|  Back to Top  திருநாவுக்கரசர்    தேவாரம்
 4 -ஆம் திருமுறை   பதிகம்  4.002  
 சுண்ணவெண் சந்தனச் சாந்தும், சுடர்த்
 பண் - காந்தாரம்   (திருவதிகை வீரட்டானம்  வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி)
 பிறகு சமணர்கள் ஒன்றுகூடி மன்னனிடம் சென்று நம் சமயச் சார்பில் பெற்ற சாதகத்தால் இவன் சாவாது பிழைத்திருக்கின்றான், இனி விடம் ஊட்டுவதே தரத்தக்க தண்டனை என்று கூறினர். அரசனும் இசைந்தனன். கொலை பாதகத்திற்கும் அஞ்சாத அக்கொடி யோர் விடங்கலந்த பாற்சோற்றைத் திருநாவுக்கரசர்க்கு அளித்து உண்ணும்படிச் செய்தனர். எம்பிரான் அடியார்க்கு நஞ்சும் அமுதாம் என்றுகூறி அதை உண்டு எவ்விதத் தீங்கும் அடையாமல் விளங்கினார் அடிகள். திருப்பாற்கடலில் தோன்றிய ஆலகாலவிடம் சிவபெரு மானுக்கு அமுதமாக ஆயிற்று. அவனடியார்க்கு நஞ்சு அமுதாயிற்று. நஞ்சும் இவனுக்கு அமுதாயிற்று. இவன் பிழைப்பானாகில் இனி, நமக்கு இறுதி வருவது உறுதி என்றெண்ணி முன்போல் அரசன் பாற் சென்று நம் சமயத்திற் கற்ற மந்திர வலிமையால் உயிர் பிழைத் தான், அவன் இறவாதிருந்தால் எங்கள் உயிரும் நும் அரசாட்சியும் அழிவது திண்ணம், என்று கூறினர். மத யானையை விடுத்து இடறச் செய்வதே தண்டனை என்று தீர்மானிக்கப்பெற்றது. குன்றுபோல் விளங்கிய மதயானை கூடத்தை விட்டுப் புறப்பட்டது. பயங்கரமான அந்த யானை திருநாவுக்கரசரை இன்று காலால் இடறிச் சிதறிவிடும் என்றே எல்லோரும் எண்ணினர். திருநாவுக்கரசர் சுண்ணவெண் சந்தனச்சாந்தும் என்று தொடங்கித் திருப்பதிகம்பாடி யானையுரித்த பிரான் கழல்போற்றியிருந்தார். மதயானை மும்முறை வலம்வந்து வீழ்ந்து வணங்கித் தன்னை ஏவிய பாகரையும் சமணரையும் மிதித்துக் கொன்று சென்றது.
 அபாயகரமான விஷங்கள்,  விஷ உணவு  இவற்றின் இருந்து தப்பிக்க
 
   
| சுண்ணவெண் சந்தனச் சாந்தும், சுடர்த் திங்கள் சூளாமணியும், வண்ண இரிவை உடையும், வளரும் பவள நிறமும்,
 அண்ணல் அரண் முரண் ஏறும், அகலம் வளாய அரவும்,
 திண்ணென் கெடிலப் புனலும், உடையார் ஒருவர் தமர், நாம்!-
 அஞ்சுவது யாதொன்றும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை.
 
 
 | [1] |    
| பூண்டது ஒர் கேழல் எயிறும், பொன் திகழ் ஆமை புரள, நீண்ட திண் தோள் வலம் சூழ்ந்து நிலாக் கதிர் போல வெண் நூலும்,
 காண் தகு புள்ளின் சிறகும், கலந்த கட்டங்கக் கொடியும்,
 ஈண்டு கெடிலப் புனலும், உடையார் ஒருவர் தமர், நாம்!-
 அஞ்சுவது யாதொன்றும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை.
 
 
 | [2] |    
| ஒத்த வடத்து இள நாகம் உருத்திர பட்டம் இரண்டும், முத்துவடக் கண்டிகையும், முளைத்து, எழு மூ இலை வேலும்,
 சித்த வடமும், அதிகைச் சேண் உயர் வீரட்டம் சூழ்ந்து
 தத்தும் கெடிலப் புனலும், உடையார் ஒருவர் தமர், நாம்!
 அஞ்சுவது யாதொன்றும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை
 
 
 
 
 | [3] |    
| மடமான் மறி, பொன் கலையும், மழு, பாம்பு, ஒரு கையில் வீணை, குடமால் வரைய திண் தோளும், குனி சிலைக் கூத்தின் பயில்வும்,
 இடம் மால் தழுவிய பாகம், இரு நிலன் ஏற்ற சுவடும்,
 தடம் ஆர் கெடிலப் புனலும், உடையார் ஒருவர் தமர், நாம்!-
 அஞ்சுவது யாதொன்றும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை.
 
 
 
 
 | [4] |    
| பலபல காமத்தர் ஆகிப் பதைத்து எழுவார் மனத்துள்ளே கலமலக்கிட்டுத் திரியும் கணபதி என்னும் களிறும்,
 வலம் ஏந்து இரண்டு சுடரும், வான் கயிலாயமலையும்,
 நலம் ஆர் கெடிலப்புனலும், உடையார் ஒருவர் தமர், நாம்!
 அஞ்சுவது யாதென்றும் இல்லை: அஞ்ச வருவதும் இல்லை.
 
 
 
 
 | [5] |    
| கரந்தன கொள்ளி விளக்கும், கறங்கு துடியின் முழக்கும், பரந்த பதினெண் கணமும், பயின்று அறியாதன பாட்டும்,
 அரங்கு இடை நூல் அறிவாளர் அறியப்படாதது ஒர் கூத்தும்,
 நிரந்த கெடிலப் புனலும், உடையார் ஒருவர் தமர், நாம்!-
 அஞ்சுவது யாதொன்றும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை.
 
 
 
 
 | [6] |    
| கொலை வரி வேங்கை அதளும், குலவோடு இலங்கு பொன் தோடும், விலை பெறு சங்கக் குழையும், விலை இல் கபாலக் கலனும்,
 மலைமகள் கைக்கொண்ட மார்பும், மணி ஆர்ந்து இலங்கு மிடறும்,
 உலவு கெடிலப்புனலும், உடையார் ஒருவர் தமர், நாம்!-
 அஞ்சுவது யாதொன்றும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை.
 
 
 
 
 | [7] |    
| ஆடல் புரிந்த நிலையும், அரையில் அசைத்த அரவும், பாடல் பயின்ற பல் பூதம், பல் ஆயிரம் கொள் கருவி
 நாடற்கு அரியது ஒர் கூத்தும், நன்கு உயர் வீரட்டம் சூழ்ந்து
 ஓடும் கெடிலப்புனலும், உடையார் ஒருவர் தமர், நாம்!-
 அஞ்சுவது யாதொன்றும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை.
 
 
 | [8] |    
| நரம்பு எழு கைகள் பிடித்து, நங்கை நடுங்க, மலையை உரங்கள் எல்லாம் கொண்டு எடுத்தான் ஒன்பதும் ஒன்றும் அலற,
 வரங்கள் கொடுத்து அருள் செய்வான், வளர் பொழில் வீரட்டம் சூழ்ந்து
 நிரம்பு கெடிலப்புனலும் உடையார் ஒருவர் தமர், நாம்!-
 அஞ்சுவது யாதொன்றும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை.
 
 
 | [9] |    
Back to Top| சூழும் அரவத்துகிலும், துகில் கிழி கோவணக்கீளும், யாழின் மொழியவள் அஞ்ச அஞ்சாது அரு வரை போன்ற
 வேழம் உரித்த நிலையும், விரி பொழில் வீரட்டம் சூழ்ந்து
 தாழும் கெடிலப்புனலும், உடையார் ஒருவர் தமர், நாம்!-
 அஞ்சுவது யாதொன்றும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை.
 
 
 | [10] |  நம பார்வதி பதயே ஹர ஹர மஹா தேவா
 தென் நாடு உடைய சிவனே, போற்றி! எந் நாட்டவர்க்கும் இறைவா, போற்றி!
 காவாய் கனகத் திரளே போற்றி! கயிலை மலையானே போற்றி போற்றி
 Back to Top
 
 
 This page was last modified on Fri, 15 Dec 2023 17:32:56 +0000
 
 |  |