sivasiva.org
Search this site with
song/pathigam/paasuram numbers
Or Tamil/English words

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

Selected Thiruppugazh Songs
கற்பக விநாயகர் மலரடி ! போற்றி போற்றி!
நம பார்வதி பதயே! ஹர ஹர மஹா தேவா
தென் நாடு உடைய சிவனே, போற்றி! எந் நாட்டவர்க்கும் இறைவா, போற்றி!
காவாய் கனகத் திரளே போற்றி! கயிலை மலையானே போற்றி போற்றி
வெற்றி வேல் முருகனுக்கு! அரோகரா
ஆதி பராசக்திக்கு! போற்றி போற்றி

அருணகிரி நாதருக்கு! போற்றி போற்றி

அருவமும் உருவும் ஆகி அநாதியாய்ப் பலவாய் ஒன்றாய்ப்
பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பதோர் மேனியாகக்
கருணைகூர் முகங்கள் ஆறும் கரங்கள் பன்னிரெண்டும் கொண்டே
ஒருதிரு முருகன் வந்தாங்கு உதித்தனன் உலகம் உய்ய.

ஞானம் பெறலாம், நலம் பெறலாம், எந்நாளும்
வானம் அரசாள் வரம்பெறலாம், மோனவீடு
ஏறலாம் யானைக்கு இளையான் திருப்புகழைக்,
கூறினார்க்கு ஆமேஇக் கூறு.

Thiruppugazh # 1   கைத்தல நிறைகனி ( - வாரியார் # 1 ) கைத்தல நிறைகனி  (விநாயகர்)  
Thiruppugazh # 2   பக்கரை விசித்ரமணி ( - வாரியார் # 3 ) பக்கரை விசித்ரமணி  (விநாயகர்)  
Thiruppugazh # 3   உம்பர் தரு ( - வாரியார் # 2 ) உம்பர் தரு  (விநாயகர்)  
Thiruppugazh # 4   நினது திருவடி ( - வாரியார் # 5 ) நினது திருவடி  (விநாயகர்)  
Thiruppugazh # 5   விடமடைசு வேலை ( - வாரியார் # 4 ) விடமடைசு வேலை  (விநாயகர்)  
Thiruppugazh # 6   முத்தைத்தரு ( குருஜி # 5 - வாரியார் # 6 ) முத்தைத்தரு  (திருவருணை)  
Thiruppugazh # 8   உனைத் தினம் ( குருஜி # 6 - வாரியார் # 7 ) உனைத் தினம்  (திருப்பரங்குன்றம்)  
Thiruppugazh # 9   கருவடைந்து ( குருஜி # 7 - வாரியார் # 13 ) கருவடைந்து  (திருப்பரங்குன்றம்)  
Thiruppugazh # 11   கனகந்திரள்கின்ற ( குருஜி # 8 - வாரியார் # 10 ) கனகந்திரள்கின்ற  (திருப்பரங்குன்றம்)  
Thiruppugazh # 13   சந்ததம் பந்த ( குருஜி # 9 - வாரியார் # 15 ) சந்ததம் பந்த  (திருப்பரங்குன்றம்)  
Thiruppugazh # 15   தடக்கைப் பங்கயம் ( குருஜி # 10 - வாரியார் # 16 ) தடக்கைப் பங்கயம்  (திருப்பரங்குன்றம்)  
Thiruppugazh # 28   அறிவழிய மயல்பெருக ( குருஜி # 15 - வாரியார் # 23 ) அறிவழிய மயல்பெருக  (திருச்செந்தூர்)  
Thiruppugazh # 31   இயலிசையில் உசித ( குருஜி # 17 - வாரியார் # 25 ) இயலிசையில் உசித  (திருச்செந்தூர்)  
Thiruppugazh # 36   ஏவினை நேர்விழி ( குருஜி # 20 - வாரியார் # 29 ) ஏவினை நேர்விழி  (திருச்செந்தூர்)  
Thiruppugazh # 56   சங்கை தான் ஒன்று ( - வாரியார் # 92 ) சங்கை தான் ஒன்று  (திருச்செந்தூர்)  
Thiruppugazh # 62   தண்டை அணி ( குருஜி # 30 - வாரியார் # 103 ) தண்டை அணி  (திருச்செந்தூர்)  
Thiruppugazh # 63   தந்த பசிதனை ( குருஜி # 31 - வாரியார் # 43 ) தந்த பசிதனை  (திருச்செந்தூர்)  
Thiruppugazh # 64   தரிக்குங்கலை ( குருஜி # 32 - வாரியார் # 44 ) தரிக்குங்கலை  (திருச்செந்தூர்)  
Thiruppugazh # 68   தொந்தி சரிய ( குருஜி # 34 - வாரியார் # 47 ) தொந்தி சரிய  (திருச்செந்தூர்)  
Thiruppugazh # 78   பரிமள களப ( குருஜி # 41 - வாரியார் # 55 ) பரிமள களப  (திருச்செந்தூர்)  
Thiruppugazh # 97   வந்து வந்து முன் ( குருஜி # 52 - வாரியார் # 69 ) வந்து வந்து முன்  (திருச்செந்தூர்)  
Thiruppugazh # 100   விந்ததில் ஊறி ( குருஜி # 54 - வாரியார் # 71 ) விந்ததில் ஊறி  (திருச்செந்தூர்)  
Thiruppugazh # 101   விறல்மாரன் ஐந்து ( குருஜி # 55 - வாரியார் # 101 ) விறல்மாரன் ஐந்து  (திருச்செந்தூர்)  
Thiruppugazh # 106   அதல விதல ( - வாரியார் # 149 ) அதல விதல  (பழநி)  
Thiruppugazh # 107   அபகார நிந்தை ( குருஜி # 57 - வாரியார் # 110 ) அபகார நிந்தை  (பழநி)  
Thiruppugazh # 110   அவனிதனிலே ( குருஜி # 59 - வாரியார் # 130 ) அவனிதனிலே  (பழநி)  
Thiruppugazh # 114   ஆறுமுகம் ஆறுமுகம் ( குருஜி # 60 - வாரியார் # 153 ) ஆறுமுகம் ஆறுமுகம்  (பழநி)  
Thiruppugazh # 134   கருவின் உருவாகி ( குருஜி # 68 - வாரியார் # 132 ) கருவின் உருவாகி  (பழநி)  
Thiruppugazh # 145   குரம்பை மலசலம் ( குருஜி # 69 - வாரியார் # 188 ) குரம்பை மலசலம்  (பழநி)  
Thiruppugazh # 156   சிவனார் மனங்குளிர ( குருஜி # 71 - வாரியார் # 113 ) சிவனார் மனங்குளிர  (பழநி)  
Thiruppugazh # 158   சீ உதிரம் எங்கும் ( குருஜி # 72 - வாரியார் # 195 ) சீ உதிரம் எங்கும்  (பழநி)  
Thiruppugazh # 166   தலைவலி மருத்தீடு ( குருஜி # 78 - வாரியார் # 141 ) தலைவலி மருத்தீடு  (பழநி)  
Thiruppugazh # 168   திமிர உததி ( குருஜி # 80 - வாரியார் # 123 ) திமிர உததி  (பழநி)  
Thiruppugazh # 170   நாத விந்து ( குருஜி # 18 - வாரியார் # 104 ) நாத விந்து  (பழநி)  
Thiruppugazh # 179   போதகம் தரு ( குருஜி # 85 - வாரியார் # 105 ) போதகம் தரு  (பழநி)  
Thiruppugazh # 182   மனக்கவலை ஏதும் ( குருஜி # 86 - வாரியார் # 1316 ) மனக்கவலை ஏதும்  (பழநி)  
Thiruppugazh # 192   வசனமிக ஏற்றி ( குருஜி # 89 - வாரியார் # 183 ) வசனமிக ஏற்றி  (பழநி)  
Thiruppugazh # 201   அவாமருவு ( குருஜி # 93 - வாரியார் # 199 ) அவாமருவு  (சுவாமிமலை)  
Thiruppugazh # 203   ஆனாத பிருதி ( குருஜி # 94 - வாரியார் # 201 ) ஆனாத பிருதி  (சுவாமிமலை)  
Thiruppugazh # 212   காமியத் தழுந்தி ( குருஜி # 102 - வாரியார் # 205 ) காமியத் தழுந்தி  (சுவாமிமலை)  
Thiruppugazh # 216   சரண கமலாலயத்தில் ( குருஜி # 104 - வாரியார் # 206 ) சரண கமலாலயத்தில்  (சுவாமிமலை)  
Thiruppugazh # 217   சுத்திய நரப்புடன் ( குருஜி # 105 - வாரியார் # 207 ) சுத்திய நரப்புடன்  (சுவாமிமலை)  
Thiruppugazh # 222   நாசர்தங் கடை ( குருஜி # 108 - வாரியார் # 211 ) நாசர்தங் கடை  (சுவாமிமலை)  
Thiruppugazh # 223   நாவேறு பா மணத்த ( குருஜி # 109 - வாரியார் # 212 ) நாவேறு பா மணத்த  (சுவாமிமலை)  
Thiruppugazh # 228   பாதி மதிநதி ( குருஜி # 111 - வாரியார் # 217 ) பாதி மதிநதி  (சுவாமிமலை)  
Thiruppugazh # 232   வாதமொடு சூலை ( - வாரியார் # 220 ) வாதமொடு சூலை  (சுவாமிமலை)  
Thiruppugazh # 239   அமைவுற்று அடைய ( குருஜி # 114 - வாரியார் # 291 ) அமைவுற்று அடைய  (திருத்தணிகை)  
Thiruppugazh # 240   அரகர சிவன் அரி ( குருஜி # 115 - வாரியார் # 248 ) அரகர சிவன் அரி  (திருத்தணிகை)  
Thiruppugazh # 242   இருப்பவல் திருப்புகழ் ( குருஜி # 116 - வாரியார் # 249 ) இருப்பவல் திருப்புகழ்  (திருத்தணிகை)  
Thiruppugazh # 243   இருமலு ரோக ( குருஜி # 117 - வாரியார் # 302 ) இருமலு ரோக  (திருத்தணிகை)  
Thiruppugazh # 249   எனக்கென யாவும் ( குருஜி # 123 - வாரியார் # 298 ) எனக்கென யாவும்  (திருத்தணிகை)  
Thiruppugazh # 269   சினத்தவர் முடிக்கும் ( குருஜி # 131 - வாரியார் # 305 ) சினத்தவர் முடிக்கும்  (திருத்தணிகை)  
Thiruppugazh # 278   நினைத்தது எத்தனை ( குருஜி # 137 - வாரியார் # 272 ) நினைத்தது எத்தனை  (திருத்தணிகை)  
Thiruppugazh # 280   பருத்தபற் சிரத்தினை ( குருஜி # 139 - வாரியார் # 297 ) பருத்தபற் சிரத்தினை  (திருத்தணிகை)  
Thiruppugazh # 314   புன மடந்தைக்கு ( குருஜி # 436 - வாரியார் # 474 ) புன மடந்தைக்கு  (காஞ்சீபுரம்)  
Thiruppugazh # 330   முட்டுப் பட்டு ( குருஜி # 439 - வாரியார் # 478 ) முட்டுப் பட்டு  (காஞ்சீபுரம்)  
Thiruppugazh # 339   கருமமான பிறப்பற ( குருஜி # 426 - வாரியார் # 487 ) கருமமான பிறப்பற  (காஞ்சீபுரம்)  
Thiruppugazh # 355   அனித்தமான ஊன் ( குருஜி # 441 - வாரியார் # 507 ) அனித்தமான ஊன்  (திருவானைக்கா)  
Thiruppugazh # 359   ஓல மறைகள் ( குருஜி # 442 - வாரியார் # 511 ) ஓல மறைகள்  (திருவானைக்கா)  
Thiruppugazh # 363   நாடித் தேடி ( குருஜி # 444 - வாரியார் # 501 ) நாடித் தேடி  (திருவானைக்கா)  
Thiruppugazh # 366   வேலைப்போல் விழி ( - வாரியார் # 504 ) வேலைப்போல் விழி  (திருவானைக்கா)  
Thiruppugazh # 367   குமர குருபர குணதர ( - வாரியார் # 561 ) குமர குருபர குணதர  (திருவருணை)  
Thiruppugazh # 397   இமராஜன் நிலாவது ( குருஜி # 448 - வாரியார் # 591 ) இமராஜன் நிலாவது  (திருவருணை)  
Thiruppugazh # 401   இருவினை அஞ்ச ( குருஜி # 452 - வாரியார் # 517 ) இருவினை அஞ்ச  (திருவருணை)  
Thiruppugazh # 414   கீத விநோத மெச்சு ( குருஜி # 461 - வாரியார் # 530 ) கீத விநோத மெச்சு  (திருவருணை)  
Thiruppugazh # 421   சிவமாதுடனே ( குருஜி # 462 - வாரியார் # 537 ) சிவமாதுடனே  (திருவருணை)  
Thiruppugazh # 425   செயசெய அருணா ( குருஜி # 463 - வாரியார் # 1323 ) செயசெய அருணா  (திருவருணை)  
Thiruppugazh # 431   தோதகப் பெரும் ( - வாரியார் # 546 ) தோதகப் பெரும்  (திருவருணை)  
Thiruppugazh # 470   அவகுண விரகனை ( குருஜி # 474 - வாரியார் # 638 ) அவகுண விரகனை  (சிதம்பரம்)  
Thiruppugazh # 487   வாத பித்தமொடு ( குருஜி # 492 - வாரியார் # 655 ) வாத பித்தமொடு  (சிதம்பரம்)  
Thiruppugazh # 493   எழுகடல் மணலை ( குருஜி # 478 - வாரியார் # 596 ) எழுகடல் மணலை  (சிதம்பரம்)  
Thiruppugazh # 513   மனமே உனக்குறுதி ( குருஜி # 490 ) மனமே உனக்குறுதி  (சிதம்பரம்)  
Thiruppugazh # 519   நகைத்து உருக்கி ( - வாரியார் # 239 ) நகைத்து உருக்கி  (கயிலைமலை)  
Thiruppugazh # 521   புமி அதனில் ( குருஜி # 160 - வாரியார் # 241 ) புமி அதனில்  (கயிலைமலை)  
Thiruppugazh # 523   ஒருபதும் இருபதும் ( குருஜி # 182 - வாரியார் # 243 ) ஒருபதும் இருபதும்  (ஸ்ரீ சைலம் திருமலை)  
Thiruppugazh # 525   சரவண பவநிதி ( குருஜி # 185 - வாரியார் # 432 ) சரவண பவநிதி  (திருவேங்கடம்)  
Thiruppugazh # 530   அல்லி விழியாலும் ( குருஜி # 188 - வாரியார் # 312 ) அல்லி விழியாலும்  (வள்ளிமலை)  
Thiruppugazh # 544   வேத வெற்பிலே ( குருஜி # 169 - வாரியார் # 326 ) வேத வெற்பிலே  (திருக்கழுக்குன்றம்)  
Thiruppugazh # 557   பகலிரவினில் ( குருஜி # 174 - வாரியார் # 338 ) பகலிரவினில்  (சென்னிமலை)  
Thiruppugazh # 561   வாசித்து ( குருஜி # 176 - வாரியார் # 342 ) வாசித்து  (திருசிராப்பள்ளி)  
Thiruppugazh # 567   பத்தியால் யானுனை ( குருஜி # 148 - வாரியார் # 348 ) பத்தியால் யானுனை  (இரத்னகிரி)  
Thiruppugazh # 568   சீரான கோல கால ( - வாரியார் # 349 ) சீரான கோல கால  (விராலிமலை)  
Thiruppugazh # 571   நிராமய புராதன ( குருஜி # 201 - வாரியார் # 352 ) நிராமய புராதன  (விராலிமலை)  
Thiruppugazh # 585   அன்பாக வந்து ( குருஜி # 177 - வாரியார் # 375 ) அன்பாக வந்து  (திருச்செங்கோடு)  
Thiruppugazh # 586   பந்து ஆடி அம் கை ( - வாரியார் # 376 ) பந்து ஆடி அம் கை  (திருச்செங்கோடு)  
Thiruppugazh # 598   காலனிடத்து ( குருஜி # 178 - வாரியார் # 388 ) காலனிடத்து  (திருச்செங்கோடு)  
Thiruppugazh # 599   தாமா தாம ஆலாபா ( - வாரியார் # 389 ) தாமா தாம ஆலாபா  (திருச்செங்கோடு)  
Thiruppugazh # 602   பத்தர் கணப்ரிய ( குருஜி # 180 - வாரியார் # 392 ) பத்தர் கணப்ரிய  (திருச்செங்கோடு)  
Thiruppugazh # 610   மனையவள் நகைக்க ( குருஜி # 167 - வாரியார் # 400 ) மனையவள் நகைக்க  (ஞானமலை)  
Thiruppugazh # 616   ஐங்கரனை ( குருஜி # 165 - வாரியார் # 406 ) ஐங்கரனை  (கொங்கணகிரி)  
Thiruppugazh # 635   அல்லில் நேரும் ( குருஜி # 193 - வாரியார் # 416 ) அல்லில் நேரும்  (வள்ளியூர்)  
Thiruppugazh # 636   திருமகள் உலாவும் ( குருஜி # 155 - வாரியார் # 417 ) திருமகள் உலாவும்  (கதிர்காமம்)  
Thiruppugazh # 638   உடுக்கத் துகில் ( குருஜி # 150 - வாரியார் # 419 ) உடுக்கத் துகில்  (கதிர்காமம்)  
Thiruppugazh # 656   அடல் அரி மகவு ( குருஜி # 312 - வாரியார் # 666 ) அடல் அரி மகவு  (வெள்ளிகரம்)  
Thiruppugazh # 664   வதன சரோருக ( குருஜி # 315 - வாரியார் # 671 ) வதன சரோருக  (வெள்ளிகரம்)  
Thiruppugazh # 675   புவிபுனல் காலும் ( - வாரியார் # 685 ) புவிபுனல் காலும்  (திருவாலங்காடு)  
Thiruppugazh # 676   வடிவது நீலம் ( - வாரியார் # 686 ) வடிவது நீலம்  (திருவாலங்காடு)  
Thiruppugazh # 724   அண்டர்பதி குடியேற ( குருஜி # 230 - வாரியார் # 735 ) அண்டர்பதி குடியேற  (சிறுவை)  
Thiruppugazh # 725   சீதள வாரிஜ ( குருஜி # 231 - வாரியார் # 736 ) சீதள வாரிஜ  (சிறுவை)  
Thiruppugazh # 730   கருமுகில் போல் ( - வாரியார் # 741 ) கருமுகில் போல்  (திருவாமாத்தூர்)  
Thiruppugazh # 735   தாரகாசுரன் சரிந்து ( குருஜி # 284 - வாரியார் # 746 ) தாரகாசுரன் சரிந்து  (தேவனூர்)  
Thiruppugazh # 747   சதுரத்தரை நோக்கிய ( குருஜி # 276 - வாரியார் # 757 ) சதுரத்தரை நோக்கிய  (திருவேட்களம்)  
Thiruppugazh # 766   ஊனத்தசை தோல்கள் ( குருஜி # 233 - வாரியார் # 784 ) ஊனத்தசை தோல்கள்  (சீகாழி)  
Thiruppugazh # 780   எத்தனை கோடி ( குருஜி # 319 - வாரியார் # 790 ) எத்தனை கோடி  (வைத்தீசுரன் கோயில்)  
Thiruppugazh # 786   சூலம் என ஓடு ( - வாரியார் # 796 ) சூலம் என ஓடு  (திருக்கடவூர்)  
Thiruppugazh # 798   மருக்குலாவிய ( குருஜி # 273 - வாரியார் # 799 ) மருக்குலாவிய  (திருவிடைக்கழி)  
Thiruppugazh # 816   கூசாதே பார் ( - வாரியார் # 830 ) கூசாதே பார்  (திருவாரூர்)  
Thiruppugazh # 817   கூர்வாய் நாராய் ( - வாரியார் # 831 ) கூர்வாய் நாராய்  (திருவாரூர்)  
Thiruppugazh # 818   பாலோ தேனோ பாகோ ( குருஜி # 268 - வாரியார் # 832 ) பாலோ தேனோ பாகோ  (திருவாரூர்)  
Thiruppugazh # 821   கரமு முளரியின் ( - வாரியார் # 828 ) கரமு முளரியின்  (திருவாரூர்)  
Thiruppugazh # 847   எருவாய் கருவாய் ( குருஜி # 274 - வாரியார் # 857 ) எருவாய் கருவாய்  (திருவீழிமிழலை)  
Thiruppugazh # 858   அறுகுநுனி பனி ( - வாரியார் # 868 ) அறுகுநுனி பனி  (திருவிடைமருதூர்)  
Thiruppugazh # 894   நீரிழிவு குட்டம் ( - வாரியார் # 904 ) நீரிழிவு குட்டம்  (குறட்டி)  
Thiruppugazh # 904   என்னால் பிறக்கவும் ( குருஜி # 302 - வாரியார் # 910 ) என்னால் பிறக்கவும்  (வயலூர்)  
Thiruppugazh # 923   மதியால் வித்தகன் ( குருஜி # 217 - வாரியார் # 933 ) மதியால் வித்தகன்  (கருவூர்)  
Thiruppugazh # 925   தசையாகிய ( குருஜி # 215 - வாரியார் # 937 ) தசையாகிய  (கருவூர்)  
Thiruppugazh # 943   இறவாமற் பிறவாமல் ( குருஜி # 204 - வாரியார் # 953 ) இறவாமற் பிறவாமல்  (அவிநாசி)  
Thiruppugazh # 946   பக்குவ ஆசார ( குருஜி # 252 - வாரியார் # 956 ) பக்குவ ஆசார  (திருப்புக்கொளியூர்)  
Thiruppugazh # 949   தீராப் பிணிதீர ( குருஜி # 291 - வாரியார் # 960 ) தீராப் பிணிதீர  (பேரூர்)  
Thiruppugazh # 967   முத்து நவரத்நமணி ( - வாரியார் # 975 ) முத்து நவரத்நமணி  (மதுரை)  
Thiruppugazh # 973   சுரும்பு அணி ( - வாரியார் # 983 ) சுரும்பு அணி  (இலஞ்சி)  
Thiruppugazh # 974   மாலையில் வந்து ( - வாரியார் # 984 ) மாலையில் வந்து  (இலஞ்சி)  
Thiruppugazh # 986   விரகற நோக்கியும் ( குருஜி # 212 - வாரியார் # 996 ) விரகற நோக்கியும்  (எழுகரைநாடு)  
Thiruppugazh # 998   நாலிரண்டிதழாலே ( குருஜி # 385 - வாரியார் # 1237 ) நாலிரண்டிதழாலே  (பொதுப்பாடல்கள்)  
Thiruppugazh # 1002   கடலை பயறொடு ( - வாரியார் # 1241 ) கடலை பயறொடு  (பொதுப்பாடல்கள்)  
Thiruppugazh # 1015   விடம் என அயில் ( - வாரியார் # 1254 ) விடம் என அயில்  (பொதுப்பாடல்கள்)  
Thiruppugazh # 1028   காதி மோதி ( குருஜி # 357 - வாரியார் # 1267 ) காதி மோதி  (பொதுப்பாடல்கள்)  
Thiruppugazh # 1034   தோலத்தியால் ( குருஜி # 382 - வாரியார் # 1273 ) தோலத்தியால்  (பொதுப்பாடல்கள்)  
Thiruppugazh # 1040   நாராலே தோல் ( குருஜி # 384 - வாரியார் # 1279 ) நாராலே தோல்  (பொதுப்பாடல்கள்)  
Thiruppugazh # 1041   மாதா வோடே ( - வாரியார் # 1280 ) மாதா வோடே  (பொதுப்பாடல்கள்)  
Thiruppugazh # 1045   அமல வாயு ( குருஜி # 327 - வாரியார் # 1284 ) அமல வாயு  (பொதுப்பாடல்கள்)  
Thiruppugazh # 1053   அதல சேடனாராட ( குருஜி # 325 - வாரியார் # 1292 ) அதல சேடனாராட  (பொதுப்பாடல்கள்)  
Thiruppugazh # 1078   கொடியன பிணி ( - வாரியார் # 1190 ) கொடியன பிணி  (பொதுப்பாடல்கள்)  
Thiruppugazh # 1177   புகரில் சேவல ( குருஜி # 399 - வாரியார் # 1056 ) புகரில் சேவல  (பொதுப்பாடல்கள்)  
Thiruppugazh # 1250   தீ ஊதை தாத்ரி ( - வாரியார் # 1153 ) தீ ஊதை தாத்ரி  (பொதுப்பாடல்கள்)  
Thiruppugazh # 1291   துள்ளு மதவேள் ( குருஜி # 380 - வாரியார் # 1092 ) துள்ளு மதவேள்  (பொதுப்பாடல்கள்)  
Thiruppugazh # 1296   நீலங்கொள் ( குருஜி # 391 - வாரியார் # 1097 ) நீலங்கொள்  (பொதுப்பாடல்கள்)  
Thiruppugazh # 1297   பட்டுப் படாத ( குருஜி # 394 - வாரியார் # 1098 ) பட்டுப் படாத  (பொதுப்பாடல்கள்)  
Thiruppugazh # 1306   கும்பகோணம் ( குருஜி # 322 - வாரியார் # 1002 ) கும்பகோணம்  (க்ஷேத்திரக் கோவை)  
Thiruppugazh # 1307   அகரமுமாகி ( குருஜி # 494 - வாரியார் # 441 ) அகரமுமாகி  (பழமுதிர்ச்சோலை)  
Thiruppugazh # 1309   காரணமதாக ( குருஜி # 497 - வாரியார் # 443 ) காரணமதாக  (பழமுதிர்ச்சோலை)  
Thiruppugazh # 1313   ஆசை நாலுசதுர ( குருஜி # 495 - வாரியார் # 447 ) ஆசை நாலுசதுர  (பழமுதிர்ச்சோலை)  
Thiruppugazh # 1315   சீர் சிறக்கும் மேனி ( - வாரியார் # 449 ) சீர் சிறக்கும் மேனி  (பழமுதிர்ச்சோலை)  
Thiruppugazh # 1316   துடிகொள் நோய் ( குருஜி # 500 - வாரியார் # 450 ) துடிகொள் நோய்  (பழமுதிர்ச்சோலை)  
Thiruppugazh # 1318   வாதினை அடர்ந்த ( குருஜி # 501 - வாரியார் # 439 ) வாதினை அடர்ந்த  (பழமுதிர்ச்சோலை)  
Thiruppugazh # 1328   ஏறுமயிலேறி ( ) ஏறுமயிலேறி  (திருவருணை)  
Thiruppugazh # 1 கைத்தல நிறைகனி   (விநாயகர்)  
தத்தன தனதன தத்தன தனதன
     தத்தன தனதன ...... தனதான

கைத்தல நிறைகனி யப்பமொ டவல்பொரி
     கப்பிய கரிமுக ...... னடிபேணிக்
கற்றிடு மடியவர் புத்தியி லுறைபவ
     கற்பக மெனவினை ...... கடிதேகும்
மத்தமு மதியமும் வைத்திடு மரன்மகன்
     மற்பொரு திரள்புய ...... மதயானை
மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
     மட்டவிழ் மலர்கொடு ...... பணிவேனே
முத்தமி ழடைவினை முற்படு கிரிதனில்
     முற்பட எழுதிய ...... முதல்வோனே
முப்புர மெரிசெய்த அச்சிவ னுறைரதம்
     அச்சது பொடிசெய்த ...... அதிதீரா
அத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும்
     அப்புன மதனிடை ...... இபமாகி
அக்குற மகளுட னச்சிறு முருகனை
     அக்கண மணமருள் ...... பெருமாளே.
கைத்தல நிறைகனி அப்ப மொடு அவல் பொரி
கப்பிய கரிமுகன் அடிபேணி
கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ
கற்பகம் எனவினை கடிதேகும்
மத்தமும் மதியமும் வைத்திடும் அரன்மகன்
மற்பொரு திரள்புய மதயானை
மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
மட்டு அவிழ் மலர்கொ(ண்)டு பணிவேனே
முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில்
முற்பட எழுதிய முதல்வோனே
முப்புரம் எரி செய்த அச்சிவன் உறை ரதம்
அச்சு அது பொடிசெய்த அதிதீரா
அத்துயர் அது கொ(ண்)டு சுப்பிரமணி படும்
அப்புனம் அதனிடை இபமாகி
அக்குற மகளுடன் அச்சிறு முருகனை
அக்கணம் மணம் அருள் பெருமாளே.
Audio/Video Link(s)

Back to Top

Thiruppugazh # 2 பக்கரை விசித்ரமணி   (விநாயகர்)  
தத்ததன தத்ததன தத்ததன தத்ததன
     தத்ததன தத்ததன ...... தனதான

பக்கரைவி சித்ரமணி பொற்கலணை யிட்டநடை
     பட்சியெனு முக்ரதுர ...... கமுநீபப்
பக்குவம லர்த்தொடையும் அக்குவடு பட்டொழிய
     பட்டுருவ விட்டருள்கை ...... வடிவேலும்
திக்கதும திக்கவரு குக்குடமும் ரட்சைதரு
     சிற்றடியு முற்றியப ...... னிருதோளும்
செய்ப்பதியும் வைத்துயர்தி ருப்புகழ்வி ருப்பமொடு
     செப்பெனஎ னக்கருள்கை ...... மறவேனே

இக்கவரை நற்கனிகள் சர்க்கரைப ருப்புடனெய்
     எட்பொரிய வற்றுவரை ...... இளநீர்வண்
டெச்சில்பய றப்பவகை பச்சரிசி பிட்டுவெள
     ரிப்பழமி டிப்பல்வகை ...... தனிமூலம்
மிக்கஅடி சிற்கடலை பட்சணமெ னக்கொளொரு
     விக்கிநச மர்த்தனெனும் ...... அருளாழி
வெற்பகுடி லச்சடில விற்பரம ரப்பரருள்
     வித்தகம ருப்புடைய ...... பெருமாளே.
பக்கரை விசித்திர மணி பொன் க(ல்)லணை இட்ட நடை
பட்சி எனும் உக்ர துரகமும் நீபப்
பக்குவ மலர்த் தொடையும் அக் குவடு பட்டு ஒழிய
பட்டு உருவ விட்டு அருள் கை வடி வேலும்
திக்கு அது மதிக்க வரு குக்குடமும் ரட்சை தரும்
சிற்று அடியும் முற்றிய பன்னிரு தோளும்
செய்ப்பதியும் வைத்து உயர் திருப்புகழ் விருப்பமொடு
செப்பு என எனக்கு அருள்கை மறவேனே
இக்கு அவரை நற்கனிகள் சர்க்கரை பருப்புடன் நெய்
எள் பொரி அவல் துவரை இள நீர் வண்டு
எச்சில் பயறு அப்ப வகை பச்சரிசி பிட்டு வெளரிப்
பழம் இடிப் பல்வகை தனி மூலம்
மிக்க அடிசில் கடலை பட்சணம் எனக் கொள்
ஒரு விக்கிந சமர்த்தன் என்னும் அருள் ஆழி
வெற்ப குடிலச் சடில வில் பரமர் அப்பர் அருள்
வித்தக மருப்பு உடைய பெருமாளே.
Audio/Video Link(s)

Back to Top

Thiruppugazh # 3 உம்பர் தரு   (விநாயகர்)  
தந்ததனத் தானதனத் ...... தனதான
     தந்ததனத் தானதனத் ...... தனதான
கணபதியே நீ வந்திடுவாய் குண நிதியே அருள் தந்திடுவாய்
கணபதியே நீ வந்திடுவாய் குண நிதியே அருள் தந்திடுவாய்

உம்பர்தருத் தேநுமணிக் ...... கசிவாகி
     ஒண்கடலிற் றேனமுதத் ...... துணர்வூறி
இன்பரசத் தேபருகிப் ...... பலகாலும்
     என்றனுயிர்க் காதரவுற் ...... றருள்வாயே
தம்பிதனக் காகவனத் ...... தணைவோனே
     தந்தைவலத் தாலருள்கைக் ...... கனியோனே
அன்பர்தமக் கானநிலைப் ...... பொருளோனே
     ஐந்துகரத் தானைமுகப் ...... பெருமாளே.
உம்பர் தரு தேனுமணி கசிவாகி
ஒண்கடலிற் தேனமுது உணர்வூறி
இன்பரசத்தே பருகிப் பலகாலும்
எந்தனுயிர்க்கு ஆதரவுற்று அருள்வாயே
தம்பிதனக்காக வனத்(து) அணைவோனே
தந்தை வலத்தால் அருள்கைக் கனியோனே
அன்பர்தமக் கான நிலைப் பொருளோனே
ஐந்து கரத்து ஆனைமுகப் பெருமாளே.
Audio/Video Link(s)

Back to Top

Thiruppugazh # 4 நினது திருவடி   (விநாயகர்)  
தனன தனதன தத்தன தத்தன
     தனன தனதன தத்தன தத்தன
          தனன தனதன தத்தன தத்தன ...... தனதான

நினது திருவடி சத்திம யிற்கொடி
     நினைவு கருதிடு புத்திகொ டுத்திட
          நிறைய அமுதுசெய் முப்பழ மப்பமு ...... நிகழ்பால்தேன்
நெடிய வளைமுறி இக்கொடு லட்டுகம்
     நிறவில் அரிசிப ருப்பவல் எட்பொரி
          நிகரில் இனிகத லிக்கனி வர்க்கமும் ...... இளநீரும்
மனது மகிழ்வொடு தொட்டக ரத்தொரு
     மகர சலநிதி வைத்தது திக்கர
          வளரு கரிமுக ஒற்றைம ருப்பனை ...... வலமாக
மருவு மலர்புனை தொத்திர சொற்கொடு
     வளர்கை குழைபிடி தொப்பண குட்டொடு
          வனச பரிபுர பொற்பத அர்ச்சனை ...... மறவேனே
தெனன தெனதென தெத்தென னப்பல
     சிறிய அறுபத மொய்த்துதி ரப்புனல்
          திரளும் உறுசதை பித்தநி ணக்குடல் ...... செறிமூளை
செரும உதரநி ரப்புசெ ருக்குடல்
     நிரைய அரவநி றைத்தக ளத்திடை
          திமித திமிதிமி மத்தளி டக்கைகள் ...... செகசேசே
எனவெ துகுதுகு துத்தென ஒத்துகள்
     துடிகள் இடிமிக ஒத்துமு ழக்கிட
          டிமுட டிமுடிமு டிட்டிமெ னத்தவில் ...... எழுமோசை
இகலி அலகைகள் கைப்பறை கொட்டிட
     இரண பயிரவி சுற்றுந டித்திட
          எதிரு நிசிசர ரைப்பெலி யிட்டருள் ...... பெருமாளே.
நினது திருவடி சத்தி மயில் கொடி
நினைவு கருதிடு புத்தி கொடுத்திட
நிறைய அமுது செய் முப்பழம் அப்பமு(ம்) நிகழ் பால் தேன்
நெடிய வளை முறி இக்கொடு லட்டுகம்
நிற வில் அரிசி பருப்பு அவல் எள் பொரி
நிகர் இல் இனி கதலி கனி வர்க்கமும் இளநீரும்
மனது மகிழ்வொடு தொட்ட கரத்து
ஒரு மகர சலநிதி வைத்த துதி கர
வளரு(ம்) கரி முக ஒற்றை மருப்பனை வலமாக
மருவு மலர் புனை தொத்திர சொல் கொடு
வளர் கை குழை பிடி தொப்பண(ம்) குட்டொடு
வனச பரி புர பொன் பத அர்ச்சனை மறவேனே
தெனன தெனதென தெத்தென அன பல
சிறிய அறு பதம் மொய்த்து உதிரப் புனல்
திரளும் உறு சதை பித்த(ம்) நிணக் குடல் செறி மூளை
செரும உதர நிரப்பு(ம்) செருக் குடல்
நிரைய அரவ நிறைத்த களத்து இடை
திமித திமிதிமி மத்தள(ம்) இடக்கைகள் செகசே சே
எனவெ துகு துகு துத்தென ஒத்துகள் துடிகள்
இடி மிக ஒத்து முழக்கிட
டிமுட டிமு டிமு டிட்டிம் எனத் தவில் எழும் ஓசை
இகலி அலகைகள் கைப்பறை கொட்டிட
இரண பயிரவி சுற்று நடித்திட
எதிரு நிசிசரரைப் பெலி இட்டு அருள் பெருமாளே.
Audio/Video Link(s)

Back to Top

Thiruppugazh # 5 விடமடைசு வேலை   (விநாயகர்)  
தனதனன தான தனதனன தான
     தனதனன தான ...... தனதான

விடமடைசு வேலை அமரர்படை சூலம்
     விசையன்விடு பாண ...... மெனவேதான்
விழியுமதி பார விதமுமுடை மாதர்
     வினையின்விளை வேதும் ...... அறியாதே
கடியுலவு பாயல் பகலிரவெ னாது
     கலவிதனில் மூழ்கி ...... வறிதாய
கயவனறி வீனன் இவனுமுயர் நீடு
     கழலிணைகள் சேர ...... அருள்வாயே
இடையர்சிறு பாலை திருடிகொடு போக
     இறைவன்மகள் வாய்மை ...... அறியாதே
இதயமிக வாடி யுடையபிளை நாத
     கணபதியெ னாம ...... முறைகூற
அடையலவர் ஆவி வெருவஅடி கூர
     அசலுமறி யாமல் ...... அவரோட
அகல்வதென டாசொல் எனவுமுடி சாட
     அறிவருளும் ஆனை ...... முகவோனே.
விடம் அடைசு வேலை அமரர் படை சூலம்
விசையன் விடு பாணம் எனவே தான்
விழியும் அதி பார விதமும் உடை மாதர்
வினையின் விளைவு ஏதும் அறியாதே
கடி உலவு பாயல் பகல் இரவு எனாது
கலவி தனில் மூழ்கி வறிதாய
கயவன் அறிவு ஈனன் இவனும் உயர் நீடு
கழல் இணைகள் சேர அருள்வாயே
இறைவன் மகள் வாய்மை அறியாதே
இதயம் மிக வாடி உடைய பி(ள்)ளை நாத
கணபதி எனு நாமம் முறை கூற
இடையர் சிறு பாலை திருடி கொ(ண்)டு போக
அடையலவர் ஆவி வெருவ அடி கூர
அசலும் அறியாமல் அவர் ஓட
அகல்வது எனடா சொல் எனவும் முடி சாட
அறிவு அருளும் ஆனை முகவோனே.
Audio/Video Link(s)

Back to Top

Thiruppugazh # 6 முத்தைத்தரு   (திருவருணை)  
தத்தத்தன தத்தத் தனதன
     தத்தத்தன தத்தத் தனதன
          தத்தத்தன தத்தத் தனதன ...... தனதான

முத்தைத்தரு பத்தித் திருநகை
     அத்திக்கிறை சத்திச் சரவண
          முத்திக்கொரு வித்துக் குருபர ...... எனவோதும்
முக்கட்பர மற்குச் சுருதியின்
     முற்பட்டது கற்பித் திருவரும்
          முப்பத்துமு வர்க்கத் தமரரும் ...... அடிபேணப்
பத்துத்தலை தத்தக் கணைதொடு
     ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
          பட்டப்பகல் வட்டத் திகிரியில் ...... இரவாகப்
பத்தற்கிர தத்தைக் கடவிய
     பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்
          பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ...... ஒருநாளே
தித்தித்தெய ஒத்தப் பரிபுர
     நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
          திக்கொட்கந டிக்கக் கழுகொடு ...... கழுதாடத்
திக்குப்பரி அட்டப் பயிரவர்
     தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
          சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக ...... எனவோதக்
கொத்துப்பறை கொட்டக் களமிசை
     குக்குக்குகு குக்குக் குகுகுகு
          குத்திப்புதை புக்குப் பிடியென ...... முதுகூகை
கொட்புற்றெழ நட்பற் றவுணரை
     வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி
          குத்துப்பட ஒத்துப் பொரவல ...... பெருமாளே.
முத்தைத்தரு பத்தித் திருநகை
அத்திக்கு இறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்துக் குருபர எனவோதும்
முக்கட்பரமற்கு சுருதியின்
முற்பட்டது கற்பித்து இருவரும்
முப்பத்துமுவர்க்கத்து அமரரும் அடிபேண
பத்துத்தலை தத்தக் கணைதொடு
ஒற்றைக்கிரி மத்தைப் பொருது
ஒரு பட்டப்பகல் வட்டத் திகிரியில் இரவாக
பத்தற்கு இரதத்தைக் கடவிய
பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்
பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ஒருநாளே
தித்தித்தெய ஒத்தப் பரிபுர
நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
திக்கொட்க நடிக்க கழுகொடு கழுதாட
திக்குப்பரி அட்டப் பயிரவர்
தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
சித்ரப்பவுரிக்கு த்ரிகடக எனவோத
கொத்துப்பறை கொட்ட களமிசை
குக்குக்குகு குக்குக் குகுகுகு
குத்திப்புதை புக்குப் பிடியென முதுகூகை
கொட்புற்றெழ நட்பற்ற அவுணரை
வெட்டிப்பலியிட்டுக் குலகிரி
குத்துப்பட ஒத்துப் பொரவல பெருமாளே.
Audio/Video Link(s)

Back to Top

Thiruppugazh # 8 உனைத் தினம்   (திருப்பரங்குன்றம்)  
தனத்த தந்தன தனதன தனதன
     தனத்த தந்தன தனதன தனதன
          தனத்த தந்தன தனதன தனதன ...... தனதான

உனைத்தி னந்தொழு திலனுன தியல்பினை
     உரைத்தி லன்பல மலர்கொடுன் அடியிணை
          உறப்ப ணிந்திலன் ஒருதவ மிலனுன ...... தருள்மாறா
உளத்து ளன்பினர் உறைவிடம் அறிகிலன்
     விருப்பொ டுன்சிக ரமும்வலம் வருகிலன்
          உவப்பொ டுன்புகழ் துதிசெய விழைகிலன் ...... மலைபோலே
கனைத்தெ ழும்பக டதுபிடர் மிசைவரு
     கறுத்த வெஞ்சின மறலிதன் உழையினர்
          கதித்த டர்ந்தெறி கயிறடு கதைகொடு ...... பொருபோதே
கலக்கு றுஞ்செயல் ஒழிவற அழிவுறு
     கருத்து நைந்தல முறுபொழு தளவைகொள்
          கணத்தில் என்பய மறமயில் முதுகினில் ...... வருவாயே
வினைத்த லந்தனில் அலகைகள் குதிகொள
     விழுக்கு டைந்துமெய் உகுதசை கழுகுண
          விரித்த குஞ்சியர் எனுமவு ணரைஅமர் ...... புரிவேலா
மிகுத்த பண்பயில் குயில்மொழி அழகிய
     கொடிச்சி குங்கும முலைமுக டுழுநறை
          விரைத்த சந்தன ம்ருகமத புயவரை ...... உடையோனே
தினத்தி னஞ்சதுர் மறைமுநி முறைகொடு
     புனற்சொ ரிந்தலர் பொதியவி ணவரொடு
          சினத்தை நிந்தனை செயுமுநி வரர்தொழ ...... மகிழ்வோனே
தெனத்தெ னந்தன எனவரி யளிநறை
     தெவிட்ட அன்பொடு பருகுயர் பொழில்திகழ்
          திருப் பரங்கிரி தனிலுறை சரவண ...... பெருமாளே.
உனைத்தி னந்தொழு திலன் உனதியல்பினை
உரைத்திலன் பல மலர்கொடுன் அடியிணை
உறப்ப ணிந்திலன் ஒருதவ மிலன் உனதருள்மாறா
உளத்து ளன்பினர் உறைவிடம் அறிகிலன்
விருப்பொடுன் சிகரமும்வலம் வருகிலன்
உவப்பொடுன்புகழ் துதிசெய விழைகிலன்
மலைபோலே கனைத்தெ ழும்பகடது பிடர் மிசைவரு
கறுத்த வெஞ்சின மறலிதன் உழையினர்
கதித்த டர்ந்தெறி கயிறு அடுகதைகொடு பொருபோதே
கலக்கு றுஞ்செயல் ஒழிவற அழிவுறு
கருத்து நைந்து அல முறுபொழுது அளவைகொள்
கணத்தில் என்பய மற மயில் முதுகினில் வருவாயே
வினைத்தலந்தனில் அலகைகள் குதிகொள
விழுக்கு டைந்துமெய் உகுதசை கழுகுண
விரித்த குஞ்சியர் எனும் அவுணரை அமர்புரிவேலா
மிகுத்த பண்பயில் குயில்மொழி அழகிய
கொடிச்சி குங்கும முலைமுகடு உழுநறை
விரைத்த சந்தன ம்ருகமத புயவரை உடையோனே
தினத்தினஞ் சதுர்மறைமுநி முறைகொடு
புனற்சொரிந்து அலர் பொதிய விணவரொடு
சினத்தை நிந்தனை செயுமுநி வரர்தொழ மகிழ்வோனே
தெனத்தெனந்தன என வரி யளிநறை
தெவிட்ட அன்பொடு பருகு உயர் பொழில்திகழ்
திருப் பரங்கிரி தனிலுறை சரவண பெருமாளே.
Audio/Video Link(s)

Back to Top

Thiruppugazh # 9 கருவடைந்து   (திருப்பரங்குன்றம்)  
தனனதந்த தத்தத்த தந்த
     தனனதந்த தத்தத்த தந்த
          தனனதந்த தத்தத்த தந்த ...... தனதான

கருவடைந்து பத்துற்ற திங்கள்
     வயிறிருந்து முற்றிப்ப யின்று
          கடையில்வந்து தித்துக்கு ழந்தை ...... வடிவாகிக்
கழுவியங்கெ டுத்துச்சு ரந்த
     முலையருந்து விக்கக்கி டந்து
          கதறியங்கை கொட்டித்த வழ்ந்து ...... நடமாடி
அரைவடங்கள் கட்டிச்ச தங்கை
     இடுகுதம்பை பொற்சுட்டி தண்டை
          அவையணிந்து முற்றிக்கி ளர்ந்து ...... வயதேறி
அரியபெண்கள் நட்பைப்பு ணர்ந்து
     பிணியுழன்று சுற்றித்தி ரிந்த
          தமையுமுன்க்ரு பைச்சித்தம் என்று ...... பெறுவேனோ
இரவிஇந்த்ரன் வெற்றிக்கு ரங்கி
     னரசரென்றும் ஒப்பற்ற உந்தி
          யிறைவன்எண்கி னக்கர்த்த னென்றும் ...... நெடுநீலன்
எரியதென்றும் ருத்ரற்சி றந்த
     அநுமனென்றும் ஒப்பற்ற அண்டர்
          எவரும்இந்த வர்க்கத்தில் வந்து ...... புனமேவ
அரியதன்ப டைக்கர்த்த ரென்று
     அசுரர்தங்கி ளைக்கட்டை வென்ற
          அரிமுகுந்தன் மெச்சுற்ற பண்பின் ...... மருகோனே
அயனையும்பு டைத்துச்சி னந்து
     உலகமும்ப டைத்துப்ப ரிந்து
          அருள்பரங்கி ரிக்குட்சி றந்த ...... பெருமாளே.
கருவடைந்து பத்துற்ற திங்கள்
வயிறிருந்து முற்றிப்ப யின்று
கடையில்வந்து தித்து குழந்தை வடிவாகி
கழுவியங்கெ டுத்து சுரந்த
முலையருந்து விக்க கிடந்து
கதறி அங்கை கொட்டித்தவழ்ந்து நடமாடி
அரைவடங்கள் கட்டி சதங்கை
இடுகுதம்பை பொற்சுட்டி தண்டை
அவையணிந்து முற்றிக் கிளர்ந்து வயதேறி
அரியபெண்கள் நட்பைப் புணர்ந்து
பிணியுழன்று சுற்றித் திரிந்த(து)
அமையும் உன் க்ருபைச்சித்தம் என்று பெறுவேனோ
இரவிஇந்த்ரன் வெற்றிக்கு குரங்கின
அரசரென்றும் ஒப்பற்ற உந்தி
இறைவன் எண் கினக்க அர்த்த என்றும்
நெடுநீலன் எரியதென்றும் ருத்ரற் சிறந்த
அநுமனென்றும் ஒப்பற்ற அண்டர்
எவரும் இந்த வர்க்கத்தில் வந்து புனமேவ
அரியதன் படைக்கு அர்த்தரென்று
அசுரர்தங்கி ளைக்கட்டை வென்ற
அரிமுகுந்தன் மெச்சுற்ற பண்பின் மருகோனே
அயனையும் புடைத்துச் சினந்து
உலகமும் படைத்து பரிந்து
அருள் பரங் கிரிக்குள் சிறந்த பெருமாளே.
Audio/Video Link(s)

Back to Top

Thiruppugazh # 11 கனகந்திரள்கின்ற   (திருப்பரங்குன்றம்)  
தனதந்தன தந்தன தந்தன
     தனதந்தன தந்தன தந்தன
          தனதந்தன தந்தன தந்தன ...... தனதான

கனகந்திரள் கின்றபெ ருங்கிரி
     தனில்வந்துத கன்தகன் என்றிடு
          கதிர்மிஞ்சிய செண்டைஎ றிந்திடு ...... கதியோனே
கடமிஞ்சிஅ நந்தவி தம்புணர்
     கவளந்தனை உண்டுவ ளர்ந்திடு
          கரியின்றுணை என்றுபி றந்திடு ...... முருகோனே
பனகந்துயில் கின்றதி றம்புனை
     கடல்முன்புக டைந்தப ரம்பரர்
          படரும்புயல் என்றவர் அன்புகொள் ...... மருகோனே
பலதுன்பம்உழன்றுக லங்கிய
     சிறியன்புலை யன்கொலை யன்புரி
          பவமின்றுக ழிந்திட வந்தருள் ...... புரிவாயே
அனகன்பெயர் நின்றுரு ளுந்திரி
     புரமுந்திரி வென்றிட இன்புடன்
          அழலுந்தந குந்திறல் கொண்டவர் ...... புதல்வோனே
அடல்வந்துமு ழங்கியி டும்பறை
     டுடுடுண்டுடு டுண்டுடு டுண்டென
          அதிர்கின்றிட அண்டநெ ரிந்திட ...... வருசூரர்
மனமுந்தழல் சென்றிட அன்றவர்
     உடலுங்குட லுங்கிழி கொண்டிட
          மயில்வென்றனில் வந்தரு ளுங்கன ...... பெரியோனே
மதியுங்கதி ருந்தட வும்படி
     உயர்கின்றவ னங்கள்பொ ருந்திய
          வளமொன்றுப ரங்கிரி வந்தருள் ...... பெருமாளே.
கனகந்திரள்கின்ற பெருங்கிரி
தனில்வந்து தகன்தகன் என்றிடு
கதிர் மிஞ்சிய செண்டை எறிந்திடு
கதியோனே
கடமிஞ்சி அநந்தவிதம் புணர்
கவளந்தனை உண்டு வளர்ந்திடு
கரியின்றுணை என்றுபிறந்திடு முருகோனே
பனகந்துயில்கின்ற திறம்புனை
கடல்முன்பு கடைந்த பரம்பரர்
படரும்புயல் என்றவர் அன்புகொள் மருகோனே
பலதுன்பம் உழன்று கலங்கிய
சிறியன்புலையன் கொலையன்
புரி பவமின்று கழிந்திட வந்தருள் புரிவாயே
அனகன்பெயர் நின்று
உருளுந்திரி புரமுந்திரி வென்றிட
இன்புடன் அழலுந்த
நகுந்திறல் கொண்டவர் புதல்வோனே
அடல்வந்து முழங்கியிடும்பறை
டுடுடுண்டுடு டுண்டுடு டுண்டென
அதிர்கின்றிட அண்டநெரிந்திட
வருசூரர் மனமும் தழல் சென்றிட
அன்றவர் உடலுங் குடலுங் கிழி கொண்டிட
மயில்வென்றனில் வந்தருளும்
கன பெரியோனே
மதியுங்கதிருந் தடவும்படி
உயர்கின்ற வனங்கள் பொருந்திய
வளமொன்றுப ரங்கிரி வந்தருள் பெருமாளே.

Back to Top

Thiruppugazh # 13 சந்ததம் பந்த   (திருப்பரங்குன்றம்)  
தந்தனந் தந்தத் ...... தனதான
     தந்தனந் தந்தத் ...... தனதான
வா வா முருகா வடிவேலா வள்ளி மணாளா வடிவேலா
வா வா முருகா வடிவேலா வள்ளி மணாளா வடிவேலா

சந்ததம் பந்தத் ...... தொடராலே
     சஞ்சலந் துஞ்சித் ...... திரியாதே
கந்தனென் றென்றுற் ...... றுனைநாளும்
     கண்டுகொண் டன்புற் ...... றிடுவேனோ
தந்தியின் கொம்பைப் ...... புணர்வோனே
     சங்கரன் பங்கிற் ...... சிவைபாலா
செந்திலங் கண்டிக் ...... கதிர்வேலா
     தென்பரங் குன்றிற் ...... பெருமாளே.
சந்ததம் பந்தத் தொடராலே
சஞ்சலந் துஞ்சித் திரியாதே
கந்தனென்று என்று உற்று உனைநாளும்
கண்டுகொண்டு அன்புற்றிடுவேனோ
தந்தியின் கொம்பை புணர்வோனே
சங்கரன் பங்கிற் சிவைபாலா
செந்திலங் கண்டிக் கதிர்வேலா
தென்பரங் குன்றிற் பெருமாளே.
Audio/Video Link(s)

Back to Top

Thiruppugazh # 15 தடக்கைப் பங்கயம்   (திருப்பரங்குன்றம்)  
தனத்தத் தந்தனந் தனத்தத் தந்தனந்
     தனத்தத் தந்தனந் ......தனதான

தடக்கைப் பங்கயம் கொடைக்குக் கொண்டல்தண்
     டமிழ்க்குத் தஞ்சமென் ...... றுலகோரைத்
தவித்துச் சென்றிரந் துளத்திற் புண்படுந்
     தளர்ச்சிப் பம்பரந் ...... தனையூசற்
கடத்தைத் துன்பமண் சடத்தைத் துஞ்சிடுங்
     கலத்தைப் பஞ்சஇந் ...... த்ரியவாழ்வைக்
கணத்திற் சென்றிடந் திருத்தித் தண்டையங்
     கழற்குத் தொண்டுகொண் ...... டருள்வாயே
படைக்கப் பங்கயன் துடைக்கச் சங்கரன்
     புரக்கக் கஞ்சைமன் ...... பணியாகப்
பணித்துத் தம்பயந் தணித்துச் சந்ததம்
     பரத்தைக் கொண்டிடுந் ...... தனிவேலா
குடக்குத் தென்பரம் பொருப்பிற் றங்குமங்
     குலத்திற் கங்கைதன் ...... சிறியோனே
குறப்பொற் கொம்பைமுன் புனத்திற் செங்கரங்
     குவித்துக் கும்பிடும் ...... பெருமாளே.
தடக்கைப் பங்கயம்
கொடைக்குக் கொண்டல்
தண்டமிழ்க்குத் தஞ்சமென்று
உலகோரைத் தவித்துச் சென்றிரந்து
உளத்திற் புண்படும்
தளர்ச்சிப் பம்பரந்தனை
ஊசற் கடத்தை
துன்பமண் சடத்தை
துஞ்சிடுங் கலத்தை
பஞ்சஇந்த்ரிய வாழ்வை
கணத்திற் சென்று இடம் திருத்தி
தண்டையங் கழற்கு
தொண்டுகொண் டருள்வாயே
படைக்கப் பங்கயன்
துடைக்கச் சங்கரன்
புரக்கக் கஞ்சைமன்
பணியாகப் பணித்து
தம்பயந் தணித்து
சந்ததம் பரத்தைக் கொண்டிடும்
தனிவேலா
குடக்குத் தென்பரம் பொருப்பில் தங்கும்
அங்குலத்திற் கங்கைதன் சிறியோனே
குறப்பொற் கொம்பைமுன்
புனத்திற் செங்கரங் குவித்துக் கும்பிடும் பெருமாளே.
Audio/Video Link(s)

Back to Top

Thiruppugazh # 28 அறிவழிய மயல்பெருக   (திருச்செந்தூர்)  
தனதனன தனதனன தனதனன தனதனன
     தனதனன தனதனன ...... தனதானா

அறிவழிய மயல்பெருக உரையுமற விழிசுழல
     அனல்-அவிய மலமொழுக ...... அகலாதே
அனையுமனை அருகிலுற வெருவியழ உறவும்-அழ
     அழலினிகர் மறலியெனை ...... அழையாதே
செறியுமிரு வினைகரண மருவுபுலன் ஒழியவுயர்
     திருவடியில் அணுகவர ...... அருள்வாயே
சிவனைநிகர் பொதியவரை முநிவன்-அக மகிழஇரு
     செவிகுளிர இனியதமிழ் ...... பகர்வோனே
நெறிதவறி அலரிமதி நடுவன்மக பதிமுளரி
     நிருதிநிதி பதிகரிய ...... வனமாலி
நிலவுமறை அவன்-இவர்கள் அலையஅர சுரிமைபுரி
     நிருதனுர மறஅயிலை ...... விடுவோனே
மறிபரசு கரம்-இலகு பரமன்-உமை இருவிழியும்
     மகிழமடிம் இசைவளரும் ...... இளையோனே
மதலைதவ ழும்-உததியிடை வருதரள மணிபுளின
     மறையவுயர் கரையிலுறை ...... பெருமாளே.
அறிவழிய மயல் பெருக உரையுமற விழிசுழல
அனலவிய மலமொழுக அகலாதே
அனையுமனை அருகிலுற வெருவியழ >உறவுமழ
அழலினிகர் மறலி யெனை அழையாதே
செறியுமிரு வினை கரண மருவுபுலன் ஒழிய உயர்
திருவடியில் அணுக வரம் அருள்வாயே
சிவனைநிகர் பொதியவரை முனிவன் அகமகிழ இரு
செவிகுளிர இனியதமிழ் பகர்வோனே
நெறிதவறி அலரிமதி நடுவன் மகபதி முளரி
நிருதி நிதிபதி கரிய வனமாலி
நிலவுமறை அவனிவர்கள் அலைய அரசுரிமை புரி
நிருதனுரம் அற அயிலை விடுவோனே
மறிபரசு கரமிலகு பரமனுமை இருவிழியு
மகிழமடி மிசை வளரும் இளையோனே
மதலைதவழ் உததியிடை வருதரள மணி புளின
மறையவுயர் கரையிலுறை பெருமாளே.
Audio/Video Link(s)

Back to Top

Thiruppugazh # 31 இயலிசையில் உசித   (திருச்செந்தூர்)  
தனதனன தனன தந்தத் ...... தனதான
     தனதனன தனன தந்தத் ...... தனதான
வேல் முருகா வேல் முருகா வேல் முருகா வேல்
வேல் முருகா வேல் முருகா வேல் முருகா வேல்

இயலிசையி லுசித வஞ்சிக் ...... கயர்வாகி
     இரவுபகல் மனது சிந்தித் ...... துழலாதே
உயர்கருணை புரியு மின்பக் ...... கடல்மூழ்கி
     உனையெனது ளறியு மன்பைத் ...... தருவாயே
மயில்தகர்க லிடைய ரந்தத் ...... தினைகாவல்
     வனசகுற மகளை வந்தித் ...... தணைவோனே
கயிலைமலை யனைய செந்திற் ...... பதிவாழ்வே
     கரிமுகவ னிளைய கந்தப் ...... பெருமாளே.
இயலிசையில் உசித வஞ்சிக்கு அயர்வாகி
இரவுபகல் மனது சிந்தித்து உழலாதே
உயர்கருணை புரியும் இன்பக்கடல் மூழ்கி
உனை எனதுள் அறியும் அன்பைத் தருவாயே
மயில் தகர்கல் இடையர் அந்தத் தினைகாவல்
வனசகுற மகளை வந்தித்து அணைவோனே
கயிலைமலை அனைய செந்தில் பதிவாழ்வே
கரிமுகவன் இளைய கந்தப் பெருமாளே.
Audio/Video Link(s)

Back to Top

Thiruppugazh # 36 ஏவினை நேர்விழி   (திருச்செந்தூர்)  
தானன தானன தானன தானன
     தானன தானன ...... தனதானா

ஏவினை நேர்விழி மாதரை மேவிய
     ஏதனை மூடனை ...... நெறிபேணா
ஈனனை வீணனை ஏடெழு தாமுழு
     ஏழையை மோழையை ...... அகலாநீள்
மாவினை மூடிய நோய்பிணி யாளனை
     வாய்மையி லாதனை ...... யிகழாதே
மாமணி நூபுர சீதள தாள்தனி
     வாழ்வுற ஈவது ...... மொருநாளே
நாவலர் பாடிய நூலிசை யால்வரு
     நாரத னார்புகல் ...... குறமாதை
நாடியெ கானிடை கூடிய சேவக
     நாயக மாமயி ...... லுடையோனே
தேவிம நோமணி ஆயிப ராபரை
     தேன்மொழி யாள்தரு ...... சிறியோனே
சேணுயர் சோலையி னீழலி லேதிகழ்
     சீரலை வாய்வரு ...... பெருமாளே.
ஏவினை நேர்விழி மாதரை மேவிய
ஏதனை மூடனை நெறி பேணா
ஈனனை ஏடு எழுதா முழு
ஏழையை மோழையை அகலா நீள்
மாவினை மூடிய நோய்பிணி யாளனை
வாய்மை இலாதனை இகழாதே
மாமணி நூபுர சேதள தாள் தனி
வாழ்வுற ஈவதும் ஒருநாளே
நாவலர் பாடிய நூலிசையால் வரு
நாரதனார் புகல் குற மாதை
நாடியெ கானிடை கூடிய சேவக
நாயக மாமயில் உடையோனே
தேவி மநோமணி ஆயி பராபரை
தேன் மொழியாள் தரு சிறியோனே
சேணுயர் சோலையின் நீழலி லேதிகழ்
சீரலை வாய் வரு பெருமாளே.
Audio/Video Link(s)

Back to Top

Thiruppugazh # 56 சங்கை தான் ஒன்று   (திருச்செந்தூர்)  
தந்தனா தந்தனா தந்தனா தந்தனா
     தந்தனா ...... தந்ததான

சங்கைதா னொன்றுதா னின்றியே நெஞ்சிலே
     சஞ்சலா ...... ரம்பமாயன்
சந்தொடே குங்குமா லங்க்ருதா டம்பரா
     சம்ப்ரமா ...... நந்தமாயன்
மங்கைமார் கொங்கைசே ரங்கமோ கங்களால்
     வம்பிலே ...... துன்புறாமே
வண்குகா நின்சொரூ பம்ப்ரகா சங்கொடே
     வந்துநீ ...... யன்பிலாள்வாய்
கங்கைசூ டும்பிரான் மைந்தனே அந்தனே
     கந்தனே ...... விஞ்சையூரா
கம்பியா திந்த்ரலோ கங்கள்கா வென்றவா
     கண்டலே ...... சன்சொல்வீரா
செங்கைவேல் வென்றிவேல் கொண்டுசூர் பொன்றவே
     சென்றுமோ ...... தும்ப்ரதாபா
செங்கண்மால் பங்கஜா னன்தொழா நந்தவேள்
     செந்தில்வாழ் ...... தம்பிரானே.
சங்கை தான் ஒன்று தான் இன்றியே நெஞ்சிலே சஞ்சல
ஆரம்ப மாயன்
சந்தொடே குங்கும அலங்க்ருத ஆடம்பர சம்ப்ரம ஆநந்த
மாயன்
மங்கைமார் கொங்கை சேர் அங்க மோகங்களால் வம்பிலே
துன்புறாமே
வண் குகா நின் சொரூபம் ப்ரகாசம் கொடே வந்து நீ அன்பில்
ஆள்வாய்
கங்கை சூடும் பிரான் மைந்தனே அந்தனே கந்தனே விஞ்சை
ஊரா
கம்பியாது இந்த்ர லோகங்கள் கா என்று அவ் ஆகண்டலேசன்
சொல் வீரா
செம் கை வேல் வென்றி வேல் கொண்டு சூர் பொன்றவே
சென்று மோதும் ப்ரதாபா
செம் கண் மால் பங்கஜான(ன)ன் தொழு ஆநந்த வேள்
செந்தில் வாழ் தம்பிரானே.
Audio/Video Link(s)

Back to Top

Thiruppugazh # 62 தண்டை அணி   (திருச்செந்தூர்)  
தந்ததன தந்தனந் தந்ததன தந்தனந்
     தந்ததன தந்தனந் ...... தந்ததானா

தண்டையணி வெண்டையங் கிண்கிணிச தங்கையுந்
     தண்கழல்சி லம்புடன் ...... கொஞ்சவேநின்
தந்தையினை முன்பரிந் தின்பவுரி கொண்டுநன்
     சந்தொடம ணைந்துநின் ...... றன்புபோலக்
கண்டுறக டம்புடன் சந்தமகு டங்களுங்
     கஞ்சமலர் செங்கையுஞ் ...... சிந்துவேலும்
கண்களுமு கங்களுஞ் சந்திரநி றங்களுங்
     கண்குளிர என்றன்முன் ...... சந்தியாவோ
புண்டரிகர் அண்டமுங் கொண்டபகி ரண்டமும்
     பொங்கியெழ வெங்களங் ...... கொண்டபோது
பொன்கிரியெ னஞ்சிறந் தெங்கினும்வ ளர்ந்துமுன்
     புண்டரிகர் தந்தையுஞ் ...... சிந்தைகூரக்
கொண்டநட னம்பதஞ் செந்திலிலும் என்றன்முன்
     கொஞ்சிநட னங்கொளுங் ...... கந்தவேளே
கொங்கைகுற மங்கையின் சந்தமணம் உண்டிடுங்
     கும்பமுநி கும்பிடுந் ...... தம்பிரானே.
தண்டை அணி
வெண்டையங் கிண் கிணி
சதங்கையுந்
தண்கழல் சிலம்புடன்
கொஞ்சவே
நின் தந்தையினை முன்பரிந்து
இன்பவுரி கொண்டு
நன் சந்தொடம் அணைந்து
நின்று அன்பு போல
கண்டுற
கடம்புடன் சந்த மகுடங்களும்
கஞ்ச மலர் செங்கையும்
சிந்துவேலும்
கண்களு முகங்களும்
சந்திர நிறங்களும்
கண் குளிர
என்றன்முன் சந்தியாவோ?
புண்டரிகர் அண்டமும்
கொண்ட பகிரண்டமும்
பொங்கி எழ
வெங்களங் கொண்ட போது
பொன்கிரி யெனஞ் சிறந்து
எங்கினும் வளர்ந்து
புண்டரிகர் தந்தையும்
சிந்தைகூர
கொண்ட நடனம் பதம்
செந்திலிலும்
என்றன் முன் கொஞ்சி நடனங் கொளும்
கந்தவேளே
கொங்கை குறமங்கையின் சந்த மணம்
உண்டிடும் (தம்பிரானே)
கும்பமுனி கும்பிடும் தம்பிரானே.
Audio/Video Link(s)

Back to Top

Thiruppugazh # 63 தந்த பசிதனை   (திருச்செந்தூர்)  
தந்த தனதனன தந்த தனதனன
     தந்த தனதனன ...... தனதானா

தந்த பசிதனைய றிந்து முலையமுது
     தந்து முதுகுதட ...... வியதாயார்
தம்பி பணிவிடைசெய் தொண்டர் பிரியமுள
     தங்கை மருகருயி ...... ரெனவேசார்
மைந்தர் மனைவியர்க டும்பு கடனுதவு
     மந்த வரிசைமொழி ...... பகர்கேடா
வந்து தலைநவிர விழ்ந்து தரைபுகம
     யங்க வொருமகிட ...... மிசையேறி
அந்த கனுமெனைய டர்ந்து வருகையினி
     லஞ்ச லெனவலிய ...... மயில்மேல்நீ
அந்த மறலியொடு கந்த மனிதனம
     தன்ப னெனமொழிய ...... வருவாயே
சிந்தை மகிழமலை மங்கை நகிலிணைகள்
     சிந்து பயமயிலு ...... மயில்வீரா
திங்க ளரவுநதி துன்று சடிலரருள்
     செந்தி னகரிலுறை ...... பெருமாளே.
தந்த பசிதனையறிந்து முலையமுது தந்து
முதுகு தடவிய தாயார்
தம்பி பணிவிடைசெய் தொண்டர்
பிரியமுள தங்கை மருகர் உயிரெனவே சார்
மைந்தர் மனைவியர்கடும்பு கடனுதவும்
அந்த வரிசைமொழி பகர்கேடா வந்து
தலைநவிர் அவிழ்ந்து தரைபுக மயங்க
ஒருமகிட மிசையேறி
அந்தகனும் எனைய டர்ந்து வருகையினில்
அஞ்ச லெனவலிய மயில்மேல்நீ
அந்த மறலியொடு உகந்த மனிதன்
நமதன்பன் எனமொழிய வருவாயே
சிந்தை மகிழ மலை மங்கை நகிலிணைகள்
சிந்து பயமயிலும் அயில்வீரா
திங்கள் அரவுநதி துன்று சடிலர் அருள்
செந்தி னகரிலுறை பெருமாளே.
Audio/Video Link(s)

Back to Top

Thiruppugazh # 64 தரிக்குங்கலை   (திருச்செந்தூர்)  
தனத்தந்தன தனத்தந்தன
     தனத்தந்தன ...... தனதானத்

தரிக்குங்கலை நெகிழ்க்கும்பர
     தவிக்குங்கொடி ...... மதனேவிற்
றகைக்குந்தனி திகைக்குஞ்சிறு
     தமிழ்த்தென்றலி ...... னுடனேநின்
றெரிக்கும்பிறை யெனப்புண்படு
     மெனப்புன்கவி ...... சிலபாடி
இருக்குஞ்சிலர் திருச்செந்திலை
     யுரைத்துய்ந்திட ...... அறியாரே
அரிக்குஞ்சதுர் மறைக்கும்பிர
     மனுக்குந்தெரி ...... வரிதான
அடிச்செஞ்சடை முடிக்கொண்டிடு
     மரற்கும்புரி ...... தவபாரக்
கிரிக்கும்பநன் முநிக்குங்க்ருபை
     வரிக்குங்குரு ...... பரவாழ்வே
கிளைக்குந்திற லரக்கன்கிளை
     கெடக்கன்றிய ...... பெருமாளே.
தரிக்குங்கலை நெகிழ்க்கும்
பரதவிக்கும்
கொடி மதனேவில் தகைக்கும்
தனி திகைக்கும்
சிறு தமிழ்த்தென்றலினுடனே
நின்றெரிக்கும்பிறை யெனப்புண்படும்
எனப்புன்கவி சிலபாடி
இருக்குஞ்சிலர்
திருச்செந்திலை உரைத்துய்ந்திட அறியாரே
அரிக்குஞ் சதுர் மறைக்கும்
பிரமனுக்குந் தெரிவரிதான அடி
செஞ்சடை முடிக்கொண்டிடும் அரற்கும்
புரி தவபாரக் கிரிக் கும்ப நன் முநிக்கும்
க்ருபை வரிக்கும் குருபரவாழ்வே
கிளைக்குந்திற லரக்கன்
கிளை கெடக்கன்றிய பெருமாளே.
Audio/Video Link(s)

Back to Top

Thiruppugazh # 68 தொந்தி சரிய   (திருச்செந்தூர்)  
தந்த தனன தனனா தனனதன
     தந்த தனன தனனா தனனதன
          தந்த தனன தனனா தனனதன ...... தனதான

தொந்தி சரிய மயிரே வெளிறநிரை
     தந்த மசைய முதுகே வளையஇதழ்
          தொங்க வொருகை தடிமேல் வரமகளிர் ...... நகையாடி
தொண்டு கிழவ னிவனா ரெனஇருமல்
     கிண்கி ணெனமு னுரையே குழறவிழி
          துஞ்சு குருடு படவே செவிடுபடு ...... செவியாகி
வந்த பிணியு மதிலே மிடையுமொரு
     பண்டி தனுமெ யுறுவே தனையுமிள
          மைந்த ருடைமை கடனே தெனமுடுக ...... துயர்மேவி
மங்கை யழுது விழவே யமபடர்கள்
     நின்று சருவ மலமே யொழுகவுயிர்
          மங்கு பொழுது கடிதே மயிலின்மிசை ...... வரவேணும்
எந்தை வருக ரகுநா யகவருக
     மைந்த வருக மகனே யினிவருக
          என்கண் வருக எனதா ருயிர்வருக ...... அபிராம
இங்கு வருக அரசே வருகமுலை
     யுண்க வருக மலர்சூ டிடவருக
          என்று பரிவி னொடுகோ சலைபுகல ...... வருமாயன்
சிந்தை மகிழு மருகா குறவரிள
     வஞ்சி மருவு மழகா அமரர்சிறை
          சிந்த அசுரர் கிளைவே ரொடுமடிய ...... அடுதீரா
திங்க ளரவு நதிசூ டியபரமர்
     தந்த குமர அலையே கரைபொருத
          செந்தி னகரி லினிதே மருவிவளர் ...... பெருமாளே.
தொந்தி சரிய மயிரே வெளிற
நிரை தந்தம் அசைய
முதுகே வளைய இதழ் தொங்க
ஒருகை தடிமேல் வர
மகளிர் நகையாடி தொண்டு கிழவன் இவனாரென
இருமல் கிண்கிணென முன்
உரையே குழற
விழிதுஞ்சு குருடு படவே
செவிடுபடு செவியாகி
வந்த பிணியும் அதிலே மிடையும்
ஒரு பண்டிதனும்
மெயுறு வேதனையும்
இளமைந்தர் உடைமை கடனேது எனமுடுக
துயர்மேவி மங்கை யழுது விழவே
யமபடர்கள்நின்று சருவ
மலமே யொழுக
உயிர் மங்கு பொழுது
கடிதே மயிலின்மிசை வரவேணும்
எந்தை வருக ரகுநா யகவருக
மைந்த வருக மகனே யினிவருக
என்கண் வருக எனதா ருயிர்வருக
அபிராம இங்கு வருக அரசே வருக
முலையுண்க வருக மலர்சூ டிடவருக
என்று பரிவி னொடுகோ சலைபுகல
வருமாயன் சிந்தை மகிழு மருகா
குறவரிள வஞ்சி மருவும் அழகா
அமரர்சிறை சிந்த
அசுரர் கிளை வேரொடுமடிய அடுதீரா
திங்கள் அரவு நதிசூ டியபரமர்
தந்த குமர
அலையே கரைபொருத செந்தி னகரில்
இனிதே மருவிவளர் பெருமாளே.
Audio/Video Link(s)

Back to Top

Thiruppugazh # 78 பரிமள களப   (திருச்செந்தூர்)  
தனதன தனதன தந்தத் தந்தத் ...... தனதானா
     தனதன தனதன தந்தத் தந்தத் ...... தனதானா

பரிமள களபசு கந்தச் சந்தத் ...... தனமானார்
     படையம படையென அந்திக் குங்கட் ...... கடையாலே
வரியளி நிரைமுரல் கொங்குக் கங்குற் ...... குழலாலே
     மறுகிடு மருளனை யின்புற் றன்புற் ...... றருள்வாயே
அரிதிரு மருகக டம்பத் தொங்கற் ...... றிருமார்பா
     அலைகுமு குமுவென வெம்பக் கண்டித் ...... தெறிவேலா
திரிபுர தகனரும் வந்திக் குஞ்சற் ...... குருநாதா
     ஜெயஜெய ஹரஹர செந்திற் கந்தப் ...... பெருமாளே.
பரிமள களப சுகந்த
சந்தத் தனமானார்
படை யமபடையென
அந்திக்கும் கண் கடையாலே
வரியளி நிரைமுரல்
கொங்குக் கங்குற் குழலாலே
மறுகிடு மருளனை
இன்புற்று அன்புற்று அருள்வாயே
அரிதிரு மருக
க டம்பத் தொங்கற் றிருமார்பா
அலைகுமு குமுவென வெம்ப
கண்டித்து எறிவேலா
திரிபுர தகனரும் வந்திக்குஞ் சற்குருநாதா
ஜெயஜெய ஹரஹர
செந்திற் கந்தப் பெருமாளே.
Audio/Video Link(s)

Back to Top

Thiruppugazh # 97 வந்து வந்து முன்   (திருச்செந்தூர்)  
தந்த தந்த தந்த தந்த
     தந்த தந்த தந்த தந்த
          தந்த தந்த தந்த தந்த ...... தனதான

வந்து வந்து முன்த வழ்ந்து
     வெஞ்சு கந்த யங்க நின்று
          மொஞ்சி மொஞ்சி யென்ற ழுங்கு ...... ழந்தையோடு
மண்ட லங்கு லுங்க அண்டர்
     விண்ட லம்பி ளந்தெ ழுந்த
          செம்பொன் மண்ட பங்க ளும்ப ...... யின்றவீடு
கொந்த ளைந்த குந்த ளந்த
     ழைந்து குங்கு மந்த யங்கு
          கொங்கை வஞ்சி தஞ்ச மென்று ...... மங்குகாலம்
கொங்க டம்பு கொங்கு பொங்கு
     பைங்க டம்பு தண்டை கொஞ்சு
          செஞ்ச தங்கை தங்கு பங்க ...... யங்கள்தாராய்
சந்த டர்ந்தெ ழுந்த ரும்பு
     மந்த ரஞ்செ ழுங்க ரும்பு
          கந்த ரம்பை செண்ப தங்கொள் ...... செந்தில்வாழ்வே
தண்க டங்க டந்து சென்று
     பண்க டங்க டர்ந்த இன்சொல்
          திண்பு னம்பு குந்து கண்டி ...... றைஞ்சுகோவே
அந்த கன்க லங்க வந்த
     கந்த ரங்க லந்த சிந்து
          ரஞ்சி றந்து வந்த லம்பு ...... ரிந்தமார்பா
அம்பு னம்பு குந்த நண்பர்
     சம்பு நன்பு ரந்த ரன்த
          ரம்ப லும்பர் கும்பர் நம்பு ...... தம்பிரானே.
வந்து வந்து முன்தவழ்ந்து
வெஞ்சுகந் தயங்க நின்று
மொஞ்சி மொஞ்சி யென்றழுங் குழந்தையோடு
மண்டலங் குலுங்க அண்டர் விண்தலம் பிளந்தெழுந்த
செம்பொன் மண்டபங்களும் பயின்றவீடு
கொந்து அளைந்த குந்தளம் தழைந்து
குங்குமம் தயங்கு கொங்கை வஞ்சி
தஞ்ச மென்று மங்குகாலம்
கொங்கு அடம்பு கொங்கு பொங்கு பைங்கடம்பு
தண்டை கொஞ்சு செஞ்சதங்கை தங்கு பங்கயங்கள்தாராய்
சந்து அடர்ந்தெழுந்த ரும்பு மந்தரம்
செழுங்கரும்பு கந்தரம்பை செண்பதங்கொள் செந்தில்
வாழ்வே
தண்கடம் கடந்து சென்று
பண்கள் தங்கு அடர்ந்த இன்சொல்
திண்புனம்புகுந்து கண்டு இறைஞ்சுகோவே
அந்தகன்கலங்க வந்த
கந்தரம் கலந்த சிந்துரம்
சிறந்து வந்து அலம் புரிந்தமார்பா
அம்புனம்புகுந்த நண்பர்
சம்பு நன்புரந்த ரன்தரம்பல் உம்பர் கும்பர் நம்பு தம்பிரானே.
Audio/Video Link(s)

Back to Top

Thiruppugazh # 100 விந்ததில் ஊறி   (திருச்செந்தூர்)  
தந்தன தான தந்தன தான
     தந்தன தான ...... தனதான

விந்ததி னூறி வந்தது காயம்
     வெந்தது கோடி ...... யினிமேலோ
விண்டுவி டாம லுன்பத மேவு
     விஞ்சையர் போல ...... அடியேனும்
வந்துவி நாச முன்கலி தீர
     வண்சிவ ஞான ...... வடிவாகி
வன்பத மேறி யென்களை யாற
     வந்தருள் பாத ...... மலர்தாராய்
எந்தனு ளேக செஞ்சுட ராகி
     யென்கணி லாடு ...... தழல்வேணி
எந்தையர் தேடு மன்பர்ச காய
     ரெங்கள்சு வாமி ...... யருள்பாலா
சுந்தர ஞான மென்குற மாது
     தன்றிரு மார்பி ...... லணைவோனே
சுந்தர மான செந்திலில் மேவு
     கந்தசு ரேசர் ...... பெருமாளே.
விந்ததி னூறி வந்தது காயம்
வெந்தது கோடி
இனிமேலோ விண்டுவி டாமல்
உன்பத மேவு விஞ்சையர் போல
அடியேனும் வந்து விநாச முன்கலி தீர
வண்சிவ ஞானவடிவாகி
வன்பதம் ஏறி யென்களை யாற
வந்தருள் பாத மலர்தாராய்
எந்தனு ளேக செஞ்சுட ராகி
யென்கணி லாடு தழல்வேணி
எந்தையர் தேடும் அன்பர்சகாயர்
எங்கள் சுவாமி யருள்பாலா
சுந்தர ஞான மென்குற மாதுதன்
திரு மார்பில் அணைவோனே
சுந்தர மான செந்திலில் மேவு
கந்தசு ரேசர் பெருமாளே.
Audio/Video Link(s)

Back to Top

Thiruppugazh # 101 விறல்மாரன் ஐந்து   (திருச்செந்தூர்)  
தனதான தந்த தனதான தந்த
     தனதான தந்த ...... தனதான

விறல்மார னைந்து மலர்வாளி சிந்த
     மிகவானி லிந்து ...... வெயில்காய
மிதவாடை வந்து தழல்போல வொன்ற
     வினைமாதர் தந்தம் ...... வசைகூற
குறவாணர் குன்றி லுறைபேதை கொண்ட
     கொடிதான துன்ப ...... மயல்தீர
குளிர்மாலை யின்க ணணிமாலை தந்து
     குறைதீர வந்து ...... குறுகாயோ
மறிமானு கந்த இறையோன்ம கிழ்ந்து
     வழிபாடு தந்த ...... மதியாளா
மலைமாவு சிந்த அலைவேலை யஞ்ச
     வடிவேலெ றிந்த ...... அதிதீரா
அறிவால றிந்து னிருதாளி றைஞ்சு
     மடியாரி டைஞ்சல் ...... களைவோனே
அழகான செம்பொன் மயில்மேல மர்ந்து
     அலைவாயு கந்த ...... பெருமாளே.
விறல்மாரன்
ஐந்து மலர்வாளி சிந்த
வானி லிந்து மிக வெயில் காய
மிதவாடை வந்து
தழல்போல வொன்ற
வினைமாதர் தந்தம் வசைகூற
குறவாணர் குன்றி லுறை
பேதை கொண்ட
கொடிதான துன்ப மயல்தீர
குளிர்மாலை யின்க ண்
அணிமாலை தந்து
குறைதீர வந்து குறுகாயோ
மறிமா னுகந்த இறையோன்
மகிழ்ந்து வழிபாடு தந்த மதியாளா
மலைமாவு சிந்த
அலைவேலை யஞ்ச
வடிவே லெறிந்த அதிதீரா
அறிவால் அறிந்து
உன்னிருதாள் இறைஞ்சும்
அடியார் இடைஞ்சல் களைவோனே
அழகான செம்பொன் மயில்மே லமர்ந்து
அலைவா யுகந்த பெருமாளே.
Audio/Video Link(s)

Back to Top

Thiruppugazh # 106 அதல விதல   (பழநி)  
தனன தனதனன தந்தத்த தந்ததன
     தனன தனதனன தந்தத்த தந்ததன
          தனன தனதனன தந்தத்த தந்ததன ...... தந்ததான

அதல விதலமுத லந்தத்த லங்களென
     அவனி யெனஅமரர் அண்டத்த கண்டமென
          அகில சலதியென எண்டிக்குள் விண்டுவென ...... அங்கிபாநு
அமுத கதிர்களென அந்தித்த மந்த்ரமென
     அறையு மறையெனஅ ருந்தத்து வங்களென
          அணுவி லணுவெனநி றைந்திட்டு நின்றதொரு ...... சம்ப்ரதாயம்
உதய மெழஇருள்வி டிந்தக்க ணந்தனிலி
     ருதய கமலமுகி ழங்கட்ட விழ்ந்துணர்வி
          லுணரு மநுபவம னம்பெற்றி டும்படியை ...... வந்துநீமுன்
உதவ இயலினியல் செஞ்சொற்ப்ர பந்தமென
     மதுர கவிகளில்ம னம்பற்றி ருந்துபுகழ்
          உரிய அடிமையுனை யன்றிப்ப்ர பஞ்சமதை ...... நம்புவேனோ
ததத ததததத தந்தத்த தந்ததத
     திதிதி திதிதிதிதி திந்தித்தி திந்திதிதி
          தகுகு தகுதகுகு தந்தத்த தந்தகுகு ...... திந்திதோதி
சகக சககெணக தந்தத்த குங்கெணக
     டிடிடி டிடிடிடிடி டிண்டிட்டி டிண்டிடிடி
          தகக தகதகக தந்தத்த தந்தகக ...... என்றுதாளம்
பதலை திமிலைதுடி தம்பட்ட மும்பெருக
     அகில நிசிசரர்ந டுங்கக்கொ டுங்கழுகு
          பரிய குடர்பழுவெ லும்பைப்பி டுங்கரண ...... துங்ககாளி
பவுரி யிடநரிபு லம்பப்ப ருந்திறகு
     கவரி யிடஇகலை வென்றுச்சி கண்டிதனில்
          பழநி மலையின்மிசை வந்துற்ற இந்திரர்கள் ...... தம்பிரானே.
அதலம் விதலம் முதல் அந்தத் தலங்கள் என
அவனி என அமரர் அண்டத்து அகண்டம் என
அகில சலதி என எண் திக்கு உள் விண்டு என
அங்கி பாநு அமுத கதிர்கள் என அந்தித்த மந்த்ரம் என
அறையும் மறை என அரும் தத்துவங்கள் என
அணுவில் அணு என நிறைந்திட்டு நின்றது ஒரு சம்ப்ரதாயம்
உதயம் எழ இருள் விடிந்து அக்கணம் தனில்
இருதய கமலம் முகிழம் கட்டு அவிழ்ந்து உணர்வில் உணரும்
அநுபவம் மனம் பெற்றிடும்படியை வந்து நீ முன் உதவ
இயலின் இயல் செம் சொல் ப்ரபந்தம் என
மதுர கவிகளில் மனம் பற்றிருந்து புகழ் உரிய
அடிமை உனை அன்றிப் ப்ரபஞ்சம் அதை நம்புவேனோ
ததத ததததத தந்தத்த தந்ததத
 திதிதி திதிதிதிதி திந்தித்தி திந்திதிதி
  தகுகு தகுதகுகு தந்தத்த தந்தகுகு திந்திதோதி
   சகக சககெணக தந்தத்த குங்கெணக
    டிடிடி டிடிடிடிடி டிண்டிட்டி டிண்டிடிடி
     தகக தகதகக தந்தத்த தந்தகக என்றுதாளம்
பதலை திமிலை துடி தம்பட்டமும் பெருக
அகில நிசிசரர் நடுங்கக் கொடும் கழுகு பரிய குடர் பழு
எலும்பைப் பிடுங்க
ரண துங்க காளி பவுரி இட நரி புலம்ப பருந்து இறகு கவரி
இட
இகலை வென்று சிகண்டி தனில் பழநி மலையின் மிசை
வந்து உற்ற இந்திரர்கள் தம்பிரானே.
Audio/Video Link(s)

Back to Top

Thiruppugazh # 107 அபகார நிந்தை   (பழநி)  
தனதான தந்தனத் ...... தனதான
     தனதான தந்தனத் ...... தனதான
முருகா முருகா வேல் முருகா
முருகா முருகா வேல் முருகா

அபகார நிந்தைபட் ...... டுழலாதே
     அறியாத வஞ்சரைக் ...... குறியாதே
உபதேச மந்திரப் ...... பொருளாலே
     உனைநானி னைந்தருட் ...... பெறுவேனோ
இபமாமு கன்தனக் ...... கிளையோனே
     இமவான்ம டந்தையுத் ...... தமிபாலா
ஜெபமாலை தந்தசற் ...... குருநாதா
     திருவாவி னன்குடிப் ...... பெருமாளே.
அபகார நிந்தைபட்டு
உழலாதே
அறியாத வஞ்சரை
குறியாதே
உபதேச மந்திரப் பொருளாலே
உனை நான் நினைந்து
அருள் பெறுவேனோ?
இபமா முகன்
தனக் கிளையோனே
இமவான் மடந்தை
உத்தமிபாலா
ஜெபமாலை தந்த
சற் குருநாதா
திருவாவினன் குடி பெருமாளே.
Audio/Video Link(s)

Back to Top

Thiruppugazh # 110 அவனிதனிலே   (பழநி)  
தனதனன தான தந்த தனதனன தான தந்த
     தனதனன தான தந்த ...... தனதான

அவனிதனி லேபி றந்து மதலையென வேத வழ்ந்து
     அழகுபெற வேந டந்து ...... இளைஞோனாய்
அருமழலை யேமி குந்து குதலைமொழி யேபு கன்று
     அதிவிதம தாய்வ ளர்ந்து ...... பதினாறாய்
சிவகலைக ளாக மங்கள் மிகவுமறை யோது மன்பர்
     திருவடிக ளேநி னைந்து ...... துதியாமல்
தெரிவையர்க ளாசை மிஞ்சி வெகுகவலை யாயு ழன்று
     திரியுமடி யேனை யுன்ற ...... னடிசேராய்
மவுனவுப தேச சம்பு மதியறுகு வேணி தும்பை
     மணிமுடியின் மீத ணிந்த ...... மகதேவர்
மனமகிழ வேய ணைந்து ஒருபுறம தாக வந்த
     மலைமகள்கு மார துங்க ...... வடிவேலா
பவனிவர வேயு கந்து மயிலின்மிசை யேதி கழ்ந்து
     படியதிர வேந டந்த ...... கழல்வீரா
பரமபத மேசெ றிந்த முருகனென வேயு கந்து
     பழநிமலை மேல மர்ந்த ...... பெருமாளே.
அவனிதனிலே பிறந்து
மதலை எனவே தவழ்ந்து
அழகு பெறவே நடந்து
இளைஞோனாய்
அருமழலையே மிகுந்து
குதலை மொழியே புகன்று
அதிவிதம் அதாய் வளர்ந்து
பதினாறாய்
சிவகலைகள் ஆகமங்கள்
மிகவுமறை ஓதும் அன்பர்
திருவடிகளே நினைந்து துதியாமல்
தெரிவையர்கள் ஆசை மிஞ்சி
வெகுகவலை யாய்உழன்று
திரியும் அடியேனை
உன்றன் அடிசேராய்
மவுன உபதேச சம்பு
மதியறுகு வேணி தும்பை
மணிமுடியின் மீதணிந்த மகதேவர்
மனமகிழவே அணைந்து
ஒருபுறமதாகவந்த
மலைமகள் குமார
துங்க வடிவேலா
பவனி வரவே உகந்து
மயிலின் மிசையே திகழ்ந்து
படி அதிரவே நடந்த
கழல்வீரா
பரம பதமே செறிந்த
முருகன் எனவே உகந்து
பழனிமலை மேல் அமர்ந்த பெருமாளே.
Audio/Video Link(s)

Back to Top

Thiruppugazh # 114 ஆறுமுகம் ஆறுமுகம்   (பழநி)  
தானதன தானதன தானதன தானதன
     தானதன தானதன ...... தந்ததான

ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம்
     ஆறுமுகம் ஆறுமுகம் ...... என்றுபூதி
ஆகமணி மாதவர்கள் பாதமலர் சூடுமடி
     யார்கள்பத மேதுணைய ...... தென்றுநாளும்
ஏறுமயில் வாகனகு காசரவ ணாஎனது
     ஈசஎன மானமுன ...... தென்றுமோதும்
ஏழைகள்வி யாகுலமி தேதெனவி னாவிலுனை
     யேவர்புகழ் வார்மறையு ...... மென்சொலாதோ
நீறுபடு மாழைபொரு மேனியவ வேலஅணி
     நீலமயில் வாகவுமை ...... தந்தவேளே
நீசர்கட மோடெனது தீவினையெ லாமடிய
     நீடுதனி வேல்விடும ...... டங்கல்வேலா
சீறிவரு மாறவுண னாவியுணு மானைமுக
     தேவர்துணை வாசிகரி ...... அண்டகூடஞ்
சேருமழ கார்பழநி வாழ்குமர னேபிரம
     தேவர்வர தாமுருக ...... தம்பிரானே.
ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம், ஆறுமுகம்
ஆறுமுகம் என்றுபூதி
ஆகம் அணி மாதவர்கள்
பாதமலர் சூடும் அடியார்கள்
பதமே துணைய தென்று
நாளும் ஏறுமயில் வாகன
குகா சரவணா எனது ஈச
எனமானம் உனதென்றும் ஓதும்
ஏழைகள் வியாகுலம்
இதேதென வினாவில்உனை
யேவர் புகழ்வார்
மறையும் என்சொலாதோ
நீறுபடு மாழைபொரு மேனியவ
வேல, அணி நீலமயில் வாக
உமை தந்தவேளே
நீசர்கள் த(ம்)மோடு
(எ)னது தீவினையெலா மடிய
நீடு தனி வேல் விடு
மடங்கல்வேலா
சீறிவரு மாறவுணன்
ஆவியுணும் ஆனைமுக தேவர் துணைவா
சிகரி அண்டகூடஞ்சேரும்
அழகார் பழனி வாழ் குமரனே
பிரம தேவர் வரதா
முருக தம்பிரானே.
Audio/Video Link(s)

Back to Top

Thiruppugazh # 134 கருவின் உருவாகி   (பழநி)  
தனதனன தான தந்த தனதனன தான தந்த
     தனதனன தான தந்த ...... தனதான

கருவினுரு வாகி வந்து வயதளவி லேவ ளர்ந்து
     கலைகள்பல வேதெ ரிந்து ...... மதனாலே
கரியகுழல் மாதர் தங்க ளடிசுவடு மார்பு தைந்து
     கவலைபெரி தாகி நொந்து ...... மிகவாடி
அரகரசி வாய வென்று தினமுநினை யாமல் நின்று
     அறுசமய நீதி யொன்று ...... மறியாமல்
அசனமிடு வார்கள் தங்கள் மனைகள்தலை வாசல் நின்று
     அநுதினமு நாண மின்றி ...... யழிவேனோ
உரகபட மேல்வ ளர்ந்த பெரியபெரு மாள ரங்கர்
     உலகளவு மால்ம கிழ்ந்த ...... மருகோனே
உபயகுல தீப துங்க விருதுகவி ராஜ சிங்க
     உறைபுகலி யூரி லன்று ...... வருவோனே
பரவைமனை மீதி லன்று ஒருபொழுது தூது சென்ற
     பரமனரு ளால்வ ளர்ந்த ...... குமரேசா
பகையசுரர் சேனை கொன்று அமரர்சிறை மீள வென்று
     பழநிமலை மீதில் நின்ற ...... பெருமாளே.
கருவினுரு வாகி வந்து
வயதளவிலே வளர்ந்து
கலைகள்பல வேதெ ரிந்து
மதனாலே
கரியகுழல் மாதர் தங்கள்
அடிசுவடு மார்பு தைந்து
கவலைபெரி தாகி நொந்து
மிகவாடி
அரஹரசி வாய வென்று
தினமும்நினை யாமல் நின்று
அறுசமய நீதி ஒன்றும்
அறியாமல்
அசனமிடு வார்கள் தங்கள்
மனைகள்தலை வாசல் நின்று
அநுதினமு நாணம் இன்றி
அழிவேனோ
உரகபட மேல் வளர்ந்த
பெரியபெரு மாள் அரங்கர்
உலகளவு மால்
மகிழ்ந்த மருகோனே
உபயகுல
தீப துங்க
விருதுகவி ராஜ சிங்க
உறைபுகலி யூரில்
அன்று வருவோனே
பரவை மனை மீதி லன்று
ஒருபொழுது தூது சென்ற
பரமனருளால்
வளர்ந்த குமரேசா
பகை அசுரர் சேனை கொன்று
அமரர்சிறை மீள வென்று
பழனிமலை மீதில் நின்ற பெருமாளே.
Audio/Video Link(s)

Back to Top

Thiruppugazh # 145 குரம்பை மலசலம்   (பழநி)  
தனந்த தனதன தனதன தனதன
     தனந்த தனதன தனதன தனதன
          தனந்த தனதன தனதன தனதன ...... தனதான

குரம்பை மலசலம் வழுவளு நிணமொடு
     எலும்பு அணிசரி தசையிரல் குடல்நெதி
          குலைந்த செயிர்மயிர் குருதியொ டிவைபல ...... கசுமாலக்
குடின்பு குதுமவ ரவர்கடு கொடுமையர்
     இடும்ப ரொருவழி யிணையிலர் கசடர்கள்
          குரங்க ரறிவிலர் நெறியிலர் மிருகணை ...... விறலான
சரம்ப ருறவனை நரகனை துரகனை
     இரங்கு கலியனை பரிவுறு சடலனை
          சவுந்த ரிகமுக சரவண பதமொடு ...... மயிலேறித்
தழைந்த சிவசுடர் தனையென மனதினில்
     அழுந்த வுரைசெய வருமுக நகையொளி
          தழைந்த நயனமு மிருமலர் சரணமு ...... மறவேனே
இரும்பை வகுளமொ டியைபல முகில்பொழி
     லுறைந்த குயிலளி யொலிபர விடமயி
          லிசைந்து நடமிடு மிணையிலி புலிநகர் ...... வளநாடா
இருண்ட குவடிடி பொடிபட வெகுமுக
     டெரிந்து மகரமொ டிசைகரி குமுறுக
          இரைந்த அசுரரொ டிபபரி யமபுரம் ...... விடும்வேளே
சிரம்பொ னயனொடு முநிவர்க ளமரர்கள்
     அரம்பை மகளிரொ டரகர சிவசிவ
          செயம்பு வெனநட மிடுபத மழகியர் ...... குருநாதா
செழும்ப வளவொளி நகைமுக மதிநகு
     சிறந்த குறமக ளிணைமுலை புதைபட
          செயங்கொ டணைகுக சிவமலை மருவிய ...... பெருமாளே.
குரம்பை மல(ம்) சலம் வழுவளு நிணமொடு
எலும்பு அணி சரி தசை இரல் குடல்
நெதி குலைந்த செயிர் மயிர் குருதியொடு
இவை பல கசுமாலம்
குடின் புகுதும் அவர்
அவர் கடு கொடுமையர்
இடும்பர் ஒரு வழி இணை இலர்
கசடர்கள் குரங்கர் அறிவிலர் நெறி இலர்
மிருகணை விறல் ஆனசரம்பர்
உறவனை நரகனை துரகனை
இரங்கு கலியனை பரிவு உறு சடலனை
சவுந்தரிக முக சரவண பதமொடு மயிலேறி
தழைந்த சிவ சுடர் தனை என் மனதினில்
அழுந்த உரை செய வரு முக நகை ஒளி
தழைந்த நயனமும் இரு மலர் சரணமும் மறவேனே
இரும்பை வகுளமொடு இயை பல முகில் பொழில்
உறைந்த குயில் அளி ஒலி பரவிட
மயில் இசைந்து நடமிடும் இணையிலி புலி நகர் வள நாடா
இருண்ட குவடு இடி பொடிபட
வெகு முகடு எரிந்து மகரம்
ஒள் திசை கரி குமுறுக
இரைந்த அசுரரொடு இப பரி யமபுரம் விடும் வேளே
சிரம் பொன் அயனொடு முநிவர்கள் அமரர்கள்
அரம்பை மகளிர் ஒடு அரகர சிவ சிவ செயம்பு என
நடம் இடு பதம் அழகியர் குரு நாதா
செழும் பவள ஒளி நகை முக மதி நகு
சிறந்த குற மகள் இணை முலை புதை பட
செயம் கொடு அணை குக
சிவ மலை மருவிய பெருமாளே.
Audio/Video Link(s)

Back to Top

Thiruppugazh # 156 சிவனார் மனங்குளிர   (பழநி)  
தனனா தனந்ததன தனனா தனந்ததன
     தனனா தனந்ததன ...... தனதான

சிவனார் மனங்குளிர உபதேச மந்த்ரமிரு
     செவிமீதி லும்பகர்செய் ...... குருநாதா
சிவகாம சுந்தரிதன் வரபால கந்தநின
     செயலேவி ரும்பியுளம் ...... நினையாமல்
அவமாயை கொண்டுலகில் விருதாவ லைந்துழலு
     மடியேனை அஞ்சலென ...... வரவேணும்
அறிவாக மும்பெருக இடரான துந்தொலைய
     அருள்ஞான இன்பமது ...... புரிவாயே
நவநீத முந்திருடி உரலோடெ யொன்றுமரி
     ரகுராமர் சிந்தைமகிழ் ...... மருகோனே
நவலோக முங்கைதொழு நிசதேவ லங்கிருத
     நலமான விஞ்சைகரு ...... விளைகோவே
தெவயானை யங்குறமின் மணவாள சம்ப்ரமுறு
     திறல்வீர மிஞ்சுகதிர் ...... வடிவேலா
திருவாவி னன்குடியில் வருவேள்ச வுந்தரிக
     செகமேல்மெய் கண்டவிறல் ...... பெருமாளே.
சிவனார் மனங்குளிர
உபதேச மந்த்ரம்
இருசெவிமீதி லும்பகர்செய்
குருநாதா
சிவகாம சுந்தரிதன்
வரபால கந்த
நினசெயலேவி ரும்பி
உளம் நினையாமல்
அவமாயை கொண்டு
உலகில் விருதாவ லைந்துழலும்
அடியேனை அஞ்சலென வரவேணும்
அறிவாக மும்பெருக
இடரான துந்தொலைய
அருள்ஞான இன்பமது
புரிவாயே
நவநீத முந்திருடி
உரலோடெ யொன்றுமரி
ரகுராமர் சிந்தைமகிழ் மருகோனே
நவலோக முங்கைதொழு
நிசதேவ லங்கிருத
நலமான விஞ்சைகரு விளைகோவே
தெவயானை யங்குறமின் மணவாள
சம்ப்ரமுறு திறல்வீர
மிஞ்சுகதிர் வடிவேலா
திருவாவி னன்குடியில் வருவேள்
சவுந்தரிக
செகமேல்மெய் கண்ட
விறல் பெருமாளே.
Audio/Video Link(s)

Back to Top

Thiruppugazh # 158 சீ உதிரம் எங்கும்   (பழநி)  
தானதன தந்த தானதன தந்த
     தானதன தந்த தானதன தந்த
          தானதன தந்த தானதன தந்த தனதான

சீயுதிர மெங்கு மேய்புழுநி ரம்பு
     மாயமல பிண்ட நோயிடுகு ரம்பை
          தீநரிகள் கங்கு காகமிவை தின்ப ...... தொழியாதே
தீதுளகு ணங்க ளேபெருகு தொந்த
     மாயையில்வ ளர்ந்த தோல்தசையெ லும்பு
          சேரிடுந ரம்பு தானிவைபொ திந்து ...... நிலைகாணா
ஆயதுந மன்கை போகவுயி ரந்த
     நாழிகையில் விஞ்ச ஊசிடுமி டும்பை
          யாகியவு டம்பு பேணிநிலை யென்று ...... மடவார்பால்
ஆசையைவி ரும்பி யேவிரக சிங்கி
     தானுமிக வந்து மேவிடம யங்கு
          மாழ்துயர்வி ழுந்து மாளுமெனை யன்பு ...... புரிவாயே
மாயைவல கஞ்ச னால்விடவெ குண்டு
     பார்முழுது மண்ட கோளமுந டுங்க
          வாய்பிளறி நின்று மேகநிகர் தன்கை ...... யதனாலே
வாரியுற அண்டி வீறொடுமு ழங்கு
     நீரைநுகர் கின்ற கோபமொடெ திர்ந்த
          வாரண இரண்டு கோடொடிய வென்ற ...... நெடியோனாம்
வேயினிசை கொண்டு கோநிரைபு ரந்து
     மேயல்புரி செங்கண் மால்மருக துங்க
          வேலகிர வுஞ்ச மால்வரையி டிந்து ...... பொடியாக
வேலைவிடு கந்த காவிரிவி ளங்கு
     கார்கலிசை வந்த சேவகன்வ ணங்க
          வீரைநகர் வந்து வாழ்பழநி யண்டர் ...... பெருமாளே.
சீ(ழ்) உதிரம் எங்கும் ஏய் புழு நிரம்பும்
மாய மல பிண்டம் நோய் இடு குரம்பை
தீ நரிகள் கங்கு காகம் இவை தின்பது ஒழியாதே
தீது உள குணங்களே பெருகு தொந்த
மாயையில் வளர்ந்த தோல் தசை எலும்பு சேரிடு
நரம்பு தான் இவை பொதிந்து நிலை காணா
ஆயது நமன் கை போக உயிர் அந்த நாழிகையில்
விஞ்ச ஊசிடும் இடும்பை ஆகிய உடம்பு பேணி
நிலை என்று மடவார் பால் ஆசையை விரும்பியே
விரக சிங்கி தானும் மிக வந்து மேவிட மயங்கும்
ஆழ் துயர் விழுந்து மாளும் எனை அன்பு புரிவாயே
மாயை வல கஞ்சனால் விட வெகுண்டு
பார் முழுதும் அண்ட கோளமும் நடுங்க
வாய் பிளறி நின்று
மேக நிகர் தன் கை அதனாலே
வாரி உற அண்டி வீறொடு முழங்கு
நீரை நுகர்கின்ற கோபமொடு எதிர்ந்த
வாரண இரண்டு கோடு ஓடிய வென்ற நெடியோனாம்
வேயின் இசை கொண்டு கோ நிரை புரந்து
மேயல் புரி செம் கண் மால் மருக
துங்கவேல கிரவுஞ்ச மால் வரை இடிந்து பொடியாக
வேலை விடு கந்த
காவிரி விளங்கு கார் கலிசை வந்த சேவகன் வணங்க
வீரை நகர் வந்து வாழ் பழநி அண்டர் பெருமாளே.
Audio/Video Link(s)

Back to Top

Thiruppugazh # 166 தலைவலி மருத்தீடு   (பழநி)  
தனதன தந்தான தானான தானதன
     தனதன தந்தான தானான தானதன
          தனதன தந்தான தானான தானதன ...... தனதான

தலைவலி மருத்தீடு காமாலை சோகைசுரம்
     விழிவலி வறட்சூலை காயாசு வாசம்வெகு
          சலமிகு விஷப்பாக மாயாவி காரபிணி ...... யணுகாதே
தலமிசை யதற்கான பேரோடு கூறியிது
     பரிகரி யெனக்காது கேளாது போலுமவர்
          சரியும்வ யதுக்கேது தாரீர்சொ லீரெனவும் ...... விதியாதே
உலைவற விருப்பாக நீள்காவின் வாசமலர்
     வகைவகை யெடுத்தேதொ டாமாலி காபரண
          முனதடி யினிற்சூட வேநாடு மாதவர்க ...... ளிருபாதம்
உளமது தரித்தேவி னாவோடு பாடியருள்
     வழிபட எனக்கேத யாவோடு தாளுதவ
          உரகம தெடுத்தாடு மேகார மீதின்மிசை ...... வரவேணும்
அலைகட லடைத்தேம காகோர ராவணனை
     மணிமுடி துணித்தாவி யேயான ஜானகியை
          அடலுட னழைத்தேகொள் மாயோனை மாமனெனு ...... மருகோனே
அறுகினை முடித்தோனை யாதார மானவனை
     மழுவுழை பிடித்தோனை மாகாளி நாணமுனம்
          அவைதனில் நடித்தோனை மாதாதை யேஎனவும் ...... வருவோனே
பலகலை படித்தோது பாவாணர் நாவிலுறை
     யிருசர ணவித்தார வேலாயு தாவுயர்செய்
          பரண்மிசை குறப்பாவை தோள்மேவ மோகமுறு ...... மணவாளா
பதுமவ யலிற்பூக மீதேவ ரால்கள் துயில்
     வருபுனல் பெருக்காறு காவேரி சூழவளர்
          பழநிவ ருகற்பூர கோலாக லாவமரர் ...... பெருமாளே.
தலைவலி மருத்தீடு காமாலை சோகைசுரம்
விழிவலி வறட்சூலை காயாசு வாசம்
வெகுசலமிகு விஷப்பாக மாயாவி காரபிணியணுகாதே
தலமிசை யதற்கான பேரோடு கூறி
யிது பரிகரி யெனக்காது கேளாது போலுமவர்
சரியும் வயதுக்கேது தாரீர்சொலீரெனவும் விதியாதே
உலைவற விருப்பாக நீள்காவின் வாசமலர்
வகைவகை யெடுத்தே தொடா மாலிகாபரணம்
உனதடியி னிற்சூடவேநாடு மாதவர்கள் இருபாதம்
உளமது தரித்தே வினாவோடு பாடியருள்
வழிபட எனக்கே தயாவோடு தாளுதவ
உரகமது எடுத்தாடு மேகார மீதின்மிசை வரவேணும்
அலைகடல் அடைத்தே மகாகோர ராவணனை
மணிமுடி துணித்து ஆவியேயான ஜானகியை
அடலுடன் அழைத்தேகொள் மாயோனை மாமனெனு
மருகோனே
அறுகினை முடித்தோனை யாதார மானவனை
மழுவுழை பிடித்தோனை மாகாளி நாணமுனம்
அவைதனில் நடித்தோனை மாதாதை யேஎனவும்
வருவோனே
பலகலை படித்தோது பாவாணர் நாவிலுறை
இருசரண வித்தார வேலாயுதா
உயர்செய் பரண்மிசை குறப்பாவை
தோள்மேவ மோகமுறு மணவாளா
பதுமவயலிற் பூகமீதே வரால்கள் துயில் வருபுனல்
பெருக்காறு
காவேரி சூழவளர் பழநிவரு
கற்பூர கோலாகலா அமரர் பெருமாளே.
Audio/Video Link(s)

Back to Top

Thiruppugazh # 168 திமிர உததி   (பழநி)  
தனன தனன தனன தனன
     தனன தனன ...... தனதான
வேல் முருகா வேல் வேல்; வேல் முருகா வேல் வேல்
வேல் முருகா வேல் வேல்; வேல் முருகா வேல் வேல்

திமிர வுததி யனைய நரக
     செனன மதனில் ...... விடுவாயேல்
செவிடு குருடு வடிவு குறைவு
     சிறிது மிடியு ...... மணுகாதே
அமரர் வடிவு மதிக குலமு
     மறிவு நிறையும் ...... வரவேநின்
அருள தருளி யெனையு மனதொ
     டடிமை கொளவும் ...... வரவேணும்
சமர முகவெ லசுரர் தமது
     தலைக ளுருள ...... மிகவேநீள்
சலதி யலற நெடிய பதலை
     தகர அயிலை ...... விடுவோனே
வெமர வணையி லினிது துயிலும்
     விழிகள் நளினன் ...... மருகோனே
மிடறு கரியர் குமர பழநி
     விரவு மமரர் ...... பெருமாளே.
திமிர வுததி யனைய
நரகசெனன மதனில்
விடுவாயேல்
செவிடு குருடு வடிவு குறைவு
சிறிது மிடியும் அணுகாதே
அமரர் வடிவும் அ திக குலமும்
அறிவு நிறையும் வரவே
நின் அருள தருளி
எனையு மனதோடு
அடிமை கொளவும் வரவேணும்
சமர முகவெல் அசுரா தமது
தலைக ளுருள
மிகவேநீள் சலதி யலற
நெடிய பதலை தகர
அயிலை விடுவோனே
வெமர வணையி லினிது துயிலும்
விழிகள் நளினன் மருகோனே
மிடறு கரியர் குமர
பழநி விரவு மமரர் பெருமாளே.
Audio/Video Link(s)

Back to Top

Thiruppugazh # 170 நாத விந்து   (பழநி)  
தான தந்தன தானா தனாதன
     தான தந்தன தானா தனாதன
          தான தந்தன தானா தனாதன ...... தனதான

நாத விந்துக லாதீ நமோநம
     வேத மந்த்ரசொ ரூபா நமோநம
          ஞான பண்டித ஸாமீ நமோநம ...... வெகுகோடி
நாம சம்புகு மாரா நமோநம
     போக அந்தரி பாலா நமோநம
          நாக பந்தம யூரா நமோநம ...... பரசூரர்
சேத தண்டவி நோதா நமோநம
     கீத கிண்கிணி பாதா நமோநம
          தீர சம்ப்ரம வீரா நமோநம ...... கிரிராஜ
தீப மங்கள ஜோதீ நமோநம
     தூய அம்பல லீலா நமோநம
          தேவ குஞ்சரி பாகா நமோநம ...... அருள்தாராய்
ஈத லும்பல கோலா லபூஜையும்
     ஓத லுங்குண ஆசா ரநீதியும்
          ஈர முங்குரு சீர்பா தசேவையு ...... மறவாத
ஏழ்த லம்புகழ் காவே ரியால்விளை
     சோழ மண்டல மீதே மநோகர
          ராஜ கெம்பிர நாடா ளுநாயக ...... வயலூரா
ஆத ரம்பயி லாரூ ரர்தோழமை
     சேர்தல் கொண்டவ ரோடே முனாளினில்
          ஆடல் வெம்பரி மீதே றிமாகயி ...... லையிலேகி
ஆதி யந்தவு லாவா சுபாடிய
     சேரர் கொங்குவை காவூர் நனாடதில்
          ஆவி னன்குடி வாழ்வா னதேவர்கள் ...... பெருமாளே.
நாத விந்துக லாதீ நமோநம
     வேத மந்த்ரசொ ரூபா நமோநம
          ஞான பண்டித ஸாமீ நமோநம ...... வெகுகோடி
நாம சம்புகு மாரா நமோநம
     போக அந்தரி பாலா நமோநம
          நாக பந்தம யூரா நமோநம ...... பரசூரர்
சேத தண்டவி நோதா நமோநம
     கீத கிண்கிணி பாதா நமோநம
          தீர சம்ப்ரம வீரா நமோநம ...... கிரிராஜ
தீப மங்கள ஜோதீ நமோநம
     தூய அம்பல லீலா நமோநம
          தேவ குஞ்சரி பாகா நமோநம ...... அருள்தாராய்
ஈத லும்பல கோலா லபூஜையும்
     ஓத லுங்குண ஆசா ரநீதியும்
          ஈர முங்குரு சீர்பா தசேவையு ...... மறவாத
ஏழ்த லம்புகழ் காவே ரியால்விளை
     சோழ மண்டல மீதே மநோகர
          ராஜ கெம்பிர நாடா ளுநாயக ...... வயலூரா
ஆத ரம்பயி லாரூ ரர்தோழமை
     சேர்தல் கொண்டவ ரோடே முனாளினில்
          ஆடல் வெம்பரி மீதே றிமாகயி ...... லையிலேகி
ஆதி யந்தவு லாவா சுபாடிய
     சேரர் கொங்குவை காவூர் நனாடதில்
          ஆவி னன்குடி வாழ்வா னதேவர்கள் ...... பெருமாளே.
Audio/Video Link(s)

Back to Top

Thiruppugazh # 179 போதகம் தரு   (பழநி)  
தான தந்தன தானா தனாதன
     தான தந்தன தானா தனாதன
          தான தந்தன தானா தனாதன ...... தனதான

போத கந்தரு கோவே நமோநம
நீதி தங்கிய தேவா நமோநம
பூத லந்தனை யாள்வாய் நமோநம ...... பணியாவும்
பூணு கின்றபி ரானே நமோநம
வேடர் தங்கொடி மாலா நமோநம
போத வன்புகழ் சாமீ நமோநம ...... அரிதான
வேத மந்திர ரூபா நமோநம
ஞான பண்டித நாதா நமோநம
வீர கண்டைகொள் தாளா நமோநம ...... அழகான
மேனி தங்கிய வேளே நமோநம
வான பைந்தொடி வாழ்வே நமோநம
வீறு கொண்டவி சாகா நமோநம ...... அருள்தாராய்
பாத கஞ்செறி சூரா திமாளவெ
கூர்மை கொண்டயி லாலே பொராடியெ
பார அண்டர்கள் வானா டுசேர்தர ...... அருள்வோனே
பாதி சந்திர னேசூ டும்வேணியர்
சூல சங்கர னார்கீ தநாயகர்
பார திண்புய மேசே ருசோதியர் ...... கயிலாயர்
ஆதி சங்கர னார்பா கமாதுமை
கோல அம்பிகை மாதா மநோமணி
ஆயி சுந்தரி தாயா னநாரணி ...... அபிராமி
ஆவல் கொண்டுவி றாலே சிராடவெ
கோம ளம்பல சூழ்கோ யில்மீறிய
ஆவி னன்குடி வாழ்வா னதேவர்கள் ...... பெருமாளே.
போத கந்தரு கோவே நமோநம
நீதி தங்கிய தேவா நமோநம
பூத லந்தனை யாள்வாய் நமோநம ...... பணியாவும்
பூணு கின்றபி ரானே நமோநம
வேடர் தங்கொடி மாலா நமோநம
போத வன்புகழ் சாமீ நமோநம ...... அரிதான
வேத மந்திர ரூபா நமோநம
ஞான பண்டித நாதா நமோநம
வீர கண்டைகொள் தாளா நமோநம ...... அழகான
மேனி தங்கிய வேளே நமோநம
வான பைந்தொடி வாழ்வே நமோநம
வீறு கொண்டவி சாகா நமோநம ...... அருள்தாராய்
பாத கஞ்செறி சூரா திமாளவெ
கூர்மை கொண்டயி லாலே பொராடியெ
பார அண்டர்கள் வானா டுசேர்தர ...... அருள்வோனே
பாதி சந்திர னேசூ டும்வேணியர்
சூல சங்கர னார்கீ தநாயகர்
பார திண்புய மேசே ருசோதியர் ...... கயிலாயர்
ஆதி சங்கர னார்பா கமாதுமை
கோல அம்பிகை மாதா மநோமணி
ஆயி சுந்தரி தாயா னநாரணி ...... அபிராமி
ஆவல் கொண்டுவி றாலே சிராடவெ
கோம ளம்பல சூழ்கோ யில்மீறிய
ஆவி னன்குடி வாழ்வா னதேவர்கள் ...... பெருமாளே.
Audio/Video Link(s)

Back to Top

Thiruppugazh # 182 மனக்கவலை ஏதும்   (பழநி)  
தனத்ததன தான தந்த தனத்ததன தான தந்த
     தனத்ததன தான தந்த ...... தனதான

மனக்கவலை யேது மின்றி உனக்கடிமை யேபு ரிந்து
     வகைக்குமநு நூல்வி தங்கள் ...... தவறாதே
வகைப்படிம னோர தங்கள் தொகைப்படியி னாலி லங்கி
     மயக்கமற வேத முங்கொள் ...... பொருள்நாடி
வினைக்குரிய பாத கங்கள் துகைத்துவகை யால்நி னைந்து
     மிகுத்தபொரு ளாக மங்கள் ...... முறையாலே
வெகுட்சிதனை யேது ரந்து களிப்பினுட னேந டந்து
     மிகுக்குமுனை யேவ ணங்க ...... வரவேணும்
மனத்தில்வரு வோனெ என்று னடைக்கலம தாக வந்து
     மலர்ப்பதம தேப ணிந்த ...... முநிவோர்கள்
வரர்க்குமிமை யோர்க ளென்பர் தமக்குமன மேயி ரங்கி
     மருட்டிவரு சூரை வென்ற ...... முனைவேலா
தினைப்புனமு னேந டந்து குறக்கொடியை யேம ணந்து
     செகத்தைமுழு தாள வந்த ...... பெரியோனே
செழித்தவள மேசி றந்த மலர்ப்பொழில்க ளேநி றைந்த
     திருப்பழநி வாழ வந்த ...... பெருமாளே.
மனக்கவலை யேது மின்றி
உனக்கடிமை யேபு ரிந்து
வகைக்கு மநு நூல் விதங்கள் தவறாதே
வகைப்படி மனோரதங்கள் தொகைப்படியினால் இலங்கி
மயக்கமற வேதமுங்கொள் பொருள்நாடி
வினைக்குரிய பாதகங்கள் துகைத்(து)
உவகை யால் நினைந்து
மிகுத்தபொருள் ஆகமங்கள் முறையாலே
வெகுட்சிதனையே துரந்து
களிப்பினுடனே நடந்து
மிகுக்கும் உனையே வணங்க
வரவேணும்
மனத்தில்வருவோனெ என்(று)
உன் அடைக்கலம் அதாக வந்து
மலர்ப்பதமதே பணிந்த முநிவோர்கள்
வரர்க்கும் இமையோர்க ளென்பர் தமக்கும்
மனமேயிரங்கி
மருட்டிவரு சூரை வென்ற முனைவேலா
தினைப்புனமுனே நடந்து
குறக்கொடியையே மணந்து
செகத்தை முழுதாள வந்த பெரியோனே
செழித்தவளமே சிறந்த
மலர்ப்பொழில்களே நிறைந்த
திருப்பழநி வாழவந்த பெருமாளே.
Audio/Video Link(s)

Back to Top

Thiruppugazh # 192 வசனமிக ஏற்றி   (பழநி)  
தனதனன தாத்த ...... தனதான
     தனதனன தாத்த ...... தனதான

வசனமிக வேற்றி ...... மறவாதே
     மனதுதுய ராற்றி ...... லுழலாதே
இசைபயில்ஷ டாக்ஷ ...... ரமதாலே
     இகபரசெள பாக்ய ...... மருள்வாயே
பசுபதிசி வாக்ய ...... முணர்வோனே
     பழநிமலை வீற்ற ...... ருளும்வேலா
அசுரர்கிளை வாட்டி ...... மிகவாழ
     அமரர்சிறை மீட்ட ...... பெருமாளே.
வசனமிக ஏற்றி
மறவாதே
மனது துயர் ஆற்றில்
உழலாதே
இசைபயில்
ஷடாட்சரம் அதாலே
இகபரசெள பாக்யம்
அருள்வாயே
பசுபதிசி வாக்யம்
உணர்வோனே
பழனிமலை வீற்(று)
அருளும் வேலா
அசுரர்கிளை வாட்டி
மிகவாழ அமரர்
சிறை மீட்ட பெருமாளே.
Audio/Video Link(s)

Back to Top

Thiruppugazh # 201 அவாமருவு   (சுவாமிமலை)  
தனாதன தனாதன தனாதன தனாதன
     தனாதனன தானந் ...... தனதானா

அவாமரு வினாவசு தைகாணும டவாரெனு
     மவார்கனலில் வாழ்வென் ...... றுணராதே
அராநுக ரவாதையு றுதேரைக திநாடும
     றிவாகியுள மால்கொண் ...... டதனாலே
சிவாயவெ னுநாமமொ ருகாலுநி னையாததி
     மிராகரனை வாவென் ...... றருள்வாயே
திரோதம லமாறும டியார்கள ருமாதவர்
     தியானமுறு பாதந் ...... தருவாயே
உவாவினி யகானுவி னிலாவும யில்வாகன
     முலாசமுட னேறுங் ...... கழலோனே
உலாவுத யபாநுச தகோடியு ருவானவொ
     ளிவாகுமயில் வேலங் ...... கையிலோனே
துவாதச புயாசல ஷடாநந வராசிவ
     சுதாஎயினர் மானன் ...... புடையோனே
சுராதிப திமாலய னுமாலொடு சலாமிடு
     சுவாமிமலை வாழும் ...... பெருமாளே.
அவாமருவு இ(ன்)னா
வசுதை
காணுமடவாரெனும்
அவார்கனலில் வாழ்வென்றுணராதே
அராநுகர வாதையுறு தேரைகதி
நாடும் அறிவாகி
உளம் மால்கொண்டு அதனாலே
சிவாயவெனு நாமமொருகாலும் நினையாத
திமிர ஆகரனை
வாவென்று அருள்வாயே
திரோத மலமாறும் அடியார்கள்
அருமாதவர் தியானமுறு
பாதந் தருவாயே
உவா இனிய கானுவில் நிலாவும்
மயில்வாகனம்
உலாசமுடன் ஏறுங் கழலோனே
உலா உதயபாநு சதகோடி உருவான
ஒளிவாகும் அயில் வேல் அங்கையிலோனே
துவாதச புயாசல
ஷடாநந வரா சிவசுதா
எயினர் மான் அன்புடையோனே
சுராதிபதி மால் அயனு மாலொடு
சலாமிடு
சுவாமிமலை வாழும் பெருமாளே.
Audio/Video Link(s)

Back to Top

Thiruppugazh # 203 ஆனாத பிருதி   (சுவாமிமலை)  
தானான தனதனத் தான தனதன
     தானான தனதனத் தான தனதன
          தானான தனதனத் தான தனதன ...... தந்ததான

ஆனாத பிருதிவிப் பாச நிகளமும்
     மாமாய விருளுமற் றேகி பவமென
          வாகாச பரமசிற் சோதி பரையைய ...... டைந்துளாமே
ஆறாறி னதிகமக் க்ராய மநுதினம்
     யோகீச ரெவருமெட் டாத பரதுரி
          யாதீத மகளமெப் போது முதயம ...... நந்தமோகம்
வானாதி சகலவிஸ்த் தார விபவரம்
     லோகாதி முடிவுமெய்ப் போத மலரயன்
          மாலீச ரெனுமவற் கேது விபுலம ...... சங்கையால்நீள்
மாளாத தனிசமுற் றாய தரியநி
     ராதார முலைவில்சற் சோதி நிருபமு
          மாறாத சுகவெளத் தாணு வுடனினி ...... தென்றுசேர்வேன்
நானாவி தகருவிச் சேனை வகைவகை
     சூழ்போது பிரபலச் சூரர் கொடுநெடு
          நாவாய்செல் கடலடைத் தேறி நிலைமையி ...... லங்கைசாய
நாலாறு மணிமுடிப் பாவி தனையடு
     சீராமன் மருகமைக் காவில் பரிமள
          நாவீசு வயலியக் கீசர் குமரக ...... டம்பவேலா
கானாளு மெயினர்தற் சாதி வளர்குற
     மானொடு மகிழ்கருத் தாகி மருடரு
          காதாடு முனதுகட் பாண மெனதுடை ...... நெஞ்சுபாய்தல்
காணாது மமதைவிட் டாவி யுயவருள்
     பாராயெ னுரைவெகுப் ப்ரீதி யிளையவ
          காவேரி வடகரைச் சாமி மலையுறை ...... தம்பிரானே.
ஆனாத பிருதிவிப் பாச நிகளமும்
மாமாய இருளும் அற்று
ஏகி பவமென
ஆகாசபரமசிற் சோதி
பரையை அடைந்து உளாமே
ஆறாறின் அதிகம் அக்க்ராயம்
அநுதினம் யோகீசர் எவரும் எட்டாத
பரதுரிய அதீதம் அகளம்
எப்போதும் உதயம் அநந்தமோகம்
வானாதி சகலவிஸ்த்தார விபவரம்
லோகாதி முடிவுமெய்ப் போத
மலரயன் மாலீச ரெனுமவற்கு
ஏது விபுலம்
அசங்கையால் நீள்
மாளாத தன் நிசமுற்றாயது
அரியநிராதாரம்
உலைவு இல்சற் சோதி
நிருபமும்
மாறாத சுகவெ(ள்)ளத் தாணுவுடன்
இனிதென்றுசேர்வேன்
நானாவித கருவிச் சேனை
வகைவகை சூழ்போது
பிரபலச் சூரர்
கொடுநெடு நாவாய்செல் கடலடைத்து
ஏறி நிலைமை யிலங்கைசாய
நாலாறு மணிமுடிப் பாவி தனை
அடு சீராமன் மருக
மைக் காவில் பரிமள நாவீசு வயலி
அக்கீசர் குமர கடம்ப வேலா
கானாளும் எயினர்தற் சாதி வளா
குறமானொடு மகிழ்கருத் தாகி
மருள் தரு காதாடும் உனது கண் பாணம்
எனதுடை நெஞ்சுபாய்தல் காணாது
மமதைவிட்டு ஆவி யுயவருள் பாராய்
எனுரைவெகுப் ப்ரீதி யிளையவ
காவேரி வடகரைச் சாமி மலையுறை தம்பிரானே.
Audio/Video Link(s)

Back to Top

Thiruppugazh # 212 காமியத் தழுந்தி   (சுவாமிமலை)  
தானனத் தனந்த ...... தனதான
     தானனத் தனந்த ...... தனதான

காமியத் தழுந்தி ...... யிளையாதே
     காலர்கைப் படிந்து ...... மடியாதே
ஓமெழுத் திலன்பு ...... மிகவூறி
     ஓவியத் திலந்த ...... மருள்வாயே
தூமமெய்க் கணிந்த ...... சுகலீலா
     சூரனைக் கடிந்த ...... கதிர்வேலா
ஏமவெற் புயர்ந்த ...... மயில்வீரா
     ஏரகத் தமர்ந்த ...... பெருமாளே.
காமியத் தழுந்தி
யிளையாதே
காலர்கைப் படிந்து
மடியாதே
ஓமெழுத்தி லன்பு
மிகவூறி
ஓவியத்தி லந்தம்
அருள்வாயே
தூமமெய்க் கணிந்த
சுகலீலா
சூரனைக் கடிந்த கதிர்வேலா
ஏமவெற் புயர்ந்த மயில்வீரா
ஏரகத் தமர்ந்த பெருமாளே.
Audio/Video Link(s)

Back to Top

Thiruppugazh # 216 சரண கமலாலயத்தில்   (சுவாமிமலை)  
தனதனன தான தத்த தனதனன தான தத்த
தனதனன தான தத்த ...... தனதான
வேல் முருகா வேல் வேல்; வேல் முருகா வேல் வேல்
வேல் முருகா வேல் வேல்; வேல் முருகா வேல் வேல்

சரணகம லால யத்தை அரைநிமிஷ நேர மட்டில்
     தவமுறைதி யானம் வைக்க ...... அறியாத
சடகசட மூட மட்டி பவவினையி லேச னித்த
     தமியன்மிடி யால்ம யக்க ...... முறுவேனோ
கருணைபுரி யாதி ருப்ப தெனகுறையி வேளை செப்பு
     கயிலைமலை நாதர் பெற்ற ...... குமரோனே
கடகபுய மீதி ரத்ந மணியணிபொன் மாலே செச்சை
     கமழுமண மார்க டப்ப ...... மணிவோனே
தருணமிதை யாமி குத்த கனமதுறு நீள்ச வுக்ய
     சகலசெல்வ யோக மிக்க ...... பெருவாழ்வு
தகைமைசிவ ஞான முத்தி பரகதியு நீகொ டுத்து
     தவிபுரிய வேணு நெய்த்த ...... வடிவேலா
அருணதள பாத பத்ம மதுநிதமு மேது திக்க
     அரியதமிழ் தான ளித்த ...... மயில்வீரா
அதிசயம நேக முற்ற பழநிமலை மீது தித்த
     அழகதிரு வேர கத்தின் ...... முருகோனே.
சரண கமலாலயத்தில்
அரை நிமிஷ நேர மட்டில்
தவமுறை தியானம் வைக்க அறியாத
ஜட கசட மூட மட்டி
பவ வினையிலே சனித்த
தமியன்
மடியால் மயக்கம் உறுவேனோ?
கருணை புரியாதிருப்ப தென குறை
இவேளை செப்பு
கயிலைமலை நாதர்பெற்ற குமரோனே
கடக புயமீதி
ரத்ன மணியணி பொன்மாலை செச்சை
கமழு மணமார் கடப்பம் அணிவோனே
தருணம் இதையா
மிகுத்த கனமதுறு நீள்சவுக்ய
சகல செல்வ யோகமிக்க பெருவாழ்வு
தகைமை சிவ ஞான முத்தி பரகதியு நீகொடுத்(து)
(உ)தவிபுரிய வேணு நெய்த்த வடிவேலா
அருணதள பாத பத்மம் அதுநிதமுமே துதிக்க
அரிய தமிழ் தானளித்த மயில்வீரா
அதிசயம் அனேகம் உற்ற பழனிமலை மீதுதித்த
அழக, திருவேரகத்தின் முருகோனே.
Audio/Video Link(s)

Back to Top

Thiruppugazh # 217 சுத்திய நரப்புடன்   (சுவாமிமலை)  
தத்ததன தத்ததன தத்ததன தத்ததன
     தத்ததன தத்ததன தத்ததன தத்ததன
          தத்ததன தத்ததன தத்ததன தத்ததன ...... தந்ததான

சுத்தியந ரப்புடனெ லுப்புறுத சைக்குடலொ
     டப்புடனி ணச்சளிவ லிப்புடனி ரத்தகுகை
          சுக்கிலம் விளைப்புழுவொ டக்கையும ழுக்குமயிர் ...... சங்குமூளை
துக்கம்விளை வித்தபிணை யற்கறைமு னைப்பெருகு
     குட்டமொடு விப்புருதி புற்றெழுதல் முட்டுவலி
          துச்சிபிள வைப்பொருமல் பித்தமொடு றக்கமிக ...... வங்கமூடே
எத்தனைநி னைப்பையும்வி ளைப்பையும யக்கமுற
     லெத்தனைச லிப்பொடுக லிப்பையுமி டற்பெருமை
          எத்தனைக சத்தையும லத்தையும டைத்தகுடில் ...... பஞ்சபூதம்
எத்தனைகு லுக்கையுமி னுக்கையும னக்கவலை
     யெத்தனைக வட்டையுந டக்கையுமு யிர்க்குழுமல்
          எத்தனைபி றப்பையுமி றப்பையுமெ டுத்துலகில் ...... மங்குவேனோ
தத்தனத னத்தனத னத்தனவெ னத்திமிலை
     யொத்தமுர சத்துடியி டக்கைமுழ வுப்பறைகள்
          சத்தமறை யத்தொகுதி யொத்தசெனி ரத்தவெள ...... மண்டியோடச்
சக்கிரிநெ ளிப்பஅவு ணப்பிணமி தப்பமரர்
     கைத்தலம்வி ரித்தரஹ ரச்சிவபி ழைத்தொமென
          சக்கிரகி ரிச்சுவர்கள் அக்கணமே பக்குவிட ...... வென்றவேலா
சித்தமதி லெத்தனைசெ கத்தலம்வி தித்துடன
     ழித்துகம லத்தனைம ணிக்குடுமி பற்றிமலர்
          சித்திரக ரத்தலம்வ லிப்பபல குட்டிநட ...... னங்கொள்வேளே
செட்டிவடி வைக்கொடுதி னைப்புனம திற்சிறுகு
     றப்பெணம ளிக்குள்மகிழ் செட்டிகுரு வெற்பிலுறை
          சிற்பரம ருக்கொருகு ருக்களென முத்தர்புகழ் ...... தம்பிரானே.
சுத்திய நரப்புடன் எலுப்பு உறு தசை குடல் ஒடு
அப்புடன் நிணம் சளி வலிப்பு உடன் இரத்த குகை
சுக்கிலம் விளை புழுவொடு அக்கையும் அழுக்கும்
மயிர் சங்கு மூளை துக்கம் விளைவித்த பிணை
அல் கறை முனை பெருகு குட்டமொடு
விப்புருதி புற்று எழுதல் முட்டு வலி
துச்சி பிளவை பொருமல் பித்தம் ஒடு உறக்கம் மிக
அங்கம் ஊடே எத்தனை நினைப்பையும் விளைப்பையும்
மயக்கம் உறல்
எத்தனை சலிப்பொடு கலிப்பையும் மிடற் பெருமை
எத்தனை க(கா)சத்தையும் மலத்தையும் அடைத்த குடில்
பஞ்ச பூதம்
எத்தனை குலுக்கையும் மினுக்கையும் மன கவலை
எத்தனை கவட்டையும் நடக்கையும் உயிர் குழுமல்
எத்தனை பிறப்பையும் இறப்பையும் எடுத்து உலகில்
மங்குவேனோ
தத்தனத னத்தனத னத்தனவெ னத்திமிலை
ஒத்த முரச(ம்) துடி இடக்கை முழவு பறைகள் சத்தம் அறைய
தொகுதி ஒத்த செனி ரத்த வெ(ள்)ள மண்டி ஓட
சக்கிரி நெளிப்ப அவுண பிணம் மிதப்ப
அமரர் கைத் தலம் விரித்து அர ஹர சிவ பிழைத்தோம் என
சக்கிரி கிரிச் சுவர்கள் அக்கணமே பக்கு விட வென்ற வேலா
சித்தம் அதில் எத்தனை செகத்தலம் விதித்து உடன் அழித்து
கமலத்தனை மணிக் குடுமி பற்றி
மலர்ச் சித்திர கர தலம் வலிப்ப பல குட்டி நடனம் கொள்
வேளே
செட்டி வடிவை கொடு தினைப் புனம் அதில் சிறு குறப்
பெண்
அமளிக்குள் மகிழ் செட்டி
குரு வெற்பில் உறை சிற் பரமருக்கு
ஒரு குருக்கள் என முத்தர் புகழ் தம்பிரானே.
Audio/Video Link(s)

Back to Top

Thiruppugazh # 222 நாசர்தங் கடை   (சுவாமிமலை)  
தானனந் தனதனன தனதனா தத்த தந்த ...... தனதான
     தானனந் தனதனன தனதனா தத்த தந்த ...... தனதான

நாசர்தங் கடையதனில் விரவிநான் மெத்த நொந்து ...... தடுமாறி
     ஞானமுங் கெடஅடைய வழுவியா ழத்த ழுந்தி ...... மெலியாதே
மாசகந் தொழுமுனது புகழினோர் சொற்ப கர்ந்து ...... சுகமேவி
     மாமணங் கமழுமிரு கமலபா தத்தை நின்று ...... பணிவேனோ
வாசகம் புகலவொரு பரமர்தா மெச்சு கின்ற ...... குருநாதா
     வாசவன் தருதிருவை யொருதெய்வா னைக்கி ரங்கு ...... மணவாளா
கீசகஞ் சுரர்தருவு மகிழுமா வத்தி சந்து ...... புடைசூழுங்
     கேசவன் பரவுகுரு மலையில்யோ கத்த மர்ந்த ...... பெருமாளே.
நாசர்தங் கடையதனில்
விரவிநான் மெத்த நொந்து
தடுமாறி ஞானமுங் கெட
அடைய வழுவி
ஆழத்து அழுந்தி மெலியாதே
மாசகந் தொழுமுனது புகழின்
ஓர் சொற் பகர்ந்து சுகமேவி
மாமணங் கமழுமிரு கமலபாதத்தை
நின்று பணிவேனோ
வாசகம் புகல
ஒரு பரமர்தாம் மெச்சுகின்ற குருநாதா
வாசவன் தருதிருவை
ஒருதெய்வானைக்கு இரங்கு மணவாளா
கீசகஞ் சுரர்தருவு மகிழுமா வத்தி சந்து புடைசூழும்
கேசவன் பரவுகுரு மலையில்
யோகத்தமர்ந்த பெருமாளே.
Audio/Video Link(s)

Back to Top

Thiruppugazh # 223 நாவேறு பா மணத்த   (சுவாமிமலை)  
தானான தான தத்த தானான தான தத்த
     தானான தான தத்த ...... தனதான

நாவேறு பாம ணத்த பாதார மேநி னைத்து
     நாலாறு நாலு பற்று ...... வகையான
நாலாரு மாக மத்தி னூலாய ஞான முத்தி
     நாடோறு நானு ரைத்த ...... நெறியாக
நீவேறெ னாதி ருக்க நான்வேறெ னாதி ருக்க
     நேராக வாழ்வ தற்கு ...... னருள்கூர
நீடார்ஷ டாத ரத்தின் மீதேப ராப ரத்தை
     நீகாணெ னாவ னைச்சொ ...... லருள்வாயே
சேவேறு மீசர் சுற்ற மாஞான போத புத்தி
     சீராக வேயு ரைத்த ...... குருநாதா
தேரார்கள் நாடு சுட்ட சூரார்கள் மாள வெட்டு
     தீராகு காகு றத்தி ...... மணவாளா
காவேரி நேர்வ டக்கி லேவாவி பூம ணத்த
     காவார்சு வாமி வெற்பின் ...... முருகோனே
கார்போலு மேனி பெற்ற மாகாளி வாலை சத்தி
     காமாரி வாமி பெற்ற ...... பெருமாளே.
நாவேறு பாம ணத்த
பாதாரமே நினைத்து
நாலாறு நாலு பற்று வகையான
நாலாரும் ஆகமத்தின்
நூலாய ஞான முத்தி
நாடோறு நானு ரைத்த நெறியாக
நீவேறெ னாதிருக்க
நான்வேறெ னாதிருக்க
நேராக வாழ்வதற்குன் அருள்கூர
நீடு ஆர் ஷடாதரத்தின் மீதே

Back to Top

Thiruppugazh # 228 பாதி மதிநதி   (சுவாமிமலை)  
தான தனதன தான தனதன
     தான தனதன ...... தனதான

பாதி மதிநதி போது மணிசடை
     நாத ரருளிய ...... குமரேசா
பாகு கனிமொழி மாது குறமகள்
     பாதம் வருடிய ...... மணவாளா
காது மொருவிழி காக முறஅருள்
     மாய னரிதிரு ...... மருகோனே
கால னெனையணு காம லுனதிரு
     காலில் வழிபட ...... அருள்வாயே
ஆதி யயனொடு தேவர் சுரருல
     காளும் வகையுறு ...... சிறைமீளா
ஆடு மயிலினி லேறி யமரர்கள்
     சூழ வரவரு ...... மிளையோனே
சூத மிகவளர் சோலை மருவுசு
     வாமி மலைதனி ...... லுறைவோனே
சூர னுடலற வாரி சுவறிட
     வேலை விடவல ...... பெருமாளே.
பாதி மதிநதி போதும்
அணிசடை நாத ரருளிய குமரேசா
பாகு கனிமொழி மாது
குறமகள்
பாதம் வருடிய மணவாளா
காது மொருவிழி காகமுற அருள்
மாயன் அரி திரு மருகோனே
காலனெனை யணுகாமல்
உனதிரு காலில் வழிபட அருள்வாயே
ஆதி யயனொடு தேவர்
சுரருலகு ஆளும் வகையுறு சிறைமீளா
ஆடு மயிலினி லேறி
அமரர்கள் சூழ வர
வரும் இளையோனே
சூத மிகவளர் சோலை
மருவு சுவாமிமலைதனில் உறைவோனே
சூர னுடலற
வாரி சுவறிட
வேலை விடவல பெருமாளே.
Audio/Video Link(s)

Back to Top

Thiruppugazh # 232 வாதமொடு சூலை   (சுவாமிமலை)  
தானதன தான தந்த தானதன தான தந்த
     தானதன தான தந்த ...... தனதான

வாதமொடு சூலை கண்ட மாலைகுலை நோவு சந்து
     மாவலிவி யாதி குன்ம ...... மொடுகாசம்
வாயுவுட னேப ரந்த தாமரைகள் பீன சம்பின்
     மாதர்தரு பூஷ ணங்க ...... ளெனவாகும்
பாதகவி யாதி புண்க ளானதுட னேதொ டர்ந்து
     பாயலைவி டாது மங்க ...... இவையால்நின்
பாதமல ரான தின்க ணேயமற வேம றந்து
     பாவமது பான முண்டு ...... வெறிமூடி
ஏதமுறு பாச பந்த மானவலை யோடு ழன்று
     ஈனமிகு சாதி யின்க ...... ணதிலேயான்
ஈடழித லான தின்பின் மூடனென வோது முன்புன்
     ஈரஅருள் கூர வந்து ...... எனையாள்வாய்
சூதமகிழ் பாலை கொன்றை தாதுவளர் சோலை துன்றி
     சூழமதில் தாவி மஞ்சி ...... னளவாகத்
தோரணநன் மாட மெங்கு நீடுகொடி யேத ழைந்த
     சுவாமிமலை வாழ வந்த ...... பெருமாளே.
வாதமொடு சூலை கண்டமாலை குலை நோவு சந்து மா வலி
வியாதி குன்மமொடு காசம்
வாயுவுடனே பரந்த தாமரைகள் பீனசம் பின் மாதர் தரு
பூஷணங்கள் என ஆகும்
பாதக வியாதி புண்கள் ஆனது உடனே தொடர்ந்து பாயலை
விடாது மங்க
இவையால் நின் பாத மலரானதின் கண் நேயம் அறவே
மறந்து பாவ மதுபானம் உண்டு வெறி மூடி
ஏதம் உறு பாச பந்தமான வலையோடு உழன்று ஈனம் மிகு
சாதியின் கண் அதிலே
நான் ஈடு அழிதல் ஆனதின் பின் மூடன் என ஓது முன்பு
உன் ஈர அருள் கூர வந்து எனை ஆள்வாய்
சூதம் மகிழ் பாலை கொன்றை தாது வளர் சோலை துன்றி
சூழும் மதில் தாவி மஞ்சின் அளவாக
தோரண நல் மாடம் எங்கும் நீடு கொடியே தழைந்த சுவாமி
மலை வாழ வந்த பெருமாளே.

Back to Top

Thiruppugazh # 239 அமைவுற்று அடைய   (திருத்தணிகை)  
தனனத் தனனத் தனனத் தனனத்
     தனனத் தனனத் ...... தனதான

அமைவுற் றடையப் பசியுற் றவருக்
     கமுதைப் பகிர்தற் ...... கிசையாதே
அடையப் பொருள்கைக் கிளமைக் கெனவைத்
     தருள்தப் பிமதத் ...... தயராதே
தமர்சுற் றியழப் பறைகொட் டியிடச்
     சமனெட் டுயிரைக் ...... கொடுபோகுஞ்
சரிரத் தினைநிற் குமெனக் கருதித்
     தளர்வுற் றொழியக் ...... கடவேனோ
இமயத் துமயிற் கொருபக் கமளித்
     தவருக் கிசையப் ...... புகல்வோனே
இரணத் தினிலெற் றுவரைக் கழுகுக்
     கிரையிட் டிடுவிக் ...... ரமவேலா
சமயச் சிலுகிட் டவரைத் தவறித்
     தவமுற் றவருட் ...... புகநாடும்
சடுபத் மமுகக் குகபுக் ககனத்
     தணியிற் குமரப் ...... பெருமாளே.
அடையப் பசியுற்றவருக்கு அமைவுற்று
அமுதைப் பகிர்தற்கு இசையாதே
அடையப் பொருள் இளமைக்கென கைவைத்து
அருள்தப்பி
மதத்து அயராதே
தமர் சுற்றியழப் பறைகொட்டியிட
சமன் நெட்டுயிரைக் கொடுபோகும்
சரிரத்தினை நிற்குமெனக் கருதி
தளர்வுற்று ஒழியக் கடவேனோ
இமயத்து மயிற்கு
ஒரு பக்கமளித்தவருக்கு
இசையப் புகல்வோனே
இரணத்தினில் எற்றுவரைக்
கழுகுக்கு இரையிட்டிடு விக்ரம வேலா
சமயச் சிலுகிட்டவரைத் தவறி
தவம் முற்ற அருள் புக நாடும்
சடுபத்ம முகக் குக
புக்க கனத் தணியிற் குமரப் பெருமாளே.

Back to Top

Thiruppugazh # 240 அரகர சிவன் அரி   (திருத்தணிகை)  
தனதன தனதன தனதன தனதன
தனதன தனதன ...... தனதான
முருகைய்யா முருகைய்யா முத்து குமரன் நீ ஐயா
முருகைய்யா முருகைய்யா முத்து குமரன் நீ ஐயா

அரகர சிவனரி அயனிவர் பரவிமு
     னறுமுக சரவண ...... பவனேயென்
றநுதின மொழிதர அசுரர்கள் கெடஅயில்
     அநலென எழவிடு ...... மதிவீரா
பரிபுர கமலம தடியிணை யடியவர்
     உளமதி லுறவருள் ...... முருகேசா
பகவதி வரைமகள் உமைதர வருகுக
     பரமன திருசெவி ...... களிகூர
உரைசெயு மொருமொழி பிரணவ முடிவதை
     உரைதரு குருபர ...... வுயர்வாய
உலகம னலகில வுயிர்களு மிமையவ
     ரவர்களு முறுவர ...... முநிவோரும்
பரவிமு னநுதின மனமகிழ் வுறவணி
     பணிதிகழ் தணிகையி ...... லுறைவோனே
பகர்தரு குறமகள் தருவமை வநிதையு
     மிருபுடை யுறவரு ...... பெருமாளே.
அரகர சிவன்
அரிஅயனிவர் பரவ
பரவி முன்
அறுமுக சரவண பவனே
என்று அநுதின மொழிதர
அசுரர்கள் கெட
அநலென எழ
அயில்விடும் அதிவீரா
பரிபுர கமலமது
அடியிணை யடியவர்
உளமதில் உற
அருள் முருகேசா
பகவதி வரைமகள் உமை
உமாதேவி தர வருகுக
பரமன திருசெவி களிகூர
உரைசெயு மொருமொழி
பிரணவ முடிவதை
உரைதரு குருபர
உயர்வாய உலக மன்
அலகில வுயிர்களும்
இமையவர் அவர்களும்
உறுவர முநிவோரும்
பரவிமுன்
அநுதின மனமகிழ் வுற
அணி பணிதிகழ்
தணிகையில் உறைவோனே
பகர்தரு குறமகள்
தருவமை வநிதையும்
இருபுடை யுறவரு பெருமாளே.
Audio/Video Link(s)

Back to Top

Thiruppugazh # 242 இருப்பவல் திருப்புகழ்   (திருத்தணிகை)  
தனத்தன தனத்தன தனத்தன தனத்தன
     தனத்தன தனத்தன ...... தனதான

இருப்பவல் திருப்புகழ் விருப்பொடு படிப்பவர்
     இடுக்கினை யறுத்திடு ...... மெனவோதும்
இசைத்தமிழ் நடத்தமி ழெனத்துறை விருப்புட
     னிலக்கண இலக்கிய ...... கவிநாலுந்
தரிப்பவ ருரைப்பவர் நினைப்பவர் மிகச்சக
     தலத்தினில் நவிற்றுத ...... லறியாதே
தனத்தினில் முகத்தினில் மனத்தினி லுருக்கிடு
     சமர்த்திகள் மயக்கினில் ...... விழலாமோ
கருப்புவில் வளைத்தணி மலர்க்கணை தொடுத்தியல்
     களிப்புட னொளித்தெய்த ...... மதவேளைக்
கருத்தினில் நினைத்தவ னெருப்பெழ நுதற்படு
     கனற்கணி லெரித்தவர் ...... கயிலாயப்
பொருப்பினி லிருப்பவர் பருப்பத வுமைக்கொரு
     புறத்தினை யளித்தவர் ...... தருசேயே
புயற்பொழில் வயற்பதி நயப்படு திருத்தணி
     பொருப்பினில் விருப்புறு ...... பெருமாளே.
இருப்பவல் திருப்புகழ்
விருப்பொடு படிப்பவர்
இடுக்கினை யறுத்திடும்
எனவோதும்
இசைத்தமிழ் நடத்தமிழென
துறை விருப்புடன்இலக்கண இலக்கிய
கவிநாலும்
தரிப்பவ ருரைப்பவர்
நினைப்பவர்
மிகச்சகதலத்தினில் நவிற்றுதல் அறியாதே
தனத்தினில் முகத்தினில் மனத்தினி லுருக்கிடு
சமர்த்திகள் மயக்கினில் விழலாமோ
கருப்புவில் வளைத்து
அணி மலர்க்கணை தொடுத்து
இயல் களிப்புடன் ஒளித்தெய்த
மதவேளை
கருத்தினில் நினைத்து
அவன் நெருப்பெழ
நுதற்படு கனற்கணி லெரித்தவர்
கயிலாயப் பொருப்பினி லிருப்பவர்
பருப்பத வுமைக்கொரு புறத்தினை யளித்தவர்
தருசேயே
புயற்பொழில் வயற்பதி
நயப்படு திருத்தணி பொருப்பினில்
விருப்புறு பெருமாளே.
Audio/Video Link(s)

Back to Top

Thiruppugazh # 243 இருமலு ரோக   (திருத்தணிகை)  
தனதன தான தனதன தான
     தனதன தான ...... தனதான

இருமலு ரோக முயலகன் வாத
     மெரிகுண நாசி ...... விடமேநீ
ரிழிவுவி டாத தலைவலி சோகை
     யெழுகள மாலை ...... யிவையோடே
பெருவயி றீளை யெரிகுலை சூலை
     பெருவலி வேறு ...... முளநோய்கள்
பிறவிகள் தோறு மெனைநலி யாத
     படியுன தாள்கள் ...... அருள்வாயே
வருமொரு கோடி யசுரர்ப தாதி
     மடியஅ நேக ...... இசைபாடி
வருமொரு கால வயிரவ ராட
     வடிசுடர் வேலை ...... விடுவோனே
தருநிழல் மீதி லுறைமுகி லூர்தி
     தருதிரு மாதின் ...... மணவாளா
சலமிடை பூவி னடுவினில் வீறு
     தணிமலை மேவு ...... பெருமாளே.
இருமலு ரோக முயலகன் வாதம்
எரிகுண நாசி விடமே நீரிழிவு
விடாத தலைவலி சோகை
எழுகள மாலை யிவையோடே
பெருவயி றீளை யெரிகுலை சூலை
பெருவலி வேறுமுளநோய்கள்
பிறவிகள் தோறு மெனைநலி யாதபடி
உன தாள்கள் அருள்வாயே
வருமொரு கோடி யசுரர்பதாதி
மடியஅ நேக இசைபாடி வருமொரு கால வயிரவ ராட
வடிசுடர் வேலை விடுவோனே
தருநிழல் மீதிலுறைமுகிலூர்தி
தருதிரு மாதின் மணவாளா
சலமிடை பூவின்நடுவினில் வீறு
தணிமலை மேவு பெருமாளே.
Audio/Video Link(s)

Back to Top

Thiruppugazh # 249 எனக்கென யாவும்   (திருத்தணிகை)  
தனத்தன தானம் தனத்தன தானம்
     தனத்தன தானம் ...... தனதான

எனக்கென யாவும் படைத்திட நாளும்
     இளைப்பொடு காலந் ...... தனிலோயா
எடுத்திடு காயந் தனைக்கொடு மாயும்
     இலச்சையி லாதென் ...... பவமாற
உனைப்பல நாளுந் திருப்புக ழாலும்
     உரைத்திடு வார்தங் ...... குளிமேவி
உணர்த்திய போதந் தனைப்பிரி யாதொண்
     பொலச்சர ணானுந் ...... தொழுவேனோ
வினைத்திற மோடன் றெதிர்த்திடும் வீரன்
     விழக்கொடு வேள்கொன் ...... றவனீயே
விளப்பென மேலென் றிடக்கய னாரும்
     விருப்புற வேதம் ...... புகல்வோனே
சினத்தொடு சூரன் தனைக்கொடு வேலின்
     சிரத்தினை மாறும் ...... முருகோனே
தினைப்புன மோவுங் குறக்கொடி யோடுந்
     திருத்தணி மேவும் ...... பெருமாளே.
எனக்கென யாவும் படைத்திட
நாளும் இளைப்பொடு
காலந் தனிலோயா
எடுத்திடு காயத் தனைக்கொடு
மாயும்
இலச்சை இலாதென் பவமாற
உனைப்பல நாளுந் திருப்புகழாலும் உரைத்திடுவார்
தங் குளிமேவி
உணர்த்திய போதந் தனைப்பிரியாது
ஒண்பொலச் சரண் நானுந் தொழுவேனோ?
வினைத்திறமோடு அன்று எதிர்த்திடும் வீரன்
விழக்கொடு வேள் கொன்றவன்
நீயே விளப்பென மேலென்றிட
அயனாரும் விருப்புற வேதம் புகல்வோனே
சினத்தொடு சூரன் தனைக்கொடு வேலின்
சிரத்தினை மாறும் முருகோனே
தினைப்புன மேவுங் குறக்கொடி யோடுந்
திருத்தணி மேவும் பெருமாளே.
Audio/Video Link(s)

Back to Top

Thiruppugazh # 269 சினத்தவர் முடிக்கும்   (திருத்தணிகை)  
தனத்தன தனத்தம் தனத்தன தனத்தம்
     தனத்தன தனத்தம் ...... தனதான

சினத்தவர் முடிக்கும் பகைத்தவர் குடிக்குஞ்
     செகுத்தவர் ருயிர்க்குஞ் ...... சினமாகச்
சிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும்
     திருப்புகழ் நெருப்பென் ...... றறிவோம்யாம்
நினைத்தது மளிக்கும் மனத்தையு முருக்கும்
     நிசிக்கரு வறுக்கும் ...... பிறவாமல்
நெருப்பையு மெரிக்கும் பொருப்பையு மிடிக்கும்
     நிறைப்புக ழுரைக்குஞ் ...... செயல்தாராய்
தனத்தன தனத்தந் திமித்திமி திமித்திந்
     தகுத்தகு தகுத்தந் ...... தனபேரி
தடுட்டுடு டுடுட்டுண் டெனத்துடி முழக்குந்
     தளத்துட னடக்குங் ...... கொடுசூரர்
சினத்தையு முடற்சங் கரித்தம லைமுற்றுஞ்
     சிரித்தெரி கொளுத்துங் ...... கதிர்வேலா
தினைக்கிரி குறப்பெண் தனத்தினில் சுகித்தெண்
     திருத்தணி யிருக்கும் ...... பெருமாளே.
சினத்தவர் முடிக்கும்
பகைத்தவர் குடிக்கும்
செகுத்தவர் உயிர்க்கும்
சினமாகச் சிரிப்பவர் தமக்கும்
பழிப்பவர் தமக்கும்
திருப்புகழ் நெருப்பென்று
அறிவோம்யாம்
நினைத்தது மளிக்கும்
மனத்தையு முருக்கும்
பிறவாமல்
நிசிக்கரு வறுக்கும்
நெருப்பையு மெரிக்கும்
பொருப்பையு மிடிக்கும்
நிறைப்புகழ்
உரைக்குஞ் செயல்தாராய்
தனத்தன தனத்தந்
திமித்திமி திமித்திந் தகுத்தகு தகுத்தந்தன
பேரி
தடுட்டுடு டுடுட்டுண் டென
துடி முழக்கும்
தளத்துட னடக்கும்
கொடுசூரர் சினத்தையும்
உடற்சங் கரித்தம லைமுற்றும்
சிரித்தெரி கொளுத்தும்
கதிர்வேலா
தினைக்கிரி குறப்பெண்
தனத்தினில் சுகித்து
எண் திருத்தணி யிருக்கும் பெருமாளே.
Audio/Video Link(s)

Back to Top

Thiruppugazh # 278 நினைத்தது எத்தனை   (திருத்தணிகை)  
தனத்த தத்தனத் ...... தனதான
     தனத்த தத்தனத் ...... தனதான

நினைத்த தெத்தனையிற் ...... றவறாமல்
     நிலைத்த புத்திதனைப் ...... பிரியாமற்
கனத்த தத்துவமுற் ...... றழியாமற்
     கதித்த நித்தியசித் ...... தருள்வாயே
மனித்தர் பத்தர்தமக் ...... கெளியோனே
     மதித்த முத்தமிழிற் ...... பெரியோனே
செனித்த புத்திரரிற் ...... சிறியோனே
     திருத்த ணிப்பதியிற் ...... பெருமாளே.
நினைத்தது எத்தனையில் தவறாமல்
நிலைத்த புத்திதனைப் பிரியாமல்
கனத்த தத்துவம் உற்றழியாமல்
கதித்த நித்தியசித்தருள்வாயே
மனித்தர் பத்தர்தமக்கு எளியோனே
மதித்த முத்தமிழில் பெரியோனே
செனித்த புத்திரரிற் சிறியோனே
திருத்தணிப்பதியிற் பெருமாளே.
Audio/Video Link(s)

Back to Top

Thiruppugazh # 280 பருத்தபற் சிரத்தினை   (திருத்தணிகை)  
தனத்தனத் தனத்தனத் தனத்தனத் தனத்தனத்
     தனத்தனத் தனத்தனத் ...... தனதான

பருத்தபற் சிரத்தினைக் குருத்திறற் கரத்தினைப்
     பரித்தவப் பதத்தினைப் ...... பரிவோடே
படைத்தபொய்க் குடத்தினைப் பழிப்பவத் திடத்தினைப்
     பசிக்குடற் கடத்தினைப் ...... பயமேவும்
பெருத்தபித் துருத்தனைக் கிருத்திமத் துருத்தியைப்
     பிணித்தமுக் குறத்தொடைப் ...... புலனாலும்
பிணித்தவிப் பிணிப்பையைப் பொறுத்தமிழ்ப் பிறப்பறக்
     குறிக்கருத் தெனக்களித் ...... தருள்வாயே
கருத்திலுற் றுரைத்தபத் தரைத்தொறுத் திருக்கரைக்
     கழித்தமெய்ப் பதத்தில்வைத் ...... திடுவீரா
கதித்தநற் றினைப்புனக் கதித்தநற் குறத்தியைக்
     கதித்தநற் றிருப்புயத் ...... தணைவோனே
செருத்தெறுத் தெதிர்த்தமுப் புரத்துரத் தரக்கரைச்
     சிரித்தெரித் தநித்தர்பொற் ...... குமரேசா
சிறப்புறப் பிரித்தறத் திறத்தமிழ்க் குயர்த்திசைச்
     சிறப்புடைத் திருத்தணிப் ...... பெருமாளே.
பருத்தபற் சிரத்தினைக் குருத்திறற் கரத்தினை
பரித்தவப் பதத்தினை
பரிவோடே படைத்தபொய்க் குடத்தினைப் பழிப்பவத்
திடத்தினை
பசிக்குடற் கடத்தினைப் பயமேவும் பெருத்தபித் துருத்தனை
கிருத்திமத் துருத்தியை
பிணித்தமுக் குறத்தொடு ஐப் புலனாலும்
பிணித்தவிப் பிணிப்பையை பொறுத்து அமிழ்ப் பிறப்பறக்
குறிக்கருத்து எனக்களித்தருள்வாயே
கருத்திலுற் றுரைத்தபத்தரை
தொறுத் திருக்கரைக் கழித்த மெய்ப் பதத்தில்வைத்திடுவீரா
கதித்தநற் றினைப்புனக் கதித்தநற் குறத்தியை
கதித்தநற் றிருப்புயத்தணைவோனே
செருத்தெறுத் தெதிர்த்த முப் புரத்து உரத்தரக்கரை
சிரித்தெரித்த நித்தர்பொற் குமரேசா
சிறப்புறப் பிரித்தறத் திறத்தமிழ்க் குயர்த்திசை
சிறப்புடைத் திருத்தணிப் பெருமாளே.

Back to Top

Thiruppugazh # 314 புன மடந்தைக்கு   (காஞ்சீபுரம்)  
தனதனந் தத்தத் தத்தன தத்தம்
     தனதனந் தத்தத் தத்தன தத்தம்
          தனதனந் தத்தத் தத்தன தத்தம் ...... தனதான

புனமடந் தைக்குத் தக்கபு யத்தன்
     குமரனென் றெத்திப் பத்தர்து திக்கும்
          பொருளைநெஞ் சத்துக் கற்பனை முற்றும் ...... பிறிதேதும்
புகலுமெண் பத்தெட் டெட்டியல் தத்வம்
     சகலமும் பற்றிப் பற்றற நிற்கும்
          பொதுவையென் றொக்கத் தக்கதொ ரத்தந் ...... தனைநாளும்
சினமுடன் தர்க்கித் துச்சிலு கிக்கொண்
     டறுவருங் கைக்குத் திட்டொரு வர்க்குந்
          தெரிவரும் சத்யத் தைத்தெரி சித்துன் ...... செயல்பாடித்
திசைதொறுங் கற்பிக் கைக்கினி யற்பந்
     திருவுளம் பற்றிச் செச்சைம ணக்குஞ்
          சிறுசதங் கைப்பொற் பத்மமெ னக்கென் ...... றருள்வாயே
கனபெருந் தொப்பைக் கெட்பொரி யப்பம்
     கனிகிழங் கிக்குச் சர்க்கரை முக்கண்
          கடலைகண் டப்பிப் பிட்டொடு மொக்கும் ...... திருவாயன்
கவளதுங் கக்கைக் கற்பக முக்கண்
     திகழுநங் கொற்றத் தொற்றைம ருப்பன்
          கரிமுகன் சித்ரப் பொற்புகர் வெற்பன் ...... றனையீனும்
பனவியொன் றெட்டுச் சக்ரத லப்பெண்
     கவுரிசெம் பொற்பட் டுத்தரி யப்பெண்
          பழயஅண் டத்தைப் பெற்றம டப்பெண் ...... பணிவாரைப்
பவதரங் கத்தைத் தப்பநி றுத்தும்
     பவதிகம் பர்க்குப் புக்கவள் பக்கம்
          பயில்வரம் பெற்றுக் கச்சியில் நிற்கும் ...... பெருமாளே.
புன மடந்தைக்கு தக்க புயத்தன்
குமரன் என்று எத்திப் பத்தர் துதிக்கும் பொருளை
நெஞ்சத்து கற்பனை முற்றும் பிறிது ஏதும்
புகலும் எண்பத்து எட்டு எட்டு இயல் தத்(து)வம் சகலமும்
பற்றி பற்று அற நிற்கும் பொதுவை
என்று ஒக்கத் தக்கது ஓர் அத்தம் தனை நாளும்
சினமுடன் தர்க்கித்துச் சிலுக்கிக் கொண்டு
அறுவரும் கைக்குத்து இட்டு
ஒருவர்க்கும் தெரி அரும் சத்(தி)யத்தை தெரிசித்து
உன்செயல் பாடி
திசைதொறும் கற்பிக்கைக்கு
இனி அற்பம் திரு உ(ள்)ளம் பற்றி
செச்சை மணக்கும் சிறு சதங்கைப் பொன் பத்மம் எனக்கு
என்று அருள்வாயே
கனப் பெரும் தொப்பைக்கு எள் பொரி அப்பம் கனி கிழங்கு
இக்கு
சர்க்கரை முக்கண் கடலை கண்டு அப்பி
பிட்டொடு மொக்கும் திரு வாயன்
கவள(ம்) துங்கக் கை கற்பக(ம்) முக்கண்
திகழு(ம்) நம் கொற்றத்து ஒற்றை மருப்பன் கரி முகன்
சித்ரப் பொன் புகர் வெற்பன் தனை ஈனும் பனவி
ஒன்று எட்டுச் சக்ரத் தலப் பெண்
கவுரி செம் பொன் பட்டுத் தரி அப்பெண்
பழய அண்டத்தைப் பெற்ற மடப் பெண்
பணிவாரை பவ தரங்கத்தைத் தப்ப நிறுத்தும் பவதி
கம்பர்க்குப் புக்கவள் பக்கம் பயில்
வரம் பெற்றுக் கச்சியில் நிற்கும் பெருமாளே.

Back to Top

Thiruppugazh # 330 முட்டுப் பட்டு   (காஞ்சீபுரம்)  
தத்தத் தத்தத் ...... தனதான
     தத்தத் தத்தத் ...... தனதான
முருகா முருகா வேல் முருகா; முருகா முருகா வேல் முருகா

முட்டுப் பட்டுக் ...... கதிதோறும்
     முற்றச் சுற்றிப் ...... பலநாளும்
தட்டுப் பட்டுச் ...... சுழல்வேனைச்
     சற்றுப் பற்றக் ...... கருதாதோ
வட்டப் புட்பத் ...... தலமீதே
     வைக்கத் தக்கத் ...... திருபாதா
கட்டத் தற்றத் ...... தருள்வோனே
     கச்சிச் சொக்கப் ...... பெருமாளே.
முட்டுப் பட்டுக் கதிதோறும்
முற்றச் சுற்றிப் பலநாளும்
தட்டுப் பட்டுச் சுழல்வேனை
சற்றுப் பற்றக் கருதாதோ
வட்டப் புட்பத் தலமீதே
வைக்கத் தக்கத் திருபாதா
கட்டத்து அற்றத்து அருள்வோனே
கச்சிச் சொக்கப் பெருமாளே.
Audio/Video Link(s)

Back to Top

Thiruppugazh # 339 கருமமான பிறப்பற   (காஞ்சீபுரம்)  
தனன தானன தத்தன தனதன
     தானா தத்தத் ...... தனதான

கரும மானபி றப்பற வொருகதி
     காணா தெய்த்துத் ...... தடுமாறுங்
கலக காரண துற்குண சமயிகள்
     நானா வர்க்கக் ...... கலைநூலின்
வரும நேகவி கற்பவி பரிதம
     னோபா வத்துக் ...... கரிதாய
மவுன பூரித சத்திய வடிவினை
     மாயா மற்குப் ...... புகல்வாயே
தரும வீம அருச்சுன நகுலச
     காதே வர்க்குப் ...... புகலாகிச்
சமர பூமியில் விக்ரம வளைகொடு
     நாளோர் பத்தெட் ...... டினிலாளுங்
குரும கீதல முட்பட வுளமது
     கோடா மற்க்ஷத் ...... ரியர்மாளக்
குலவு தேர்கட வச்சுதன் மருககு
     மாரா கச்சிப் ...... பெருமாளே.
கருமமான பிறப்பற
ஒருகதி காணாது எய்த்துத் தடுமாறும்
கலக காரண துற்குண சமயிகள்
நானா வர்க்கக் கலைநூலின்
வரும் அநேக விகற்ப விபரித
மனோபாவத்துக்கு அரிதாய
மவுன பூரித சத்திய வடிவினை
மாயா மற்குப் புகல்வாயே
தரும வீம அருச்சுன நகுல சகாதேவர்க்குப் புகலாகி
சமர பூமியில் விக்ரம வளைகொடு
நாளோர் பத்தெட்டினிலாளும்
குரு மகீதல முட்பட
உளமது கோடாமல் க்ஷத்ரியர்மாள
குலவு தேர்கடவு அச்சுதன் மருக
குமாரா கச்சிப் பெருமாளே.

Back to Top

Thiruppugazh # 355 அனித்தமான ஊன்   (திருவானைக்கா)  
தனத்த தான தானான தனத்த தான தானான
     தனத்த தான தானான ...... தனதான

அனித்த மான வூனாளு மிருப்ப தாக வேநாசி
     யடைத்து வாயு வோடாத ...... வகைசாதித்
தவத்தி லேகு வால்மூலி புசித்து வாடு மாயாச
     அசட்டு யோகி யாகாமல் ...... மலமாயை
செனித்த காரி யோபாதி யொழித்து ஞான ஆசார
     சிரத்தை யாகி யான்வேறெ ...... னுடல்வேறு
செகத்தி யாவும் வேறாக நிகழ்ச்சி யாம நோதீத
     சிவச்சொ ரூபமாயோகி ...... யெனஆள்வாய்
தொனித்த நாத வேயூது சகஸ்ர நாம கோபால
     சுதற்கு நேச மாறாத ...... மருகோனே
சுவர்க்க லோக மீகாம சமஸ்த லோக பூபால
     தொடுத்த நீப வேல்வீர ...... வயலுரா
மனித்த ராதி சோணாடு தழைக்க மேவு காவேரி
     மகப்ர வாக பானீய ...... மலைமோதும்
மணத்த சோலை சூழ்காவை அனைத்து லோக மாள்வாரு
     மதித்த சாமி யேதேவர் ...... பெருமாளே.
அனித்தமான ஊன் நாளுமிருப்பதாகவே
நாசி யடைத்து வாயு ஓடாத வகைசாதித்(து)
அவத்திலே குவால் மூலி புசித்து
வாடும் ஆயாச அசட்டு யோகி யாகாமல்
மலமாயை செனித்த காரிய உபாதி யொழித்து
ஞான ஆசார சிரத்தை யாகி
யான்வேறு எனுடல்வேறு செகத்தி யாவும் வேறாக
நிகழ்ச்சியா மநோதீத
சிவச்சொரூப மாயோகி யெனஆள்வாய்
தொனித்த நாத வேய் ஊது
சகஸ்ர நாம கோபால சுதற்கு
நேச மாறாத மருகோனே
சுவர்க்க லோக மீகாம
சமஸ்த லோக பூபால
தொடுத்த நீப வேல்வீர வயலுரா
மனித்தர் ஆதி சோணாடு தழைக்க
மேவு காவேரி மகப்ரவாக பானீயம் அலைமோதும்
மணத்த சோலை சூழ்காவை
அனைத்து லோக மாள்வாரு மதித்த சாமியே
தேவர் பெருமாளே.

Back to Top

Thiruppugazh # 359 ஓல மறைகள்   (திருவானைக்கா)  
தான தனன தனதந்த தந்தன
     தான தனன தனதந்த தந்தன
          தான தனன தனதந்த தந்தன ...... தனதான

ஓல மறைக ளறைகின்ற வொன்றது
     மேலை வெளியி லொளிரும் பரஞ்சுடர்
          ஓது சரியை க்ரியையும் புணர்ந்தவ ...... ரெவராலும்
ஓத வரிய துரியங் கடந்தது
     போத அருவ சுருபம் ப்ரபஞ்சமும்
          ஊனு முயிரு முழுதுங் கலந்தது ...... சிவஞானம்
சால வுடைய தவர்கண்டு கொண்டது
     மூல நிறைவு குறைவின்றி நின்றது
          சாதி குலமு மிலதன்றி யன்பர்சொ ...... னவியோமஞ்
சாரு மநுப வரமைந்த மைந்தமெய்
     வீடு பரம சுகசிந்து இந்த்ரிய
          தாப சபல மறவந்து நின்கழல் ...... பெறுவேனோ
வால குமர குககந்த குன்றெறி
     வேல மயில எனவந்து கும்பிடு
          வான விபுதர் பதியிந்த்ரன் வெந்துயர் ...... களைவோனே
வாச களப வரதுங்க மங்கல
     வீர கடக புயசிங்க சுந்தர
          வாகை புனையும் ரணரங்க புங்கவ ...... வயலூரா
ஞால முதல்வி யிமயம் பயந்தமின்
     நீலி கவுரி பரைமங்கை குண்டலி
          நாளு மினிய கனியெங்க ளம்பிகை ...... த்ரிபுராயி
நாத வடிவி யகிலம் பரந்தவ
     ளாலி னுதர முளபைங் கரும்புவெ
          ணாவ லரசு மனைவஞ்சி தந்தருள் ...... பெருமாளே.
ஓல மறைக ளறைகின்ற வொன்றது
மேலை வெளியி லொளிரும் பரஞ்சுடர்
ஓது சரியை க்ரியையும் புணர்ந்தவரெவராலும்
ஓத வரிய துரியங் கடந்தது
போத அருவ சுருபம்
ப்ரபஞ்சமும் ஊனுமுயிரு முழுதுங்கலந்தது
சிவஞானம் சாலவுடைய தவர்கண்டு கொண்டது
மூல நிறைவு குறைவின்றி நின்றது
சாதி குலமு மிலதன்றி
அன்பர்சொனவியோமம் சாரும்
அநுபவர் அமைந்து அமைந்த
மெய் வீடு பரம சுகசிந்து
இந்த்ரிய தாப சபலம் அறவந்து
நின்கழல் பெறுவேனோ
வால குமர குககந்த குன்றெறி வேல மயில
எனவந்து கும்பிடு
வான விபுதர் பதியிந்த்ரன் வெந்துயர் களைவோனே
வாச களப வரதுங்க மங்கல
வீர கடக புய
சிங்க சுந்தர
வாகை புனையும் ரணரங்க புங்கவ
வயலூரா
ஞால முதல்வி யிமயம் பயந்தமின்நீலி
கவுரி பரைமங்கை குண்டலி
நாளு மினிய கனியெங்க ளம்பிகை த்ரிபுராயி
நாத வடிவி யகிலம் பரந்தவள்
ஆலின் உதர முள
பைங் கரும்புவெண் நாவ லரசு மனை
வஞ்சி தந்தருள் பெருமாளே.

Back to Top

Thiruppugazh # 363 நாடித் தேடி   (திருவானைக்கா)  
தானத் தானத் ...... தனதான
     தானத் தானத் ...... தனதான

நாடித் தேடித் ...... தொழுவார்பால்
     நானத் தாகத் ...... திரிவேனோ
மாடக் கூடற் ...... பதிஞான
     வாழ்வைச் சேரத் ...... தருவாயே
பாடற் காதற் ...... புரிவோனே
     பாலைத் தேனொத் ...... தருள்வோனே
ஆடற் றோகைக் ...... கினியோனே
     ஆனைக் காவிற் ...... பெருமாளே.
நாடித் தேடித் தொழுவார்பால்
நான் நத்தாகத் திரிவேனோ
மாடக் கூடற் பதி
ஞான வாழ்வைச் சேர
தருவாயே
பாடற் காதற் புரிவோனே
பாலைத் தேனொத்து அருள்வோனே
ஆடற் றோகைக்கு இனியோனே
ஆனைக் காவிற் பெருமாளே.

Back to Top

Thiruppugazh # 366 வேலைப்போல் விழி   (திருவானைக்கா)  
தானத் தானன தத்தன தத்தன
     தானத் தானன தத்தன தத்தன
          தானத் தானன தத்தன தத்தன ...... தனதான

வேலைப் போல்விழி யிட்டும ருட்டிகள்
     காமக் ரோதம்வி ளைத்திடு துட்டிகள்
          வீதிக் கேதிரி பப்பர மட்டைகள் ...... முலையானை
மேலிட் டேபொர விட்டபொ றிச்சிகள்
     மார்பைத் தோளைய சைத்துந டப்பிகள்
          வேளுக் காண்மைசெ லுத்துச மர்த்திகள் ...... களிகூருஞ்
சோலைக் கோகில மொத்தமொ ழிச்சிகள்
     காசற் றாரையி தத்திலொ ழிச்சிகள்
          தோலைப் பூசிமி னுக்கியு ருக்கிகள் ...... எவரேனும்
தோயப் பாயல ழைக்கும வத்திகள்
     மோகப் போகமு யக்கிம யக்கிகள்
          சூறைக் காரிகள் துக்கவ லைப்பட ...... லொழிவேனோ
காலைக் கேமுழு கிக்குண திக்கினில்
     ஆதித் யாயஎ னப்பகர் தர்ப்பண
          காயத் ரீசெப மர்ச்சனை யைச்செயு ...... முநிவோர்கள்
கானத் தாசிர மத்தினி லுத்தம
     வேள்விச் சாலைய ளித்தல்பொ ருட்டெதிர்
          காதத் தாடகை யைக்கொல்க்ரு பைக்கடல் ...... மருகோனே
ஆலைச் சாறுகொ தித்துவ யற்றலை
     பாயச் சாலித ழைத்திர தித்தமு
          தாகத் தேவர்கள் மெச்சிய செய்ப்பதி ...... யுறைவேலா
ஆழித் தேர்மறு கிற்பயில் மெய்த்திரு
     நீறிட் டான்மதிள் சுற்றிய பொற்றிரு
          ஆனைக் காவினி லப்பர்ப்ரி யப்படு ...... பெருமாளே.
வேலைப் போல் விழி இட்டு மருட்டிகள்
காமக் (கு)ரோதம் விளைத்திடு துட்டிகள்
வீதிக்கே திரி பப்பர மட்டைகள் முலை யானைமேல் இட்டே
பொரவிட்ட பொறிச்சிகள்
மார்பைத் தோளை அசைத்து நடப்பிகள்
வேளுக்கு ஆண்மை செலுத்து சமர்த்திகள்
களி கூரும் சோலைக் கோகிலம் ஒத்த மொழிச்சிகள்
காசு அற்றாரை இதத்தில் ஒழிச்சிகள்
தோலைப் பூசி மினுக்கி உருக்கிகள்
எவரேனும் தோயப் பாயல் அழைக்கும் அவத்திகள்
மோகப் போகம் முயக்கி மயக்கிகள்
சூறைக் காரிகள் துக்க வலைப்படல் ஒழிவேனோ
காலைக்கே முழுகிக் குண திக்கினில் ஆதித்யாய எனப் பகர்
தர்ப்பணம் காயத்ரீ செபம் அர்ச்சனையைச் செய்யும்
முநிவோர்கள்
கானத்து ஆசிரமத்தினில் உத்தம வேள்விச் சாலை அளித்தல்
பொருட்டு
எதிர் காதத் தாடகையைக் கொல் க்ருபைக் கடல்
மருகோனே
ஆலைச் சாறு கொதித்து வயல் தலை பாயச் சாலி தழைத்து
இரதித்து அமுதாக
தேவர்கள் மெச்சிய செய்ப்பதி உறை வேலா
ஆழித் தேர் மறுகில் பயில் மெய்த் திரு நீறு இட்டான்
மதிள் சுற்றிய
பொன் திரு ஆனைக்காவினில் அப்பர் ப்ரியப்படு
பெருமாளே.

Back to Top

Thiruppugazh # 367 குமர குருபர குணதர   (திருவருணை)  
தனன தனதன தனதன தனதன
     தனன தனதன தனதன தனதன
          தனன தனதன தனதன தனதன ...... தனதான

குமர குருபர குணதர நிசிசர
     திமிர தினகர சரவண பவகிரி
          குமரி சுதபகி ரதிசுத சுரபதி ...... குலமானுங்
குறவர் சிறுமியு மருவிய திரள்புய
     முருக சரணென வுருகுதல் சிறிதுமில்
          கொடிய வினையனை யவலனை யசடனை ...... யதிமோகக்
கமரில் விழவிடு மழகுடை யரிவையர்
     களவி னொடுபொரு ளளவள வருளிய
          கலவி யளறிடை துவளுறும் வெளிறனை ...... யினிதாளக்
கருணை யடியரொ டருணையி லொருவிசை
     சுருதி புடைதர வருமிரு பரிபுர
          கமல மலரடி கனவிலு நனவிலு ...... மறவேனே
தமர மிகுதிரை யெறிவளை கடல்குடல்
     மறுகி யலைபட விடநதி யுமிழ்வன
          சமுக முககண பணபணி பதிநெடு ...... வடமாகச்
சகல வுலகமு நிலைபெற நிறுவிய
     கனக கிரிதிரி தரவெகு கரமலர்
          தளர வினியதொ ரமுதினை யொருதனி ...... கடையாநின்
றமரர் பசிகெட வுதவிய க்ருபைமுகில்
     அகில புவனமு மளவிடு குறியவன்
          அளவு நெடியவ னளவிட அரியவன் ...... மருகோனே
அரவு புனைதரு புநிதரும் வழிபட
     மழலை மொழிகொடு தெளிதர வொளிதிகழ்
          அறிவை யறிவது பொருளென அருளிய ...... பெருமாளே.
குமர குருபர குணதர நிசிசர திமிர தினகர சரவணபவ
கிரி குமரி சுத பகிரதி சுத சுர பதி குல மானும் குறவர்
சிறுமியும் மருவிய திரள் புய முருக சரண்
என உருகுதல் சிறிதும் இல் கொடிய வினையனை அவலனை
அசடனை
அதி மோகக் கமரில் விழவிடு அழகு உடை அரிவையர்
களவினொடு பொருள் அளவளவு அருளிய கலவி அளறிடை
துவளுறும் வெளிறனை
இனிது ஆள கருணை அடியரொடு அருணையில் ஒரு விசை
சுருதி புடை தர வரும் இரு பரிபுர கமல மலர் அடி கனவிலும்
நனவிலும் மறவேனே
தமர மிகு திரை எறி வளை கடல் குடல் மறுகி அலைபட
விட நதி உமிழ்வன சமுக முக கண பண பணி பதி நெடு
வடமாக
சகல உலகமு(ம்) நிலைபெற நிறுவிய கனக கிரி திரிதர
வெகு கர மலர் தளர இனியதொர் அமுதினை ஒரு தனி
கடையா நின்று
அமரர் பசி கெட உதவிய க்ருபை முகில்
அகில புவனமும் அளவிடு குறியவன் அளவு நெடியவன்
அளவிட அரியவன் மருகோனே
அரவு புனைதரு புநிதரும் வழிபட மழலை மொழிகொடு
தெளி தர
ஒளி திகழ் அறிவை அறிவது பொருள் என அருளிய
பெருமாளே.

Back to Top

Thiruppugazh # 397 இமராஜன் நிலாவது   (திருவருணை)  
தனதாதன தானன தத்தம் ...... தனதான
     தனதாதன தானன தத்தம் ...... தனதான

இமராஜனி லாவதெ றிக்குங் ...... கனலாலே
     இளவாடையு மூருமொ றுக்கும் ...... படியாலே
சமராகிய மாரனெ டுக்குங் ...... கணையாலே
     தனிமானுயிர் சோரும தற்கொன் ...... றருள்வாயே
குமராமுரு காசடி லத்தன் ...... குருநாதா
     குறமாமக ளாசைத ணிக்குந் ...... திருமார்பா
அமராவதி வாழ்வம ரர்க்கன் ...... றருள்வோனே
     அருணாபுரி வீதியி னிற்கும் ...... பெருமாளே.
இமராஜன் நிலாவது எறிக்குங் கனலாலே
இளவாடையும் ஊரும் ஒறுக்கும்படியாலே
சமராகிய மாரன் எடுக்குங் கணையாலே
தனிமானுயிர் சோரும் அதற்கு ஒன்றருள்வாயே
குமரா முருகா சடிலத்தன் குருநாதா
குறமாமகள் ஆசை தணிக்குந் திருமார்பா
அமராவதி வாழ்வு அமரர்க்கன்று அருள்வோனே
அருணாபுரி வீதியி னிற்கும் பெருமாளே.

Back to Top

Thiruppugazh # 401 இருவினை அஞ்ச   (திருவருணை)  
தனதன தந்த தனதன தந்த
     தனதன தந்த ...... தனதான

இருவினை யஞ்ச மலவகை மங்க
     இருள்பிணி மங்க ...... மயிலேறி
இனவரு ளன்பு மொழியக டம்பு
     வினதக முங்கொ ...... டளிபாடக்
கரிமுக னெம்பி முருகனெ னண்டர்
     களிமலர் சிந்த ...... அடியேன்முன்
கருணைபொ ழிந்து முகமும லர்ந்து
     கடுகிந டங்கொ ...... டருள்வாயே
திரிபுர மங்க மதனுடல் மங்க
     திகழ்நகை கொண்ட ...... விடையேறிச்
சிவம்வெளி யங்க ணருள்குடி கொண்டு
     திகழந டஞ்செய் ...... தெமையீண
அரசியி டங்கொள் மழுவுடை யெந்தை
     அமலன்ம கிழ்ந்த ...... குருநாதா
அருணைவி லங்கல் மகிழ்குற மங்கை
     அமளிந லங்கொள் ...... பெருமாளே.
இருவினை யஞ்ச
மலவகை மங்க
இருள்பிணி மங்க
மயிலேறி
இனவருள் அன்பு மொழிய
க டம்புவின் அதகமும் கொடு
அளிபாட
கரிமுகன் எம்பி முருகனென
அண்டர் களிமலர் சிந்த
அடியேன்முன் கருணைபொழிந்து
முகமும் மலர்ந்து கடுகி
நடங்கொடு அருள்வாயே
திரிபுர மங்க மதனுடல் மங்க
திகழ்நகை கொண்ட
விடையேறிச் சிவம்
வெளி யங்கண்அருள் குடிகொண்டு
திகழந டஞ்செய்து
எமையீண் அரசியிடங்கொள
மழுவுடை யெந்தை அமலன்
மகிழ்ந்த குருநாதா
அருணைவி லங்கல் மகிழ்குற மங்கை
அமளிந லங்கொள் பெருமாளே.
Audio/Video Link(s)

Back to Top

Thiruppugazh # 414 கீத விநோத மெச்சு   (திருவருணை)  
தான தனான தத்த ...... தனதான
     தான தனான தத்த ...... தனதான

கீத விநோத மெச்சு ...... குரலாலே
     கீறு மையார் முடித்த ...... குழலாலே
நீதி யிலாத ழித்து ...... முழலாதே
     நீமயி லேறி யுற்று ...... வரவேணும்
சூதமர் சூர ருட்க ...... பொருசூரா
     சோண கிரீயி லுற்ற ...... குமரேசா
ஆதியர் காதொ ருச்சொ ...... லருள்வோனே
     ஆனை முகார்க னிட்ட ...... பெருமாளே.
கீத விநோத மெச்சு குரலாலே
கீறு மையார் முடித்த குழலாலே
நீதி யிலாதழித்தும் உழலாதே
நீமயி லேறி யுற்று வரவேணும்
சூதமர் சூரர் உட்க பொருசூரா
சோண கிரீயி லுற்ற குமரேசா
ஆதியர்காது ஒருச்சொல் அருள்வோனே
ஆனைமுகார் கனிட்ட பெருமாளே.

Back to Top

Thiruppugazh # 421 சிவமாதுடனே   (திருவருணை)  
தனனா தனனா தனனா தனனா
     தனனா தனனா ...... தனதான

சிவமா துடனே அநுபோ கமதாய்
     சிவஞா னமுதே ...... பசியாறித்
திகழ்வோ டிருவோ ரொருரூ பமதாய்
     திசைலோ கமெலா ...... மநுபோகி
இவனே யெனமா லயனோ டமரோ
     ரிளையோ னெனவே ...... மறையோத
இறையோ னிடமாய் விளையா டுகவே
     யியல்வே லுடன்மா ...... அருள்வாயே
தவலோ கமெலா முறையோ வெனவே
     தழல்வேல் கொடுபோ ...... யசுராரைத்
தலைதூள் படஏழ் கடல்தூள் படமா
     தவம்வாழ் வுறவே ...... விடுவோனே
கவர்பூ வடிவாள் குறமா துடன்மால்
     கடனா மெனவே ...... அணைமார்பா
கடையேன் மிடிதூள் படநோய் விடவே
     கனல்மால் வரைசேர் ...... பெருமாளே.
சிவமா துடனே
அநுபோ கமதாய்
சிவஞா னமுதே
பசியாறி
திகழ்வோ டிருவோர்
ஒருரூபமதாய்
திசைலோ கமெலாம் அநுபோகி
இவனே யெனமா லயனோ டமரோர்
இளையோ னெனவே
மறையோத
இறையோ னிடமாய்
விளையா டுகவே
இயல்வே லுடன்மா அருள்வாயே
தவலோ கமெலாம்
முறையோ வெனவே
தழல்வேல் கொடுபோய்
அசுராரைத் தலைதூள் பட
ஏழ் கடல்தூள் பட
மாதவம்வாழ் வுறவே
விடுவோனே
கவர்பூ வடிவாள்
குறமா துடன்
மால் கடனா மெனவே
அணைமார்பா
கடையேன் மிடிதூள் பட
நோய் விடவே
கனல்மால் வரைசேர் பெருமாளே.

Back to Top

Thiruppugazh # 425 செயசெய அருணா   (திருவருணை)  
தனதன தனனாத் தனதன தனனத்
     தனதன தனனாத் தனதன தனனத்
          தனதன தனனாத் தனதன தனனத் ...... தனதான

செயசெய அருணாத் திரிசிவ யநமச்
     செயசெய அருணாத் திரிமசி வயநச்
          செயசெய அருணாத் திரிநம சிவயத் ...... திருமூலா
செயசெய அருணாத் திரியந மசிவச்
     செயசெய அருணாத் திரிவய நமசிச்
          செயசெய அருணாத் திரிசிவ யநமஸ்த் ...... தெனமாறி
செயசெய அருணாத் திரிதனின் விழிவைத்
     தரகர சரணாத் திரியென உருகிச்
          செயசெய குருபாக் கியமென மருவிச் ...... சுடர்தாளைச்
சிவசிவ சரணாத் திரிசெய செயெனச்
     சரண்மிசை தொழுதேத் தியசுவை பெருகத்
          திருவடி சிவவாக் கியகட லமுதைக் ...... குடியேனோ
செயசெய சரணாத் திரியென முநிவர்க்
     கணமிது வினைகாத் திடுமென மருவச்
          செடமுடி மலைபோற் றவுணர்க ளவியச் ...... சுடும்வேலா
திருமுடி யடிபார்த் திடுமென இருவர்க்
     கடிதலை தெரியாப் படிநிண அருணச்
          சிவசுடர் சிகிநாட் டவனிரு செவியிற் ...... புகல்வோனே
செயசெய சரணாத் திரியெனு மடியெற்
     கிருவினை பொடியாக் கியசுடர் வெளியிற்
          றிருநட மிதுபார்த் திடுமென மகிழ்பொற் ...... குருநாதா
திகழ்கிளி மொழிபாற் சுவையித ழமுதக்
     குறமகள் முலைமேற் புதுமண மருவிச்
          சிவகிரி அருணாத் திரிதல மகிழ்பொற் ...... பெருமாளே.
செயசெய அருணாத்திரி சிவய நம
செயசெய அருணாத்திரி மசிவயந
செயசெய அருணாத்திரி நமசிவய திருமூலா
செயசெய அருணாத்திரி யநமசிவ
செயசெய அருணாத்திரி வயநமசி
செயசெய அருணாத் திரி சிவய நமஸ்த்து என மாறி
செயசெய அருணாத் திரி தனின் விழி வைத்து
அர கர சரணாத்திரி என உருகி
செயசெய குரு பாக்கியம் என மருவி சுடர் தாளை
சிவசிவ சரணாத் திரிசெய செயென
சரண் மிசை தொழுது ஏத்திய சுவை பெருக
திருவடி சிவ வாக்கிய கடல் அமுதைக் குடியேனோ
செயசெய சரணாத் திரி என முநிவர் கணம்
இது வினை காத்திடும் என மருவ
செட முடி மலை போற்று அவுணர்கள் அவிய சுடும்
வேலா
திரு முடி அடி பார்த்திடும் என இருவர்க்கு
அடி தலை தெரியாப்படி நிண அருண சிவ சுடர்
சிகி நாட்டவன் இரு செவியில் புகல்வோனே
செயசெய சரணாத் திரி எனும் அடியெற்கு
இரு வினை பொடியாக்கிய சுடர் வெளியில்
திரு நடம் இது பார்த்திடும் என மகிழ் பொன் குரு நாதா
திகழ் கிளி மொழி பால் சுவை இதழ் அமுத
குற மகள் முலை மேல் புது மணம் மருவி
சிவகிரி அருணாத்திரி தலம் மகிழ் பொன் பெருமாளே.
Audio/Video Link(s)

Back to Top

Thiruppugazh # 431 தோதகப் பெரும்   (திருவருணை)  
தான தத்த தந்த தான தத்த தந்த
     தான தத்த தந்த ...... தனதான

தோத கப்பெ ரும்ப யோத ரத்தி யங்கு
     தோகை யர்க்கு நெஞ்ச ...... மழியாதே
சூலை வெப்ப டர்ந்த வாத பித்த மென்று
     சூழ்பி ணிக்க ணங்க ...... ளணுகாதே
பாத கச்ச மன்தன் மேதி யிற்பு குந்து
     பாசம் விட்டெ றிந்து ...... பிடியாதே
பாவ லற்கி ரங்கி நாவ லர்க்கி சைந்த
     பாடல் மிக்க செஞ்சொல் ...... தரவேணும்
வேத மிக்க விந்து நாத மெய்க்க டம்ப
     வீர பத்ர கந்த ...... முருகோனே
மேரு வைப்பி ளந்து சூர னைக்க டிந்து
     வேலை யிற்றொ ளைந்த ...... கதிர்வேலா
கோதை பொற்கு றிஞ்சி மாது கச்ச ணிந்த
     கோம ளக்கு ரும்பை ...... புணர்வோனே
கோல முற்றி லங்கு சோண வெற்பு யர்ந்த
     கோபு ரத்த மர்ந்த ...... பெருமாளே.
தோதகப் பெரும் பயோதரத்து இயங்கும் தோகையர்க்கு
நெஞ்சம் அழியாதே
சூலை வெப்பு அடர்ந்த வாதம் பித்தம் என்று சூழ் பிணி
கணங்கள் அணுகாதே
பாதகச் சமன் தன் மேதியில் புகுந்து பாசம் விட்டு எறிந்து
பிடியாதே
பாவலற்கு இரங்கி நாவலர்க்கு இசைந்த பாடல் மிக்க செம்
சொல் தர வேணும்
வேதம் மிக்க விந்து நாதம் மெய்க் கடம்ப வீரபத்ர கந்த
முருகோனே
மேருவைப் பிளந்து சூரனைக் கடிந்து வேலையில்
தொளைந்த கதிர் வேலா
கோதை பொன் குறிஞ்சி மாது கச்சு அணிந்த கோமளக்
குரும்பை புணர்வோனே
கோலம் உற்று இலங்கு சோண வெற்பு உயர்ந்த கோபுரத்து
அமர்ந்த பெருமாளே.

Back to Top

Thiruppugazh # 470 அவகுண விரகனை   (சிதம்பரம்)  
தனதன தனதன தானான தானன
     தனதன தனதன தானான தானன
          தனதன தனதன தானான தானன ...... தந்ததான

அவகுண விரகனை வேதாள ரூபனை
     அசடனை மசடனை ஆசார ஈனனை
          அகதியை மறவனை ஆதாளி வாயனை ...... அஞ்சுபூதம்
அடைசிய சவடனை மோடாதி மோடனை
     அழிகரு வழிவரு வீணாதி வீணனை
          அழுகலை யவிசலை ஆறான வூணனை ...... அன்பிலாத
கவடனை விகடனை நானாவி காரனை
     வெகுளியை வெகுவித மூதேவி மூடிய
          கலியனை அலியனை ஆதேச வாழ்வனை ...... வெம்பிவீழுங்
களியனை யறிவுரை பேணாத மாநுட
     கசனியை யசனியை மாபாத னாகிய
          கதியிலி தனையடி நாயேனை யாளுவ ...... தெந்தநாளோ
மவுலியி லழகிய பாதாள லோகனு
     மரகத முழுகிய காகோத ராஜனு
          மநுநெறி யுடன்வளர் சோணாடர் கோனுட ...... னும்பர்சேரும்
மகபதி புகழ்புலி யூர்வாழு நாயகர்
     மடமயில் மகிழ்வுற வானாடர் கோவென
          மலைமக ளுமைதரு வாழ்வேம னோகர ...... மன்றுளாடும்
சிவசிவ ஹரஹர தேவா நமோநம
     தெரிசன பரகதி யானாய் நமோநம
          திசையினு மிசையினும் வாழ்வே நமோநம ...... செஞ்சொல்சேருந்
திருதரு கலவி மணாளா நமோநம
     திரிபுர மெரிசெய்த கோவே நமோநம
          ஜெயஜெய ஹரஹர தேவா சுராதிபர் ...... தம்பிரானே.
அவகுண விரகனை
வேதாள ரூபனை
அசடனை மசடனை
ஆசார ஈனனை
அகதியை மறவனை
ஆதாளி வாயனை
அஞ்சுபூதம் அடைசிய சவடனை
மோடாதி மோடனை
அழிகரு வழிவரு வீணாதி வீணனை
அழுகலை யவிசலை
ஆறான வூணனை
அன்பிலாத கவடனை
விகடனை நானாவி காரனை
வெகுளியை வெகுவித மூதேவி மூடிய கலியனை
அலியனை ஆதேச வாழ்வனை
வெம்பிவீழுங் களியனை
அறிவுரை பேணாத மாநுட கசனியை
அசனியை மாபாதனாகிய கதியிலி தனை
அடி நாயேனைஆளுவது எந்தநாளோ
மவுலியில் அழகிய பாதாள லோகனு
மரகத முழுகிய காகோத ராஜனு
மநுநெறியுடன்வளர் சோணாடர் கோனுடன்
உம்பர்சேரும் மகபதி
புகழ்புலி யூர்வாழு நாயகர்
மடமயில் மகிழ்வுற
வானாடர் கோவென
மலைமகள் உமைதரு வாழ்வே மனோகர
மன்றுளாடும்
சிவசிவ ஹரஹர தேவா நமோநம
தெரிசன பரகதி யானாய் நமோநம
திசையினும் இசையினும் வாழ்வே நமோநம
செஞ்சொல்சேரும்
திருதரு கலவி மணாளா நமோநம
திரிபுரம் எரிசெய்த கோவே நமோநம
ஜெயஜெய ஹரஹர தேவா
சுராதிபா தம்பிரானே.

Back to Top

Thiruppugazh # 487 வாத பித்தமொடு   (சிதம்பரம்)  
தான தத்ததன தான தத்ததன
     தான தத்ததன தான தத்ததன
          தான தத்ததன தான தத்ததன ...... தந்ததான

வாத பித்தமொடு சூலை விப்புருதி
     யேறு கற்படுவ னீளை பொக்கிருமல்
          மாலை புற்றெழுத லூசல் பற்சனியொ ...... டந்திமாலை
மாச டைக்குருடு காத டைப்பு செவி
     டூமை கெட்டவலி மூல முற்றுதரு
          மாலை யுற்றதொணு றாறு தத்துவர்க ...... ளுண்டகாயம்
வேத வித்துபரி கோல முற்றுவிளை
     யாடு வித்தகட லோட மொய்த்தபல
          வேட மிட்டுபொரு ளாசை பற்றியுழல் ...... சிங்கியாலே
வீடு கட்டிமய லாசை பட்டுவிழ
     வோசை கெட்டுமடி யாமல் முத்திபெற
          வீட ளித்துமயி லாடு சுத்தவெளி ...... சிந்தியாதோ
ஓத அத்திமுகி லோடு சர்ப்பமுடி
     நீறு பட்டலற சூர வெற்பவுண
          ரோடு பட்டுவிழ வேலை விட்டபுக ...... ழங்கிவேலா
ஓந மச்சிவய சாமி சுத்தஅடி
     யார்க ளுக்குமுப காரி பச்சையுமை
          ஓர்பு றத்தருள்சி காம ணிக்கடவுள் ...... தந்தசேயே
ஆதி கற்பகவி நாய கர்க்குபிற
     கான பொற்சரவ ணாப ரப்பிரம
          னாதி யுற்றபொருள் ஓது வித்தமைய ...... றிந்தகோவே
ஆசை பெற்றகுற மாதை நித்தவன
     மேவி சுத்தமண மாடி நற்புலியு
          ராட கப்படிக கோபு ரத்தின்மகிழ் ...... தம்பிரானே.
வாதம் பித்தமோடு சூலை விப்புருதி
ஏறு கல் படுவன் ஈளை பொக்கு இருமல்
மாலை புற்று எழுதல் ஊசல் பற்ச(ன்)னி ஓடு அந்தி மாலை
மாசு அடை குருடு காது அடைப்பு செவிடு
ஊமை கெட்ட வலி மூலம் முற்று தரு
மாலை உற்ற தொ(ண்)ணூறு ஆறு தத்துவர்கள் உண்ட
காயம்
வேத வித்து பரிகோலம் உற்று விளையாடுவித்த
கடல் ஓடம்
மொய்த்த பல வேடம் இட்டு
பொருள் ஆசை பற்றி உழல் சிங்கியாலே
வீடு கட்டி மயல் ஆசை பட்டு விழ
ஓசை கெட்டு மடியாமல் முத்தி பெற வீடு அளித்து
மயில் ஆடு சுத்த வெளி சிந்தியாதோ
ஓத அத்தி முகிலோடு சர்ப்ப முடி
நீறு பட்டு அலற சூர(ன்) வெற்பு அவுணரோடு
பட்டு விழ வேலை விட்ட புகழ் அங்கி வேலா
ஓம் நமச்சிவய சாமி சுத்த அடியார்களுக்கும் உபகாரி
பச்சை உமை ஓர் புறத்து அருள் சிகா மணி கடவுள் தந்த
சேயே
ஆதி கற்பக விநாயகற்கு பிறகான பொன் சரவணா
பர பிரமன் ஆதி உற்ற பொருள் ஓதுவித்தமை அறிந்த
கோவே
ஆசை பெற்ற குற மாதை நித்த(ம்) வனம் மேவி
சுத்த மணம் ஆடி நல் புலியூர்
ஆடகப் படிக கோபுரத்தின் மகிழ் தம்பிரானே.

Back to Top

Thiruppugazh # 493 எழுகடல் மணலை   (சிதம்பரம்)  
தனதன தனன தனதன தனன
     தனதன தனன ...... தனதான

எழுகடல் மணலை அளவிடி னதிக
     மெனதிடர் பிறவி ...... அவதாரம்
இனியுன தபய மெனதுயி ருடலு
     மினியுடல் விடுக ...... முடியாது
கழுகொடு நரியு மெரிபுவி மறலி
     கமலனு மிகவு ...... மயர்வானார்
கடனுன தபய மடிமையு னடிமை
     கடுகியு னடிகள் ...... தருவாயே
விழுதிக ழழகி மரகத வடிவி
     விமலிமு னருளு ...... முருகோனே
விரிதல மெரிய குலகிரி நெரிய
     விசைபெறு மயிலில் ...... வருவோனே
எழுகடல் குமுற அவுணர்க ளுயிரை
     யிரைகொளும் அயிலை ...... யுடையோனே
இமையவர் முநிவர் பரவிய புலியு
     ரினில்நட மருவு ...... பெருமாளே.
எழுகடல் மணலை
அளவிடி னதிகம்
எனதிடர் பிறவி அவதாரம்
இனியுன தபய மெனதுயி ருடலும்
இனியுடல் விடுக முடியாது
கழுகொடு நரியு மெரிபுவி
மறலி கமலனு மிகவும் அயர்வானார்
கடனுன தபயம்
அடிமையு னடிமை
கடுகியு னடிகள் தருவாயே
விழுதிக ழழகி மரகத வடிவி
விமலிமு னருளும்
முருகோனே
விரிதல மெரிய குலகிரி நெரிய
விசைபெறு மயிலில் வருவோனே
எழுகடல் குமுற
அவுணர்க ளுயிரை யிரைகொளும்
அயிலை யுடையோனே
இமையவர் முநிவர் பரவிய புலியுரினில்
நட மருவு பெருமாளே.
Audio/Video Link(s)

Back to Top

Thiruppugazh # 513 மனமே உனக்குறுதி   (சிதம்பரம்)  
தனனா தனத்ததன தனனா தனத்ததன
     தனனா தனத்ததன ...... தனதானா

மனமே உனக்குறுதி புகல்வே னெனக்கருகில்
     வருவா யுரைத்தமொழி ...... தவறாதே
மயில்வாக னக்கடவுள் அடியார் தமக்கரசு
     மனமாயை யற்றசுக ...... மதிபாலன்
நினைவே துனக்கமரர் சிவலோக மிட்டுமல
     நிலைவே ரறுக்கவல ...... பிரகாசன்
நிதிகா நமக்குறுதி அவரே பரப்பிரம
     நிழலாளி யைத்தொழுது ...... வருவாயே
இனமோ தொருத்திருபி நலமேர் மறைக்கரிய
     இளையோ ளொரொப்புமிலி ...... நிருவாணி
எனையீ ணெடுத்தபுகழ் கலியாணி பக்கமுறை
     யிதழ்வேணி யப்பனுடை ...... குருநாதா
முனவோர் துதித்து மலர் மழைபோ லிறைத்துவர
     முதுசூ ரரைத்தலை கொள் ...... முருகோனே
மொழிபாகு முத்துநகை மயிலாள் தனக்குருகு
     முருகா தமிழ்ப்புலியுர் ...... பெருமாளே.
மனமே உனக்கு உறுதி புகல்வேன்
எனக்கு அருகில் வருவாய் உரைத்தமொழி தவறாதே
மயில் வாகனக்கடவுள் அடியார் தமக்கரசு
மனமாயை யற்ற சுக மதிபாலன்
நினைவேது உனக்கு அமரர் சிவலோகம் இட்டு
மல நிலை வேர் அறுக்கவல பிரகாசன்
நிதி கா நமக்கு உறுதி அவரே பரப்பிரம
நிழல் ஆளியைத் தொழுது வருவாயே
இனம் ஓது ஒருத்தி ருபி
நலம் ஏர் மறைக்கு அரிய இளையோள்
ஒர் ஒப்புமிலி நிருவாணி
எனை ஈணெடுத்த புகழ் கலியாணி பக்கம் உறை
இதழ்வேணியப்பனுடை குருநாதா
முனவோர் துதித்து மலர் மழைபோல் இறைத்துவர
முது சூரரைத் தலை கொள் முருகோனே
மொழிபாகு முத்துநகை மயிலாள் தனக்கு
உருகு முருகா தமிழ்ப்புலியுர் பெருமாளே.

Back to Top

Thiruppugazh # 519 நகைத்து உருக்கி   (கயிலைமலை)  
தனத்த தனத்த தனத்த தனத்த
     தனத்த தனத்த ...... தனதான

நகைத்து வுருக்கி விழித்து மிரட்டி
     நடித்து விதத்தி ...... லதிமோகம்
நடத்து சமத்தி முகத்தை மினுக்கி
     நலத்தி லணைத்து ...... மொழியாலுந்
திகைத்த வரத்தி லடுத்த பொருட்கை
     திரட்டி யெடுத்து ...... வரவேசெய்
திருட்டு முலைப்பெண் மருட்டு வலைக்குள்
     தெவிட்டு கலைக்குள் ...... விழுவேனோ
பகைத்த அரக்கர் சிரத்தை யறுத்து
     படர்ச்சி கறுத்த ...... மயிலேறிப்
பணைத்த கரத்த குணத்த மணத்த
     பதத்த கனத்த ...... தனமாதை
மிகைத்த புனத்தி லிருத்தி யணைத்து
     வெளுத்த பொருப்பி ...... லுறைநாதா
விரித்த சடைக்கு ளொருத்தி யிருக்க
     ம்ருகத்தை யெடுத்தொர் ...... பெருமாளே.
நகைத்து உருக்கி விழித்து மிரட்டி நடித்து விதத்தில்
அதி மோகம் நடத்து(ம்) சமத்தி முகத்தை மினுக்கி நலத்தில்
அணைத்து
மொழியாலும் திகைத்த வரத்தில் அடுத்த பொருள் கை திரட்டி
எடுத்து வரவே செய்
திருட்டு முலைப் பெண் மருட்டு வலைக்குள் தெவிட்டு
கலைக்குள் விழுவேனோ
பகைத்த அரக்கர் சிரத்தை அறுத்து படர்ச்சி கறுத்த மயில்
ஏறி
பணைத்த கரத்த குணத்த மணத்த பதத்த கனத்த தன
மாதை
மிகைத்த புனத்தில் இருத்தி அணைத்து வெளுத்த
பொருப்பில் உறை நாதா
விரித்த சடைக்குள் ஒருத்தி இருக்க ம்ருகத்தை எடுத்தொர்
பெருமாளே.
Audio/Video Link(s)

Back to Top

Thiruppugazh # 521 புமி அதனில்   (கயிலைமலை)  
தனதனனத் ...... தனதான
     தனதனனத் ...... தனதான

புமியதனிற் ......ப்ரபுவான
     புகலியில்வித் ...... தகர்போல
அமிர்தகவித் ...... தொடைபாட
     அடிமைதனக் ...... கருள்வாயே
சமரிலெதிர்த் ...... தசுர்மாளத்
     தனியயில்விட் ...... டருள்வோனே
நமசிவயப் ...... பொருளானே
     ரசதகிரிப் ...... பெருமாளே.
புமியதனிற் ப்ரபுவான
புகலியில் வித்தகர்போல
அமிர்தகவித் தொடைபாட
அடிமைதனக்கு அருள்வாயே
சமரிலெதிர்த்த சுர் மாள
தனியயில்விட்டு அருள்வோனே
நமசிவயப் பொருளானே
ரசதகிரிப் பெருமாளே.

Back to Top

Thiruppugazh # 523 ஒருபதும் இருபதும்   (ஸ்ரீ சைலம் திருமலை)  
தனதன தனதன தனதன தனதன
தனதன தனதன ...... தனதான
முருகைய்யா முருகைய்யா முத்து குமரன் நீ ஐயா
முருகைய்யா முருகைய்யா முத்து குமரன் நீ ஐயா

ஒருபது மிருபது மறுபது முடனறு
     முணர்வுற இருபத ...... முளநாடி
உருகிட முழுமதி தழலென வொளிதிகழ்
     வெளியொடு வொளிபெற ...... விரவாதே
தெருவினில் மரமென எவரொடு முரைசெய்து
     திரிதொழி லவமது ...... புரியாதே
திருமகள் மருவிய திரள்புய அறுமுக
     தெரிசனை பெறஅருள் ...... புரிவாயே
பரிவுட னழகிய பழமொடு கடலைகள்
     பயறொடு சிலவகை ...... பணியாரம்
பருகிடு பெருவயி றுடையவர் பழமொழி
     எழுதிய கணபதி ...... யிளையோனே
பெருமலை யுருவிட அடியவ ருருகிட
     பிணிகெட அருள்தரு ...... குமரேசா
பிடியொடு களிறுகள் நடையிட கலைதிரள்
     பிணையமர் திருமலை ...... பெருமாளே.
ஒருபதும் இருபதும் அறுபதும் உடன்அறும்
உணர்வுற
இருபதம் உளநாடி
உருகிட
முழுமதி தழலென ஒளிதிகழ்
வெளியொடு ஒளிபெற விரவாதே
தெருவினில் மரமென
எவரொடும் உரைசெய்து திரிதொழில்
அவமது புரியாதே
திருமகள் மருவிய
திரள்புய அறுமுக
தெரிசனை பெறஅருள் புரிவாயே
பரிவுட னழகிய பழமொடு
கடலைகள் பயறொடு சிலவகை பணியாரம்
பருகிடு பெருவயி றுடையவர்
பழமொழி எழுதிய
கணபதி யிளையோனே
பெருமலை யுருவிட
அடியவர் உருகிட
பிணிகெட
அருள்தரு குமரேசா
பிடியொடு களிறுகள் நடையிட
கலைதிரள் பிணையமர்
திருமலை பெருமாளே.

Back to Top

Thiruppugazh # 525 சரவண பவநிதி   (திருவேங்கடம்)  
தனதன தனதன தனதன தனதன
     தனதன தனதன தனதன தனதன
          தனதன தனதன தனதன தனதன ...... தனதான

சரவண பவநிதி யறுமுக குருபர
     சரவண பவநிதி யறுமுக குருபர
          சரவண பவநிதி யறுமுக குருபர ...... எனவோதித்
தமிழினி லுருகிய வடியவ ரிடமுறு
     சனனம ரணமதை யொழிவுற சிவமுற
          தருபிணி துளவர மெமதுயிர் சுகமுற ...... வருள்வாயே
கருணைய விழிபொழி யொருதனி முதலென
     வருகரி திருமுகர் துணைகொளு மிளையவ
          கவிதைய முதமொழி தருபவ ருயிர்பெற ...... வருள்நேயா
கடலுல கினில்வரு முயிர்படு மவதிகள்
     கலகமி னையதுள கழியவும் நிலைபெற
          கதியுமு னதுதிரு வடிநிழல் தருவது ...... மொருநாளே
திரிபுர மெரிசெயு மிறையவ ரருளிய
     குமரச மரபுரி தணிகையு மிகுமுயர்
          சிவகிரி யிலும்வட மலையிலு முலவிய ...... வடிவேலா
தினமுமு னதுதுதி பரவிய அடியவர்
     மனதுகு டியுமிரு பொருளிலு மிலகுவ
          திமிரம லமொழிய தினகர னெனவரு ...... பெருவாழ்வே
அரவணை மிசைதுயில் நரகரி நெடியவர்
     மருகனெ னவெவரு மதிசய முடையவ
          அமலிவி மலிபரை உமையவ ளருளிய ...... முருகோனே
அதலவி தலமுதல் கிடுகிடு கிடுவென
     வருமயி லினிதொளிர் ஷடுமையில் நடுவுற
          அழகினு டனமரு மரகர சிவசிவ ...... பெருமாளே.
சரவணபவ நிதி அறுமுக குருபர
சரவணபவ நிதி அறுமுக குருபர
சரவணபவ நிதி அறுமுக குருபர
எனவோதித் தமிழினி லுருகிய
அடியவரிடமுறு
சனனமரணமதை யொழிவுற சிவமுற
தருபிணி து(ள்)ள
வரம் எமதுயிர் சுகமுற அருள்வாயே
கருணைய விழிபொழி
ஒருதனி முதலென வருகரி திருமுகர்
துணைகொளு மிளையவ
கவிதை யமுதமொழி தருபவர்
உயிர்பெற அருள்நேயா
கடலுலகினில்வரும் உயிர்படும் அவதிகள்
கலகம் இனையதுள கழியவும்
நிலைபெறகதியும்
உனதுதிருவடிநிழல் தருவது ஒருநாளே
திரிபுரம் எரிசெயும் இறையவர் அருளிய குமர
சமரபுரி தணிகையு மிகுமுயர்
சிவகிரியிலும்வட மலையிலும் உலவிய வடிவேலா
தினமும் உனது துதி பரவிய அடியவர்
மனது குடியும்
இரு பொருளிலும் இலகுவ
திமிர மலமொழிய
தினகரன் எனவரு பெருவாழ்வே
அரவணை மிசைதுயில் நரகரி நெடியவர்
மருகனெனவெ வரும் அதிசயமுடையவ
அமலி விமலி பரை
உமையவள் அருளிய முருகோனே
அதல விதலமுதல் கிடுகிடு கிடுவென
வருமயிலினிதொளிர்
ஷடுமையில் நடுவுற அழகினுடன்அமரும்
அரகர சிவசிவ பெருமாளே.
Audio/Video Link(s)

Back to Top

Thiruppugazh # 530 அல்லி விழியாலும்   (வள்ளிமலை)  
தய்யதன தான தய்யதன தான
     தய்யதன தானத் ...... தனதான

அல்லிவிழி யாலு முல்லைநகை யாலு
     மல்லல்பட ஆசைக் ...... கடலீயும்
அள்ளவினி தாகி நள்ளிரவு போலு
     முள்ளவினை யாரத் ...... தனமாரும்
இல்லுமிளை யோரு மெல்ல அயலாக
     வல்லெருமை மாயச் ...... சமனாரும்
எள்ளியென தாவி கொள்ளைகொளு நாளில்
     உய்யவொரு நீபொற் ...... கழல்தாராய்
தொல்லைமறை தேடி யில்லையெனு நாதர்
     சொல்லுமுப தேசக் ...... குருநாதா
துள்ளிவிளை யாடு புள்ளியுழை நாண
     வெள்ளிவன மீதுற் ...... றுறைவோனே
வல்லசுரர் மாள நல்லசுரர் வாழ
     வல்லைவடி வேலைத் ...... தொடுவோனே
வள்ளிபடர் சாரல் வள்ளிமலை மேவு
     வள்ளிமண வாளப் ...... பெருமாளே.
அல்லிவிழியாலும்
முல்லைநகையாலும்
அல்லல்பட ஆசைக் கடல் ஈயும்
அள்ள இனிதாகி
நள்ளிரவு போலும் உள்ளவினையார்
அத் தனம் ஆரும் இல்லும்
இளையோரு மெல்ல அயலாக
வல்லெருமை மாயச் சமனாரும்
எள்ளி யெனதாவி கொள்ளைகொளு நாளில்
உய்யவொரு நீபொற்கழல்தாராய்
தொல்லைமறை தேடி யில்லையெனு நாதர்
சொல்லும் உபதேசக் குருநாதா
துள்ளிவிளை யாடு புள்ளியுழை நாண
எள்ளிவன மீதுற்று உறைவோனே
வல் அசுரர் மாள நல்ல சுரர் வாழ
வல்லைவடி வேலைத் தொடுவோனே
வள்ளிபடர் சாரல் வள்ளிமலை மேவு
வள்ளிமண வாளப் பெருமாளே.

Back to Top

Thiruppugazh # 544 வேத வெற்பிலே   (திருக்கழுக்குன்றம்)  
தான தத்த தான தத்த தான தத்த ...... தனதான
     தான தத்த தான தத்த தான தத்த ...... தனதான

வேத வெற்பி லேபு னத்தில் மேவி நிற்கு ...... மபிராம
     வேடு வச்சி பாத பத்ம மீது செச்சை ...... முடிதோய
ஆத ரித்து வேளை புக்க ஆறி ரட்டி ...... புயநேய
     ஆத ரத்தோ டாத ரிக்க ஆன புத்தி ...... புகல்வாயே
காது முக்ர வீர பத்ர காளி வெட்க ...... மகுடாமா
     காச முட்ட வீசி விட்ட காலர் பத்தி ...... யிமையோரை
ஓது வித்த நாதர் கற்க வோது வித்த ...... முநிநாண
     ஓரெ ழுத்தி லாறெ ழுத்தை யோது வித்த ...... பெருமாளே.
வேத வெற்பிலே
புனத்தில் மேவி நிற்கும்
அபிராம
வேடுவச்சி பாத பத்ம மீது
செச்சை முடிதோய ஆதரித்து
வேளை புக்க
ஆறிரட்டி புயநேய
ஆதரத்தோடு ஆதரிக்க
ஆன புத்தி புகல்வாயே
காதும் உக்ர வீர பத்ர காளி
வெட்க மகுடத்தை ஆகாச முட்ட வீசி விட்ட காலர்
பத்தி இமையோரை
ஓது வித்த நாதர் கற்க
ஓது வித்த முநிநாண
ஓரெழுத்தில் ஆறெழுத்தை
ஓது வித்த பெருமாளே.

Back to Top

Thiruppugazh # 557 பகலிரவினில்   (சென்னிமலை)  
தனதனதனத் ...... தனதான
     தனதனதனத் ...... தனதான

பகலிரவினிற் ...... றடுமாறா
     பதிகுருவெனத் ...... தெளிபோத
ரகசியமுரைத் ...... தநுபூதி
     ரதநிலைதனைத் ...... தருவாயே
இகபரமதற் ...... கிறையோனே
     இயலிசையின்முத் ...... தமிழோனே
சகசிரகிரிப் ...... பதிவேளே
     சரவணபவப் ...... பெருமாளே.
பகலிரவினில் தடுமாறா
பதிகுருவெனத் தெளிபோத
ரகசியமுரைத்து
அநுபூதி ரதநிலைதனைத் தருவாயே
இகபரமதற்கு இறையோனே
இயலிசையின் முத்தமிழோனே
சகசிரகிரிப் பதிவேளே
சரவணபவப் பெருமாளே.
Audio/Video Link(s)

Back to Top

Thiruppugazh # 561 வாசித்து   (திருசிராப்பள்ளி)  
தானத்தத் தான தானன தானத்தத் தான தானன
     தானத்தத் தான தானன ...... தந்ததான

வாசித்துக் காணொ ணாதது பூசித்துக் கூடொ ணாதது
     வாய்விட்டுப் பேசொ ணாதது ...... நெஞ்சினாலே
மாசர்க்குத் தோணொ ணாதது நேசர்க்குப் பேரொ ணாதது
     மாயைக்குச் சூழொ ணாதது ...... விந்துநாத
ஓசைக்குத் தூர மானது மாகத்துக் கீற தானது
     லோகத்துக் காதி யானது ...... கண்டுநாயேன்
யோகத்தைச் சேரு மாறுமெய்ஞ் ஞானத்தைப் போதி யாயினி
     யூனத்தைப் போடி டாதும ...... யங்கலாமோ
ஆசைப்பட் டேனல் காவல்செய் வேடிச்சிக் காக மாமய
     லாகிப்பொற் பாத மேபணி ...... கந்தவேளே
ஆலித்துச் சேல்கள் பாய்வய லூரத்திற் காள மோடட
     ராரத்தைப் பூண்ம யூரது ...... ரங்கவீரா
நாசிக்குட் ப்ராண வாயுவை ரேசித்தெட் டாத யோகிகள்
     நாடிற்றுக் காணொ ணாதென ...... நின்றநாதா
நாகத்துச் சாகை போயுயர் மேகத்தைச் சேர்சி ராமலை
     நாதர்க்குச் சாமி யேசுரர் ...... தம்பிரானே.
வாசித்துக் காணொ ணாதது
பூசித்துக் கூடொ ணாதது
வாய்விட்டுப் பேசொ ணாதது
நெஞ்சினாலே மாசர்க்குத் தோணொ ணாதது
நேசர்க்குப் பேரொ ணாதது
மாயைக்குச் சூழொ ணாதது
விந்துநாத ஓசைக்குத் தூர மானது
மாகத்துக் கீற தானது
லோகத்துக் காதி யானது
கண்டுநாயேன்
யோகத்தைச் சேரு மாறு
மெய்ஞ் ஞானத்தைப் போதி யாய்
இனி யூனத்தைப் போடி டாது
மயங்கலாமோ
ஆசைப்பட்டு ஏனல் காவல்செய்
வேடிச்சிக் காக மாமயலாகி
பொற் பாத மேபணி கந்தவேளே
ஆலித்துச் சேல்கள் பாய்
வய லூரத்தில்
காள மோடு அடர் ஆரத்தைப் பூண்
ம யூர துரங்கவீரா
நாசிக்குட் ப்ராண வாயுவை
ரேசித்தெட் டாத யோகிகள்
Audio/Video Link(s)

Back to Top

Thiruppugazh # 567 பத்தியால் யானுனை   (இரத்னகிரி)  
தத்தனா தானனத் ...... தனதான
தத்தனா தானனத் ...... தனதான
வேல் முருகா வேல் முருகா வேல் முருகா வேல்
வேல் முருகா வேல் முருகா வேல் முருகா வேல்

பத்தியால் யானுனைப் ...... பலகாலும்
     பற்றியே மாதிருப் ...... புகழ்பாடி
முத்தனா மாறெனைப் ...... பெருவாழ்வின்
     முத்தியே சேர்வதற் ...... கருள்வாயே
உத்தமா தானசற் ...... குணர்நேயா
     ஒப்பிலா மாமணிக் ...... கிரிவாசா
வித்தகா ஞானசத் ...... திநிபாதா
     வெற்றிவே லாயுதப் ...... பெருமாளே.
பத்தியால் யானுனை
பலகாலும் பற்றியே
மாதிருப்புகழ் பாடி
முத்தனாம் ஆறெனை
பெருவாழ்வின் முத்தியே
சேர்வதற்கு அருள்வாயே
உத்தம அதான
சற் குணர்நேயா
ஒப்பிலா மா
மணிக்கிரிவாசா
வித்தகா
ஞானசத்தி நிபாதா
வெற்றிவே லாயுதப் பெருமாளே.
Audio/Video Link(s)

Back to Top

Thiruppugazh # 568 சீரான கோல கால   (விராலிமலை)  
தானான தான தான தனதன
     தானான தான தான தனதன
          தானான தான தான தனதன ...... தனதான

சீரான கோல கால நவமணி
     மாலாபி ஷேக பார வெகுவித
          தேவாதி தேவர் சேவை செயுமுக ...... மலராறும்
சீராடு வீர மாது மருவிய
     ஈராறு தோளு நீளும் வரியளி
          சீராக மோது நீப பரிமள ...... இருதாளும்
ஆராத காதல் வேடர் மடமகள்
     ஜீமூத மூர்வ லாரி மடமகள்
          ஆதார பூத மாக வலமிட ...... முறைவாழ்வும்
ஆராயு நீதி வேலு மயிலுமெய்ஞ்
     ஞானாபி ராம தாப வடிவமும்
          ஆபாத னேனு நாளு நினைவது ...... பெறவேணும்
ஏராரு மாட கூட மதுரையில்
     மீதேறி மாறி யாடு மிறையவர்
          ஏழேழு பேர்கள் கூற வருபொரு ...... ளதிகாரம்
ஈடாய வூமர் போல வணிகரி
     லூடாடி யால வாயில் விதிசெய்த
          லீலாவி சார தீர வரதர ...... குருநாதா
கூராழி யால்முன் வீய நினைபவ
     னீடேறு மாறு பாநு மறைவுசெய்
          கோபால ராய னேய முளதிரு ...... மருகோனே
கோடாம லார வார அலையெறி
     காவேரி யாறு பாயும் வயலியில்
          கோனாடு சூழ்வி ராலி மலையுறை ...... பெருமாளே.
சீரான கோலகால நவ மணி மால் அபிஷேக பார
வெகு வித தேவாதி தேவர் சேவை செயு முக மலர் ஆறும்
சீராடு வீர மாது மருவிய ஈராறு தோளும்
நீளும் வரி அளி சீராகம் ஓதும் நீப பரிமள இரு தாளும்
ஆராத காதல் வேடர் மட மகள் ஜீமூதம் ஊர் வலாரி மட
மகள்
ஆதார பூதமாக வலம் இடம் உறை வாழ்வும்
ஆராயும் நீதி வேலும் மயிலும்
மெய்ஞ் ஞான அபிராம தாப வடிவமும்
ஆபாதனேனும் நாளும் நினைவது பெற வேணும்
ஏர் ஆரும் மாட கூட மதுரையில் மீது ஏறி மாறி ஆடும்
இறையவர்
ஏழேழு பேர்கள் கூற வரு பொருள் அதிகாரம்
ஈடாய ஊமர் போல வணிகரில் ஊடாடி
ஆலவாயில் விதி செய்த லீலா விசார தீர வரதர குருநாதா
முன் வீய நினைபவன் ஈடேறுமாறு கூர் ஆழியால் பாநு
மறைவு செய்
கோபாலராய நேயம் உள திரு மருகோனே
கோடாமல் ஆரவார அலை எறி காவேரி ஆறு பாயும்
வயலியில்
கோனாடு சூழ் விராலி மலை உறை பெருமாளே.

Back to Top

Thiruppugazh # 571 நிராமய புராதன   (விராலிமலை)  
தனாதன தனாதன தனாதன தனாதன
     தனாதன தனாதனத் ...... தனதான

நிராமய புராதன பராபர வராம்ருத
     நிராகுல சிராதிகப் ...... ப்ரபையாகி
நிராசசி வராஜத வராஜர்கள் பராவிய
     நிராயுத புராரியச் ...... சுதன்வேதா
சுராலய தராதல சராசர பிராணிகள்
     சொரூபமி வராதியைக் ...... குறியாமே
துரால்புகழ் பராதின கராவுள பராமுக
     துரோகரை தராசையுற் ...... றடைவேனோ
இராகவ இராமன்முன் இராவண இராவண
     இராவண இராஜனுட் ...... குடன்மாய்வென்
றிராகன்ம லராணிஜ புராணர்கு மராகலை
     யிராஜசொ லவாரணர்க் ...... கிளையோனே
விராகவ சுராதிப பொராதுத விராதடு
     விராயண பராயணச் ...... செருவூரா
விராவிய குராவகில் பராரைமு திராவளர்
     விராலிம லைராஜதப் ...... பெருமாளே.
நிராமய புராதன
பராபர
வராம்ருத
நிராகுல
சிராதிகப் ப்ரபையாகி
நிராச
சிவராஜ தவராஜர்கள் பராவிய
நிராயுத புர அரி
அச்சுதன்வேதா
சுராலய தராதல
சர அசர பிராணிகள்
சொரூபமிவர்
ஆதியைக் குறியாமே
துரால்புகழ்
பர ஆதின
கராவுள
பராமுக துரோகரை
தராசையுற்று அடைவேனோ
இராகவ இராமன் முன்
இராவண இராவண இராவண இராஜன்
உட்குடன்மாய் வென்ற
இராகன்மலர் ஆள்
நிஜ புராணர் குமரா
கலை இராஜ
சொலவாரணர்க்கு இளையோனே
விராகவ சுராதிப
பொராது தவிராது அடு
விராயண பராயண
செருவூரா
விராவிய குராவகில்
பராரை முதிராவளர்
விராலிமலை ராஜதப் பெருமாளே.
Audio/Video Link(s)

Back to Top

Thiruppugazh # 585 அன்பாக வந்து   (திருச்செங்கோடு)  
தந்தான தந்த தந்தான தந்த
தந்தான தந்த ...... தனதான
செங்கோட மர்ந்த ...... பெருமாளே
மங்காம லுன்ற ...... னருள்தாராய்

அன்பாக வந்து உன்றாள் பணிந்து
     ஐம்பூத மொன்ற ...... நினையாமல்
அன்பால் மிகுந்து நஞ்சாரு கண்க
     ளம்போரு கங்கள் ...... முலைதானும்
கொந்தே மிகுந்து வண்டாடி நின்று
     கொண்டாடு கின்ற ...... குழலாரைக்
கொண்டே நினைந்து மன்பேது மண்டி
     குன்றா மலைந்து ...... அலைவேனோ
மன்றாடி தந்த மைந்தா மிகுந்த
     வம்பார் கடம்பை ...... யணிவோனே
வந்தே பணிந்து நின்றார் பவங்கள்
     வம்பே தொலைந்த ...... வடிவேலா
சென்றே யிடங்கள் கந்தா எனும்பொ
     செஞ்சேவல் கொண்டு ...... வரவேணும்
செஞ்சாலி கஞ்ச மொன்றாய் வளர்ந்த
     செங்கோ டமர்ந்த ...... பெருமாளே.
அன்பாக வந்து உன்தாள் பணிந்து
ஐம்பூதம் ஒன்ற நினையாமல்
அன்பால் மிகுந்து
நஞ்சாரு கண்கள்
அம்போருகங்கள் முலைதானும்
கொந்தே மிகுந்து
வண்டாடி நின்று கொண்டாடுகின்ற
குழலாரைக் கொண்டே நினைந்து
மன்பேது மண்டி
குன்றா மலைந்து அலைவேனோ
மன்றாடி தந்த மைந்தா
மிகுந்த வம்பார் கடம்பை அணிவோனே
வந்தே பணிந்து நின்றார் பவங்கள்
வம்பே தொலைந்த வடிவேலா
சென்றே யிடங்கள் கந்தா எனும்பொ
செஞ்சேவல் கொண்டு வரவேணும்
செஞ்சாலி கஞ்சம் ஒன்றாய் வளர்ந்த
செங்கோடு அமர்ந்த பெருமாளே.
Audio/Video Link(s)

Back to Top

Thiruppugazh # 586 பந்து ஆடி அம் கை   (திருச்செங்கோடு)  
தந்தான தந்த தந்தான தந்த
தந்தான தந்த ...... தனதான
செங்கோட மர்ந்த ...... பெருமாளே
மங்காம லுன்ற ...... னருள்தாராய்

பந்தாடி யங்கை நொந்தார் பரிந்து
     பைந்தார் புனைந்த ...... குழல்மீதே
பண்பார் சுரும்பு பண்பாடு கின்ற
     பங்கே ருகங்கொள் ...... முகமீதே
மந்தார மன்றல் சந்தார மொன்றி
     வன்பாத கஞ்செய் ...... தனமீதே
மண்டாசை கொண்டு விண்டாவி நைந்து
     மங்காம லுன்ற ...... னருள்தாராய்
கந்தா அரன்றன் மைந்தா விளங்கு
     கன்றா முகுந்தன் ...... மருகோனே
கன்றா விலங்க லொன்றாறு கண்ட
     கண்டா வரம்பை ...... மணவாளா
செந்தா தடர்ந்த கொந்தார் கடம்பு
     திண்டோள் நிரம்ப ...... அணிவோனே
திண்கோ டரங்க ளெண்கோ டுறங்கு
     செங்கோட மர்ந்த ...... பெருமாளே.
பந்து ஆடி அம் கை நொந்தார் பரிந்து பைம் தார் புனைந்த
குழல் மீதே
பண்பு ஆர் சுரும்பு பண் பாடுகின்ற பங்கேருகம் கொள் முகம்
மீதே
மந்தார மன்றல் சந்து ஆரம் ஒன்றி வன் பாதகம் செய் தனம்
மீதே
மண்டு ஆசை கொண்டு விண்டு ஆவி நைந்து
மங்காமல் உன் தன் அருள் தாராய்
கந்தா அரன் தன் மைந்தா விளங்கு கன்று ஆ முகுந்தன்
மருகோனே
கன்றா விலங்கல் ஒன்று ஆறு கண்ட கண்டா அரம்பை
மணவாளா
செம் தாது அடர்ந்த கொந்து ஆர் கடம்பு திண் தோள் நிரம்ப
அணிவோனே
திண் கோடரங்கள் எண்கோடு உறங்கு செங்கோடு அமர்ந்த
பெருமாளே.

Back to Top

Thiruppugazh # 598 காலனிடத்து   (திருச்செங்கோடு)  
தான தனத் ...... தனதான
காலனிடத் ...... தணுகாதே
காசினியிற் ...... பிறவாதே
சீலஅகத் ...... தியஞான
தேனமுதைத் ...... தருவாயே
மாலயனுக் ...... கரியானே
மாதவரைப் ...... பிரியானே
நாலுமறைப் ...... பொருளானே
நாககிரிப் ...... பெருமாளே.
காலனிடத்து அணுகாதே
காசினியிற் பிறவாதே
சீலஅகத்திய ஞான
தேனமுதைத் தருவாயே
மாலயனுக்கு அரியானே
மாதவரைப் பிரியானே
நாலுமறைப் பொருளானே
நாககிரிப் பெருமாளே.
Audio/Video Link(s)

Back to Top

Thiruppugazh # 599 தாமா தாம ஆலாபா   (திருச்செங்கோடு)  
தானா தானா தானா தானா
தானா தானத் ...... தனதான
சீரா ரூரிற் ...... பெருவாழ்வே
தேவே தேவப் ...... பெருமாளே.

தாமா தாமா லாபா லோகா
     தாரா தாரத் ...... தரணீசா
தானா சாரோ பாவா பாவோ
     நாசா பாசத் ...... தபராத
யாமா யாமா தேசா ரூடா
     யாரா யாபத் ...... தெனதாவி
யாமா காவாய் தீயே னீர்வா
     யாதே யீமத் ...... துகலாமோ
காமா காமா தீனா நீணா
     காவாய் காளக் ...... கிரியாய்கங்
காளா லீலா பாலா நீபா
     காமா மோதக் ...... கனமானின்
தேமார் தேமா காமீ பாகீ
     தேசா தேசத் ...... தவரோதுஞ்
சேயே வேளே பூவே கோவே
     தேவே தேவப் ...... பெருமாளே.
தாமா தாம ஆலாபா லோக ஆதாரா
தார(ம்) தரணி ஈசா
தான ஆசாரோ பாவா பாவோ நாசா
பாசத்து அபராத யாமா யாமா தேசார் ஊடு
ஆராயா ஆபத்து எனது ஆவி ஆமா காவாய்
தீயேன் நீர் வாயாதே ஈமத்து உகலாமோ
காமா காம ஆதீனா நீள் நாகா வாய் காள கிரியாய்
கங்காளா லீலா பாலா நீபா
காம ஆமோதக் கன மானின்
தேம் ஆர் தே மா காமீ பாகீ
தேசா தேசத்தவர் ஓதும் சேயே
வேளே பூவே கோவே தேவே தேவப் பெருமாளே.

Back to Top

Thiruppugazh # 602 பத்தர் கணப்ரிய   (திருச்செங்கோடு)  
தத்தன தத்தன தத்தன தத்தன
     தத்தன தத்தன ...... தனதான
நந்தவனத்தில் ஓர் ஆண்டி

பத்தர்க ணப்ரிய நிர்த்தந டித்திடு
     பட்சிந டத்திய ...... குகபூர்வ
பச்சிம தட்சிண வுத்தர திக்குள
     பத்தர்க ளற்புத ...... மெனவோதுஞ்
சித்ரக வித்துவ சத்தமி குத்ததி
     ருப்புக ழைச்சிறி ...... தடியேனுஞ்
செப்பென வைத்துல கிற்பர வத்தெரி
     சித்தவ நுக்ரக ...... மறவேனே
கத்திய தத்தைக ளைத்துவி ழத்திரி
     கற்கவ ணிட்டெறி ...... தினைகாவல்
கற்றகு றத்திநி றத்தக ழுத்தடி
     கட்டிய ணைத்தப ...... னிருதோளா
சத்தியை யொக்கஇ டத்தினில் வைத்தத
     கப்பனு மெச்சிட ...... மறைநூலின்
தத்துவ தற்பர முற்றுமு ணர்த்திய
     சர்ப்பகி ரிச்சுரர் ...... பெருமாளே.
பத்தர் கணப்ரிய
நிர்த்த நடித்திடு பட்சி
நடத்திய குக
பூர்வ பச்சிம தட்சிண உத்தர திக்குள
பத்தர்கள் அற்புதம் எனவோதும்
சித்ர கவித்துவ சத்தமிகுத்த
திருப்புகழைச் சிறிதடியேனும்
செப்பென வைத்து
உலகிற்பரவ
தெரிசித்த அநுக்ரகம் மறவேனே
கத்திய தத்தை களைத்துவிழ
திரி கற்கவணிட்டெறி
தினைகாவல் கற்ற குறத்தி
நிறத்த கழுத்தடி கட்டியணைத்த
பனிருதோளா
சத்தியை யொக்க இடத்தினில் வைத்த
தகப்பனு மெச்சிட
மறைநூலின் தத்துவ தற்பர முற்றும் உணர்த்திய
சர்ப்பகிரிச்சுரர் பெருமாளே.

Back to Top

Thiruppugazh # 610 மனையவள் நகைக்க   (ஞானமலை)  
தனதன தனத்த தான தனதன தனத்த தான
     தனதன தனத்த தான ...... தனதான

மனையவள் நகைக்க வூரி னனைவரு நகைக்க லோக
     மகளிரு நகைக்க தாதை ...... தமரோடும்
மனமது சலிப்ப நாய னுளமது சலிப்ப யாரும்
     வசைமொழி பிதற்றி நாளு ...... மடியேனை
அனைவரு மிழிப்ப நாடு மனவிருள் மிகுத்து நாடி
     னகமதை யெடுத்த சேம ...... மிதுவோவென்
றடியனு நினைத்து நாளு முடலுயிர் விடுத்த போது
     மணுகிமு னளித்த பாத ...... மருள்வாயே
தனதன தனத்த தான எனமுர சொலிப்ப வீணை
     தமருக மறைக்கு ழாமு ...... மலைமோதத்
தடிநிக ரயிற்க டாவி யசுரர்க ளிறக்கு மாறு
     சமரிடை விடுத்த சோதி ...... முருகோனே
எனைமன முருக்கி யோக அநுபுதி யளித்த பாத
     எழுதரிய பச்சை மேனி ...... யுமைபாலா
இமையவர் துதிப்ப ஞான மலையுறை குறத்தி பாக
     இலகிய சசிப்பெண் மேவு ...... பெருமாளே.
மனையவள் நகைக்க வூரின் அனைவரு நகைக்க
லோக மகளிரு நகைக்க
தாதை தமரோடும் மனமது சலிப்ப
நாயன் உளமது சலிப்ப
யாரும் வசைமொழி பிதற்றி
நாளும் அடியேனை அனைவரும் இழிப்ப
நாடு மனவிருள் மிகுத்து
நாடின் அகமதை யெடுத்த சேமம்
இதுவோவென்று அடியனு நினைத்து நாளும்
உடலுயிர் விடுத்த போதும்
அணுகிமுன் அளித்த பாதம் அருள்வாயே
தனதன தனத்த தான என முரசொலிப்ப
வீணை தமருக மறைக்குழாமும் அலைமோத
தடிநிகர் அயிற்கடாவி
அசுரர்கள் இறக்குமாறு சமரிடை விடுத்த சோதி
முருகோனே
எனைமனம் உருக்கி யோக அநுபுதி யளித்த பாத
எழுதரிய பச்சை மேனி உமைபாலா
இமையவர் துதிப்ப ஞான மலையுறை குறத்தி பாக
இலகிய சசிப்பெண் மேவு பெருமாளே.

Back to Top

Thiruppugazh # 616 ஐங்கரனை   (கொங்கணகிரி)  
தந்ததன தத்ததன தந்ததன தத்ததன
     தந்ததன தத்ததன ...... தனதான

ஐங்கரனை யொத்தமன மைம்புலம கற்றிவள
     ரந்திபக லற்றநினை ...... வருள்வாயே
அம்புவித னக்குள்வளர் செந்தமிழ்வ ழுத்தியுனை
     அன்பொடுது திக்கமன ...... மருள்வாயே
தங்கியத வத்துணர்வு தந்தடிமை முத்திபெற
     சந்திரவெ ளிக்குவழி ...... யருள்வாயே
தண்டிகைக னப்பவுசு எண்டிசைம திக்கவளர்
     சம்ப்ரமவி தத்துடனெ ...... யருள்வாயே
மங்கையர்சு கத்தைவெகு இங்கிதமெ னுற்றமன
     முன்றனைநி னைத்தமைய ...... அருள்வாயே
மண்டலிக ரப்பகலும் வந்தசுப ரட்சைபுரி
     வந்தணைய புத்தியினை ...... யருள்வாயே
கொங்கிலுயிர் பெற்றுவளர் தென்கரையி லப்பரருள்
     கொண்டுஉட லுற்றபொரு ...... ளருள்வாயே
குஞ்சரமு கற்கிளைய கந்தனென வெற்றிபெறு
     கொங்கணகி ரிக்குள்வளர் ...... பெருமாளே.
ஐங்கரனை ஒத்த மனம்
ஐம்புலம் அகற்றி
வளர் அந்தி பகல் அற்ற நினைவு
அருள்வாயே
அம்புவி தனக்குள் வளர் செந்தமிழ்
வழுத்தியுனை அன்பொடு துதிக்க
மனம் அருள்வாயே
தங்கிய தவத் துணர்வு தந்து
அடிமை முத்தி பெற
சந்திர வெளிக்கு வழி அருள்வாயே
தண்டிகை ககனப்பவுசு
எண்டிசை மதிக்க
வளர் சம்ப்ரம விதத்துடனே அருள்வாயே
மங்கையர் சுகத்தை வெகு இங்கிதமெனுற்றமனம்
உன்றனை நினைத் தமைய அருள்வாயே
மண்டலிக ரப்பகலும் வந்தசுப ரட்சைபுரி
வந்தணைய புத்தியினை அருள்வாயே
கொங்கிலுயிர் பெற்றுவளர் தென்கரையில்
அப்பரருள் கொண்டு உடலுற்ற பொருள் அருள்வாயே
குஞ்சர முகற்கிளைய கந்தனென வெற்றி பெறு
கொங்கண கிரிக்குள் வளர் பெருமாளே.
Audio/Video Link(s)

Back to Top

Thiruppugazh # 635 அல்லில் நேரும்   (வள்ளியூர்)  
தய்ய தானன ...... தனதான
அல்லில் நேருமி ...... னதுதானும்
அல்ல தாகிய ...... உடல்மாயை
கல்லி னேரஅ ...... வழிதோறுங்
கையு நானுமு ...... லையலாமோ
சொல்லி நேர்படு ...... முதுசூரர்
தொய்ய வூர்கெட ...... விடும்வேலா
வல்லி மாரிரு ...... புறமாக
வள்ளி யூருறை ...... பெருமாளே.
அல்லில் நேரும் மின்னதுதானும்
அல்லதாகிய உடல் மாயை
கல்லி னேரஅவ்வழிதோறும்
கையும் நானும் உலையலாமோ
சொல்லி நேர்படு முதுசூரர்
தொய்ய வூர்கெட விடும்வேலா
வல்லிமார் இருபுறமாக
வள்ளியூர் உறை பெருமாளே.

Back to Top

Thiruppugazh # 636 திருமகள் உலாவும்   (கதிர்காமம்)  
தனதனன தான தனதனன தான
     தனதனன தானத் ...... தனதான

திருமகளு லாவு மிருபுயமு ராரி
     திருமருக நாமப் ...... பெருமாள்காண்
செகதலமும் வானு மிகுதிபெறு பாடல்
     தெரிதருகு மாரப் ...... பெருமாள்காண்
மருவுமடி யார்கள் மனதில்விளை யாடு
     மரகதம யூரப் ...... பெருமாள்காண்
மணிதரளம் வீசி யணியருவி சூழ
     மருவுகதிர் காமப் ...... பெருமாள்காண்
அருவரைகள் நீறு படஅசுரர் மாள
     அமர்பொருத வீரப் ...... பெருமாள்காண்
அரவுபிறை வாரி விரவுசடை வேணி
     அமலர்குரு நாதப் ...... பெருமாள்காண்
இருவினையி லாத தருவினைவி டாத
     இமையவர்கு லேசப் ...... பெருமாள்காண்
இலகுசிலை வேடர் கொடியினதி பார
     இருதனவி நோதப் ...... பெருமாளே.
திருமகள் உலாவும் இருபுய
முராரி திருமருக நாமப் பெருமாள்காண்
செகதலமும் வானும்
மிகுதிபெறு பாடல்
தெரிதரு குமாரப் பெருமாள்காண்
மருவும் அடியார்கள் மனதில்விளையாடு
மரகதமயூரப் பெருமாள்காண்
மணிதரளம் வீசி யணியருவி சூழ
மருவு கதிர்காமப் பெருமாள்காண்
அருவரைகள் நீறு படஅசுரர் மாள
அமர்பொருத வீரப் பெருமாள்காண்
அரவுபிறை வாரி விரவுசடை வேணி
அமலர்குரு நாதப் பெருமாள்காண்
இருவினையிலாத
தருவினைவி டாத இமையவர்
குலேசப் பெருமாள்காண்
இலகுசிலை வேடர் கொடியின்
அதிபார இருதனவிநோதப் பெருமாளே.
Audio/Video Link(s)

Back to Top

Thiruppugazh # 638 உடுக்கத் துகில்   (கதிர்காமம்)  
தனத்தத் தனதான தானன
     தனத்தத் தனதான தானன
          தனத்தத் தனதான தானன ...... தனதான

உடுக்கத் துகில்வேணு நீள்பசி
     யவிக்கக் கனபானம் வேணுநல்
          ஒளிக்குப் புனலாடை வேணுமெய் ...... யுறுநோயை
ஒழிக்கப் பரிகாரம் வேணுமுள்
     இருக்கச் சிறுநாரி வேணுமொர்
          படுக்கத் தனிவீடு வேணுமிவ் ...... வகையாவுங்
கிடைத்துக் க்ருஹவாசி யாகிய
     மயக்கக் கடலாடி நீடிய
          கிளைக்குப் பரிபால னாயுயி ...... ரவமேபோம்
க்ருபைச்சித் தமுஞான போதமு
     மழைத்துத் தரவேணு மூழ்பவ
          கிரிக்குட் சுழல்வேனை யாளுவ ...... தொருநாளே
குடக்குச் சிலதூதர் தேடுக
     வடக்குச் சிலதூதர் நாடுக
          குணக்குச் சிலதூதர் தேடுக ...... வெனமேவிக்
குறிப்பிற் குறிகாணு மாருதி
     யினித்தெற் கொருதூது போவது
          குறிப்பிற் குறிபோன போதிலும் ...... வரலாமோ
அடிக்குத் திரகார ராகிய
     அரக்கர்க் கிளையாத தீரனு
          மலைக்கப் புறமேவி மாதுறு ...... வனமேசென்
றருட்பொற் றிருவாழி மோதிர
     மளித்துற் றவர்மேல் மனோகர
          மளித்துக் கதிர்காம மேவிய ...... பெருமாளே.
உடுக்கத் துகில் வேணும்
நீள்பசியவிக்கக் கனபானம் வேணும்
நல்ஒளிக்குப் புனலாடை வேணும்
மெய்யுறு நோயை ஒழிக்கப் பரிகாரம் வேணும்
உள்இருக்கச் சிறுநாரி வேணும்
படுக்க யொர் தனிவீடு வேணும்
இவ் வகையாவுங் கிடைத்து
க்ருஹவாசியாகி அம்மயக்க கடல் ஆடி
நீடிய கிளைக்குப் பரிபாலனாய்
உயிர் அவமேபோம்
க்ருபைச்சித்தமு ஞான போதமும்
அழைத்துத் தரவேணும்
ஊழ்பவ கிரிக்குட் சுழல்வேனை
ஆளுவது ஒருநாளே
குடக்குச் சிலதூதர் தேடுக
வடக்குச் சிலதூதர் நாடுக
குணக்குச் சிலதூதர் தேடுகவென மேவி
குறிப்பிற் குறிகாணு மாருதி
இனித் தெற்கொரு தூது போவது
குறிப்பிற் குறிபோன போதிலும் வரலாமோ
அடிக் குத்திரகாரராகிய
அரக்கர்க்கு இளையாத தீரனும்
அலைக்கு அப்புறமேவி
மாதுறு வனமேசென்று
அருட்பொற் றிருவாழி மோதிரமளித்து
உற்றவர்மேல் மனோகரம் அளித்து
கதிர்காம மேவிய பெருமாளே.

Back to Top

Thiruppugazh # 656 அடல் அரி மகவு   (வெள்ளிகரம்)  
தனதன தனன தனதன தனன
     தய்ய தனத்த தந்த ...... தனதானா

அடலரி மகவு விதிவழி யொழுகு
     மைவ ருமொய்க்கு ரம்பை ...... யுடனாளும்
அலைகட லுலகி லலம்வரு கலக
     வைவர் தமக்கு டைந்து ...... தடுமாறி
இடர்படு மடிமை யுளமுரை யுடலொ
     டெல்லை விடப்ர பஞ்ச ...... மயல்தீர
எனதற நினது கழல்பெற மவுன
     வெல்லை குறிப்ப தொன்று ...... புகல்வாயே
வடமணி முலையு மழகிய முகமும்
     வள்ளை யெனத்த யங்கு ...... மிருகாதும்
மரகத வடிவு மடலிடை யெழுதி
     வள்ளி புனத்தில் நின்ற ...... மயில்வீரா
விடதர திகுணர் சசிதரர் நிமலர்
     வெள்ளி மலைச்ச யம்பு ...... குருநாதா
விகசித கமல பரிபுர முளரி
     வெள்ளி கரத்த மர்ந்த ...... பெருமாளே.
அடல் அரி மகவு விதி வழி ஒழுகு(ம்)
ஐவரும் மொய் குரம்பையுடன் நாளும்
அலைகடல் உலகில் அலம் வரு கலக
ஐவர் தமக்கு உடைந்து தடுமாறி
இடர் படும் அடிமை உளம் உரை உடலொடு
எல்லை விட ப்ரபஞ்ச மயல் தீர
எனது அற நினது கழல் பெற
மவுன எல்லை குறிப்பது ஒன்று புகல்வாயே
வட மணி முலையும் அழகிய முகமும்
வள்ளை என தயங்கும் இரு காதும் மரகத வடிவும்
மடல் இடை எழுதி வள்ளி புனத்தில் நின்ற மயில் வீரா
விடதர் அதி குணர் சசிதரர் நிமலர்
வெள்ளி மலை சயம்பு குருநாதா
விகசிதம் கமல பரிபுர முளரி
வெள்ளி கரத்து அமர்ந்த பெருமாளே.
Audio/Video Link(s)

Back to Top

Thiruppugazh # 664 வதன சரோருக   (வெள்ளிகரம்)  
தனன தனாதன தனன தனாதன தய்ய தனத்த தந்த
     தானாதன தானந் தானன ...... தந்ததான

வதன சரோருக நயன சிலீமுக வள்ளி புனத்தில் நின்று
     வாராய்பதி காதங் காதரை ...... யொன்றுமூரும்
வயலு மொரேவிடை யெனவொரு காவிடை வல்லப மற்றழிந்து
     மாலாய்மட லேறுங் காமுக ...... எம்பிரானே
இதவிய காணிவை ததையென வேடுவ னெய்திடு மெச்சில் தின்று
     லீலாசல மாடுந் தூயவன் ...... மைந்தநாளும்
இளையவ மூதுரை மலைகிழ வோனென வெள்ள மெனக் கலந்து
     நூறாயிர பேதஞ் சாதமொ ...... ழிந்தவாதான்
கதைகன சாபதி கிரிவளை வாளொடு கைவசி வித்தநந்த
     கோபாலம கீபன் தேவிம ...... கிழ்ந்துவாழக்
கயிறொ டுலூகல முருள வுலாவிய கள்வ னறப் பயந்து
     ஆகாயக பாலம் பீறநி ...... மிர்ந்துநீள
விதரண மாவலி வெருவ மகாவ்ருத வெள்ள வெளுக்க நின்ற
     நாராயண மாமன் சேயைமு ...... னிந்தகோவே
விளைவய லூடிடை வளைவிளை யாடிய வெள்ளிநகர்க் கமர்ந்த
     வேலாயுத மேவுந் தேவர்கள் ...... தம்பிரானே.
வதன சரோருக நயன சிலீமுக
வள்ளி புனத்தில் நின்று
வாராய்பதி காதங் காதரை
ஒன்றுமூரும் வயலும் ஒரே இடை
எனவொரு காவிடை வல்லபம் அற்றழிந்து
மாலாய் மடல் ஏறுங் காமுக எம்பிரானே
இதவிய காண் இவை ததையென
வேடுவன் எய்திடும் எச்சில் தின்று
லீலாசலம் ஆடுந் தூயவன் மைந்த
நாளும் இளையவ
மூதுரை மலைகிழவோனென
வெள்ள மெனக் கலந்து
நூறாயிர பேதஞ் சாதம் ஒழிந்தவாதான்
கதை கன சாப
திகிரி வளை
வாளொடு கை வசிவித்த
நந்த கோபால மகீபன் தேவி மகிழ்ந்துவாழ
கயிறொடு உலூகலம் உருள உலாவிய கள்வன்
அறப் பயந்து ஆகாய கபாலம் பீற நிமிர்ந்துநீள
விதரண மாவலி வெருவ
மகாவ்ருத வெள்ள வெளுக்க நின்ற
நாராயண மாமன் சேயை முனிந்தகோவே
விளைவயலூடிடை வளைவிளையாடிய
வெள்ளிநகர்க் கமர்ந்த வேலாயுத
மேவுந் தேவர்கள் தம்பிரானே.

Back to Top

Thiruppugazh # 675 புவிபுனல் காலும்   (திருவாலங்காடு)  
தனதன தானந் தாத்த தனதன தானந் தாத்த
     தனதன தானந் தாத்த ...... தனதான

புவிபுனல் காலுங் காட்டி சிகியொடு வானுஞ் சேர்த்தி
     புதுமன மானும் பூட்டி ...... யிடையூடே
பொறிபுல னீரைந் தாக்கி கருவிகள் நாலுங் காட்டி
     புகல்வழி நாலைந் தாக்கி ...... வருகாயம்
பவவினை நூறுங் காட்டி சுவமதி தானுஞ் சூட்டி
     பசுபதி பாசங் காட்டி ...... புலமாயப்
படிமிசை போவென் றோட்டி அடிமையை நீவந் தேத்தி
     பரகதி தானுங் காட்டி ...... யருள்வாயே
சிவமய ஞானங் கேட்க தவமுநி வோரும் பார்க்க
     திருநட மாடுங் கூத்தர் ...... முருகோனே
திருவளர் மார்பன் போற்ற திசைமுக னாளும் போற்ற
     ஜெகமொடு வானங் காக்க ...... மயிலேறிக்
குவடொடு சூரன் தோற்க எழுகடல் சூதந் தாக்கி
     குதர்வடி வேலங் கோட்டு ...... குமரேசா
குவலயம் யாவும் போற்ற பழனையி லாலங் காட்டில்
     குறமகள் பாதம் போற்று ...... பெருமாளே.
புவிபுனல் காலுங் காட்டி
சிகியொடு வானுஞ் சேர்த்தி
புதுமன மானும் பூட்டி
இடையூடே பொறிபுலன் ஈரைந்தாக்கி
கருவிகள் நாலுங் காட்டி
புகல்வழி நாலைந் தாக்கி
வருகாயம்
பவவினை நூறுங் காட்டி
சுவமதி தானுஞ் சூட்டி
பசுபதி பாசங் காட்டி
புலமாயப் படிமிசை போவென்று ஓட்டி
அடிமையை நீவந்து ஏத்தி
பரகதி தானுங் காட்டி யருள்வாயே
சிவமய ஞானங் கேட்க
தவமுநிவோரும் பார்க்க
திருநட மாடுங் கூத்தர் முருகோனே
திருவளர் மார்பன் போற்ற
திசைமுகன் நாளும் போற்ற
ஜெகமொடு வானங் காக்க மயிலேறி
குவடொடு சூரன் தோற்க எழுகடல் சூதந் தாக்கி
குதர்வடி வேல் அங்கு ஓட்டு குமரேசா
குவலயம் யாவும் போற்ற பழனையில் ஆலங் காட்டில்
குறமகள் பாதம் போற்று பெருமாளே.

Back to Top

Thiruppugazh # 676 வடிவது நீலம்   (திருவாலங்காடு)  
தனதன தானந் தாத்த தனதன தானந் தாத்த
     தனதன தானந் தாத்த ...... தனதான

வடிவது நீலங் காட்டி முடிவுள காலன் கூட்டி
     வரவிடு தூதன் கோட்டி ...... விடுபாசம்
மகனொடு மாமன் பாட்டி முதலுற வோருங் கேட்டு
     மதிகெட மாயந் தீட்டி ...... யுயிர்போமுன்
படிமிசை தாளுங் காட்டி யுடலுறு நோய்பண் டேற்ற
     பழவினை பாவந் தீர்த்து ...... னடியேனைப்
பரிவொடு நாளுங் காத்து விரிதமி ழாலங் கூர்த்த
     பரபுகழ் பாடென் றாட்கொ ...... டருள்வாயே
முடிமிசை சோமன் சூட்டி வடிவுள ஆலங் காட்டில்
     முதிர்நட மாடுங் கூத்தர் ...... புதல்வோனே
முருகவிழ் தாருஞ் சூட்டி யொருதனி வேழங் கூட்டி
     முதல்மற மானின் சேர்க்கை ...... மயல்கூர்வாய்
இடியென வேகங் காட்டி நெடிதரு சூலந் தீட்டி
     யெதிர்பொரு சூரன் தாக்க ...... வரஏகி
இலகிய வேல்கொண் டார்த்து உடலிரு கூறன் றாக்கி
     யிமையவ ரேதந் தீர்த்த ...... பெருமாளே.
வடிவது நீலம் காட்டி முடிவுள காலன் கூட்டிவர விடு
தூதன்
கோட்டி விடு பாசம்
மகனொடு மாமன் பாட்டி முதல் உறவோரும் கேட்டு மதி
கெட
மாயம் தீட்டி உயிர் போ முன்
படி மிசை தாளும் காட்டி உடல் உறு நோய் பண்டு ஏற்ற பழ
வினை பாவம் தீர்த்து
அடியேனை பரிவோடு நாளும் காத்து
விரி தமிழால் அம் கூர்த்த பர புகழ் பாடு என்று ஆட்
கொண்டு அருள்வாயே
முடி மிசை சோமன் சூட்டி வடிவுள ஆலங்காட்டில்
முதிர் நடமாடும் கூத்தர் புதல்வோனே
முருகு அவிழ் தாரும் சூட்டி ஒரு தனி வேழம் கூட்டி
முதல் மற மானின் சேர்க்கை மயல் கூர்வாய்
இடி என வேகம் காட்டி நெடிதரு சூலம் தீட்டி
எதிர் பொரு சூரன் தாக்க வர ஏகி
இலகிய வேல் கொண்டு ஆர்த்து உடல் இரு கூறு அன்று
ஆக்கி
இமையவர் ஏதம் தீர்த்த பெருமாளே.

Back to Top

Thiruppugazh # 724 அண்டர்பதி குடியேற   (சிறுவை)  
தந்ததன தனதான தந்ததன தனதான
     தந்ததன தனதான ...... தனதான

அண்டர்பதி குடியேற மண்டசுரர் உருமாற
     அண்டர்மன மகிழ்மீற ...... வருளாலே
அந்தரியொ டுடனாடு சங்கரனு மகிழ்கூர
     ஐங்கரனு முமையாளு ...... மகிழ்வாக
மண்டலமு முநிவோரு மெண்டிசையி லுளபேரு
     மஞ்சினனு மயனாரு ...... மெதிர்காண
மங்கையுட னரிதானு மின்பமுற மகிழ்கூற
     மைந்துமயி லுடனாடி ...... வரவேணும்
புண்டரிக விழியாள அண்டர்மகள் மணவாள
     புந்திநிறை யறிவாள ...... வுயர்தோளா
பொங்குகட லுடனாகம் விண்டுவரை யிகல்சாடு
     பொன்பரவு கதிர்வீசு ...... வடிவேலா
தண்டரள மணிமார்ப செம்பொனெழில் செறிரூப
     தண்டமிழின் மிகுநேய ...... முருகேசா
சந்ததமு மடியார்கள் சிந்தையது குடியான
     தண்சிறுவை தனில்மேவு ...... பெருமாளே.
அண்டர்பதி குடியேற
மண்டசுரர் உருமாற
அண்டர்மன மகிழ்மீற அருளாலே
அந்தரியொடு உடனாடு சங்கரனு மகிழ்கூர
ஐங்கரனும் உமையாளு மகிழ்வாக
மண்டலமு முநிவோரும் எண்டிசையி லுளபேரு
மஞ்சினனும் அயனாரும் எதிர்காண
மங்கையுடன் அரிதானும் இன்பமுற மகிழ்கூற
மைந்து மயிலுடன் ஆடி வரவேணும்
புண்டரிக விழியாள
அண்டர்மகள் மணவாளா
புந்திநிறை யறிவாள வுயர்தோளா
பொங்குகடலுடன் நாகம் விண்டு
வரை யிகல்சாடு
பொன்பரவு கதிர்வீசு வடிவேலா
தண் தரள மணிமார்ப
செம்பொனெழில் செறிரூப
தண்டமிழின் மிகுநேய முருகேசா
சந்ததமும் அடியார்கள் சிந்தையது குடியான
தண்சிறுவை தனில்மேவு பெருமாளே.
Audio/Video Link(s)

Back to Top

Thiruppugazh # 725 சீதள வாரிஜ   (சிறுவை)  
தானன தானன தானான தானன
     தானன தானன தானான தானன
          தானன தானன தானான தானன ...... தனதான

சீதள வாரிஜ பாதாந மோநம
     நாரத கீதவி நோதாந மோநம
          சேவல மாமயில் ப்ரீதாந மோநம ...... மறைதேடுஞ்
சேகர மானப்ர தாபாந மோநம
     ஆகம சாரசொ ரூபாந மோநம
          தேவர்கள் சேனைம கீபாந மோநம ...... கதிதோயப்
பாதக நீவுகு டாராந மோநம
     மாவசு ரேசக டோராந மோநம
          பாரினி லேஜய வீராந மோநம ...... மலைமாது
பார்வதி யாள்தரு பாலாந மோநம
     நாவல ஞானம னோலாந மோநம
          பாலகு மாரசு வாமீந மோநம ...... அருள்தாராய்
போதக மாமுக னேரான சோதர
     நீறணி வேணியர் நேயாப்ர பாகர
          பூமக ளார்மரு கேசாம கோததி ...... யிகல்சூரா
போதக மாமறை ஞானாத யாகர
     தேனவிழ் நீபந றாவாரு மார்பக
          பூரண மாமதி போலாறு மாமுக ...... முருகேசா
மாதவர் தேவர்க ளோடேமு ராரியு
     மாமலர் மீதுறை வேதாவு மேபுகழ்
          மாநில மேழினு மேலான நாயக ...... வடிவேலா
வானவ ரூரினும் வீறாகி வீறள
     காபுரி வாழ்வினு மேலாக வேதிரு
          வாழ்சிறு வாபுரி வாழ்வேசு ராதிபர் ...... பெருமாளே.
சீதள வாரிஜ பாதா நமோநம
நாரத கீத விநோதா நமோநம
சேவல மாமயில் ப்ரீதா நமோநம
மறைதேடுஞ் சேகரமானப்ர தாபா நமோநம
ஆகம சார சொரூபா நமோநம
தேவர்கள் சேனை மகீபா நமோநம
கதிதோயப் பாதக நீவு குடாரா நமோநம
மா அசுரேச கடோரா நமோநம
பாரினிலே ஜய வீரா நமோநம
மலைமாது பார்வதியாள் தரு பாலா நமோநம
நாவல ஞான மனஉலா நமோநம
பாலகுமாரசுவாமீ நமோநம அருள்தாராய்
போதக மாமுக நேரான சோதர
நீறணி வேணியர் நேயா ப்ரபாகர
பூமகளார் மருகேசா மகோததி யிகல்சூரா
போதக மாமறை ஞானா தயாகர
தேனவிழ் நீப நறாவாரு மார்பக
பூரண மாமதி போலாறு மாமுக முருகேசா
மாதவர் தேவர்களோடே முராரியும்
மாமலர் மீதுறை வேதாவுமே புகழ்
மாநிலம் ஏழினு மேலான நாயக வடிவேலா
வானவ ரூரினும் வீறாகி
வீறளகாபுரி வாழ்வினு மேலாகவே
திருவாழ் சிறுவாபுரி வாழ்வே
சுராதிபர் பெருமாளே.

Back to Top

Thiruppugazh # 730 கருமுகில் போல்   (திருவாமாத்தூர்)  
தனதன தானத் தானன, தனதன தானத் தானன
     தனதன தானத் தானன ...... தனதான

கருமுகில் போல்மட் டாகிய அளகிகள் தேனிற் பாகொடு
     கனியமு தூறித் தேறிய ...... மொழிமாதர்
கலவிகள் நேரொப் பாகிகள் மதனிகள் காமக் க்ரோதிகள்
     கனதன பாரக் காரிகள் ...... செயலோடே
பொருகயல் வாளைத் தாவிய விழியினர் சூறைக் காரிகள்
     பொருளள வாசைப் பாடிகள் ...... புவிமீதே
பொதுவிகள் போகப் பாவிகள் வசமழி வேனுக் கோரருள்
     புரிவது தானெப் போதது ...... புகல்வாயே
தருவடு தீரச் சூரர்கள் அவர்கிளை மாளத் தூளெழ
     சமனிலை யேறப் பாறொடு ...... கொடிவீழத்
தனதன தானத் தானன எனஇசை பாடிப் பேய்பல
     தசையுண வேல்விட் டேவிய ...... தனிவீரா
அரிதிரு மால்சக் ராயுத னவனிளை யாள் முத் தார்நகை
     அழகுடை யாள்மெய்ப் பாலுமை ...... யருள்பாலா
அரவொடு பூளைத் தார்மதி அறுகொடு வேணிச் சூடிய
     அழகர்தென் மாதைக் கேயுறை ...... பெருமாளே.
கரு முகில் போல் மட்டாகிய அளகிகள் தேனில் பாகொடு
கனி அமுது ஊறித் தேறிய மொழி மாதர்
கலவிகள் நேர் ஒப்பாகிகள் மதனிகள் காம க்ரோதிகள் கன
தன பாரக் காரிகள் செயலோடே பொரு கயல் வாளைத்
தாவிய விழியினர்
சூறைக்காரிகள் பொருள் அளவு ஆசைப் பாடிகள் புவி மீதே
பொதுவிகள் போகப் பாவிகள் வசம் அழிவேனுக்கு ஓர் அருள்
புரிவது தான் எப்போது அது புகல்வாயே
தரு அடு தீரச் சூரர்கள் அவர் கிளை மாளத் தூள் எழ சமன்
நிலை ஏறப் பாறொடு கொடி வீழ
தனதன தானத் தானன என இசை பாடிப் பேய் பல தசை
உ(ண்)ண வேல் விட்டு ஏவிய தனி வீரா
அரி திரு மால் சக்ராயுதன் அவன் இளையாள் முத்தார் நகை
அழகு உடையாள் மெய்ப் பால் உமை அருள் பாலா
அரவொடு பூளைத் தார் மதி அறுகொடு வேணிச் சூடிய
அழகர் தென் மாதைக்கே உறை பெருமாளே.

Back to Top

Thiruppugazh # 735 தாரகாசுரன் சரிந்து   (தேவனூர்)  
தான தான தந்த தந்த, தான தான தந்த தந்த
     தான தான தந்த தந்த ...... தனதான

தார காசு ரன்ச ரிந்து வீழ வேரு டன்ப றிந்து
     சாதி பூத ரங்கு லுங்க ...... முதுமீனச்
சாக ரோதை யங்கு ழம்பி நீடு தீகொ ளுந்த அன்று
     தாரை வேல்தொ டுங்க டம்ப ...... மததாரை
ஆர வார வும்பர் கும்ப வார ணாச லம்பொ ருந்து
     மானை யாளு நின்ற குன்ற ...... மறமானும்
ஆசை கூரு நண்ப என்று மாம யூர கந்த என்றும்
     ஆவல் தீர என்று நின்று ...... புகழ்வேனோ
பார மார்த ழும்பர் செம்பொன் மேனி யாளர் கங்கை வெண்க
     பால மாலை கொன்றை தும்பை ...... சிறுதாளி
பார மாசு ணங்கள் சிந்து வார வார மென்ப டம்பு
     பானல் கூவி ளங்க ரந்தை ...... அறுகோடே
சேர வேம ணந்த நம்ப ரீச னாரி டஞ்சி றந்த
     சீத ளார விந்த வஞ்சி ...... பெருவாழ்வே
தேவர் யாவ ருந்தி ரண்டு பாரின் மீது வந்தி றைஞ்சு
     தேவ னூர்வி ளங்க வந்த ...... பெருமாளே.
தாரகாசுரன்சரிந்து வீழ
வேருடன்பறிந்து சாதி பூதரம் குலுங்க
முதுமீனச் சாகர ஓதை அம் குழம்பி நீடு தீகொளுந்த
அன்று தாரை வேல்தொ டுங்கடம்ப
மததாரை ஆரவார உம்பர் கும்ப வாரண அசலம்
பொருந்து மானை யாளு
நின்ற குன்ற மறமானும்
ஆசை கூரு நண்ப என்று
மாம யூர கந்த என்றும்
ஆவல் தீர என்று நின்று புகழ்வேனோ
பார மார்தழும்பர் செம்பொன் மேனியாளர்
கங்கை வெண்கபால மாலை கொன்றை தும்பை சிறுதாளி
பார மாசுணங்கள் சிந்து வார ஆரம் என்பு அடம்பு
பானல் கூவிளம் கரந்தை அறுகோடே
சேரவே மணந்த நம்பர் ஈசனார்
இடம் சிறந்த சீதளாரவிந்த வஞ்சி பெருவாழ்வே
தேவர் யாவருந்திரண்டு பாரின் மீது வந்திறைஞ்சு
தேவனூர்விளங்க வந்த பெருமாளே.

Back to Top

Thiruppugazh # 747 சதுரத்தரை நோக்கிய   (திருவேட்களம்)  
தனனத்தன தாத்தன தானன
     தனனத்தன தாத்தன தானன
          தனனத்தன தாத்தன தானன ......தனதான

சதுரத்தரை நோக்கிய பூவொடு
     கதிரொத்திட ஆக்கிய கோளகை
          தழையச்சிவ பாக்கிய நாடக ...... அநுபூதி
சரணக்கழல் காட்டியெ னாணவ
     மலமற்றிட வாட்டிய ஆறிரு
          சயிலக்குல மீட்டிய தோளொடு ...... முகமாறுங்
கதிர்சுற்றுக நோக்கிய பாதமு
     மயிலிற்புற நோக்கிய னாமென
          கருணைக்கடல் காட்டிய கோலமும் ...... அடியேனைக்
கனகத்தினு நோக்கினி தாயடி
     யவர்முத்தமி ழாற்புக வேபர
          கதிபெற்றிட நோக்கிய பார்வையு ...... மறவேனே
சிதறத்தரை நாற்றிசை பூதர
     நெரியப்பறை மூர்க்கர்கள் மாமுடி
          சிதறக்கட லார்ப்புற வேயயில் ...... விடுவோனே
சிவபத்தினி கூற்றினை மோதிய
     பதசத்தினி மூத்தவி நாயகி
          செகமிப்படி தோற்றிய பார்வதி ...... யருள்பாலா
விதுரற்கும ராக்கொடி யானையும்
     விகடத்துற வாக்கிய மாதவன்
          விசையற்குயர் தேர்ப்பரி யூர்பவன் ...... மருகோனே
வெளியெட்டிசை சூர்ப்பொரு தாடிய
     கொடிகைக்கொடு கீர்த்தியு லாவிய
          விறல்மெய்த்திரு வேட்கள மேவிய ...... பெருமாளே.
சதுரத்தரை நோக்கிய பூவொடு
கதிர் ஒத்திட ஆக்கிய கோளகை தழைய
சிவ பாக்கிய நாடக அநுபூதி
சரணக் கழல் காட்டியே
என் ஆணவ மலம் அற்றிட வாட்டிய
ஆறிரு சயிலக் குலம் ஈட்டிய தோளொடு முகம் ஆறும்
கதிர் சுற்று உக நோக்கிய பாதமும்
மயிலின் புறம் நோக்கியனாம் என
கருணைக் கடல் காட்டிய கோலமும்
அடியேனை கனகத்தினும் நோக்கி இனிதாய்
அடியவர் முத்தமிழால் புகவே
பர கதி பெற்றிட நோக்கிய பார்வையும் மறவேனே
சிதறத் தரை நால்திசை பூதர(ம்) நெரிய
பறை மூர்க்கர்கள் மா முடி சிதற
கடல் ஆர்ப்பு உறவே அயில் விடுவோனே
சிவ பத்தினி கூற்றினை மோதிய பத சத்தினி
மூத்த விநாயகி செகம் இப்படி தோற்றிய பார்வதி
அருள்பாலா
விதுரற்கும் அராக் கொடி யானையும்
விகடத் துறவு ஆக்கிய மாதவன்
விசையற்கு உயர் தேர்ப் பரி ஊர்பவன் மருகோனே
வெளி எண் திசை சூரப் பொருது ஆடிய
கொடி கைக்கொடு கீர்த்தி உலாவிய
விறல் மெய்த் திருவேட்களம் மேவிய பெருமாளே.

Back to Top

Thiruppugazh # 766 ஊனத்தசை தோல்கள்   (சீகாழி)  
தானத்தன தான தனந்த தானத்தன தான தனந்த
     தானத்தன தான தனந்த ...... தனதான

ஊனத்தசை தோல்கள் சுமந்த காயப்பொதி மாய மிகுந்த
     ஊசற்சுடு நாறு குரம்பை ...... மறைநாலும்
ஓதப்படு நாலு முகன்ற னாலுற்றிடு கோல மெழுந்து
     ஓடித்தடு மாறி யுழன்று ...... தளர்வாகிக்
கூனித்தடி யோடு நடந்து ஈனப்படு கோழை மிகுந்த
     கூளச்சட மீதை யுகந்து ...... புவிமீதே
கூசப்பிர மாண ப்ரபஞ்ச மாயக்கொடு நோய்க ளகன்று
     கோலக்கழ லேபெற இன்று ...... அருள்வாயே
சேனக்குரு கூடலி லன்று ஞானத்தமிழ் நூல்கள் பகர்ந்து
     சேனைச்சம ணோர்கழு வின்கண் ...... மிசையேறத்
தீரத்திரு நீறு புரிந்து மீனக்கொடி யோனுடல் துன்று
     தீமைப்பிணி தீர வுவந்த ...... குருநாதா
கானச்சிறு மானை நினைந்து ஏனற்புன மீது நடந்து
     காதற்கிளி யோடு மொழிந்து ...... சிலைவேடர்
காணக்கணி யாக வளர்ந்து ஞானக்குற மானை மணந்து
     காழிப்பதி மேவி யுகந்த ...... பெருமாளே.
ஊனத் தசை தோல்கள் சுமந்த காயப் பொதி
மாயம் மிகுந்த ஊசல் சுடும் நாறும் குரம்பை
மறை நாலும் ஓதப் படும் நாலு முகன் த(ன்)னால் உற்றிடும்
கோலம் எழுந்து
ஓடித் தடுமாறி உழன்று தளர்வாகி
கூனித் தடியோடு நடந்து
ஈனப்படு கோழை மிகுந்த கூளச் சடம் ஈதை
உகந்து புவி மீதே கூசப் பிரமாண
ப்ரபஞ்ச மாயக் கொடு நோய்கள் அகன்று
கோலக் கழலே பெற இன்று அருள்வாயே
சேனக் குரு கூடலில் அன்று
ஞானத் தமிழ் நூல்கள் பகர்ந்து
சேனைச் சமணோர் கழுவின் கண் மிசை ஏற
தீரத் திரு நீறு புரிந்து
மீனக் கொடியோன் உடல் துன்று
தீமைப் பிணி தீர உவந்த குருநாதா
கானச் சிறு மானை நினைந்து
ஏனல் புனம் மீது நடந்து
காதல் கிளியோடு மொழிந்து
சிலை வேடர் காணக் கணியாக வளர்ந்து
ஞானக் குற மானை மணந்து
காழிப் பதி மேவி உகந்த பெருமாளே.

Back to Top

Thiruppugazh # 780 எத்தனை கோடி   (வைத்தீசுரன் கோயில்)  
தத்தன தான தான தத்தன தான தான
     தத்தன தான தான ...... தனதான

எத்தனை கோடி கோடி விட்டுட லோடி யாடி
     யெத்தனை கோடி போன ...... தளவேதோ
இப்படி மோக போக மிப்படி யாகி யாகி
     யிப்படி யாவ தேது ...... இனிமேலோ
சித்திடில் சீசி சீசி குத்திர மாய மாயை
     சிக்கினி லாயு மாயு ...... மடியேனைச்
சித்தினி லாட லோடு முத்தமிழ் வாண ரோது
     சித்திர ஞான பாத ...... மருள்வாயே
நித்தமு மோது வார்கள் சித்தமெ வீட தாக
     நிர்த்தம தாடு மாறு ...... முகவோனே
நிட்கள ரூபர் பாதி பச்சுரு வான மூணு
     நெட்டிலை சூல பாணி ...... யருள்பாலா
பைத்தலை நீடு மாயி ரத்தலை மீது பீறு
     பத்திர பாத நீல ...... மயில்வீரா
பச்சிள பூக பாளை செய்க்கயல் தாவு வேளூர்
     பற்றிய மூவர் தேவர் ...... பெருமாளே.
எத்தனை கோடி கோடி விட்டுடல் ஓடி ஆடி
எத்தனை கோடி போனது அளவேதோ
இப்படி மோக போகம் இப்படி யாகி யாகி
இப்படி யாவ தேது
இனிமேல் யோசித்திடில்
சீசி சீசி குத்திர மாய மாயை
சிக்கினில் ஆயும் மாயும் அடியேனை
சித்தினில் ஆடலோடு
முத்தமிழ் வாணர் ஓது
சித்திர ஞான பாதம் அருள்வாயே
நித்தமும் ஓதுவார்கள்
சித்தமெ வீடதாக
நிர்த்தமது ஆடும் ஆறுமுகவோனே
நிட்கள ரூபர் பாதி பச்சுருவான
மூணு நெட்டிலை சூல பாணி
அருள்பாலா
பைத்தலை நீடும் ஆயிரத்தலை மீது
பீறு பத்திர பாத
நீல மயில் வீரா
பச்சிள பூக பாளை
செய்க்கயல் தாவு வேளூர்
பற்றிய மூவர் தேவர் பெருமாளே.
Audio/Video Link(s)

Back to Top

Thiruppugazh # 786 சூலம் என ஓடு   (திருக்கடவூர்)  
தானதன தான தத்த தானதன தான தத்த
     தானதன தான தத்த ...... தனதான

சூலமென வோடு சர்ப்ப வாயுவைவி டாத டக்கி
     தூயவொளி காண முத்தி ...... விதமாகச்
சூழுமிருள் பாவ கத்தை வீழ அழ லூடெ ரித்து
     சோதிமணி பீட மிட்ட ...... மடமேவி
மேலைவெளி யாயி ரத்து நாலிருப ராப ரத்தின்
     மேவியரு ணாச லத்தி ...... னுடன்மூழ்கி
வேலுமயில் வாக னப்ர காசமதி லேத ரித்து
     வீடுமது வேசி றக்க ...... அருள்தாராய்
ஓலசுர ராழி யெட்டு வாளகிரி மாய வெற்பு
     மூடுருவ வேல்தொ டுத்த ...... மயில்வீரா
ஓதுகுற மான்வ னத்தில் மேவியவள் கால்பி டித்து
     ளோமெனுப தேச வித்தொ ...... டணைவோனே
காலனொடு மேதி மட்க வூழிபுவி மேல்கி டத்து
     காலனிட மேவு சத்தி ...... யருள்பாலா
காலமுதல் வாழ்பு விக்க தாரநகர் கோபு ரத்துள்
     கானமயில் மேல்த ரித்த ...... பெருமாளே.
சூலம் என ஓடு சர்ப்ப வாயுவை விடாது அடக்கி
தூய ஒளி காண முத்தி விதமாக
சூழும் இருள் பாவகத்தை வீழ அழல் ஊடு எரித்து

சோதி மணி பீடம் இட்ட மடம் மேவி
மேலை வெளி ஆயிரத்து நால் இரு பராபரத்தின் மேவி
அருணாசலத்தினுடன் மூழ்கி

வேலு மயில் வாகன ப்ரகாசம் அதிலே தரித்து
வீடும் அதுவே சிறக்க அருள் தாராய்
ஓல அசுரர் ஆழி எட்டு வாளகிரி மாய
வெற்பும் ஊடுருவ வேல் தொடுத்த மயில் வீரா
ஓது குற மான் வனத்தில் மேவி அவள் கால் பிடித்து

உள் ஓம் எனும் உபதேச வித்தொடு அணைவோனே

காலனொடு மேதி மட்க ஊழி புவி மேல் கிடத்து காலன்

இடம் மேவு சத்தி அருள் பாலா
காலம் முதல் வாழ் புவிக்கு அதார நகர் கோபுரத்துள்
கான மயில் மேல் தரித்த பெருமாளே.
Audio/Video Link(s)

Back to Top

Thiruppugazh # 798 மருக்குலாவிய   (திருவிடைக்கழி)  
தனத்த தானன தனதன ...... தனதான
மருக்கு லாவிய மலரணை ...... கொதியாதே
வளர்த்த தாய்தமர் வசையது ...... மொழியாதே
கருக்கு லாவிய அயலவர் ...... பழியாதே
கடப்ப மாலையை யினிவர ...... விடவேணும்
தருக்கு லாவிய கொடியிடை ...... மணவாளா
சமர்த்த னேமணி மரகத ...... மயில்வீரா
திருக்கு ராவடி நிழல்தனி ...... லுறைவோனே
திருக்கை வேல்வடி வழகிய ...... பெருமாளே.
மருக்கு லாவிய மலரணை
கொதியாதே
வளர்த்த தாய்தமர்
வசையது மொழியாதே
கருக்கு லாவிய அயலவர்
பழியாதே
கடப்ப மாலையை யினி
வரவிடவேணும்
தருக்கு லாவிய
கொடியிடை மணவாளா
சமர்த்த னேமணி மரகத மயில்வீரா
திருக்கு ராவடி நிழல்தனில்
உறைவோனே
திருக்கை வேல்வடி வழகிய பெருமாளே.

Back to Top

Thiruppugazh # 816 கூசாதே பார்   (திருவாரூர்)  
தானா தானா தானா தானா
தானா தானத் ...... தனதான
சீரா ரூரிற் ...... பெருவாழ்வே
தேவே தேவப் ...... பெருமாளே.

கூசா தேபா ரேசா தேமால்
     கூறா நூல்கற் ...... றுளம்வேறு
கோடா தேவேல் பாடா தேமால்
     கூர்கூ தாளத் ...... தொடைதோளில்
வீசா தேபேர் பேசா தேசீர்
     வேதா தீதக் ...... கழல்மீதே
வீழா தேபோய் நாயேன் வாணாள்
     வீணே போகத் ...... தகுமோதான்
நேசா வானோ ரீசா வாமா
     நீபா கானப் ...... புனமானை
நேர்வா யார்வாய் சூர்வாய் சார்வாய்
     நீள்கார் சூழ்கற் ...... பகசாலத்
தேசா தீனா தீனா ரீசா
     சீரா ரூரிற் ...... பெருவாழ்வே
சேயே வேளே பூவே கோவே
     தேவே தேவப் ...... பெருமாளே.
கூசாதே பார் ஏசாதே
மால் கூறா நூல்கற்று
உளம்வேறு கோடாதே
வேல் பாடாதே
மால் கூர் கூதாளத் தொடைதோளில் வீசாதே
பேர் பேசாதே
சீர் வேத அதீதக் கழல்மீதே வீழாதே
போய் நாயேன் வாணாள் வீணே போகத் தகுமோதான்
நேசா வானோர் ஈசா வாமா
நீபா கானப் புனமானை நேர்வாய் ஆர்வாய்
சூர்வாய் சார்வாய்
நீள்கார் சூழ்கற்பகசாலத் தேச ஆதீனா
தீனார் ஈசா
சீர் ஆரூரிற் பெருவாழ்வே
சேயே வேளே பூவே கோவே

Back to Top

Thiruppugazh # 817 கூர்வாய் நாராய்   (திருவாரூர்)  
தானா தானா தானா தானா
தானா தானத் ...... தனதான
சீரா ரூரிற் ...... பெருவாழ்வே
தேவே தேவப் ...... பெருமாளே.

கூர்வாய் நாராய் வாராய் போனார்
     கூடா ரேசற் ...... றலஆவி
கோதா னேன்மா தாமா றானாள்
     கோளே கேள்மற் ...... றிளவாடை
ஈர்வாள் போலே மேலே வீசா
     ஏறா வேறிட் ...... டதுதீயின்
ஈயா வாழ்வோர் பேரே பாடா
     ஈடே றாரிற் ...... கெடலாமோ
சூர்வா ழாதே மாறா தேவாழ்
     சூழ்வா னோர்கட் ...... கருள்கூருந்
தோலா வேலா வீறா ரூர்வாழ்
     சோதீ பாகத் ...... துமையூடே
சேர்வாய் நீதீ வானோர் வீரா
     சேரா ரூரைச் ...... சுடுவார்தஞ்
சேயே வேளே பூவே கோவே
     தேவே தேவப் ...... பெருமாளே.
கூர்வாய் நாராய் வாராய் போனார் கூடாரே(ரோ)
சற்று அல ஆவி கோது ஆனேன் மாதா மாறு ஆனாள்
கோளே கேள் மற்று இள வாடை ஈர் வாள் போலே மேலே
வீசா
ஏறா வேறிட்டு அது தீயின்
ஈயா வாழ்வோர் பேரே பாடா ஈடு ஏறாரில் கெடலாமோ
சூர் வாழாதே மாறாதே வாழ் சூழ் வானோர்கட்கு அருள்
கூரும் தோலா வேலா
வீறு ஆரூர் வாழ் சோதீ பாகத்து உமை ஊடே சேர்வாய்
நீதி வானோர் வீரா
சேரார் ஊரை சுடுவார் தம் சேயே வேளே பூவே கோவே
தேவே தேவ பெருமாளே.

Back to Top

Thiruppugazh # 818 பாலோ தேனோ பாகோ   (திருவாரூர்)  
தானா தானா தானா தானா
தானா தானத் ...... தனதான
சீரா ரூரிற் ...... பெருவாழ்வே
தேவே தேவப் ...... பெருமாளே.

பாலோ தேனோ பாகோ வானோர்
     பாரா வாரத் ...... தமுதேயோ
பாரோர் சீரோ வேளேர் வாழ்வோ
     பானோ வான்முத் ...... தெனநீளத்
தாலோ தாலே லோபா டாதே
     தாய்மார் நேசத் ...... துனுசாரந்
தாரா தேபே ரீயா தேபே
     சாதே யேசத் ...... தகுமோதான்
ஆலோல் கேளா மேலோர் நாண்மா
     லானா தேனற் ...... புனமேபோய்
ஆயாள் தாள்மேல் வீழா வாழா
     ஆளா வேளைப் ...... புகுவோனே
சேலோ டேசே ராரால் சாலார்
     சீரா ரூரிற் ...... பெருவாழ்வே
சேயே வேளே பூவே கோவே
     தேவே தேவப் ...... பெருமாளே.
பாலோ தேனோ பாகோ
வானோர் பாராவாரத்து அமுதேயோ
பாரோர் சீரோ வேள் ஏர் வாழ்வோ
பானோ வான்முத்தென
நீளத் தாலோ தாலேலோ பாடாதே
தாய்மார் நேசத்து உனு சாரந் தாராதே
பேர் ஈயாதே பேசாதே
ஏசத் தகுமோதான்
ஆலோல் கேளா மேலோர் நாள்
மால் ஆனாது ஏனற்புனமேபோய்
ஆயாள் தாள்மேல் வீழா வாழா
ஆளா வேளைப்புகுவோனே
சேலோடே சேர் ஆரால் சாலார்
சீர் ஆரூரிற் பெருவாழ்வே
சேயே வேளே பூவே கோவே
தேவே தேவப்பெருமாளே.
Audio/Video Link(s)

Back to Top

Thiruppugazh # 821 கரமு முளரியின்   (திருவாரூர்)  
தனன தனதன தனதன தனதன
     தனன தனதன தனதன தனதன
          தனன தனதன தனதன தனதன ...... தனதான

கரமு முளரியின் மலர்முக மதிகுழல்
     கனம தெணுமொழி கனிகதிர் முலைநகை
          கலக மிடுவிழி கடலென விடமென ...... மனதூடே
கருதி யனநடை கொடியிடை யியல்மயில்
     கமழு மகிலுட னிளகிய ம்ருகமத
          களப புளகித கிரியினு மயல்கொடு ...... திரிவேனும்
இரவு பகலற இகலற மலமற
     இயலு மயலற விழியினி ரிழிவர
          இதய முருகியெ யொருகுள பதமுற ...... மடலூடே
யெழுத அரியவள் குறமக ளிருதன
     கிரியில் முழுகின இளையவ னெனுமுரை
          யினிமை பெறுவது மிருபத மடைவது ...... மொருநாளே
சுரபி மகவினை யெழுபொருள் வினவிட
     மனுவி னெறிமணி யசைவுற விசைமிகு
          துயரில் செவியினி லடிபட வினவுமி ...... னதிதீது
துணிவி லிதுபிழை பெரிதென வருமநு
     உருகி யரகர சிவசிவ பெறுமதொர்
          சுரபி யலமர விழிபுனல் பெருகிட ...... நடுவாகப்
பரவி யதனது துயர்கொடு நடவிய
     பழுதின் மதலையை யுடலிரு பிளவொடு
          படிய ரதமதை நடவிட மொழிபவ ...... னருளாரூர்ப்
படியு லறுமுக சிவசுத கணபதி
     யிளைய குமரநி ருபபதி சரவண
          பரவை முறையிட அயில்கொடு நடவிய ...... பெருமாளே.
கரமு(ம்) முளரியின் மலர் முக மதி குழல் கனமது
எ(ண்)ணு(ம்) மொழி கனி கதிர் மு(ல்)லை நகை கலகம் இடு
விழி கடல் என விடம் என மனது ஊடே கருதி
அ(ன்)ன நடை கொடி இடை இயல் மயில் கமழும் அகில்
உடன் இளகிய ம்ருகமத களப புளகித கிரியினு(ம்) மயல்
கொடு திரிவேனும்
இரவு பகல் அற இகல் அற மலம் அற இயலும் மயல் அற
விழியில் நி(நீ)ர் இழிவர இதயம் உருகியெ ஒரு குள பதம்
உற
மடல் ஊடே எழுத அரியவள் குற மகள் இரு தன கிரியில்
முழுகின இளையவன் எனும் உரையின் இனிமை பெறுவதும்
இரு பதம் அடைவதும் ஒரு நாளே
சுரபி மகவினை எழு பொருள் வினவிட மனுவின் நெறி
மணி அசைவு உற அவ் இசை மிகு துயரில் செவியினில் அடி
பட வினவுமின் அதி தீது
துணிவில் இது பிழை பெரிது என வரும் மநு உருகி அரகர
சிவ சிவ பெறுமது ஒர் சுரபி அலமர விழி புனல் பெருகிட
நடுவாகப் பரவி
அதனது துயர் கொடு நடவிய பழுதின் மதலையை உடல் இரு
பிளவொடு படிய ரதம் அதை நடவிய மொழிபவன் அருள்
ஆரூர்ப் படியில் அறுமுக
சிவசுத கணபதி இளைய குமர நிருப பதி சரவண பரவை
முறையிட அயில் கொடு நடவிய பெருமாளே.
Audio/Video Link(s)

Back to Top

Thiruppugazh # 847 எருவாய் கருவாய்   (திருவீழிமிழலை)  
தனனா தனனா தனனா தனனா
     தனனா தனனா ...... தனதான

எருவாய் கருவாய் தனிலே யுருவா
     யிதுவே பயிராய் ...... விளைவாகி
இவர்போ யவரா யவர்போ யிவரா
     யிதுவே தொடர்பாய் ...... வெறிபோல
ஒருதா யிருதாய் பலகோ டியதா
     யுடனே யவமா ...... யழியாதே
ஒருகால் முருகா பரமா குமரா
     உயிர்கா வெனவோ ...... தருள்தாராய்
முருகா வெனவோர் தரமோ தடியார்
     முடிமே லிணைதா ...... ளருள்வோனே
முநிவோ ரமரோர் முறையோ வெனவே
     முதுசூ ருரமேல் ...... விடும்வேலா
திருமால் பிரமா வறியா தவர்சீர்
     சிறுவா திருமால் ...... மருகோனே
செழுமா மதில்சே ரழகார் பொழில்சூழ்
     திருவீ ழியில்வாழ் ...... பெருமாளே.
எருவாய் கருவாய்
தனிலே யுருவாய்
இதுவே பயிராய்
விளைவாகி
இவர்போ யவராய்
அவர்போ யிவராய்
இதுவே தொடர்பாய்
வெறிபோல
ஒருதா யிருதாய் பலகோ டியதாய்
உடனே அவமா யழியாதே
ஒருகால் முருகா பரமா குமரா
உயிர்கா வெனவோத அருள்தாராய்
முருகா வென ஓர் தரம் ஓதடியார்
முடிமேல் இணைதாள் அருள்வோனே
முநிவோர் அமரோர் முறையோ வெனவே
முதுசூ ருரமேல் விடும்வேலா
திருமால் பிரமா அறியா தவர்
சீர்ச் சிறுவா திருமால் மருகோனே
செழுமா மதில்சேர்
அழகார் பொழில்சூழ்
திருவீ ழியில்வாழ் பெருமாளே.
Audio/Video Link(s)

Back to Top

Thiruppugazh # 858 அறுகுநுனி பனி   (திருவிடைமருதூர்)  
தனதனன தனதனன தனதனன தனதனன
     தான தானனா தான தானனா
தனதனன தனதனன தனதனன தனதனன
     தான தானனா தான தானனா
தனதனன தனதனன தனதனன தனதனன
     தான தானனா தான தானனா ...... தனதன தனதான

அறுகுநுனி பனியனைய சிறியதுளி பெரியதொரு
     ஆக மாகியோர் பால ரூபமாய்
அருமதலை குதலைமொழி தனிலுருகி யவருடைய
     ஆயி தாதையார் மாய மோகமாய்
அருமையினி லருமையிட மொளுமொளென வுடல்வளர
     ஆளு மேளமாய் வால ரூபமாய் ...... அவரொரு பெரியோராய்
அழகுபெறு நடையடைய கிறுதுபடு மொழிபழகி
     ஆவி யாயவோர் தேவி மாருமாய்
விழுசுவரை யரிவையர்கள் படுகுழியை நிலைமையென
     வீடு வாசலாய் மாட கூடமாய்
அணுவளவு தவிடுமிக பிதிரவிட மனமிறுகி
     ஆசை யாளராய் ஊசி வாசியாய் ...... அவியுறு சுடர்போலே
வெறுமிடிய னொருதவசி யமுதுபடை யெனுமளவில்
     மேலை வீடுகேள் கீழை வீடுகேள்
திடுதிடென நுழைவதன்முன் எதிர்முடுகி யவர்களொடு
     சீறி ஞாளிபோல் ஏறி வீழ்வதாய்
விரகினொடு வருபொருள்கள் சுவறியிட மொழியுமொரு
     வீணி யார்சொலே மேல தாயிடா ...... விதிதனை நினையாதே
மினுகுமினு கெனுமுடல மறமுறுகி நெகிழ்வுறவும்
     வீணர் சேவையே பூணு பாவியாய்
மறுமையுள தெனுமவரை விடும்விழலை யதனின்வரு
     வார்கள் போகுவார் காணு மோஎனா
விடுதுறவு பெரியவரை மறையவரை வெடுவெடென
     மேள மேசொலா யாளி வாயராய் ...... மிடையுற வருநாளில்
வறுமைகளு முடுகிவர வுறுபொருளு நழுவசில
     வாத மூதுகா மாலை சோகைநோய்
பெருவயிறு வயிறுவலி படுவன்வர இருவிழிகள்
     பீளை சாறிடா ஈளை மேலிடா
வழவழென உமிழுமது கொழகொழென ஒழுகிவிழ
     வாடி யூனெலாம் நாடி பேதமாய் ...... மனையவள் மனம்வேறாய்
மறுகமனை யுறுமவர்கள் நணுகுநணு கெனுமளவில்
     மாதர் சீயெனா வாலர் சீயெனா
கனவுதனி லிரதமொடு குதிரைவர நெடியசுடு
     காடு வாவெனா வீடு போவெனா
வலதழிய விரகழிய வுரைகுழறி விழிசொருகி
     வாயு மேலிடா ஆவி போகுநாள் ...... மனிதர்கள் பலபேச
இறுதியதொ டறுதியென உறவின்முறை கதறியழ
     ஏழை மாதராள் மோதி மேல்விழா
எனதுடைமை யெனதடிமை யெனுமறிவு சிறிதுமற
     ஈமொ லேலெனா வாயை ஆவெனா
இடுகுபறை சிறுபறைகள் திமிலையொடு தவிலறைய
     ஈம தேசமே பேய்கள் சூழ்வதாய் ...... எரிதனி லிடும்வாழ்வே
இணையடிகள் பரவுமுன தடியவர்கள் பெறுவதுவும்
     ஏசி டார்களோ பாச நாசனே
இருவினைமு மலமுமற இறவியொடு பிறவியற
     ஏக போகமாய் நீயு நானுமாய்
இறுகும்வகை பரமசுக மதனையரு ளிடைமருதில்
     ஏக நாயகா லோக நாயகா ...... இமையவர் பெருமாளே.
அறுகு நுனி பனி அனைய சிறிய துளி பெரியது ஒரு ஆகம்
ஆகி ஓர் பால ரூபமாய்
அரு மதலை குதலை மொழி தனில் உருகி அவருடைய ஆயி
தாதையார் மாய மோகமாய் அருமையினில் அருமை இட
மொளு மொளு என உடல் வளர
ஆளு(ம்) மேளமாய் வால ரூபமாய் அவர் ஒரு பெரியோராய்
அழகு பெறு நடை அடைய கிறிது படு மொழி பழகி
ஆவியாய ஓர் தேவிமாருமாய் விழு சுவரை அரிவையர்கள் படு
குழியை நிலைமை என வீடு வாசலாய் மாட கூடமாய்
அணு அளவு தவிடும் இக பிதிரவிட மனம் இறுகி ஆசை
ஆளராய் ஊசி வாசியாய் அவி உறு(ம்) சுடர் போலே
வெறு மிடியன் ஒரு தவசி அமுது படை எனும் அளவில்
மேலை வீடு கேள் கீழை வீடு கேள் திடு திடு என
நுழைவதன் முன் எதிர் முடுகி அவர்களொடு சீறி
ஞாளி போல் ஏறி வீழ்வதாய் விரகினொடு வரு பொருள்கள்
சுவறி இட மொழியும் ஒரு வீணியார் சொ(ல்)லே மேலது
ஆயிடா விதி தனை நினையாதே
மினுகு மினுகு எனும் உடலம் அற முறுகி நெகிழ்வு உறவும்
வீணர் சேவையே பூணு பாவியாய்
மறுமை உளது எனும் அவரை விடும் விழலை அதனின்
வருவார்கள் போகுவார் காணுமோ எனா
விடு துறவு பெரியவரை மறையவரை வெடு வெடு என
மேளமே சொலாய் ஆளி வாயராய் மிடை உற வரு நாளில்
வறுமைகளு(ம்) முடுகி வர உறு பொருளு(ம்) நழுவ சில
வாதம் ஊது காமாலை சோகை நோய் பெரு வயிறு வயிறு
வலி படுவன் வர
இரு விழிகள் பீளை சாறு இடா ஈளை மேலிடா வழ வழ என
உமிழும் அது கொழ கொழ என ஒழுகி விழ வாடி ஊன் எலாம்
நாடி பேதமாய்
மனையவள் மனம் வேறாய் மறுக மனை உறும் அவர்கள்
நணுகு நணுகு எனும் அளவில் மாதர் சீ எனா வாலர் சீ எனா
கனவு தனில் இரதமொடு குதிரை வர நெடிய சுடு காடு வா
எனா வீடு போ எனா வலது அழிய விரகு அழிய உரை குழறி
விழி சொருகி வாயு மேலிடா ஆவி போகு நாள் மனிதர்கள்
பல பேச
இறுதி அதொடு அறுதி என உறவின் முறை கதறி அழ ஏழை
மாதராள் மோதி மேல் விழா
எனது உடைமை எனது அடிமை எனும் அறிவு சிறிதும் அற
ஈ மொலேல் எனா வாயை ஆ எனா
இடுகு பறை சிறு பறைகள் திமிலையொடு தவில் அறைய ஈம
தேசமே பேய்கள் சூழ்வதாய் எரிதனில் இடும் வாழ்வே
இணை அடிகள் பரவும் உனது அடியவர்கள் பெறுவதுவும்
ஏசிடார்களோ பாச நாசனே
இரு வினை மு(ம்)மலமும் அற இறவி ஒடு பிறவி அற ஏக
போகமாய் நீயு(ம்) நானுமாய் இறுகும் வகை பரம சுக மதனை
அருள்
இடை மருதில் ஏக நாயகா லோக நாயகா இமையவர்
பெருமாளே.
Audio/Video Link(s)

Back to Top

Thiruppugazh # 894 நீரிழிவு குட்டம்   (குறட்டி)  
தானன தனத்த தான தானன தனத்த தான
     தானன தனத்த தான ...... தனதான

நீரிழிவு குட்ட மீளை வாதமொடு பித்த மூல
     நீள்குளிர் வெதுப்பு வேறு ...... முளநோய்கள்
நேருறு புழுக்கள் கூடு நான்முக னெடுத்த வீடு
     நீடிய விரத்த மூளை ...... தசைதோல்சீ
பாரிய நவத்து வார நாறுமு மலத்தி லாறு
     பாய்பிணி யியற்று பாவை ...... நரிநாய்பேய்
பாறோடு கழுக்கள் கூகை தாமிவை புசிப்ப தான
     பாழுட லெடுத்து வீணி ...... லுழல்வேனோ
நாரணி யறத்தி னாரி ஆறுச மயத்தி பூத
     நாயக ரிடத்து காமி ...... மகமாயி
நாடக நடத்தி கோல நீலவ ருணத்தி வேத
     நாயகி யுமைச்சி நீலி ...... திரிசூலி
வாரணி முலைச்சி ஞான பூரணி கலைச்சி நாக
     வாணுத லளித்த வீர ...... மயிலோனே
மாடம தில்முத்து மேடை கோபுர மணத்த சோலை
     வாகுள குறட்டி மேவு ...... பெருமாளே.
நீரிழிவு குட்டம் ஈளை வாதமொடு பித்த(ம்) மூலம் நீள்
குளிர் வெதுப்பு வேறும் உள நோய்கள்
வேர் உறு புழுக்கள் கூடு(ம்) நான் முகன் எடுத்த வீடு
நீடிய இரத்த(ம்) மூளை தசை தோல் சீ
பாரிய நவத் துவார நாறும் மு(ம்) மலத்தில் ஆறு பாய் பிணி
இயற்று பாவை
நரி நாய் பேய் பாறொடு கழுக்கள் கூகை தாம் இவை
புசிப்பதானபாழ் உடல் எடுத்து வீணில் உழல்வேனோ
நாரணி அறத்தின் நாரி ஆறு சமயத்தி பூத நாயகரிடத்து
காமி மகமாயி
நாடக நடத்தி கோல நீல வருணத்தி வேத நாயகி உமைச்சி
நீலி திரிசூலி
வார் அணி முலைச்சி ஞான பூரணி கலைச்சி நாக வாள்
நுதல் அளித்த வீர மயிலோனே
மாட மதில் முத்து மேடை கோபுரம் மணத்த சோலை
வாகு உள குறட்டி மேவு(ம்) பெருமாளே.

Back to Top

Thiruppugazh # 904 என்னால் பிறக்கவும்   (வயலூர்)  
தந்தான தந்த தந்தான தந்த
தந்தான தந்த ...... தனதான
செங்கோட மர்ந்த ...... பெருமாளே
மங்காம லுன்ற ...... னருள்தாராய்

என்னால் பிறக்கவும் என்னா லிறக்கவும்
     என்னால் துதிக்கவும் ...... கண்களாலே
என்னா லழைக்கவும் என்னால் நடக்கவும்
     என்னா லிருக்கவும் ...... பெண்டிர்வீடு
என்னால் சுகிக்கவும் என்னால் முசிக்கவும்
     என்னால் சலிக்கவும் ...... தொந்தநோயை
என்னா லெரிக்கவும் என்னால் நினைக்கவும்
     என்னால் தரிக்கவும் ...... இங்குநானார்
கன்னா ருரித்தஎன் மன்னா எனக்குநல்
     கர்ணா மிர்தப்பதம் ...... தந்தகோவே
கல்லார் மனத்துட னில்லா மனத்தவ
     கண்ணா டியிற்றடம் ...... கண்டவேலா
மன்னான தக்கனை முன்னாள்மு டித்தலை
     வன்வாளி யிற்கொளும் ...... தங்கரூபன்
மன்னா குறத்தியின் மன்னா வயற்பதி
     மன்னா முவர்க்கொரு ...... தம்பிரானே.
என்னால் பிறக்கவும்
என்னால் இறக்கவும்
என்னால் துதிக்கவும்
கண்களாலே என்னால் அழைக்கவும்
என்னால் நடக்கவும்
என்னால் இருக்கவும்
பெண்டிர்வீடு என்னால் சுகிக்கவும்
என்னால் முசிக்கவும்
என்னால் சலிக்கவும்
தொந்தநோயை என்னால் எரிக்கவும்
என்னால் நினைக்கவும்
என்னால் தரிக்கவும்
இங்கு நான் ஆர்
கன்னார் உரித்த என் மன்னா
எனக்குநல் கர்ணாமிர்தப்பதம் தந்தகோவே
கல்லார் மனத்துடன் நில்லா மனத்தவ
கண்ணாடியில் தடம் கண்டவேலா
மன்னான தக்கனை முன்னாள்
முடித்தலை வன்வாளியிற் கொளும்
தங்கரூபன் மன்னா
குறத்தியின் மன்னா
வயற்பதி மன்னா
முவர்க்கொரு தம்பிரானே.

Back to Top

Thiruppugazh # 923 மதியால் வித்தகன்   (கருவூர்)  
தனதானத் தனதான தனதானத் ...... தனதான
மதியால்வித் தகனாகி மனதாலுத் ...... தமனாகிப்
பதிவாகிச் சிவஞான பரயோகத் ...... தருள்வாயே
நிதியேநித் தியமேயென் நினைவேநற் ...... பொருளாயோய்
கதியேசொற் பரவேளே கருவூரிற் ...... பெருமாளே.
மதியால் வித்தகனாகி
மனதால் உத்தமனாகி
பதிவாகிச் சிவஞான
பரயோகத்து அருள்வாயே
நிதியே நித்தியமே யென் நினைவே
நற் பொருளாயோய்
கதியே சொற் பரவேளே
கருவூரிற் பெருமாளே.

Back to Top

Thiruppugazh # 925 தசையாகிய   (கருவூர்)  
தனனா தனனத் தனனா தனனத்
     தனனா தனனத் ...... தனதான

தசையா கியகற் றையினால் முடியத்
     தலைகா லளவொப் ...... பனையாயே
தடுமா றுதல்சற் றொருநா ளுலகிற்
     றவிரா வுடலத் ...... தினைநாயேன்
பசுபா சமும்விட் டறிவா லறியப்
     படுபூ ரணநிட் ...... களமான
பதிபா வனையுற் றநுபூ தியிலப்
     படியே யடைவித் ...... தருள்வாயே
அசலே சுரர்புத் திரனே குணதிக்
     கருணோ தயமுத் ...... தமிழோனே
அகிலா கமவித் தகனே துகளற்
     றவர்வாழ் வயலித் ...... திருநாடா
கசிவா ரிதயத் தமிர்தே மதுபக்
     கமலா லயன்மைத் ...... துனவேளே
கருணா கரசற் குருவே குடகிற்
     கருவூ ரழகப் ...... பெருமாளே.
தசையாகிய கற்றையினால் முடிய
தலைகால் அளவு ஒப்பனையாயே
தடுமாறுதல் சற்று ஒருநாள்
உலகில் தவிரா உடலத்தினை நாயேன்
பசுபாசமும் விட்டு
அறிவால் அறிய
படுபூ ரண நிட்களமான
பதிபாவனை உற்று
அநுபூ தியில் அப்படியே அடைவித்து அருள்வாயே
அசலேசுரர் புத்திரனே
குணதிக்கு அருணோதய
முத்தமிழோனே
அகில ஆகம வித்தகனே
துகளற்றவர்வாழ் வயலித்திருநாடா
கசிவார் இதயத்து அமிர்தே
மதுபக் கமலா லயன்மைத்துனவேளே
கருணாகர சற்குருவே
குடகிற் கருவூர் அழகப் பெருமாளே.

Back to Top

Thiruppugazh # 943 இறவாமற் பிறவாமல்   (அவிநாசி)  
தனதானத் தனதான தனதானத் ...... தனதான
இறவாமற் பிறவாமல் எனையாள்சற் ...... குருவாகிப்
பிறவாகித் திரமான பெருவாழ்வைத் ...... தருவாயே
குறமாதைப் புணர்வோனே குகனேசொற் ...... குமரேசா
அறநாலைப் புகல்வோனே அவிநாசிப் ...... பெருமாளே.
இறவாமற் பிறவாமல்
எனையாள்சற்குருவாகி
பிறவாகி
திரமான பெருவாழ்வைத் தருவாயே
குறமாதைப் புணர்வோனே
குகனேசொற் குமரேசா
அறநாலைப் புகல்வோனே
அவிநாசிப் பெருமாளே.
Audio/Video Link(s)

Back to Top

Thiruppugazh # 946 பக்குவ ஆசார   (திருப்புக்கொளியூர்)  
தத்தன தானான தத்தன தானான
     தத்தன தானான ...... தனதான

பக்குவ வாசார லட்சண சாகாதி
     பட்சண மாமோன ...... சிவயோகர்
பத்தியி லாறாறு தத்துவ மேல்வீடு
     பற்றுநி ராதார ...... நிலையாக
அக்கண மேமாய துர்க்குணம் வேறாக
     அப்படை யேஞான ...... வுபதேசம்
அக்கற வாய்பேசு சற்குரு நாதாவு
     னற்புத சீர்பாத ...... மறவேனே
உக்கிர வீராறு மெய்ப்புய னேநீல
     வுற்பல வீராசி ...... மணநாற
ஒத்தநி லாவீசு நித்தில நீராவி
     யுற்பல ராசீவ ...... வயலூரா
பொக்கமி லாவீர விக்ரம மாமேனி
     பொற்ப்ரபை யாகார ...... அவிநாசிப்
பொய்க்கலி போமாறு மெய்க்கருள் சீரான
     புக்கொளி யூர்மேவு ...... பெருமாளே.
பக்குவ ஆசார
லட்சண சாகாதி பட்சணமா
மோன சிவயோகர்
பத்தியில் ஆறாறு தத்துவ மேல்வீடு பற்று
நிராதார நிலையாக
அக்கணமே மாய துர்க்குணம் வேறாக
அப்படையேஞானவுபதேசம்
அக்கற வாய்பேசு சற்குரு நாதா
உன் அற்புத சீர்பாத மறவேனே
உக்கிர ஈராறு மெய்ப்புயனே
நீல உற்பல வீராசி மணநாற
ஒத்தநி லாவீசு
நித்தில நீராவி உற்பல ராசீவ வயலூரா
பொக்கமி லாவீர விக்ரம
மாமேனி பொற்ப்ரபை யாகார
அவிநாசிப் பொய்க்கலி போமாறு
மெய்க்கருள் சீரான
புக்கொளி யூர்மேவு பெருமாளே.

Back to Top

Thiruppugazh # 949 தீராப் பிணிதீர   (பேரூர்)  
தானாத் தனதான தானாத் ...... தனதான
தீராப் பிணிதீர சீவாத் ...... துமஞான
ஊராட் சியதான ஓர்வாக் ...... கருள்வாயே
பாரோர்க் கிறைசேயே பாலாக் ...... கிரிராசே
பேராற் பெரியோனே பேரூர்ப் ...... பெருமாளே.
தீராப் பிணிதீர
சீவ ஆத்தும ஞான
ஊராட்சியதான ஓர்வாக்கு அருள்வாயே
பாரோர்க் கிறைசேயே
பாலாக் கிரிராசே
பேராற் பெரியோனே
பேரூர்ப் பெருமாளே.

Back to Top

Thiruppugazh # 967 முத்து நவரத்நமணி   (மதுரை)  
தத்ததன தத்ததன தத்ததன தத்ததன
     தத்ததன தத்ததன ...... தனதான
வித்தகம ருப்புடைய ...... பெருமாளே
செப்பெனஎ னக்கருள் கை ...... மறவேனே

முத்துநவ ரத்நமணி பத்திநிறை சத்தியிட
     மொய்த்தகிரி முத்திதரு ...... வெனவோதும்
முக்கணிறை வர்க்குமருள் வைத்தமுரு கக்கடவுள்
     முப்பதுமு வர்க்கசுர ...... ரடிபேணி
பத்துமுடி தத்தும்வகை யுற்றகணி விட்டஅரி
     பற்குனனை வெற்றிபெற ...... ரதமூரும்
பச்சைநிற முற்றபுய லச்சமற வைத்தபொருள்
     பத்தர்மன துற்றசிவம் ...... அருள்வாயே
தித்திமிதி தித்திமிதி திக்குகுகு திக்குகுகு
     தெய்த்ததென தெய்தததென ...... தெனனான
திக்குவென மத்தளமி டக்கைதுடி தத்ததகு
     செச்சரிகை செச்சரிகை ...... யெனஆடும்
அத்தனுட னொத்தநட நித்ரிபுவ னத்திநவ
     சித்தியருள் சத்தியருள் ...... புரிபாலா
அற்பவிடை தற்பமது முற்றுநிலை பெற்றுவள
     ரற்கனக பத்மபுரி ...... பெருமாளே.
முத்து நவ ரத்ந மணி பத்தி நிறை சத்தி இடம் மொய்த்த கிரி
முத்தி தரு என ஓதும் முக்கண் இறைவர்க்கும் அருள் வைத்த
முருகக் கடவுள்
முப்பது முவர்க்க சுரர் அடி பேணி
பத்து முடி தத்தும் வகை உற்ற கணி விட்ட அரி
பற்குனனை வெற்றி பெற ரதம் ஊரும்
பச்சை நிறம் உற்ற புயல் அச்சம் அற வைத்த பொருள்
பத்தர் மனது உற்ற சிவம் அருள்வாயே
தித்திமிதி தித்திமிதி திக்குகுகு திக்குகுகு
     தெய்த்ததென தெய்தததென தெனனான
          திக்குவென மத்தளம் இடக்கைதுடி
தத்ததகு செச்சரிகை செச்சரிகை யெனஆடும்
அத்தனுடன் ஒத்த நடநி த்ரிபுவனத்தி நவசித்தி அருள் சத்தி
அருள் புரிபாலா
அற்ப இடை தற்பம் அது முற்று நிலை பெற்று வளர் அல்
கனக பத்ம புரி பெருமாளே.

Back to Top

Thiruppugazh # 973 சுரும்பு அணி   (இலஞ்சி)  
தனந்தன தந்த தனந்தன தந்த
     தனந்தன தந்த ...... தனதானா

சுரும்பணி கொண்டல் நெடுங்குழல் கண்டு
     துரந்தெறி கின்ற ...... விழிவேலால்
சுழன்றுசு ழன்று துவண்டுது வண்டு
     சுருண்டும யங்கி ...... மடவார்தோள்
விரும்பிவ ரம்பு கடந்துந டந்து
     மெலிந்துத ளர்ந்து ...... மடியாதே
விளங்குக டம்பு விழைந்தணி தண்டை
     விதங்கொள்ச தங்கை ...... யடிதாராய்
பொருந்தல மைந்து சிதம்பெற நின்ற
     பொலங்கிரி யொன்றை ...... யெறிவோனே
புகழ்ந்தும கிழ்ந்து வணங்குகு ணங்கொள்
     புரந்தரன் வஞ்சி ...... மணவாளா
இரும்புன மங்கை பெரும்புள கஞ்செய்
     குரும்பைம ணந்த ...... மணிமார்பா
இலஞ்சியில் வந்த இலஞ்சிய மென்று
     இலஞ்சிய மர்ந்த ...... பெருமாளே.
சுரும்பு அணி கொண்டல் நெடும் குழல் கண்டு
துரந்து எறிகின்ற விழி வேலால்
சுழன்று சுழன்று துவண்டு துவண்டு சுருண்டு மயங்கி
மடவார் தோள் விரும்பி வரம்பு கடந்து நடந்து
மெலிந்து தளர்ந்து மடியாதே
விளங்கு கடம்பு விழைந்து அணி தண்டை விதம் கொள்
சதங்கை அடி தாராய்
பொருந்தல் அமைந்து உசிதம் பெற நின்ற பொன் அம் கிரி
ஒன்றை எறிவோனே
புகழ்ந்து மகிழ்ந்து வணங்கு குணம் கொள் புரந்தரன் வஞ்சி
மணவாளா
இரும் புன மங்கை பெரும் புளகம் செய் குரும்பை மணந்த
மணி மார்பா
இலஞ்சியில் வந்த இலஞ்சியம் என்று இலஞ்சி அமர்ந்த
பெருமாளே.

Back to Top

Thiruppugazh # 974 மாலையில் வந்து   (இலஞ்சி)  
தான தனந்த தான தனந்த
     தனா தனந்த ...... தனதான

மாலையில் வந்து மாலை வழங்கு
     மாலை யநங்கன் ...... மலராலும்
வாடை யெழுந்து வாடை செறிந்து
     வாடை யெறிந்த ...... அனலாலுங்
கோல மழிந்து சால மெலிந்து
     கோமள வஞ்சி ...... தளராமுன்
கூடிய கொங்கை நீடிய அன்பு
     கூரவு மின்று ...... வரவேணும்
கால னடுங்க வேலது கொண்டு
     கானில் நடந்த ...... முருகோனே
கான மடந்தை நாண மொழிந்து
     காத லிரங்கு ...... குமரேசா
சோலை வளைந்து சாலி விளைந்து
     சூழு மிலஞ்சி ...... மகிழ்வோனே
சூரிய னஞ்ச வாரியில் வந்த
     சூரனை வென்ற ...... பெருமாளே.
மாலையில் வந்து மாலை வழங்கு
மாலை அனங்கன் மலராலும்
வாடை எழுந்து வாடை செறிந்து
வாடை எறிந்த அனலாலும்
கோலம் அழிந்து சால மெலிந்து
கோமள வஞ்சி தளரா முன்
கூடிய கொங்கை நீடிய அன்பு கூரவும் இன்று வரவேணும்
காலன் நடுங்க வேல் அது கொண்டு
கானில் நடந்த முருகோனே
கான மடந்தை நாண மொழிந்து
காதல் இரங்கு குமரேசா
சோலை வளைந்து சாலி விளைந்து சூழும் இலஞ்சி
மகிழ்வோனே
சூரியன் அஞ்ச வாரியில் வந்த சூரனை வென்ற பெருமாளே.

Back to Top

Thiruppugazh # 986 விரகற நோக்கியும்   (எழுகரைநாடு)  
தனதன தாத்தன தனதன தாத்தன
     தனதன தாத்தன ...... தந்ததான

விரகற நோக்கியு முருகியும் வாழ்த்தியும்
     விழிபுனல் தேக்கிட ...... அன்புமேன்மேல்
மிகவுமி ராப்பகல் பிறிதுப ராக்கற
     விழைவுகு ராப்புனை ...... யுங்குமார
முருகஷ டாக்ஷர சரவண கார்த்திகை
     முலைநுகர் பார்த்திப ...... என்றுபாடி
மொழிகுழ றாத்தொழு தழுதழு தாட்பட
     முழுதும லாப்பொருள் தந்திடாயோ
பரகதி காட்டிய விரகசி லோச்சய
     பரமப ராக்ரம ...... சம்பராரி
படவிழி யாற்பொரு பசுபதி போற்றிய
     பகவதி பார்ப்பதி ...... தந்தவாழ்வே
இரைகடல் தீப்பட நிசிசரர் கூப்பிட
     எழுகிரி யார்ப்பெழ ...... வென்றவேலா
இமையவர் நாட்டினில் நிறைகுடி யேற்றிய
     எழுகரை நாட்டவர் ...... தம்பிரானே.
விரகற நோக்கியும்
உருகியும் வாழ்த்தியும்
விழிபுனல் தேக்கிட
அன்புமேன்மேல் மிகவும்
இராப்பகல் பிறிது பராக்கற
விழைவு குராப் புனையுங் குமார
முருக ஷடாக்ஷர சரவண
கார்த்திகை முலைநுகர் பார்த்திப
என்றுபாடி
மொழிகுழறாத் தொழுது
அழுதழுது ஆட்பட
முழுதும் அலாப்பொருள்
தந்திடாயோ
பரகதி காட்டிய விரக
சிலோச்சய
பரம பராக்ரம
சம்பராரி படவிழியாற்பொரு
பசுபதி போற்றிய பகவதி
பார்ப்பதி தந்தவாழ்வே
இரைகடல் தீப்பட
நிசிசரர் கூப்பிட
எழுகிரி யார்ப்பெழ
வென்றவேலா
இமையவர் நாட்டினில் நிறைகுடி யேற்றிய
எழுகரை நாட்டவர் தம்பிரானே.

Back to Top

Thiruppugazh # 998 நாலிரண்டிதழாலே   (பொதுப்பாடல்கள்)  
தான தந்தன தானா தானன
     தான தந்தன தானா தானன
          தான தந்தன தானா தானன ...... தனதான

நாலி ரண்டித ழாலே கோலிய
     ஞால முண்டக மேலே தானிள
          ஞாயி றென்றுறு கோலா காலனு ...... மதின்மேலே
ஞால முண்டபி ராணா தாரனும்
     யோக மந்திர மூலா தாரனு
          நாடி நின்றப்ர பாவா காரனு ...... நடுவாக
மேலி ருந்தகி ரீடா பீடமு
     நூல றிந்தம ணீமா மாடமு
          மேத கும்ப்ரபை கோடா கோடியு ...... மிடமாக
வீசி நின்றுள தூபா தீபவி
     சால மண்டப மீதே யேறிய
          வீர பண்டித வீரா சாரிய ...... வினைதீராய்
ஆல கந்தரி மோடா மோடிகு
     மாரி பிங்கலை நானா தேசிய
          மோகி மங்கலை லோகா லோகியெ ...... வுயிர்பாலும்
ஆன சம்ப்ரமி மாதா மாதவி
     ஆதி யம்பிகை ஞாதா வானவ
          ராட மன்றினி லாடா நாடிய ...... அபிராமி
கால சங்கரி சீலா சீலித்ரி
     சூலி மந்த்ரச பாஷா பாஷணி
          காள கண்டிக பாலீ மாலினி ...... கலியாணி
காம தந்திர லீலா லோகினி
     வாம தந்திர நூலாய் வாள்சிவ
          காம சுந்தரி வாழ்வே தேவர்கள் ...... பெருமாளே.
நாலிரண்டு இதழாலே கோலிய ஞால் அம் முண்டகம் மேலே
தான் இள ஞாயிறு என்று உறு கோலா காலனும்
அதின் மேலே ஞாலம் உண்ட பிராண ஆதாரனும்
யோக மந்திர மூலாதாரனு(ம்)
நாடி நின்ற ப்ரபாவ ஆகாரனு(ம்) நடுவாக
மேல் இருந்த கிரீடா பீடமு(ம்)
நூல் அறிந்த மணீ மா மாடமும்
மே தகு ப்ரபை கோடா கோடியும் இடமாக
வீசி நின்று உள தூபா தீப விசால மண்டபம் மீதே ஏறிய
வீர பண்டித வீர ஆசாரிய வினை தீராய்
ஆல கந்தரி மோடா மோடி
குமாரி பிங்கலை நானா தேசி
அமோகி மங்கலை லோக லோகி எவ்வுயிர் பாலும் ஆன
சம்ப்ரமி
மாதா மாதவி ஆதி அம்பிகை
ஞாதா ஆனவர் ஆட மன்றினில் ஆடா நாடிய அபிராமி
கால சங்கரி சீலா சீலி த்ரிசூலி மந்த்ர சபாஷா பாஷிணி
காள கண்டி கபாலி மாலினி கலியாணி
காம தந்திர லீலா லோகினி
வாம தந்திர நூல் ஆய்வாள் சிவகாம சுந்தரி வாழ்வே
தேவர்கள் பெருமாளே.

Back to Top

Thiruppugazh # 1002 கடலை பயறொடு   (பொதுப்பாடல்கள்)  
தனன தனதன தனதன தனதன
     தனன தனதன தனதன தனதன
          தனன தனதன தனதன தனதன ...... தனதான

கடலை பயறொடு துவரையெ ளவல்பொரி
     சுகியன் வடைகனல் கதலியி னமுதொடு
          கனியு முதுபல கனிவகை நலமிவை ...... யினிதாகக்
கடல்கொள் புவிமுதல் துளிர்வொடு வளமுற
     அமுது துதிகையில் மனமது களிபெற
          கருணை யுடனளி திருவருள் மகிழ்வுற ...... நெடிதான
குடகு வயிறினி லடைவிடு மதகரி
     பிறகு வருமொரு முருகசண் முகவென
          குவிய இருகர மலர்விழி புனலொடு ...... பணியாமற்
கொடிய நெடியன அதிவினை துயர்கொடு
     வறுமை சிறுமையி னலைவுட னரிவையர்
          குழியில் முழுகியு மழுகியு முழல்வகை ...... யொழியாதோ
நெடிய கடலினில் முடுகியெ வரமுறு
     மறலி வெருவுற ரவிமதி பயமுற
          நிலமு நெறுநெறு நெறுவென வருமொரு ...... கொடிதான
நிசிசர் கொடுமுடி சடசட சடவென
     பகர கிரிமுடி கிடுகிடு கிடுவென
          நிகரி லயில்வெயி லெழுபசு மையநிற ...... முளதான
நடன மிடுபரி துரகத மயிலது
     முடுகி கடுமையி லுலகதை வலம்வரு
          நளின பதவர நதிகுமு குமுவென ...... முநிவோரும்
நறிய மலர்கொடு ஹரஹர ஹரவென
     அமரர் சிறைகெட நறைகமழ் மலர்மிசை
          நணியெ சரவண மதில்வள ரழகிய ...... பெருமாளே.
கடலை பயறொடு துவரை எள் அவல் பொரி சுகியன் வடை
க(ன்)னல் கதலி இ(ன்)னமுதொடு
கனியும் முது பல கனி வகை நலம் இவை இனிதாகக் கடல்
கொள் புவி முதல் துளிர்வொடு வளம் உற
அமுது துதி கையில் மனம் அது களி பெற கருணையுடன்
அ(ள்)ளி திருவருள் மகிழ்வுற
நெடிதான குடகு வயிறினில் அடைவிடு மத கரி பிறகு வரும்
ஒரு முருகு சண்முக என
குவிய இரு கரம் மலர் விழி புனலொடு பணியாமல்
கொடிய நெடியன அதி வினை துயர் கொடு வறுமை
சிறுமையின் அலைவுடன்
அரிவையர் குழியில் முழுகியும் அழுகியும் உழல் வகை
ஒழியாதோ
நெடிய கடலினில் முடுகியெ வரம் உறு மறலி வெரு உற ரவி
மதி பயம் உற
நிலமும் நெறு நெறு நெறு என வரும் ஒரு கொடிதான நிசிரர்
கொடுமுடி சட சட சட என
பகர கிரி முடி கிடு கிடு கிடு என
நிகர் இல் அயில் வெயில் எழு பசுமைய நிறம் உளதான
நடனம் இடு(ம்) பரி துரகதம் மயில் அது
முடுகி கடுமையில் உலகதை வலம் வரும் நளின பத
வர நதி குமு குமு என முநிவோரும் நறிய மலர் கொடு ஹர
ஹர ஹர என
அமரர் சிறை கெட நறை கமழ் மலர் மிசை ந(ண்)ணியே
சரவணம் அதில் வளர் அழகிய பெருமாளே.

Back to Top

Thiruppugazh # 1015 விடம் என அயில்   (பொதுப்பாடல்கள்)  
தனதன தனதன தனதன தனதன தனதன தனதன
     தத்தத் தத்தன தத்தத் தத்தன ...... தந்ததான

விடமென அயிலென அடுவன நடுவன மிளிர்வன சுழல்விழி
     வித்தைத் குப்பக ரொப்புச் சற்றிலை ...... யென்றுபேசும்
விரகுடை வனிதைய ரணைமிசை யுருகிய வெகுமுக கலவியில்
     இச்சைப் பட்டுயிர் தட்டுப் பட்டுவு ...... ழன்றுவாடும்
நடலையில் வழிமிக அழிபடு தமியனை நமன்விடு திரளது
     கட்டிச் சிக்கென வொத்திக் கைக்கொடு ...... கொண்டுபோயே
நரகதில் விடுமெனு மளவினி லிலகிய நறைகமழ் திருவடி
     முத்திக் குட்படு நித்யத் தத்துவம் ...... வந்திடாதோ
இடியென அதிர்குரல் நிசிசரர் குலபதி யிருபது திரள்புய
     மற்றுப் பொற்றலை தத்தக் கொத்தொடு ...... நஞ்சுவாளி
எரியெழ முடுகிய சிலையின ரழகொழு கியல்சிறு வினைமகள்
     பச்சைப் பட்சித னைக்கைப் பற்றிடு ...... மிந்த்ரலோகா
வடவரை யிடிபட அலைகடல் சுவறிட மகவரை பொடிபட
     மைக்கட் பெற்றிடு முக்ரக் கட்செவி ...... யஞ்சசூரன்
மணிமுடி சிதறிட அலகைகள் பலவுடன் வயிரவர் நடமிட
     முட்டிப் பொட்டெழ வெட்டிக் குத்திய ...... தம்பிரானே.
விடம் என அயில் என அடுவன நடுவன மிளிர்வன சுழல்
விழி
வித்தைக்குப் பகர் ஒப்புச் சற்று இ(ல்)லை என்று பேசும்
விரகுடை வனிதையர் அணை மிசை உருகிய வெகுமுக
கலவியில் இச்சைப் பட்டு உயிர் தட்டுப்பட்டு உழன்று
வாடும்
நடலையில் வழி மிக அழி படு தமியனை நமன் விடு திரள்
அது கட்டிச் சிக்கென ஒத்திக் கைக்கொடு கொண்டு
போயே
நரகதில் விடும் எனும் அளவினில் இலகிய நறை கமழ்
திருவடி முத்திக்குள் படு நித்யத் தத்துவம் வந்திடாதோ
இடி என அதிர் குரல் நிசிசரர் குல பதி இருபது திரள் புயம்
அற்றுப் பொன் தலை தத்தக் கொத்தொடு நஞ்சு வாளி
எரிஎழ முடுகிய சிலையினர்
அழகு ஒழுகு இயல் சிறு வினைமகள் பச்சைப் பட்சி தனைக்
கைப்பற்றிடும் இந்த்ரலோகா
வடவரை இடிபட அலை கடல் சுவறிட மக வரை பொடி பட
மை கண் பெற்றிடும் உக்ரக் கண் செவி அஞ்ச சூரன்மணி
முடி சிதறிட
அலகைகள் பலவுடன் வயிரவர் நடம் இட
முட்டிப் பொட்டு எழ வெட்டிக் குத்திய தம்பிரானே.

Back to Top

Thiruppugazh # 1028 காதி மோதி   (பொதுப்பாடல்கள்)  
தான தான தானான தானத் ...... தனதான
காதி மோதி வாதாடு நூல்கற் ...... றிடுவோருங்
காசு தேடி யீயாமல் வாழப் ...... பெறுவோரும்
மாதுபாகர் வாழ்வே யெனாநெக் ...... குருகாரும்
மாறி லாத மாகால னூர்புக் ...... கலைவாரே
நாத ரூப மாநாத ராகத் ...... துறைவோனே
நாக லோக மீரேழு பாருக் ...... குரியோனே
தீதி லாத வேல்வீர சேவற் ...... கொடியோனே
தேவ தேவ தேவாதி தேவப் ...... பெருமாளே.
காதி மோதி வாதாடு
நூல்கற்றிடுவோரும்
காசு தேடி யீயாமல்
வாழப் பெறுவோரும்
மாதுபாகர் வாழ்வே யென
நெக்குருகாரும்
மாறிலாத மாகாலனூர்
புக்கலைவாரே
நாத ரூப
மாநாதர் ஆகத்து உறைவோனே
நாகலோக மீரேழு பாருக்கு
உரியோனே
தீதி லாத வேல்வீர
சேவற்கொடியோனே
தேவ தேவ
தேவாதி தேவப் பெருமாளே.

Back to Top

Thiruppugazh # 1034 தோலத்தியால்   (பொதுப்பாடல்கள்)  
தானத்த தானத்த தானத்த தானத்த
     தானத்த தானத்த ...... தனதான

தோலத்தி யாலப்பி னாலொப்பி லாதுற்ற
     தோளுக்கை காலுற்ற ...... குடிலூடே
சோர்வற்று வாழ்வுற்ற கால்பற்றி யேகைக்கு
     வேதித்த சூலத்த ...... னணுகாமுன்
கோலத்தை வேலைக்கு ளேவிட்ட சூர்கொத்தொ
     டேபட்டு வீழ்வித்த ...... கொலைவேலா
கோதற்ற பாதத்தி லேபத்தி கூர்புத்தி
     கூர்கைக்கு நீகொற்ற ...... அருள்தாராய்
ஆலத்தை ஞாலத்து ளோர்திக்கு வானத்த
     ராவிக்கள் மாள்வித்து ...... மடியாதே
ஆலித்து மூலத்தொ டேயுட்கொ ளாதிக்கு
     மாம்வித்தை யாமத்தை ...... யருள்வோனே
சேலொத்த வேலொத்த நீலத்து மேலிட்ட
     தோதக்கண் மானுக்கு ...... மணவாளா
தீதற்ற நீதிக்கு ளேய்பத்தி கூர்பத்தர்
     சேவிக்க வாழ்வித்த ...... பெருமாளே.
தோல் அத்தியால் அப்பினால் ஒப்பிலாது உற்ற
தோளு கை கால் உற்ற குடிலூடே
சோர்வு அற்று வாழ்வு உற்ற கால்
பற்றி ஏகைக்கு வேதித்த சூலத்தன் அணுகா முன்
கோலத்தை வேலைக்கு உள்ளே விட்ட சூர்
கொத்தோடே பட்டு வீழ்வித்த கொலை வேலா
கோது அற்ற பாதத்திலே பத்தி கூர் புத்தி கூர்கைக்கு
நீ கொற்ற அருள் தாராய்
ஆலத்தை ஞாலத்து உளோர் திக்கு வானத்தர்
ஆவிக்கள் மாள்வித்து மடியாதே
ஆலித்து மூலத்தோடே உட் கொள் ஆதிக்கும்
ஆம் வித்தையாம் அத்தை அருள்வோனே
சேல் ஒத்த வேல் ஒத்த நீலத்து மேலிட்ட
தோதக் கண் மானுக்கு மணவாளா
தீது அற்ற நீதிக்குள் ஏய் பத்தி கூர் பத்தர்
சேவிக்க வாழ்வித்த பெருமாளே.

Back to Top

Thiruppugazh # 1040 நாராலே தோல்   (பொதுப்பாடல்கள்)  
தானா தானா தானா தானா
தானா தானத் ...... தனதான
சீரா ரூரிற் ...... பெருவாழ்வே
தேவே தேவப் ...... பெருமாளே.

நாரா லேதோல் நீரா லேயாம்
     நானா வாசற் ...... குடிலூடே
ஞாதா வாயே வாழ்கா லேகாய்
     நாய்பேய் சூழ்கைக் ...... கிடமாமுன்
தாரா ரார்தோ ளீரா றானே
     சார்வா னோர்நற் ...... பெருவாழ்வே
தாழா தேநா யேனா வாலே
     தாள்பா டாண்மைத் ...... திறல்தாராய்
பாரே ழோர்தா ளாலே யாள்வோர்
     பாவார்வேதத் ...... தயனாரும்
பாழூ டேவா னூடே பாரூ
     டேயூர் பாதத் ...... தினைநாடாச்
சீரார் மாதோ டேவாழ் வார்நீள்
     சேவூர் வார்பொற் ...... சடையீசர்
சேயே வேளே பூவே கோவே
     தேவே தேவப் ...... பெருமாளே.
நாராலே தோல் நீராலேயாம்
நானா வாசற் குடிலூடே
ஞாதாவாயே வாழ்கால் ஏகாய்
நாய்பேய் சூழ்கைக்கு இடமாமுன்
தாரார் ஆர்தோள் ஈராறானே
சார்வானோர்நற் பெருவாழ்வே
தாழாதே நாயேன் நாவாலே
தாள்பாடாண்மைத் திறல்தாராய்
பாரேழோர்தாளாலே யாள்வோர்
பாவார்வேதத்து அயனாரும்
பாழூடே வானூடே பாரூடேயூர் பாதத்தினை நாடா
சீரார் மாதோடேவாழ்வார்
நீள் சேவூர்வார் பொற் சடையீசர்
சேயே வேளே பூவே கோவே
தேவே தேவப் பெருமாளே.

Back to Top

Thiruppugazh # 1041 மாதா வோடே   (பொதுப்பாடல்கள்)  
தானா தானா தானா தானா
தானா தானத் ...... தனதான
சீரா ரூரிற் ...... பெருவாழ்வே
தேவே தேவப் ...... பெருமாளே.

மாதா வோடே மாமா னானோர்
     மாதோ டேமைத் ...... துனமாரும்
மாறா னார்போ னீள்தீ யூடே
     மாயா மோகக் ...... குடில்போடாப்
போதா நீரூ டேபோய் மூழ்கா
     வீழ்கா வேதைக் ...... குயிர்போமுன்
போதா காரா பாராய் சீரார்
     போதார் பாதத் ...... தருள்தாராய்
வேதா வோடே மாலா னார்மேல்
     வானோர் மேனிப் ...... பயமீள
வேதா னோர்மே லாகா தேயோர்
     வேலால் வேதித் ...... திடும்வீரா
தீதார் தீயார் தீயு டேமூள்
     சேரா சேதித் ...... திடுவோர்தஞ்
சேயே வேளே பூவே கோவே
     தேவே தேவப் ...... பெருமாளே.
மாதாவோடே மாமான் ஆனோர் மாதோடே
மைத்துனமாரும்
மாறானார் போல் நீள்தீ யூடே
மாயா மோகக் குடில்போடாப்
போதா நீரூடே போய் மூழ்கா
வீழ்கா வேதைக்கு உயிர்போமுன்
போதா காரா பாராய்
சீரார் போதார் பாதத்து அருள்தாராய்
வேதாவோடே மால் ஆனார்மேல் வானோர் மேனிப்
பயமீளவே
தானோர் மேல் ஆகாதேயோர் வேலால் வேதித்திடும் வீரா
தீதார் தீயார் தீயு டேமூள் சேரா சேதித்திடுவோர்தம் சேயே
வேளே பூவே கோவே
தேவே தேவப் பெருமாளே.

Back to Top

Thiruppugazh # 1045 அமல வாயு   (பொதுப்பாடல்கள்)  
தனன தான தானான தனன தான தானான
     தனன தான தானான ...... தனதான

அமல வாயு வோடாத கமல நாபி மேல்மூல
     அமுத பான மேமூல ...... அனல்மூள
அசைவு றாது பேராத விதமு மேவி யோவாது
     அரிச தான சோபான ...... மதனாலே
எமனை மோதி யாகாச கமன மாம னோபாவ
     மெளிது சால மேலாக ...... வுரையாடும்
எனதி யானும் வேறாகி எவரும் யாதும் யானாகும்
     இதய பாவ னாதீத ...... மருள்வாயே
விமலை தோடி மீதோடு யமுனை போல வோரேழு
     விபுத மேக மேபோல ...... வுலகேழும்
விரிவு காணு மாமாயன் முடிய நீளு மாபோல
     வெகுவி தாமு காகாய ...... பதமோடிக்
கமல யோனி வீடான ககன கோள மீதோடு
     கலப நீல மாயூர ...... இளையோனே
கருணை மேக மேதூய கருணை வாரி யேயீறில்
     கருணை மேரு வேதேவர் ...... பெருமாளே.
அமல வாயு ஓடாத கமல நாபி மேல் மூல
அமுத பானமே மூல அனல் மூள
அசைவுறாது பேராத விதமும் மேவி ஓவாது
அரிச(ம்) அதான சோபானம் அதனாலே
எமனை மோதி ஆகாச கமனமாம் மனோபாவம்
எளிது சால மேலாக உரையாடும்
எனது யானும் வேறாகி
எவரும் யாதும் யான் ஆகும்
இதய பாவன அதீதம் அருள்வாயே
விமலை தோடி மீதோடு யமுனை போல
ஓர் ஏழு விபுத மேகமே போல
உலகு ஏழும் விரிவு காணும் மாமாயன் முடிய நீளு மாறு
போல
வெகு விதா முக ஆகாய பதம் ஓடி
கமல யோனி வீடான ககன கோள மீது ஓடும்
கலப நீல மாயூர இளையோனே
கருணை மேகமே தூய கருணை வாரியே
ஈறு இல் கருணை மேருவே தேவர் பெருமாளே.

Back to Top

Thiruppugazh # 1053 அதல சேடனாராட   (பொதுப்பாடல்கள்)  
தனன தான தானான தனன தான தானான
     தனன தான தானான ...... தனதான

அதல சேட னாராட அகில மேரு மீதாட
     அபின காளி தானாட ...... அவளோடன்
றதிர வீசி வாதாடும் விடையி லேறு வாராட
     அருகு பூத வேதாள ...... மவையாட
மதுர வாணி தானாட மலரில் வேத னாராட
     மருவு வானு ளோராட ...... மதியாட
வனச மாமி யாராட நெடிய மாம னாராட
     மயிலு மாடி நீயாடி ...... வரவேணும்
கதைவி டாத தோள்வீம னெதிர்கொள் வாளி யால்நீடு
     கருத லார்கள் மாசேனை ...... பொடியாகக்
கதறு காலி போய்மீள விஜய னேறு தேர்மீது
     கனக வேத கோடூதி ...... அலைமோதும்
உததி மீதி லேசாயு முலக மூடு சீர்பாத
     உவண மூர்தி மாமாயன் ...... மருகோனே
உதய தாம மார்பான ப்ரபுட தேவ மாராஜ
     னுளமு மாட வாழ்தேவர் ...... பெருமாளே.
அதல சேட னாராட அகில மேரு மீதாட
     அபின காளி தானாட ...... அவளோடன்
றதிர வீசி வாதாடும் விடையி லேறு வாராட
     அருகு பூத வேதாள ...... மவையாட
மதுர வாணி தானாட மலரில் வேத னாராட
     மருவு வானு ளோராட ...... மதியாட
வனச மாமி யாராட நெடிய மாம னாராட
     மயிலு மாடி நீயாடி ...... வரவேணும்
கதைவி டாத தோள்வீம னெதிர்கொள் வாளி யால்நீடு
     கருத லார்கள் மாசேனை ...... பொடியாகக்
கதறு காலி போய்மீள விஜய னேறு தேர்மீது
     கனக வேத கோடூதி ...... அலைமோதும்
உததி மீதி லேசாயு முலக மூடு சீர்பாத
     உவண மூர்தி மாமாயன் ...... மருகோனே
உதய தாம மார்பான ப்ரபுட தேவ மாராஜ
     னுளமு மாட வாழ்தேவர் ...... பெருமாளே.

Back to Top

Thiruppugazh # 1078 கொடியன பிணி   (பொதுப்பாடல்கள்)  
தனதன தனதன தத்தத் தத்தத்
     தாந்தாந் ...... தனதான

கொடியன பிணிகொடு விக்கிக் கக்கிக்
     கூன்போந் ...... தசடாகுங்
குடிலுற வருமொரு மிக்கச் சித்ரக்
     கோண்பூண் ...... டமையாதே
பொடிவன பரசம யத்துத் தப்பிப்
     போந்தேன் ...... தலைமேலே
பொருளது பெறஅடி நட்புச் சற்றுப்
     பூண்டாண் ...... டருள்வாயே
துடிபட அலகைகள் கைக்கொட் டிட்டுச்
     சூழ்ந்தாங் ...... குடனாடத்
தொகுதொகு திகுதிகு தொக்குத் திக்குத்
     தோந்தாந் ...... தரிதாளம்
படிதரு பதிவ்ரதை யொத்தச் சுத்தப்
     பாழ்ங்கான் ...... தனிலாடும்
பழயவர் குமரகு றத்தத் தைக்குப்
     பாங்காம் ...... பெருமாளே.
கொடியன பிணி கொ(ண்)டு விக்கிக் கக்கிக் கூன் போந்து
அசடு ஆகும்
குடில் உற வரும் ஒரு மிக்கச் சித்ரக் கோண் பூண்டு
அமையாதே
பொடிவன பர சமயத்துத் தப்பிப் போந்தேன் தலை மேலே
பொருள் அது பெற அடி நட்புச் சற்றுப் பூண்டு ஆண்டு
அருள்வாயே
துடி பட அலகைகள் கைக் கொட்டிட்டுச் சூழ்ந்து ஆங்கு
உடன் ஆட
தொகு தொகு திகு திகு தொக்குத் திக்குத் தோம் தாம் தரி
தாளம் படி தரு பதிவ்ரதை ஒத்த
சுத்தப் பாழ்ங் கான் தனில் ஆடும் பழயவர் குமர
குறத் தத்தைக்குப் பாங்காம் பெருமாளே.

Back to Top

Thiruppugazh # 1177 புகரில் சேவல   (பொதுப்பாடல்கள்)  
தனன தானன தந்தன தந்தன
     தனன தானன தந்தன தந்தன
          தனன தானன தந்தன தந்தன ...... தனதான

புகரில் சேவல தந்துர சங்க்ரம
     நிருதர் கோபக்ர வுஞ்சநெ டுங்கிரி
          பொருத சேவக குன்றவர் பெண்கொடி ...... மணவாளா
புனித பூசுர ருஞ்சுர ரும்பணி
     புயச பூதர என்றிரு கண்புனல்
          பொழிய மீமிசை யன்புது ளும்பிய ...... மனனாகி
அகில பூதவு டம்புமு டம்பினில்
     மருவு மாருயி ருங்கர ணங்களு
          மவிழ யானுமி ழந்தஇ டந்தனி ...... லுணர்வாலே
அகில வாதிக ளுஞ்சம யங்களும்
     அடைய ஆமென அன்றென நின்றதை
          யறிவி லேனறி யும்படி யின்றருள் ...... புரிவாயே
மகர கேதன முந்திகழ் செந்தமிழ்
     மலய மாருத மும்பல வெம்பரி
          மளசி லீமுக மும்பல மஞ்சரி ...... வெறியாடும்
மதுக ராரம்வி குஞ்சணி யுங்கர
     மதுர கார்முக மும்பொர வந்தெழு
          மதன ராஜனை வெந்துவி ழும்படி ...... முனிபால
முகிழ்வி லோசன ரஞ்சிறு திங்களு
     முதுப கீரதி யும்புனை யுஞ்சடை
          முடியர் வேதமு நின்றும ணங்கமழ் ...... அபிராமி
முகர நூபுர பங்கய சங்கரி
     கிரிகு மாரித்ரி யம்பகி தந்தருள்
          முருக னேசுர குஞ்சரி ரஞ்சித ...... பெருமாளே.
புகரில் சேவல
தந்துர சங்க்ரம நிருதர் கோப
க்ரவுஞ்சநெ டுங்கிரி பொருத சேவக
குன்றவர் பெண்கொடி மணவாளா
புனித பூசுரருஞ் சுரரும்பணி
புயச பூதர என்று
இரு கண்புனல் பொழிய
மீமிசை யன்பு துளும்பிய மனனாகி
அகில பூதவுடம்பும்
உடம்பினில் மருவு மாருயிரும்
கரணங்களும்
அவிழ யானுமிழந்த இடந்தனில்
உணர்வாலே
அகில வாதிகளுஞ்சம யங்களும்
அடைய
ஆமென அன்றென நின்றதை
அறிவி லேனறி யும்படி
இின்றருள் புரிவாயே
மகர கேதன முந்திகழ்
செந்தமிழ் மலய மாருதமும்
பல வெம்பரிமள சிலீமுகமும்
பல மஞ்சரி வெறியாடும்
மதுக ராரம் விகுஞ்சணியும்
கர மதுர கார்முகமும்
பொர வந்தெழு மதன ராஜனை
வெந்துவிழும்படி முனி
பால முகிழ்விலோசனர்
அஞ்சிறு திங்களு முதுபகீரதியும்
புனையுஞ்சடைமுடியர்
வேதமு நின்று
மணங்கமழ் அபிராமி
முகர நூபுர பங்கய சங்கரி
கிரிகு மாரித்ரி யம்பகி
தந்தருள் முருகனே
சுர குஞ்சரி ரஞ்சித பெருமாளே.

Back to Top

Thiruppugazh # 1250 தீ ஊதை தாத்ரி   (பொதுப்பாடல்கள்)  
தானான தாத்த தானான தாத்த
     தானான தாத்த ...... தனதான

தீயூதை தாத்ரி பானீய மேற்ற
     வானீதி யாற்றி ...... கழுமாசைச்
சேறூறு தோற்பை யானாக நோக்கு
     மாமாயை தீர்க்க ...... அறியாதே
பேய்பூத மூத்த பாறோரி காக்கை
     பீறாஇ ழாத்தி ...... னுடல்பேணிப்
பேயோன டாத்து கோமாளி வாழ்க்கை
     போமாறு பேர்த்து ...... னடிதாராய்
வேயூறு சீர்க்கை வேல்வேடர் காட்டி
     லேய்வாளை வேட்க ...... வுருமாறி
மீளாது வேட்கை மீதூர வாய்த்த
     வேலோடு வேய்த்த ...... இளையோனே
மாயூர வேற்றின் மீதே புகாப்பொன்
     மாமேரு வேர்ப்ப ...... றியமோதி
மாறான மாக்கள் நீறாக வோட்டி
     வானாடு காத்த ...... பெருமாளே.
தீ ஊதை தாத்ரி பானீயம் ஏற்ற வான் ஈதியால் திகழும்
ஆசைச் சேறு ஊறு தோல் பை
யானாக நோக்கு(ம்) மா மாயை தீர்க்க அறியாதே
பேய் பூதம் மூத்த பாறு ஓரி காக்கை
பீறா இழாத் தி(ன்)னு(ம்) உடல் பேணி
பேயோன் நடாத்து கோமாளி வாழ்க்கை
போம் ஆறு பேர்த்து உன் அடி தாராய்
வேய் ஊறு சீரக் கை வேல் வேடர் காட்டில்
ஏய்வாளை வேட்க உரு மாறி
மீளாது வேட்கை மீது ஊர வாய்த்த வேலோடு வேய்த்த
இளையோனே
மாயூர ஏற்றின் மீதே புகாப் பொன் மா மேரு வேர்ப் பறிய
மோதி
மாறு ஆன மாக்கள் நீறாக ஓட்டி
வான் நாடு காத்த பெருமாளே.

Back to Top

Thiruppugazh # 1291 துள்ளு மதவேள்   (பொதுப்பாடல்கள்)  
தய்யதன தானத் ...... தனதான
துள்ளுமத வேள்கைக் ...... கணையாலே
தொல்லைநெடு நீலக் ...... கடலாலே
மெள்ளவரு சோலைக் ...... குயிலாலே
மெய்யுருகு மானைத் ...... தழுவாயே
தெள்ளுதமிழ் பாடத் ...... தெளிவோனே
செய்யகும ரேசத் ...... திறலோனே
வள்ளல்தொழு ஞானக் ...... கழலோனே
வள்ளிமண வாளப் ...... பெருமாளே.
துள்ளுமத வேள்
கைக் கணையாலே
தொல்லைநெடு
நீலக் கடலாலே
மெள்ளவரு
சோலைக் குயிலாலே
மெய்யுருகு மானை
தழுவாயே
தெள்ளுதமிழ் பாட
தெளிவோனே
செய்யகும ரேச
திறலோனே
வள்ளல்தொழு
ஞானக் கழலோனே
வள்ளிமண வாளப் பெருமாளே.

Back to Top

Thiruppugazh # 1296 நீலங்கொள்   (பொதுப்பாடல்கள்)  
தானந்த தானத்தம் ...... தனதான
நீலங்கொள் மேகத்தின் ...... மயில்மீதே
   நீவந்த வாழ்வைக்கண் ...... டதனாலே
      மால்கொண்ட பேதைக்குன் ...... மணநாறும்
         மார்தங்கு தாரைத்தந் ...... தருள்வாயே
வேல்கொண்டு வேலைப்பண் ...... டெறிவோனே
   வீரங்கொள் சூரர்க்குங் ...... குலகாலா
      நாலந்த வேதத்தின் ...... பொருளோனே
         நானென்று மார்தட்டும் ...... பெருமாளே.
நீலங்கொள் மேகத்தின் மயில்மீதே
நீவந்த வாழ்வைக்கண்டதனாலே
மால்கொண்ட பேதைக்கு உன் மணநாறும்
மார்தங்கு தாரைத் தந்தருள்வாயே
வேல்கொண்டு வேலைப்பண்டெறிவோனே
வீரங்கொள் சூரர்க்குங் குலகாலா
நாலந்த வேதத்தின் பொருளோனே
நானென்று மார்தட்டும் பெருமாளே.

Back to Top

Thiruppugazh # 1297 பட்டுப் படாத   (பொதுப்பாடல்கள்)  
தத்தத் தனான ...... தனதான
பட்டுப் படாத ...... மதனாலும்
   பக்கத்து மாதர் ...... வசையாலும்
      சுட்டுச் சுடாத ...... நிலவாலும்
         துக்கத்தி லாழ்வ ...... தியல்போதான்
தட்டுப் படாத ...... திறல்வீரா
   தர்க்கித்த சூரர் ...... குலகாலா
      மட்டுப் படாத ...... மயிலோனே
         மற்றொப்பி லாத ...... பெருமாளே.
பட்டுப் படாத மதனாலும்
பக்கத்து மாதர் வசையாலும்
சுட்டுச் சுடாத நிலவாலும்
துக்கத்தில் ஆழ்வது இயல்போதான்
தட்டுப் படாத திறல்வீரா
தர்க்கித்த சூரர் குலகாலா
மட்டுப் படாத மயிலோனே
மற்றொப்பி லாத பெருமாளே.

Back to Top

Thiruppugazh # 1306 கும்பகோணம்   (க்ஷேத்திரக் கோவை)  
தந்த தானன தானான தந்தன
     தந்த தானன தானான தந்தன
          தந்த தானன தானான தந்தன ...... தனதான

கும்ப கோணமொ டாரூர் சிதம்பரம்
     உம்பர் வாழ்வுறு சீகாழி நின்றிடு
          கொன்றை வேணியர் மாயூர மம்பெறு ...... சிவகாசி
கொந்து லாவிய ராமே சுரந்தனி
     வந்து பூஜைசெய் நால்வேத தந்திரர்
          கும்பு கூடிய வேளூர் பரங்கிரி ...... தனில்வாழ்வே
செம்பு கேசுர மாடானை யின்புறு
     செந்தி லேடகம் வாழ்சோலை யங்கிரி
          தென்றன் மாகிரி நாடாள வந்தவ ...... செகநாதஞ்
செஞ்சொ லேரக மாவா வினன்குடி
     குன்று தோறுடன் மூதூர் விரிஞ்சைநல்
          செம்பொன் மேனிய சோணாடு வஞ்சியில் ...... வருதேவே
கம்பை மாவடி மீதேய சுந்தர
     கம்பு லாவிய காவேரி சங்கமு
          கஞ்சி ராமலை வாழ்தேவ தந்திர ...... வயலூரா
கந்த மேவிய போரூர் நடம்புரி
     தென்சி வாயமு மேயா யகம்படு
          கண்டி யூர்வரு சாமீக டம்பணி ...... மணிமார்பா
எம்பி ரானொடு வாதாடு மங்கையர்
     உம்பர் வாணிபொ னீள்மால் சவுந்தரி
          எந்த நாள்தொறு மேர்பாக நின்றுறு ...... துதியோதும்
இந்தி ராணிதன் மாதோடு நன்குற
     மங்கை மானையு மாலாய்ம ணந்துல
          கெங்கு மேவிய தேவால யந்தொறு ...... பெருமாளே.
கும்ப கோணமொ டாரூர் சிதம்பரம்
உம்பர் வாழ்வுறு சீகாழி
நின்றிடு கொன்றை வேணியர் மாயூரம்
அம்பெறு சிவகாசி
கொந்து உலாவிய ராமேசுரம்
தனி வந்து பூஜைசெய் நால்வேத தந்திரர்
கும்பு கூடிய வேளூர்
பரங்கிரி தனில்வாழ்வே
செம்பு கேசுரம் ஆடானை
இன்புறு செந்தில் ஏடகம்
வாழ்சோலை யங்கிரி
தென்றன் மாகிரி
நாடாள வந்தவ
செகநாத
செஞ்சொல் ஏரக
மாவாவினன்குடி
குன்று தோறுடன்
மூதூர் விரிஞ்சை
நல் செம்பொன் மேனிய
சோணாடு வஞ்சியில் வருதேவே
கம்பை மாவடி மீதேய சுந்தர
கம்பு உலாவிய காவேரி சங்கமுகம்
சிராமலை வாழ்தேவ தந்திர
வயலூரா
கந்த மேவிய போரூர்
நடம்புரி தென்சிவாயமு மேயாய்
அகம்படு கண்டி யூர்வரு சாமீ
க டம்பணி மணிமார்பா
எம்பிரானொடு வாதாடு மங்கையர்
உம்பர் வாணி பொன் நீள்மால் சவுந்தரி
எந்த நாள்தொறும் ஏர்பாக நின்று
உறு துதியோதும் இந்தி ராணிதன் மாதோடு
நன்குற மங்கை மானையு
மாலாய்மணந்து
உலகெங்கு மேவிய தேவாலயந்தொறு பெருமாளே.

Back to Top

Thiruppugazh # 1307 அகரமுமாகி   (பழமுதிர்ச்சோலை)  
தனதன தான தனதன தான தனதன தான ...... தனதான
அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி
அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய்
இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி ...... வருவோனே
இருநில மீதி லெளியனும் வாழ எனதுமு னோடி ...... வரவேணும்
மகபதி யாகி மருவும் வலாரி மகிழ்களி கூரும் ...... வடிவோனே
வனமுறை வேட னருளிய பூஜை மகிழ்கதிர் காம ...... முடையோனே
செககண சேகு தகுதிமி தோதி திமியென ஆடு ...... மயிலோனே
திருமலி வான பழமுதிர் சோலை மலைமிசை மேவு ...... பெருமாளே.
அகரமும் ஆகி
அதிபனும் ஆகி
அதிகமும் ஆகி
அகமாகி
அயனென வாகி
அரியென வாகி
அரனென வாகி
அவர் மேலாய்
இகரமும் ஆகி
எவைகளும்ஆகி
இனிமையும் ஆகி
வருவோனே
இருனில மீதில்
எளியனும் வாழ
எனதுமுன் ஓடி வரவேணும்
மகபதி ஆகி
மருவும் வலாரி
மகிழ் களி கூரும்
வடிவோனே
வனமுறை வேடன்
அருளிய பூஜை மகிழ்
கதிர்காமம் உடையோனே
ஜெககண ஜேகு தகுதிமி தோதி திமி
என ஆடு மயிலோனே
திருமலிவான
பழமுதிர்ச்சோலை மலை மிசை
மேவு பெருமாளே.

Back to Top

Thiruppugazh # 1309 காரணமதாக   (பழமுதிர்ச்சோலை)  
தானதன தான தந்த ...... தனதான
காரணம தாக வந்து ...... புவிமீதே
   காலனணு காதி சைந்து ...... கதிகாண
      நாரணனும் வேதன் முன்பு ...... தெரியாத
         ஞானநட மேபு ரிந்து ...... வருவாயே
ஆரமுத மான தந்தி ...... மணவாளா
   ஆறுமுக மாறி ரண்டு ...... விழியோனே
      சூரர்கிளை மாள வென்ற ...... கதிர்வேலா
         சோலைமலை மேவி நின்ற ...... பெருமாளே.
காரணமதாக வந்து
புவிமீதே
காலனணுகாது
இசைந்து கதிகாண
நாரணனும் வேதன் முன்பு தெரியாத
ஞானநடமே புரிந்து வருவாயே
ஆரமுத மான தந்தி மணவாளா
ஆறுமுக மாறி ரண்டு விழியோனே
சூரர்கிளை மாள
வென்ற கதிர்வேலா
சோலைமலை மேவி நின்ற பெருமாளே.

Back to Top

Thiruppugazh # 1313 ஆசை நாலுசதுர   (பழமுதிர்ச்சோலை)  
தான தானதன தத்ததன தத்ததன
     தான தானதன தத்ததன தத்ததன
          தான தானதன தத்ததன தத்ததன ...... தந்ததான

ஆசை நாலுசது ரக்கமல முற்றினொளி
     வீசி யோடியிரு பக்கமொடு றச்செல்வளி
          ஆவல் கூரமண்மு தற்சலச பொற்சபையு ...... மிந்துவாகை
ஆர மூணுபதி யிற்கொளநி றுத்திவெளி
     யாரு சோதிநுறு பத்தினுட னெட்டுஇத
          ழாகி யேழுமள விட்டருண விற்பதியின் ...... விந்துநாத
ஓசை சாலுமொரு சத்தமதி கப்படிக
     மோடு கூடியொரு மித்தமுத சித்தியொடு
          மோது வேதசர சத்தியடி யுற்றதிரு ...... நந்தியூடே
ஊமை யேனையொளிர் வித்துனது முத்திபெற
     மூல வாசல்வெளி விட்டுனது ரத்திலொளிர்
          யோக பேதவகை யெட்டுமிதி லொட்டும்வகை ...... யின்றுதாராய்
வாசி வாணிகனெ னக்குதிரை விற்றுமகிழ்
     வாத வூரனடி மைக்கொளுக்ரு பைக்கடவுள்
          மாழை ரூபன்முக மத்திகைவி தத்தருண ...... செங்கையாளி
வாகு பாதியுறை சத்திகவு ரிக்குதலை
     வாயின் மாதுதுகிர் பச்சைவடி விச்சிவையென்
          மாசு சேரழுபி றப்பையும றுத்தவுமை ...... தந்தவாழ்வே
காசி ராமெசுரம் ரத்நகிரி சர்ப்பகிரி
     ஆரூர் வேலுர் தெவுர் கச்சிமது ரைப்பறியல்
          காவை மூதுரரு ணக்கிரிதி ருத்தணியல் ...... செந்தில்நாகை
காழி வேளுர்பழ நிக்கிரி குறுக்கைதிரு
     நாவ லூர்திருவெ ணெய்ப்பதியின் மிக்கதிகழ்
          காதல் சோலைவளர் வெற்பிலுறை முத்தர்புகழ் ...... தம்பிரானே.
ஆசை நாலு சதுர கமல முற்றின் ஒளி வீசி
ஓடி இரு பக்கமொடு உற செல் வளி
ஆவல் கூர மண் முதல் சலசம்
பொன் சபையும் இந்து வாகை ஆர
மூணு பதியில் கொள நிறுத்தி
வெளி ஆரு சோதி நூறு பத்தினுடன் எட்டு இதழாகி
ஏழும் அளவு இட்டு

Back to Top

Thiruppugazh # 1315 சீர் சிறக்கும் மேனி   (பழமுதிர்ச்சோலை)  
தானதத்த தான தனாதனா தன
     தானதத்த தான தனாதனா தன
          தானதத்த தான தனாதனா தன ...... தனதானா

சீர்சிறக்கு மேனி பசேல் பசே லென
     நூபுரத்தி னோசை கலீர் கலீ ரென
          சேரவிட்ட தாள்கள் சிவேல் சிவே லென ...... வருமானார்
சேகரத்தின் வாலை சிலோர் சிலோர் களு
     நூறுலக்ஷ கோடி மயால் மயால் கொடு
          தேடியொக்க வாடி யையோ வையோ வென ...... மடமாதர்
மார்படைத்த கோடு பளீர் பளீ ரென
     ஏமலித்தெ னாவி பகீர் பகீ ரென
          மாமசக்கி லாசை யுளோ முளோ மென ...... நினைவோடி
வாடைபற்று வேளை யடா வடா வென
     நீமயக்க மேது சொலாய் சொலா யென
          வாரம்வைத்த பாத மிதோ இதோ என ...... அருள்வாயே
பாரதத்தை மேரு வெளீ வெளீ திகழ்
     கோடொடித்த நாளில் வரைஇ வரைஇ பவர்
          பானிறக்க ணேசர் குவா குவா கனர் ...... இளையோனே
பாடல்முக்ய மாது தமீழ் தமீ ழிறை
     மாமுநிக்கு காதி லுணார் வுணார் விடு
          பாசமற்ற வேத குரூ குரூ பர ...... குமரேசா
போர்மிகுத்த சூரன் விடோம் விடோ மென
     நேரெதிர்க்க வேலை படீர் படீ ரென
          போயறுத்த போது குபீர் குபீ ரென ...... வெகுசோரி
பூமியுக்க வீசு குகா குகா திகழ்
     சோலைவெற்பின் மேவு தெய்வா தெய்வா னைதொள்
          பூணியிச்சை யாறு புயா புயா றுள ...... பெருமாளே.
சீர் சிறக்கும் மேனி பசேல் பசேல் என
நூபுரத்தின் ஓசை கலீர் கலீர் என
சேர விட்ட தாள்கள் சிவேல் சிவேல் என வரு மானார்
சேகரத்தின் வாலை சிலோர் சிலோர்களு(ம்)
நூறு லக்ஷ கோடி மயால் மயால் கொடு
தேடி ஒக்க வாடி ஐயோ ஐயோ என மடமாதர்
மார்பு அடைத்த கோடு பளீர் பளீர் என
ஏமலித்து என் ஆவி பகீர் பகீர் என
மா மசக்கில் ஆசை உளோம் உளோம் என நினைவு ஓடி
வாடை பற்று வேளை அடா அடா என
நீ மயக்கம் ஏது சொலாய் சொலாய் என
வாரம் வைத்த பாதம் இதோ இதோ என அருள்வாயே
பாரதத்தை மேரு வெளீ வெளீ திகழ்
கோடு ஒடித்த நாளில் வரை (இ)வரை (இ)பவர்
பா(னு) நிறக் கணேசர் கு ஆகு வாகனர் இளையோனே
பாடல் முக்ய மாது தமீழ் தமீழ் இறை
மா முநிக்கு காதில் உணார் உணார் விடு
பாசம் அற்ற வேத குரூ குரூபர குமரேசா
போர் மிகுத்த சூரன் விடோம் விடோம் என
நேர் எதிர்க்க வேலை படீர் படீர் என போய் அறுத்த போது
குபீர் குபீர் என வெகு சோரி பூமி உக்க வீசு குகா குகா
திகழ் சோலை வெற்பின் மேவு தெய்வா
தெய்வானை தோள் பூணி இச்சை ஆறு புயா புயா ஆறு உள
பெருமாளே.

Back to Top

Thiruppugazh # 1316 துடிகொள் நோய்   (பழமுதிர்ச்சோலை)  
தனன தான தான தத்த
     தனன தான தான தத்த
          தனன தான தான தத்த ...... தனதான

துடிகொ ணோய்க ளோடு வற்றி
     தருண மேனி கோழை துற்ற
          இரும லீளை வாத பித்த ...... மணுகாமல்
துறைக ளோடு வாழ்வு விட்டு
     உலக நூல்கள் வாதை யற்று
          சுகமு ளாநு பூதி பெற்று ...... மகிழாமே
உடல்செய் கோர பாழ்வ யிற்றை
     நிதமு மூணி னாலு யர்த்தி
          யுயிரி னீடு யோக சித்தி ...... பெறலாமே
உருவி லாத பாழில் வெட்ட
     வெளியி லாடு நாத நிர்த்த
          உனது ஞான பாத பத்ம ...... முறுவேனோ
கடிது லாவு வாயு பெற்ற
     மகனும் வாலி சேயு மிக்க
          மலைகள் போட ஆழி கட்டி ...... யிகலூர்போய்க்
களமு றானை தேர்நு றுக்கி
     தலைக ளாறு நாலு பெற்ற
          அவனை வாளி யால டத்தன் ...... மருகோனே
முடுகு வீர சூர பத்மர்
     தலையின் மூளை நீறு பட்டு
          முடிவ தாக ஆடு நிர்த்த ...... மயில்வீரா
முநிவர் தேவர் ஞான முற்ற
     புநித சோலை மாமலைக்குள்
          முருக வேல த்யாகர் பெற்ற ...... பெருமாளே.
துடிகொள் நோய்களோடு வற்றி
தருண மேனி கோழை துற்ற
இருமல் ஈளை வாத பித்தம் அணுகாமல்
துறைகளோடு வாழ்வு விட்டு
உலக நூல்கள் வாதை யற்று
சுகமுள அநுபூதி பெற்று மகிழாமே
உடல்செய் கோர பாழ்வயிற்றை
நிதமும் ஊணினால் உயர்த்தி
உயிரி னீடு யோக சித்தி பெறலாமே
உருவிலாத பாழில்
வெட்ட வெளியிலாடு நாத நிர்த்த
உனது ஞான பாத பத்மம் உறுவேனோ
கடிது உலாவு வாயு பெற்ற மகனும் வாலி சேயு
மிக்க மலைகள் போட ஆழி கட்டி
இகலூர்போய்க் களமுற ஆனை தேர்நுறுக்கி
தலைகள் ஆறு நாலு பெற்ற அவனை
வாளியால் அடு அத்தன்மருகோனே
முடுகு வீர சூர பத்மர்
தலையின் மூளை நீறு பட்டு முடிவதாக
ஆடு நிர்த்த மயில்வீரா
முநிவர் தேவர் ஞான முற்ற புநித சோலை மாமலைக்குள்
முருக வேல த்யாகர் பெற்ற பெருமாளே.

Back to Top

Thiruppugazh # 1318 வாதினை அடர்ந்த   (பழமுதிர்ச்சோலை)  
தானதன தந்த தானதன தந்த
     தானதன தந்த ...... தனதான

வாதினை யடர்ந்த வேல்விழியர் தங்கள்
     மாயமதொ ழிந்து ...... தெளியேனே
மாமலர்கள் கொண்டு மாலைகள் புனைந்து
     மாபதம ணிந்து ...... பணியேனே
ஆதியொடு மந்த மாகிய நலங்கள்
     ஆறுமுக மென்று ...... தெரியேனே
ஆனதனி மந்த்ர ரூபநிலை கொண்ட
     தாடுமயி லென்ப ...... தறியேனே
நாதமொடு விந்து வானவுடல் கொண்டு
     நானிலம லைந்து ...... திரிவேனே
நாகமணி கின்ற நாதநிலை கண்டு
     நாடியதில் நின்று ...... தொழுகேனே
சோதியுணர் கின்ற வாழ்வுசிவ மென்ற
     சோகமது தந்து ...... எனையாள்வாய்
சூரர்குலம் வென்று வாகையொடு சென்று
     சோலைமலை நின்ற ...... பெருமாளே.
வாதினை யடர்ந்த வேல்விழியர் தங்கள்
மாயமது ஒழிந்து தெளியேனே
மாமலர்கள் கொண்டு மாலைகள் புனைந்து
மாபதம் அணிந்து பணியேனே
ஆதியொடு மந்த மாகிய நலங்கள்
ஆறுமுக மென்று தெரியேனே
ஆனதனி மந்த்ர ரூபநிலை கொண்டது
ஆடுமயி லென்பது அறியேனே
நாதமொடு விந்து வானவுடல் கொண்டு
நானிலம் அலைந்து திரிவேனே
நாகம் அணிகின்ற நாதநிலை கண்டு
நாடியதில் நின்று தொழுகேனே
சோதியுணர் கின்ற வாழ்வுசிவ மென்ற
சோகமது தந்து எனையாள்வாய்
சூரர்குலம் வென்று வாகையொடு சென்று
சோலைமலை நின்ற பெருமாளே.
Audio/Video Link(s)

Back to Top

Thiruppugazh # 1328 ஏறுமயிலேறி   (திருவருணை)  

ஏறுமயி லேறிவிளை யாடுமுக மொன்றே
          ஈசருடன் ஞானமொழி பேசுமுக மொன்றே
     கூறுமடி யார்கள்வினை தீர்க்குமுக மொன்று
          குன்றுருவ வேல்வாங்கி நின்றமுக மொன்றே
     மாறுபடு சூரரை வதைத்தமுக மொன்றே
          வள்ளியை மணம்புணர வந்தமுக மொன்றே
     ஆறுமுக மானபொருள் நீயருளல் வேண்டும்
          ஆதியரு ணாசல மமர்ந்த பெருமாளே.
ஏறுமயி லேறிவிளை யாடுமுக மொன்றே
          ஈசருடன் ஞானமொழி பேசுமுக மொன்றே
     கூறுமடி யார்கள்வினை தீர்க்குமுக மொன்றே
          குன்றுருவ வேல்வாங்கி நின்றமுக மொன்று
     மாறுபடு சூரரை வதைத்தமுக மொன்றே
          வள்ளியை மணம்புணர வந்தமுக மொன்றே
     ஆறுமுக மானபொருள் நீயருளல் வேண்டும்
          ஆதியரு ணாசல மமர்ந்த பெருமாளே.
Audio/Video Link(s)

Back to Top

Thiruppugazh #   ()