சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
Selected Thiruppugazh
Thiruppugazh Thalangal
All Thiruppugazh Songs
Thiruppugazh by Santham
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Spanish
Hebrew
Thiruppugazh from Thalam: குருடிமலை
613 கருடன் மிசைவரு
613
குருடிமலை கருடன் மிசைவரு தனன தனதன தனன தனதன
தனன தனதன ...... தனதான
கருடன் மிசைவரு கரிய புயலென
கமல மணியென ...... வுலகோரைக்
கதறி யவர்பெயர் செருகி மனமது
கருதி முதுமொழி ...... களைநாடித்
திருடி யொருபடி நெருடி யறிவிலர்
செவியில் நுழைவன ...... கவிபாடித்
திரியு மவர்சில புலவர் மொழிவது
சிறிது முணர்வகை ...... யறியேனே
வருடை யினமது முருடு படுமகில்
மரமு மருதமு ...... மடிசாய
மதுர மெனுநதி பெருகி யிருகரை
வழிய வகைவகை ...... குதிபாயுங்
குருடி மலையுறை முருக குலவட
குவடு தவிடெழ ...... மயிலேறுங்
குமர குருபர திமிர தினகர
குறைவி லிமையவர் ...... பெருமாளே. Add (additional) Audio/Video Link
This page was last modified on Thu, 09 May 2024 01:44:51 -0400