sivasiva.org
Search this site with
song/pathigam/paasuram numbers
Or Tamil/English words

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  
5.058   திருநாவுக்கரசர்   தேவாரம்   5 th/nd Thirumurai (திருக்குறுந்தொகை   Location: திருப்பழையாறை வடதளி God: சோமேசுவரர் Goddess: சோமகலாநாயகியம்மை) திருப்பழையாறை வடதளி ; அருள்தரு சோமகலாநாயகியம்மை உடனுறை அருள்மிகு சோமேசுவரர் திருவடிகள் போற்றி )
Audio: https://www.youtube.com/watch?v=7xesNMOZbZs  
தலை எலாம் பறிக்கும் சமண்கையர் உள்-
நிலையினால் மறைத்தால் மறைக்க ஒண்ணுமே?
அலையின் ஆர் பொழில் ஆறை வடதளி
நிலையினான் அடியே நினைந்து உய்ம்மினே!


[ 1]


மூக்கினால் முரன்று ஓதி அக் குண்டிகை
தூக்கினார் குலம் தூர் அறுத்தே தனக்கு
ஆக்கினான் அணி ஆறை வடதளி
நோக்கினார்க்கு இல்லையால், அருநோய்களே.


[ 2]


குண்டரை, குணம் இல்லரை, கூறை இல்
மிண்டரை, துரந்த(வ்) விமலன் தனை;
அண்டரை; பழையாறை வடதளிக்
கண்டரை; தொழுது உய்ந்தன, கைகளே.


[ 3]


முடையரை, தலை முண்டிக்கும் மொட்டரை,
கடையரை, கடிந்தார்; கனல் வெண்மழுப்-
படையரை; பழையாறை வடதளி
உடையரை; குளிர்ந்து உள்கும், என் உள்ளமே.


[ 4]


ஒள் அரிக்கணார் முன் அமண் நின்று உணும்
கள்ளரைக் கடிந்த(க்) கருப்பு ஊறலை,
அள்ளல் அம் புனல் ஆறை வடதளி
வள்ளலை, புகழத் துயர் வாடுமே.


[ 5]


Go to top
நீதியைக் கெட நின்று அமணே உணும்
சாதியைக் கெடுமா செய்த சங்கரன்,
ஆதியை, பழையாறை வடதளிச்
சோதியை, தொழுவார் துயர் தீருமே.


[ 6]


திரட்டு இரைக்கவளம் திணிக்கும் சமண்-
பிரட்டரைப் பிரித்த(ப்) பெருமான் தனை,
அருள்-திறத்து அணி ஆறை வடதளித்
தெருட்டரை, தொழத் தீவினை தீருமே.


[ 7]


ஓது இனத்து எழுத்து அஞ்சு உணராச் சமண்
வேதனைப் படுத்தானை, வெங் கூற்று உதை
பாதனை, பழையாறை வடதளி
நாதனை, தொழ நம் வினை நாசமே.


[ 8]


வாய் இருந்தமிழே படித்து, ஆள் உறா
ஆயிரம்சமணும் அழிவு ஆக்கினான்
பாய் இரும் புனல் ஆறை வடதளி
மேயவன்(ன்) என வல்வினை வீடுமே.


[ 9]


செருத்தனைச் செயும் சேண் அரக்கன்(ன்) உடல்,
எருத்து, இற(வ்) விரலால் இறை ஊன்றிய
அருத்தனை; பழையாறை வடதளித்
திருத்தனை; தொழுவார் வினை தேயுமே.


[ 10]


Go to top

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருப்பழையாறை வடதளி
5.058   திருநாவுக்கரசர்   தேவாரம்   தலை எலாம் பறிக்கும் சமண்கையர்
Tune - திருக்குறுந்தொகை   (திருப்பழையாறை வடதளி சோமேசுவரர் சோமகலாநாயகியம்மை)

This page was last modified on Sat, 24 Feb 2024 17:27:32 +0000
          send corrections and suggestions to admin @ sivasiva.org   https://www.sivaya.org/thirumurai_song.php?lang=tamil&pathigam_no=5.058;