சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     
Thirumurai
3.118   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   மடல் மலி கொன்றை, துன்று
பண் - புறநீர்மை   (சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
Audio: https://www.youtube.com/watch?v=3NHdU16ZGyQ
3.119   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   புள்ளித்தோல் ஆடை; பூண்பது நாகம்;
பண் - புறநீர்மை   (திருவீழிமிழலை வீழியழகர் சுந்தரகுசாம்பிகை)
Audio: https://www.youtube.com/watch?v=SHdSlTNbgx0
3.120   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   மங்கையர்க்கு அரசி வளவர்கோன் பாவை,
பண் - புறநீர்மை   (திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=z2C_j--RpY8
Audio: https://sivaya.org/audio/3.120 Mangayarkarasi.mp3
Audio: https://sivaya.org/audio/3.120 mangayarkarasi.mp3
3.121   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   இடறினார், கூற்றை; பொடிசெய்தார், மதிலை;
பண் - புறநீர்மை   (திருப்பந்தணைநல்லூர் )
Audio: https://www.youtube.com/watch?v=X4yCT_uyCfI
3.122   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   பூங்கொடி மடவாள் உமை ஒருபாகம்
பண் - புறநீர்மை   (திருஓமாம்புலியூர் )
Audio: https://www.youtube.com/watch?v=7Fgqyypgt5U
3.123   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   நிரை கழல் அரவம் சிலம்பு
பண் - புறநீர்மை   (திருக்கோணமலை கோணீசர் மாதுமையம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=EwSCSulZrO4
6.094   திருநாவுக்கரசர்   தேவாரம்   இரு நிலன் ஆய், தீ
பண் - புறநீர்மை   (நின்றத் திருத்தாண்டகம் )
Audio: https://www.youtube.com/watch?v=9kNln4y0aWI
7.083   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   அந்தியும் நண்பகலும் அஞ்சுபதம் சொல்லி,
பண் - புறநீர்மை   (திருவாரூர் வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=8uhZK3m-azs
7.084   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   தொண்டர் அடித்தொழலும், சோதி இளம்பிறையும்,
பண் - புறநீர்மை   (திருக்கானப்பேர் (திருக்காளையார்கோயில்) காளைநாதேசுவரர் பொற்கொடியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=Ceuz_bdSEns
7.085   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   வடிவு உடை மழு ஏந்தி,
பண் - புறநீர்மை   (திருக்கூடலையாற்றூர் நெறிகாட்டுநாயகர் புரிகுழலாளம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=gXWUvgdaVZ4
8.120   மாணிக்க வாசகர்    திருவாசகம்   திருப்பள்ளியெழுச்சி - போற்றியென் வாழ்முத
பண் - புறநீர்மை (பூபாளம்‌)   (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
Audio: https://sivaya.org/thiruvaasagam/20 Thirupalliyelluchi Thiruvasagam.mp3

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3.118   மடல் மலி கொன்றை, துன்று  
பண் - புறநீர்மை   (திருத்தலம் சீர்காழி ; (திருத்தலம் அருள்தரு திருநிலைநாயகி உடனுறை அருள்மிகு பிரமபுரீசர் திருவடிகள் போற்றி )
மடல் மலி கொன்றை, துன்று வாள் எருக்கும், வன்னியும்,
மத்தமும், சடைமேல்
படல் ஒலி திரைகள் மோதிய கங்கைத் தலைவனார்தம் இடம் பகரில்,
விடல் ஒலி பரந்த வெண்திரை முத்தம் இப்பிகள்
கொணர்ந்து, வெள் அருவிக்
கடல் ஒலி ஓதம் மோத, வந்து அலைக்கும் கழுமலநகர் எனல் ஆமே.

[1]
மின்னிய அரவும், வெறிமலர்பலவும், விரும்பிய திங்களும், தங்கு
சென்னி அது உடையான், தேவர்தம் பெருமான்,
சேயிழையொடும் உறைவு இடம் ஆம்
பொன் இயல் மணியும், முரி கரிமருப்பும், சந்தமும், உந்து வன் திரைகள்
கன்னியர் ஆட, கடல் ஒலி மலியும் கழுமலநகர் எனல் ஆமே.

[2]
சீர் உறு தொண்டர், கொண்டு அடி போற்ற, செழு மலர்
புனலொடு தூபம்;
தார் உறு கொன்றை தம் முடி வைத்த சைவனார் தங்கு இடம் எங்கும்
ஊர் உறு பதிகள் உலகு உடன் பொங்கி ஒலிபுனல்
கொள, உடன்மிதந்த,
கார் உறு செம்மை நன்மையால் மிக்க கழுமலநகர் எனல்
ஆமே.

[3]
மண்ணினார் ஏத்த, வான் உளார் பரச, அந்தரத்து அமரர்கள் போற்ற,
பண்ணினார் எல்லாம்; பலபல வேடம் உடையவர்; பயில்வு இடம் எங்கும்
எண்ணினால் மிக்கார், இயல்பினால் நிறைந்தார்,
ஏந்திழையவரொடு மைந்தர்
கண்ணினால் இன்பம் கண்டு, ஒளி பரக்கும் கழுமலநகர்
எனல் ஆமே.

[4]
சுருதியான் தலையும், நாமகள் மூக்கும், சுடரவன் கரமும், முன் இயங்கு
பருதியான் பல்லும், இறுத்து அவர்க்கு அருளும் பரமனார்
பயின்று இனிது இருக்கை
விருதின் நால்மறையும், அங்கம் ஓர் ஆறும், வேள்வியும்
வேட்டவர், ஞானம்
கருதினார், உலகில் கருத்து உடையார், சேர் கழுமலநகர்
எனல் ஆமே.

[5]
புற்றில் வாள் அரவும் ஆமையும் பூண்ட புனிதனார்,
பனிமலர்க்கொன்றை
பற்றி வான்மதியம் சடை இடை வைத்த படிறனார், பயின்று இனிது இருக்கை
செற்று வன் திரைகள் ஒன்றொடு ஒன்று ஓடிச் செயிர்த்து,
வண் சங்கொடு வங்கம்
கல்-துறை வரை கொள் கரைக்கு வந்து உரைக்கும்
கழுமலநகர் எனல் ஆமே.

[6]
அலை புனல் கங்கை தங்கிய சடையார், அடல் நெடுமதில் ஒருமூன்றும்
கொலை இடைச் செந்தீ வெந்து அறக் கண்ட குழகனார், கோயிலது என்பர்
மலையின் மிக்கு உயர்ந்த மரக்கலம் சரக்கு மற்றுமற்று இடை இடை எங்கும்
கலை களித்து ஏறிக் கானலில் வாழும் கழுமலநகர் எனல் ஆமே.

[7]
ஒருக்க முன் நினையாத் தக்கன்தன் வேள்வி உடைதர
உழறிய படையர்
அரக்கனை வரையால் ஆற்றல் அன்று அழித்த அழகனார்,
அமர்ந்து உறை கோயில்
பரக்கும் வண்புகழார் பழி அவை பார்த்துப் பலபல
அறங்களே பயிற்றி,
கரக்கும் ஆறு அறியா வண்மையால் வாழும் கழுமலநகர்
எனல் ஆமே.

[8]
அரு வரை பொறுத்த ஆற்றலினானும், அணி கிளர் தாமரையானும்,
இருவரும் ஏத்த, எரிஉரு ஆன இறைவனார் உறைவு இடம் வினவில்,
ஒருவர் இவ் உலகில் வாழ்கிலா வண்ணம் ஒலிபுனல்
வெள்ளம் முன் பரப்ப,
கருவரை சூழ்ந்த கடல் இடை மிதக்கும் கழுமலநகர் எனல் ஆமே.

[9]
உரிந்து உயர் உருவில் உடை தவிர்ந்தாரும், அத் துகில்
போர்த்து உழல்வாரும்,
தெரிந்து புன் மொழிகள் செப்பின கேளாச் செம்மையார்
நன்மையால் உறைவு ஆம்
குருந்து, உயர் கோங்கு, கொடிவிடு முல்லை, மல்லிகை, சண்பகம், வேங்கை,
கருந்தடங்கண்ணின் மங்கைமார் கொய்யும் கழுமலநகர்
எனல் ஆமே.

[10]
கானல் அம் கழனி ஓதம் வந்து உலவும் கழுமல நகர் உறைவார்மேல்
ஞானசம்பந்தன் நல்-தமிழ்மாலை நன்மையால் உரை செய்து நவில்வார்
ஊன சம்பந்தத்து உறு பிணி நீங்கி, உள்ளமும் ஒருவழிக் கொண்டு
வான் இடை வாழ்வர்; மண்மிசைப் பிறவார்; மற்று இதற்கு
ஆணையும் நமதே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3.119   புள்ளித்தோல் ஆடை; பூண்பது நாகம்;  
பண் - புறநீர்மை   (திருத்தலம் திருவீழிமிழலை ; (திருத்தலம் அருள்தரு சுந்தரகுசாம்பிகை உடனுறை அருள்மிகு வீழியழகர் திருவடிகள் போற்றி )
புள்ளித்தோல் ஆடை; பூண்பது நாகம்; பூசு சாந்தம் பொடி-நீறு;
கொள்ளித்தீ விளக்கு; கூளிகள் கூட்டம்; காளியைக் குணம்
செய் கூத்து உடையோன்-
அள்ளல் கார் ஆமை அகடு வான்மதியம் ஏய்க்க,
முள்-தாழைகள் ஆனை
வெள்ளைக்கொம்பு ஈனும் விரி பொழில் வீழிமிழலையான்
என, வினை கெடுமே.

[1]
இசைந்த ஆறு அடியார் இடு துவல், வானோர் இழுகு
சந்தனத்து இளங் கமலப்
பசும்பொன் வாசிகைமேல் பரப்புவாய்; கரப்பாய், பத்தி
செய்யாதவர் பக்கல்;
அசும்பு பாய் கழனி அலர் கயல் முதலோடு அடுத்து
அரிந்து எடுத்த வான் சும்மை
விசும்பு தூர்ப்பன போல் விம்மிய வீழிமிழலையான்! என, வினை கெடுமே.

[2]
நிருத்தன், ஆறு அங்கன், நீற்றன், நால்மறையன், நீலம்
ஆர் மிடற்றன், நெற்றிக்கண்
ஒருத்தன், மற்று எல்லா உயிர்கட்கும் உயிர் ஆய் உளன்,
இலன், கேடு இலி, உமைகோன்-
திருத்தம் ஆய் நாளும் ஆடு நீர்ப் பொய்கை, சிறியவர்
அறிவினின் மிக்க
விருத்தரை அடி வீழ்ந்து இடம் புகும் வீழிமிழலையான்
என, வினை கெடுமே.

[3]
தாங்க(அ)ருங் காலம் தவிர வந்து இருவர் தம்மொடும்
கூடினார் அங்கம்
பாங்கினால்-தரித்துப் பண்டு போல் எல்லாம் பண்ணிய
கண்நுதல் பரமர்
தேம் கொள் பூங் கமுகு, தெங்கு, இளங் கொடி, மா,
செண்பகம், வண் பலா, இலுப்பை,
வேங்கை, பூ மகிழால், வெயில் புகா வீழிமிழலையான்
என, வினை கெடுமே.

[4]
கூசு மா மயானம் கோயில் வாயில்கண் குடவயிற்றன சிலபூதம்,
பூசு மா சாந்தம் பூதி, மெல்லோதி பாதி, நன் பொங்கு
அரவு அரையோன்-
வாசம் ஆம் புன்னை, மௌவல், செங்கழுநீர், மலர்
அணைந்து எழுந்த வான் தென்றல்
வீசு மாம்பொழில் தேன் துவலை சேர்-வீழிமிழலையான்
என, வினை கெடுமே.

[5]
பாதி ஓர் மாதர், மாலும் ஓர்பாகர், பங்கயத்து அயனும் ஓர் பாலர்
ஆதிஆய் நடு ஆய் அந்தம் ஆய் நின்ற அடிகளார்,
அமரர்கட்கு அமரர்,
போது சேர் சென்னிப் புரூரவாப் பணி செய் பூசுரர், பூமகன் அனைய
வேதியர், வேதத்து ஒலி அறா வீழிமிழலையான் என,
வினை கெடுமே.

[6]
தன் தவம் பெரிய சலந்தரன் உடலம் தடிந்த சக்கரம்
எனக்கு அருள்! என்று
அன்று அரி வழிபட்டு இழிச்சிய விமானத்து இறையவன்,
பிறை அணி சடையன்-
நின்ற நாள் காலை, இருந்த நாள் மாலை, கிடந்த
மண்மேல் வரு கலியை
வென்ற வேதியர்கள் விழா அறா வீழிமிழலையான் என,
வினை கெடுமே.

[7]
கடுத்த வாள் அரக்கன் கயிலை அன்று எடுத்த கரம் உரம்
சிரம் நெரிந்து அலற,
அடர்த்தது ஓர்விரலால், அஞ்சுஎழுத்து உரைக்க அருளினன், தட மிகு நெடுவாள்
படித்த நால்மறை கேட்டு இருந்த பைங்கிளிகள் பதங்களை
ஓத, பாடு இருந்த
விடைக்குலம் பயிற்றும் விரிபொழில் வீழிமிழலையான் என,
வினை கெடுமே.

[8]
அளவு இடல் உற்ற அயனொடு மாலும் அண்டம் மண்
கிண்டியும் காணா
முளை எரி ஆய மூர்த்தியை, தீர்த்தம் முக்கண் எம்
முதல்வனை, முத்தை,
தளை அவிழ் கமலத்தவிசின் மேல் அனனம் தன்
இளம்பெடையோடும் புல்கி,
விளை கதிர்க்கவரி வீச, வீற்றிருக்கும் மிழலையான் என,
வினை கெடுமே.

[9]
கஞ்சிப் போது உடையார், கையில் கோசாரக் கலதிகள்,
கட்டுரை விட்டு
அஞ்சித் தேவு இரிய எழுந்த நஞ்சு அதனை உண்டு
அமரர்க்கு அமுது அருளி
இஞ்சிக்கே கதலிக்கனி விழ, கமுகின் குலையொடும் பழம் விழ, தெங்கின்
மிஞ்சுக்கே மஞ்சு சேர் பொழில் வீழிமிழலையான் என,
வினை கெடுமே.

[10]
வேந்தர் வந்து இறைஞ்ச, வேதியர், வீழிமிழலையுள், விண் இழிவிமானத்து
ஏய்ந்த தன் தேவியோடு உறைகின்ற ஈசனை, எம்பெருமானை,
தோய்ந்த நீர்த் தோணிபுரத்து உறை மறையோன்-தூ மொழி ஞானசம்பந்தன்-
வாய்ந்த பாமாலை வாய் நவில்வாரை வானவர் வழிபடுவாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3.120   மங்கையர்க்கு அரசி வளவர்கோன் பாவை,  
பண் - புறநீர்மை   (திருத்தலம் திருஆலவாய் (மதுரை) ; (திருத்தலம் அருள்தரு மீனாட்சியம்மை உடனுறை அருள்மிகு சொக்கநாதசுவாமி திருவடிகள் போற்றி )
மங்கையர்க்கு அரசி வளவர்கோன் பாவை, வரி வளைக் கைம் மடமானி,
பங்கயச்செல்வி, பாண்டிமாதேவி பணி செய்து நாள்தொறும் பரவ,
பொங்கு அழல் உருவன், பூதநாயகன், நால்வேதமும் பொருள்களும் அருளி
அம் கயல்கண்ணிதன்னொடும் அமர்ந்த ஆலவாய் ஆவதும் இதுவே.

[1]
வெற்றவே அடியார் அடிமிசை வீழும் விருப்பினன், வெள்ளைநீறு அணியும்
கொற்றவன்தனக்கு மந்திரி ஆய குலச்சிறை குலாவி நின்று ஏத்தும்
ஒற்றை வெள்விடையன், உம்பரார்தலைவன், உலகினில் இயற்கையை ஒழிந்திட்டு
அற்றவர்க்கு அற்ற சிவன், உறைகின்ற ஆலவாய் ஆவதும் இதுவே.

[2]
செந்துவர்வாயாள் சேல் அன கண்ணாள், சிவன் திருநீற்றினை வளர்க்கும்
பந்து அணை விரலாள் பாண்டிமாதேவி பணி செய, பார் இடை நிலவும்
சந்தம் ஆர் தரளம், பாம்பு, நீர், மத்தம், தண் எருக்கம்மலர், வன்னி,
அந்தி வான்மதி, சேர் சடைமுடி அண்ணல் ஆலவாய் ஆவதும் இதுவே.

[3]
கணங்கள் ஆய் வரினும், தமியராய் வரினும், அடியவர் தங்களைக் கண்டால்,
குணம்கொடு பணியும் குலச்சிறை குலாவுங் கோபுரம் சூழ் மணிக் கோயில்
மணம் கமழ் கொன்றை, வாள் அரா, மதியம், வன்னி, வண் கூவிளமாலை,
அணங்கு, வீற்றிருந்த சடைமுடி அண்ணல் ஆலவாய் ஆவதும் இதுவே.

[4]
செய்யதாமரைமேல் அன்னமே அனைய சேயிழை திருநுதல் செல்வி,
பை அரவு அல்குல் பாண்டிமாதேவி நாள்தொறும் பணிந்து இனிது ஏத்த,
வெய்ய வேல், சூலம், பாசம், அங்குசம், மான், விரி கதிர் மழு உடன் தரித்த
ஐயனார் உமையோடு இன்பு உறுகின்ற ஆலவாய் ஆவதும் இதுவே.

[5]
நலம் இலர் ஆக, நலம் அது உண்டு ஆக, நாடவர் நாடு அறிகின்ற
குலம் இலர் ஆக, குலம் அது உண்டு ஆக, தவம் பணி குலச்சிறை பரவும்
கலை மலி கரத்தன், மூஇலைவேலன், கரிஉரி மூடிய கண்டன்,
அலை மலி புனல் சேர் சடைமுடி அண்ணல், ஆலவாய் ஆவதும் இதுவே.

[6]
முத்தின் தாழ்வடமும் சந்தனக்குழம்பும் நீறும் தன் மார்பினில் முயங்க,
பத்தி ஆர்கின்ற பாண்டிமாதேவி பாங்கொடு பணிசெய, நின்ற
சுத்தம் ஆர் பளிங்கின் பெருமலை உடனே சுடர் மரகதம் அடுத்தால் போல்,
அத்தனார் உமையோடு இன்பு உறுகின்ற ஆலவாய் ஆவதும் இதுவே.

[7]
நா அணங்கு இயல்பு ஆம் அஞ்சு எழுத்து ஓதி, நல்லராய் நல் இயல்பு ஆகும்
கோவணம் பூதி சாதனம் கண்டால்-தொழுது எழு குலச்சிறை போற்ற,
ஏ அணங்கு இயல்பு ஆம் இராவணன் திண்தோள் இருபதும் நெரிதர ஊன்றி,
ஆவணம் கொண்ட சடைமுடி அண்ணல் ஆலவாய் ஆவதும் இதுவே.

[8]
மண் எலாம் நிகழ மன்னனாய் மன்னும் மணிமுடிச்சோழன் தன் மகள் ஆம்
பண்ணின் நேர் மொழியாள் பாண்டிமாதேவி பாங்கினால் பணி செய்து பரவ,
விண் உளார் இருவர் கீழொடு மேலும் அளப்பு அரிது ஆம் வகை நின்ற
அண்ணலார் உமையோடு இன்பு உறுகின்ற ஆலவாய் ஆவதும் இதுவே.

[9]
தொண்டராய் உள்ளார் திசைதிசைதொறும் தொழுது தன் குணத்தினைக் குலாவக்
கண்டு, நாள்தோறும் இன்பு உறுகின்ற குலச்சிறை கருதி நின்று ஏத்த,
குண்டராய் உள்ளார் சாக்கியர் தங்கள் குறியின் கண் நெறி இடை வாரா
அண்ட நாயகன் தான் அமர்ந்து வீற்றிருந்த ஆலவாய் ஆவதும் இதுவே.

[10]
பல்-நலம் புணரும் பாண்டிமாதேவி, குலச்சிறை, எனும் இவர் பணியும்
அந் நலம் பெறு சீர் ஆலவாய் ஈசன் திருவடி ஆங்கு அவை போற்றி,
கன்னல் அம் பெரிய காழியுள் ஞானசம்பந்தன் செந்தமிழ் இவை கொண்டு
இன்நலம் பாட வல்லவர், இமையோர் ஏத்த, வீற்றிருப்பவர், இனிதே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3.121   இடறினார், கூற்றை; பொடிசெய்தார், மதிலை;  
பண் - புறநீர்மை   (திருத்தலம் திருப்பந்தணைநல்லூர் ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
இடறினார், கூற்றை; பொடிசெய்தார், மதிலை; இவை சொல்லி லகு எழுந்து ஏத்த,
கடறினார் ஆவர்; காற்று உளார் ஆவர்; காதலித்து உறைதரு கோயில்
கொடிறனார்; யாதும் குறைவு இலார்; தாம் போய்க் கோவணம்
கொண்டு கூத்து ஆடும்
படிறனார் போலும்! பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே.

[1]
கழி உளார் எனவும், கடல் உளார் எனவும், காட்டு
உளார்:, நாட்டு உளார் எனவும்,
வழி உளார் எனவும், மலை உளார் எனவும், மண்
உளார், விண் உளார் எனவும்,
சுழி உளார் எனவும், சுவடு தாம் அறியார், தொண்டர்
வாய் வந்தன சொல்லும்
பழி உளார் போலும்! பந்தணைநல்லூர் நின்ற எம்
பசுபதியாரே.

[2]
காட்டினார் எனவும், நாட்டினார் எனவும், கடுந் தொழில் காலனைக் காலால்
வீட்டினார் எனவும், சாந்த வெண்நீறு பூசி, ஓர் வெண்மதி சடைமேல்
சூட்டினார் எனவும், சுவடு தாம் அறியார், சொல் உள
சொல்லும் நால்வேதப்-
பாட்டினார்போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே.

[3]
முருகின் ஆர் பொழில் சூழ் உலகினார் ஏத்த, மொய்த்த
பல்கணங்களின் துயர் கண்டு
உருகினார் ஆகி, உறுதி போந்து, உள்ளம் ஒண்மையால்,
ஒளி திகழ் மேனி
கருகினார் எல்லாம் கைதொழுது ஏத்த, கடலுள் நஞ்சு
அமுதமா வாங்கிப்
பருகினார்போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே.

[4]
பொன்னின் ஆர் கொன்றை இரு வடம் கிடந்து பொறி கிளர் பூணநூல் புரள,
மின்னின் ஆர் உருவின், மிளிர்வது ஓர் அரவம், மேவு
வெண்நீறு மெய் பூசி,
துன்னினார் நால்வர்க்கு அறம் அமர்ந்து அருளி, தொன்மை
ஆர் தோற்றமும் கேடும்
பன்னினார்போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே.

[5]
ஒண் பொனார் அனைய அண்ணல் வாழ்க! எனவும்
உமையவள் கணவன் வாழ்க! எனவும்,
அண்பினார், பிரியார், அல்லும் நன்பகலும், அடியவர் அடி இணை தொழவே,
நண்பினார் எல்லாம், நல்லர்! என்று ஏத்த, அல்லவர்,
தீயர்! என்று ஏத்தும்
பண்பினார்போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே.

[6]
எற்றினார், ஏதும் இடைகொள்வார் இல்லை, இருநிலம் வான் உலகு எல்லை
தெற்றினார் தங்கள் காரணம் ஆகச் செரு மலைந்து, அடி இணை சேர்வான்,
முற்றினார் வாழும் மும்மதில் வேவ, மூஇலைச்சுலமும் மழுவும்
பற்றினார்போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே.

[7]
ஒலிசெய்த குழலின் முழவம் அது இயம்ப, ஓசையால் ஆடல் அறாத
கலி செய்த பூதம் கையினால் இடவே, காலினால் பாய்தலும், அரக்கன்
வலி கொள்வர்; புலியின் உரி கொள்வர்; ஏனை வாழ்வு
நன்றானும் ஓர் தலையில்
பலி கொள்வர்போலும் பந்தணைநல்லூர் நின்ற எம்
பசுபதியாரே.

[8]
சேற்றின் ஆர் பொய்கைத் தாமரையானும், செங்கண்மால், இவர் இருகூறாத்
தோற்றினார், தோற்றத் தொன்மையை அறியார், துணைமையும்
பெருமையும் தம்மில்
சாற்றினார், சாற்றி, ஆற்றலோம் என்ன, சரண் கொடுத்து, அவர் செய்த பாவம்
பாற்றினார்போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே.

[9]
கல் இசை பூணக் கலை ஒலி ஓவாக் கழுமல முதுபதி தன்னில்
நல் இசையாளன், புல் இசை கேளா நல்-தமிழ் ஞானசம்பந்தன்,
பல் இசை பகுவாய்ப் படுதலை ஏந்தி மேவிய பந்தணைநல்லூர்
சொல் இசைப்பாடல் பத்தும் வல்லவர் மேல், தொல்வினை சூழகிலாவே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3.122   பூங்கொடி மடவாள் உமை ஒருபாகம்  
பண் - புறநீர்மை   (திருத்தலம் திருஓமாம்புலியூர் ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
பூங்கொடி மடவாள் உமை ஒருபாகம் புரிதரு சடைமுடி
அடிகள்
வீங்கு இருள் நட்டம் ஆடும் எம் விகிர்தர், விருப்பொடும்
உறைவு இடம் வினவில்
தேம் கமழ் பொழிலில் செழு மலர் கோதிச் செறிதரு வண்டு இசை பாடும்
ஓங்கிய புகழ் ஆர் ஓமமாம்புலியூர் உடையவர், வடதளி அதுவே.

[1]
சம்பரற்கு அருளி, சலந்தரன் வீயத் தழல் உமிழ் சக்கரம் படைத்த
எம்பெருமானார், இமையவர் ஏத்த, இனிதின் அங்கு உறைவு இடம் வினவில்
அம்பரம் ஆகி அழல் உமிழ் புகையின் ஆகுதியால் மழை பொழியும்,
உம்பர்கள் ஏத்தும் ஓமமாம்புலியூர் உடையவர், வடதளி அதுவே.

[2]
பாங்கு உடைத் தவத்துப் பகீரதற்கு அருளிப் படர்சடைக்
கரந்த நீர்க்கங்கை
தாங்குதல் தவிர்த்து, தராதலத்து இழித்த தத்துவன் உறைவு இடம் வினவில்
ஆங்கு எரிமூன்றும் அமர்ந்து உடன் இருந்த அம் கையால்
ஆகுதி வேட்கும்
ஓங்கிய மறையோர் ஓமமாம்புலியூர் உடையவர் வடதளி அதுவே.

[3]
புற்று அரவு அணிந்து, நீறு மெய் பூசி, பூதங்கள் சூழ்தர, ஊர் ஊர்
பெற்றம் ஒன்று ஏறிப் பெய் பலி கொள்ளும் பிரான் அவன்
உறைவு இடம் வினவில்
கற்ற நால்வேதம் அங்கம் ஓர் ஆறும் கருத்தினார்
அருத்தியால்-தெரியும்
உற்ற பல்புகழார் ஓமமாம்புலியூர் உடையவர் வடதளி அதுவே.

[4]
நிலத்தவர், வானம் ஆள்பவர்,கீழோர், துயர் கெட, நெடிய
மாற்கு அருளால்,
அலைத்த வல் அசுரர் ஆசு அற, ஆழி அளித்தவன் உறைவு இடம் வினவில்
சலத்தினால் பொருள்கள் வேண்டுதல் செய்யாத் தன்மையார், நன்மையால் மிக்க
உலப்பு இல் பல்புகழார், ஓமமாம்புலியூர் உடையவர் வடதளி அதுவே.

[5]
மணம் திகழ் திசைகள் எட்டும், ஏழ் இசையும், மலியும் ஆறு
அங்கம், ஐவேள்வி,
இணைந்த நால்வேதம், மூன்றுஎரி, இரண்டுபிறப்பு, என
ஒருமையால் உணரும்
குணங்களும், அவற்றின் கொள் பொருள் குற்றம் மற்று
அவை உற்றதும், எல்லாம்
உணர்ந்தவர் வாழும் ஓமமாம்புலியூர் உடையவர் வடதளி அதுவே.

[6]
தலை ஒரு பத்தும் தடக்கை அது இரட்டி தான் உடை
அரக்கன் ஒண்கயிலை
அலைவது செய்த அவன் திறல் கெடுத்த ஆதியார் உறைவு இடம் வினவில்
மலை என ஓங்கும் மாளிகை நிலவும், மா மதில் மாற்றலர் என்றும்
உலவு பல்புகழ் ஆர் ஓமமாம்புலியூர் உடையவர் வடதளி
அதுவே.

[8]
கள் அவிழ் மலர்மேல் இருந்தவன், கரியோன், என்று இவர்
காண்பு அரிது ஆய
ஒள் எரி உருவர் உமையவளோடும் உகந்து இனிது உறைவு இடம் வினவில்
பள்ள நீர் வாளை பாய்தரு கழனி, பனிமலர்ச்சோலை சூழ் ஆலை,
ஒள்ளிய புகழ் ஆர் ஓமமாம்புலியூர் உடையவர் வடதளி அதுவே.

[9]
தெள்ளியர் அல்லாத் தேரரொடு அமணர், தடுக்கொடு சீவரம் உடுக்கும்
கள்ளம் ஆர் மனத்துக் கலதிகட்கு அருளாக் கடவுளார்
உறைவு இடம் வினவில்
நள் இருள் யாமம் நால்மறை தெரிந்து, நலம் திகழ் மூன்று எரி ஓம்பும்
ஒள்ளியார் வாழும் ஓமமாம்புலியூர் உடையவர் வடதளி அதுவே.

[10]
விளைதரு வயலுள் வெயில் செறி பவளம் மேதிகள்
மேய்புலத்து இடறி
ஒளிதர மல்கும் ஓமமாம்புலியூர் உடையவர் வடதளி அரனை,
களி தரு நிவப்பின் காண்தகு செல்வக் காழியுள் ஞானசம்பந்தன்,
அளிதரு பாடல்பத்தும் வல்லார்கள், அமரலோகத்து இருப்பாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3.123   நிரை கழல் அரவம் சிலம்பு  
பண் - புறநீர்மை   (திருத்தலம் திருக்கோணமலை ; (திருத்தலம் அருள்தரு மாதுமையம்மை உடனுறை அருள்மிகு கோணீசர் திருவடிகள் போற்றி )
நிரை கழல் அரவம் சிலம்பு ஒலி அலம்பும் நிமலர், நீறு அணி திருமேனி
வரை கெழு மகள் ஓர்பாகமாப் புணர்ந்த வடிவினர், கொடி விடையர்
கரை கெழு சந்தும் கார் அகில் பிளவும் அளப்ப(அ)ருங்
கன மணி வரன்றி,
குரைகடல் ஓதம் நித்திலம் கொழிக்கும் கோணமாமலை அமர்ந்தாரே.

[1]
கடிது என வந்த கரிதனை உரித்து அவ் உரி மேனிமேல் போர்ப்பர்
பிடி அன நடையாள் பெய் வளை மடந்தை
பிறைநுதலவளொடும் உடன் ஆய
கொடிது எனக் கதறும் குரைகடல் சூழ்ந்து கொள்ள, முன் நித்திலம் சுமந்து
குடிதனை நெருங்கிப் பெருக்கம் ஆய்த் தோன்றும்
கோணமாமலை அமர்ந்தாரே.

[2]
பனித்த இளந்திங்கள் பைந்தலை நாகம் படர் சடை முடி
இடை வைத்தார்
கனித்து இளந் துவர்வாய்க் காரிகை பாகம் ஆக முன்
கலந்தவர், மதில்மேல்
தனித்த பேர் உருவ விழித் தழல் நாகம் தாங்கிய மேரு
வெஞ்சிலையாக்
குனித்தது ஓர் வில்லார் குரைகடல் சூழ்ந்த கோணமாமலை
அமர்ந்தாரே.

[3]
பழித்த இளங் கங்கை சடை இடை வைத்து, பாங்கு உடை
மதனனைப் பொடியா
விழித்து, அவன் தேவி வேண்ட, முன் கொடுத்த விமலனார்; கமலம் ஆர் பாதர்
தெழித்து முன் அரற்றும் செழுங் கடல்-தரளம் செம்பொனும் இப்பியும் சுமந்து
கொழித்து, வன் திரைகள் கரை இடைச் சேர்க்கும்
கோணமாமலை அமர்ந்தாரே.

[4]
தாயினும் நல்ல தலைவர்! என்று அடியார் தம் அடி
போற்று இசைப்பார்கள்
வாயினும் மனத்தும் மருவி நின்று அகலா மாண்பினர், காண் பலவேடர்,
நோயிலும் பிணியும் தொழலர்பால் நீக்கி நுழைதரு நூலினர் ஞாலம்
கோயிலும் சுனையும் கடல் உடன் சூழ்ந்த கோணமாமலை
அமர்ந்தாரே.

[5]
பரிந்து நல் மனத்தால் வழிபடும் மாணிதன் உயிர்மேல் வரும்
கூற்றைத்
திரிந்திடா வண்ணம் உதைத்து, அவற்கு அருளும்
செம்மையார்; நம்மை ஆள் உடையார்
விரிந்து உயர் மௌவல், மாதவி, புன்னை, வேங்கை, வண்
செருந்தி, செண்பகத்தின்
குருந்தொடு, முல்லை, கொடிவிடும் பொழில் சூழ்
கோணமாமலை அமர்ந்தாரே.

[6]
எடுத்தவன் தருக்கை இழித்தவர், விரலால்; ஏத்திட ஆத்தம் ஆம் பேறு
தொடுத்தவர்; செல்வம் தோன்றிய பிறப்பும் இறப்பு
அறியாதவர்; வேள்வி
தடுத்தவர்; வனப்பால் வைத்தது ஓர் கருணை தன் அருள்
பெருமையும் வாழ்வும்
கொடுத்தவர்; விரும்பும் பெரும் புகழாளர் கோணமாமாலை
அமர்ந்தாரே.

[8]
அருவராது ஒரு கை வெண்தலை ஏந்தி; அகம்தொறும் பலி
உடன் புக்க
பெருவராய் உறையும் நீர்மையர்; சீர்மைப் பெருங்கடல்
வண்ணனும், பிரமன்,
இருவரும் அறியா வண்ணம் ஒள் எரி ஆய் உயர்ந்தவர்;
பெயர்ந்த நல் மாற்கும்
குருவராய் நின்றார், குரைகழல் வணங்க; கோணமாமலை
அமர்ந்தாரே.

[9]
நின்று உணும் சமணும், இருந்து உணும் தேரும், நெறி
அலாதன புறம்கூற,
வென்று நஞ்சு உண்ணும் பரிசினர்; ஒருபால் மெல்லியலொடும்
உடன் ஆகி
துன்றும் ஒண் பௌவம் மவ்வலும் சூழ்ந்து தாழ்ந்து உறு
திரைபல மோதிக்
குன்றும் ஒண் கானல் வாசம் வந்து உலவும் கோணமாமலை
அமர்ந்தாரே.

[10]
குற்றம் இலாதார் குரைகடல் சூழ்ந்த கோணமாமலை
அமர்ந்தாரை,
கற்று உணர் கேள்விக் காழியர்பெருமான்-கருத்து உடை
ஞானசம்பந்தன்-
உற்ற செந்தமிழ் ஆர் மாலை ஈர்-ஐந்தும் உரைப்பவர்,
கேட்பவர், உயர்ந்தோர்
சுற்றமும் ஆகித் தொல்வினை அடையார்; தோன்றுவர்,
வான் இடைப் பொலிந்தே.
[11]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
6.094   இரு நிலன் ஆய், தீ  
பண் - புறநீர்மை   (திருத்தலம் நின்றத் திருத்தாண்டகம் ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
இரு நிலன் ஆய், தீ ஆகி, நீரும் ஆகி, இயமானனாய், எறியும் காற்றும் ஆகி,
அரு நிலைய திங்கள் ஆய், ஞாயிறு ஆகி, ஆகாசம் ஆய், அட்ட மூர்த்தி ஆகி,
பெரு நலமும் குற்றமும் பெண்ணும் ஆணும் பிறர் உருவும் தம் உருவும் தாமே ஆகி,
நெருநலை ஆய், இன்று ஆகி, நாளை ஆகி, நிமிர் புன்சடை அடிகள் நின்ற ஆறே!.

[1]
மண் ஆகி, விண் ஆகி, மலையும் ஆகி, வயிரமும் ஆய், மாணிக்கம் தானே ஆகி,
கண் ஆகி, கண்ணுக்கு ஓர் மணியும் ஆகி, கலை ஆகி,   கலை ஞானம் தானே ஆகி,
பெண் ஆகி, பெண்ணுக்கு ஓர் ஆணும் ஆகி, பிரளயத்துக்கு அப்பால் ஓர் அண்டம் ஆகி,
எண் ஆகி எண்ணுக்கு ஓர் எழுத்தும் ஆகி, எழும் சுடர் ஆய் எம் அடிகள் நின்ற ஆறே!.

[2]
கல் ஆகி, களறு ஆகி, கானும் ஆகி, காவிரி ஆய், கால் ஆறு ஆய், கழியும் ஆகி,
புல் ஆகி, புதல் ஆகி, பூடும் ஆகி, புரம் ஆகி, புரம் மூன்றும் கெடுத்தான் ஆகி,
சொல் ஆகி, சொல்லுக்கு ஓர் பொருளும் ஆகி, சுலாவு ஆகி, சுலாவுக்கு ஓர் சூழல் ஆகி,
நெல் ஆகி, நிலன் ஆகி, நீரும் ஆகி, நெடுஞ்சுடர் ஆய்   நிமிர்ந்து, அடிகள் நின்ற ஆறே!.

[3]
காற்று ஆகி, கார் முகில் ஆய், காலம் மூன்று ஆய், கனவு ஆகி, நனவு ஆகி, கங்குல் ஆகி,
கூற்று ஆகி, கூற்று உதைத்த கொல் களிறும் ஆகி, குரை கடல் ஆய், குரை கடற்கு ஓர் கோமானும்(ம்) ஆய்,
நீற்றானாய், நீறு ஏற்ற மேனி ஆகி, நீள் விசும்பு ஆய், நீள் விசும்பின் உச்சி ஆகி,
ஏற்றானாய், ஏறு ஊர்ந்த செல்வன் ஆகி, எழும் சுடர் ஆய், எம் அடிகள் நின்ற ஆறே.

[4]
தீ ஆகி, நீர் ஆகி, திண்மை ஆகி, திசை ஆகி, அத் திசைக்கு ஓர் தெய்வம் ஆகி,
தாய் ஆகி, தந்தையாய், சார்வும் ஆகி, தாரகையும் ஞாயிறும் தண் மதியும் ஆகி,
காய் ஆகி, பழம் ஆகி, பழத்தில் நின்ற இரதங்கள் நுகர்வானும் தானே ஆகி,
நீ ஆகி, நான் ஆகி, நேர்மை ஆகி, நெடுஞ்சுடர் ஆய்,   நிமிர்ந்து அடிகள் நின்ற ஆறே.

[5]
அங்கம் ஆய், ஆதி ஆய், வேதம் ஆகி, அருமறையோடு ஐம்பூதம் தானே ஆகி,
பங்கம் ஆய், பல சொல்லும் தானே ஆகி, பால் மதியோடு   ஆதி ஆய், பான்மை ஆகி,
கங்கை ஆய், காவிரி ஆய், கன்னி ஆகி, கடல் ஆகி, மலை ஆகி, கழியும் ஆகி,
எங்கும் ஆய், ஏறு ஊர்ந்த செல்வன் ஆகி, எழும் சுடர் ஆய், எம் அடிகள் நின்ற ஆறே.

[6]
மாதா பிதா ஆகி, மக்கள் ஆகி, மறி கடலும் மால் விசும்பும் தானே ஆகி,
கோதாவிரி ஆய், குமரி ஆகி, கொல் புலித் தோல் ஆடைக் குழகன் ஆகி,
போது ஆய் மலர் கொண்டு போற்றி நின்று புனைவார் பிறப்பு அறுக்கும் புனிதன் ஆகி,
ஆதானும் என நினைந்தார்க்கு எளிதே ஆகி, அழல் வண்ண வண்ணர் தாம் நின்ற ஆறே!.

[7]
ஆ ஆகி, ஆவினில் ஐந்தும் ஆகி, அறிவு ஆகி,   அழல் ஆகி, அவியும் ஆகி,
நா ஆகி, நாவுக்கு ஓர் உரையும் ஆகி, நாதனாய், வேதத்தின் உள்ளோன் ஆகி,
பூ ஆகி, பூவுக்கு ஓர் நாற்றம் ஆகி, புக்குளால்   வாசம் ஆய் நின்றான் ஆகி,
தே ஆகி, தேவர் முதலும் ஆகி, செழுஞ்சுடர் ஆய், சென்று அடிகள் நின்ற ஆறே!.

[8]
நீர் ஆகி, நீள் அகலம் தானே ஆகி, நிழல் ஆகி, நீள் விசும்பின் உச்சி ஆகி,
பேர் ஆகி, பேருக்கு ஓர் பெருமை ஆகி, பெரு   மதில்கள் மூன்றினையும் எய்தான் ஆகி,
ஆரேனும் தன் அடைந்தார் தம்மை எல்லாம் ஆட்கொள்ள வல்ல எம் ஈசனார் தாம்
பார் ஆகி, பண் ஆகி, பாடல் ஆகி, பரஞ்சுடர் ஆய், சென்று அடிகள் நின்ற ஆறே!.

[9]
மால் ஆகி, நான்முகனாய், மா பூதம்(ம்) ஆய், மருக்கம் ஆய், அருக்கம் ஆய், மகிழ்வும் ஆகி,
பால் ஆகி, எண்திசைக்கும் எல்லை ஆகி, பரப்பு ஆகி, பரலோகம் தானே ஆகி,
பூலோக புவலோக சுவலோகம்(ம்) ஆய், பூதங்கள் ஆய், புராணன் தானே ஆகி,
ஏலாதன எலாம் ஏல்விப்பானாய், எழும் சுடர் ஆய், எம் அடிகள் நின்ற ஆறே!.

[10]

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7.083   அந்தியும் நண்பகலும் அஞ்சுபதம் சொல்லி,  
பண் - புறநீர்மை   (திருத்தலம் திருவாரூர் ; (திருத்தலம் அருள்தரு அல்லியங்கோதையம்மை உடனுறை அருள்மிகு வன்மீகநாதர் திருவடிகள் போற்றி )
அந்தியும் நண்பகலும் அஞ்சுபதம் சொல்லி,
முந்தி எழும் பழைய வல்வினை மூடா முன்,
சிந்தை பராமரியா தென்திரு ஆரூர் புக்கு,
எந்தை பிரானாரை என்றுகொல் எய்துவதே?

[1]
நின்ற வினைக் கொடுமை நீங்க இருபொழுதும்
துன்று மலர் இட்டு, சூழும் வலம் செய்து,
தென்றல் மணம் கமழும் தென்திரு ஆரூர் புக்கு,
என் தன் மனம் குளிர என்றுகொல் எய்துவதே?

[2]
முன்னை முதல் பிறவி மூதறியாமையினால்
பின்னை நினைந்தனவும் பேதுறவும்(ம்) ஒழிய,
செந்நெல் வயல்-கழனித் தென்திரு ஆரூர் புக்கு,
என் உயிர்க்கு இன்னமுதை என்றுகொல் எய்துவதே? , முன்னை முதல் பிறவி மூதறியாமையினால்
பின்னை நினைந்தனவும் பேதுறவும்(ம்) ஒழிய,
செந்நெல் வயல்-கழனித் தென்திரு ஆரூர் புக்கு,
என் உயிர்க்கு இன்னமுதை என்றுகொல் எய்துவதே?

[3]
நல்ல நினைப்பு ஒழிய நாள்களில் ஆர் உயிரைக்
கொல்ல நினைப்பனவும் குற்றமும் அற்று ஒழிய,
செல்வ வயல்-கழனித் தென்திரு ஆரூர் புக்கு,
எல்லை மிதித்து, அடியேன் என்றுகொல் எய்துவதே? , நல்ல நினைப்பு ஒழிய நாள்களில் ஆர் உயிரைக்
கொல்ல நினைப்பனவும் குற்றமும் அற்று ஒழிய,
செல்வ வயல்-கழனித் தென்திரு ஆரூர் புக்கு,
எல்லை மிதித்து, அடியேன் என்றுகொல் எய்துவதே?

[4]
கடு வரி மாக் கடலுள் காய்ந்தவன் தாதையை, முன்;
சுடுபொடி மெய்க்கு அணிந்த சோதியை; வன்தலை வாய்
அடு புலி ஆடையனை; ஆதியை;-ஆரூர் புக்கு-
இடு பலி கொள்ளியை; நான் என்றுகொல் எய்துவதே? , கடு வரி மாக் கடலுள் காய்ந்தவன் தாதையை, முன்;
சுடுபொடி மெய்க்கு அணிந்த சோதியை; வன்தலை வாய்
அடு புலி ஆடையனை; ஆதியை;-ஆரூர் புக்கு-
இடு பலி கொள்ளியை; நான் என்றுகொல் எய்துவதே?

[5]
சூழ் ஒளி, நீர், நிலம், தீ, தாழ் வளி, ஆகாசம்,
வான் உயர் வெங்கதிரோன், வண்தமிழ் வல்லவர்கள்
ஏழ் இசை, ஏழ் நரம்பின் ஓசையை;-ஆரூர் புக்கு-
ஏழ் உலகு ஆளியை; நான் என்றுகொல் எய்துவதே; , சூழ் ஒளி, நீர், நிலம், தீ, தாழ் வளி, ஆகாசம்,
வான் உயர் வெங்கதிரோன், வண்தமிழ் வல்லவர்கள்
ஏழ் இசை, ஏழ் நரம்பின் ஓசையை;-ஆரூர் புக்கு-
ஏழ் உலகு ஆளியை; நான் என்றுகொல் எய்துவதே;

[6]
கொம்பு அன நுண் இடையாள் கூறனை, நீறு அணிந்த
வம்பனை, எவ் உயிர்க்கும் வைப்பினை, ஒப்பு அமராச்
செம்பொனை, நல்மணியை,-தென்திரு ஆரூர் புக்கு-
என்பொனை, என் மணியை, என்றுகொல் எய்துவதே?

[7]
ஆறு அணி நீள் முடிமேல் ஆடு அரவம் சூடிப்
பாறு அணி வெண்தலையில் பிச்சை கொள் நச்சு அரவன்,-
சேறு அணி தண்கழனித் தென்திரு ஆரூர் புக்கு-
ஏறு அணி எம் இறையை, என்றுகொல் எய்துவதே?

[8]
மண்ணினை உண்டு உமிழ்ந்த மாயனும், மா மலர்மேல்
அண்ணலும், நண்ண(அ)ரிய ஆதியை மாதினொடும்-
திண்ணிய மா மதில் சூழ் தென்திரு ஆரூர் புக்கு-
எண்ணிய கண் குளிர என்றுகொல் எய்துவதே?

[9]
மின் நெடுஞ்செஞ்சடையன் மேவிய ஆரூரை
நன்நெடுங் காதன்மையால் நாவலர்கோன் ஊரன்
பல்-நெடுஞ் சொல்மலர்கொண்டு இட்டன பத்தும் வல்லார்
பொன் உடை விண்ணுலகம் நண்ணுவர்; புண்ணியரே.

[10]

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7.084   தொண்டர் அடித்தொழலும், சோதி இளம்பிறையும்,  
பண் - புறநீர்மை   (திருத்தலம் திருக்கானப்பேர் (திருக்காளையார்கோயில்) ; (திருத்தலம் அருள்தரு பொற்கொடியம்மை உடனுறை அருள்மிகு காளைநாதேசுவரர் திருவடிகள் போற்றி )
தொண்டர் அடித்தொழலும், சோதி இளம்பிறையும், சூது அன மென்முலையாள் பாகமும்,   ஆகி வரும்
புண்டரிகப் பரிசு ஆம் மேனியும்; வானவர்கள் பூசல் இடக் கடல் நஞ்சு உண்ட கருத்து   அமரும்,
கொண்டல் எனத் திகழும், கண்டமும்; எண்தோளும்; கோல நறுஞ்சடைமேல் வண்ணமும்;   கண்குளிரக்
கண்டு, தொழப்பெறுவது என்றுகொலோ, அடியேன்?-கார் வயல் சூழ் கானப்பேர் உறை காளையையே .

[1]
கூதல் இடும் சடையும், கோள் அரவும், விரவும் கொக்கு இறகும், குளிர் மா மத்தமும், ஒத்து   உன தாள்
ஓதல் உணர்ந்து, அடியார் உன் பெருமைக்கு நினைந்து உள் உருகா, விரசும் ஓசையைப்  பாடலும், நீ
ஆதல் உணர்ந்து அவரோடு அன்பு பெருத்து அடியேன் அங்கையில் மா மலர் கொண்டு,  என் கணது அல்லல் கெட,
காதல் உற, தொழுவது என்றுகொலோ, அடியேன்?-கார் வயல் சூழ் கானப்பேர் உறை காளையையே .

[2]
நான் உடை மாடு எனவே நன்மை தரும் பரனை, நல் பதம் என்று உணர்வார் சொல்பதம் ஆர் சிவனை,
தேன் இடை இன்னமுதை, பற்று அதனில்-தெளிவை, தேவர்கள் நாயகனை, பூ உயர்  சென்னியனை,
வான் இடை மாமதியை, மாசு அறு சோதியனை, மாருதமும்(ம்) அனலும் மண் தலமும்(ம்)   ஆய-
கான் இடை மாநடன் என்று எய்துவது என்றுகொலோ?-கார் வயல் சூழ் கானப்பேர் உறை    காளையையே .

[3]
செற்றவர் முப்புரம் அன்று அட்ட சிலைத் தொழில் ஆர் சேவகம்; முன் நினைவார்    பாவகமும்; நெறியும்;
குற்றம் இல் தன் அடியார் கூறும் இசைப் பரிசும்; கோசிகமும்(ம்),-அரையில்,-   கோவணமும்(ம்) அதளும்;
மல்-திகழ் திண்புயமும்; மார்பு இடை, நீறு துதை, மாமலைமங்கை உமை சேர் சுவடும்; புகழக்
கற்றனவும் பரவிக் கைதொழல் என்றுகொலோ?-கார் வயல் சூழ் கானப்பேர் உறை காளையையே .

[4]
கொல்லை விடைக் குழகும், கோல நறுஞ்சடையில் கொத்து அலரும்(ம்) இதழித் தொத்தும், அதன் அருகே
முல்லை படைத்த நகை மெல்லியலால் ஒருபால் மோகம் மிகுத்து இலங்கும் கூறு செய்   எப்பரிசும்,
தில்லைநகர்ப் பொது உற்று ஆடிய சீர் நடமும், திண்ழுவும், கைமிசைக் கூர் எரியும்(ம்)   அடியார்
கல்லவடப் பரிசும், காணுவது என்றுகொலோ?-கார் வயல் சூழ் கானப்பேர் உறை காளையையே .

[5]
பண்ணு தலைப் பயன் ஆர் பாடலும், நீடுதலும்,- பங்கயமாது அனையார்,-பத்தியும்; முத்தி   அளித்து
எண்ணு தலைப்பெருமான் என்று எழுவார் அவர் தம் ஏசறவும்(ம்); இறை ஆம்  எந்தையையும் விரவி
நண்ணுதலைப் படும் ஆறு எங்ஙனம்? என்று அயலே நைகிற என்னை மதித்து உய்யும் வணம் அருளும்
கண்ணுதலை, கனியை, காண்பதும்; என்றுகொலோ? கார் வயல் சூழ் கானப்பேர் உறை    காளையையே .

[6]
மாவை உரித்து அதள் கொண்டு அங்கம் அணிந்தவனை, வஞ்சர் மனத்து இறையும்  நெஞ்சு அணுகாதவனை,
மூவர் உருத் தனது ஆம் மூல முதல் கருவை, மூசிடும் மால்விடையின் பாகனை, ஆகம் உறப்
பாவகம் இன்றி மெய்யே பற்றுமவர்க்கு அமுதை, பால் நறுநெய் தயிர் ஐந்து ஆடு பரம்பரனை,-
காவல் எனக்கு இறை என்று, எய்துவது என்றுகொலோ?-கார் வயல் சூழ் கானப்பேர் உறை காளையையே .

[7]
தொண்டர் தமக்கு எளிய சோதியை, வேதியனை, தூய மறைப் பொருள் ஆம் நீதியை,  வார்கடல் நஞ்சு
உண்டு அதனுக்கு இறவாது என்றும் இருந்தவனை, ஊழி படைத்தவனோடு ஒள் அரியும்(ம்)   உணரா
அண்டனை, அண்டர் தமக்கு ஆகம நூல் மொழியும் ஆதியை, மேதகு சீர் ஓதியை,  வானவர் தம்
கண்டனை,-அன்பொடு சென்று எய்துவது என்றுகொலோ?-கார் வயல் சூழ் கனப்பேர் உறை காளையையே .

[8]
நாதனை, நாதம் மிகுந்த ஓசை அது ஆனவனை, ஞானவிளக்கு ஒளி ஆம் ஊன் உயிரை,   பயிரை,
மாதனை, மேதகு தன் பத்தர் மனத்து இறையும் பற்று விடாதவனை, குற்றம் இல்    கொள்கையனை,
தூதனை, என்தனை ஆள் தோழனை, நாயகனை, தாழ் மகரக்குழையும் தோடும் அணிந்த   திருக்-
காதனை,-நாய் அடியேன் எய்துவது என்றுகொலோ?-கார் வயல் சூழ் கானப்பேர் உறை காளையையே .

[9]
கன்னலை, இன்னமுதை, கார் வயல் சூழ் கானப் பேர் உறை காளையை, ஒண் சீர் உறை தண் தமிழால்
உன்னி மனத்து அயரா, உள் உருகி, பரவும் ஒண் பொழில் நாவலர்கோன் ஆகிய ஆரூரன்,
பன்னும் இசைக்கிளவி பத்து இவை பாட வல்லார், பத்தர் குணத்தினராய், எத்திசையும்   புகழ,
மன்னி இருப்பவர்கள், வானின்; இழிந்திடினும், மண்டல நாயகராய் வாழ்வது நிச்சயமே! .

[10]

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7.085   வடிவு உடை மழு ஏந்தி,  
பண் - புறநீர்மை   (திருத்தலம் திருக்கூடலையாற்றூர் ; (திருத்தலம் அருள்தரு புரிகுழலாளம்மை உடனுறை அருள்மிகு நெறிகாட்டுநாயகர் திருவடிகள் போற்றி )
பின்பு காஞ்சிவாய்ப் பேரூரை அடைந்து திருக்கோயில் சென்று வழிபட்டார். அங்குப் பெருமான், தில்லை மன்றுள் நின்றாடும் தமது திருக்கோலத்தோடு காட்சி வழங்கியருளினார். அவ்வருட் காட்சியைக் கண்டு மகிழ்ந்த சுந்தரர், தில்லையம்பலவன் திருக் கூத்தைக் கும்பிடப்பெற்றால் புறம்போய் எய்துதற்கு யாதுளது என்று எண்ணிப் பேரூரினின்றும் புறப்பட்டுத் தில்லையை நோக்கிச் செல்வராயினார். வெஞ்சமாக்கூடல், கற்குடி, ஆறை மேற்றளி, இன்னம்பர், புறம்பயம் முதலிய தலங்களைத் தரிசித்துக் கொண்டே நடுநாட்டுக் கூடலையாற்றுரை அணுகியவர், அங்கு செல்லாமல் திருமுதுகுன்றை நோக்கிச் சென்றார். அப்பொழுது கூடலையாற்றுார் இறைவன், மறையவர் வடிவம் தாங்கி வழிப் போக்கராய் வன்றொண்டரை அணுகினார். சுந்தரர் மறையவரைப் பணிந்து திருமுதுகுன்றத்திற்குச் செல்லும் வழியை வினவினார். மறையவர், கூடலையாற்றுரை அடையச் சென்றது இவ்வழி எனக் கூறித் துணையாய்த் தாமும் ஊர் எல்லையளவும் உடன் சென்று மறைந்தருளினார். உடன் வந்த அந்தணரைக் காணாத சுந்தரர், மறையவர் உருவில் வந்தவர் பெருமானே யென்பதறிந்து திருக்கோயிலை யடைந்து வடிவுடை மழுவேந்தி யென்று தொடங்கி, வழித்துணையாய் வந்த பெருமானை வணங்கிப் போற்றித் திருமுதுகுன்றத்தை அடைந்தார்.
வடிவு உடை மழு ஏந்தி, மதகரி உரி போர்த்து,
பொடி அணி திருமேனிப் புரிகுழல் உமையோடும்,
கொடி அணி நெடுமாடக் கூடலையாற்றூரில்
அடிகள் இவ் வழி போந்த அதிசயம் அறியேனே!

[1]
வையகம் முழுது உண்ட மாலொடு, நான்முகனும்,
பை அரவு இள அல்குல் பாவையொடும்(ம்), உடனே,
கொய் அணி மலர்ச் சோலைக் கூடலையாற்றூரில்
ஐயன் இவ் வழி போந்த அதிசயம் அறியேனே!

[2]
ஊர்தொறும் வெண் தலை கொண்டு, உண் பலி இடும்! என்று,
வார் தரு மென்முலையாள் மங்கையொடும்(ம்) உடனே,
கூர் நுனை மழு ஏந்தி, கூடலையாற்றூரில்
ஆர்வன் இவ் வழி போந்த அதிசயம் அறியேனே!

[3]
சந்து அணவும் புனலும் தாங்கிய தாழ்சடையன்
பந்து அணவும் விரலாள் பாவையொடும்(ம்) உடனே,
கொந்து அணவும் பொழில் சூழ் கூடலையாற்றூரில்
அந்தணன் வழி போந்த அதிசயம் அறியேனே!

[4]
வேதியர் விண்ணவரும் மண்ணவரும் தொழ, நல்
சோதி அது உரு ஆகி, சுரிகுழல் உமையோடும்,
கோதிய வண்டு அறையும் கூடலையாற்றூரில்
ஆதி இவ் வழி போந்த அதிசயம் அறியேனே!

[5]
வித்தக வீணையொடும், வெண்புரிநூல் பூண்டு,
முத்து அன வெண் முறுவல் மங்கையொடும்(ம்) உடனே,
கொத்து அலரும் பொழில் சூழ் கூடலையாற்றூரில்
அத்தன் இவ் வழி போந்த அதிசயம் அறியேனே!

[6]
மழை நுழை மதியமொடு வாள் அரவம் சடைமேல
இழை நுழை துகில் அல்குல் ஏந்திழையாளோடும
குழை அணி திகழ் சோலைக் கூடலையாற்றூரில்
அழகன் இவ் வழி போந்த அதிசயம் அறியேனே!

[7]
மறை முதல் வானவரும், மால், அயன், இந்திரனும்,
பிறை நுதல் மங்கையொடும், பேய்க்கணமும், சூழ,
குறள்படை அதனோடும், கூடலையாற்றூரில்
அறவன் இவ் வழி போந்த அதிசயம் அறியேனே!

[8]
வேலையின் நஞ்சு உண்டு, விடை அது தான் ஏறி,
பால் அன மென்மொழியாள் பாவையொடும்(ம்) உடனே,
கோலம் அது உரு ஆகி, கூடலையாற்றூரில்
ஆலன் இவ் வழி போந்த அதிசயம் அறியேனே!

[9]
கூடலையாற்றூரில் கொடி இடையவளோடும்
ஆடல் உகந்தானை, அதிசயம் இது என்று
நாடிய இன்தமிழால் நாவல ஊரன் சொல்
பாடல்கள் பத்தும் வல்லார் தம் வினை பற்று அறுமே.

[10]

Back to Top
மாணிக்க வாசகர்    திருவாசகம்  
8.120   திருப்பள்ளியெழுச்சி - போற்றியென் வாழ்முத  
பண் - புறநீர்மை (பூபாளம்‌)   (திருத்தலம் திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
எண்சீர் விருத்தம்
போற்றி! என் வாழ் முதல் ஆகிய பொருளே! புலர்ந்தது; பூம் கழற்கு இணை துணைமலர் கொண்டு
ஏற்றி, நின் திருமுகத்து எமக்கு அருள் மலரும் எழில் நகை கண்டு, நின் திருவடிதொழுகோம்
சேற்று இதழ்க் கமலங்கள் மலரும் தண் வயல் சூழ் திருப்பெருந்துறை உறைசிவபெருமானே!
ஏற்று உயர் கொடி உடையாய்! எமை உடையாய்! எம்பெருமான்! பள்ளி எழுந்தருளாயே!

[1]
அருணன், இந்திரன் திசை அணுகினன்; இருள் போய் அகன்றது; உதயம் நின் மலர்த்திருமுகத்தின்
கருணையின் சூரியன் எழ எழ, நயனக் கடி மலர் மலர, மற்று அண்ணல் அம்கண் ஆம்
திரள் நிரை அறுபதம் முரல்வன; இவை ஓர் திருப்பெருந்துறை உறைசிவபெருமானே!
அருள் நிதி தர வரும் ஆனந்த மலையே! அலை கடலே! பள்ளி எழுந்தருளாயே!

[2]
கூவின பூம் குயில்; கூவின கோழி; குருகுகள் இயம்பின; இயம்பின சங்கம்;
ஓவின தாரகை ஒளி; ஒளி உதயத்து ஒருப்படுகின்றது விருப்பொடு, நமக்கு.
தேவ! நல் செறி கழல் தாள் இணை காட்டாய்! திருப்பெருந்துறை உறை சிவபெருமானே!
யாவரும் அறிவு அரியாய்! எமக்கு எளியாய்! எம்பெருமான்! பள்ளி எழுந்தருளாயே!

[3]
இன் இசை வீணையர், யாழினர், ஒருபால்; இருக்கொடு தோத்திரம் இயம்பினர், ஒருபால்;
துன்னிய பிணை மலர்க் கையினர், ஒருபால்; தொழுகையர், அழுகையர்,துவள்கையர், ஒருபால்;
சென்னியில் அஞ்சலி கூப்பினர், ஒருபால். திருப்பெருந்துறை உறை சிவபெருமானே!
என்னையும் ஆண்டுகொண்டு, இன் அருள் புரியும் எம்பெருமான்! பள்ளி எழுந்தருளாயே!

[4]
பூதங்கள்தோறும் நின்றாய்' எனின், அல்லால், போக்கு இலன், வரவு இலன்,' என,நினைப் புலவோர்
கீதங்கள் பாடுதல், ஆடுதல், அல்லால், கேட்டு அறியோம், உனைக் கண்டு அறிவாரை.
சீதம் கொள் வயல் திருப்பெருந்துறை மன்னா! சிந்தனைக்கும் அரியாய்! எங்கள் முன்வந்து,
ஏதங்கள் அறுத்து, எம்மை ஆண்டு, அருள்புரியும் எம்பெருமான்! பள்ளி எழுந்தருளாயே!

[5]
பப்பு அற வீட்டு இருந்து உணரும் நின் அடியார், பந்தனை வந்து அறுத்தார்; அவர்பலரும்,
மைப்பு உறு கண்ணியர், மானிடத்து இயல்பின் வணங்குகின்றார். அணங்கின் மணவாளா!
செப்பு உறு கமலங்கள் மலரும் தண் வயல் சூழ் திருப்பெருந்துறை உறைசிவபெருமானே!
இப் பிறப்பு அறுத்து, எமை ஆண்டு, அருள்புரியும் எம்பெருமான்! பள்ளி எழுந்தருளாயே!

[6]
அது, பழச் சுவை என, அமுது என; அறிதற்கு அரிது என, எளிது என; அமரரும்அறியார்.
இது அவன் திருஉரு; இவன், அவன்; எனவே எங்களை ஆண்டுகொண்டு, இங்கு எழுந்தருளும்,
மது வளர் பொழில் திரு உத்தரகோச மங்கை உள்ளாய்! திருப்பெருந்துறை மன்னா!
எது எமைப் பணி கொளும் ஆறு? அது கேட்போம்: எம்பெருமான்! பள்ளி எழுந்தருளாயே!

[7]
முந்திய முதல், நடு, இறுதியும், ஆனாய்; மூவரும் அறிகிலர்; யாவர் மற்றுஅறிவார்?
பந்து அணை விரலியும், நீயும், நின் அடியார் பழம் குடில்தொறும் எழுந்தருளியபரனே!
செம் தழல் புரை திருமேனியும் காட்டி, திருப்பெருந்துறை உறை கோயிலும் காட்டி,
அந்தணன் ஆவதும் காட்டி, வந்து ஆண்டாய்! ஆர் அமுதே! பள்ளி எழுந்தருளாயே!

[8]
விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா விழுப் பொருளே! உன் தொழுப்பு அடியோங்கள்,
மண்ணகத்தே வந்து, வாழச் செய்தானே! வண் திருப்பெருந்துறையாய்! வழி அடியோம்
கண் அகத்தே நின்று, களிதரு தேனே! கடல் அமுதே! கரும்பே! விரும்பு அடியார்
எண் அகத்தாய்! உலகுக்கு உயிர் ஆனாய்! எம்பெருமான்! பள்ளி எழுந்தருளாயே!

[9]
புவனியில் போய்ப் பிறவாமையின், நாள் நாம் போக்குகின்றோம் அவமே; இந்தப் பூமி,
சிவன் உய்யக் கொள்கின்ற ஆறு' என்று நோக்கி, திருப்பெருந்துறை உறைவாய்! திருமால்ஆம்
அவன் விருப்பு எய்தவும், மலரவன் ஆசைப் படவும், நின் அலர்ந்த மெய்க்கருணையும், நீயும்,
அவனியில் புகுந்து, எமை ஆட்கொள்ள வல்லாய்! ஆர் அமுதே! பள்ளி எழுந்தருளாயே!

[10]
Back to Top

This page was last modified on Wed, 28 Feb 2024 01:04:02 -0500
          send corrections and suggestions to admin @ sivaya.org

thirumurai list