sivasiva.org
Search this site with
song/pathigam/paasuram numbers
Or Tamil/English words

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  
999   பொதுப்பாடல்கள் திருப்புகழ் ( - வாரியார் # 1238 )  
போதில் இருந்து   முன் திருப்புகழ்   அடுத்த திருப்புகழ்
தானன தந்தன தாத்தன தானன தந்தன தாத்தன
     தானன தந்தன தாத்தன ...... தனதான

போதிலி ருந்துவி டாச்சதுர் வேதமொ ழிந்தவ னாற்புளி
     னாகமு கந்தவ னாற்றெரி ...... வரிதான
போதுயர் செந்தழ லாப்பெரு வானநி றைந்தவி டாப்புக
     ழாளன ருஞ்சிவ கீர்த்திய ...... னெறிகாண
ஆதர வின்பருள் மாக்குரு நாதனெ னும்படி போற்றிட
     ஆனப தங்களை நாக்கரு ...... திடவேயென்
ஆசையெ ணும்படி மேற்கவி பாடுமி தம்பல பார்த்தடி
     யேனும றிந்துனை யேத்துவ ...... தொருநாளே
காதட ரும்படி போய்ப்பல பூசலி டுங்கய லாற்கனி
     வாயித ழின்சுவை யாற்பயில் ...... குறமாதின்
காரட ருங்குழ லாற்கிரி யானத னங்களி னாற்கலை
     மேவும ருங்கத னாற்செறி ...... குழையோலை
சாதன மென்றுரை யாப்பரி தாபமெ னும்படி வாய்த்தடு
     மாறிம னந்தள ராத்தனி ...... திரிவோனே
சாகர மன்றெரி யாக்கொடு சூரரு கும்படி யாத்திணி
     வேலையு ரம்பெற வோட்டிய ...... பெருமாளே.
Easy Version:
போதில் இருந்து விடாச் சதுர் வேத(ம்) மொழிந்தவனால்
பு(ள்)ளின் ஆகம் உகந்தவனால் தெரி அரிதான
போது உயர் செம் தழலாப் பெரு வான(ம்) நிறைந்த விடாப்
புகழாளன் அரும் சிவ கீர்த்தியன்
நெறி காண ஆதரவு இன்ப(ம்) அருள் மாக் குரு நாதன்
எனும்படி போற்றிட
ஆன பதங்களை நாக் கருதிடவே என் ஆசை எ(ண்)ணுபடி
மேல் கவி பாடும் இதம் பல பார்த்து அடியேனும் அறிந்து
உனை ஏத்துவது ஒரு நாளே
காது அடரும்படி போய்ப் பல பூசல் இடும் கயலால் கனி
வாய் இதழின் சுவையால் பயில் குற மாதின்
கார் அடரும் குழலால் கிரியான தனங்களினால் கலை
மேவு(ம்) மருங்கு அதனால்
செறி குழை ஓலை சாதனம் என்று உரையாப் பரிதாபம்
எனும்படி வாய்த் தடுமாறி மனம் தளராத் தனி திரிவோனே
சாகரம் அன்று எரியாக் கொடு சூரர் உகும்படியாத் திணி
வேலை உரம் பெற ஓட்டிய பெருமாளே.
Add (additional) Audio/Video Link

போதில் இருந்து விடாச் சதுர் வேத(ம்) மொழிந்தவனால்
பு(ள்)ளின் ஆகம் உகந்தவனால் தெரி அரிதான
... தாமரைப்
பூவில் வீற்றிருந்து அதை விட்டு நீங்காத, நான்கு வேதங்களையும் ஓதிய
பிரமனாலும், கருட வாகனத்தை விரும்பிய திருமாலாலும் அறிவதற்கு
அரிதான வகையில்,
போது உயர் செம் தழலாப் பெரு வான(ம்) நிறைந்த விடாப்
புகழாளன் அரும் சிவ கீர்த்தியன்
... தக்க சமயத்தில் (அவர்கள்
இருவரும் வாதிட்டபோது), உயர்ந்து எழுந்த செவ்விய தீப்பிழம்பாக
பெருத்த வானம் எல்லாம் நிறைவுற்று நின்ற நீங்காத புகழ் பெற்றவனாகிய
அரிய சிவன் என்று புகழ் கொண்ட ஈசன்
நெறி காண ஆதரவு இன்ப(ம்) அருள் மாக் குரு நாதன்
எனும்படி போற்றிட
... உண்மை நெறியைத் தான் காணும் பொருட்டு,
அன்பையும் இன்பத்தையும் ஊட்டிய சிறந்த குருநாதன் என்னும்
வகையில் (உன்னைப்) போற்றி செய்ய,
ஆன பதங்களை நாக் கருதிடவே என் ஆசை எ(ண்)ணுபடி
மேல் கவி பாடும் இதம் பல பார்த்து அடியேனும் அறிந்து
உனை ஏத்துவது ஒரு நாளே
... இருந்த உனது திருவடிகளை எனது
நா எண்ணித் துதித்திட என்னுடைய ஆசை உன்னை எண்ணியபடியே
உன் மேல் கவிகளைப் பாடும் இன்ப நிலையைப் பார்த்து அடியேனாகிய
நானும் உன்னை அறிந்து போற்றும்படியான ஒரு நாளும் எனக்குக்
கிட்டுமோ?
காது அடரும்படி போய்ப் பல பூசல் இடும் கயலால் கனி
வாய் இதழின் சுவையால் பயில் குற மாதின்
... காதை
நெருக்குவது போல அதன் அருகில் சென்று பல சச்சரவுகளைச் செய்யும்
கயல் மீன் போன்ற கண்ணாலும், கொவ்வைக் கனி போன்ற வாயிதழின்
இனிய சுவையாலும் நிரம்ப அழகு பெற்ற குறப் பெண் வள்ளியின்
கார் அடரும் குழலால் கிரியான தனங்களினால் கலை
மேவு(ம்) மருங்கு அதனால்
... கருமை நிறைந்த கூந்தலால், மலை
போன்ற மார்பகங்களால், ஆடை அணிந்துள்ள இடுப்பினால்,
செறி குழை ஓலை சாதனம் என்று உரையாப் பரிதாபம்
எனும்படி வாய்த் தடுமாறி மனம் தளராத் தனி திரிவோனே
...
நெருங்கப் பொருந்தியுள்ள உன் காதோலையே (நான் உனக்கு அடிமை
என்று) எழுதித் தந்த சாசனப் பத்திரம் என்று கூறி, ஐயோ பாவம் என்று
சொல்லும்படியான நிலையை அடைந்து, பேச்சும் தடுமாற்றம் அடைந்து,
மனமும் சோர்வு அடைந்து திரிந்தவனே,
சாகரம் அன்று எரியாக் கொடு சூரர் உகும்படியாத் திணி
வேலை உரம் பெற ஓட்டிய பெருமாளே.
... சமுத்திரம் அன்று
எரிந்து கொந்தளிக்கும்படி கொடுமை வாய்ந்த சூரர்கள் மடிந்து சிதற,
வலிய வேலாயுதத்தை அவர்கள் மார்பில் வேகமாகச் செலுத்திய பெருமாளே.

Similar songs:

582 - மேகம் எனும் குழல் (விராலிமலை)

தானன தந்தன தாத்தன தானன தந்தன தாத்தன
     தானன தந்தன தாத்தன ...... தனதான

999 - போதில் இருந்து (பொதுப்பாடல்கள்)

தானன தந்தன தாத்தன தானன தந்தன தாத்தன
     தானன தந்தன தாத்தன ...... தனதான

1000 - வேடர் செழுந்தினை (பொதுப்பாடல்கள்)

தானன தந்தன தாத்தன தானன தந்தன தாத்தன
     தானன தந்தன தாத்தன ...... தனதான

Songs from this sthalam

992 - போத நிர்க்குண

993 - ஓது முத்தமிழ்

994 - வேத வித்தகா

995 - ஆவி காப்பது

996 - ஏகமாய் பலவாய்

997 - தோடு மென்குழை

998 - நாலிரண்டிதழாலே

999 - போதில் இருந்து

1000 - வேடர் செழுந்தினை

1001 - இலகி யிருகுழை

1002 - கடலை பயறொடு

1003 - கமல குமிளித

1004 - தசையும் உதிரமும்

1005 - நெடிய வட

1006 - பகிர நினைவொரு

1007 - முருகு செறிகுழலவிழ் தர

1008 - இலகு வேலெனு

1009 - முருகு உலாவிய குழல்

1010 - அரிசன பரிச

1011 - உரை தரு பர சமய

1012 - இம கிரி மத்தில்

1013 - முகமும் மினுக்கி

1014 - படிதனில் உறவெனும்

1015 - விடம் என அயில்

1016 - குகையில் நவநாதர்

1017 - மழையளக பாரம்

1018 - கற்பார் மெய்

1019 - சிற்று ஆயக் கூட்ட

1020 - இருட் குழலை

1021 - வினைத் திரளுக்கு

1022 - முத்து மணிபணி

1023 - விட்ட புழுகுபனி

1024 - ஏடுமலர் உற்ற

1025 - சீதமலம் வெப்பு

1026 - தோடு பொரு மை

1027 - தோதகம் மிகுத்த

1028 - காதி மோதி

1029 - கூறும் மார வேள்

1030 - பேரவா அறா

1031 - காதில் ஓலை

1032 - கார் உலாவு குழற்கும்

1033 - தோடு உற்ற காது

1034 - தோலத்தியால்

1035 - ஊனுந் தசையுடல்

1036 - தீயும் பவனமும்

1037 - வாதந் தலைவலி

1038 - ஊனே தானாய்

1039 - சாவா மூவா வேளே

1040 - நாராலே தோல்

1041 - மாதா வோடே

1042 - வாராய் பேதாய்

1043 - அகல நீளம்

1044 - அடை படாது

1045 - அமல வாயு

1046 - அயிலின் வாளி

1047 - இரதமான வாய் ஊறல்

1048 - குருதி தோலினால்

1049 - சுருதி ஊடு கேளாது

1050 - தொட அடாது

1051 - நிலவில் மாரன்

1052 - மன கபாட

1053 - அதல சேடனாராட

1054 - குருதி மூளை

1055 - சரியும் அவல

1056 - மகளு மனைவி தாய்

1057 - குடரும் நீர் கொழு

1058 - பொதுவதாய்த் தனி

1059 - கவடு கோத்தெழும்

1060 - பருதியாய்ப் பனி

1061 - முதலி யாக்கை

1062 - வருக வீட்டு எனும்

1063 - மறலி போற்சில

1064 - குருதி ஒழுகி

1065 - துயரம் அறு நின்

1066 - பணிகள் பணமும்

1067 - மைந்தர் இனிய

1068 - ஒழு கூனிரத்தம்

1069 - கருவாய் வயிற்றில்

1070 - புரக்க வந்த

1071 - பெருக்க நெஞ்சு

1072 - இருந்த வீடும்

1073 - கலந்த மாதும்

1074 - இசைந்த ஏறும்

1076 - புழுககில் களபம்

1077 - முழு மதி அனைய

1078 - கொடியன பிணி

1079 - சுடரொளி கதிரவன்

1080 - குடம் என ஒத்த

1081 - மடவியர் எச்சில்

1082 - கரு மயல் ஏறி

1083 - குடல் இடை தீது

1084 - கருதியே மெத்த

1085 - கொலையிலே மெத்த

1086 - அகிலநறுஞ் சேறு

1087 - கலக மதன் காதும்

1088 - குருதி சலம் தோலும்

1089 - இருவினைகள் ஈட்டும்

1090 - உறவின் முறையோர்

1091 - அளகநிரை குலைய

1092 - அனகனென அதிகனென

1093 - குடருமல சலமுமிடை

1094 - குதறும் முனை அறிவு

1095 - வதை பழக மறலி

1096 - விடமளவி யரிபரவு

1097 - எழுபிறவி நீர்நில

1098 - நடை உடையிலே

1099 - மடல் அவிழ் சரோருக

1100 - அங்கதன் கண்டகன்

1101 - தந்தமும் துன்ப

1102 - உம்பரார் அமுது

1103 - வண்டுதான் மிக

1104 - காதல் மோகம் தரும்

1105 - கோல காலத்தை

1106 - ஞாலமோடு ஒப்ப

1107 - கரவுசேர் மகளிர்

1108 - வடிவவேல் தனை

1109 - கட்டம் உறு நோய்

1110 - பக்கம் உற நேரான

1111 - நீரு நிலம் அண்டாத

1112 - சுட்டதுபோல் ஆசை

1113 - மைச்சுனமார் மாமன்

1114 - தத்துவத்துச் செயல்

1115 - மக்கள் ஒக்கல்

1116 - உற்பாதம் பூ

1117 - எற்றா வற்றா

1118 - செட்டாகத் தேனை

1119 - பட்டு ஆடைக்கே

1120 - பத்து ஏழு எட்டு

1121 - பொற்கோ வைக்கே

1122 - பொற் பூவை

1123 - மெய்க்கூணைத் தேடி

1124 - அகர முதலென

1125 - அரிய வஞ்சகர்

1126 - ஆராத காதலாகி

1127 - ஆராதனர் ஆடம்பர

1128 - ஆலாலத்தை

1129 - ஆனாத ஞான

1130 - இடமருவுஞ் சீற்ற

1131 - இடர் மொய்த்து

1132 - இரவினிடை வேள்

1133 - இரவொடும் பகலே

1134 - இருகுழை மீதோடி

1135 - இருமுலை மலை

1136 - இலகிய வேலோ

1137 - உமை எனும் மயில்

1138 - உரைத்த பற்றுடன்

1139 - உலகத்தினில்

1140 - உறவின்முறை கதறி

1141 - உறவு சிங்கிகள்

1142 - ஊனோடு வாது உயிர்

1143 - எட்டுடன் ஒரு

1144 - எத்தி இரு குழை

1145 - ஒக்க வண்டெழு

1146 - ஓது வித்தவர்

1147 - ஓலை தரித்த குழை

1148 - கடைசி வந்தகன்று

1149 - கதறிய கலைகொடு

1150 - கலவியி னலமுரை

1151 - கறுத்து நீவிடு

1152 - குறிப்பரிய குழல்

1153 - குனகியொரு மயில்

1154 - கொலைவிழி சுழல

1155 - கோழையாய் ஆணவம்

1156 - சந்தனம் கலந்த

1157 - சுருதி வெகுமுக

1158 - சுற்றத்தவர்களும்

1159 - செம் கனல் புகை

1160 - சேலை அடர்த்து ஆலம்

1161 - சொக்குப் பொட்டு

1162 - ஞானா விபூஷணி

1163 - தரணிமிசை

1164 - தனஞ் சற்றுக் குலுங்க

1165 - நகரம் இரு பாதமாகி

1166 - நரையொடு பல்

1167 - நிமிர்ந்த முதுகு

1168 - நிருதரார்க்கு ஒரு

1169 - ஆரவாரமாய்

1170 - நீரும் என்பு

1171 - பகல்மட்க

1172 - பத்தித் தரள

1173 - பரதவித புண்டரிக

1174 - பழுது அற ஓதி

1175 - பாணிக்கு உட்படாது

1176 - பால்மொழி படித்து

1177 - புகரில் சேவல

1178 - புருவத்தை நெறித்து

1179 - புவிக்குன் பாதம்

1180 - பூசல்தரும் கயலும்

1181 - பூசல் வந்திரு

1182 - பொங்கும் கொடிய

1183 - பொருத கயல்விழி

1184 - மங்காதிங் காக்கு

1185 - மதன தனு நிகர்

1186 - மதனேவிய கணை

1187 - மாடமதிட் சுற்று

1188 - மாண்டார் எலும்பு

1189 - மாறுபொரு காலன்

1190 - மின்னினில் நடுக்கம்

1191 - முத்தம் உலாவு

1192 - முருகு லாவிய மைப்பா

1193 - முலைமேலிற் கலிங்க

1194 - முனை அழிந்தது

1195 - மைக்குக்கை

1196 - மோது மறலி

1197 - வடிகட்டிய தேன் என

1198 - வட்ட முலைக்கச்சு

1199 - வளைகரம் ஆட்டி

1200 - வாடையில் மதனை

1201 - விரை சொரியும்

1202 - வேல் ஒத்து வென்றி

1203 - அடியார் மனம்

1204 - அடி இல் விடாப் பிணம்

1205 - அப்படி ஏழும் ஏழும்

1206 - அயில் விலோசனம்

1207 - அருக்கி மெத்ததோள்

1208 - அரும்பினால் தனி

1209 - அலமலமிப் புலால்

1210 - அளகபாரமும் குலைந்து

1211 - ஆசார வீனன்

1212 - ஆசைகூர் பத்தன்

1213 - ஆசைக் கொளுத்தி

1214 - ஆசை நேச மயக்கி

1215 - ஆல மேற்ற விழியினர்

1216 - ஆலும் மயில் போல்

1217 - இடை இத்தனை

1218 - இரு குழை மீது

1219 - இருநோய் மலத்தை

1220 - இனமறை விதங்கள்

1221 - ஊனேறெலும்பு

1222 - எதிரொருவர் இலை

1223 - எழுந்திடும்

1224 - ஏட்டிலே வரை

1225 - கச்சுப் பூட்டு

1226 - கடலினும் பெரிய

1227 - கட்டக் கணப்பறை

1228 - கண்டு போல்மொழி

1229 - கப்பரை கைக்கொள

1230 - கலைகோட்டு வல்லி

1231 - களவு கொண்டு

1232 - கள்ள மீனச் சுறவு

1233 - கன்னியர் கடு விடம்

1234 - கிஞ்சுகம் என

1235 - குடிமை மனையாட்டி

1236 - குறைவது இன்றி

1237 - கோகனகமுகிழ்த்த

1238 - சந்தம் புனைந்து

1239 - சலமலம்

1240 - சாங்கரி பாடியிட

1241 - சிவஞான புண்டரிக

1242 - சீறிட்டு உலாவு

1243 - சூதினுண வாசை

1244 - செழும் தாது

1245 - தத் தனமும்

1246 - தலைவலய போகம்

1247 - தவநெறி

1248 - திதலை உலாத்து

1249 - திரைவஞ்ச

1250 - தீ ஊதை தாத்ரி

1251 - துடித்து எதிர்

1252 - துத்தி நச்சு அரா

1253 - தெரிவை மக்கள்

1254 - தென்றலும் அன்று

1255 - தோரண கனக

1256 - நச்சுவாள் விழி

1257 - நற்குணம் உளார்

1258 - நாகாங்க ரோமம்

1259 - பரிமள மலரடு

1260 - பற்றநெட்டை

1261 - பாதகமான யாக்கை

1262 - பார நறுங்குழல்

1263 - பிரமனும் விரகொடு

1264 - பூத கலாதிகள்

1265 - பெருங்காரியம் போல்

1266 - மக்கள் பிறப்புக்குள்

1267 - மக்கள் தாயர்

1268 - மதன் இக்கு அது

1269 - மதிதனையிலாத

1270 - மலம் தோல் சலம்

1271 - மன நூறு கோடி

1272 - மாதர் மயல் தனில்

1273 - முத்து மணி ஆரம்

1274 - முருக மயூர

1275 - மூலா நிலமதின்

1276 - வரிபரந் திரண்டு

1277 - வரிவிழி பூசலாட

1278 - விழையும் மனிதரை

1279 - வீணை இசை

1280 - வேலை வாளை

1281 - இத்தரணி மீதில்

1282 - என்பந்த வினை

1283 - கருப்பற்று ஊறி

1284 - கருப்பையில்

1285 - கொடிய மதவேள்

1286 - கோடான மேருமலை

1287 - சமய பத்தி

1288 - சருவிய சாத்திர

1289 - சினத்துச் சீறிய

1290 - தீது உற்றே எழு

1291 - துள்ளு மதவேள்

1292 - தேன் இயல் சொற்

1293 - நாரியர்கள் ஆசை

1294 - நாளு மிகுத்த

1295 - நித்தம் உற்றுனை

1296 - நீலங்கொள்

1297 - பட்டுப் படாத

1298 - பரவைக்கு எத்தனை

1299 - பிறவியலை

1300 - புத்தகத்து ஏட்டில்

1301 - பொன்னை விரும்பிய

1302 - மனைமக்கள் சுற்றம்

1303 - வாரி மீதே

1304 - வான் அப்பு

1305 - குருபர சரவண

1337 - காதின்மணி ஓலை

This page was last modified on Fri, 15 Dec 2023 17:32:56 +0000
 


1
   
    send corrections and suggestions to admin @ sivasiva.org   https://www.sivaya.org/thiruppugazh_song.php