சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Search this site with
song/pathigam/paasuram numbers
or words in any language

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

6.078   திருநாவுக்கரசர்   தேவாரம்

திருவாலங்காடு (பழையனூர்) - திருத்தாண்டகம் அருள்தரு வண்டார்குழலியம்மை உடனுறை அருள்மிகு ஊர்த்ததாண்டவேசுவரர் திருவடிகள் போற்றி
Audio: https://www.youtube.com/watch?v=jqqWSyfJW3w  
ஒன்றா உலகு அனைத்தும் ஆனார் தாமே; ஊழி தோறு ஊழி உயர்ந்தார் தாமே;
நின்று ஆகி எங்கும் நிமிர்ந்தார் தாமே; நீர், வளி, தீ, ஆகாசம், ஆனார் தாமே;
கொன்று ஆரும் கூற்றை உதைத்தார் தாமே; கோலப் பழனை உடையார் தாமே;
சென்று ஆடு தீர்த்தங்கள் ஆனார் தாமே திரு ஆலங்காடு உறையும் செல்வர் தாமே.


[ 1]


மலைமகளைப் பாகம் அமர்ந்தார் தாமே; வானோர் வணங்கப்படுவார் தாமே;
சலமகளைச் செஞ்சடைமேல் வைத்தார் தாமே; சரண் என்று இருப்பார்கட்கு அன்பர் தாமே;
பலபலவும் வேடங்கள் ஆனார் தாமே; பழனை பதியா உடையார் தாமே;
சிலை மலையா மூஎயிலும் அட்டார் தாமே திரு ஆலங்காடு உறையும் செல்வர் தாமே.


[ 2]


ஆ உற்ற ஐந்தும் உகந்தார் தாமே; அளவு இல் பெருமை உடையார் தாமே;
பூ உற்ற நாற்றம் ஆய் நின்றார் தாமே; புனிதப் பொருள் ஆகி நின்றார் தாமே;
பா உற்ற பாடல் உகப்பார் தாமே; பழனை பதியா உடையார் தாமே;
தே உற்று அடி பரவ நின்றார் தாமே திரு ஆலங்காடு உறையும் செல்வர் தாமே.


[ 3]


நாறு பூங்கொன்றை முடியார் தாமே; நால்மறையோடு ஆறு அங்கம் சொன்னார் தாமே;
மாறு இலா மேனி உடையார் தாமே; மா மதியம் செஞ்சடைமேல் வைத்தார் தாமே;
பாறினார் வெண்தலையில் உண்டார் தாமே; பழனை பதியா உடையார் தாமே;
தேறினார் சித்தத்து இருந்தார் தாமே திரு ஆலங்காடு உறையும் செல்வர் தாமே.


[ 4]


அல்லும் பகலும் ஆய் நின்றார் தாமே; அந்தியும் சந்தியும் ஆனார் தாமே;
சொல்லும் பொருள் எலாம் ஆனார் தாமே; தோத்திரமும் சாத்திரமும் ஆனார் தாமே;
பல் உரைக்கும் பா எலாம் ஆனார் தாமே; பழனை பதியா உடையார் தாமே;
செல்லும் நெறி காட்ட வல்லார் தாமே திரு ஆலங்காடு உறையும் செல்வர் தாமே.


[ 5]


Go to top
தொண்டு ஆய்ப் பணிவார்க்கு அணியார் தாமே; தூ நீறு அணியும் சுவண்டர் தாமே;
தண் தாமரையானும் மாலும் தேட, தழல் உரு ஆய் ஓங்கி, நிமிர்ந்தார் தாமே;
பண் தான் இசை பாட நின்றார் தாமே; பழனை பதியா உடையார் தாமே;
திண்தோள்கள் எட்டும் உடையார் தாமே திரு ஆலங்காடு உறையும் செல்வர் தாமே.


[ 6]


மை ஆரும் கண்டம்-மிடற்றார் தாமே; மயானத்தில் ஆடல் மகிழ்ந்தார் தாமே;
ஐயாறும், ஆரூரும், ஆனைக்காவும், அம்பலமும், கோயிலாக் கொண்டார் தாமே;
பை ஆடு அரவம் அசைத்தார் தாமே; பழனை பதியா உடையார் தாமே;
செய்யாள் வழிபட நின்றார் தாமே திரு ஆலங்காடு உறையும் செல்வர் தாமே.


[ 7]


விண் முழுதும் மண் முழுதும் ஆனார் தாமே; மிக்கோர்கள் ஏத்தும் குணத்தார் தாமே;
கண் விழியாக் காமனையும் காய்ந்தார் தாமே;   காலங்கள், ஊழி, கடந்தார் தாமே;
பண் இயலும் பாடல் உகப்பார் தாமே; பழனை   பதியா உடையார் தாமே;
திண் மழுவாள் ஏந்து கரத்தார் தாமே திரு ஆலங்காடு உறையும் செல்வர் தாமே.


[ 8]


கார் ஆர் கடல் நஞ்சை உண்டார் தாமே; கயிலை மலையை உடையார் தாமே;
ஊர் ஆக ஏகம்பம் உகந்தார் தாமே; ஒற்றியூர் பற்றி இருந்தார் தாமே;
பாரார் புகழப்படுவார் தாமே; பழனை பதியா உடையார் தாமே;
தீராத வல்வினை நோய் தீர்ப்பார் தாமே திரு ஆலங்காடு உறையும் செல்வர் தாமே.


[ 9]


மாலைப் பிறை சென்னி வைத்தார் தாமே;   வண் கயிலை மா மலையை வந்தியாத,
நீலக் கடல் சூழ், இலங்கைக் கோனை நெரிய விரலால் அடர்த்தார் தாமே;
பால் ஒத்த மேனி நிறத்தார் தாமே; பழனை பதியா உடையார் தாமே;
சீலத்தார் ஏத்தும் திறத்தார் தாமே திரு ஆலங்காடு உறையும் செல்வர் தாமே.


[ 10]


Go to top

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருவாலங்காடு (பழையனூர்)
1.045   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   துஞ்ச வருவாரும், தொழுவிப்பாரும், வழுவிப்
Tune - தக்கராகம்   (திருவாலங்காடு (பழையனூர்) ஊர்த்ததாண்டவேசுரர் வண்டார்குழலியம்மை)
4.068   திருநாவுக்கரசர்   தேவாரம்   வெள்ள நீர்ச் சடையர் போலும்;
Tune - திருநேரிசை   (திருவாலங்காடு (பழையனூர்) ஊர்த்ததாண்டவேசுவரர் வண்டார்குழலியம்மை)
6.078   திருநாவுக்கரசர்   தேவாரம்   ஒன்றா உலகு அனைத்தும் ஆனார்
Tune - திருத்தாண்டகம்   (திருவாலங்காடு (பழையனூர்) ஊர்த்ததாண்டவேசுவரர் வண்டார்குழலியம்மை)
7.052   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   முத்தா! முத்தி தர வல்ல
Tune - பழம்பஞ்சுரம்   (திருவாலங்காடு (பழையனூர்) ஊர்த்துவதாண்டவேசுவரர் வண்டார்குழலியம்மை)
11.002   காரைக்கால் அம்மையார்    திருஆலங்காட்டு மூத்த திருப்பதிகம்-1   திருஆலங்காட்டு மூத்த திருப்பதிகம்
Tune -   (திருவாலங்காடு (பழையனூர்) )

This page was last modified on Sun, 31 Mar 2024 02:36:43 -0400
          send corrections and suggestions to admin @ sivaya.org

thirumurai song