Selected Thiruppugazh      Old Thiruppugazh Site      Thiruppugazh Thalangal      All Thiruppugazh Songs      Thiruppugazh by Santham     

திருப்புகழ்   

1 கைத்தல நிறைகனி  (வயலூர்) 4

2 பக்கரை விசித்ரமணி  (விநாயகர்) 4

3 உம்பர் தரு  (விநாயகர்) 5

4 நினது திருவடி  (விநாயகர்) 5

5 விடமடைசு வேலை  (விநாயகர்) 6

6 முத்தைத்தரு  (திருவருணை) 7

8 உனைத் தினம்  (திருப்பரங்குன்றம்) 8

9 கருவடைந்து  (திருப்பரங்குன்றம்) 9

13 சந்ததம் பந்த  (திருப்பரங்குன்றம்) 9

28 அறிவழிய மயல்பெருக  (திருச்செந்தூர்) 10

31 இயலிசையில் உசித  (திருச்செந்தூர்) 10

56 சங்கை தான் ஒன்று  (திருச்செந்தூர்) 11

62 தண்டை அணி  (திருச்செந்தூர்) 12

63 தந்த பசிதனை  (திருச்செந்தூர்) 12

64 தரிக்குங்கலை  (திருச்செந்தூர்) 13

68 தொந்தி சரிய  (திருச்செந்தூர்) 13

83 பெருக்கச் சஞ்சலித்து  (திருச்செந்தூர்) 14

97 வந்து வந்து முன்  (திருச்செந்தூர்) 15

98 வரியார் கருங்கண்  (திருச்செந்தூர்) 16

101 விறல்மாரன் ஐந்து  (திருச்செந்தூர்) 16

106 அதல விதல  (பழநி) 17

107 அபகார நிந்தை  (பழநி) 18

110 அவனிதனிலே  (பழநி) 18

114 ஆறுமுகம் ஆறுமுகம்  (பழநி) 19

134 கருவின் உருவாகி  (பழநி) 20

143 கனமாய் எழுந்து  (பழநி) 20

156 சிவனார் மனங்குளிர  (பழநி) 21

158 சீ உதிரம் எங்கும்  (பழநி) 21

166 தலைவலி மருத்தீடு  (பழநி) 22

168 திமிர உததி  (பழநி) 23

170 நாத விந்து  (பழநி) 24

179 போதகம் தரு  (பழநி) 25

182 மனக்கவலை ஏதும்  (பழநி( 25

192 வசனமிக ஏற்றி  (பழநி) 26

196 வாதம் பித்தம்  (பழநி) 26

216 சரண கமலாலயத்தில் (சுவாமிமலை) 28

217 சுத்திய நரப்புடன்  (சுவாமிமலை) 29

222 நாசர்தங் கடை  (சுவாமிமலை) 30

228 பாதி மதிநதி (சுவாமிமலை) 30

232 வாதமொடு சூலை  (சுவாமிமலை) 31

240 அரகர சிவன் அரி (திருத்தணிகை) 32

242 இருப்பவல் திருப்புகழ் (திருத்தணிகை) 32

243 இருமலு ரோக  (திருத்தணிகை) 33

249 எனக்கென யாவும் (திருத்தணிகை) 34

250 எனை அடைந்த  (திருத்தணிகை) 34

269 சினத்தவர் முடிக்கும் (திருத்தணிகை) 35

278 நினைத்தது எத்தனை  (திருத்தணிகை) 35

303 அதிரும் கழல்  (குன்றுதோறாடல்) 36

330 முட்டுப் பட்டு  (காஞ்சீபுரம்) 36

366 வேலைப்போல் விழி  (திருவானைக்கா)காயத்ரீ.. 37

367 குமர குருபர குணதர  (திருவருணை) 37

401 இருவினை அஞ்ச (திருவருணை) 38

421 சிவமாதுடனே  (திருவருணை) 39

425 செயசெய அருணா  (திருவருணை) 40

431 தோதகப் பெரும்  (திருவருணை) 40

487 வாத பித்தமொடு  (சிதம்பரம்) 41

493 எழுகடல் மணலை  (சிதம்பரம்) 42

523 ஒருபதும் இருபதும்  (ஸ்ரீ சைலம் திருமலை) 43

525 சரவண பவநிதி  (திருவேங்கடம்) 43

557 பகலிரவினில் (சென்னிமலை, திருசிராப்பள்ளி) 44

561 வாசித்து  (திருசிராப்பள்ளி) 45

567 பத்தியால் யானுனை  (இரத்னகிரி) 45

568 சீரான கோல கால  (விராலிமலை) 46

571 நிராமய புராதன  (விராலிமலை) 47

585 அன்பாக வந்து (சென்னிமலை, திருசிராப்பள்ளி) 47

586 பந்து ஆடி அம் கை  (திருச்செங்கோடு) 48

598 காலனிடத்து (திருச்செங்கோடு) 48

599 தாமா தாம ஆலாபா  (திருச்செங்கோடு) 49

602 பத்தர் கணப்ரிய  (திருச்செங்கோடு) 49

610 மனையவள் நகைக்க  (ஞானமலை) 50

616 ஐங்கரனை  (கொங்கணகிரி) 51

635 அல்லில் நேரும்  (வள்ளியூர்) 51

636 திருமகள் உலாவும் (கதிர்காமம்) 52

656 அடல் அரி மகவு  (வெள்ளிகரம்) 52

675 புவிபுனல் காலும்  (திருவாலங்காடு) 53

676 வடிவது நீலம்  (திருவாலங்காடு) 53

688 அமரும் அமரர்  (திருமயிலை) 54

724 அண்டர்பதி குடியேற (சிறுவை) 55

725 சீதள வாரிஜ  (சிறுவை( 55

766 ஊனத்தசை தோல்கள்  (சீகாழி) 56

780 எத்தனை கோடி  (வைத்தீசுரன் கோயில்) 57

786 சூலம் என ஓடு (திருக்கடவூர்) 57

790 ஈளை சுரங்குளிர்  (பாகை) 58

798 மருக்குலாவிய  (திருவிடைக்கழி) 59

810 தலை நாளில் பதம்  (வழுவூர்) 59

816 கூசாதே பார்  (திருவாரூர்) 60

817 கூர்வாய் நாராய்  (திருவாரூர்) 61

818 பாலோ தேனோ பாகோ  (திருவாரூர்) 61

821 கரமு முளரியின் (திருவாரூர்) 62

835 சந்தனந்திமிர்ந்து  (எண்கண்) 63

847 எருவாய் கருவாய்  (திருவீழிமிழலை) 63

858 அறுகுநுனி பனி (திருவிடைமருதூர்) 64

866 பஞ்சுசேர் நிர்த்த  (கும்பகோணம்) 66

868 கறுத்த குஞ்சியும்  (கும்பகோணம்) 66

894 நீரிழிவு குட்டம்  (குறட்டி) 67

904 என்னால் பிறக்கவும்  (வயலூர்) 68

911 தாமரையின் மட்டு  (வயலூர்) 68

925 தசையாகிய  (கருவூர்) 69

923 மதியால் வித்தகன்  (கருவூர்) 70

931 வண்டுபோற் சார  (திருவெஞ்சமாக்கூடல்) 70

932 இருவினைப் பிறவி  (திருப்பாண்டிக்கொடுமுடி) 70

943 இறவாமற் பிறவாமல்  (அவிநாசி) 71

973 சுரும்பு அணி  (இலஞ்சி) 71

974 மாலையில் வந்து  (இலஞ்சி) 71

998  நாலிரண்டிதழாலே  (பொதுப்பாடல்கள்( 72

1002 கடலை பயறொடு  (பொதுப்பாடல்கள்) 73

1015 விடம் என அயில்  (பொதுப்பாடல்கள்) 74

1027 தோதகம் மிகுத்த  (பொதுப்பாடல்கள்) 74

1028 காதி மோதி  (பொதுப்பாடல்கள்) 75

1030 பேரவா அறா  (பொதுப்பாடல்கள்) 75

1040 நாராலே தோல்  (பொதுப்பாடல்கள்) 76

1041 மாதா வோடே  (பொதுப்பாடல்கள்) 76

1045 அமல வாயு  (பொதுப்பாடல்கள்) 77

1053 அதல சேடனாராட (பொதுப்பாடல்கள்) 78

1059 கவடு கோத்தெழும்  (பொதுப்பாடல்கள்) நாராயண...... 78

1109 கட்டம் உறு நோய்  (பொதுப்பாடல்கள்) 79

1169 ஆரவாரமாய்  (பொதுப்பாடல்கள்) 80

1177 புகரில் சேவல  (பொதுப்பாடல்கள்) 80

1250 தீ ஊதை தாத்ரி  (பொதுப்பாடல்கள்) 81

1291 துள்ளு மதவேள்  (பொதுப்பாடல்கள்) 82

1291 துள்ளு மதவேள்... 82

1296 நீலங்கொள்  (பொதுப்பாடல்கள்) 82

1297 பட்டுப் படாத  (பொதுப்பாடல்கள்) 83

1306 கும்பகோணம்  (க்ஷேத்திரக் கோவை( 83

1307 அகரமுமாகி (பழமுதிர்ச்சோலை) 84

1315 சீர் சிறக்கும் மேனி (பழமுதிர்ச்சோலை) 84

1316 துடிகொள் நோய்  (பழமுதிர்ச்சோலை) 85

1318 வாதினை அடர்ந்த (பழமுதிர்ச்சோலை) 86

1328 மங்களம் - ஏறுமயில் ஏறி(திருவருணை) 87

 


1 கைத்தல நிறைகனி  (வயலூர்)

தத்தன தனதன தத்தன தனதன
   தத்தன தனதன
...... தனதான

கான்கார்டு   குமாரா   கான்கார்டு குமாரா   கான்கார்டு குமாரா   சரணம்

கான்கார்டு   குமாரா   கான்கார்டு குமாரா   கான்கார்டு குமாரா   சரணம்

https://www.youtube.com/watch?v=UVegYmVb2m4

கைத்தல நிறைகனி யப்பமொ டவல்பொரி

   கப்பிய கரிமுக ...... னடிபேணிக்

கற்றிடு மடியவர் புத்தியி லுறைபவ

   கற்பக மெனவினை ...... கடிதேகும்

மத்தமு மதியமும் வைத்திடு மரன்மகன்

   மற்பொரு திரள்புய ...... மதயானை

மத்தள வயிறனை உத்தமி புதல்வனை

   மட்டவிழ் மலர்கொடு ...... பணிவேனே

முத்தமி ழடைவினை முற்படு கிரிதனில்

   முற்பட எழுதிய ...... முதல்வோனே

முப்புர மெரிசெய்த அச்சிவ னுறைரதம்

   அச்சது பொடிசெய்த ...... அதிதீரா

அத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும்

   அப்புன மதனிடை ...... இபமாகி

அக்குற மகளுட னச்சிறு முருகனை

   அக்கண மணமருள் ...... பெருமாளே.

 

2 பக்கரை விசித்ரமணி  (விநாயகர்)

தத்ததன தத்ததன தத்ததன தத்ததன
   
தத்ததன தத்ததன ...... தனதான

வித்தகம ருப்புடைய ...... பெருமாளே

செப்பெனஎ னக்கருள் கை ...... மறவேனே

https://www.youtube.com/watch?v=fdZIujNxL14

பக்கரை வி சித்ரமணி பொற்கலணை யிட்டநடை

   பட்சியெனு  முக்ரதுர ...... கமுநீபப்

பக்குவ ம லர்த்தொடையும் அக்குவடு பட்டொழிய

   பட்டுருவ விட்டருள்கை ...... வடிவேலும்

திக்கதும  திக்கவரு குக்குடமும் ரட்சைதரு

   சிற்றடியு முற்றியப ...... னிருதோளும்

செய்ப்பதியும் வைத்துயர் தி ருப்புகழ்வி ருப்பமொடு

   செப்பெனஎ னக்கருள் கை ...... மறவேனே

இக்கவரை நற்கனிகள் சர்க்கரை ப ருப்புடனெய்

   எட்பொரி ய வற் றுவரை ...... இளநீர்வண்

டெச்சில்பய றப்பவகை பச்சரிசி பிட்டு வெள

   ரிப்பழமி டிப்பல் வகை ...... தனிமூலம்

மிக்கஅடி சிற்கடலை பட்சணமெ னக்கொளொரு

   விக்கிநச மர்த்தனெனும் ...... அருளாழி

வெற்பகுடி லச்சடில விற்பரம ரப்பரருள்

   வித்தகம ருப்புடைய ...... பெருமாளே.

 

3 உம்பர் தரு  (விநாயகர்)

தந்ததனத் தானதனத் ...... தனதான
   
தந்ததனத் தானதனத் ...... தனதான

கணபதியே  நீ வந்திடுவாய்   குண நிதியே அருள்  தந்திடுவாய்

கணபதியே  நீ வந்திடுவாய்   குண நிதியே அருள்  தந்திடுவாய்

https://www.youtube.com/watch?v=OEnGCMLCskM

உம்பர்தருத் தேநுமணிக் ...... கசிவாகி

   ஒண்கடலிற் றேனமுதத் ...... துணர்வூறி

இன்பரசத் தேபருகிப் ...... பலகாலும்

   என்றனுயிர்க் காதரவுற் ...... றருள்வாயே

தம்பிதனக் காகவனத் ...... தணைவோனே

   தந்தைவலத் தாலருள்கைக் ...... கனியோனே

அன்பர்தமக் கானநிலைப் ...... பொருளோனே

   ஐந்துகரத் தானைமுகப் ...... பெருமாளே.

 

4 நினது திருவடி  (விநாயகர்)

தனன தனதன தத்தன தத்தன
   
தனன தனதன தத்தன தத்தன
 
தனன தனதன தத்தன தத்தன ...... தனதான

நினது திருவடி சத்திம யிற்கொடி

   நினைவு கருதிடு புத்திகொ டுத்திட

  நிறைய அமுதுசெய் முப்பழ மப்பமு ...... நிகழ்பால்தேன்

நெடிய வளைமுறி இக்கொடு லட்டுகம்

   நிறவில் அரிசிப ருப்பவல் எட்பொரி

  நிகரில் இனிகத லிக்கனி வர்க்கமும் ...... இளநீரும்

மனது மகிழ்வொடு தொட்டக ரத்தொரு

   மகர சலநிதி வைத்தது திக்கர

  வளரு கரிமுக ஒற்றைம ருப்பனை ...... வலமாக

மருவு மலர்புனை தொத்திர சொற்கொடு

   வளர்கை குழைபிடி தொப்பண குட்டொடு

  வனச பரிபுர பொற்பத அர்ச்சனை ...... மறவேனே

தெனன தெனதென தெத்தென னப்பல

   சிறிய அறுபத மொய்த்துதி ரப்புனல்

  திரளும் உறுசதை பித்தநி ணக்குடல் ...... செறிமூளை

செரும உதரநி ரப்புசெ ருக்குடல்

   நிரைய அரவநி றைத்தக ளத்திடை

  திமித திமிதிமி மத்தளி டக்கைகள் ...... செகசேசே

எனவெ துகுதுகு துத்தென ஒத்துகள்

   துடிகள் இடிமிக ஒத்துமு ழக்கிட

  டிமுட டிமுடிமு டிட்டிமெ னத்தவில் ...... எழுமோசை

இகலி அலகைகள் கைப்பறை கொட்டிட

   இரண பயிரவி சுற்றுந டித்திட

  எதிரு நிசிசர ரைப்பெலி யிட்டருள் ...... பெருமாளே.

 

5 விடமடைசு வேலை  (விநாயகர்)

தனதனன தான தனதனன தான

   தனதனன தான ...... தனதான

விடமடைசு வேலை அமரர்படை சூலம்

   விசையன்விடு பாண ...... மெனவேதான்

விழியுமதி பார விதமுமுடை மாதர்

   வினையின்விளை வேதும் ...... அறியாதே

கடியுலவு பாயல் பகலிரவெ னாது

   கலவிதனில் மூழ்கி ...... வறிதாய

கயவனறி வீனன் இவனுமுயர் நீடு

   கழலிணைகள் சேர ...... அருள்வாயே

இடையர்சிறு பாலை திருடிகொடு போக

   இறைவன்மகள் வாய்மை ...... அறியாதே

இதயமிக வாடி யுடையபிளை நாத

   கணபதியெ னாம ...... முறைகூற

அடையலவர் ஆவி வெருவஅடி கூர

   அசலுமறி யாமல் ...... அவரோட

அகல்வதென டாசொல் எனவுமுடி சாட

   அறிவருளும் ஆனை ...... முகவோனே.

 

6 முத்தைத்தரு  (திருவருணை)

தத்தத்தன தத்தத் தனதன
   தத்தத்தன தத்தத் தனதன
  தத்தத்தன தத்தத் தனதன
...... தனதான

முத்தைத்தரு பத்தித் திருநகை

   அத்திக்கிறை சத்திச் சரவண

  முத்திக்கொரு வித்துக் குருபர ...... எனவோதும்

முக்கட்பர மற்குச் சுருதியின்

   முற்பட்டது கற்பித் திருவரும்

  முப்பத்துமு வர்க்கத் தமரரும் ...... அடிபேணப்

பத்துத்தலை தத்தக் கணைதொடு

   ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு

  பட்டப்பகல் வட்டத் திகிரியில் ...... இரவாகப்

பத்தற்கிர தத்தைக் கடவிய

   பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்

  பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ...... ஒருநாளே

தித்தித்தெய ஒத்தப் பரிபுர

   நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி

  திக்கொட்கந டிக்கக் கழுகொடு ...... கழுதாடத்

திக்குப்பரி அட்டப் பயிரவர்

   தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு

  சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக ...... எனவோதக்

கொத்துப்பறை கொட்டக் களமிசை

   குக்குக்குகு குக்குக் குகுகுகு

  குத்திப்புதை புக்குப் பிடியென ...... முதுகூகை

கொட்புற்றெழ நட்பற் றவுணரை

   வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி

  குத்துப்பட ஒத்துப் பொரவல ...... பெருமாளே.

 

8 உனைத் தினம்  (திருப்பரங்குன்றம்)

தனத்த தந்தன தனதன தனதன
   
தனத்த தந்தன தனதன தனதன
 
தனத்த தந்தன தனதன தனதன ...... தனதான

உனைத்தி னந்தொழு திலனுன தியல்பினை

   உரைத்தி லன்பல மலர்கொடுன் அடியிணை

  உறப்ப ணிந்திலன் ஒருதவ மிலனுன ...... தருள்மாறா

உளத்து ளன்பினர் உறைவிடம் அறிகிலன்

   விருப்பொ டுன்சிக ரமும்வலம் வருகிலன்

  உவப்பொ டுன்புகழ் துதிசெய விழைகிலன் ...... மலைபோலே

கனைத்தெ ழும்பக டதுபிடர் மிசைவரு

   கறுத்த வெஞ்சின மறலிதன் உழையினர்

  கதித்த டர்ந்தெறி கயிறடு கதைகொடு ...... பொருபோதே

கலக்கு றுஞ்செயல் ஒழிவற அழிவுறு

   கருத்து நைந்தல முறுபொழு தளவைகொள்

  கணத்தில் என்பய மறமயில் முதுகினில் ...... வருவாயே

வினைத்த லந்தனில் அலகைகள் குதிகொள

   விழுக்கு டைந்துமெய் உகுதசை கழுகுண

  விரித்த குஞ்சியர் எனுமவு ணரைஅமர் ...... புரிவேலா

மிகுத்த பண்பயில் குயில்மொழி அழகிய

   கொடிச்சி குங்கும முலைமுக டுழுநறை

  விரைத்த சந்தன ம்ருகமத புயவரை ...... உடையோனே

தினத்தி னஞ்சதுர் மறைமுநி முறைகொடு

   புனற்சொ ரிந்தலர் பொதியவி ணவரொடு

  சினத்தை நிந்தனை செயுமுநி வரர்தொழ ...... மகிழ்வோனே

தெனத்தெ னந்தன எனவரி யளிநறை

   தெவிட்ட அன்பொடு பருகுயர் பொழில்திகழ்

  திருப் பரங்கிரி தனிலுறை சரவண ...... பெருமாளே.

 

9 கருவடைந்து  (திருப்பரங்குன்றம்)

தனனதந்த தத்தத்த தந்த
   தனனதந்த தத்தத்த தந்த
  தனனதந்த தத்தத்த தந்த
...... தனதான

கருவடைந்து பத்துற்ற திங்கள்

   வயிறிருந்து முற்றிப்ப யின்று

  கடையில்வந்து தித்துக்கு ழந்தை ...... வடிவாகிக்

கழுவியங்கெ டுத்துச்சு ரந்த

   முலையருந்து விக்கக்கி டந்து

  கதறியங்கை கொட்டித்த வழ்ந்து ...... நடமாடி

அரைவடங்கள் கட்டிச்ச தங்கை

   இடுகுதம்பை பொற்சுட்டி தண்டை

  அவையணிந்து முற்றிக்கி ளர்ந்து ...... வயதேறி

அரியபெண்கள் நட்பைப்பு ணர்ந்து

   பிணியுழன்று சுற்றித்தி ரிந்த

  தமையுமுன்க்ரு பைச்சித்தம் என்று ...... பெறுவேனோ

இரவிஇந்த்ரன் வெற்றிக்கு ரங்கி

   னரசரென்றும் ஒப்பற்ற உந்தி

  யிறைவன்எண்கி னக்கர்த்த னென்றும் ...... நெடுநீலன்

எரியதென்றும் ருத்ரற்சி றந்த

   அநுமனென்றும் ஒப்பற்ற அண்டர்

  எவரும்இந்த வர்க்கத்தில் வந்து ...... புனமேவ

அரியதன்ப டைக்கர்த்த ரென்று

   அசுரர்தங்கி ளைக்கட்டை வென்ற

  அரிமுகுந்தன் மெச்சுற்ற பண்பின் ...... மருகோனே

அயனையும்பு டைத்துச்சி னந்து

   உலகமும்ப டைத்துப்ப ரிந்து

  அருள்பரங்கி ரிக்குட்சி றந்த ...... பெருமாளே.

 

13 சந்ததம் பந்த  (திருப்பரங்குன்றம்)

தந்தனந் தந்தத் ...... தனதான
   
தந்தனந் தந்தத் ...... தனதான

வா வா முருகா  வடிவேலா வள்ளி மணாளா  வடிவேலா

வா வா முருகா  வடிவேலா வள்ளி மணாளா  வடிவேலா

https://www.youtube.com/watch?v=IEwYBIXZyV0

சந்ததம் பந்தத் ...... தொடராலே

   சஞ்சலந் துஞ்சித் ...... திரியாதே

கந்தனென் றென்றுற் ...... றுனைநாளும்

   கண்டுகொண் டன்புற் ...... றிடுவேனோ

தந்தியின் கொம்பைப் ...... புணர்வோனே

   சங்கரன் பங்கிற் ...... சிவைபாலா

செந்திலங் கண்டிக் ...... கதிர்வேலா

   தென்பரங் குன்றிற் ...... பெருமாளே.

 

28 அறிவழிய மயல்பெருக  (திருச்செந்தூர்)

தனதனன தனதனன தனதனன தனதனன
   
தனதனன தனதனன ...... தனதானா

அறிவழிய மயல்பெருக வுரையுமற விழிசுழல

   அனலவிய மலமொழுக ...... அகலாதே

அனையுமனை யருகிலுற வெருவியழ வுறவுமழ

   அழலினிகர் மறலியெனை ...... யழையாதே

செறியுமிரு வினைகரண மருவுபுல னொழியவுயர்

   திருவடியி லணுகவர ...... மருள்வாயே

சிவனைநிகர் பொதியவரை முநிவனக மகிழஇரு

   செவிகுளிர இனியதமிழ் ...... பகர்வோனே

நெறிதவறி யலரிமதி நடுவன்மக பதிமுளரி

   நிருதிநிதி பதிகரிய ...... வனமாலி

நிலவுமறை யவனிவர்க ளலையஅர சுரிமைபுரி

   நிருதனுர மறஅயிலை ...... விடுவோனே

மறிபரசு கரமிலகு பரமனுமை யிருவிழியு

   மகிழமடி மிசைவளரு ...... மிளையோனே

மதலைதவ ழுததியிடை வருதரள மணிபுளின

   மறையவுயர் கரையிலுறை ...... பெருமாளே.

31 இயலிசையில் உசித  (திருச்செந்தூர்)

தனதனன தனன தந்தத் ...... தனதான
   தனதனன தனன தந்தத்
...... தனதான
வேல் முருகா வேல் முருகா   வேல் முருகா  வேல்

வேல் முருகா வேல் முருகா   வேல் முருகா  வேல்

https://www.youtube.com/watch?v=8mSPITSQt6o

இயலிசையி லுசித வஞ்சிக் ...... கயர்வாகி
   இரவுபகல் மனது சிந்தித்
...... துழலாதே
உயர்கருணை புரியு மின்பக்
...... கடல்மூழ்கி
   உனையெனது ளறியு மன்பைத்
...... தருவாயே
மயில்தகர்க லிடைய ரந்தத்
...... தினைகாவல்
   வனசகுற மகளை வந்தித்
...... தணைவோனே
கயிலைமலை யனைய செந்திற்
...... பதிவாழ்வே
   கரிமுகவ னிளைய கந்தப்
...... பெருமாளே.

 

56 சங்கை தான் ஒன்று  (திருச்செந்தூர்)

https://www.youtube.com/watch?v=oI8KuzVVKkk&list=PLJq0smH3TM71h1iy1VaFTKHXV6tPGvRrP&index=3

தந்தனா தந்தனா தந்தனா தந்தனா

   தந்தனா ...... தந்ததான

......... பாடல் .........

சங்கைதா னொன்றுதா னின்றியே நெஞ்சிலே

   சஞ்சலா ...... ரம்பமாயன்

சந்தொடே குங்குமா லங்க்ருதா டம்பரா

   சம்ப்ரமா ...... நந்தமாயன்

மங்கைமார் கொங்கைசே ரங்கமோ கங்களால்

   வம்பிலே ...... துன்புறாமே

வண்குகா நின்சொரூ பம்ப்ரகா சங்கொடே

   வந்துநீ ...... யன்பிலாள்வாய்

கங்கைசூ டும்பிரான் மைந்தனே அந்தனே

   கந்தனே ...... விஞ்சையூரா

கம்பியா திந்த்ரலோ கங்கள்கா வென்றவா

   கண்டலே ...... சன்சொல்வீரா

செங்கைவேல் வென்றிவேல் கொண்டுசூர் பொன்றவே

   சென்றுமோ ...... தும்ப்ரதாபா

செங்கண்மால் பங்கஜா னன்தொழா நந்தவேள்

   செந்தில்வாழ் ...... தம்பிரானே.

 

62 தண்டை அணி  (திருச்செந்தூர்)

 தந்ததன தந்தனந் தந்ததன தந்தனந்
   
தந்ததன தந்தனந் ...... தந்ததானா

தண்டையணி வெண்டையங் கிண்கிணிச தங்கையுந்

   தண்கழல்சி லம்புடன் ...... கொஞ்சவேநின்

தந்தையினை முன்பரிந் தின்பவுரி கொண்டுநன்

   சந்தொடம ணைந்துநின் ...... றன்புபோலக்

கண்டுறக டம்புடன் சந்தமகு டங்களுங்

   கஞ்சமலர் செங்கையுஞ் ...... சிந்துவேலும்

கண்களுமு கங்களுஞ் சந்திரநி றங்களுங்

   கண்குளிர என்றன்முன் ...... சந்தியாவோ

புண்டரிகர் அண்டமுங் கொண்டபகி ரண்டமும்

   பொங்கியெழ வெங்களங் ...... கொண்டபோது

பொன்கிரியெ னஞ்சிறந் தெங்கினும்வ ளர்ந்துமுன்

   புண்டரிகர் தந்தையுஞ் ...... சிந்தைகூரக்

கொண்டநட னம்பதஞ் செந்திலிலும் என்றன்முன்

   கொஞ்சிநட னங்கொளுங் ...... கந்தவேளே

கொங்கைகுற மங்கையின் சந்தமணம் உண்டிடுங்

   கும்பமுநி கும்பிடுந் ...... தம்பிரானே.

 

63 தந்த பசிதனை  (திருச்செந்தூர்)

தந்த தனதனன தந்த தனதனன
   
தந்த தனதனன ...... தனதானா

https://www.youtube.com/watch?v=gmpeXE_xQvg

தந்த பசிதனைய றிந்து முலையமுது

   தந்து முதுகுதட ...... வியதாயார்

தம்பி பணிவிடைசெய் தொண்டர் பிரியமுள

   தங்கை மருகருயி ...... ரெனவேசார்

மைந்தர் மனைவியர்க டும்பு கடனுதவு

   மந்த வரிசைமொழி ...... பகர்கேடா

வந்து தலைநவிர விழ்ந்து தரைபுகம

   யங்க வொருமகிட ...... மிசையேறி

அந்த கனுமெனைய டர்ந்து வருகையினி

   லஞ்ச லெனவலிய ...... மயில்மேல்நீ

அந்த மறலியொடு கந்த மனிதனம

   தன்ப னெனமொழிய ...... வருவாயே

சிந்தை மகிழமலை மங்கை நகிலிணைகள்

   சிந்து பயமயிலு ...... மயில்வீரா

திங்க ளரவுநதி துன்று சடிலரருள்

   செந்தி னகரிலுறை ...... பெருமாளே.

 

64 தரிக்குங்கலை  (திருச்செந்தூர்)

தனத்தந்தன தனத்தந்தன
   
தனத்தந்தன ...... தனதானத்

தரிக்குங்கலை நெகிழ்க்கும்பர

   தவிக்குங்கொடி ...... மதனேவிற்

றகைக்குந்தனி திகைக்குஞ்சிறு

   தமிழ்த்தென்றலி ...... னுடனேநின்

றெரிக்கும்பிறை யெனப்புண்படு

   மெனப்புன்கவி ...... சிலபாடி

இருக்குஞ்சிலர் திருச்செந்திலை

   யுரைத்துய்ந்திட ...... அறியாரே

அரிக்குஞ்சதுர் மறைக்கும்பிர

   மனுக்குந்தெரி ...... வரிதான

அடிச்செஞ்சடை முடிக்கொண்டிடு

   மரற்கும்புரி ...... தவபாரக்

கிரிக்கும்பநன் முநிக்குங்க்ருபை

   வரிக்குங்குரு ...... பரவாழ்வே

கிளைக்குந்திற லரக்கன்கிளை

   கெடக்கன்றிய ...... பெருமாளே.

 

68 தொந்தி சரிய  (திருச்செந்தூர்)

தந்த தனன தனனா தனனதன
   
தந்த தனன தனனா தனனதன
 
தந்த தனன தனனா தனனதன ...... தனதான

தொந்தி சரிய மயிரே வெளிறநிரை

   தந்த மசைய முதுகே வளையஇதழ்

  தொங்க வொருகை தடிமேல் வரமகளிர் ...... நகையாடி

தொண்டு கிழவ னிவனா ரெனஇருமல்

   கிண்கி ணெனமு னுரையே குழறவிழி

  துஞ்சு குருடு படவே செவிடுபடு ...... செவியாகி

வந்த பிணியு மதிலே மிடையுமொரு

   பண்டி தனுமெ யுறுவே தனையுமிள

  மைந்த ருடைமை கடனே தெனமுடுக ...... துயர்மேவி

மங்கை யழுது விழவே யமபடர்கள்

   நின்று சருவ மலமே யொழுகவுயிர்

  மங்கு பொழுது கடிதே மயிலின்மிசை ...... வரவேணும்

எந்தை வருக ரகுநா யகவருக

   மைந்த வருக மகனே யினிவருக

  என்கண் வருக எனதா ருயிர்வருக ...... அபிராம

இங்கு வருக அரசே வருகமுலை

   யுண்க வருக மலர்சூ டிடவருக

  என்று பரிவி னொடுகோ சலைபுகல ...... வருமாயன்

சிந்தை மகிழு மருகா குறவரிள

   வஞ்சி மருவு மழகா அமரர்சிறை

  சிந்த அசுரர் கிளைவே ரொடுமடிய ...... அடுதீரா

திங்க ளரவு நதிசூ டியபரமர்

   தந்த குமர அலையே கரைபொருத

  செந்தி னகரி லினிதே மருவிவளர் ...... பெருமாளே.

 

83 பெருக்கச் சஞ்சலித்து  (திருச்செந்தூர்)

தனத்தத்தந் தனத்தத்தந்
   
தனத்தத்தந் தனத்தத்தந்
 
தனத்தத்தந் தனத்தத்தந் ...... தனதான

பெருக்கச்சஞ் சலித்துக்கந்

   தலுற்றுப்புந் தியற்றுப்பின்

  பிழைப்பற்றுங் குறைப்புற்றும் ...... பொதுமாதர்

ப்ரியப்பட்டங் கழைத்துத்தங்

   கலைக்குட்டங் கிடப்பட்சம்

  பிணித்துத்தந் தனத்தைத்தந் ...... தணையாதே

புரக்கைக்குன் பதத்தைத்தந்

   தெனக்குத்தொண் டுறப்பற்றும்

  புலத்துக்கண் செழிக்கச்செந் ...... தமிழ்பாடும்

புலப்பட்டங் கொடுத்தற்கும்

   கருத்திற்கண் படக்கிட்டும்

  புகழ்ச்சிக்குங் க்ருபைச்சித்தம் ...... புரிவாயே

தருக்கிக்கண் களிக்கத்தெண்

   டனிட்டுத்தண் புனத்திற்செங்

  குறத்திக்கன் புறச்சித்தந் ...... தளர்வோனே

சலிப்புற்றங் குரத்திற்சம்

   ப்ரமித்துக்கொண் டலைத்துத்தன்

  சமர்த்திற்சங் கரிக்கத்தண் ...... டியசூரன்

சிரத்தைச்சென் றறுத்துப்பந்

   தடித்துத்திண் குவட்டைக்கண்

  டிடித்துச்செந் திலிற்புக்கங் ...... குறைவோனே

சிறக்கற்கஞ் செழுத்தத்தந்

   திருச்சிற்றம் பலத்தத்தன்

  செவிக்குப்பண் புறச்செப்பும் ...... பெருமாளே.

 

97 வந்து வந்து முன்  (திருச்செந்தூர்)

தந்த தந்த தந்த தந்த
   
தந்த தந்த தந்த தந்த
 
தந்த தந்த தந்த தந்த ...... தனதான

வந்து வந்து முன்த வழ்ந்து

   வெஞ்சு கந்த யங்க நின்று

  மொஞ்சி மொஞ்சி யென்ற ழுங்கு ...... ழந்தையோடு

மண்ட லங்கு லுங்க அண்டர்

   விண்ட லம்பி ளந்தெ ழுந்த

  செம்பொன் மண்ட பங்க ளும்ப ...... யின்றவீடு

கொந்த ளைந்த குந்த ளந்த

   ழைந்து குங்கு மந்த யங்கு

  கொங்கை வஞ்சி தஞ்ச மென்று ...... மங்குகாலம்

கொங்க டம்பு கொங்கு பொங்கு

   பைங்க டம்பு தண்டை கொஞ்சு

  செஞ்ச தங்கை தங்கு பங்க ...... யங்கள்தாராய்

சந்த டர்ந்தெ ழுந்த ரும்பு

   மந்த ரஞ்செ ழுங்க ரும்பு

  கந்த ரம்பை செண்ப தங்கொள் ...... செந்தில்வாழ்வே

தண்க டங்க டந்து சென்று

   பண்க டங்க டர்ந்த இன்சொல்

  திண்பு னம்பு குந்து கண்டி ...... றைஞ்சுகோவே

அந்த கன்க லங்க வந்த

   கந்த ரங்க லந்த சிந்து

  ரஞ்சி றந்து வந்த லம்பு ...... ரிந்தமார்பா

அம்பு னம்பு குந்த நண்பர்

   சம்பு நன்பு ரந்த ரன்த

  ரம்ப லும்பர் கும்பர் நம்பு ...... தம்பிரானே.

 

98 வரியார் கருங்கண்  (திருச்செந்தூர்)

தனனா தனந்த ...... தனதான

வா வா முருகா  வடிவேலா வள்ளி மணாளா  வடிவேலா

வா வா முருகா  வடிவேலா வள்ளி மணாளா  வடிவேலா

வரியார் கருங்கண் ...... மடமாதர்

மகவா சைதொந்த ...... மதுவாகி

இருபோ துநைந்து ...... மெலியாதே

இருதா ளினன்பு ...... தருவாயே

பரிபா லனஞ்செய் ...... தருள்வோனே

பரமே சுரன்ற ...... னருள்பாலா

அரிகே சவன்றன் ...... மருகோனே

அலைவா யமர்ந்த ...... பெருமாளே.

 

101 விறல்மாரன் ஐந்து  (திருச்செந்தூர்)

தனதான தந்த தனதான தந்த

   தனதான தந்த ...... தனதான

விறல்மார னைந்து மலர்வாளி சிந்த

   மிகவானி லிந்து ...... வெயில்காய

மிதவாடை வந்து தழல்போல வொன்ற

   வினைமாதர் தந்தம் ...... வசைகூற

குறவாணர் குன்றி லுறைபேதை கொண்ட

   கொடிதான துன்ப ...... மயல்தீர

குளிர்மாலை யின்க ணணிமாலை தந்து

   குறைதீர வந்து ...... குறுகாயோ

மறிமானு கந்த இறையோன்ம கிழ்ந்து

   வழிபாடு தந்த ...... மதியாளா

மலைமாவு சிந்த அலைவேலை யஞ்ச

   வடிவேலெ றிந்த ...... அதிதீரா

அறிவால றிந்து னிருதாளி றைஞ்சு

   மடியாரி டைஞ்சல் ...... களைவோனே

அழகான செம்பொன் மயில்மேல மர்ந்து

   அலைவாயு கந்த ...... பெருமாளே.

 

106 அதல விதல  (பழநி)

தனன தனதனன தந்தத்த தந்ததன
   
தனன தனதனன தந்தத்த தந்ததன
 
தனன தனதனன தந்தத்த தந்ததன ...... தந்ததான

அதல விதலமுத லந்தத்த லங்களென

   அவனி யெனஅமரர் அண்டத்த கண்டமென

  அகில சலதியென எண்டிக்குள் விண்டுவென ...... அங்கிபாநு

அமுத கதிர்களென அந்தித்த மந்த்ரமென

   அறையு மறையெனஅ ருந்தத்து வங்களென

  அணுவி லணுவெனநி றைந்திட்டு நின்றதொரு ...... சம்ப்ரதாயம்

உதய மெழஇருள்வி டிந்தக்க ணந்தனிலி

   ருதய கமலமுகி ழங்கட்ட விழ்ந்துணர்வி

  லுணரு மநுபவம னம்பெற்றி டும்படியை ...... வந்துநீமுன்

உதவ இயலினியல் செஞ்சொற்ப்ர பந்தமென

   மதுர கவிகளில்ம னம்பற்றி ருந்துபுகழ்

  உரிய அடிமையுனை யன்றிப்ப்ர பஞ்சமதை ...... நம்புவேனோ

ததத ததததத தந்தத்த தந்ததத

   திதிதி திதிதிதிதி திந்தித்தி திந்திதிதி

  தகுகு தகுதகுகு தந்தத்த தந்தகுகு ...... திந்திதோதி

சகக சககெணக தந்தத்த குங்கெணக

   டிடிடி டிடிடிடிடி டிண்டிட்டி டிண்டிடிடி

  தகக தகதகக தந்தத்த தந்தகக ...... என்றுதாளம்

பதலை திமிலைதுடி தம்பட்ட மும்பெருக

   அகில நிசிசரர்ந டுங்கக்கொ டுங்கழுகு

  பரிய குடர்பழுவெ லும்பைப்பி டுங்கரண ...... துங்ககாளி

பவுரி யிடநரிபு லம்பப்ப ருந்திறகு

   கவரி யிடஇகலை வென்றுச்சி கண்டிதனில்

  பழநி மலையின்மிசை வந்துற்ற இந்திரர்கள் ...... தம்பிரானே.

107 அபகார நிந்தை  (பழநி)

   தனதான தந்தனத் ...... தனதான

   தனதான தந்தனத் ...... தனதான

முருகா முருகா வேல் முருகா; முருகா முருகா வேல் முருகா

https://www.youtube.com/watch?v=t5XUytvKYao

அபகார நிந்தைபட் ...... டுழலாதே

   அறியாத வஞ்சரைக் ...... குறியாதே

உபதேச மந்திரப் ...... பொருளாலே

   உனைநானி னைந்தருட் ...... பெறுவேனோ

இபமாமு கன்தனக் ...... கிளையோனே

   இமவான்ம டந்தையுத் ...... தமிபாலா

ஜெபமாலை தந்தசற் ...... குருநாதா

   திருவாவி னன்குடிப் ...... பெருமாளே.

 

110 அவனிதனிலே  (பழநி)

தனதனன தான தந்த தனதனன தான தந்த
   தனதனன தான தந்த
...... தனதான

அவனிதனி லேபி றந்து மதலையென வேத வழ்ந்து

   அழகுபெற வேந டந்து ...... இளைஞோனாய்

அருமழலை யேமி குந்து குதலைமொழி யேபு கன்று

   அதிவிதம தாய்வ ளர்ந்து ...... பதினாறாய்

சிவகலைக ளாக மங்கள் மிகவுமறை யோது மன்பர்

   திருவடிக ளேநி னைந்து ...... துதியாமல்

தெரிவையர்க ளாசை மிஞ்சி வெகுகவலை யாயு ழன்று

   திரியுமடி யேனை யுன்ற ...... னடிசேராய்

மவுனவுப தேச சம்பு மதியறுகு வேணி தும்பை

   மணிமுடியின் மீத ணிந்த ...... மகதேவர்

மனமகிழ வேய ணைந்து ஒருபுறம தாக வந்த

   மலைமகள்கு மார துங்க ...... வடிவேலா

பவனிவர வேயு கந்து மயிலின்மிசை யேதி கழ்ந்து

   படியதிர வேந டந்த ...... கழல்வீரா

பரமபத மேசெ றிந்த முருகனென வேயு கந்து

   பழநிமலை மேல மர்ந்த ...... பெருமாளே.

 

114 ஆறுமுகம் ஆறுமுகம்  (பழநி)

தானதன தானதன தானதன தானதன
   
தானதன தானதன ...... தந்ததான

ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம்

   ஆறுமுகம் ஆறுமுகம் ...... என்றுபூதி

ஆகமணி மாதவர்கள் பாதமலர் சூடுமடி

   யார்கள்பத மேதுணைய ...... தென்றுநாளும்

ஏறுமயில் வாகனகு காசரவ ணாஎனது

   ஈசஎன மானமுன ...... தென்றுமோதும்

ஏழைகள்வி யாகுலமி தேதெனவி னாவிலுனை

   யேவர்புகழ் வார்மறையு ...... மென்சொலாதோ

நீறுபடு மாழைபொரு மேனியவ வேலஅணி

   நீலமயில் வாகவுமை ...... தந்தவேளே

நீசர்கட மோடெனது தீவினையெ லாமடிய

   நீடுதனி வேல்விடும ...... டங்கல்வேலா

சீறிவரு மாறவுண னாவியுணு மானைமுக

   தேவர்துணை வாசிகரி ...... அண்டகூடஞ்

சேருமழ கார்பழநி வாழ்குமர னேபிரம

   தேவர்வர தாமுருக ...... தம்பிரானே.

 

134 கருவின் உருவாகி  (பழநி)

தனதனன தான தந்த தனதனன தான தந்த
   
தனதனன தான தந்த ...... தனதான

கருவினுரு வாகி வந்து வயதளவி லேவ ளர்ந்து

   கலைகள்பல வேதெ ரிந்து ...... மதனாலே

கரியகுழல் மாதர் தங்க ளடிசுவடு மார்பு தைந்து

   கவலைபெரி தாகி நொந்து ...... மிகவாடி

அரகரசி வாய வென்று தினமுநினை யாமல் நின்று

   அறுசமய நீதி யொன்று ...... மறியாமல்

அசனமிடு வார்கள் தங்கள் மனைகள்தலை வாசல் நின்று

   அநுதினமு நாண மின்றி ...... யழிவேனோ

உரகபட மேல்வ ளர்ந்த பெரியபெரு மாள ரங்கர்

   உலகளவு மால்ம கிழ்ந்த ...... மருகோனே

உபயகுல தீப துங்க விருதுகவி ராஜ சிங்க

   உறைபுகலி யூரி லன்று ...... வருவோனே

பரவைமனை மீதி லன்று ஒருபொழுது தூது சென்ற

   பரமனரு ளால்வ ளர்ந்த ...... குமரேசா

பகையசுரர் சேனை கொன்று அமரர்சிறை மீள வென்று

   பழநிமலை மீதில் நின்ற ...... பெருமாளே.

 

143 கனமாய் எழுந்து  (பழநி)

தனனா தனந்தனத் தனனா தனந்தனத்

     தனனா தனந்தனத் ...... தனதான

......... பாடல் .........

கனமா யெழுந்துவெற் பெனவே யுயர்ந்துகற்

     புரமா ரணந்துளுத் ...... திடுமானார்

கனிவா யுகந்துசிக் கெனவே யணைந்துகைப்

     பொருளே யிழந்துவிட் ...... டயர்வாயே

மனமே தளர்ந்துவிக் கலுமே யெழுந்துமட்

     டறவே யுலந்துசுக் ...... கதுபோலே

வசமே யழிந்துவுக் கிடுநோய் துறந்துவைப்

     பெனவே நினைந்துனைப் ...... புகழ்வேனோ

புனவே டர்தந்தபொற் குறமா துஇன்புறப்

     புணர்கா தல்கொண்டஅக் ...... கிழவோனே

புனலே ழுமங்கவெற் பொடுசூர் சிரங்கள்பொட்

     டெழவே லெறிந்தவுக் ...... கிரவீரா

தினமே வுகுங்குமப் புயவா சகிண்கிணிச்

     சிறுகீ தசெம்பதத் ...... தருளாளா

சிவலோ கசங்கரிக் கிறைபால பைங்கயத்

     திருவா வினன்குடிப் ...... பெருமாளே.

 

156 சிவனார் மனங்குளிர  (பழநி)

தனனா தனந்ததன தனனா தனந்ததன

   தனனா தனந்ததன ...... தனதான

சிவனார் மனங்குளிர உபதேச மந்த்ரமிரு

   செவிமீதி லும்பகர்செய் ...... குருநாதா

சிவகாம சுந்தரிதன் வரபால கந்தநின

   செயலேவி ரும்பியுளம் ...... நினையாமல்

அவமாயை கொண்டுலகில் விருதாவ லைந்துழலு

   மடியேனை அஞ்சலென ...... வரவேணும்

அறிவாக மும்பெருக இடரான துந்தொலைய

   அருள்ஞான இன்பமது ...... புரிவாயே

நவநீத முந்திருடி உரலோடெ யொன்றுமரி

   ரகுராமர் சிந்தைமகிழ் ...... மருகோனே

நவலோக முங்கைதொழு நிசதேவ லங்கிருத

   நலமான விஞ்சைகரு ...... விளைகோவே

தெவயானை யங்குறமின் மணவாள சம்ப்ரமுறு

   திறல்வீர மிஞ்சுகதிர் ...... வடிவேலா

திருவாவி னன்குடியில் வருவேள்ச வுந்தரிக

   செகமேல்மெய் கண்டவிறல் ...... பெருமாளே.

 

158 சீ உதிரம் எங்கும்  (பழநி)

சீயுதிர மெங்கு மேய்புழுநி ரம்பு

     மாயமல பிண்ட நோயிடுகு ரம்பை

          தீநரிகள் கங்கு காகமிவை தின்ப ...... தொழியாதே

தீதுளகு ணங்க ளேபெருகு தொந்த

     மாயையில்வ ளர்ந்த தோல்தசையெ லும்பு

          சேரிடுந ரம்பு தானிவைபொ திந்து ...... நிலைகாணா

ஆயதுந மன்கை போகவுயி ரந்த

     நாழிகையில் விஞ்ச ஊசிடுமி டும்பை

          யாகியவு டம்பு பேணிநிலை யென்று ...... மடவார்பால்

ஆசையைவி ரும்பி யேவிரக சிங்கி

     தானுமிக வந்து மேவிடம யங்கு

          மாழ்துயர்வி ழுந்து மாளுமெனை யன்பு ...... புரிவாயே

மாயைவல கஞ்ச னால்விடவெ குண்டு

     பார்முழுது மண்ட கோளமுந டுங்க

          வாய்பிளறி நின்று மேகநிகர் தன்கை ...... யதனாலே

வாரியுற அண்டி வீறொடுமு ழங்கு

     நீரைநுகர் கின்ற கோபமொடெ திர்ந்த

          வாரண இரண்டு கோடொடிய வென்ற ...... நெடியோனாம்

வேயினிசை கொண்டு கோநிரைபு ரந்து

     மேயல்புரி செங்கண் மால்மருக துங்க

          வேலகிர வுஞ்ச மால்வரையி டிந்து ...... பொடியாக

வேலைவிடு கந்த காவிரிவி ளங்கு

     கார்கலிசை வந்த சேவகன்வ ணங்க

          வீரைநகர் வந்து வாழ்பழநி யண்டர் ...... பெருமாளே.

 

166 தலைவலி மருத்தீடு  (பழநி)

தனதன தந்தான தானான தானதன

     தனதன தந்தான தானான தானதன

          தனதன தந்தான தானான தானதன ...... தனதான

......... பாடல் .........

தலைவலி மருத்தீடு காமாலை சோகைசுரம்

     விழிவலி வறட்சூலை காயாசு வாசம்வெகு

          சலமிகு விஷப்பாக மாயாவி காரபிணி ...... யணுகாதே

தலமிசை யதற்கான பேரோடு கூறியிது

     பரிகரி யெனக்காது கேளாது போலுமவர்

          சரியும்வ யதுக்கேது தாரீர்சொ லீரெனவும் ...... விதியாதே

உலைவற விருப்பாக நீள்காவின் வாசமலர்

     வகைவகை யெடுத்தேதொ டாமாலி காபரண

          முனதடி யினிற்சூட வேநாடு மாதவர்க ...... ளிருபாதம்

உளமது தரித்தேவி னாவோடு பாடியருள்

     வழிபட எனக்கேத யாவோடு தாளுதவ

          உரகம தெடுத்தாடு மேகார மீதின்மிசை ...... வரவேணும்

அலைகட லடைத்தேம காகோர ராவணனை

     மணிமுடி துணித்தாவி யேயான ஜானகியை

          அடலுட னழைத்தேகொள் மாயோனை மாமனெனு ...... மருகோனே

அறுகினை முடித்தோனை யாதார மானவனை

     மழுவுழை பிடித்தோனை மாகாளி நாணமுனம்

          அவைதனில் நடித்தோனை மாதாதை யேஎனவும் ...... வருவோனே

பலகலை படித்தோது பாவாணர் நாவிலுறை

     யிருசர ணவித்தார வேலாயு தாவுயர்செய்

          பரண்மிசை குறப்பாவை தோள்மேவ மோகமுறு ...... மணவாளா

பதுமவ யலிற்பூக மீதேவ ரால்கள் துயில்

     வருபுனல் பெருக்காறு காவேரி சூழவளர்

          பழநிவ ருகற்பூர கோலாக லாவமரர் ...... பெருமாளே.

 

168 திமிர உததி  (பழநி)

தனன தனன தனன தனன

   தனன தனன ...... தனதான

வேல் முருகா  வேல் வேல்; வேல் முருகா  வேல் வேல்

வேல் முருகா  வேல் வேல்; வேல் முருகா  வேல் வேல்

https://www.youtube.com/watch?v=vPl90fhMADk

திமிர வுததி யனைய நரக  செனன மதனில் விடுவாயேல்

செவிடு குருடு வடிவு குறைவு சிறிது மிடியு மணுகாதே

அமரர் வடிவு மதிக குலமு மறிவு நிறையும்   வரவேநின்

அருள தருளி யெனையு மனதொ   டடிமை கொளவும்  வரவேணும்

சமர முகவெ லசுரர்   தலைக ளுருள மிகவேநீள்

சலதி யலற நெடிய பதலை தகர அயிலை  விடுவோனே

வெமர வணையி லினிது துயிலும்   விழிகள் நளினன் மருகோனே

மிடறு கரியர் குமர பழநி விரவு மமரர்  பெருமாளே.

 

170 நாத விந்து  (பழநி)

தான தந்தன தானா தனாதன
   தான தந்தன தானா தனாதன
  தான தந்தன தானா தனாதன
...... தனதான

நாத விந்துக லாதீ நமோநம

   வேத மந்த்ரசொ ரூபா நமோநம

  ஞான பண்டித ாமீ நமோநம ...... வெகுகோடி

நாம சம்புகு மாரா நமோநம

   போக அந்தரி பாலா நமோநம

  நாக பந்தம யூரா நமோநம ...... பரசூரர்

சேத தண்டவி நோதா நமோநம

   கீத கிண்கிணி பாதா நமோநம

  தீர சம்ப்ரம வீரா நமோநம ...... கிரிராஜ

தீப மங்கள ஜோதீ நமோநம

   தூய அம்பல லீலா நமோநம

  தேவ குஞ்சரி பாகா நமோநம ...... அருள்தாராய்

ஈத லும்பல கோலா லபூஜையும்

   ஓத லுங்குண ஆசா ரநீதியும்

  ஈர முங்குரு சீர்பா தசேவையு ...... மறவாத

ஏழ்த லம்புகழ் காவே ரியால்விளை

   சோழ மண்டல மீதே மநோகர

  ராஜ கெம்பிர நாடா ளுநாயக ...... வயலூரா

ஆத ரம்பயி லாரூ ரர்தோழமை

   சேர்தல் கொண்டவ ரோடே முனாளினில்

  ஆடல் வெம்பரி மீதே றிமாகயி ...... லையிலேகி

ஆதி யந்தவு லாவா சுபாடிய

   சேரர் கொங்குவை காவூர் நனாடதில்

  ஆவி னன்குடி வாழ்வா னதேவர்கள் ...... பெருமாளே.

 

179 போதகம் தரு  (பழநி)

தான தந்தன தானா தனாதன

   தான தந்தன தானா தனாதன

  தான தந்தன தானா தனாதன ...... தனதான

போத கந்தரு கோவே நமோநம

   நீதி தங்கிய தேவா நமோநம

  பூத லந்தனை யாள்வாய் நமோநம ...... பணியாவும்

பூணு கின்றபி ரானே நமோநம

   வேடர் தங்கொடி மாலா நமோநம

  போத வன்புகழ் சாமீ நமோநம ...... அரிதான

வேத மந்திர ரூபா நமோநம

   ஞான பண்டித நாதா நமோநம

  வீர கண்டைகொள் தாளா நமோநம ...... அழகான

மேனி தங்கிய வேளே நமோநம

   வான பைந்தொடி வாழ்வே நமோநம

  வீறு கொண்டவி சாகா நமோநம ...... அருள்தாராய்

பாத கஞ்செறி சூரா திமாளவெ

   கூர்மை கொண்டயி லாலே பொராடியெ

  பார அண்டர்கள் வானா டுசேர்தர ...... அருள்வோனே

பாதி சந்திர னேசூ டும்வேணியர்

   சூல சங்கர னார்கீ தநாயகர்

  பார திண்புய மேசே ருசோதியர் ...... கயிலாயர்

ஆதி சங்கர னார்பா கமாதுமை

   கோல அம்பிகை மாதா மநோமணி

  ஆயி சுந்தரி தாயா னநாரணி ...... அபிராமி

ஆவல் கொண்டுவி றாலே சிராடவெ

   கோம ளம்பல சூழ்கோ யில்மீறிய

  ஆவி னன்குடி வாழ்வா னதேவர்கள் ...... பெருமாளே.

 

182 மனக்கவலை ஏதும்  (பழநி(

தனத்ததன தான தந்த தனத்ததன தான தந்த

   தனத்ததன தான தந்த ...... தனதான

மனக்கவலை யேது மின்றி உனக்கடிமை யேபு ரிந்து

   வகைக்குமநு நூல்வி தங்கள் ...... தவறாதே

வகைப்படிம னோர தங்கள் தொகைப்படியி னாலி லங்கி

   மயக்கமற வேத முங்கொள் ...... பொருள்நாடி

வினைக்குரிய பாத கங்கள் துகைத்துவகை யால்நி னைந்து

   மிகுத்தபொரு ளாக மங்கள் ...... முறையாலே

வெகுட்சிதனை யேது ரந்து களிப்பினுட னேந டந்து

   மிகுக்குமுனை யேவ ணங்க ...... வரவேணும்

மனத்தில்வரு வோனெ என்று னடைக்கலம தாக வந்து

   மலர்ப்பதம தேப ணிந்த ...... முநிவோர்கள்

வரர்க்குமிமை யோர்க ளென்பர் தமக்குமன மேயி ரங்கி

   மருட்டிவரு சூரை வென்ற ...... முனைவேலா

தினைப்புனமு னேந டந்து குறக்கொடியை யேம ணந்து

   செகத்தைமுழு தாள வந்த ...... பெரியோனே

செழித்தவள மேசி றந்த மலர்ப்பொழில்க ளேநி றைந்த

   திருப்பழநி வாழ வந்த ...... பெருமாளே.

 

192 வசனமிக ஏற்றி  (பழநி)

தனதனன தாத்த ...... தனதான

   தனதனன தாத்த ...... தனதான

வசனமிக வேற்றி ...... மறவாதே

   மனதுதுய ராற்றி ...... லுழலாதே

இசைபயில்ஷ டாக்ஷ ...... ரமதாலே

   இகபரசெள பாக்ய ...... மருள்வாயே

பசுபதிசி வாக்ய ...... முணர்வோனே

   பழநிமலை வீற்ற ...... ருளும்வேலா

அசுரர்கிளை வாட்டி ...... மிகவாழ

   அமரர்சிறை மீட்ட ...... பெருமாளே.

           

196 வாதம் பித்தம்  (பழநி)

தானந் தத்தன தானன தானன

     தானந் தத்தன தானன தானன

          தானந் தத்தன தானன தானன ...... தனதான

......... பாடல் .........

வாதம் பித்தமி டாவயி றீளைகள்

     சீதம் பற்சனி சூலைம கோதர

          மாசங் கட்பெரு மூலவி யாதிகள் ...... குளிர்காசம்

மாறுங் கக்கலொ டேசில நோய்பிணி

     யோடுந் தத்துவ காரர்தொ ணூறறு

          வாருஞ் சுற்றினில் வாழ்சதி காரர்கள் ...... வெகுமோகர்

சூழ்துன் சித்ரக பாயைமு வாசைகொ

     டேதுஞ் சற்றுண ராமலெ மாயைசெய்

          சோரம் பொய்க்குடி லேசுக மாமென ...... இதின்மேவித்

தூசின் பொற்சர மோடுகு லாயுல

     கேழும் பிற்பட வோடிடு மூடனை

          தூவஞ் சுத்தடி யாரடி சேரநி ...... னருள்தாராய்

தீதந் தித்திமி தீதக தோதிமி

     டூடுண் டுட்டுடு டூடுடு டூடுடு

          சேசெஞ் செக்கெண தோதக தீகுட ...... வெனபேரி

சேடன் சொக்கிட வேலைக டாகமெ

     லாமஞ் சுற்றிட வேயசு ரார்கிரி

          தீவும் பொட்டெழ வேயனல் வேல்விடு ...... மயில்வீரா

வேதன் பொற்சிர மீதுக டாவிந

     லீசன் சற்குரு வாயவர் காதினில்

          மேவும் பற்றிலர் பேறரு ளோதிய ...... முருகோனே

வேஷங் கட்டிபி னேகிம காவளி

     மாலின் பித்துற வாகிவி ணோர்பணி

          வீரங் கொட்பழ னாபுரி மேவிய ...... பெருமாளே.

 

213 குமரகுருபர முருக குகனே  (சுவாமிமலை)

தனதனன தனதனன தனனா தனத்ததன

   தனதனன தனதனன தனனா தனத்ததன

  தனதனன தனதனன தனனா தனத்ததன ...... தனதான

குமரகுரு பரமுருக குகனே குறச்சிறுமி

   கணவசர வணநிருதர் கலகா பிறைச்சடையர்

  குருவெனந லுரையுதவு மயிலா எனத்தினமு ...... முருகாதே

குயில்மொழிநன் மடவியர்கள் விழியா லுருக்குபவர்

   தெருவிலந வரதமன மெனவே நடப்பர்நகை

  கொளுமவர்க ளுடைமைமன முடனே பறிப்பவர்க ...... ளனைவோரும்

தமதுவச முறவசிய முகமே மினுக்கியர்கள்

   முலையிலுறு துகில்சரிய நடுவீ திநிற்பவர்கள்

  தனமிலியர் மனமுறிய நழுவா வுழப்பியர்கண் ...... வலையாலே

சதிசெய்தவ ரவர்மகிழ அணைமீ துருக்கியர்கள்

   வசமொழுகி யவரடிமை யெனமா தரிட்டதொழில்

  தனிலுழலு மசடனையு னடியே வழுத்தஅருள் ...... தருவாயே

சமரமொடு மசுரர்படை களமீ தெதிர்த்தபொழு

   தொருநொடியி லவர்கள்படை கெடவே லெடுத்தவனி

  தனில்நிருதர் சிரமுருள ரணதூள் படுத்திவிடு ...... செருமீதே

தவனமொடு மலகைநட மிடவீ ரபத்திரர்க

   ளதிரநிண மொடுகுருதி குடிகா ளிகொக்கரிசெய்

  தசையுணவு தனின்மகிழ விடுபேய் நிரைத்திரள்கள் ...... பலகோடி

திமிதமிட நரிகொடிகள் கழுகா டரத்தவெறி

   வயிரவர்கள் சுழலவொரு தனியா யுதத்தைவிடு

  திமிரதிந கரஅமரர் பதிவாழ் வுபெற்றுலவு ...... முருகோனே

திருமருவு புயனயனொ டயிரா வதக்குரிசி

   லடிபரவு பழநிமலை கதிர்கா மமுற்றுவளர்

  சிவசமய அறுமுகவ திருவே ரகத்திலுறை ...... பெருமாளே.

 

216 சரண கமலாலயத்தில் (சுவாமிமலை)

தனதனன தான தத்த தனதனன தான தத்த
   தனதனன தான தத்த
...... தனதான

வேல் முருகா  வேல் வேல்; வேல் முருகா  வேல் வேல்

வேல் முருகா  வேல் வேல்; வேல் முருகா  வேல் வேல்

https://www.youtube.com/watch?v=TiNfX8maAWI

சரணகம லால யத்தை அரைநிமிஷ நேர மட்டில்

   தவமுறைதி யானம் வைக்க ...... அறியாத

சடகசட மூட மட்டி பவவினையி லேச னித்த

   தமியன்மிடி யால்ம யக்க ...... முறுவேனோ

கருணைபுரி யாதி ருப்ப தெனகுறையி வேளை செப்பு

   கயிலைமலை நாதர் பெற்ற ...... குமரோனே

கடகபுய மீதி ரத்ந மணியணிபொன் மாலே செச்சை

   கமழுமண மார்க டப்ப ...... மணிவோனே

தருணமிதை யாமி குத்த கனமதுறு நீள்ச வுக்ய

   சகலசெல்வ யோக மிக்க ...... பெருவாழ்வு

தகைமைசிவ ஞான முத்தி பரகதியு நீகொ டுத்து

   தவிபுரிய வேணு நெய்த்த ...... வடிவேலா

அருணதள பாத பத்ம மதுநிதமு மேது திக்க

   அரியதமிழ் தான ளித்த ...... மயில்வீரா

அதிசயம நேக முற்ற பழநிமலை மீது தித்த

   அழகதிரு வேர கத்தின் ...... முருகோனே.

 

217 சுத்திய நரப்புடன்  (சுவாமிமலை)

தத்ததன தத்ததன தத்ததன தத்ததன

     தத்ததன தத்ததன தத்ததன தத்ததன

          தத்ததன தத்ததன தத்ததன தத்ததன ...... தந்ததான

......... பாடல் .........

சுத்தியந ரப்புடனெ லுப்புறுத சைக்குடலொ

     டப்புடனி ணச்சளிவ லிப்புடனி ரத்தகுகை

          சுக்கிலம் விளைப்புழுவொ டக்கையும ழுக்குமயிர் ...... சங்குமூளை

துக்கம்விளை வித்தபிணை யற்கறைமு னைப்பெருகு

     குட்டமொடு விப்புருதி புற்றெழுதல் முட்டுவலி

          துச்சிபிள வைப்பொருமல் பித்தமொடு றக்கமிக ...... வங்கமூடே

எத்தனைநி னைப்பையும்வி ளைப்பையும யக்கமுற

     லெத்தனைச லிப்பொடுக லிப்பையுமி டற்பெருமை

          எத்தனைக சத்தையும லத்தையும டைத்தகுடில் ...... பஞ்சபூதம்

எத்தனைகு லுக்கையுமி னுக்கையும னக்கவலை

     யெத்தனைக வட்டையுந டக்கையுமு யிர்க்குழுமல்

          எத்தனைபி றப்பையுமி றப்பையுமெ டுத்துலகில் ...... மங்குவேனோ

தத்தனத னத்தனத னத்தனவெ னத்திமிலை

     யொத்தமுர சத்துடியி டக்கைமுழ வுப்பறைகள்

          சத்தமறை யத்தொகுதி யொத்தசெனி ரத்தவெள ...... மண்டியோடச்

சக்கிரிநெ ளிப்பஅவு ணப்பிணமி தப்பமரர்

     கைத்தலம்வி ரித்தரஹ ரச்சிவபி ழைத்தொமென

          சக்கிரகி ரிச்சுவர்கள் அக்கணமே பக்குவிட ...... வென்றவேலா

சித்தமதி லெத்தனைசெ கத்தலம்வி தித்துடன

     ழித்துகம லத்தனைம ணிக்குடுமி பற்றிமலர்

          சித்திரக ரத்தலம்வ லிப்பபல குட்டிநட ...... னங்கொள்வேளே

செட்டிவடி வைக்கொடுதி னைப்புனம திற்சிறுகு

     றப்பெணம ளிக்குள்மகிழ் செட்டிகுரு வெற்பிலுறை

          சிற்பரம ருக்கொருகு ருக்களென முத்தர்புகழ் ...... தம்பிரானே.

 

222 நாசர்தங் கடை  (சுவாமிமலை)

தானனந் தனதனன தனதனா தத்த தந்த ...... தனதான

   தானனந் தனதனன தனதனா தத்த தந்த ...... தனதான

நாசர்தங் கடையதனில் விரவிநான் மெத்த நொந்து ...... தடுமாறி

   ஞானமுங் கெடஅடைய வழுவியா ழத்த ழுந்தி ...... மெலியாதே

மாசகந் தொழுமுனது புகழினோர் சொற்ப கர்ந்து ...... சுகமேவி

   மாமணங் கமழுமிரு கமலபா தத்தை நின்று ...... பணிவேனோ

வாசகம் புகலவொரு பரமர்தா மெச்சு கின்ற ...... குருநாதா

   வாசவன் தருதிருவை யொருதெய்வா னைக்கி ரங்கு ...... மணவாளா

கீசகஞ் சுரர்தருவு மகிழுமா வத்தி சந்து ...... புடைசூழுங்

   கேசவன் பரவுகுரு மலையில்யோ கத்த மர்ந்த ...... பெருமாளே.

 

228 பாதி மதிநதி (சுவாமிமலை)

தான தனதன தான தனதன
   
தான தனதன ...... தனதான

பாதி மதிநதி போது மணிசடை

   நாத ரருளிய ...... குமரேசா

பாகு கனிமொழி மாது குறமகள்

   பாதம் வருடிய ...... மணவாளா

காது மொருவிழி காக முறஅருள்

   மாய னரிதிரு ...... மருகோனே

கால னெனையணு காம லுனதிரு

   காலில் வழிபட ...... அருள்வாயே

ஆதி யயனொடு தேவர் சுரருல

   காளும் வகையுறு ...... சிறைமீளா

ஆடு மயிலினி லேறி யமரர்கள்

   சூழ வரவரு ...... மிளையோனே

சூத மிகவளர் சோலை மருவுசு

   வாமி மலைதனி ...... லுறைவோனே

சூர னுடலற வாரி சுவறிட

   வேலை விடவல ...... பெருமாளே.

 

232 வாதமொடு சூலை  (சுவாமிமலை)

தானதன தான தந்த தானதன தான தந்த

     தானதன தான தந்த ...... தனதான

......... பாடல் .........

வாதமொடு சூலை கண்ட மாலைகுலை நோவு சந்து

     மாவலிவி யாதி குன்ம ...... மொடுகாசம்

வாயுவுட னேப ரந்த தாமரைகள் பீன சம்பின்

     மாதர்தரு பூஷ ணங்க ...... ளெனவாகும்

பாதகவி யாதி புண்க ளானதுட னேதொ டர்ந்து

     பாயலைவி டாது மங்க ...... இவையால்நின்

பாதமல ரான தின்க ணேயமற வேம றந்து

     பாவமது பான முண்டு ...... வெறிமூடி

ஏதமுறு பாச பந்த மானவலை யோடு ழன்று

     ஈனமிகு சாதி யின்க ...... ணதிலேயான்

ஈடழித லான தின்பின் மூடனென வோது முன்புன்

     ஈரஅருள் கூர வந்து ...... எனையாள்வாய்

சூதமகிழ் பாலை கொன்றை தாதுவளர் சோலை துன்றி

     சூழமதில் தாவி மஞ்சி ...... னளவாகத்

தோரணநன் மாட மெங்கு நீடுகொடி யேத ழைந்த

     சுவாமிமலை வாழ வந்த ...... பெருமாளே.

 

240 அரகர சிவன் அரி (திருத்தணிகை)

தனதன தனதன தனதன தனதன
   
தனதன தனதன ...... தனதான

முருகைய்யா முருகைய்யா  முத்து  குமரன் நீ ஐயா

முருகைய்யா முருகைய்யா  முத்து  குமரன் நீ ஐயா

https://www.youtube.com/watch?v=x3YPjeoQpUs

அரகர சிவனரி அயனிவர் பரவிமு

   னறுமுக சரவண ...... பவனேயென்

றநுதின மொழிதர அசுரர்கள் கெடஅயில்

   அநலென எழவிடு ...... மதிவீரா

பரிபுர கமலம தடியிணை யடியவர்

   உளமதி லுறவருள் ...... முருகேசா

பகவதி வரைமகள் உமைதர வருகுக

   பரமன திருசெவி ...... களிகூர

உரைசெயு மொருமொழி பிரணவ முடிவதை

   உரைதரு குருபர ...... வுயர்வாய

உலகம னலகில வுயிர்களு மிமையவ

   ரவர்களு முறுவர ...... முநிவோரும்

பரவிமு னநுதின மனமகிழ் வுறவணி

   பணிதிகழ் தணிகையி ...... லுறைவோனே

பகர்தரு குறமகள் தருவமை வநிதையு

   மிருபுடை யுறவரு ...... பெருமாளே.

 

242 இருப்பவல் திருப்புகழ் (திருத்தணிகை)

தனத்தன தனத்தன தனத்தன தனத்தன
   
தனத்தன தனத்தன ...... தனதான

இருப்பவல் திருப்புகழ் விருப்பொடு படிப்பவர்

   இடுக்கினை யறுத்திடு ...... மெனவோதும்

இசைத்தமிழ் நடத்தமி ழெனத்துறை விருப்புட

   னிலக்கண இலக்கிய ...... கவிநாலுந்

தரிப்பவ ருரைப்பவர் நினைப்பவர் மிகச்சக

   தலத்தினில் நவிற்றுத ...... லறியாதே

தனத்தினில் முகத்தினில் மனத்தினி லுருக்கிடு

   சமர்த்திகள் மயக்கினில் ...... விழலாமோ

கருப்புவில் வளைத்தணி மலர்க்கணை தொடுத்தியல்

   களிப்புட னொளித்தெய்த ...... மதவேளைக்

கருத்தினில் நினைத்தவ னெருப்பெழ நுதற்படு

   கனற்கணி லெரித்தவர் ...... கயிலாயப்

பொருப்பினி லிருப்பவர் பருப்பத வுமைக்கொரு

   புறத்தினை யளித்தவர் ...... தருசேயே

புயற்பொழில் வயற்பதி நயப்படு திருத்தணி

   பொருப்பினில் விருப்புறு ...... பெருமாளே.

243 இருமலு ரோக  (திருத்தணிகை)

தனதன தான தனதன தான

   தனதன தான ...... தனதான

இருமலு ரோக முயலகன் வாத

   மெரிகுண நாசி ...... விடமேநீ

ரிழிவுவி டாத தலைவலி சோகை

   யெழுகள மாலை ...... யிவையோடே

பெருவயி றீளை யெரிகுலை சூலை

   பெருவலி வேறு ...... முளநோய்கள்

பிறவிகள் தோறு மெனைநலி யாத

   படியுன தாள்கள் ...... அருள்வாயே

வருமொரு கோடி யசுரர்ப தாதி

   மடியஅ நேக ...... இசைபாடி

வருமொரு கால வயிரவ ராட

   வடிசுடர் வேலை ...... விடுவோனே

தருநிழல் மீதி லுறைமுகி லூர்தி

   தருதிரு மாதின் ...... மணவாளா

சலமிடை பூவி னடுவினில் வீறு

   தணிமலை மேவு ...... பெருமாளே.

 

249 எனக்கென யாவும் (திருத்தணிகை)

தனத்தன தானம் தனத்தன தானம்
   தனத்தன தானம்
...... தனதான

எனக்கென யாவும் படைத்திட நாளும்

   இளைப்பொடு காலந் ...... தனிலோயா

எடுத்திடு காயந் தனைக்கொடு மாயும்

   இலச்சையி லாதென் ...... பவமாற

உனைப்பல நாளுந் திருப்புக ழாலும்

   உரைத்திடு வார்தங் ...... குளிமேவி

உணர்த்திய போதந் தனைப்பிரி யாதொண்

   பொலச்சர ணானுந் ...... தொழுவேனோ

வினைத்திற மோடன் றெதிர்த்திடும் வீரன்

   விழக்கொடு வேள்கொன் ...... றவனீயே

விளப்பென மேலென் றிடக்கய னாரும்

   விருப்புற வேதம் ...... புகல்வோனே

சினத்தொடு சூரன் தனைக்கொடு வேலின்

   சிரத்தினை மாறும் ...... முருகோனே

தினைப்புன மோவுங் குறக்கொடி யோடுந்

   திருத்தணி மேவும் ...... பெருமாளே.

 

250 எனை அடைந்த  (திருத்தணிகை)

தனன தந்த தத்த| தனன தந்த தத்த

   தனன தந்த தத்த ...... தனதான

எனைய டைந்த குட்டம் வினைமி குந்த பித்த

   மெரிவ ழங்கு வெப்பு ...... வலிபேசா

இகலி நின்ற லைக்கு முயல கன்கு லைப்பொ

   டிரும லென்று ரைக்கு ...... மிவையோடே

மனைகள் பெண்டிர் மக்கள் தமைநி னைந்து சுத்த

   மதிம யங்கி விட்டு ...... மடியாதே

மருவி யின்றெ னக்கு மரக தஞ்சி றக்கு

   மயிலில் வந்து முத்தி ...... தரவேணும்

நினைவ ணங்கு பத்த ரனைவ ருந்த ழைக்க

   நெறியில் நின்ற வெற்றி ...... முனைவேலா

நிலைபெ றுந்தி ருத்த ணியில்வி ளங்கு சித்ர

   நெடிய குன்றில் நிற்கு ...... முருகோனே

தினைவி ளங்க லுற்ற புனஇ ளங்கு றத்தி

   செயல றிந்த ணைக்கு ...... மணிமார்பா

திசைமு கன்தி கைக்க அசுர ரன்ற டைத்த

   சிறைதி றந்து விட்ட ...... பெருமாளே.

 

269 சினத்தவர் முடிக்கும் (திருத்தணிகை)

தனத்தன தனத்தம் தனத்தன தனத்தம்
   
தனத்தன தனத்தம் ...... தனதான

 சினத்தவர் முடிக்கும் பகைத்தவர் குடிக்குஞ்

   செகுத்தவர் ருயிர்க்குஞ் ...... சினமாகச்

சிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும்

   திருப்புகழ் நெருப்பென் ...... றறிவோம்யாம்

நினைத்தது மளிக்கும் மனத்தையு முருக்கும்

   நிசிக்கரு வறுக்கும் ...... பிறவாமல்

நெருப்பையு மெரிக்கும் பொருப்பையு மிடிக்கும்

   நிறைப்புக ழுரைக்குஞ் ...... செயல்தாராய்

தனத்தன தனத்தந் திமித்திமி திமித்திந்

   தகுத்தகு தகுத்தந் ...... தனபேரி

தடுட்டுடு டுடுட்டுண் டெனத்துடி முழக்குந்

   தளத்துட னடக்குங் ...... கொடுசூரர்

சினத்தையு முடற்சங் கரித்தம லைமுற்றுஞ்

   சிரித்தெரி கொளுத்துங் ...... கதிர்வேலா

தினைக்கிரி குறப்பெண் தனத்தினில் சுகித்தெண்

   திருத்தணி யிருக்கும் ...... பெருமாளே.

 

278 நினைத்தது எத்தனை  (திருத்தணிகை)

தனத்த தத்தனத் ...... தனதான

   தனத்த தத்தனத் ...... தனதான

நினைத்த தெத்தனையிற் ...... றவறாமல்

   நிலைத்த புத்திதனைப் ...... பிரியாமற்

கனத்த தத்துவமுற் ...... றழியாமற்

   கதித்த நித்தியசித் ...... தருள்வாயே

மனித்தர் பத்தர்தமக் ...... கெளியோனே

   மதித்த முத்தமிழிற் ...... பெரியோனே

செனித்த புத்திரரிற் ...... சிறியோனே

   திருத்த ணிப்பதியிற் ...... பெருமாளே.

 

303 அதிரும் கழல்  (குன்றுதோறாடல்)

https://www.youtube.com/watch?v=_2p0RzpID2M

 தனனந் தனன தந்த ...... தனதான

   தனனந் தனன தந்த ...... தனதான

அதிருங் கழல்ப ணிந்து ...... னடியேனுன்

   அபயம் புகுவ தென்று ...... நிலைகாண

இதயந் தனிலி ருந்து ...... க்ருபையாகி

   இடர்சங் கைகள்க லங்க ...... அருள்வாயே

எதிரங் கொருவ ரின்றி ...... நடமாடும்

   இறைவன் தனது பங்கி ...... லுமைபாலா

பதியெங் கிலுமி ருந்து ...... விளையாடிப்

   பலகுன் றிலும மர்ந்த ...... பெருமாளே.

 

330 முட்டுப் பட்டு  (காஞ்சீபுரம்)

தத்தத் தத்தத் ...... தனதான

   தத்தத் தத்தத் ...... தனதான

முருகா முருகா வேல் முருகா; முருகா முருகா வேல் முருகா

https://www.youtube.com/watch?v=t5XUytvKYao

முட்டுப் பட்டுக் ...... கதிதோறும்

   முற்றச் சுற்றிப் ...... பலநாளும்

தட்டுப் பட்டுச் ...... சுழல்வேனைச்

   சற்றுப் பற்றக் ...... கருதாதோ

வட்டப் புட்பத் ...... தலமீதே

   வைக்கத் தக்கத் ...... திருபாதா

கட்டத் தற்றத் ...... தருள்வோனே

   கச்சிச் சொக்கப் ...... பெருமாளே.

 

366 வேலைப்போல் விழி  (திருவானைக்கா)காயத்ரீ

தானத் தானன தத்தன தத்தன

   தானத் தானன தத்தன தத்தன

  தானத் தானன தத்தன தத்தன ...... தனதான

......... பாடல் .........

வேலைப் போல்விழி யிட்டும ருட்டிகள்

   காமக் ரோதம்வி ளைத்திடு துட்டிகள்

  வீதிக் கேதிரி பப்பர மட்டைகள் ...... முலையானை

மேலிட் டேபொர விட்டபொ றிச்சிகள்

   மார்பைத் தோளைய சைத்துந டப்பிகள்

  வேளுக் காண்மைசெ லுத்துச மர்த்திகள் ...... களிகூருஞ்

சோலைக் கோகில மொத்தமொ ழிச்சிகள்

   காசற் றாரையி தத்திலொ ழிச்சிகள்

  தோலைப் பூசிமி னுக்கியு ருக்கிகள் ...... எவரேனும்

தோயப் பாயல ழைக்கும வத்திகள்

   மோகப் போகமு யக்கிம யக்கிகள்

  சூறைக் காரிகள் துக்கவ லைப்பட ...... லொழிவேனோ

காலைக் கேமுழு கிக்குண திக்கினில்

   ஆதித் யாயஎ னப்பகர் தர்ப்பண

  காயத் ரீசெப மர்ச்சனை யைச்செயு ...... முநிவோர்கள்

கானத் தாசிர மத்தினி லுத்தம

   வேள்விச் சாலைய ளித்தல்பொ ருட்டெதிர்

  காதத் தாடகை யைக்கொல்க்ரு பைக்கடல் ...... மருகோனே

ஆலைச் சாறுகொ தித்துவ யற்றலை

   பாயச் சாலித ழைத்திர தித்தமு

  தாகத் தேவர்கள் மெச்சிய செய்ப்பதி ...... யுறைவேலா

ஆழித் தேர்மறு கிற்பயில் மெய்த்திரு

   நீறிட் டான்மதிள் சுற்றிய பொற்றிரு

  ஆனைக் காவினி லப்பர்ப்ரி யப்படு ...... பெருமாளே

                    

367 குமர குருபர குணதர  (திருவருணை)

தனன தனதன தனதன தனதன

   தனன தனதன தனதன தனதன

  தனன தனதன தனதன தனதன ...... தனதான

......... பாடல் .........

குமர குருபர குணதர நிசிசர

   திமிர தினகர சரவண பவகிரி

  குமரி சுதபகி ரதிசுத சுரபதி ...... குலமானுங்

குறவர் சிறுமியு மருவிய திரள்புய

   முருக சரணென வுருகுதல் சிறிதுமில்

  கொடிய வினையனை யவலனை யசடனை ...... யதிமோகக்

கமரில் விழவிடு மழகுடை யரிவையர்

   களவி னொடுபொரு ளளவள வருளிய

  கலவி யளறிடை துவளுறும் வெளிறனை ...... யினிதாளக்

கருணை யடியரொ டருணையி லொருவிசை

   சுருதி புடைதர வருமிரு பரிபுர

  கமல மலரடி கனவிலு நனவிலு ...... மறவேனே

தமர மிகுதிரை யெறிவளை கடல்குடல்

   மறுகி யலைபட விடநதி யுமிழ்வன

  சமுக முககண பணபணி பதிநெடு ...... வடமாகச்

சகல வுலகமு நிலைபெற நிறுவிய

   கனக கிரிதிரி தரவெகு கரமலர்

  தளர வினியதொ ரமுதினை யொருதனி ...... கடையாநின்

றமரர் பசிகெட வுதவிய க்ருபைமுகில்

   அகில புவனமு மளவிடு குறியவன்

  அளவு நெடியவ னளவிட அரியவன் ...... மருகோனே

அரவு புனைதரு புநிதரும் வழிபட

   மழலை மொழிகொடு தெளிதர வொளிதிகழ்

  அறிவை யறிவது பொருளென அருளிய ...... பெருமாளே.

 

401 இருவினை அஞ்ச (திருவருணை)

தனதன தந்த தனதன தந்த
   தனதன தந்த
...... தனதான

இருவினை யஞ்ச மலவகை மங்க

   இருள்பிணி மங்க ...... மயிலேறி

இனவரு ளன்பு மொழியக டம்பு

   வினதக முங்கொ ...... டளிபாடக்

கரிமுக னெம்பி முருகனெ னண்டர்

   களிமலர் சிந்த ...... அடியேன்முன்

கருணைபொ ழிந்து முகமும லர்ந்து

   கடுகிந டங்கொ ...... டருள்வாயே

திரிபுர மங்க மதனுடல் மங்க

   திகழ்நகை கொண்ட ...... விடையேறிச்

சிவம்வெளி யங்க ணருள்குடி கொண்டு

   திகழந டஞ்செய் ...... தெமையீண

அரசியி டங்கொள் மழுவுடை யெந்தை

   அமலன்ம கிழ்ந்த ...... குருநாதா

அருணைவி லங்கல் மகிழ்குற மங்கை

   அமளிந லங்கொள் ...... பெருமாளே.

 

421 சிவமாதுடனே  (திருவருணை)

தனனா தனனா தனனா தனனா

     தனனா தனனா ...... தனதான

......... பாடல் .........

சிவமா துடனே அநுபோ கமதாய்

     சிவஞா னமுதே ...... பசியாறித்

திகழ்வோ டிருவோ ரொருரூ பமதாய்

     திசைலோ கமெலா ...... மநுபோகி

இவனே யெனமா லயனோ டமரோ

     ரிளையோ னெனவே ...... மறையோத

இறையோ னிடமாய் விளையா டுகவே

     யியல்வே லுடன்மா ...... அருள்வாயே

தவலோ கமெலா முறையோ வெனவே

     தழல்வேல் கொடுபோ ...... யசுராரைத்

தலைதூள் படஏழ் கடல்தூள் படமா

     தவம்வாழ் வுறவே ...... விடுவோனே

கவர்பூ வடிவாள் குறமா துடன்மால்

     கடனா மெனவே ...... அணைமார்பா

கடையேன் மிடிதூள் படநோய் விடவே

     கனல்மால் வரைசேர் ...... பெருமாளே.

 

425 செயசெய அருணா  (திருவருணை)

தனதன தனனாத் தனதன தனனத்
   
தனதன தனனாத் தனதன தனனத்
 
தனதன தனனாத் தனதன தனனத் ...... தனதான

செயசெய அருணாத் திரிசிவ யநமச்

   செயசெய அருணாத் திரிமசி வயநச்

  செயசெய அருணாத் திரிநம சிவயத் ...... திருமூலா

செயசெய அருணாத் திரியந மசிவச்

   செயசெய அருணாத் திரிவய நமசிச்

  செயசெய அருணாத் திரிசிவ யநமஸ்த் ...... தெனமாறி

செயசெய அருணாத் திரிதனின் விழிவைத்

   தரகர சரணாத் திரியென உருகிச்

  செயசெய குருபாக் கியமென மருவிச் ...... சுடர்தாளைச்

சிவசிவ சரணாத் திரிசெய செயெனச்

   சரண்மிசை தொழுதேத் தியசுவை பெருகத்

  திருவடி சிவவாக் கியகட லமுதைக் ...... குடியேனோ

செயசெய சரணாத் திரியென முநிவர்க்

   கணமிது வினைகாத் திடுமென மருவச்

  செடமுடி மலைபோற் றவுணர்க ளவியச் ...... சுடும்வேலா

திருமுடி யடிபார்த் திடுமென இருவர்க்

   கடிதலை தெரியாப் படிநிண அருணச்

  சிவசுடர் சிகிநாட் டவனிரு செவியிற் ...... புகல்வோனே

செயசெய சரணாத் திரியெனு மடியெற்

   கிருவினை பொடியாக் கியசுடர் வெளியிற்

  றிருநட மிதுபார்த் திடுமென மகிழ்பொற் ...... குருநாதா

திகழ்கிளி மொழிபாற் சுவையித ழமுதக்

   குறமகள் முலைமேற் புதுமண மருவிச்

  சிவகிரி அருணாத் திரிதல மகிழ்பொற் ...... பெருமாளே.

 

431 தோதகப் பெரும்  (திருவருணை)

தான தத்த தந்த தான தத்த தந்த

     தான தத்த தந்த ...... தனதான

......... பாடல் .........

தோத கப்பெ ரும்ப யோத ரத்தி யங்கு

     தோகை யர்க்கு நெஞ்ச ...... மழியாதே

சூலை வெப்ப டர்ந்த வாத பித்த மென்று

     சூழ்பி ணிக்க ணங்க ...... ளணுகாதே

பாத கச்ச மன்தன் மேதி யிற்பு குந்து

     பாசம் விட்டெ றிந்து ...... பிடியாதே

பாவ லற்கி ரங்கி நாவ லர்க்கி சைந்த

     பாடல் மிக்க செஞ்சொல் ...... தரவேணும்

வேத மிக்க விந்து நாத மெய்க்க டம்ப

     வீர பத்ர கந்த ...... முருகோனே

மேரு வைப்பி ளந்து சூர னைக்க டிந்து

     வேலை யிற்றொ ளைந்த ...... கதிர்வேலா

கோதை பொற்கு றிஞ்சி மாது கச்ச ணிந்த

     கோம ளக்கு ரும்பை ...... புணர்வோனே

கோல முற்றி லங்கு சோண வெற்பு யர்ந்த

     கோபு ரத்த மர்ந்த ...... பெருமாளே.

                    

487 வாத பித்தமொடு  (சிதம்பரம்)

தான தத்ததன தான தத்ததன

     தான தத்ததன தான தத்ததன

          தான தத்ததன தான தத்ததன ...... தந்ததான

......... பாடல் .........

வாத பித்தமொடு சூலை விப்புருதி

     யேறு கற்படுவ னீளை பொக்கிருமல்

          மாலை புற்றெழுத லூசல் பற்சனியொ ...... டந்திமாலை

மாச டைக்குருடு காத டைப்பு செவி

     டூமை கெட்டவலி மூல முற்றுதரு

          மாலை யுற்றதொணு றாறு தத்துவர்க ...... ளுண்டகாயம்

வேத வித்துபரி கோல முற்றுவிளை

     யாடு வித்தகட லோட மொய்த்தபல

          வேட மிட்டுபொரு ளாசை பற்றியுழல் ...... சிங்கியாலே

வீடு கட்டிமய லாசை பட்டுவிழ

     வோசை கெட்டுமடி யாமல் முத்திபெற

          வீட ளித்துமயி லாடு சுத்தவெளி ...... சிந்தியாதோ

ஓத அத்திமுகி லோடு சர்ப்பமுடி

     நீறு பட்டலற சூர வெற்பவுண

          ரோடு பட்டுவிழ வேலை விட்டபுக ...... ழங்கிவேலா

ஓந மச்சிவய சாமி சுத்தஅடி

     யார்க ளுக்குமுப காரி பச்சையுமை

          ஓர்பு றத்தருள்சி காம ணிக்கடவுள் ...... தந்தசேயே

ஆதி கற்பகவி நாய கர்க்குபிற

     கான பொற்சரவ ணாப ரப்பிரம

          னாதி யுற்றபொருள் ஓது வித்தமைய ...... றிந்தகோவே

ஆசை பெற்றகுற மாதை நித்தவன

     மேவி சுத்தமண மாடி நற்புலியு

          ராட கப்படிக கோபு ரத்தின்மகிழ் ...... தம்பிரானே.

 

493 எழுகடல் மணலை  (சிதம்பரம்)

தனதன தனன தனதன தனன
   
தனதன தனன ...... தனதான

எழுகடல் மணலை அளவிடி னதிக

   மெனதிடர் பிறவி ...... அவதாரம்

இனியுன தபய மெனதுயி ருடலு

   மினியுடல் விடுக ...... முடியாது

கழுகொடு நரியு மெரிபுவி மறலி

   கமலனு மிகவு ...... மயர்வானார்

கடனுன தபய மடிமையு னடிமை

   கடுகியு னடிகள் ...... தருவாயே

விழுதிக ழழகி மரகத வடிவி

   விமலிமு னருளு ...... முருகோனே

விரிதல மெரிய குலகிரி நெரிய

   விசைபெறு மயிலில் ...... வருவோனே

எழுகடல் குமுற அவுணர்க ளுயிரை

   யிரைகொளும் அயிலை ...... யுடையோனே

இமையவர் முநிவர் பரவிய புலியு

   ரினில்நட மருவு ...... பெருமாளே.

 

523 ஒருபதும் இருபதும்  (ஸ்ரீ சைலம் திருமலை)

தனதன தனதன தனதன தனதன

   தனதன தனதன ...... தனதான

முருகைய்யா முருகைய்யா  முத்து  குமரன் நீ ஐயா

முருகைய்யா முருகைய்யா  முத்து  குமரன் நீ ஐயா

https://www.youtube.com/watch?v=x3YPjeoQpUs

ஒருபது மிருபது மறுபது முடனறு

   முணர்வுற இருபத ...... முளநாடி

உருகிட முழுமதி தழலென வொளிதிகழ்

   வெளியொடு வொளிபெற ...... விரவாதே

தெருவினில் மரமென எவரொடு முரைசெய்து

   திரிதொழி லவமது ...... புரியாதே

திருமகள் மருவிய திரள்புய அறுமுக

   தெரிசனை பெறஅருள் ...... புரிவாயே

பரிவுட னழகிய பழமொடு கடலைகள்

   பயறொடு சிலவகை ...... பணியாரம்

பருகிடு பெருவயி றுடையவர் பழமொழி

   எழுதிய கணபதி ...... யிளையோனே

பெருமலை யுருவிட அடியவ ருருகிட

   பிணிகெட அருள்தரு ...... குமரேசா

பிடியொடு களிறுகள் நடையிட கலைதிரள்

   பிணையமர் திருமலை ...... பெருமாளே.

 

525 சரவண பவநிதி  (திருவேங்கடம்)

தனதன தனதன தனதன தனதன

   தனதன தனதன தனதன தனதன

  தனதன தனதன தனதன தனதன ...... தனதான

......... பாடல் .........

சரவண பவநிதி யறுமுக குருபர

   சரவண பவநிதி யறுமுக குருபர

  சரவண பவநிதி யறுமுக குருபர ...... எனவோதித்

தமிழினி லுருகிய வடியவ ரிடமுறு

   சனனம ரணமதை யொழிவுற சிவமுற

  தருபிணி துளவர மெமதுயிர் சுகமுற ...... வருள்வாயே

கருணைய விழிபொழி யொருதனி முதலென

   வருகரி திருமுகர் துணைகொளு மிளையவ

  கவிதைய முதமொழி தருபவ ருயிர்பெற ...... வருள்நேயா

கடலுல கினில்வரு முயிர்படு மவதிகள்

   கலகமி னையதுள கழியவும் நிலைபெற

  கதியுமு னதுதிரு வடிநிழல் தருவது ...... மொருநாளே

திரிபுர மெரிசெயு மிறையவ ரருளிய

   குமரச மரபுரி தணிகையு மிகுமுயர்

  சிவகிரி யிலும்வட மலையிலு முலவிய ...... வடிவேலா

தினமுமு னதுதுதி பரவிய அடியவர்

   மனதுகு டியுமிரு பொருளிலு மிலகுவ

  திமிரம லமொழிய தினகர னெனவரு ...... பெருவாழ்வே

அரவணை மிசைதுயில் நரகரி நெடியவர்

   மருகனெ னவெவரு மதிசய முடையவ

  அமலிவி மலிபரை உமையவ ளருளிய ...... முருகோனே

அதலவி தலமுதல் கிடுகிடு கிடுவென

   வருமயி லினிதொளிர் ஷடுமையில் நடுவுற

  அழகினு டனமரு மரகர சிவசிவ ...... பெருமாளே.

 

557 பகலிரவினில் (சென்னிமலை, திருசிராப்பள்ளி)

தனதனதனத் ...... தனதான
   
தனதனதனத் ...... தனதான

பகலிரவினிற் ...... றடுமாறா

   பதிகுருவெனத் ...... தெளிபோத

ரகசியமுரைத் ...... தநுபூதி

   ரதநிலைதனைத் ...... தருவாயே

இகபரமதற் ...... கிறையோனே

   இயலிசையின்முத் ...... தமிழோனே

சகசிரகிரிப் ...... பதிவேளே

   சரவணபவப் ...... பெருமாளே.

 

561 வாசித்து  (திருசிராப்பள்ளி)

தானத்தத் தான தானன தானத்தத் தான தானன

   தானத்தத் தான தானன ...... தந்ததான

வாசித்துக் காணொ ணாதது பூசித்துக் கூடொ ணாதது

   வாய்விட்டுப் பேசொ ணாதது ...... நெஞ்சினாலே

மாசர்க்குத் தோணொ ணாதது நேசர்க்குப் பேரொ ணாதது

   மாயைக்குச் சூழொ ணாதது ...... விந்துநாத

ஓசைக்குத் தூர மானது மாகத்துக் கீற தானது

   லோகத்துக் காதி யானது ...... கண்டுநாயேன்

யோகத்தைச் சேரு மாறுமெய்ஞ் ஞானத்தைப் போதி யாயினி

   யூனத்தைப் போடி டாதும ...... யங்கலாமோ

ஆசைப்பட் டேனல் காவல்செய் வேடிச்சிக் காக மாமய

   லாகிப்பொற் பாத மேபணி ...... கந்தவேளே

ஆலித்துச் சேல்கள் பாய்வய லூரத்திற் காள மோடட

   ராரத்தைப் பூண்ம யூரது ...... ரங்கவீரா

நாசிக்குட் ப்ராண வாயுவை ரேசித்தெட் டாத யோகிகள்

   நாடிற்றுக் காணொ ணாதென ...... நின்றநாதா

நாகத்துச் சாகை போயுயர் மேகத்தைச் சேர்சி ராமலை

   நாதர்க்குச் சாமி யேசுரர் ...... தம்பிரானே.

 

567 பத்தியால் யானுனை  (இரத்னகிரி)

தத்தனா தானனத் ...... தனதான
   தத்தனா தானனத்
...... தனதான

வேல் முருகா வேல் முருகா   வேல் முருகா  வேல்

வேல் முருகா வேல் முருகா   வேல் முருகா  வேல்

https://www.youtube.com/watch?v=8mSPITSQt6o

பத்தியால் யானுனைப் ...... பலகாலும்

   பற்றியே மாதிருப் ...... புகழ்பாடி

முத்தனா மாறெனைப் ...... பெருவாழ்வின்

   முத்தியே சேர்வதற் ...... கருள்வாயே

உத்தமா தானசற் ...... குணர்நேயா

   ஒப்பிலா மாமணிக் ...... கிரிவாசா

வித்தகா ஞானசத் ...... திநிபாதா

   வெற்றிவே லாயுதப் ...... பெருமாளே.

 

568 சீரான கோல கால  (விராலிமலை)

 

சீரான கோல கால நவமணி

     மாலாபி ஷேக பார வெகுவித

          தேவாதி தேவர் சேவை செயுமுக ...... மலராறும்

சீராடு வீர மாது மருவிய

     ஈராறு தோளு நீளும் வரியளி

          சீராக மோது நீப பரிமள ...... இருதாளும்

ஆராத காதல் வேடர் மடமகள்

     ஜீமூத மூர்வ லாரி மடமகள்

          ஆதார பூத மாக வலமிட ...... முறைவாழ்வும்

ஆராயு நீதி வேலு மயிலுமெய்ஞ்

     ஞானாபி ராம தாப வடிவமும்

          ஆபாத னேனு நாளு நினைவது ...... பெறவேணும்

ஏராரு மாட கூட மதுரையில்

     மீதேறி மாறி யாடு மிறையவர்

          ஏழேழு பேர்கள் கூற வருபொரு ...... ளதிகாரம்

ஈடாய வூமர் போல வணிகரி

     லூடாடி யால வாயில் விதிசெய்த

          லீலாவி சார தீர வரதர ...... குருநாதா

கூராழி யால்முன் வீய நினைபவ

     னீடேறு மாறு பாநு மறைவுசெய்

          கோபால ராய னேய முளதிரு ...... மருகோனே

கோடாம லார வார அலையெறி

     காவேரி யாறு பாயும் வயலியில்

          கோனாடு சூழ்வி ராலி மலையுறை ...... பெருமாளே.

 

571 நிராமய புராதன  (விராலிமலை)

தனாதன தனாதன தனாதன தனாதன

   தனாதன தனாதனத் ...... தனதான

நிராமய புராதன பராபர வராம்ருத

   நிராகுல சிராதிகப் ...... ப்ரபையாகி

நிராசசி வராஜத வராஜர்கள் பராவிய

   நிராயுத புராரியச் ...... சுதன்வேதா

சுராலய தராதல சராசர பிராணிகள்

   சொரூபமி வராதியைக் ...... குறியாமே

துரால்புகழ் பராதின கராவுள பராமுக

   துரோகரை தராசையுற் ...... றடைவேனோ

இராகவ இராமன்முன் இராவண இராவண

   இராவண இராஜனுட் ...... குடன்மாய்வென்

றிராகன்ம லராணிஜ புராணர்கு மராகலை

   யிராஜசொ லவாரணர்க் ...... கிளையோனே

விராகவ சுராதிப பொராதுத விராதடு

   விராயண பராயணச் ...... செருவூரா

விராவிய குராவகில் பராரைமு திராவளர்

   விராலிம லைராஜதப் ...... பெருமாளே.

 

585 அன்பாக வந்து (சென்னிமலை, திருசிராப்பள்ளி)

தத்தனா தானனத் ...... தனதான

   தத்தனா தானனத் ...... தனதான

அன்பாக வந்து உன்றாள் பணிந்து

   ஐம்பூத மொன்ற ...... நினையாமல்

அன்பால் மிகுந்து நஞ்சாரு கண்க

   ளம்போரு கங்கள் ...... முலைதானும்

கொந்தே மிகுந்து வண்டாடி நின்று

   கொண்டாடு கின்ற ...... குழலாரைக்

கொண்டே நினைந்து மன்பேது மண்டி

   குன்றா மலைந்து ...... அலைவேனோ

மன்றாடி தந்த மைந்தா மிகுந்த

   வம்பார் கடம்பை ...... யணிவோனே

வந்தே பணிந்து நின்றார் பவங்கள்

   வம்பே தொலைந்த ...... வடிவேலா

சென்றே யிடங்கள் கந்தா எனும்பொ

   செஞ்சேவல் கொண்டு ...... வரவேணும்

செஞ்சாலி கஞ்ச மொன்றாய் வளர்ந்த

   செங்கோ டமர்ந்த ...... பெருமாளே.

 

586 பந்து ஆடி அம் கை  (திருச்செங்கோடு)

தந்தான தந்த தந்தான தந்த

   தந்தான தந்த ...... தனதான

   செங்கோட மர்ந்த ...... பெருமாளே.

  மங்காம லுன்ற ...... னருள்தாராய்

https://www.youtube.com/watch?v=g7_7l6uanFM

பந்தாடி யங்கை நொந்தார் பரிந்து

   பைந்தார் புனைந்த ...... குழல்மீதே

பண்பார் சுரும்பு பண்பாடு கின்ற

   பங்கே ருகங்கொள் ...... முகமீதே

மந்தார மன்றல் சந்தார மொன்றி

   வன்பாத கஞ்செய் ...... தனமீதே

மண்டாசை கொண்டு விண்டாவி நைந்து

   மங்காம லுன்ற ...... னருள்தாராய்

கந்தா அரன்றன் மைந்தா விளங்கு

   கன்றா முகுந்தன் ...... மருகோனே

கன்றா விலங்க லொன்றாறு கண்ட

   கண்டா வரம்பை ...... மணவாளா

செந்தா தடர்ந்த கொந்தார் கடம்பு

   திண்டோள் நிரம்ப ...... அணிவோனே

திண்கோ டரங்க ளெண்கோ டுறங்கு

   செங்கோட மர்ந்த ...... பெருமாளே.

 

598 காலனிடத்து (திருச்செங்கோடு)

தான தனத் ...... தனதான

https://www.youtube.com/watch?v=_B15pELalAk

காலனிடத் ...... தணுகாதே

காசினியிற் ...... பிறவாதே

சீலஅகத் ...... தியஞான

தேனமுதைத் ...... தருவாயே

மாலயனுக் ...... கரியானே

மாதவரைப் ...... பிரியானே

நாலுமறைப் ...... பொருளானே

நாககிரிப் ...... பெருமாளே.

 

599 தாமா தாம ஆலாபா  (திருச்செங்கோடு)

தானா தானா தானா தானா

   தானா தானத் ...... தனதான

......... பாடல் .........

தாமா தாமா லாபா லோகா

   தாரா தாரத் ...... தரணீசா

தானா சாரோ பாவா பாவோ

   நாசா பாசத் ...... தபராத

யாமா யாமா தேசா ரூடா

   யாரா யாபத் ...... தெனதாவி

யாமா காவாய் தீயே னீர்வா

   யாதே யீமத் ...... துகலாமோ

காமா காமா தீனா நீணா

   காவாய் காளக் ...... கிரியாய்கங்

காளா லீலா பாலா நீபா

   காமா மோதக் ...... கனமானின்

தேமார் தேமா காமீ பாகீ

   தேசா தேசத் ...... தவரோதுஞ்

சேயே வேளே பூவே கோவே

   தேவே தேவப் ...... பெருமாளே

 

602 பத்தர் கணப்ரிய  (திருச்செங்கோடு)

தத்தன தத்தன தத்தன தத்தன

     தத்தன தத்தன ...... தனதான

......... பாடல் .........

பத்தர்க ணப்ரிய நிர்த்தந டித்திடு

     பட்சிந டத்திய ...... குகபூர்வ

பச்சிம தட்சிண வுத்தர திக்குள

     பத்தர்க ளற்புத ...... மெனவோதுஞ்

சித்ரக வித்துவ சத்தமி குத்ததி

     ருப்புக ழைச்சிறி ...... தடியேனுஞ்

செப்பென வைத்துல கிற்பர வத்தெரி

     சித்தவ நுக்ரக ...... மறவேனே

கத்திய தத்தைக ளைத்துவி ழத்திரி

     கற்கவ ணிட்டெறி ...... தினைகாவல்

கற்றகு றத்திநி றத்தக ழுத்தடி

     கட்டிய ணைத்தப ...... னிருதோளா

சத்தியை யொக்கஇ டத்தினில் வைத்தத

     கப்பனு மெச்சிட ...... மறைநூலின்

தத்துவ தற்பர முற்றுமு ணர்த்திய

     சர்ப்பகி ரிச்சுரர் ...... பெருமாளே.

 

610 மனையவள் நகைக்க  (ஞானமலை)

தனதன தனத்த தான தனதன தனத்த தான

     தனதன தனத்த தான ...... தனதான

......... பாடல் .........

மனையவள் நகைக்க வூரி னனைவரு நகைக்க லோக

     மகளிரு நகைக்க தாதை ...... தமரோடும்

மனமது சலிப்ப நாய னுளமது சலிப்ப யாரும்

     வசைமொழி பிதற்றி நாளு ...... மடியேனை

அனைவரு மிழிப்ப நாடு மனவிருள் மிகுத்து நாடி

     னகமதை யெடுத்த சேம ...... மிதுவோவென்

றடியனு நினைத்து நாளு முடலுயிர் விடுத்த போது