பலன் தரும் பாடல்கள்
Health & Safety |
இனந்தெரியாத நோய்கள் நீங்க; இரத்த அழுத்த, நீரிழிவு நோய்கள் நீங்க, போதைப் பொருள்களிருந்து மீள; கொல்லிமழவனின் மகவின் முயலகன் என்னும் பிணி போக்க வேண்டி சம்பந்தர் பாடியருளிய திருப்பாச்சிலாசிரமப் பதிகம். திருமுறை 1.044 துணி வளர் திங்கள் துளங்கி விளங்க, சுடர்ச்சடை சுற்றி முடித்து, பணி வளர் கொள்கையர், பாரிடம் சூழ, ஆர் இடமும் பலி தேர்வர்; அணி வளர் கோலம் எலாம் செய்து, பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற மணி வளர் கண்டரோ, மங்கையை வாட மயல் செய்வதோ இவர் மாண்பே? |
விஷ சுரம் , விஷக்கடி, தொண்டையில் உள்ள கோளாறுகள் நீங்க , செய்வினை , பில்லி , சூனியம் பாதிக்காமல் இருக்க கொடிமாடச் செங்குன்றூரில் தங்கியிருந்த சம்பந்தர் அங்கு அடியார்களை வாட்டிய குளிர்காய்ச்சலைப் போக்கியருள பாடிய திருநீலகண்டப்பதிகம் திருமுறை 1.116 அவ் வினைக்கு இவ் வினை ஆம் என்று சொல்லும் அஃது அறிவீர்! உய்வினை நாடாது இருப்பதும் உம்தமக்கு ஊனம் அன்றே? கை வினை செய்து எம்பிரான் கழல் போற்றுதும், நாம் அடியோம்; செய்வினை வந்து எமைத் தீண்டப்பெறா; திருநீலகண்டம்! |
பலவகை உடற்பிணிகள் அகல திருமுறை 2.047 |
எலும்பு முறிவு குணம் அடைவதற்கும் , இளம்பிள்ளை வாதம் , பக்க வாத நோய்கள் தீர்வதற்கு திருமுறை 3.072 விங்குவிளை கழனிமிகு கடைசியர்கள் பாடல்விளை யாடல்அரவம் மங்குலொடு நீள்கொடிகள் மாடமலி நீடுபொழில் மாகறலுளான் கொங்குவிரி கொன்றையொடு கங்கைவளர் திங்களணி செஞ்சடையினான் செங்கண்விடை யண்ணலடி சேர்பவர்கள் தீவினைகள் தீருமுடனே. |
வயிற்று வலி, குடல் தொடர்பான அனைத்துத் தொல்லைகளைப் நீங்க திருமுறை 4.001 கூற்றாயின வாறுவி லக்ககிலீர் கொடுமைபல செய்தன நானறியேன் ஏற்றாயடிக் கேஇர வும்பகலும் பிரியாது வணங்குவன் எப்பொழுதும் தோற்றாதென் வயிற்றின் அகம்படியே குடரோடு துடக்கி முடக்கியிட ஆற்றேன் அடியேன்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே |
உடல் உறுப்புகள் நலம் பெற திருமுறை 4.009 தலையே நீவணங்காய் - தலை
மாலை தலைக்கணிந்து தலையா லேபலி தேருந் தலைவனைத் தலையே நீவணங்காய் |
ஒவ்வாமை, பாம்பு, பூரான் விஷம் மற்றும் விஷக்கடி நீங்க
அரவம் தீண்டி மாண்ட அப்பூதி அடிகளாரின் மகனை மீண்டும் உயிர்ப்பித்தருள வேண்டி அப்பர் பெருமான் பாடிய பதிகம். திருமுறை 4.018 ஒன்று கொலாம் அவர் சிந்தை உயர் வரை ஒன்று கொலாம் உயரும் மதி சூடுவர் ஒன்று கொலாம் இடு வெண்தலை கையது ஒன்று கொலாம் அவர் ஊர்வது தானே |
இடக்கண் கோளாறு நீங்க ; சுந்தரமூர்த்தி சுவாமிகளின் கச்சியேகம்ப பதிகம் திருமுறை 7.061 ஆலம் தான் உகந்து அமுது செய்தானை; ஆதியை; அமரர் தொழுது ஏத்தும் சீலம் தான் பெரிதும்(ம்) உடையானை; சிந்திப்பார் அவர் சிந்தை உளானை; ஏல வார் குழலாள் உமை நங்கை என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற கால காலனை; கம்பன் எம்மானை; காணக் கண் அடியேன் பெற்ற ஆறே |
வலக்கண் உள்ள கோளாறு நீங்க சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருவாரூர் பதிகம் திருமுறை 7.095 மீளா அடிமை உமக்கே ஆளாய்ப் பிறரை வேண்டாதே மூளாத் தீப்போல் உள்ளே கனன்று முகத்தால் மிகவாடி ஆளாய் இருக்கும் அடியார் தங்கள் அல்லல் சொன்னக்கால் வாளாங் கிருப்பீர் திருவா ரூரீர் வாழ்ந்து போதீரே |
திக்குவாய் மாறிச் சீர் பெறுவதற்கு மாணிக்கவாசகர் தில்லையில் நல்கிய திருச்சாழல் திருமுறை 8.112 பூசுவதும் வெண்ணீறு பூண்பதுவும் பொங்கரவம் பேசுவதும் திருவாயால் மறைபோலுங் காணேடீ பூசுவதும் பேசுவதும் பூண்பதுவுங் கொண்டென்னை ஈசனவன் எவ்வுயிர்க்கும் இயல்பானான் சாழலோ |
வெப்பம் மிகுதியால் ஏற்படும் நோய்கள், உடல் சூடு நீங்கதிருமுறை 2.066 |
கொடிய மிருகங்கள், மனிதர்களளிடம் இருந்து தப்பிக்கதிருமுறை 4.011 |
கடல் மற்றும் நீரினால் வரும் துன்பங்களில் இருந்து தப்பிக்க திருமுறை 4.094 |
அபாயகரமான விஷங்கள், விஷ உணவு இவற்றின் இருந்து தப்பிக்க திருமுறை 4.002 |
கூன் நிமிற திருமுறை 3.054 |
நோய் நொடி இல்லாமல் இருக்க திருப்புகழ் 1027 |
நோய் நொடி இல்லாமல் இருக்க திருப்புகழ் 243 |
நோய் நொடி இல்லாமல் இருக்க திருப்புகழ் 790 |
நோய்கள் விலக அபிராமி அந்தாதி 24 |
மனநோய் அகல அபிராமி அந்தாதி 27 |
Marriage,Child & Relationship |
திருமணம் கைகூட திருமுறை 2.016 |
திருமணம் விரைவில் நிறைவேற திருமுறை 2.018 |
திருமணம் நிறைவேற திருப்புகழ் 101 |
திருமணம் நிறைவேற அபிராமி அந்தாதி 35 |
நல்ல வரன் அமையஅபிராமி அந்தாதி 17 |
குழந்தை பேறு- கருக் கலையாமல் பாதுகாக்க திருமுறை 3.046 |
மக்கட் செல்வம் வாய்க்க, வாதத்திறமை, எழுத்தாற்றல், தத்துவஞானத் தெளிவைப் பெறுவதற்கு திருமுறை 2.048 |
சுகப்பிரசவம் இனிதே நடைபெற திருமுறை 5.069 |
சுக பிரசவம் அமைவதற்கு திருமுறை 1.098 |
மகப்பேறு அடைய அபிராமி அந்தாதி 65 |
குழந்தைப் பேறு உண்டாக அபிராமி அந்தாதி 73 |
கணவன் மனைவி ஒற்றுமையுடன் வாழ திருமுறை 3.078 |
நல்ல நண்பரகள் நட்பு கிடைக்க திருமுறை 4.082 |
குழந்தை வரம் அருளும் திருப்புகழ் திருப்புகழ் 218 |
பிரிந்தவர் ஒன்று சேர அபிராமி அந்தாதி 2 |
பிள்ளைகள் நல்லவர்களாக வளர அபிராமி அந்தாதி 59 |
கணவன் மனைவி கருத்து வேற்றுமை நீங்க அபிராமி அந்தாதி 90 |
Financial & Economic Improvements |
பொருளாதார நிலை சீர் பெருவதற்கும் , வறுமை நீங்குவதற்கும் திருமுறை 3.004 |
ஆயுள் முழுவதும் எந்தவிதக் குறையும் இன்றி வாழ்வதற்கு. பஞ்சாக்கரத் திருப்பதிகம் திருமுறை 3.022 |
வழக்குகளில் வெல்ல - திருவீழிமிழலை என்ற சிவத்தலத்தில் பஞ்சம் ஏற்பட்ட போது அப்பருக்கும்; சம்பந்தருக்கும் படிக்காசு வழங்கியதும் ‘வாசி தீரவே காசு நல்குவீர்’ என்று ஆளுடைப்பிள்ளை பதிகம். திருமுறை 1.092 வாசி தீரவே; காசு நல்குவீர் மாசின் மிழலையீர்; ஏச லில்லையே. |
வழக்குகளில் வெற்றி பெற, கடன் தொல்லைகள் நீங்கி, கடன் பெறாமலே வாழ்வதற்கு திருமுறை 3.108 |
களவு போன பொருள்கள் மீண்டும் கிடைக்க திருமுறை 7.049 |
நிறைய பண வரவு பொன் கிடைக்க திருமுறை 7.087 |
நகைகள், முத்து மாலை, வைர நகைகள், பட்டாடைகள், வாசனைத் திரவியங்கள்,விருந்து உணவு கிடைக்க; அனைத்து சுக போகங்களும் கிடைக்க - சுந்தரர் திருவாரூரினின்றும் புறப்பட்டுத் திருநாகைக் காரோணத்துக்குச் சென்று இறைவனை இறைஞ்சி விலையுயர்ந்த அணிகலன்களும் பிறவும் வேண்டுமென்ற குறிப்புடன் திருப்பதிகம் பாடினார். இறைவன் அவருக்குப் பொன்னும் நவமணிகளும் நறு மணப் பொருள்களும் பட்டாடைகளும் விரைந்து செல்லும் குதிரை களும் பரிசாக வழங்கியருளினார் திருமுறை 7.046 பத்து ஊர் புக்கு, இரந்து, உண்டு, பலபதிகம் பாடி, பாவையரைக் கிறி பேசிப் படிறு ஆடித் திரிவீர்; செத்தார் தம் எலும்பு அணிந்து சே ஏறித் திரிவீர்; செல்வத்தை மறைத்து வைத்தீர்; எனக்கு ஒரு நாள் இரங்கீர்; முத்து ஆரம், இலங்கி-மிளிர் மணிவயிரக் கோவை-அவை, பூணத் தந்து அருளி, மெய்க்கு இனிதா நாறும் கத்தூரி கமழ் சாந்து பணித்து அருள வேண்டும் கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே! |
பஞ்சத்தின் போதும் நல்ல உணவு கிடைக்க தலம் திருக்கோளிலி ஆகும். குண்டையூர் கிழார் என்பவர் ஒரு சிறந்த சிவபக்தர். அவர்; சுந்தரர் வரவையொட்டி மலைபோல் நெல் மூட்டைகளை அன்புடன் அளித்தார். இவற்றை எவ்வாறு திருவாரூர் எடுத்துச்சென்று தன் வீட்டில் சேர்ப்பது என்ற வழி தெரியாமல் சுந்தரர் விழித்தார். பிறகு இப்பிரச்னைக்கு தீர்வுகாண கோளிலிநாதரிடம் பதிகம் பாடி; நெல் மூட்டைகளை திருவாரூர் எடுத்துச்செல்ல வகை செய்யுமாறு வேண்டிக்கொண்டார். திருமுறை 7.020 நீள நினைந்தடி யேனுமை நித்தலுங் கைதொழுவேன் வாளன கண்மட வாளவள் வாடி வருந்தாமே கோளிலி எம்பெரு மான்குண்டை யூர்ச்சில நெல்லுப்பெற்றேன் ஆளிலை எம்பெரு மானவை அட்டித் தரப்பணியே |
சாப்பாடு குறைவின்றி கிடைக்க. உணவிற்கு முன் கூற வேண்டிய பாடல் திருமுறை 5.001 |
உணவும் , உடையும் குறைவின்றிக் கிடைப்பதற்க்கு திருமுறை 7.034 |
கைக்கு கிடைத்த பொருள் கை ந்ழுவிப் போனால் மீண்டும் கிடைக்க திருமுறை 7.025 |
செல்வத்தை ஒர் இடத்தி இருந்து பத்திரமாக அடுத்த இடத்திற்கு கொண்டு போக திருமுதுகுன்றத்தில் வழங்கிய பொன்னை, திருவாரூரில் தரும் படி வேண்டிக் கொண்டார். அப்பொழுது இப் பொன்னெல்லாவற்றையும் மணிமுத்தாற்றிலிட்டுத் திருவாரூர்க் குளத்தில் எடுத்துக் கொள்க என்றதோர் அருள் வாக்கு எழுந்தது. திருமுறை 7.090 மடித்து ஆடும் அடிமைக்கண் அன்றியே, மனனே! நீ வாழும் நாளும் தடுத்து ஆட்டி, தருமனார் தமர் செக்கில் இடும்போது தடுத்து ஆட்கொள்வான்; கடுத்து ஆடு கரதலத்தில் தமருகமும், எரி அகலும்; கரிய பாம்பும் பிடித்து ஆடி; புலியூர்ச் சிற்றம்பலத்து எம்பெருமானைப் பெற்றாம் அன்றே! |
நவமணிகளைப் பெற அபிராமி அந்தாதி 37 |
கடன் தொல்லைகள் தீர அபிராமி அந்தாதி 54 |
அரசாங்கச் செயலில் வெற்றி பெற அபிராமி அந்தாதி 91 |
சகல செல்வங்களையும் அடைய அபிராமி அந்தாதி 78 |
வறுமை ஒழிய அபிராமி அந்தாதி 57 |
வீடு வாசல் முதலிய செல்வங்கள் உண்டாக அபிராமி அந்தாதி 20 |
உயர் பதவிகளை அடைய அபிராமி அந்தாதி 4 |
தலைமை பெற அபிராமி அந்தாதி 14 |
எங்கும் தலைமையும் புகழும் பெற அபிராமி அந்தாதி 96 |
பெருஞ்செல்வமும் பேரின்பமும் பெறஅபிராமி அந்தாதி 15 |
நிலம் வீடு போன்ற செல்வங்கள் பெருக அபிராமி அந்தாதி 68 |
Rain |
மழை வேண்டல் பதிகம் சுந்தரமூர்த்திசுவாமிகள் திருப்புன்கூருக்கெழுந்தருளியபோது அந்தத்தலத்தார் கண்டு தொழுது சுவாமீ! இங்கு நெடுநாளாக மழைபொழிதலின்றி வருந்துகிறோம்; ஆதலால் கிருபைபாலிக்கவேண்டுமென்று விண்ணப்பஞ்செய்ய; மழைபொழிந்தால் சுவாமிக்கியாது தருவீர்களென்ன; அவர்கள் பன்னிரண்டு வேலி நிலந்தருகிறோமென்னக் கிருபை கூர்ந்து இந்தப்பதிகமோதியருளலும்; மழை அதிகமாய்ப்பெய்ய அவர்களுடையவேண்டுதலினால் மழை தணிந்து பெய்யும்படிசெய்து முன்னமவர்கள் சொல்லிய பன்னிரண்டுவேலி நிலமேயன்றி மீட்டும் பன்னிரண்டுவேலி நிலங்கொடுக்கப்பெற்றருளியது.. சீன தேச யாத்திரிகரொரு வர் எ ழு தி யு ள் ள யாத்திரைக்குறிப்பில் தமிழ் நாட்டில் இராசசிம்ம பல்லவன் ஆட்சிக்காலத்தில் பஞ்சம் ஒன்று ஏற்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்
திருமுறை 7.055 வையக முற்று மாமழை மறந்து வயலில் நீரிலை மாநிலந் தருகோம் உய்யக் கொள்கமற் றெங்களை யென்ன ஒளிகொள் வெண்முகி லாய்ப்பரந் தெங்கும் பெய்யு மாமழைப் பெருவெள்ளந் தவிர்த்துப் பெயர்த்தும் பன்னிரு வேலிகொண் டருளும் செய்கை கண்டுநின் திருவடி யடைந்தேன் செழும்பொ ழில்திருப் புன்கூரு ளானே |
விவசாயம் செழிக்க, செடி கொடிகள், மலர்கள் வளர, மலர, நல்ல கனிகள் கிடைக்க திருமுறை 1.054 |
மழை பொழிய திருப்புகழ் 579 |
சிறந்த நன்செய் நிலங்கள் கிடைக்க அபிராமி அந்தாதி 34 |
Arts, Education & Arts |
கல்வியில் சிறந்து விளங்க திருமுறை 1.128 |
கல்வியில் திறம்பெற்று உயர்வதற்கு திருமுறை 2.031 |
நல்ல இசைக் குழு அமைய திருமுறை 1.080 |
நல்ல தாளம், இசை கை வர திருமுறை 1.023 |
பேரறிவாளனாக திருப்புகழ் 923 |
கலைகளில் சித்தி பெற அபிராமி அந்தாதி 70 |
Personal issues |
சனி, இராகு, கேது பெயர்ச்சி, கோள்களால் ஏற்படும் துன்பங்கள் நீங்கி நிம்மதியான வாழ்க்கை வாழ. திருமுறை 2.085 |
நீண்ட நாள் தடைப்பட்டிற்கும் விஷயங்கள் விலக திருமுறை 2.111 |
முன் பிறப்பு நல் வினை கை கூட, இறைவன் அருள் பெறதிருமுறை 1.001 |
வினை நீக்கம் - சனிக்கிரக தாக்குதல் நீங்க திருமுறை 1.049 |
இடர்களையும் பதிகம்; அவமானங்கள், வீண்பழி காரியத்திலும் தடை ஆகியனவற்றைத் தடுப்பதற்கு. திருச்சி அருகில் துவாக்குடியிலிருந்து திருநெடுங்களத்தை அடைந்து வழிபட்டு இடும்பை தீர்த்தருள்வாய் என வேண்டி மறையுடையாய் என்னும் இத்திருப்பதிகத்தை அருளிச்செய்தார்கள் திருமுறை 1.052 மறையுடையாய் தோலுடையாய் வார்சடைமேல் வளரும் பிறையுடையாய் பிஞ்ஞகனே யென்றுனைப்பே சினல்லால் குறையுடையார் குற்றமோராய் கொள்கையினா லுயர்ந்த நிறையுடையா ரிடர்களையாய் நெடுங்களமே யவனே. |
வினை நீக்கம் - கேட்பவர் வினை நீங்க திருமுறை 2.072 |
வழிப் பயணம் தடை இல்லாமல் நிறைவு பெற - சம்பந்தர் தம் அடியார்களுடன் கொள்ளம்புதூர் இறைவனை தரிசிக்க திருக்கொள்ளம்புதூர் வரும் போது காவிரி ஆற்றின் கிளை நதிகளில் ஒன்றான முள்ளியாற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடிக்கொண்டிருந்தது. அக்கரையில் உள்ள கொள்ளம்புதூர் ஆலயத்திற்குச் செல்ல ஓடக்காரன் ஒருவரும் காணப்படவில்லை. அப்போது சம்பந்தர் கொள்ளம்புதூர் இறைவனை எண்ணித் துதித்து ஓடக்காரன் இல்லாமலேயே ஓடத்தில் தம் அடியார்களுடன் ஏறி கொட்ட மேகமழுங் கொள்ளம் பூதூர் என்று தொடங்கும் பதிகம் பாடினார். இறைவனின் திருவருளால் ஓடமும் தானாகவே வெள்ளத்தில் ஓடி சம்பந்தரையும் அவர்தம் அடியார்களையும் அக்கரை கொண்டு சேர்த்தது. திருமுறை 3.006
கொட்டமே கமழும் கொள்ளம்பூதூர் நட்டம் ஆடிய நம்பனை உள்கச் செல்ல உந்துக சிந்தையார் தொழ நல்குமாறு அருள் நம்பனே. |
நம் தீவினைகள் அகல, நாம் செய்த பாவங்கள் நீங்க, மற்றும் இறைவன் அடி கிடைக்க திருமுறை 3.049 |
பகைவர்கள் தொல்லைகள் நீங்க , நெருப்பு தொல்லைகளில் இருந்து விடுபட, சிறை வாசம் தடுக்க, சிறையில் இருந்து விடுபட சம்பந்தர் மதுரை வந்தடைந்ததை அறிந்த சமணர்கள்; சம்பந்தரும் அடியார்களும் தங்கியிருந்த திருமடத்தை மந்திரத்தால் தீ மூட்டி எரிக்க முயன்றனர். அப்படி நிகழாததால்; திருஞான சம்பந்தர் தங்கியிருந்த திருமடத்தில் இரவு நேரத்தில் தழல்கொண்டு புகுந்து தீமூட்டினர். அடியவர்கள் விரைந்து தீயை அணைத்தனர். அமணர்களே இப்பாதகத்தைச் செய்தவர்கள் என்று தெளிந்து; அதனைச் சம்பந்தரிடம் சொன்னார்கள். பாண்டியநாட்டில் ஆட்சி முறை தவறியது என்று சம்பந்தர் எண்ணினார். இதன் பொறுப்பு அரசனையே சேரும் என்னும் விதிமுறையால்; சைவர்கள் தங்கியிருந்த மடத்தில் இட்ட நெருப்பானது; பையவே சென்று பாண்டியனுக்கு ஆகுக என்று இத்திருப்பதிகத்தைப் பாடியருளினார். திருமுறை 3.051 செய்ய னேதிரு ஆலவாய் மேவிய ஐய னேயஞ்ச லென்றருள் செய்யெனைப் பொய்ய ராம்அம ணர்கொளு வுஞ்சுடர் பைய வேசென்று பாண்டியற் காகவே. |
திருத்தல பயணங்கள் இனிதே சிரமங்கள் இன்றி நடக்கதிருமுறை 3.073 |
திருமணம் மற்றும் சுப நிகழ்வுகலில் வாழ்த்துவதற்கான பாடல். அமைதியுடனும் வாழ்வதற்கும்
ஞானசம்பந்தர் மதுரையில் தங்கியிருக்கும் நாளில் அவரைக் காண விரும்பிய பெற்றோர் மதுரை வந்தார். அப்பொழுது ஞானசம்பந்தர் வணங்கிப் பாடிய திருக்கழுமலப் பதிகம் திருமுறை 3.024 மண்ணின்நல் லவண்ணம் வாழலாம் வைகலும் எண்ணின்நல் லகதிக்கி யாதுமோர் குறைவிலை கண்ணினல் லஃதுறுங் கழுமல வளநகர்ப் பெண்ணினல் லாளொடும் பெருந்தகை யிருந்ததே. |
கடந்த கால துயற சம்பவங்களில் இருந்து மீள திருமுறை 4.109 |
கடந்த கால துயற சம்பவங்களில் இருந்து மீள திருமுறை 5.003 |
சினம், பகை, சிரிப்பவர்களிடமிருந்து காப்பற்றும் திருப்புகழ் 269 |
வஞ்சகர் செயல்களிலிருந்து பாதுகாப்பு பெற அபிராமி அந்தாதி 98 |