சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Search this site with
song/pathigam/paasuram numbers
or words in any language

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

7.080   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு

திருக்கேதீச்சரம் - நட்டபாடை அருள்தரு கௌரியம்மை உடனுறை அருள்மிகு கேதீசுவரர் திருவடிகள் போற்றி
Audio: https://www.youtube.com/watch?v=Gfng394m-KU  
நத்தார் புடை ஞானன்; பசு ஏறிந்(ன்); நனை கவுள் வாய்ப்
மத்தம் மத யானை உரி போர்த்த மழுவாளன்;
பத்து ஆகிய தொண்டர் தொழு, பாலாவியின் கரைமேல்,
செத்தார் எலும்பு அணிவான்-திருக்கேதீச்சுரத்தானே.


[ 1]


சுடுவார் பொடி-நீறும், நல துண்டப் பிறை, கீளும்,
கடம் ஆர் களியானை உரி, அணிந்த(க்) கறைக் கண்டன்;
பட ஏர் இடை மடவாளொடு, பாலாவியின் கரை மேல்-
திடமா உறைகின்றான்-திருக்கேதீச்சுரத்தானே.


[ 2]


அங்கம் மொழி அன்னார் அவர், அமரர், தொழுது ஏத்த,
வங்கம் மலிகின்ற கடல் மாதோட்ட நன்நகரில்
பங்கம் செய்த பிறை சூடினன்; பாலாவியின் கரைமேல்-
செங்கண்(ண்) அரவு அசைத்தான் திருக்கேதீச்சுரத்தானே.


[ 3]


கரியக் கறைக்கண்டன்(ன்); நல கண்மேல் ஒரு கண்ணான்;
வரிய சிறை வண்டு யாழ்செயும் மாதோட்ட நன் நகருள்
பரிய திரை எறியா வரு பாலாவியின் கரைமேல்-
தெரியும் மறை வல்லான்திருக்கேதீச்சுரத்தானே.


[ 4]


அங்கத்து உறு நோய்கள்(ள்) அடியார் மேல் ஒழித்து அருளி
வங்கம் மலிகின்ற கடல் மாதோட்ட நன்நகரில்
பங்கம் செய்த மடவாளொடு பாலாவியின் கரைமேல்-
தெங்கு அம்பொழில் சூழ்ந்த திருக்கேதீச்சுரத்தானே.


[ 5]


Go to top
வெய்ய வினை ஆய அடியார்மேல் ஒழித்துஅருளி
வையம் மலிகின்ற கடல் மாதோட்ட நன்நகரில
பை ஏர் இடை மடவாளொடு பாலாவியின் கரைமேல்
செய்ய சடை முடியான்-திருக்கேதீச்சுரத்தானே.


[ 6]


ஊனத்து உறு நோய்கள்(ள்) அடியார் மேல் ஒழித்து அருளி,
வால் நத்து உறு மலியும் கடல் மாதோட்ட நன் நகரில்
பால் நத்துறும் மொழியாளொடு பாலாவியின் கரைமேல்
ஏனத்து எயிறு அணிந்தான் திருக்கேதீச்சுரத்தானே.


[ 7]


அட்டன்(ந்) அழகு ஆக (வ்) அரைதன் மேல் அரவு ஆர்த்து
மட்டு உண்டு வண்டு ஆலும் பொழில் மாதோட்ட நன்நகரில்
பட்ட அரி நுதலாளொடு பாலாவியின் கரைமேல
சிட்டன் நமை ஆள்வான் திருக்கேதீச்சுரத்தானே.


[ 8]


மூவர் என, இருவர் என, முக்கண் உடை மூர்த்தி;
மா இன் கனி தூங்கும் பொழில் மாதோட்ட நன்நகரில்
பாவம் வினை அறுப்பார் பயில் பாலாவியின் கரைமேல்-
தேவன்; எனை ஆள்வான் திருக்கேதீச்சுரத்தானே.


[ 9]


கறை ஆர் கடல் சூழ்ந்த கழி மாதோட்ட நன் நகருள்
சிறை ஆர் பொழில் வண்டு யாழ் செயும் கேதீச்சுரத்தானை
மறை ஆர் புகழ் ஊரன்(ந்)-அடித் தொண்டன்(ந்)-உரை செய்த
குறையாத் தமிழ்பத்தும் சொலக் கூடா, கொடுவினையே.


[ 10]


Go to top

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருக்கேதீச்சரம்
2.107   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   விருது குன்ற, மாமேரு வில்,
Tune - நட்டராகம்   (திருக்கேதீச்சரம் கேதீச்சுவரர் கௌரிநாயகியம்மை)
7.080   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   நத்தார் புடை ஞானன்; பசு
Tune - நட்டபாடை   (திருக்கேதீச்சரம் கேதீசுவரர் கௌரியம்மை)

This page was last modified on Sun, 31 Mar 2024 02:36:43 -0400
          send corrections and suggestions to admin @ sivaya.org

thirumurai song