Tune -   ( )
12.650   சேக்கிழார்   மன்னிய சீர்ச் சருக்கம்   பூசலார் நாயனார் புராணம்
Tune -   ( )
12.660   சேக்கிழார்   மன்னிய சீர்ச் சருக்கம்   மங்கையர்க்கரசியார் புராணம்
Tune -   ( )
12.670   சேக்கிழார்   மன்னிய சீர்ச் சருக்கம்   நேச நாயனார் புராணம்
Tune -   ( )
12.680   சேக்கிழார்   மன்னிய சீர்ச் சருக்கம்   கோச்செங்கட் சோழ நாயனார்
Tune -   ( )
12.690   சேக்கிழார்   மன்னிய சீர்ச் சருக்கம்   திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார்
Tune -   ( )
12.700   சேக்கிழார்   மன்னிய சீர்ச் சருக்கம்   சடைய நாயனார் புராணம்
Tune -   ( )
12.710   சேக்கிழார்   மன்னிய சீர்ச் சருக்கம்   இசை ஞானியார் புராணம்
Tune -   ( )
12.720   சேக்கிழார்   வெள்ளானைச் சருக்கம்   வெள்ளானைச் சருக்கம்
Tune -   ( )

This page was last modified on Sat, 24 Feb 2024 17:27:32 +0000
          send corrections and suggestions to admin @ sivasiva.org   https://www.sivaya.org/thirumurai_song.php